Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 202

உன் ரகசிய ரசிகை நான் 202

by Layas Tamil Novel
159 views

Episode 202

சங்கவியின் நிலை மிகவும் மோசமாக இருக்க குண்டு பாய்ந்ததில் அவள் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவதாக சொல்லி மீண்டும் அவளுக்கு ஆபரேஷன் செய்ய ஐ சி யு வார்டுக்குள் அழைத்துச் சென்றிருந்தனர். சங்கவிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் உடல்நிலை சரியாக வேண்டும் என்று செண்பகம் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்ல ராதாவை தவிர அவருடன் வேறு யாரும் இல்லை. கடவுளை வேண்டிக்கொண்டு அதிசயம் முன்பு நின்று இருந்தார் செண்பகம். வேதாச்சலத்துடன் இருந்த சிவகாமி மருந்தின் வீரியத்தில் வேதாச்சலம் உறங்கிக் கொண்டிருக்க… விக்கியிடமும் நிலானி இடமும் அவரைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சிவகாமி வெளியே செல்ல போக… அவரின் கை பிடித்து நிறுத்திய விக்கி அம்மா எங்கே போறீங்க என்று கேட்டான்.

சிவகாமி விக்கியின் அருகில் நின்றிருந்த மாதவியை ஒரு முறை பார்த்துவிட்டு. இவ்வளவு நாளா நான் வளர்த்த என் மகளை பார்த்துட்டு வர போறேன் என்றவர் மாதவியின் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்துவிட்டு என்னை எதுவும் தப்பா எடுத்துக்காத மாதிரி என்று அவர் சொல்ல வர…

அம்மா நான் ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க நீங்க தாராளமா போய் சங்கவிய அக்காவை பாத்துட்டு வாங்க நான் அவங்களை இப்போ வரைக்கும் என்னோட கூட பிறக்காத அக்காவா தான் நினைச்சுட்டு இருக்கேன். நான் இருக்க வேண்டிய இடத்துல இத்தனை நாள் சங்கவி அக்கா இருந்து உங்களையும் அப்பாவையும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்காங்க. அவங்க போதாத காலம் இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க நான் எதுவும் நினைக்கல நீங்க தாராளமா போய் சங்கவி அக்காவ பார்த்துட்டு வாங்க எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மாதவி பெருந்தன்மையாக சிவகாமியிடம் சொன்னால். இவ்வளவு சின்ன வயதில் மாதவி எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறாள் இவளின் குணம் சிறிது கூட ஏன் சங்கவியிடம் இல்லை அவளை நான் நன்றாக தானே வளர்த்தேன். இவளுடைய குணம் மட்டும் ஏன் இப்படி அடுத்தவர்களுக்கு வஞ்சகம் செய்யும் அளவு விஷமாக மாறிவிட்டது. எனக்கு இனியாவது அவளுக்கு நல்லபடியாக புத்தி வந்து தான் செய்த தவறை உணர்த்து செண்பகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். மாதவிடாய் சொல்லிக்கொண்டு சங்ககியை பார்க்க அவள் அறிக்கை செல்ல அங்கே இரவு ஆகிவிட்டதால் அரிசிவிற்கு வெளியில் இருந்த செண்பகத்திற்கு குளிரும் என்று அவருக்காக சால்வையை எடுக்க வந்த சந்தோஷ் சிவகாமியை அங்கு பார்த்துவிட்டு வா அத்தை என்றவன். சங்கவிக்கு மறுப்படியும் சீரியஸாக ஆகிவிட்டது உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்கிறார்கள் ஆப்ரேஷன் தியேட்டர் முன்பு செண்பகம் அத்தையும் ராதாவும் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சிவகாமியை தன்னோடு அழைத்துக் கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்கு சென்றான் சந்தோஷ். உள்ளே சங்கவிக்கு ஆபரேஷன் செய்து கொண்டு இருக்க அவளுக்கு எப்படி இருக்கிறதோ ஆப்ரேஷன் நல்ல முறையில் நடந்து அவள் பிழைத்து வர வேண்டும் என்று மிகவும் மன கஷ்டத்தில் அமர்ந்திருந்தார் செண்பகம். இப்பொழுது அங்கே வந்த சிவகாமி செண்பகத்தையும் அருகில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதலாக செண்பகத்தை பார்க்க… அவரை பார்த்ததும் செண்பகம் சிவகாமி சங்கவி…..சங்கவிக்கு மறுபடியும் சீரியஸா இருக்குன்னு சொல்லி ஆபரேஷன் செய்ய உள்ளே அழைச்சிட்டு போயிருக்காங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று கண்களில் கண்ணீர் வழிய செண்பகம் கூற… அவளுக்கு எதுவும் ஆகாது செண்பகம் நீ அழாத என் பொண்ணு நல்லபடியா திரும்பி வருவா என்று சொன்னவர் அப்படியே நின்றுவிட… அவ என்னைக்கு இருந்தாலும் உன்னோட பொண்ணு தான் சிவகாமி. நீ இதே உரிமையோட பேசு அவ கிட்டயும் அதே போல நடந்துக்க… என்ன இருந்தாலும் அவளை உன் சொந்த பொண்ணு மாதிரி நினைச்சேன் இத்தனை வருஷம் வளர்த்தது நீதானே சிவகாமி என்றார். பின் இருவரும் அமைதியாக அமர்ந்து சங்கவி சீக்கிரம் குணமாகி வருவதற்காக பிரார்த்தனை செய்தனர். கிட்டத்தட்ட நள்ளிரவு போல ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த டாக்டர். சங்கவியை காப்பாத்த முயற்சி பண்ணி இருக்கோம் மற்றதெல்லாம் உங்க பிரார்த்தனையில் தான் இருக்கு சொன்னவர். அவங்க காலையில கண் முழிச்சிட்டா எந்த பிரச்சனையும் இல்ல அதுவரை எங்களால் இதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

டாக்டர் சொல்வதைக் கேட்டு செண்பகமும் சிவகாமியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதலாக பேசிக் கொண்டவர்கள் கண்டிப்பா சங்கவி காலைல கண் முயற்சி நல்லபடியா வந்துடுவா நம்ம ரெண்டு பேரும் தைரியமா இருக்கணும் அவளுக்கு இப்போ ஒரு அம்மா இல்ல நம்ம ரெண்டு பேரும் இருக்கோம் என்றார் சிவகாமி.

❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஆதி துர்காவுடன் வெங்கடாசலத்தையும் விசாலாட்சியையும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்த துர்கா வெங்கடாசலத்தையும் விசாலாட்சியையும் சென்று ஓய்வெடுக்கச் சொல்லியவள் ஆதிக்கு இரவு குடிப்பதற்காக சூடாக பாலை ஊற்றி எடுத்துக் கொண்டு தன்னரைக்குச் சென்றாள்.

துர்கா கதவை சாற்றி விட்டு உள்ளே செல்ல ஆதி ஆழ்ந்த யோசனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற துர்கா கையில் இருந்த பாலை டேபிளில் வைத்தவள் ஆதியின் கையைப் பிடித்து என்ன ஆச்சு ஆதி ஏன் தீவிரமா யோசிச்சுட்டு யோசனையா இருக்க என்று கேட்டாள்.

ஒன்னும் இல்ல துர்கா சங்கவிய பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் என்றான் ஆதி.

எனக்கும் அவள் நிலைமையை நினைச்சா கஷ்டமாத்தான் இருக்கு செண்பகமாத்த இப்படி திடீர்னு அவளை சுடுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ஆதி.

அவளும் மாதவியை சுடு வான்னு அங்க இருக்குற யாருமே எதிர்பார்க்கல சும்மா கையில துப்பாக்கியை வச்சுட்டு எல்லாரையும் மிரட்டுறான்னு தான் நான் நெனச்சிட்டு இருந்தேன்.

ஆனா திடீர்னு அவ மாதவியை சுட்டதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னால இன்னுமே அதை நம்ப முடியல என்றால் துர்கா.

ஆமா துர்கா நானும் அதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

நமக்கு இப்படி இருக்குன்னா செண்பகம் அத்தையோட நிலைமையை நினைச்சு பாரு இத்தனை வருஷமா யாருக்காக காத்துட்டு இருந்தாரோ….

இத்தனை வருஷமா யாருக்காக தன் உயிரை கையில பிடிச்சுக்கிட்டு நம்பிக்கையோடு இருந்தாரோ… அவளை முதன்முதல்ல பாக்குறோம்னு சந்தோஷத்துல இருந்திருப்பாங்க ஆனா பார்த்த அடுத்த நொடியே அவளை சுட்டுட்டோம்னு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க.

என்ன செய்றது ஆதி எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கிறது இல்லையே.

என் செண்பகம் அத்தை தன் பொண்ணு பாக்கறதுக்காக எவ்வளவு ஆசையோடு இருந்தாங்கன்னு எனக்கும் தெரியும் ஆதி அவங்க எத்தனை சாமியை கும்பிட்டு எத்தனை நேத்து கடன் வச்சிருக்காங்கன்னு தெரியுமா ஆதி.

நான், கீர்த்திகா, ஷிவு, ராதா நாலு பேரும் எதுவும் பேசி சிரிச்சிட்டு இருக்கிறப்போ செண்பகம் அத்தை எங்களையெல்லாம் ஏக்கமா பார்த்துட்டு.

என்னோட பொண்ணும் இந்த நேரம் என்னோட இருந்திருந்தால் துர்காவோட வயசுல இருந்திருப்பா…. அவளுக்கும் ஒரு கல்யாணம் ஆகி குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இருந்து இருப்பா இல்ல என்று சொல்லி எவ்வளவு முறை வருத்தப்பட்டு இருக்கிறார் தெரியுமா என்றால் துர்கா.

துர்கா சொல்வதைக் கேட்டு செண்பகத்தின் நிலையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டான் ஆதி.

ஆதி இப்போ சங்கவி குணமாகி வந்த பிறகு அவ என்ன செய்யப் போறா… செண்பகம் அத்தை கூட பேசுவாளா? அவங்க கூட வந்துடுவாளா? இல்ல வேதாச்சலம் சிவகாமி அம்மா வீட்லதான் இருப்பாளா என்று கேட்டால் துர்கா.

அது அவ கண் முழிச்ச பிறகுதான் தெரியும் துர்கா அவ என்ன முடிவு எடுக்கிறான்னு.

நாம எல்லாம் வேதாச்சலம் மாமா வீட்டுக்கு போகும்போது சங்கவியை கவனிச்சியா துர்கா அவ செண்பகம் அத்தையை ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவே இல்லை.

செண்பகம் அத்தை அங்கே வந்ததிலிருந்து சங்கவி ஒருமுறை ஏதும் தன்னை பார்த்து விட மாட்டாளா அவளிடம் வார்த்தையாவது பேசிவிட மாட்டோமா என்று ஏக்கமாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவளோ அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்து கொண்டான் என்றான் ஆதி.

அவ குணமாகி வந்தாலும் அதே போலத்தான் செண்பகம் அத்தை கிட்ட நடந்துக்குவாலா இத்தனை வருஷம் தன்னோட பொண்ணுக்காக காத்திருந்த செண்பகமே அத்தையுடன் நிலைமை இப்போ என்ன ஆகும் ஆதி.

இப்படி ஒரு கஷ்டம் வரணுமா இப்போதான் கொஞ்ச நாளா சந்தோசமா இருந்தாங்க இனி சங்கவியை நினைச்சு தினமும் அவங்க கவலைப்பட வேண்டியதா ஆகிடும் அப்படித்தானே ஆதி என்றால் துர்கா.

அவர் சங்ககியை நினைச்சு வருத்தப்படுவாரா சந்தோஷப்படுவாராங்குறது சங்கவி அவர்கிட்ட மட்டும் இல்ல மத்தவங்க எல்லார்கிட்டயும் நடந்துக்கிற முறையிலதான் இருக்கு துர்கா… என்றான்.

என்ன சொல்ற ஆதி எனக்கு புரியல என்றால் சங்கவி.

சங்கவி குணமாகி வந்த பிறகு பழைய படியே நடந்து கொள்கிறாளா இல்லை பொது மனுசியாக மாறி தன் அம்மாவை ஏற்றுக்கொண்டு அவருடன் சந்தோஷமாக வாழ போகிறாளா என்று தான் தெரியவில்லை என்றேன் என்று சொன்னான் ஆதி.

பொறுத்திருந்து பார்க்கலாம் ஆதி இத தவிர இப்போ நமக்கு வேற வழியே இல்ல சங்கவி எப்படி நடந்து கொள்கிறார் என்று அவ கண் விழித்து வந்த பிறகுதான் தெரியும் என்றால் துர்கா.

ஆதி உடன் பேசிக் கொண்டிருந்த துர்கா பிறகு அவனுக்காக கொண்டு வந்த பாலை அவனிடம் கொடுத்து குடிக்க சொன்னவள்.

சரி ஆதி சீக்கிரமே தூங்கலாம் காலையில நேரமே எழுந்து ஹாஸ்பிடலுக்கு போய் சங்கவியையும் வேதாச்சலம் அப்பாவையும் பார்த்துட்டு வந்துடலாம் என்று சொன்னால் துர்கா.

சரி என்றவன் பாலைக் குடித்துவிட்டு படுத்துக்கொள்ள துர்காவும் விளக்கை அனைத்து விட்டு அவன் அருகில் படுத்துக் கொண்டாள்.

துர்கா தன் அருகில் படித்ததும் ஆதி திரும்பி அவள அருகில் வந்தவன் துர்காவின் இடையில் கையை போட்டு தன் அருகில் இழுத்து தன் கைக்குள் படுக்க வைத்தவன் அவளை கட்டிக்கொண்டு தூங்க முயன்றான்.

துர்காவும் ஆதிக்கு ஆதாரவாக… அவன் தலையை வருடியவாறு அவன் மார்பில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள்.

❤️

சங்கவிகு செய்த ஆபரேஷனின் பலனாக அவள் சீக்கிரமே அவளுக்கு உடல்நிலை முன்னேற்றம் அடைந்துவிட்டால். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக அனைவரும் ஹாஸ்பிடல் வீடு என்று சரியாக இருக்க ஆபீசிற்க்குக்கூட யாரும் சரியாக செல்லவில்லை. நிலானியும் விக்கியும் வீட்டிற்கு வராததால் மது அவ்வப்போது வந்து அவர்களை பார்த்து விட்டு சென்றாள்.

ரியாவின் அண்ணன் கௌதம் பவனின் தங்கை பவித்ராவின் திருமணம் இவர்கள் யாரும் வராமலேயே நடந்தேறியது. இருவரின் பெண் வீடு மாப்பிள்ளை வீடு என்று அழைப்புகள் இருந்ததால் அதில் பிசியாக இருக்க… மதுவிடம் அழைத்து விஷயத்தை மட்டும் தெரிந்து கொண்டார்கள். வேதாச்சலம் தன் மகள் மாதவியின் கவனிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தார். அவள் கண் விழித்ததில் இருந்து செண்பகம் சங்கவியை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்ள… ஆனால் அவளோ அவரை திரும்பியும் பார்க்கமலேயே கல் போலவே இருந்தால் இன்னமும். சங்கவி விழித்துக் கொண்டதும் இதுவரை அவள் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவளை விட்டு விலகி இருந்தனர். கரணம் அவள் அவர்களிடம் நடந்து கொண்ட விதம் யாரையுமே மதிக்காமல் முன்பு போலவே விட்டு எடுத்திருந்து அனைவரையும் பேசி தன் அருகில் இருந்தவர்களை எல்லாம் துரத்தி விட்டால்.

ஆனால் பெற்ற தாய் என் மகளை இந்த நிலையில் விட்டுவிட்டு போக மனமில்லாமல் அவள் தன்னை என்ன பேசினாலும் எப்படி நடத்தினாலும் அவளுடனே இருப்பது என்று முடிவு செய்து சங்கவிக்கு வேண்டியது எல்லாம் அவள் விருப்பம் இல்லாமல் மறுத்தாலும் வலுக்கட்டாயமாக அவளுக்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தார் செண்பகம்.

❤️

You may also like

1 comment

S joshna December 13, 2025 - 7:08 pm

Super akka 💐💗💝 vera level episode 😍 sis

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured