News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 24 அஞ்சு நிமிசத்துல என் ரூமுக்கு வந்தாகணும்

by Sinamika Writes
2.1K views
A+A-
Reset

மூர்க்கன் 24

“உங்க எல்லாரையும் நான் எதுக்கு வர சொல்லிருக்கேன்னு தெரியுமா?” என்று அதிகாரத் தோரணையில் பேசினாள் ரக்ஷனா.

“சொன்னா தானே தெரியும். நீ சொல்றதுக்கு முன்னாடியே தெரிஞ்சுக்க நாங்க என்ன குட்டி சாத்தானா . நீ நினைக்கிறதை எல்லாம் நாங்க சொல்றதுக்கு ” என்றார் வேதவல்லி நக்கல் குரலில்.

அவரை முறைத்த ரக்ஷனா “நான் என்ன சொல்றேன்னு முதல்ல கேளுங்க.. அதுக்கு அப்பறோம் பேசுங்க” என்றாள் அவர் பேசியதில் கடுப்பாக.

“நீ தான இப்போ தெரியுமான்னு கேட்ட.. அதுக்கு தான் நான் பதில் சொன்னேன்” என்றார் வேதவள்ளியும் விடாமல்.

அவரை ஏகத்துக்கும் முறைத்தவள் “இங்க பாருங்க.. உங்க மகன் இப்போ இருக்க நிலைமை என்னனு உங்களுக்கு தெரியும் தானே..” என்று நேரடியாகப் பரிமளாவையும், அவர் அருகே அமர்ந்து இருந்த  வரதராஜனையும் பார்த்துக் கேட்டாள்.

“ம்ம்.. தெரியும், அவனுக்கு பழசு எல்லாம் நியாபகம் வந்திருக்கு. ஆனா முழுசா வரல… ” என்றார் வரதராஜன்.

“ம்ம்.. அதே தான். அவனுக்கு கல்யாணம் ஆனதோ.. அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருக்கு.. அவ கர்ப்பமா இருக்கா.. அவளுக்கு குழந்தை இருக்குன்னு எந்த விஷயமும் ராவணுக்குத் தெரியாது. அந்த விஷயம் உங்க யார் மூலமும் அவனுக்குத் தெரியவே கூடாது” என்றாள்.

“சரி நீ சொல்ற மாதிரியே நாங்க எதுவும் சொல்லல அவகிட்டே. ஆனா இப்போ அவனுக்கு பழைய நியாபகம் கொஞ்ச கொஞ்சமா திரும்ப வந்துட்டு தானே.. இருக்கு. இன்னிக்கு இல்லேனாலும் என்னிக்காவது ஒரு நாள் அவனுக்கு அவன் பொண்டாட்டியைப்பத்தி நியாபகம் வந்துட்டா அப்போ நீ என்ன செய்வ.. ” என்ற வேதவள்ளி.

“இந்த கிழவி பேசக்கூடாதுனு தானே ராவனோட பேரெண்ட்ஸ்கிட்டே பேசிட்டு இருக்கேன். இது எதுக்கு தேவை இல்லாம மூக்கை நுழைக்குது” என்று கடுப்பான ரக்ஷணா. “அது அப்போ நான் பாத்துக்கிறேன். அவனை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க எல்லாரும் பண்ண வேண்டியதை நான் உங்களுக்கு சொல்லிட்டேன். இனி அதுப் படி தான் எல்லாரும் நடந்துக்கணும்” என்றாள்.

“எனக்கு ஒரு சந்தேகம்” என்று தன் கையை உயர்த்தினாள் கயல்.

அவளைப் திரும்பிப் பார்த்த ரக்ஷணா “ம்ஹும்.. நீயா.. என்ன சந்தேகம் சொல்லு..” என்றாள் அலட்சியமாக,

“இப்போ எங்க மாமாவுக்கு எந்த விஷயமும் நியாபகம் இல்ல.. அதனால தான் நீ அவர் பொண்டாட்டியா பொய் சொல்லி நடிச்சிட்டு இருக்க.. ஒரு வேலை அவருக்கு எங்க இளங்கிளி அக்காவைப் பத்தின நியாபகம் வந்தாலும் பிரச்னை இல்ல நான் பாத்துக்கறேன்னு ஏதோ சொல்ற.. ” என்றவள் “ஒரு வேலை நாளைக்கே.. எங்க அக்காவுக்கு அதான் எங்க ராவண் மாமாவோட உண்மையான சொந்த பொண்டாட்டி இளங்கிளி அக்காவுக்கு பழசெல்லாம் நினைவு வந்துட்டா அப்போ என்ன பண்ணுவ.. அப்படி நியாபகம் வந்து எங்க மாமாவை அவங்க உரிமை கொண்டாடிட்டு வந்தா அப்போ என்ன பண்ணுவ நீ..” என்று கேட்டாள் கயல்.

“என்கிட்டே வேலை பார்த்துட்டு இருந்தவ.. இன்னைக்கு என் முன்னாடியே தைரியமா கேள்வி கேக்குற அளவுக்கு வந்துட்டா.. கேள்வி கேக்குறது மட்டும் இல்லாம என்னை மரியாதை இல்லாம வேற நீ ன்னு சொல்லி பேசுறா” என்று கயல் மரியாதையை இல்லாமல் பேசியதை நினைத்து கடுப்பான ரக்ஷனா அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளையே பார்த்திருந்தாள் .

அவள் அழுத்தமான பார்வையை சட்டை செய்யாத கயல் “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம இப்படியே பாத்துட்டு இருந்தா எப்படி ரக்ஷனா” என்று பெயரை சொல்லி அழைக்க..

தன் பெயரை சொல்லி அழைக்கவும் பொறுமை இழந்த ரக்ஷணா “ஏய்! உன் வயசு என்ன? என் வயசு என்ன? என்னை நீ , வா , போன்னு பேசுறது இல்லாம பேர் சொல்லி வேற கூப்பிட்ற.. ” என்றாள்.

“உன்னை பேரையாவது சொல்லிக் கூபிட்றேன்னு நீ சந்தோசப்படு.. நீ செஞ்ச வேளைக்கு உன்னை இங்க உக்கார வெச்சு பேச விடறதே பெரிய விஷயம் . நாங்க எல்லாம் உன்னை எதுவும் செய்யாம பொறுமையா இருக்கக் காரணமே எங்க ராவண் மாமாவுக்காகத் தான். இல்லேன்னா நீ இந்த நேரம் எந்த கதில இருந்திருப்பேன்னு எங்களுக்கே தெரியாது” என்று அவள் கோபத்தை மேலும் தூண்டிவிட்டாள் .

“ஏய்! ” என்று கடுங்கோபத்தோடு கயலை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வேகமாக ரக்ஷனா வர..

“ரக்ஷணாஆ!” என்று மொத்த குடும்பமும் ஒரு சேர குரலை உயர்த்தி அதட்டி இருக்க..

அவள் வந்த வழியை மரித்துக்கொண்டு ராஜ் நின்று இருந்தான்.

இவர்கள் அனைவரின் ஒற்றுமையைக் கண்டு ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள் ரக்ஷணா.

அவள் முன்னே நின்ற ராஜ் ரக்ஷனாவை அழுத்தமாகப் பார்க்க..

அவன் பார்வையைக் கண்ட மறுநொடி தன் கையை தானாக இறக்கி இருந்தாள் அவள்.

“ஏய் கயல், என்னையே சீண்டிட்டே இல்ல.. நான் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சும் நீ என்னை உரசிப்பாத்துட்ட.. இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்ப டி.. ” என்று உள்ளுக்குள் சபதம் போட்டவள் அங்கிருந்து வேகமாக திரும்பி அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இங்கு நடப்பதை எல்லாம் இவ்வளவு நேரம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராவண் , ருத்ராசேனா இருவரும் ஒருவரை ஒருவர் மென்மையாகப் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“உன்னோட குடும்பம் இவ்ளோ ஒற்றுமையா இருக்கறதைப் பார்க்குற அப்போ எனக்கு பொறாமையா இருக்கு டா.. ” என்றார் ருத்ரன்.

“அதுக்கு என்ன டா.. நீயும் எங்க குடும்பத்து கூட  ஐக்கியம் ஆகிடு.. ” என்று அவன் தோளில் கையைப் போட்டான் ராவண்.

“எப்படி டா.. ” என்று சிரித்துக்கொண்டே புரியாமல் கேட்டான் ருத்ரசேனா.

“நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதா அம்மா சொன்னாங்க. நீ எங்க வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் செய்துகிட்டா எங்க பேமிலியோட நீயும், உன் அம்மா, அப்பாவும் ஐக்கியமாகிடலாமே.. ” என்று சிரித்தான் ராவண்.

“டேய் என்ன இது.. இப்படி எல்லாம் பிளான் இருக்கா உன்கிட்டே ” என்று சிரித்த ருத்ரசேனா “ராவண் நான் என் அம்மாவை சந்தோஷப்படுத்த அப்போ இருந்த மனநிலையில் சொல்லிட்டேன். ஆனா எனக்கு கல்யாணம் பண்ணிக்குற இன்டெரெஸ்ட்டே இல்ல..” என்றான் ருத்ரன்.

“ஏன் இன்டெரெஸ்ட் இல்ல. எதுவும் லவ் பெய்யிலியரா?” என்றான் ராவண்.

அப்போது அவ்வழியே சமைக்க செல்வதற்காக இளங்கிளி செல்ல.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டு ருத்ரசேனன். “அபப்டியும் வெச்சுக்கலாம் ” என்றான்.

ருத்ரசேனனின் பார்வை தான் இளங்கிளி வேறு ஒருவரின் மனைவி என்ற ரீதியில் அவளிடம் இருந்து பார்வையை திருப்பி இருந்தான். ஆனால் நம்ம ஹீரோவுக்கு அப்படி இல்லையே.. அவன் பார்வை மொத்தமும் தலைக்கு குளித்து ஈரத் தலையில் டவலை சுற்றிக்கொண்டே.. லேசாகத் தெரிந்த இடையை சேலையை இழுத்துவிட்டு மறைத்தபடி கிச்சனுக்குள் செல்லும் அவன் கிளியின் மீதே படிந்து இருந்தது.

“சரி டா.. அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல.. முதல்ல பழசை நினைச்சு நேரத்தை வீணடிக்குறதை நிறுத்து , புதுசா ஒரு வாழ்க்கையை வாழப்பாரு” என்று ருத்ராவின் தோள்களை தட்டிக்கொடுத்தவன் “நாங்க ஊருக்கு போகும்போது நீயும் என்கூட சென்னை வர.. அங்க வெச்சு உன்னை ஒருத்தருக்கு இன்ட்ரோ கொடுக்கிருக்கேன். உனக்கு மேட்சிங்கான ஆள் தான் ” என்றவன். “நான் என் ஆளைப் பார்த்துட்டு வரேன். அவகூட தனியா இருக்கலாம்னா முடியவே மாட்டேங்குது . யாராவது ஒருத்தர் அவகூட இருந்துட்டே இருக்காங்க ” என்று சலிப்பாக சொன்னவன் ருத்ராவைப் பார்த்து கண்களைச் சுருக்கி சிரித்தபடி இளங்கிளியைக் காணச் சென்றான்.

அவனை சிரித்தபடி பார்த்துவிட்டு தன் அறைக்கு மேலே சென்றுவிட்டான் ருத்ரசேனன்.

இங்கே தன்னறைக்கு வந்த ரக்ஷணாவோ கயல் தன்னை மரியாதையை இன்றி பேசியதையும், அவள் பேசியதை தட்டிக் கேட்ட தன்னை மொத்த குடும்பமும் அதட்டி அவளுக்கு ஆதரவாகப் பேசியது என்று அனைத்தையும் நினைத்து பொருமிக்கொண்டிருந்தாள்.

“இவளை.. இவளை ஏதாவது செய்யணும். இவளுக்கு நான் யாருன்னு காட்டணும் என்று நினைத்தவள் கயலை என்ன செய்யலாம் என்ற ரீதியில் யோசனையில்  ஆழ்ந்து விட்டாள்.

இங்கே கிச்சனுக்கு வந்த ராவண் வாசல் பக்கம் நின்று தலையை மட்டும் உள்ளே நீட்டி இளங்கிளி என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.

அவளோ வாசலில் ராவண் நிற்பது கூட கவனிக்காமல் காமாட்சியிடம் இன்று என்ன சமையல் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே மற்ற வேலைகளைப் பார்த்துக்க கொண்டிருந்தாள்.

அவளை உச்சி முதல் பாதம் வரை அணுவணுவாக ரசித்தவன் மனதில் இப்போதே இளங்கிளியோடு கலந்திட அவன் மனம் தவித்தது. அவளைப் பார்த்ததில் இருந்து அவளுடன் பேசவேண்டும் என்று ஆர்வம் மேலிட.. கிச்சனுக்குள் நுழைந்தான்.

அப்போது அவன் கால் சட்டையைப் பிடித்து யாரோ இழுக்கவும் கீழே குனிந்து பார்த்தான். அங்கே அவன் பேண்ட்டை பிடித்து இழுத்துக்கொண்டு அல்லி நின்றிருந்தாள்.

அவளை பார்த்ததும் ராவண் முகத்தில் புன்னகை பூத்திருக்க.. அல்லியைப் பார்த்து “என்ன? ” என்றான் சிரித்துக்கொண்டே..

அவளோ ஈ.. என்று குட்டியாக வளர்ந்திருந்த தன் பால் பற்களைக் காட்டி சிரித்தாள். அவளை குனிந்து தூக்கிக்கொண்டவன் “உன் அம்மா என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குற அல்லி. என்னை அவ பின்னாடி அலைய விடுறா ” என்று குழந்தையிடம் மெல்ல பேசினான்.

அல்லியோ அவன் கழுத்தில்  ஒரு கையைப் போட்டு தன் கன்னத்தோடு ராவண் கன்னத்தை உரசிக்கொண்டு இருந்தவள் ராவண் சொன்னது புரிந்தும் புரியாதவள் போல அவனையே பார்த்தாள்.

தன் மகளின் இந்த பிஞ்சுவிரல் தீண்டல் அவனை மென்மையாக வருட..  அதை ரசித்தவன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க..

அப்போது அங்கே வேலை செய்து கொண்டிருந்த காமாட்சி ராவணைப் பார்த்துவிட்டாள்.

“வந்துட்டானா இந்த நேரத்துலையே.. ” என்று சலித்துக்கொண்டார்.

“யாருக்கா.. ” என்றபடி திரும்பிப் பார்த்த இளங்கிளியோ ராவணை கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொண்டிருந்த அல்லியையும், அதை ரசித்துக்கொண்டிருந்த ராவணையும் கண்டு நெகிழ்ந்து போனாள், இதையெல்லாம் எத்தனை நாட்கள் எண்ணி ஏங்கி இருப்பாள். தவித்திருப்பாள். ஆனால் இது எதுவும் நடக்கமுடியாமல் இத்தனை நாள் தாங்கள் கஷ்டப்பட்டதை எண்ணி அதற்கு காரணமான ரக்ஷணாவை எண்ணி அவளுக்கு கோபம் தான் வந்ததது.

“இவனுக்கு தான் பொண்டாட்டி இருக்கா இல்ல.. அவ பின்னாடி போக வேண்டியது தானே.. இந்த ஆளு இங்க வந்ததுல இருந்து உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான் கனி. இரு இவனை இன்னிக்கு .. ” என்று சேலையை இடையில் செருகிக்கொண்டு ராவணை நோக்கி சென்றார்.

இதை எதிர்பார்த்திராத இளங்கிளியோ “அக்கா! வேணாம் ” என்று அவர் பின்னால் ஓடினாள்.

அதற்குள் ராவணிடம் வந்த காமாட்சி “ஏன் தம்பி உங்க கூட வந்த பசங்க தானே அந்த ராஜ் தம்பியும், ஈஸ்வர் தம்பியும். அவங்க எல்லாம் அவங்கவங்க பொண்டாட்டிங்களோட தானே இருக்காங்க ” என்றார்.

அல்லியை அணைத்து கொஞ்சிக்கொண்டிருந்தவன் காமாட்சியின் பின்னே நின்று இருந்த இளங்கிளியை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி அல்லியை அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க..

அந்த முத்தம் தனக்கு தான் என்று இளங்கிளிக்குப் புரிந்துவிட.. அவனிடம் இருந்து தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் பெண்ணவள்.

“ஆமா அதுக்கு என்ன இப்போ ” என்றான் காமாட்சியிடம்.

“அப்பறோம் நீங்க மட்டும் எதுக்கு உங்க பொண்டாட்டி கூட இருக்காம எப்போப்பாரு கனி புள்ள பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க ” என்றார்.

“இல்லையே.. அப்படின்னு யாரு சொன்னது. என் பொண்டாட்டி இருக்குற அப்போ எனக்கு இவ பின்னாடி என்ன வேலை ” என்று வேண்டுமென்றே பேசியவன் “உங்க கனியைப் பார்க்க ஒன்னும் நான் வரல.. மேல ரக்ஷனாவுக்கு ஜூஸ் எதுவும் கொண்டு வந்து கொடுக்கலையின்னு சொன்னா. வந்தவர்களை இப்படி தான் கவனிக்க சொல்லி ருத்ரா சொல்லியிருக்கானா? அவளுக்கு ஜூஸ் கொண்டு வர சொல்லிடுப் போகத்தான் வந்தேன் . என் பொண்டாட்டியை விட.. உங்க கனி ஒன்னும் பேரழகி இல்ல.. ” என்றவன் “இன்னும் அஞ்சு நிமிசத்துல என் ரூமுக்கு வந்தாகணும்” என்று கோபமாக நடித்தவன் அவனை அதிர்ந்து பார்த்த இளங்கிளியிடம் “ஜூஸை சொன்னேன் ” அல்லியை காமாட்சி கையில் கொடுத்துவிட்டு விறுவிறுவென மாடியேறி இருந்தான்.

அவன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் இளங்கிளியின் இதயத்தில் ஊசியாகப் பாய.. வந்த வலியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சென்று ஜூஸ் போட்டுகொண்டு மாடி ஏறினாள்.

“பாவம் இந்த புள்ள .. ” என்று இளங்கிளிகக கவலைப் பட்ட காமாட்சி அல்லியை தூக்கி வந்து சமையல் மேடையில் அமர வைத்தவர் “இந்த டி அல்லி சாப்பிடு ” என்று அங்கிருந்த கேரட் ஒன்றை சிறு துண்டுகளாக வெட்டி அவள் கையில் கொடுத்தார்.

இங்கே ஜூஸுடன் மேலே வந்த இளங்கிளி ரக்ஷணா அறைக்கு செல்ல..

அவளை அங்கு செல்லவிடாமல் பிடித்து இழுத்துக்கொண்டு அருகே இருந்த மற்றொரு அறைக்குள் இளங்கிளியை தள்ளி உள்ளே வந்தவன் கதவை அடைத்தான்.

“இப்போ எதுக்கு கதவை சாத்துறீங்க.. கதவைத் திறங்க முதல்ல.. ” என்று அவனைத் தாண்டி வெளியே செல்லப் போனவள் இடையில் கை கொடுத்து தூக்கியவன் அவளை கதவில் சாய்த்து அவள் இதழில் முத்தத்தை பதிக்கத் துவங்கினான்.

You may also like

1 comment

kk August 28, 2026 - 6:36 pm

super

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.