Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 203

உன் ரகசிய ரசிகை நான் 203

by Layas Tamil Novel
233 views

EPISODE 203

வேதாசலத்தையும், சங்கவியையும் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி டாக்டர் கூறிவிட்டுச் சென்று இருந்தார்.

வேதாச்சலம் டிஸ்சார்ஜ் ஆவதற்கு தேவையான ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் விக்கி பார்த்துக் கொள்ள… மாதவி வேத்தாசலத்தின் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டு இருந்தாள்.

டாக்டர் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொன்னதில் இருந்து வேத்தாசலத்தின் முகமும், சிவகாமியின் முகமும் சரி இல்லை.

இருவரும் ஏதோ யோசனையிலேயே இருக்க,… அவர்கள் இருவரையும் பார்த்த மாதவி ஏன் இருவரும் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று அவளால் உணர முடிந்தது.

அவர்களுடன் இருந்த நிலானியை வேத்தாசலத்தை பார்த்துக்கலாம் கொள்ள சொல்லிவிட்டு மாதவி அவர்கள் இருந்த அறையை விட்டு வெளியே சென்றவள் நேராக சங்கவியை அட்மிட் செய்து இருந்த ரூமிற்கு வந்தாள்.

வேத்தாசலத்தின் அறையில் இருந்து இரண்டு அறை தள்ளி தான் சங்கவியை அட்மிட் செய்து இருந்தார்கள்.

சங்கவியின் அறை முன்பு வரை வந்த மாதவி அவள் அறைக்குள் செல்ல தயங்கிக் கொண்டு இருந்தாள்.

எங்கே தன்னை பார்த்தால் கோபத்தில் அன்று போல் எதுவும் செய்துவிடுவாள் என்று சங்கவியை நினைத்து பயந்தால் மாதவி.

அவள் தயக்கத்துடன் சங்கவியின் அறை வாசல் முன்பு நின்று இருக்க…. அப்போது மாதவி நின்று இருப்பது அறைக்குள் கட்டிலில் படுத்து இருந்த சங்கவிக்கு வாசலில் யாரோ நின்று இருப்பது போல நிழல் ஆடுவதை பார்த்தவள் யார் அது வாசலையே நிக்கிறது என்று வழக்கமான தன் கனீர் குரலில் கத்தினால்.

எப்போதும் கனீர் என்று அதிகார தோரணையோடு ஒலிக்கும் சங்கவியின் குரல் இன்று அமைதியாக ஒலித்தது.

அவள் பேசியதை வைத்து சங்கவி நல்ல மூடில் தான் இருக்கிறாள் என்று மாதவிக்கு புரிந்தது.

மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மாதவி தயங்கி தயங்கி சங்கவியின் முன்பு போய் நின்றாள்.

அவளை பார்த்ததும் சங்கவி தையா தக்க என்று குதிப்பால் என்று பயந்து கொண்டு வந்த மாதவி.

தன்னை பார்த்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருக்கும் சங்கவியை ஆச்சர்யமாக மாதவி பார்த்துக் கொண்டு இருக்க..

எதுக்கு வந்தே என்று சங்கவியின் குரல் கேட்டு அவள் முகத்தை பார்த்தவள் அக்… அக்கா…. அது வந்து… என்று இழுக்க…

ஏன் உனக்கு சரியா பேசவாராதா… இப்படி திக்குற… ஓபரேஷன் எனக்கு தானே பண்ணி இருக்காங்களா நானே நல்லா பேசும்போது உனக்கு என்ன பேசுறதுக்கு என்றாள் சங்கவி சற்று கோபமாக.

அக்கா அது.. அது… ஒன்னும் இல்லை உங்களை சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றாள் மாதவி பயந்தப்படி.

ஓ… சரி அதான் பாத்துட்டே இல்ல.. அப்பறோம் ஏன் இன்னும் இங்கே நின்னுட்டு என்னை இரிடேட் பன்னிட்டு இருக்க… முதல்ல இங்கேயிருந்து கிளம்பு என்றாள் சங்கவி.

அவள் குரலில் இருந்த எரிச்சளை உணர்ந்த மாதவி அதற்கு மேலும் எதுவும் பேசாமல் சரி அக்கா நான் போய்ட்டு வரேன் என்று திரும்பி செல்ல…

அப்போது ஏய் நில்லு… என்றால் அதட்டல் தோரணையில்.

அப்படியே மாதவி நின்றவள் நின்ற இடத்தில் இருந்து சங்கவியை பார்க்க…

இங்கே வா என்று அழைத்தாள் மாதவியை.

தன்னை திடீர் என்று அவள் அருகில் அழைக்கவும் அந்த அறையில் தன்னையும், சங்கவியையும் தவிர யாரும் இல்லை. இப்பொது வேறு இவள் தன்னை அருகில் அழைக்கிறாளே… ஒரு வேலை அருகில் அழைத்து என்னை கழுத்தை நெறித்து கொள்வதற்காக கூப்பிடுகிறாளோ? என்று நினைத்த படி தயக்கமாக சங்கவியின் அருகில் சென்று சிறிது இடைவெளி விட்டு நின்று கொண்டாள் மாதவி.

உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். உன்னை கோலவ் செய்யுற மூடில் நான் இப்போ இல்லை ஒழுங்கா இங்கே வந்து நில்லு என்று தன் கண்களாலேயே தன் அருகில் கட்டிலைக் காட்டி கூறினாள் சங்கவி.

அவள் காணலையே பர்ஹட்டதும் மாதவி தன்னையும் அறியாமல் சனாகவியின் அருகில் சென்று நின்று கொள்ள…

சரி அப்பா எப்படி இருக்கிறாரு என்று கேட்டவள் சட்டென்று தன் நாக்கை கடித்துக் கொண்டு உன் அப்பா எப்படி இருக்காரு என்றாள் குத்தலாக மாதவியிடம்.

அக்கா.. அவர் உங்களுக்கும் அப்பா தான் என்றவள் நல்லா இருக்காரு அவரை இன்று தீசார்ஜ் செய்ய்ய சொல்லி காலையிலயே டாக்டர் சொல்லிட்டாங்க. உங்களையும் இன்னிக்கு தானே டிஸ்சார்ஜ் செய்வாதா சொன்னாங்க என்றவள்.

அக்கா நான் உங்க கிட்டே ஒன்னு கேக்கலாமா என்றாள் மாதவி.

ஒருவழியா கேக்க வந்ததை சொல்லணும்னு தைரியம் வந்திருச்சு போல என்று மாதவியை நக்கலாக பார்த்து சங்கவி சிரித்தாள்

ஆமா அக்கா அதுக்காக தான் வந்தேன் என்றவள் அக்கா நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே என்றாள்.

என்ன சீக்கிரம் சொல்லு என்றாள் சங்கவி மாதவி கூற வரும் விஷயத்தை முன்னமே கணிந்தவள் போல..

அக்கா நீங்க டிஸ்சார்ஜ் ஆனா அப்பறோம் எங்கே போக போறீங்க என்று கேட்டாள் மாதவி.

அவளை புருவம் முடிச்சிடலாம் சங்கவி பார்க்க… அப்போது சரியாக உள்ளே வந்த செண்பகம் எங்கே போக போரா நான் என் வீட்டுக்கு என் பொண்ணை கூட்டிட்டு போக போறேன் என்றார்.

அவரை பார்த்து மாதவி சிநேகமாக புன்னகைத்தவள். அம்மா… சங்கவி அக்காவை நாங்க எங்க கூட கூட்டிட்டு போகட்டுமா என்றாள் மாதவி.

என்ன மா சொல்றே உங்க கூடவா என்று செண்பகம் தயங்க…

ஆமா செண்பகம் என் பொண்ணு எங்க கூட தான் இருக்கனும். வேணும்னா நீயும் வந்து எங்க கூட தங்கிடு என்றபடி வேதாச்சலத்தை வீல் சேரில் வைத்து தள்ளியப்படி சங்கவியின் அறைக்குள் நுழைந்தார் சிவகாமி.

அவருடன் விக்கியும், நிலானியும் இருந்தனர்.

சங்கவி அவர்களை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்ள…

சிவகாமி வீல் சேரை தலைக்கு கொண்டு வந்து சங்கவியின் முன்பு நிறுத்திவிட்டு அவளை பார்க்க…

சங்கவி அவர்கள் இருவரையும் பார்க்காமல் வேறு புறம் பர்ஹட்டுக் கொண்டு இருந்தாள்.

அவள் தங்களிடம் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதை பார்த்து இருவருக்குமே மனம் வலித்தது.

அவர்கள் அருகில் வந்த செண்பகம் சிவகாமியின் முகம் வாடி இருப்பதை பார்த்துவிட்டு சிவகாமி வருத்தப்படாத சங்கவி இப்போ வரை என்கிட்டே கூட முகம் கொடுத்து பேசலை.

நான் இவ்வளவு நாளா அவகூட தானே இருக்கேன் என்கிட்டே பெறகவது ஒரு வார்த்தை பேசி இருக்களாமில்ல…ஆனா அவ பேசல சிவகாமி.

நம்ம பொண்ணுக்கு நம்ம மேல சுத்தமா பாசமே இல்லை.

இத்தனை வருஷம் கழிச்சு அவளை பெத்தவள் நான் அவ கண்ணு முன்னாடி இருந்தும் அவ என்னை ஒரு பார்வை கூட பார்க்காமல், ஒரு வார்த்தை கூட பேசாம எப்படி அவளால இப்படி கள் நெஞ்சக் கரிய இருக்க முடியுதுனு தெரியல…

அவ இப்படி இருக்குறதுக்கு காரணம் அவளோட குணம் கிடையாது. நீங்க ரெண்டு பேரும் அவளை வளர்த்த விதம் அப்படி என்றார் செண்பகம்.

அவர் அப்படி சொன்னதும் வேதாசலமும்,சிவகாமிம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தங்கள் வளர்ப்பு இப்படி கேள்வி கேட்கும் பாட்டி போய்விட்டதே என்று சங்கவியை நினைத்து நொந்து கொண்டனர்.

சிவகாமியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அவர் கலங்கி நிற்பது சங்கவிக்கு புரிந்தது. அது தெரிந்தும் சங்கவி அமைதியாக இருப்பதை பார்த்த சிவகாமி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு செண்பகத்திடம் திரும்பி.

ஆமா செண்பகம் நீ சொன்னது சரிதான் நாங்க அவளை சரியா வளர்க்காமல் விட்டுட்டுட்டோம்.

அதனால தான் அவளுக்கு பெத்தவள் வந்து இப்படி அவ மேல பாசமா இருக்குறதையும் ஏத்துக்க முடியலை, வளர்த்தவ அவ கண்ணு முன்னாடி வந்து நின்னு அழுதுட்டு இருக்க அப்போ ஒரு ஆறுதலுக்காக கூட முகத்தை பார்க்கவும் முடியலை.

இவ்வளவு ஏன் இத்தனை வருஷமா என் பொண்ணு.. என் பொண்ணுன்னு அவ சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு…

அவ என்ன கேட்டாலும் செஞ்சு கொடுத்துட்டு இப்போ அவ கையாலேயே குண்டாடி படும் கூட மகளை பார்க்க முடியலையினு உடல் முடியாத நிலையில் வந்து அவள் முன்னாள் நிண்டு அவ தன்னை அப்பான்னு கூப்பிட மாட்டாலன்னு அந்த ஒரு வார்த்தை அந்த ஒத்த வார்த்தைக்காக அவ முகத்தையே பார்த்துட்டு உக்கார்ந்து இருக்காரே.

அவர் முகத்தை கூட ப்பார்க்க முடியாமல் உக்கார்ந்து இருக்காளே அவ இப்படி இருப்பதற்கு யார் காரணம் நாங்க தான்… எங்கள்டப வளர்ப்பு தான் என்றார் சிவகாமி.

இவர்கள் இருவரும் பேசியதை பார்த்த விக்கிக்கு சங்கவியின் மீது தான் கோபம் வந்தது.

அப்படி என்ன வழுக்கு வீம்பு வேண்டி இருக்கிறது. மற்றவர்களை விட்டு அவளை வளர்த்தவர்கள், பெற்றவரிடமுமா இப்படி கல்நெஞ்சகாரி போல நடந்து கொள்ள வேண்டும் என்று கோபத்தில் ரத்தம் கொதித்தது.

நேராக வந்து சங்கவியிடம் வந்து நின்றவன். உன்னோட பெத்தவங்க, வளர்த்தவங்க ரெண்டு பேரும் நீ ஒரு வார்த்தை பேசமாட்டியான்னு… ஒரு முறை திரும்பி பார்த்துடா மாட்டியன்னு ஏங்கி போய் நிக்குறது உனக்கு தெரியலையா?

இல்லை அவங்க இப்படி இருக்குறது தெரிஞ்சும் மனசை கள்ளகிகிட்டு இப்படி குத்து கல்லு மாதிரி உக்கார்ந்துத்திருக்கியா சங்கவி.

ஏன் இப்படி இருக்க… நான் என் அம்மா அப்பகூட சேர்ந்து கொஞ்சநாளே ஆனாலும் நீதான் என்னோட தங்கச்சின்னு சொன்ன பிறகு இன்னிவரை நீ என்னை ஒரு வார்த்தையாவது அண்ணான்னு கூப்பிடமாட்டியா…

இல்ல அண்ணங்குற முறையில் என்கிட்டே பேசமாட்டியா.. ஒரு தங்கச்சியா என்கூட வந்து சண்டை போடா மாட்டியன்னு நான் உன்னை பார்க்கும்போது எல்லாம் எவ்வளவு ஏங்கி இருக்கேன் தெரியுமா?

இப்ப கூட நீ என்னோட தங்கச்சி இல்லைன்னு தெரிஞ்ச பிறகும் கூட என்னால உன்னை வேறு செண்பகேம் அம்மாவுடைய பொண்ண பார்க்க முடியயலை.

என் அம்மா அப்பாவுடைய பொண்ணா என்னோட தங்கையா தான் பார்க்க முடியுது. எனக்கு உன் குணத்தை விட தங்கமான குணத்துல ஒரு தங்கச்சி கிடைச்சிருக்கா…

அவ கூட இப்போ வரை என்கிட்டே சரியா பேசாம தயங்கிட்டு இருக்கா… அவ ஏன் அப்படி இருக்கான்னு எனக்கும் தெறியும். புதுசா ஒரு உறவு வந்துருச்சுன்னா அதை எதுக்குற மனநிலை எல்லாருக்கும் உடனே வந்துராது.

அதே போல தான் பழைய உறவுகளை அதுவும் தாய் தந்தையா இருக்குற உறவை அவ்வளவு சீக்கிரம் உடரி தள்ளிட்டு யாராலயும் போய்டா முடியாது.

அதனால தான் மாதவி என்கிட்டே பேச… என்னை அண்ணனு கூப்பிட தயங்குறான்னு எனக்கு தெரியும். நானும் அவ்வளவே வந்து என்னை அண்ணனு கூப்பிடுவான்னு விட்டுட்டேன்.

அந்த மாதிரி தான் உன்னையும் நான் நினைச்சு இருந்தேன். ஆனா நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை. இப்படி உயிர் பிழைச்சு வந்தும் கூட உன் இதயம் இன்னும் கல்லாக தான் இருக்கிறது.

என்னை விட்டுட்டு சங்கவி உன்னை பெத்தவங்க, வளர்த்தவங்க… ஏன் இப்போ கொஞ்ச நாள் தான் ஆச்சு மாதவி உன்கூட பழகி அவளுக்கு நீ அவ இடத்துல அவ வீட்டுல இருக்கேன்னு தெரிஞ்சும் உன்மேல பாசமாதான இருந்தாள்.

இது எல்லாம் உன் கண்ணனுக்கு தெரியலையா சங்கவி. இல்லை இது எல்லாம் தெரிஞ்சும் உன் மனசையும், கண்ணையும் திரை போட்டு மறைச்சுட்டியா?

இப்படி பட்ட சொந்தம் எல்லாம் எதுவும் வேண்டாம்னு கடைசி வரை இப்படி கல் நெஞ்சத்தோட இருக்கணும்னு முடிவு பண்ணிட்டியா? என்று கேட்டான்.

விக்கி வந்து இவ்வளவு பேசியும் எதுவும் பேசாமல் முகத்தை வெறுப்பாக திருப்பி வைத்து இருந்தவளை பார்த்து கடுப்பானவன்.

அருகில் வந்து உன்னக்கு என்ன அவ்வளவு வீம்பு வேண்டி இருக்கு என்று சொல்லிக்கொண்டே அவளை தன் பக்கம் திருப்பினான் விக்கி.

சங்கவியின் முகத்தை தங்களை எல்லாம் பார்க்குமாறு திருப்பிய விக்கி அவள் முகத்தை பார்க்க…

முகமெல்லாம் சிவந்து கண்கள் எல்லாம் சிவப்பு ஏறி கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருக்க… அதை தன் கண்ணீரை அடக்க முயன்று தன் கீழ் உதட்டை கடிதப்படி இருந்தாள் சங்கவி.

அவளை இப்படி பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இதுவரை சங்கவி கலங்கி யாருமே பார்த்ததில்லை. எப்போதும் திமிராக வளம் வருபவள் சங்கவி.

ஆனால் இன்று இப்படி கலங்கி போய் அவர்கள் முன்னாள் இருக்கும் சங்கவி அவர்களுக்கு புதியது.

சங்கவி அழுவதை பார்த்த பதறிய செண்பகமும், சிவகாமியும் அவள் அருகில் வந்து சங்கவியின் கண்களை துடைக்க வர…

அழுத்துக்கொண்டு இருந்த சங்கவி அவர்களை நிமிர்ந்து பார்க்கவும் வந்தவர்கள் அப்படியே நின்றுவிட்டனனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து சங்கவி எதுவும் பேசாமல் இருக்க…

ஏன் சங்கவி எதுவும் பேசாம இருக்க… இப்படி பெத்தவள் உன்னை அனாதையாக விட்டுட்டு போயிட்டேன்னு என் மேல கோபமா இருக்கியா என்று அழுதபடி செண்பகம் கேட்டார்.

இல்ல செண்பகம் என் பொண்ணு அதுக்காக ஒன்னும் அழலை அவளால் நம்ம கிட்டே சகஜமா பேச முடியலை. இவ்வளவு தப்பு பண்ணி இருக்கோம் அப்படி இருக்க அப்போ எந்த முகத்தைய் வெச்சிட்டுக்கு நம்ம கிட்ட பேசுறதுனு என் பொண்ணு அவளையே நொந்துட்டு இருக்கா….

அதனால தான் அவ கண்ணுல இருந்து தண்ணி வருது. அவளுக்கு நம்ம கிட்டே பேசணும்ன்னு ஆசையா தான் இருக்கு.. ஆனா நம்ம கிட்டே பேச அவ குற்றம் உள்ள மனசு தடுக்குது அதனால் தான் பேச வந்த வார்த்தையை உதட்டை கடிச்சிட்டு அமைதியா இருக்கல் என்றால் சிவகாமி.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட விக்கி நசங்கவியிடம் நான் உன்னை திட்டினேனு கோச்சுட்டு அலறியா சங்கவி என்றான்.

இப்படி தன்மீது மாறி மாறி பாச மழை பொழியும் தன் குடும்பத்தை பார்த்தவளுக்கு பேச வார்த்தைகளே எழவில்லை.

தன் அருகில் சங்கவி தன்னுடன் பேசமாட்டாளா என்று அமர்ந்து இருந்த வேத்தாசலத்தை பார்த்து அப்பா… என்று கண்களில் நீர் வழிய அழுதபடி அவர் கையை பிடித்துக்கொண்டு அழுதாள்.

தன்னை இன்னமும் அப்பா என்று அழைக்கும் தன் மகளை பார்த்து அவள் அழுவதை முதல் முறையாக பார்த்து பாசத்தில் அவள் கையை பிடித்துக்கொண்டு.

சங்கவி அழாத.. அழாத மா… நீ இப்படி ஓடைஞ்சு போய் அழுவதை பார்த்தால் எங்களுக்கு எல்லாம் கஷ்டமா இருக்கு என்றார் வேதாச்சலம்.

அப்போது சங்கவியையும், வேத்தாசலத்தையும் டிஸ்சார்ஜ் செய்வதற்காக வந்த ஆதி, துர்காவும் அவர்களுடன் சேர்ந்து வெங்கடேச்சலாமும், விசாலாட்சியும் வந்திருந்தனர்.

வந்தவர்கள் முதலில் வேதாச்சலம் அறைக்கு அவரை பார்க்க செல்ல.. அவர் அங்கே இல்லாததல் நர்ஸ் இடம் விசாரிக்க…

அவர்கள் சங்கவியை பார்க்க போய் இருப்பதாக கூறவும் சங்கவியின் அறைக்கு வந்து விட்டு இருந்தனர்.

இங்கே வந்தவர்களுக்கு சங்கவி அழுது கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டனர்.

அவர்களை எல்லாம் பார்த்த சங்கவி வேதசலத்திடம் திரும்பி எப்படிப்பா.. என்னால அலாமா இருக்க முடியும். நான் செய்து இருக்க காரியம் அவ்வளவு சின்ன விஷயமா என்ன..

என்னால எத்தனை பேர் பாதிக்க பாட்டு இருக்காங்க… இதோ இங்கே நிக்குறாலே துர்கா இவளை கண்டாலே நான் வெறுத்து ஒதுக்கி இருருக்கேன்.

நான் வேண்டாம்னு சொன்ன ஆதியை தான் இவ கல்யாணம் பண்ணினா… ஆனா என்னவோ அவள் என் கிட்டே இருந்து ஆதியை ப்பிரிச்ச மாதிரி நான் நான் இவ்வளவு நாளும் ரியாக்ட் பன்னிட்டு இருந்திருக்கேன்.

அதை விட ஒரு படி மேலே போய் அவளை கொள்ள முயற்சி எல்லாம் நான் எடுத்து இருக்கேன் என்றுவால் துர்காவையும் ஆதியையும் பார்த்து ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிருங்க என்று தன் கைகளை தூய்மை அவர்களிடம் மன்னிப்பு கேட்டாள்.

இப்படி திடீர் என்று நல்லவளாக மாறி தங்களிடம் சங்கவி மன்னிப்பு கேட்கவும் என்ன செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை. அவ்வர்கள் இருவருமே அமைதியாக சங்கவியை பார்க்க..

அவளோ செண்பகத்தை பார்த்து அம்மா என்று உணர்ச்சி போன அழைத்தாள்.

தன்னை முதல் முறையாக இத்தனை வருடங்களுக்கு அம்மா என்று அழைக்கும் தன் மகளை பார்த்து செண்பகம் வெடித்து அழுதுவிட…

கட்டிலில் இருந்து எழுந்திருக்க மிகவும் சிரமப்பட்ட அடி சங்கவி கட்டிலில் இருந்து இறங்க முயற்சிக்க..

அவள் தடுமாறிய படி இறங்க முயற்சிப்பதை பார்த்த நிலானியும், மாதவியும் ஓடி சென்று சங்கவியை தாங்கி பிடித்துக்கொள்ள…

அவர்கள் இருவரையும் மென்மையாக பார்த்த சங்கவி தன்னை பெற்றவள் முன்பு வந்து நின்று இத்தனை நாள் உன்கூட நான் பேசாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிட்டு மா…

இத்தனை வருஷம் கழிச்சு நீ பெத்த பொண்ண எவ்வளவுவ் ஆசையா நீ பார்க்க வந்து இருப்ப..

ஆனா நான் நீ என்னை முதல் முதலா பார்க்க வந்த அப்போ எப்படியிருந்தேன். கொலைவெறியோட… கையில துப்பாக்கியை வெச்சிட்டு இதோ இவளை சுட்டு கொன்னுடணும்னு கொலைகாரிய உன் முன்னாடி அதுவும் வளர்த்த அப்பாவை சுட்டுட்டு உன் முண்டி கொலைக்காரியா நின்னுட்டு இருந்தேன்.

அப்போ உன்னோட மனசு என்னை அப்டி கொலைகாரியா பார்த்துட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்.

இப்படி பட்ட ஒருத்தியையா நான் என்வாழ்க்கையில்யித்துல சுமந்தேன்னு உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்.

இப்படி பட்டவலையா நாம இத்தனைவருசமா பாம்புக்கு பால்வார்த்த மாதிரி ஒருத்தியை வளர்த்து இருக்கோம்னு என்னை வளர்த்த இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி வலிச்சிருக்கும்.

இதோ இப்போ வரைக்கும் கூட உங்களை எல்லாம் அழ வெச்சிட்டு நான் இருக்கேனே… இப்படி பெத்தவங்க மனசை நோகடிச்சிட்டு நான் எப்படி? எந்த முக வெச்சிட்டு உங்க கூட எல்லாம் பேச முடியும்.

நான் எவ்வளவு பெரிய தப்பு எல்லாம் பண்ணி இருக்கேன். அப்படி இருக்குற அப்போ எந்த முக வெச்சிட்டு உங்களை எல்லாம் நான் பார்க்க முடியும் பேசமுடியும் என்ற சங்கவி தன் கைகளால் முகத்தை மூடி வெடித்து அழ ஆரம்பித்தாள்.

சங்கவியிடன் இப்படி ஒரு முகத்தை இதுவ்வரை பார்த்திராத அனைவரும் அவள் வெடித்து அழுவதை பார்த்து உறைந்து போய் அப்படியே நின்றுவிட்டனர்.

அவளை சமாதானம் செய்யக்கூடாது அங்கிருப்பவர்களுக்கு தோன்றவில்லை. அப்படியே அவர்கள் நின்று இருக்க…

அழுது கொண்டு இருந்த சங்கவி நிமிர்ந்து பாத்திங்களா நான் இத்தனை தப்பு செஞ்சதுனால தானே என்னை சமாதானம் செய்ய்ய கூட யாரும் முன் வரலை என்று அழுதபடி அனைவரையும் பார்த்து சங்கவி கூற..

அவள் சொன்ன அடுத்த நொடி அனைவரும் சங்கவயிடம் வந்து சமாதானம் செய்ய ஆரம்பித்தனர். இவர்களை எல்லாம் பார்த்து என்னை மன்னிச்சிருங்க என்று கை எடுத்து கும்பிட்டு அழுதாள் சங்கவி.

அவள் மனம் திருந்தி தங்களிடம் மன்னிப்பு கேட்கவும் அனைவர் மனமும் அப்படியே பாகாக உருகி சங்கவியை மன்னித்து ஏற்றுக் கொண்டனர்.

பின் அனைவரும் சேர்ந்து ஒருவழியாக சங்கவியை சமாதானம் செய்தவர்கள். வேத்தாசலத்தையும், சங்கவியையும் டிஸ்சார்ஜ் செய்து விக்கி தன் வீட்டிற்கு இருவரையும் அழைத்து செல்வதாக கூற..

சங்கவி இல்ல விக்கி அப்பா, அம்மா, நீ, உன் மனைவி, மாதவி எல்லாரும் ஒன்னா ஒரே வீட்டில் இருப்பது தான் நல்லது என்றாள்.

அப்போ நீ என்று அனைவரும் ஒரு சேர சங்கவி எங்கே தங்கம் போகிறாள் என்று அவளை பார்க்க..

நான் என் அம்மாவுடன் இனி இருக்க போறேன் என்றாள் சங்கவி. அவள் செண்பகத்துடன் இருக்கிறேன் என்று சொன்னது ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும். இத்தனை வருடம் தங்கள்டன் இருந்தவள் இப்பொது விட்டு பீரிகிறாள் என்பதை நினைத்து வேதசலத்திற்கும், சிவகாமிக்கும் கஷ்டமாக இருத்தது.

அவர்கள் இருவரிடம்மும் வந்த சங்கவி எனக்கு எப்பவும் நீங்க தான் முதல்ல.. இத்தனை வருஷமா என்னை நீ அவ்வளவு பாசமா பாத்திருக்கிங்க… ஆனா என் அம்மாவும் பாவோம் தானே என்று செண்பகத்தை காட்டி கூற..

அவள் சொல்லவேத்திலும் நியாயம் இருக்கிறது என்று அவள் செண்பகத்துடன் செல்ல சம்மதித்தனர்.

பின் சங்கவி, வேத்தாசலத்தின் பொருட்களையெல்லாம் மற்றவர்கள் பேக் செய்து கொண்டு இருக்க…

சங்கவி முகம் கழுவ வேண்டும் என்றதும் அவள் கையை பிடித்து பாத்ரூறோம் வரை விட்ட நிலானியையும், மாதவியையும் பார்த்து சிரித்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டு வந்த சங்கவி கண்ணாடியின் முன் வந்து நின்றவல் தன் முகத்தை பார்க்க…

இவ்வளவு நேரம் சாந்தமாக, சிரித்த முகமாக இருந்த அவள் முகம் அப்படியே இருக்கி கோபமாக மாறியது.

நல்லவளா நடிக்கிறதும் நல்லா தான் இருக்குல்ல சங்கவி. கொஞ்சம் அழுது வடிஞ்சதும் இதுங்க எல்லாம் நான் நல்லவள் ஆகிட்டேன்னு அப்படியே முழுசா நம்பிடுச்சுங்க…என்று சிரித்தவள்.

இந்த சங்கவி எப்பவும் யாருக்காகவும் எதற்காகவும் மாற மாட்டாள் என்று குரூரமாக கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்து சிரித்தவள்.

இனி இந்த சங்கவி நினைச்சதை ஒவ்வொன்னா எனக்கு சாதகமா நான் நடத்தி காட்டுறேன் என்று சொல்லிக் கொண்டவள். தன் முகத்தை கழுவிவிட்டு வெளியே கதவை திறந்து சிரித்த முகமாக வர…

அனைவரும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர். அவர்களோடு சேர்ந்து சங்கவி ஆதியின் வீட்டிற்கும், வேதாச்சலம் விக்கியின் வீட்டிற்கும் கிளம்பினர்.

சங்கவியை ஆரத்தி எடுத்து ஆதியின் வீட்டிற்குள் கனகா, விசாலாட்சி, துர்கா மூவரும் சேர்ந்து உள்ளே அழைக்க…

துர்காவைப் பார்த்து வெளியே சிரித்தபடி உள்ளே வந்த சங்கவி… இந்த வீட்டில் என்னையும் ஆதியையும் தவிற இங்கே இருக்குற ஒவ்வொருத்தரையும் இந்த வீட்டை விட்டே நான் கூடிய சீக்கிரம் வெளியே அனுப்ப போறேன் என்று நினைத்தபடி உள்ளே வந்தாள் சங்கவி.

❤️

You may also like

1 comment

S joshna December 14, 2025 - 11:44 am

Ayoo akka😒konja nerathula sangavi aluratha pathu nane aluthuta🥺ana Ava ippovum thirunthala ivala enna panrathu nu enaku suthama theriyala🤔😮

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured