Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 229

உன் ரகசிய ரசிகை நான் 229

by Layas Tamil Novel
97 views

EPI 229

டென்மார்க் செல்வதற்காக ஆதி இருக்கும் தனக்கு தனக்கும் ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்தது சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு நிமிர்ந்த துர்காவை அவளுக்கு தெரியாமல் பூனை சத்தம் இல்லாமல் வருவது போல அவள் பின்னால் வந்த ஆதி அவளை கட்டிக் கொள்ள…

ஆதியின் பிரத்தியேக வாசனை துர்காவின் நாசியில் ஏற என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க என்று சொல்லியபடி அவன் கைக்குள் இருந்த படியே அவனை திரும்பிப் பார்க்க.

ஏய் நான் எவ்வளவு சர்ப்ரைஸா உன்ன பின்னாலிருந்து கட்டிக்கிறேன் கொஞ்சம் கூட முகத்துல அதிர்ச்சியும் ஆச்சரியமும் காட்டாமல் இப்படி சாதாரணமா திரும்பி பேசினால் நான் எடுத்த எஃபர்ட்டுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டான் ஆதி.

நீ என் பக்கத்துல வந்ததுமே உன்னோட வாசனை வச்சு நீ தான் கண்டுபிடிச்சிட்டேன் ஆதி நான் எதுக்கு அதிர்ச்சியாகணும் நீ அதுவும் இல்லாம உன்ன தவிர என்னை யாரு நம்ம ரூம்குள்ள வந்து இப்படி கட்டிப்பிடிப்பாங்க என்று சிரித்தாள் துர்கா.

ஆதியும் சிரித்தபடி என்னோட வாசனை உனக்கு அவ்வளவு நல்லா தெரியுமா என்று கேட்டான்.

நீ கூட்டத்துல எங்கே எவ்வளவு தூரம் இருந்தாலும் உன்னோட வாசனையை வச்சே நான் உன் பக்கத்துல வந்துருவேன் உன்னை தேடி வந்துடுவேன் ஆதி என்றால் துர்கா.

நிஜமாவா அப்படியா மேல வாசம் அடிக்குது என்று சொல்லி குனிந்து தன்னை தானே ஆதி மோர்ந்து பார்த்துக் கொள்ள…

அதை பார்த்து சிரித்தவள் உன்னோட வாசனை உனக்கு தெரியாது ஆதி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லி அவன் நெற்றி முட்டி கூற…

அது என்ன…என்னோட வாசனை எனக்கு தெரியாம உனக்கு மட்டும் தெரியுமா?என்ன? என்றான் ஆதி.

சும்மா கட்டிக்கு கணவன் மனைவிக்குள்ள அவங்களுக்கான பிரத்தியேக வாசனை அவங்க அவங்க ஜோடிகளுக்கு கண்டிப்பா தெரியும்.

தங்களோட ஜோடி கிட்ட இருந்து வர வாசனை தான் அவங்க மேல இவங்களுக்கு இன்னும் காதல் அதிகமாக பிரியும் அதிகமாகவும் காரணமா இருக்கு அது தெரியுமா என்றால் துர்கா.

என்ன துர்கா புதுசு புதுசா சொல்ற என்றால் அது ஆதி ஆச்சரியமாக.

ஆமா ஆதி நம்ம மேல இருந்து தானா உருவாகுற அந்த வாசனையை வச்சு அவங்களுக்கு பிடிச்சமான உங்களை அட்ராக்ட் பண்ண முடியும்.

அட்ராக்ட் பண்ண முடியும்னு சொல்றத விட அவங்க கிட்ட இருந்து வர்ற வாசனையை வச்சு நாமே தானாகவே அவங்க கிட்ட அட்ராக்ட் ஆவோம்.

அது எப்படி என்றான் ஆதி.

இப்போ நீ என்ன ஸ்மெல் பண்ணி பாரேன் என்று துர்கா சொல்ல…

அவன் எதுவும் சொல்லாமல் குனிந்து துர்கா கழுத்தில் தன் முகம் புதைத்து அவள் வாசனையை கண்கள் மூடி நன்றாக உள்ளெறித்துக் கொண்டான்.

அவள் வாசனையை நுகர்ந்த படி துர்கா கழுத்து வளைவிற்குள் தன் மீசை முடியை வைத்து ஆதி குறுகுறுப்பை ஏற்றி விளையாட…

அவனை தன்னிடம் இருந்து பிரித்த துர்கா இப்போ சொல்லு இந்த வாசனை உனக்கு நான் இல்லாத அப்பவும் வேற எங்கேயும் இந்த வாசனையை நீ உணர்ந்தாலும் உனக்கு என்னுடன் ஞாபகமும் என் கூட சந்தோஷமான இருந்த நினைவுகளும் தான் வரும் சரியா என்றால்.

துர்கா சொன்னதை யோசித்த ஆதி நீ சொல்றதும் சரியா இருக்கலாம் நானே நமக்கு கல்யாணம் ஆன பிறகு உன்னோட வாசனை போலவே எங்கேயும் ஒரு பக்கம் உணரும்போது உன்னோட நினைவு கண்டிப்பா எனக்கு வரும் என்றான்.

பார்த்தியா… அந்த வாசனை தான் உனக்கும் எனக்குமான இடையில் இருக்க காதல் என்றால்.

இந்த பிரத்தியேக வாசனையை ஒருவரை ஒருவர் உணரும்போது நம்மை அறியாமையே அவங்க பக்கம் நம்ம சாய்ந்திடும் அவங்க மேல நம்ம காதல் வயப்படுறோம் என்றால் துர்கா.

ஒரு ஸ்மெல்ல வச்சு அதுக்கு இவ்வளவு தூரம் நீ எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்கிறது எனக்கே ஆச்சரியமா இருக்கு துர்கா என்றவன் இங்கே வா நான் இன்னும் கொஞ்சம் உன்னோட வாசனையை என் மனசுக்குள்ள சேர்த்து வச்சுக்கிறேன் என்று சொல்லி அவளை தன் அருகில் இழுக்க போக…

அவன் எதற்காக அடுத்து அடி போடுகிறான் என்று புரிந்து கொண்ட துர்கா ஏ ஆதி வேண்டாம் எனக்கு நிறைய வேலை இருக்கு நாளைக்கு நாம டென்மார்க் போகணும் ஞாபகம் இருக்கா இன்னும் பாதி தான் பேக் பண்ணி இருக்கேன் என்ன டிஸ்டர்ப் பண்ணாதே என்று சொல்லி அவன் கையில் சிக்காமல் துர்கா அந்த அறைக்குள்ளேயே இங்கும் அங்கும் ஓட….

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு இல்ல எனக்கு டைம் இல்ல நான் என் பொண்டாட்டியோட வாசனையை இப்பவே எனக்குள்ள சேமிச்சு வச்சுக்கணும்.

நீ முதலில் என்கிட்ட வா மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று அவளை எட்டிப் பிடிக்க ஆதி அவள் பின்னால் ஓட…

ம்ம்ஹும்… முடியாது நீ அடுத்து என்னவெல்லாம் செய்வேன்னு எனக்கு நல்லாவே தெரியும் நான் உன் பக்கத்துல வரமாட்டேன் உன் கையில மாட்ட மாட்டேன் ஒழுங்கா நீ இங்கிருந்து முதலில் வெளியே போ என்று ஆதி, துர்கா தங்கள் அறையில் அருகில் இருந்து வெளியே விரட்ட பார்க்க…

ஏய் என்னடி நீ புருஷன் ஆசையா உன்ன கொஞ்ச வந்தா இந்த ரூம விட்டு என்ன வெளியே போகச் சொல்லி மிரட்டுற…

அதெல்லாம் முடியாது எனக்கு உன் வாசனை இப்பவே வேணும் என்று அடம் பிடித்துக் கொண்டு அவளை ஒரே எட்டில் ஓடுச்சென்று தாவி பிடித்த ஆதி அப்படியே அலேக்காக துர்காவை தூக்கி வந்து மெத்தையில் போட்டான்.

விலை படக்க வைத்து விட்டு அவள் அருகில் படுத்துக்கொண்ட ஆதி, துர்கா கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசனையை தன் உடல் முழுவதும் உயிரினும் முழுவதும் நிரப்பிக் கொண்டான்.

அவள் கழுத்து வளைவும் அவள் உடலில் இருந்து எழுந்த பிரத்தியேக வாசனையும் ஆதியின் உணர்வுகளை தூண்டிவிட அவள் கழுத்தில் முதலில் மென்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.

சிறு சிறு முத்தங்கள் ஆக தன் இதழை ஈரம் செய்து கொண்டு துர்காவுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறான் அந்த ஏசி அறையில் அவனது எச்சில் முத்தம் அவளுக்கு குளிர்விப்பை தந்தது.

ஆதி, துர்காவுக்கு முத்தம் கொடுக்க கொடுக்க அவள் உடல் முழுவதும் சிலிர்க்க தொடங்கியது.

மென்மையாக துர்காவின் கழுத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஆதி, அவள் வாசனை அவன் மூளைக்குள் சென்று அவன் செல்களை எல்லாம் உயிர்ப்பிக்க செய்ய…

மென்மையாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஆதி சட்டென துர்கா கழுத்தில் நறுக்கென கடித்து விட்டான்.

சற்று நன்றாகவே கடித்து விட வலியில் துர்கா ஆவென கத்தி விட்டாள்.

அவள் வலியில் கத்தவும் அவர்கள் அறைக்கதவு தட்டவும் சரியாக இருந்தது.

அவன் முகத்தை தன் கழுத்திலிருந்து பிடித்து நிமிர்த்திய துர்கா, ஆதியை பார்த்து வலிக்குதுடா…. என்றாள்.

அது என்னவோ தெரியல துர்கா நீ சொல்றது உண்மைதான் உன்னுடைய வாசம் என் நாசியில் ஏற ஏற நான் உன் மேல பித்து பிடிச்சு போயிடுறேன். நான் என்ன செய்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது என்று ஆதி கூற….

அவன் சொல்வதைக் கேட்டு சிரித்தவள் இப்பவாது புரியுதா இந்த பிரத்தியேக வாசம் எவ்வளவு முக்கியம் அப்படின்னு துர்கா சிரிக்க….

நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்றான் ஆதி.

அவன் சொல்வதைக் கேட்டு துர்கா சிரிக்க…

சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாத எனக்கு வேற நிறைய வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டே அவள் கழுத்தில் மீண்டும் முகத்தை புதைக்க போக அப்போது அரைக்கதவு மறுபடியும் தட்டும் சத்தம் கேட்க அப்போதுதான் இருவருக்குமே அது உரைத்தது.

அட யாருடா அது சிவ பூஜையில் கரடி மாதிரி என்று அழுது கொண்ட ஆதி ஒரு நிமிஷம் இரு வரேன் என்று சொல்லி எழுந்து கதவை திறக்க போக அவன் கையைப் பிடித்து அமர்த்திய துர்கா நீ இங்கே இரு நான் அந்த கரடி யாருன்னு போய் பார்த்துட்டு வரேன் என்றாள்.

சரி போ என்று அவள் தலையில் லேசாக குட்டிய ஆதி, துர்காவை அனுப்பி வைக்க…

வலிக்குதுடா…. என்று மீண்டும் சொன்ன துர்கா தன் தலையை லேசாக தேய்த்து விட்டுக் கொண்டே சிரித்தபடி வந்து தங்கள் அறைக்கதவை திறக்க அவர்கள் அறைக்கு முன்னால் சங்கவி நின்று இருந்தாள்.

அவளைப் பார்த்ததும் துர்காவின் முகம் கருத்து விட…

ஆனால் சங்கவிக்கோ துர்கா கதவை திறக்கும் போது மிகவும் சந்தோஷமாக சிரித்து முகத்தோடு வந்து திறப்பதை கவனித்தவள் அவளைத் தாண்டி அறையில் உள்ள எட்டிப் பார்க்க கட்டிலில் ஆதி படுத்தபடி தன் மொபைலில் நோண்டிக் கொண்டு இருந்தான்.

ஹாய் உன் புருஷனும் பொண்டாட்டியும் காலையிலேயே ரொமான்ஸ் பண்றாங்க போல அதனாலதான் இவன் முகம் இவ்வளவு சந்தோசமா இருக்கு என்று கடுப்பாக சங்கவி நினைத்துக் கொள்ள…

தான் நின்று இருக்கையில் தன்னைத் தாண்டி சங்கவி உள்ளே இருக்கும் ஆதியை பார்ப்பதை கவனித்த துர்கா, அவள் முகத்திற்கு முன்னால் வந்து நின்று ஆதி தெரியாதபடி நின்றாள்.

ஆதியை ஒருமுறை பார்த்துவிட்டு அறைக்கும் வெளியே வந்து கதவை சாற்றிக் கொண்ட துர்கா உனக்கு என் ரூம்கிட்ட என்ன வேலை வேண்டி இருக்கு என்று கேட்டாள்.

நான் ஒன்னும் தேவை இல்லாம உன் ரூமுக்கு வரல உன்னையும் ஆதியையும் கீழே அத்தை அழைச்சிட்டு வர சொன்னாங்க என்றால் சங்கவி.

அதை நீ தான் வந்து சொல்லனுமா என் வீட்டுல எங்களை கூப்பிட வேற யாருமே இல்லையா என்றால் துர்கா கடுப்பாக.

நான் வந்து கூப்பிட்டால் நீ கீழே வரமாட்டியா என்ன என்றால் சங்கவியும் விடாமல்.

உன்ன பாக்கவே உன்கிட்ட பேசவும் எனக்கு சுத்தமா பிடிக்கல…அப்படி இருக்கும்போது நானும் என் புருஷனும் உள்ள சந்தோசமா ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறப்போ நீ சிவ பூஜையில் கரடி நொழஞ்ச மாதிரி வந்து என்னை என் புருஷனையும் டிஸ்டர்ப் பண்ணினா எனக்கு கடுப்பாகுமா? ஆகாதா? என்றால் துர்கா.

ஏய்… யாரைப் பார்த்துடி கரடி என்று சொன்ன என்ன பாத்தா உனக்கு கரடி மாதிரி இருக்குதா என்று சங்கவி துர்காவிடம் சண்டைக்கு வர…

ஏய் சும்மா எதுக்குடி கத்துற தேவையில்லாம நீதாண்டி கரடி சாரி சாரி உன்ன கரடி என்று சொல்லி நான் அந்த கரடியை அவமானப்படுத்திட்டேன். உனக்கு வேற… ஏதாவது ஒரு ஜந்து பேர் வைக்கணும் அதுதான் சரியா இருக்கும் என்று துர்கா சங்கவியை பார்த்து சிரிக்க…

நீயே சொல்லு உன்ன பத்தி உனக்குத்தானே நல்லா தெரியும் உனக்கு என்ன பெயர் வச்சா கரெக்டா மேட்ச் ஆகும்னு சொல்லு பார்க்கலாம் என்று துர்கா கூற…

அதற்கு சங்கவி எந்த பதிலும் பேசாமல் அவளை முறைக்க…

சரி சரி நீ எப்படியும் உன்னை பற்றி நீயே வெளியே பெருமை பேசிக்க மாட்டேன்னு நல்லா தெரியும் என்ற துர்கா, “என்ன ரீடர்ஸ் நீங்க கண்டிப்பா இப்போ சங்கவிக்கு ஏதாவது ஒரு நிக் நேம் வைக்க யோசிச்சிட்டு தான் இருப்பீங்கன்னு தெரியுது. எங்கே அப்படியே கதையை படிச்சு முடிச்சுட்டு கமெண்ட்ல அவளுக்கு என்ன மாதிரி பெயர் வைக்கலாம்னு சொல்லுங்க பார்க்கலாம்.”

தன்னை வைத்து துர்கா இப்படி கிண்டல் செய்து பேசுவதை கேட்ட சங்கவிக்கு கடுப்பாக இருந்தது.

சங்கவி துர்காவை முறைத்தவள் இங்கே பாரு நான் ஒன்றும் உன்னையும் உன் புருஷனையும் டிஸ்டர்ப் பண்ணனும்னு இங்கே வேணும்னு வரல உன் மாமியார் காரி தான் உன்னை அழைச்சிட்டு வரச் சொல்லி என்னை இங்கே அனுப்பி வச்சது என்றால் சங்கவி கடுப்பாக…

நீ இப்படி கோபமா பேசுற அப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சங்கவி அதான் ஏன்னு தெரியல…

எப்பவுமே நீ தான் எல்லாரையும் கோபப்படுத்தி டென்ஷன் பண்ணுவ. ஆனா இன்னிக்கு என்னால நீ கோபப்பட்டு டென்ஷன் ஆகிறத பார்க்கிறப்போ எனக்கு உள்ளுக்குள்ள எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்றால் துர்கா.

துர்காவை முறைத்துவிட்டு சங்கவி அங்கிருந்து கிளம்பிச் செல்ல…

தங்கள் அறைவாசலில் நின்றிருந்த துர்கா சங்கவி கடுப்பாக செல்வதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

தன் அறை கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்த துர்கா, ஆதியை பார்க்க அவன் கட்டிலில் இன்னமும் படுத்தபடி துர்காவுக்காக காத்திருந்தான்.

அவளை பார்த்ததும் தன் கைகள் இரண்டையும் நீட்டி வா… என்று அழைக்க..

துர்கா அறைக்குள் வந்து கதவை தாழிட்டபடி ஓடிச் சென்று ஆதியின் கைவளைவிற்குள் தன்னை புகுத்திக் கொண்டாள்.

அந்த கரடி யாரு என்று அவளை கட்டிக்கொண்டு ஆதி கேட்க…

நம்ம ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்றதுக்கு இந்த வீட்ல வேற யாரு இருக்காங்க அதான் அந்த சங்கவி இருக்காளே என்றால் துர்கா.

நீ சங்கவி என்று சொன்னது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு என்ற ஆதி, விக்கியிடமும் அவன் குடும்பத்திடமும் இருந்து சங்கவி அவர்களை மிரட்டி அனைத்து சொத்துக்களையும் எழுதி வாங்கிய விஷயத்தைக் கூறி…

சங்கவி இன்னும் மாறவில்லை என்று துர்காவுக்கு தெரிந்தாலும் அது இவ்வளவு நாள் ஆதிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஆனால் இன்று ஆதி சொன்ன விஷயத்தை கேட்டு ஆச்சரியமான துர்கா, “என்ன ஆதி சொல்ற நீ சொல்றது நிஜம் தானா” என்றால் நம்ப முடியாமல்.

ஆமா துர்கா என்றவன் நீ அந்த சங்கவி கிட்ட இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு சரியா என்றான்.

சரி என்று துர்கா தலையாட்ட…

சரி அந்த கரடி எதுக்கு இப்போ நம்ம ரூம் கதவை தட்டிச்சு என்றான்.

ஐயோ நான் மறந்தே போயிட்டேன் ஆதி என்று அவன் மேல் படுத்திருந்தவள் நெற்றியில் கைவைத்தபடி, “ஆதி உன்னையும் என்னையும் அத்தை கீழே வரச் சொல்லி சொன்னாங்களாம் அதுக்காகத்தான் அந்த சங்கவி இங்கே நம்ம ரூமுக்கு வந்தா” என்று துர்கா கட்டிலிலிருந்து இறங்கி “சீக்கிரம் அத்தை சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு நம்ம கீழே போகலாம்” என்று அவனை அழைக்க…

மெத்தையில் இருந்து சலிப்பாக இறங்கிய ஆதி, “இன்னிக்கு ஒரு நாள் தாண்டி என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும். இன்னும் பத்து பதினைந்து நாள் என் கூட டென்மார்க்கில் நீ இருந்து தான் ஆகணும் அப்ப என்ன பண்றேன்னு பார்க்கிறேன்” என்று நினைத்தபடி கிளம்பி துர்காவுடன் கீழே சென்றான்.

ஆதியிடம் பேசிவிட்டு துர்கா படிகளில் சிரித்த முகமாக இறங்கி வர, துர்கா இப்படி சந்தோஷமாக வருவதை ஹாலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் வீட்டு பெண்கள் எல்லாம் அவளுடைய சந்தோசம் தங்களுக்கும் ஒட்டிக்கொண்டது போல தோன்ற, துர்கா வந்ததும் அவளை அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்ட விசாலாட்சி, “துர்கா இங்க பாரு” என்று காட்ட…

இப்போதுதான் துர்கா கவனித்தால் ஒரு ஜவுளி கடையையே கொண்டு வந்து தங்கள் வீட்டில் இறக்கி இருந்தனர்.

அத்தை என்ன இது என்று துர்கா ஆச்சரியமாக கேட்க…

எல்லாம் நம்ம வீட்ல இருக்கறவங்களுக்காகத் தான் துர்கா. அறுபதாம் கல்யாணத்துக்கு கட்டிக்க பட்டு புடவை வேணும் இல்லையா அதனாலதான் உனக்கு பிடிச்சதே நீ என்ன வேணுமோ செலக்ட் பண்ணிக்கோ என்று விசாலாட்சி ஆசையாக தன் மருமகளுக்கு அருகில் இருந்த சேலைகளை எடுத்து காட்ட…

ம்கூம்… நாங்களும் இந்த வீட்டு மருமக தான் எங்களுக்கும் இரண்டு சேலையை எடுத்து காட்டலாம் கிருத்திகா விசாலாட்சியிடம் கூற…

உனக்கு நான் எடுத்து தரேன் கீர்த்தி எப்பவுமே நான் எடுத்துக் கொடுக்கிற சேலை தானே உனக்கு பிடிக்கும் என்று சொல்லி அங்கிருந்த சேலைகளை எல்லாம் பிரட்டி உள்ளதுலயே மிகவும் அழகாக விலை உயர்ந்ததாக இருந்த ஒரு சேலையை எடுத்து கீர்த்திகாவின் முன் நீட்ட…

அவள் கையில் இருந்த சேலையை பார்த்த கீர்த்திகா சிரித்தபடி துர்காவிடம் அந்த சேலையை வாங்கப் போக….

அப்போது சரியாக ஒரு கரம் கீர்த்திகாவின் கையில் இருந்த சேலையை பறித்துக் கொண்டது.

You may also like

1 comment

S joshna December 22, 2025 - 2:44 pm

Sangavi name pisasu😅

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured