News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உன் ரகசிய ரசிகை நான் 228

by Layas Tamil Novel
205 views
A+A-
Reset

Epi 228

தன்னுடன் கதிர் விக்கியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வேளையில் வெங்கடாசலம் சங்கவி போனில் இருந்து அவனுக்கு அழைத்தவை பற்றி கூறினான்.

சங்கவி என்று சொன்னதும் விக்கிக்கு அவள் செய்தது எல்லாம் நினைவிற்கு வர… ஆதி குடும்பம் கதிரிடமும் தயங்கியபடி அவள் சொத்துக்களை எல்லாம் தன்னையும் தன் குடும்பத்தையும் மிரட்டி எழுதி வாங்கிய விஷயத்தை விக்கி சொல்லவும்..

இருவருக்குமே அதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. அவள் வீட்டில் யாரிடமும் பேசாமல் ஒதுங்கி இருப்பதை நினைத்த ஆதி, அவள் அமைதியாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கிறாள் என்று புரிந்து கொண்ட ஆதி, தற்போது தன் அப்பா அளித்ததற்கும் கூட சங்கவி சொத்திற்காக எதுவும் பிரச்சனை செய்து இருப்பாள் அதனால் தான் தங்களை அளித்து வர சொல்லி இருக்கிறார் என்ற படி அவன் வீட்டிற்கு வந்தான்.

காரை விட்டு இறங்கிய மூவரும் நேராக வீட்டிற்கு நுழைந்ததும் ஹாலில் வெங்கடாசலம் அமர்ந்து இருக்க அவர் அருகில் துறையும் சந்தோஷின் அப்பா முத்துவும் அமர்ந்து இருந்தனர்.

அவரைப் பார்த்ததுமே விஷயம் பெரிதாக போய்விட்டதோ என்று எண்ணத்தோடு சுற்றியும் பார்க்க…

வடிவு முருகன், ரூபிஷன் அம்மா அவனுடன் ஷிவு ரூபேஷ், அட சந்தோஷ் அவனுடன் அவன் அம்மா, வேதாச்சலம் சிவகாமி நிலானி, மற்றும் ஆதியின் வீட்டில் உள்ள அனைவருமே ஹாளில் தான் கூடியிருந்தனர்.

ஏன் இத்தனை பேரை அப்பா அழைத்திருக்கிறார் இவர்களெல்லாம் எதற்காக வரச் சொல்லி இருக்கிறார் என்று யோசனையோடு ஆதி அவன் அப்பாவிடம் வர..

கதிர் சென்று கீர்த்திகாவிடம் என்ன ஆச்சு என்றான்.

அவள் ஷ்….எனக்கும் எதுவும் தெரியலை வெயிட் பண்ணு பார்க்கலாம் என்றால்.

விக்கியும் நிலானிடம் வந்து நீங்க எல்லாரும் எதுக்கு வந்தீங்க இங்கே ஏன் எனக்கு ஒரு போன் கூட பண்ணி சொல்லல என்றான்.

தெரியலங்க ராதா தான் திடீர்னு எனக்கு போன் பண்ணி உடனே எல்லாரையும் கிளம்பி இங்கே வரச் சொல்லி சொன்னா நான் என்ன காரணம் என்று கேட்டதற்கு எனக்கும் தெரியல அங்க வந்தா தான் தெரியும் என்று சொல்லிட்டா என்றாள்.

எதற்காக எதற்காக இங்கே அனைவரும் கூடி இருக்கிறார்கள் என்று யோசனையுடன் அனைவரும் அவரவர் மனதில் எழுந்த கேள்விகளோடு வெங்கடாசலத்தையும் சங்கவியையும் மாறி மாறி பார்த்தனர்.

ஆதி அவன் அப்பாவிடம் வந்தவன் என்ன ஆச்சு ஏன் எல்லாரும் வந்து இருக்காங்க… எதுவும் பிரச்சினையா அப்பா என்றான்.

முதல்ல இங்கே வா஺ես வந்து என் பக்கத்துல உக்காரு நான் சொல்றேன் என்று அழைத்து ஆதியை தன் பக்கம் அமர வைத்தவர் கதிர் விக்கியையும் தன்னருகில் அமர வைத்துக்கொண்டு அனைவரையும் பார்த்தவர்.

உங்க எல்லாரையும் போன் போட்டு அவசரமா என்ன விஷயம் கூட சொல்லாம வர சொன்னதுக்கு என்ன முதல்ல மன்னிச்சிடுங்க என்றார்.

ஐயோ என்ன இப்படி எல்லாம் சொல்றீங்க அண்ணா என்று சந்தோஷின் அப்பா முத்துக்குற மற்றவர்களும் அவரை ஆமோதித்தனர் நாங்க என்ன விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு தான் வந்தோம் நீங்க எதுக்கு இப்படி எல்லாம் கேக்குறீங்க என்றனர்.

அப்பா என்ன விஷயம்னு முதல்ல சொல்லுங்க எனக்கு டென்ஷன் ஆகுது உங்களுக்கு நம்ம குடும்ப ஆட்களுக்கு எதுவும் பிரச்சனையா? யாராவது இதுவும் பிரச்சனை செய்தார்களா? என்று சங்கவியை பார்த்து முறைத்தபடி ஆதி கேட்டான்.

ஆதி நீ ஏன் இவ்வளவு சீரியஸா யோசிக்கிற அதெல்லாம் எதுவும் இல்லப்பா நான் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லித்தான் எல்லாரையும் இங்கே வர சொன்னேன் என்றார் வெங்கடாசலம்.

சந்தோஷமான விஷயமா? அப்போ நீங்க அதை உங்க போன்ல இருந்து எனக்கு கூப்பிட்டு சொல்லி இருக்கலாமே அப்பா.

அதுவும் இல்லாம உங்க கிட்ட சொல்லிட்டு ஆபீஸ் கிளம்புன கொஞ்ச நேரத்திலேயே நீங்க எனக்கு கால் பண்ணி திடீர்னு வர சொல்லவும் நான் என்னவோ எதுவும் நினைச்சுட்டேன் என்றான்.

ஆதி எனக்கே நீ கிளம்புன பிறகு காலையில் தான் விஷயம் தெரியும் உன் அம்மா கிட்ட மாத்திரை சாப்பிடும் போது பேசிக்கிட்டு இருந்த போது தான் தெரிஞ்சது சொல்லப்போனால் உன் அம்மா சொல்லித்தான் எனக்கே விஷயம் தெரியும் என்றவர் விசாலாட்சி ஒரு முறை பார்த்து விட்டு.

அம்மாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி 30 வருஷம் ஆயிருச்சு ஆதி எனக்கு இப்போ வரை வயசுல 30 தான் ஆகுதுன்னு நினைச்சுட்டு இருக்கேன் என்றவர் உன் அம்மா என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக்கொள்கிறாள்.

எனக்கு வயசு ஏறிட்டு போவது கூட ஞாபகம் இல்லாத அளவுக்கு என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்றவர்.

உன் அம்மா சொல்லித் தன் எனக்கு இன்னும் 15 நாள்ல 60 வயசு ஆக போறதுங்கிறது தெரிஞ்சது.

60 வயசு ஆகுற அப்போ என்னோட பசங்க அவங்களோட குடும்பத்தோட சேர்ந்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் அறுபதாம் கல்யாணம் செய்து வைக்கணுமாம்.

இதனை இன்னைக்கு தான் சொன்னா அப்படி பசங்க எல்லாம் சேர்த்து செய்து வைத்தால் எனக்கு ஆயுள் இன்னும் அதிகமாகும் என்று உன் அம்மா சொல்றா…

நீ சொல்லு இத்தனை வயசுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கணும் அதுவும் உன் அம்மாவையே கல்யாணம் பண்ணிக்கணும்னா எப்படி என்று அவர் சொல்ல…

இக்கோடு சேர்ந்து அங்கிருந்து அனைவரும் அவர் சொல்வதைக் கேட்டு சிரித்தனர்.

சரி பரவால்ல என் பொண்டாட்டி என்கிட்ட இத்தனை வருஷத்துல எதுவும் இதுவரை அதுவரும் இது வேணும்னு கேட்டதில்லை என்னோட அற்புத வயசுல அவளையும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவளை வாய் திறந்து ஆசையா கேட்டிருக்கா.

இந்த அறுபதாம் கல்யாணம் செய்யனும்னு ஆசையா கேட்டிருந்தா கூட பரவால்ல…

கண்டிப்பா செய்து ஆகணும்னு ஒத்த காலைல நின்னா நான் கூட இத்தனை வருஷம் ஆன பிறகு இதெல்லாம் வேணுமான்னு கேட்டு ரூம்ல நானும் அவளும் பேசிகிட்டு இருந்தோம்.

அந்த நேரம் தான் செண்பகமும் சங்கவியும் ஏதோ பேசிக்கிட்டு அந்தப் பக்கம் வந்து இருக்காங்க நாங்க ரெண்டு பேரும் பேசறது கேட்டுட்டு ரெண்டு பெரும் உள்ளே வந்தவங்க.

நாங்க பேசறது எல்லாம் கேட்டுட்டு சங்கவி தான் நான் வந்த பிறகு இதுதான் முதல் ஃபங்ஷனா இருக்கு அதனால சரின்னு சொல்லுங்க மாமா ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று உன் அத்தை கூட சேர்ந்துட்டு அவளை மாதிரியே இவ்வளவு பிடிவாதம் பண்ணிட்டா…

ஊதாக்கரைக்கு என் தங்கச்சி செண்பகமும் இவங்க ரெண்டு பேரும் கூட சேர்ந்துட்டு எனக்கு எதிரா இந்த அறுபதாம் கல்யாணத்தை கண்டிப்பா நடத்தியே ஆகணும்னு எனக்கு எதிரா பேசினா…

நீயே சொல்லு நான் ஒத்தையால் இவங்க மூணு பேர எப்படி சமாளிக்கிறது என்று சொல்லி சிரித்தவர்.

எப்படியோ அதே மாதிரியே பேசி என்ன சரின்னு தலையாட்ட வெச்சுட்டாங்க மூணு பேரும் சேர்ந்து.

அதுக்குப் பிறகு வீட்டில் இருக்கிற எல்லாரையும் சொல்லி விஷயத்தை சொல்லவும் எல்லாருக்கும் ரொம்ப சந்தோசமாயிடுச்சு.

நான் சம்மதம் சொன்னதும் சங்கவியே ஆக போனில் இருந்து உனக்கு போன் பண்ணி உன்கிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி என்கிட்ட ஃபோனை கொடுத்தாள்.

எனக்கும் போன்ல எப்படி சொல்றதுன்னு தான் புரியாம உன்னையும் கதிர் விக்கியையும் வீட்டுக்கு கிளம்பி வரச் சொன்னேன் என்றார்.

எவ்வளவு பெரிய சந்தோசமான விஷயத்தை நீங்கள் ஏதோ சஸ்பென்ஸ் வைக்கிறீங்கன்னு எங்க மூணு பேத்தையும் பயமுறுத்துட்டீங்க என்று விக்கி சொல்ல…

விக்கி பார்த்து சிரித்தவர் கொஞ்சம் புதுசா இருக்கட்டுமே எவ்வளவு நேரம் தான் நீங்க எல்லாருமே சஸ்பென்ஸ் வச்சுக்கிட்டு இருப்பீங்க அதே மாதிரி தான் நானும் கொஞ்ச நேரம் அப்படி விளையாட்டினேன் என்று சிரித்தார்.

உடனே சங்கவி சொன்ன ஆமா ஆதி நான்தான் விஷயத்தை சொல்லாம சஸ்பென்சா இருக்கட்டும்னு மாமாவுக்கு 60த் மேரேஜ் அனிவர்சரி வருதுன்னு உன்கிட்ட சொல்லாம அவங்க எல்லாரும் கிளம்பி இங்கே வரச் சொன்னேன் என்றாள்.

உன்கிட்ட கூப்பிட்டு சொன்ன கையோட நான் நம்ம வீட்ல இருக்குறவங்க கிட்டயும் சொல்லி அவங்க அவங்க மத்தவங்களுக்கு போன் போட்டு வீட்டுக்கு வர வச்சுட்டாங்க என்று அனைவரும் முன்னிலையும் நல்லவள் போல நடித்தாள் சங்கவி.

அவள் இன்னொரு முகம் தெரிந்தவர்கள் எல்லாரும் அவள் நடிப்பை பார்க்க முடியாமல் அங்கே வெறுமனே நின்று இருந்தனர்.

அனைவரும் ஒன்று கூடி எப்போது வெங்கடாசலம் விஷாலாக்ஸியின் அறுபதாம் கல்யாணத்தை செய்வதற்கான ஏற்பாடுகள் பற்றியெல்லாம் பிளான் செய்ய ஆரம்பித்தனர்.

துர்காவின் மாடலின் சூட்டிங் விஷயமாக ஆதி துர்கா இன்னும் இரு தினங்களில் டென்மார்க் செல்ல இருப்பதால் அவர்கள் வந்த பிறகு அறுபதாம் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

யார் யாருக்கு என்ன வேலை என்று அங்கேயே அவர்களாகவே பிரித்துக் கொண்டனர்.

❤️

ஆதி ஆபீஸிற்கு அருகிலேயே சற்று பிரபலமாக இருந்த ஒரு காபி ஷாப்பிற்கு பவனும் அதுவும் மாலை ஆபீஸ் முடிந்து சென்று இருக்க…

இருவரும் எதிர் எதிர் டேபிளில் அமர்ந்து இருந்தனர் ஆனால் பவன் சற்று கோபமாக அமர்ந்து இருக்க அவன் இதில் அமர்ந்து அவனை சமாதானம் செய்து கொண்டு இருந்தால் மது.

இங்க பாரு என்ன பாரு ஏன் இவ்வளவு கோபமா இருக்க என் மேல… அப்படி என்ன செய்தேன் நீ என்கிட்ட கோபப்படுற அளவுக்கு என்றால் மது.

ஏன் நீ என்ன செய்தேன்னு உனக்கு தெரியலையா என்று அவளை முறைத்தபடி கேட்டான் பவன்.

அவள் புரியாமல் பவனைப் பார்க்க…

என்ன அப்படி பாக்குற நம்ம கல்யாணத்தை நல்ல கிராண்டா வைக்கணும்னு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன்.

ஆனா நீ என் அம்மாகிட்ட ஏதேதோ பேசி சிம்பிளா கோவில்ல நம்ம குடும்பத்தை மட்டும் அழைச்சு நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லி என் அம்மா கிட்ட சம்மதம் வாங்கிட்ட….என்றான் கோபமாக.

பவன் இதற்குத்தான் இப்படி கோபமாக இருக்கிறேன் என்று சொல்லவும் அதைக் கேட்டு சிரித்த மது.

உனக்கு எதிரே அமர்ந்து இருந்தவள் ரெஸ்டாரண்டில் யாரேனும் தங்களை கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டபடி தான் அமர்ந்திருந்த சேவை இழுத்துக் கொண்டு வந்து அவன் அருகில் போட்டு அமர்ந்தவள்.

பவனின் கையைப் பிடித்து தன் மடியில் வைத்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்து..

பவன் என்பவள் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு சரியா என்றவள் உனக்கே தெரியும் அந்த ரவியை நம்பி அவனை நான் கல்யாணம் செய்து எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன்னு.

நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க சமைச்சது சம்மதித்ததே உனக்காகவும் உன் அம்மாவுக்காக தான் அது உனக்கு நல்லாவே தெரியும்.

ரெண்டு பேருக்காகவும் தான் நான் லிவிங் சிப்ல சேர்ந்து வாழ ஐடியாவையே விட்டுட்டு முறைப்படி கல்யாணம் செய்துவிட்டு உன் கூட வாழ சம்மதிச்சேன்.

நம்ம எனக்கும் ரவிக்கும் மியூச்சுவல் டைவர்ஸ் நடந்து ஒரு மாசம் தான் ஆகுது.

அவனை டைவர்ஸ் பண்ணுன ஒரு மாசத்திலேயே உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு விஷயம் ஊரெல்லாம் தெரிஞ்சா நம்மள பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க.

நீயும் நானும் தவறான பழக்கத்தில் இருந்ததால் தான் நான் அவனை டைவர்ஸ் பண்ணிட்டேன்னு நினைக்க மாட்டாங்களா? என்றால் மது.

அந்த மாதிரி ஒரு கெட்ட பயிரோட எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்றாள்.

நீ என்ன எந்த காலத்தில் போய் இப்படி பேசிக்கிட்டு இருக்க நம்மள பத்தி பேசுறவங்க நீ எப்படி இருந்தாலும் எங்க இருந்தாலும் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க அதை எல்லாம் நெனச்சு வருத்தப்பட்டு இருந்தா நம்மால் சந்தோஷமா வாழவே முடியாது என்றான் பவன்.

மது எதுவும் பேசாமல் அமைதியாக அவனையை பார்க்க…

பவன் சரி அப்படி பார்க்காதே நீ இப்படி என்ன பார்த்தா எனக்கு உன்கிட்ட சண்டை போடவோ கோபப்படுவோ தோண மாட்டேங்குது என்றான் சற்று தளர்த்த குரலோடு.

இப்போ நீயும் எனக்காக இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் ஓகே சொல்லேன் ப்ளீஸ் என்று அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அவனை பார்த்து பாவமாக மது கேட்க…

இதற்கு மேல் அவனால் மதுவிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியவில்லை அதெல்லாம் சரி தான் மது அதுக்காக நம்ம மேரேஜை இவ்வளவு நாள் தள்ளி வைக்கணுமா என்ன என்றான்.

என்னடா நீ ஏன் நம்ம கல்யாணம் என்ன ரெண்டு மூணு மாசம் கழிச்சா வெச்சிருக்கோம் வெறும் ஏழு நாள் ஏழு நாளில் நமக்கு கல்யாணம் ஆகப்போகுது இத்தனை நாள் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த இன்னும் ஒரு ஏழு நாள் உன்னால பொறுத்திருக்க முடியாதா என்றால்.

ம்ம்ஹும்… இந்நாள் தானே நீ சாதாரணமா சொல்லிட்டேன் ஆனா எனக்கு இந்த ஏழு நாளும் ஏழு யுகம் மாதிரி தானே இருக்கும் என்றான்.

டேய் நீ ரொம்ப தான் பண்ற என்று அவனை முறித்தவள் சரி சரி இன்னும் ஏழு நாள் தான் பொறுத்துக்க என்றால் மது.

அப்போ ஏழு நாளுக்கு அப்புறம் எனக்கு எல்லாம் கிடைக்கும் னு சொல்ற அப்படித்தானே என்று அவளைப் பார்த்து பவன் கண்ணடிக்க…

அவனை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்த மது. நீ ரொம்ப தேரிட்ட… டா….

நான் உன்ன முதல் முதல்ல ஆபீஸ்ல பார்த்தப்ப ரொம்ப அம்மான்ச்சி மாதிரி நல்ல பையன் போல இருந்த அதை பார்த்து தான் நான் ஏமாந்துட்டேன்.

இப்போ என்னடா நா எப்ப பேசினாலும் அதைப் பற்றியே பேசுற என்றால் மது வெட்க்கப்பட்டு கொண்டே.

நான் நிஜமாவே நல்ல பையன் தாண்டி நீ தான் என்ன சிம்லா கூட்டிட்டு போய் கெடுத்துட்ட….

அதுவரைக்கும் எனக்கு அதை பத்தி எல்லாவிதமும் தெரியாது எப்போ நீ என்கிட்ட அந்த மாதிரி உரிமை எடுத்துக்கிட்டுயோ அப்போ இருந்தே நானும் உன்கிட்ட உரிமை எடுத்துக்க ஆரம்பித்துவிட்டேன்.

என்ன எல்லா விஷயத்திலும் உன்னிடம் உரிமை எடுத்துகிட்டேன். ஆனா அந்த ஒரு விஷயத்துல மட்டும் தெரியாம செய்த தவற நமக்கு திருமணமான பிறகு தெரிஞ்சே செய்யணும்னு ஆசைப்படுறேன் என்று சொல்லி அவன் மீண்டும் கண்ணடிக்க…

சீ போடா எப்ப பாரு அதே பேச்சு தான் என்றால்.

எனக்கு இன்னும் ஏழு நாள் எப்போ டா ஆகும் உன்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கணும் எப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ன்னு நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் நீ என்னடான்னா சீ… போன்னு சொல்ற என்றான்.

அவன் ஃபர்ஸ்ட் நைட் என்று சொன்னதும் மதுவிற்கு வெட்கத்தில் முகம் முழுவதும் சிவந்து விட…

பவனும் மதுவை கிண்டிலிடித்தபடி அவளை மேலும் வெட்கப்படுத்திக் கொண்டிருந்தான்.

❤️

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.