News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி PART-2 மூர்க்கன்-30

by Sinamika Writes
1.2K views
A+A-
Reset

மூர்க்கன் 30

இளங்கிளிக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்ததில் மொத்த குடும்பத்துக்கும் அவ்வளவு சந்தோசம். பரிமளா , கயல், இளங்கிளியின் அம்மா விசாலாட்சி , மித்ரா உட்பட அனைவரும் அவளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

ஆதியை தூக்கிக்கொண்ட வரதராஜன் “அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.. ” என்றார்.

“ஏன் மாமா?” என்றாள் இளங்கிளி.

“இவ்ளோ நாளும் நான் தாண்டா உன் தாத்தா , உங்கப்பனை இப்படி தான் தோள்ல தூக்கி வெச்சு விளையாட்டுக் காட்டுவேன். உன்னை மாதிரி தான் உங்கப்பனும் சரியான குறும்புக்காரன். அப்படி இப்படினு சொல்லணும்னு தோணும். ஆனா முடியாது. அவன்கிட்டே நான் இதை சொல்லி அதை வந்து அவன் உன்கிட்டே சொல்லி அதனால எதுவும் பிரச்சனை ஆகிடுமோனு கொஞ்சம் பயம் வந்திருச்சும்மா எனக்கு. ” என்றவர் ஆதியின் கன்னத்தில் முத்தம் வைக்க..

“மீச்ச குத்து .. ” என்று அவர் முத்தம் கொடுத்ததில் மீசை முடி குத்தவும் கன்னத்தை தேய்த்தபடி சொன்னான் ஆதி.

“இங்க பாரேன்.. அவங்கப்பன் மாதிரி முகத்தை ஊருன்னு வெச்சுட்டு பேசுறதை ” என்று அதி பேசியதை ரசித்தபடி சிலாகித்தார் வேதவள்ளி.

“ஆமாடி என் மருமகளே.. நாங்க எல்லாரும் இருக்கோம்னு கொஞ்சம் கூட பயமில்லாம எங்க எல்லாரையும் வெச்சுகிட்டு என் மகனுக்கு நீ முத்தம் கொடுக்குற.. உனக்கு ரொம்ப தான் தைரியம் ஆகிருச்சு டி.. ” என்று அவள் கன்னத்தில் இடித்தார் கமலா.

“அத்தை!…” என்று சிணுங்களாக சொன்னவள் கன்னத்தை தேய்த்துக்கொண்டே..

“எனக்கு அந்த ரக்ஷனா வாயை அடைக்கணும் , அதுக்கு தான் அப்படிப் பண்ணினேன். மத்த படி நீங்க சொல்ற மாதிரி தைரியம் எல்லாம் எதுவுமில்லை.. நான் உங்க எல்லார்கிட்டயும் சாரி கேட்டுட்டு தானே அவருக்கு.. “என்று தலையை கவிழ்ந்து கொண்டு சொல்ல..

“சாரி கேட்டியே.. அது அவனுக்கு முத்தம் கொடுக்க தான்னு எங்களுக்கு எப்படித் தெரியும்..” என்றார் வேதவள்ளி.

“பாட்டி..! அவ்ளோ பேர் முன்னாடி நான் எப்படி அவருக்கு முத்தம் கொடுக்குறேன்னு சொல்றது. எனக்கு வெக்கமா இருக்காதா?” என்று சிணுங்கினாள்.

“ஆமாண்டி யம்மா.. முத்தம் கொடுக்றேன்னு சொல்றதுக்கு வெட்கம் வரும். ஆனா எங்க எல்லாரு முன்னடியும் மாப்பிள்ளைக்கு முத்தம் கொடுக்க மட்டும் எதுவுமில்லையா உனக்கு ” என்று தன் பங்கிற்கு விசாலாட்சி பேச..

“அம்மா! நீயும் இவங்ககூட சேர்ந்துட்டியா??” என்றவள் “உங்களை எல்லாம் இவ்ளோ நாள் கழிச்சு பார்த்ததுல எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா” என்று நெகிழ்ந்து போனாள் .

“எங்களுக்கும் தான் கிளி. மாப்பிள்ளையும், நீயும் உயிரோட இருக்கீங்களா? இல்லையான்னு எதுவும் தெரியாம நாங்க எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டோம் தெரியுமா? எங்களுக்கே இங்க வந்து தான் மாப்பிளை உயிரோட இருக்க விஷயம் தெரியும், நீயும் இங்க இருந்ததும் எங்க சந்தோசத்தை விவரிக்கவே முடியலை ” என்று தழுதழுத்த குரலில் பேசினார் மாணிக்கம்.

“அப்பா பீல் பண்ணாதீங்க. நான் வந்துட்டேன் இல்ல.. அவரும் நல்லா இருக்கார் அப்பறோம் எதுக்கு கவலைப் படுறிங்க” என்று அவரை சமாதானம் செய்தாள்.

“இங்க எல்லாரும் வந்ததுல ஒரு பெரிய விஷயம் நடந்திருச்சு, மொத குடும்பமும் ஒண்ணா  சேர்ந்தாச்சு . எங்களுக்கு அதுல ரொம்ப சந்தோசம் ” என்றார் மார்க்கண்டேயன்.

“ஆமாங்க இவங்க குடும்பமும் ஒன்னு சேர்ந்திருச்சு.. என் புள்ளைக்கும் கல்யாண யோகம் வந்திருச்சு.. ” என்றார் மீனாட்சி.

“அம்மா இப்போ இதை பத்தி பேசியே ஆகணுமா ” என்ற ருத்ரசேனா “ஆமா எல்லாரும் இங்க இருக்கோம். ஹீரோ எங்க காணோம் ” என்று ராவணை தேடினான்.

“அவனா? சிஸ்டர் வேற அவர் பொண்டாட்டி முன்னாடி  முத்தம் கொடுத்து கடுப்பேத்தி விட்டுட்டாங்க. அதான் அவர் பொண்டாட்டியை சமாதானம் செய்துட்டு இருப்பாரு ” என்று ஈஸ்வர் நக்கலடிக்க..

அவனை முறைத்த இளங்கிளி “இங்க பாருங்க அவ ஒன்னும் அவர் பொண்டாட்டி இல்ல.. அவர் சொன்னாரேன்னு தான் நான் பொறுமையா இருக்கேன். இல்லேன்னா அவளை என்னிக்கோ இங்க இருந்து அடிச்சு துரத்தி இருப்பேன் ” என்றாள் கோபமாக,

“அவன் சொன்னானா! எப்போ ? என்ன சொன்னான். அவனுக்கு தான் உன்னை யாருன்னே தெரியாதே.. ” என்றார் கமலா.

சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு “ஷ்!.. அத்தை அது அவமுன்னாடி நாங்க ரெண்டு பேரும் போட்ட நாடகம். அவருக்கு எல்லாமே நியாபகம் இருக்கும்னு எனக்கும் தெரியும், அதே போல அவர் இங்க வந்த அன்னிக்கே நான் பழசெல்லாம் மறந்து போல நடிக்குறேன்னு அவரும் கண்டுபிடிச்சுட்டார் அத்தை. நான் அவகிட்டே கோச்சுட்டு சண்டை போட்டேன். என்னை சமாதானம் பண்ணி எனக்காக கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அவளை வெச்சு முடிக்க வேண்டிய காரியம் ஒன்னு இருக்குனு சொன்னாரு. அதனால தான் நான் அவளை விட்டு வெச்சிருக்கேன்” என்றாள் இளங்கிளி.

“இது எல்லாம் எப்போ டி நடந்துச்சு.. எப்போ எங்க மகன் வந்து உன்னக்கு சமாதானம் பண்ணினான் . எங்களுக்குத் தெரியாதே.. ” என்றார் கமலா.

“அது.. அது.. ” என்று கமலாவின் புடவைத்  தலைப்பைபி பிடித்து இளங்கிளி திருக..

“என்ன டி வெட்கப்படுற .. நான் எதுவும் தப்ப கேட்டுடேனா ” என்று அனைவரையும் பார்க்க..

அனைவரும் இல்லை என்று அவரிடம் தலையை ஆடியவர்கள் பார்வை இளங்கிளியின் மீது விழ..

“ஐயோ! அக்கா சீக்கிரம் சொல்லுங்க.. நீங்க வெட்கப்படுறதை பார்த்தா எனக்கே ஒரு மாதிரி ஆவுது.” என்றாள் கயல்.

அவளை இடையில் கிள்ளிய மித்ரா “இல்லேனா மட்டும்.. ” என்று நக்கலடிக்க.

“சும்மா இரு மித்ரா ” என்று அவளை அதட்டிவிட்டு “அக்கா சொல்லுங்க.. மாமா எப்போ உங்களை சமாதானம் பண்ணினார். எப்படி சமாதானம் பண்ணினார் . அப்போவே அவர் ரொமான்ஸ் தாங்காது.. இப்போ சொல்ல வேண்டியதில்லை..’ என்று கயல் ஆர்வமாகக் கேட்டாள்.

“நேத்து நைட் தான் என்கிட்டே வந்து பேசினார். அப்போ தான் எனக்காக கொஞ்சநாள் பொறுமையா இருன்னு சொல்லி…” என்று அவள் நிறுத்த..

“ம்ம்.. சொல்லுங்க அக்கா ஏன் நிறுத்திட்டீங்க..” என்றாள் கயல்,

“இவ ஒருத்தி அலைஞ்சான் ” என்று நினைத்த மித்ரா.

“எங்க அண்ணா எப்படி சமாதானம் பண்ணிருப்பாருனு நீங்க வெட்கப்படுறதுலையே எங்களுக்குப் புரிஞ்சுது.. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் ” என்றவள் “ஏய் கயல் , எனக்குப் பசிக்குது வா என்ன செஞ்சிருக்காங்கனு போய்ப் பார்க்கலாம். இவங்க பண்ணின அளப்பறையில பசியே மறந்து போயிருச்சு ” என்றவள் கயலிடம் இருந்து  யஸ்வந்திகாவை பார்க்க..

அவளோ “அத்தே!.. “என்று கையை மிதரவை நோக்கி தன்னை தூக்க சொல்லி நீட்டினாள்.

“நீ வாடி குட்டி.. அத்தை உனக்கு நிறைய சாக்லேட் வாங்கித்தரேன்” என்று அவளை தூக்கிக்கொள்ள..

அப்போது அவள் காற்சட்டையை யாரோ பிடித்து இழுக்க.. கீழே குனிந்து பார்த்த மித்ரா அங்கே அல்லி நின்று இருந்தாள்.

“என்ன டா செல்லம்..”என்று அவள் கேசத்தை மித்ரா வருட..

“அத்.. அத்த.. சாக்கி.. சாக்கி.. எனக்கு ..” என்று தன் கையை மேலே உயர்த்தி அவளையும் தூக்கிக்கொள்ள சொன்னாள்.

அல்லி மித்ராவை அத்தை என்று சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை.  அவள் கையை தூக்கிக்கொண்டு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மித்ராவைப் பார்க்க..

அதைக் கண்ட மித்ரா அல்லியை மற்றொரு கையில் அள்ளி அணைத்தவள் “அண்ணி! பாருங்களேன் இவளும் என்னை அத்தைன்னு கூப்பிட்றா!” என்று சந்தோஷமாக சொன்னவள். “டேய் ஆதி,.. நீயும் என்னை அத்தைன்னு கூப்பிட்றா.. ” என்று அவன் முன் வந்து நின்றாள்.

வரதராஜன் கையில் இருந்த ஆதி அவளையும், அவள் கையில் இருந்த யஸ்வந்திகா , அல்லி இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“என்ன டா பாக்குற.. அத்தைன்னு சொல்லு டா ” என்று அவனை செல்லமாக அதட்டினாள்.

அதில் பயந்தவன் வரதராஜன் கழுத்தைக் கட்டிக்கொள்ள..

“மித்து, அவன் சின்ன பையன் டி.. அவனை எதுக்கு அதட்டுற.. அவனுக்கா தோணுற அப்போ கூப்பிடப் போறான் ” என்று ஆதிக்கு சப்போர்ட் செய்தான் ஈஸ்வர்.

“அத்த சொல்ல மாட்டே இல்ல.. அப்போ உனக்கு சாக்லேட் கிடையாது, யஷ்வந்திகாவுக்கு, அல்லிக்கு மட்டும் தான் சாக்லேட் ” என்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல..

ஆதி பாவமாக அருகில் இருந்த ஈஸ்வரைப் பார்த்தான்.

அதை பார்த்ததும் “நீ வாடா மருமகனே! நான் உனக்கு சாக்லேட் எடுத்து தரேன்” என்று அவனை தூக்கிக்கொன்டு கிச்சனுக்கு சென்றான்.

இவர்கள் இங்கே குடும்பமாக சந்தோசமாக இருக்க..

மேலே அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தாள் ரக்ஷணா “அந்த க்  கடன்காரிக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா என்னை அத்தனை பேர் முன்னாடி இன்சல்ட் பண்ணுவா… அது மட்டுமா.. என் முன்னாடியே முத்தம் வேற கொடுக்குறா… இவளை சும்மா விடக் கூடாது ” என்று நினைத்தவள் “அவ முத்தம் கொடுத்த அப்போ இந்த ராவணுக்கு என்ன வந்துச்சு. அவளைத் தள்ளி விட வேண்டியது தானே..” என்று கட்டிலில் அமர்ந்து இருந்த ராவணைப் பார்த்தாள்.

அவனோ தனக்கும்,நடந்ததற்கு எந்த சம்மந்தமும் இல்லை என்ற ரீதியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்க..

வேகமாக அவன் முன் வந்து நின்றவள் “ராவண் நம்ம இன்னிக்கு ஈவினிங்கே ஊருக்கு புறப்படலாம்” என்றாள்.

“ஊருக்கா! என்ன அவசரம் ரக்ஷணா . எப்படியும் எல்லாரும் நாளைக்கு ஈவினிங் இங்க இருந்து கிளம்பத்தானே போறாங்க. அப்போவே கிளம்பலாமே. அவங்ககூடவே கிளம்பிப் போகலாம் ” என்றான்.

“என்ன அவங்க கூடவா? நாம எதுக்கு அவங்க கூடப் போகணும் ராவண். நீங்க என்கூட தானே இருக்கனும். என் வீட்ல தானே இவ்ளோ நாளும் இருந்திங்க.. இப்போ என்ன திடீர்னு ” என்று ரக்ஷணா பதற.

“ரக்ஷணா அப்போ எனக்கு எதுவும் நியாபகம் இல்ல.. நீ சொல்லி தான் நான் உன்கூட இருந்தேன். இப்போ தான் எனக்கு என் குடும்பம் யாரு? நான் யாருன்னு எல்லாமே நியாபகம் வந்திருச்சே.. இனி எதுக்கு உன் வீட்டுக்கு போகணும். ” என்ற ராவண் அவளை அழுத்தமாகப் பார்க்க.

“என்னது எல்லாமே நியாபகம் வந்திருச்சா? ” என்று அதிர்ந்து கேட்க..

“ம்ம்.. ஆமா.. ” என்று தோள்களைக் குலுக்கினான்.

“அப்போ அவனுக்கு அந்த கடன்காரி யாருன்னு நியாபகம் வந்திருக்குமா?” என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்து.  ஒருவேளை இலங்கிலியின்  நினைவு ராவணுக்கு வந்தாள் தன் நிலை என்னவாகும்.. என்று யோசித்தவள் இது நடத்த விடக் கூடாது. இவனை எப்படியாவது இங்கிருந்து தனியே அழைத்துச் சென்றுவிட வேண்டும். இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு தான் பிரச்சனை என்று யோசித்தவள்.

“அதனலா என்ன ராவண் . இன்னிக்கு ஈவினிங் நாம கிளம்பலாம். அவங்களை பார்க்கணும்னு நினைச்சா நாம ரெண்டு பேரும் போலாமே.. எனக்கு வேற இந்த மாதிரி சமயத்துல இங்க ரொம்ப நாள் இருக்க கஷ்டமா இருக்கு.. டெலிவரி வேற பக்கத்துல வரப்போகுது இல்ல.. எனக்கு நம்ம வீட்ல இருந்தா தான் சவுகர்யமா இருக்கும்.” என்று அவன் எதிரே அமர்ந்தவள் ராவண் கையைப் பற்றிக்கொண்டு கெஞ்சுவது போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

அவளையே அழுந்தப் பார்த்தவன் “ஓகே போகலாம் ” என்றான்.

“தேங்க் யூ ராவண்! ” என்று அவன் கன்னத்தைக் கிள்ளியவள் “நான் இப்போவே நம்ம பசங்ககிட்டே சொல்லி நாம கிளம்பரத்துக்கு எல்லா ஏற்படும் செய்ய சொல்லிடறேன் ” என்றவள் போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

அவள் செல்லும் திசையையே அழுத்தமாகப் பார்த்த ராவண் மெல்லிய புன்னகையை உத்தரித்தவன் தன் குடும்பத்திடம் விபரம் சொல்லக் கிளம்பி இருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.