News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 29 என்ன டி நீ இப்படிப் பாயுற..

by Sinamika Writes
1.4K views
A+A-
Reset

மூர்க்கன் 29

“உன் புருஷன் என்ன பண்றான். எங்க போறான்னு கூடத் தெரியாம எப்போ பாரு ரூமுக்குள்ளையே இருக்க நீ , அவன் உன்னை விட்டுட்டு வேற பக்கம் போறான்” என்று ரக்ஷனாவின் காது படவே சொன்னார்.

அவரை திரும்பி குழப்பமாகப் பார்த்த ரக்ஷனாவுக்கு ஏதோ புரிந்தது போல இருக்க.. திரும்பி அவசர அவசரமாக கிச்சனுக்குள் சென்றாள்.

உள்ளே சென்றவள் கண்ட காட்சி அவளை நிலைகுலையச் செய்தது. அவள் வந்தவர் கூடத் தெரியாமல் ராவணும் , இளங்கிளியும் முத்தங்களை பரிமாறிக்கொண்டிருக்க..

அதைக் கண்டதும் கோபம் தலைக்கு ஏறியது ரக்ஷனாவுக்கு. எது நடக்கக் கூடாது என்று அவள் நினைத்து இருந்தாளோ அது இன்று, அவள் கண் முன்னாலேயே நடந்துகொண்டிருந்தது.

“ராவண்! ” என்று அவள் அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த

அவள் வந்துவிட்டதை உணர்த்த இருவரும் பட்டென கண்களைத் திறந்தவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் சட்டென விலகி நின்றனர்.

ரக்ஷணாவைப் பார்த்த ராவண் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தபடி..

“ரக்.. ரக்ஷணா,  நீ இங்க .. எப்போ.. ” என்று கேட்டுக்கொண்டே தன் இதழில் இருந்த ஈரத்தை அவளைப் பார்த்தபடி துடைத்துக்கொண்டான்.

அது இன்னும் அவளுக்கு கோபத்தை கூட்டி இருக்க..

“என்ன ராவண் நடக்குது இங்க. உங்க பொண்டாட்டி நான் இங்க குத்துக்கல்லாட்டம் இருக்கும்போது நீங்க எப்படி அவளுக்கு முத்தம் கொடுக்கலாம். அவ யாரு உங்களுக்கு.. அவ இந்த வீட்டு சமையல்காரி..  அவளுக்குப் போய்.. ” என்று இளங்கிளியை அருவறுப்பாகப் பார்த்தவள் “ச்சி!.. “என்று முகத்தை சுளித்தாள்.

“இல்ல ரக்ஷனா அது வந்து .. நான் இங்க ஏன் வந்தேன்னா.. ” என்று பேசியபடி அவள் அருகே வர..

அதற்கு முன்பாக ரக்ஷனாவின் முன் வந்து நின்ற இளங்கிளி பளார் என்று அவள் கன்னத்தில் அறைத்திருந்தாள்.

அவள் அறைந்ததில் அதிர்ந்த ரக்ஷனா கன்னத்தில் கையை வைத்தபடி இளங்கிளியைப் பார்க்க..

அப்போது தான் கிச்சனுக்குள் ரக்ஷனா பேசும் சத்தம் கேட்டு உள்ளே வந்த காமாட்சியும், அவரைத் தொடர்ந்து வேதவள்ளி வந்து நிற்க.. அவர் பின்னே மொத்த குடும்பமும் அங்கு குழுமி இருந்தது.

ராவணுக்கோ இளங்கிளி அறைந்தது பிரச்னையாகப் போகிறது. .தான் போட்டு வைத்த பிளான் மொத்தமும் இன்று தவிடு பொடியாகப் போகிறது என்று தோன்றியது.

“ஏய் வேலைக்கார நாயே!.. எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே அறைஞ்சிருப்ப. நீ இங்க வெறும் சமையல்காரி தான். ஆனா நான் இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி.. அதுவுமில்லாம என் புருசனுக்கு முத்தம் கொடுத்ததுக்கு நியாப்படி நான் தான் டி உன்னை அறைஞ்சிருக்கனும்” என்று சொல்லிக்கொண்டே அவளை அடிக்க கையை ஓங்கினாள் ரக்ஷணா.

அவள் கையை ஓங்கவும் “ஏய்! ” என்று பின்னால் இருந்த மொத்த குடும்பமும் ஒரு சேர குரலை உயர்த்த..

சட்டென அவர்களைத் திரும்பிப் பார்த்தாள் ரக்ஷனா.

இளங்கிளிக்கோ தன் மீது பாசம் வைத்திருக்கும் மொத்த குடும்பத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோஷமும் , நெகிழ்ச்சியும் ஒரு சேர வந்தது,

“என்னை அடிக்கும்போது யாரும் வரல.. இவளை அடிக்க நான் கை ஓங்கினா மொத்த குடும்பமும் எப்படி வரைஞ்சு கட்டிட்டு வருதுங்க.. ” என்று நினைத்தவள். “என்ன எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க.. நான் சொன்னது மறந்து பொய்யிரிச்சா… ” என்று அவர்களை கண்களாலேயே ரக்ஷனா மிரட்ட..

“அது ஒண்ணுமில்ல ரக்ஷனா, அந்த பொண்ணுகிட்டே எதுக்கு வீண் வம்பு.. நமக்கு இது தேவையா.. அவளைப் போய் அடிச்சு , அப்பறோம் மீனாட்சி வந்து அவங்க வீட்ல வேலை பாக்குற பொண்ணை எதுக்கு அடிச்சீங்கன்னு நம்மகிட்டே சண்டைக்கு வந்துட்டா என்ன செய்றது . அதான் ஒரு எமோஷன்ல எல்லாரும் கத்திட்டோம் ” என்றவர் தன் இடுப்பில் தூக்கி வைத்திருந்த ஆதியை நன்றாக ஆமர்த்திக்கொண்டே தனக்கு அருகே நின்றிருந்த மீனாட்சியை இடித்து.. “சொல்லு மீனாட்சி ஏன் அமைதியா இருக்க.. ” என்று கண்களை உருட்டி அவரிடம் ஜாடை செய்தார் பரிமளா.

“ஆஹ்.. அது… ” என்று தலையை சொரிந்த மீனாட்சி. “ஆமா எங்க வீட்டுல வேலை பார்த்தாலும் கனிமொழி எங்க வீட்டு பொண்ணு அவளை எதுக்கு நீ அடிக்கணும்.. ” என்று கேட்டார்.

“உங்க வீட்டுப் பொண்ணோ என்னவோ… ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்ன இவங்க ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துட்டு இருந்தாங்க. ராவண் என் புருஷன் அது தெரியும் தானே அவளுக்கு. அப்பறோம் எப்படி ” என்றவள் “இவளை சும்மா என்னால விட முடியாது. என்னை அடிக்கவேற செஞ்சிருக்கா. பதிலுக்கு அவளை நான் அறைஞ்சே தீருவேன் ” என்று வகையை ஓங்கிக்கொண்டே ரக்ஷனா இளங்கிளியை அடிக்கத் திரும்ப…

ஓங்கிய கை ஓங்கியபடியே அப்படியே இருக்க.. மற்றொரு கை அவள் கன்னத்தில் இருந்தது. அபப்டியே அதிர்ந்த நிலையில் தனக்கு முன்னாள் ருத்ர காளியாய் நின்றிருந்த இளங்கிளியைப் பார்த்ததும் ரக்ஷனாவுக்கு பேச்சே எழவில்லை.

எதுக்கு இந்த சாக்குன்னு தானே கேக்குறீங்க..

அவளை அடிச்சே தீருவேன்னு ரக்ஷனா திரும்பின வேகத்துல அவ கன்னத்துல இளங்கிளியோட கை பதம் பாத்து இருந்துச்சு..

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னத் தொட்டுத் தாலி கட்டி , என் கூட குடும்பம் நடத்தி அவருக்கு ரெண்டு புள்ளை பெத்திருக்க  என் முன்னாடியே வார்த்தைக்கு வார்த்தை என் புருசே.. என் புருசென்னு சொல்லிட்டு இருப்ப.. சொல்லு டி இவரு உன் புருஷனா?” என்று அவளை மீண்டும் அடிக்க இளங்கிளி பாய..

“ஏய் கனி , என்ன டி நீ இப்படிப் பாயுற.. ” என்று அவளை குறுக்கே ஓடி வந்து ரக்ஷனாவை மறுபடியும் அடிக்காமல் பிடித்தது காமாட்சி தான்.

“அக்கா விடுங்க என்னை, என் முன்னடியே இவரை என் புருஷன் .. என் புருஷன்னு சொல்லிட்டு இருக்கா.. இவ என்ன எல்லாம் பண்ணிருக்கா தெறியுமா? என்னையும், என் புருஷனையும் கொல்லப் பார்த்தா. அவரையும் என்னையும் இவ்ளோ வருசமா பிரிச்சு வெச்சிருந்தா.. எனக்கு குடிக்க குடுத்துல எதையோ இவ கலந்து வெச்சதுனால எனக்கு பழசெல்லாம் மறந்து போய் எவ்ளோ கஷ்டப்பட்டேனு தெரியுமா உங்களுக்கு.. ” என்று பொறுமை தாங்காமல் அனைத்தையும் போட்டு உடைத்தவள் திரும்பி ராவணை ஒரு பார்வை பார்க்க..

“ஐயோ! என்ன பார்வை என் மேல திரும்புது.. ” என்று விழித்த ராவண் “இப்படி காரியத்தை போட்டு உடைச்சுட்டாளே.. இப்போ நான் என்ன பண்ணுவேன் , இந்த ரக்ஷணாவை நான் எப்படி சமாளிப்பேன். இவ பண்ணிட்டு இருக்க வேலையை எல்லாம் மொத்தமா எப்படி நான் கண்டுபிடிச்சு அழிப்பேன் ” என்று மனதிற்குள் புலம்பினான்.

அவனையே அழுத்தமாகப் பார்த்த இளங்கிளி “காமாட்சி அக்கா, இவரு தான் என் புருஷன். எனக்கு இன்னிக்கு கலையில எழுந்திருக்கும்போதே தலை விண்ணு விண்ணுன்னு வலிச்சுது.. ஒரு மாதிரி உடம்பெல்லாம் இருந்துச்சு.. ” என்றவள் ஓரப்பார்வையாக ராவணைப் பார்க்க..

“ராத்திரி முழுக்க தூங்காம என் மேலையே உக்காந்திருந்தா தலை வலிக்க  தான டி செய்யும், நீ ஆடுன ஆட்டத்துக்கு உடம்பு வலிக்காம இருந்தா ஆச்சர்யம் தான் ” என்று நினைத்தபடி அடுத்து என்ன சொல்லப்போகிறாளோ என்று அவளையே ராவண் அழுத்தமாகப் பார்க்க..

“அப்பறோம் என்ன ஆச்சு கனி..” என்றார் காமாட்சி பதட்டமாக.

“”சரி தலை வலிக்குதே ஒரு காபியைப் போட்டுக் கொடுக்கலாம்னு கிச்சனுக்கு வந்தேன்… அப்போ.. திடீர்னு எனக்கு மயக்கம் வந்து தலைய சுத்திவிட்ருச்சு.. ” என்றாள்.

“ஐயோ! அப்பறோம்.. ” என்று காமாட்சி பதற..

“கீழ விழப் போன என்னைய அதோ அவ தான் கயல் தான் வந்து விழாம தாங்கி பிடிச்சுக்கிட்டா .. ” என்று கயலை உள்ளே இழுத்து விட்ட இளங்கிளி “என்ன கயல் நான் சொல்லிட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாம நிக்குற.. ” என்றாள்.

இளங்கிளி சொன்னதும் அனைவர் பார்வையும் இப்பொது ஒரு சேர கயலின் பக்கம் திரும்பியது.

“என்ன எல்லார் பார்வையும் நம்ம பக்கம் திரும்புது ” என்று திரு திருவென விழித்தவள். “ஹா! ஹையோ! அக்காவுக்கு பழசெல்லாம் நியாபகம் வந்திருச்சுன்னு சந்தோசப் படுறதா.. இல்ல என்னை சம்மந்தமே இல்லாம இவங்க சண்டைக்குள்ள இழுத்து விடறாங்களே அதை நினைச்சு பயப்படுறதான்னே தெரியலையே.. ” என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும்… “ம்ம்.. பாத்துக்கலாம்.. அக்காவுக்கு பழசெல்லாம் நியாபகம் வந்தது தான் இங்க முக்கியம். இப்போ அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு தகுந்த மாதிரி என் ஆக்டிங்கை காட்டிய வேண்டியது தான்.. ” என்று நினைத்தவள்

“அக்கா! நானே உங்களை பாக்கணும்னு நினைச்சு தான் கீழ வந்தேன். வந்ததும் உங்க ரூமுக்கு தான் போகப் பார்த்தேன். அதுக்குள்ள கிச்சேன்ல ஏதோ பெருச்சாளி காச்சு மூச்சுன்னு கத்துற சத்தம் கேட்டுச்சா.. சரி என்னனு பாக்கலாம்னு வந்தா இவ நிக்குற.. ” என்று ரக்ஷனாவை ஏளனமாகப் பார்த்தாள்.

அவளோ கயலை முறைக்க..

சட்டென திரும்பி “காலையில் மயங்கி விழப்போன உங்களை தாங்கிப் பிடிச்சு அபப்டியே உங்க ரூமுல கொண்டு போய் படுக்க வெச்சு உங்களுக்கு தலையெல்லாம் அமுக்கிவிட்டு.. காலெல்லாம் பிடிச்சு விட்டேனே.. இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு ” என்று தன் பங்கிற்கு நடிக்க..

“அடிப்பாவி! என்கூட நடிக்கவான்னு ஒரு சின்ன லீட் எடுத்துக் கொடுத்தா. இவ என்ன மெயின் கேரக்டர் அளவுக்கு இந்த நடி நடிக்குறா.. ” என்று நினைத்த இளங்கிளி ராவணைப் பார்க்க..

அவனோ யாருக்கும் தெறியாமல் என்ன டி பண்ணப் போறே.. என்றான்

நான் இருக்கேன் என்ற ரீதியில் கண்களை மூடித் திறந்த இளங்கிளி.

“ஆமா கயல் நீ எனக்கு கைகால் பிடிச்சு விட்டு காபி போட்டு கொடுத்து தூங்க வெச்சுட்டு போனியா.. கொஞ்ச நேரத்தில ஒரு கனவு வந்திருச்சு.. அதுல இதோ இவ இருக்காளே.. இவ என்னையும், என் புள்ளைகளையும் கொன்னுருவேன்னு துரட்டிட்டு வரத்து போல கனவு.. டப்புனு கண்ணைத் திறந்து பார்த்தா.. நான் இருக்க இடமே வித்யாசமா இருந்துச்சு.. ஒன்னுமே புரியல..   அப்பறோம் கொஞ்ச நேரம் அப்படியே தலையைப் புடிச்சிட்டு உக்காந்துட்டேன். அப்போ தான் எனக்கு மறந்து போனது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வந்துச்சு.. அதுவும் அறையும் குறையுமா.. அதே யோசனையில் கிச்சனுக்கு வந்து வேலை பார்த்துட்டு இருந்தேன். ” என்றவள் மூச்சு வாங்கினாள்.

“அண்ணி! மெல்ல மெல்ல.. ” என்ற ராஜ் வேகமாக தண்ணீரை எடுத்து வந்து அவள் முன் நீட்ட..

“தேங்க்ஸ்ங்க கொழுந்தனாரே” என்று தண்ணீரை வாங்கிக் குடித்தவள் மீண்டும் தொடர்ந்தாள்,

“கிச்சனுக்கு வந்தா இவர் உள்ள வராரு. இவரைப் பார்த்ததும் ஆசையா போய் கட்டிப் பிடிக்குறேன்.. சட்டுனு என்னை கீழ தள்ளி விட்டுட்டு ஏய்ன்னு கையை நீட்டி மிரட்டுறாரு.. ” என்றாள்.

“அச்சச்சோ.. என் புள்ள அப்படியாம்மா பண்ணுனான் ! ” என்று பரிமளா அவர் பங்குக்கு நடிக்க..

“ஆமா அத்தை” என்று அவர் அருகே போனவள் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பின் வேதவள்ளியின் காலிலும் விழுந்தவள் அவர் அருகே பவ்வியமாக நின்று ராவணைப் பார்க்க..

அவனோ இளங்கிளியின் இந்த பரிமாற்றத்தைக் கண்டு பிரமித்துப் போய் நின்று இருந்தான்.

“ஏய் இப்போ என்ன தான் டி நீ சொல்ல வர.. ” என்று எரிச்சலாக ரக்ஷனா கேட்க..

“ம்ம்.. எனக்கு மட்டும் தான் மறந்த எல்லாமே நியாபகம் வந்திருக்கு.. என் புருசனுக்கு இல்லேனு அவர் என்னை கீழ தள்ளி விட்ட அப்போவே நான் தெரிஞ்சுகிட்டேன். அவர்கிட்டே நான் என்ன என்னவோ சொன்னேன். நான் யாருன்னே தெரியாதுன்னு சொல்றார் . அப்பறோம் தான் ஒரு யோசனை வந்துச்சு எனக்கு..” என்று இளங்கிளி வெட்கப்பட்டு தலையைக் கவிழ்த்துக்கொள்ள..

“என்ன யோசனை அண்ணி ” என்று மித்ரா வந்து இளங்கிளியின் தோளில் கையை வைத்து அழுத்தியவள் அதில் தன் முகத்தை வைத்தபடி அவளைப் பார்க்க..

அவளை பார்த்து மென்மையாக சிரித்த இளங்கிளி அவள் நெற்றியில் மென் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு.. “உன்னை என்னவெல்லாம் கஷ்டப்படுத்திருக்கா இவ .. இவளை சும்மா விடக் கூடாது.. இனி தான் உன் அண்ணியோட ஆட்டத்தை பார்க்கப் போற.. ” என்றவள் “அதுவா நாத்தனாரே!.. இந்த பழைய படத்துல எல்லாம் பழசை மறந்தவங்களுக்கு முத்தம் கொடுத்தா போன நினைவு எல்லாம் திரும்ப வரும்னு காட்டுங்களே .. அதை தான் அப்ளை பண்ணலாம்னு உங்க அண்ணனை கஷ்டப்பட்டு இழுத்து பிடிச்சு அவருக்கு முத்தம் கொடுத்தேன். அந்த நேரம் பார்த்து இந்த கரடி உள்ள பூந்து எல்லா காரியத்தையும் கெடுத்து விட்ருச்சு ” என்றாள்.

“ஏய்! யாரு டி.. கரடி.. ” என்று ரக்ஷனா எகிற..

“ஏய் உன்னைத் தாண்டி சொன்னேன்.. ” என்று அவளை நோக்கி இளங்கிளி வேகமாக வர..

மறுபடியும் தன்னைத் தான் அடிக்க வருகிறாள் என்று நினைத்து சற்று பயந்து ரக்ஷனா பின்வாங்க..

அவளைப் புழுவைப் போல பார்த்துவிட்டு ரக்ஷணாவைத் தாண்டி ராவணிடம் சென்றவள் “என்னங்க உண்மையாவே என்னை உங்களுக்கு நியாபகம் இல்லையா? நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டது நியாபகம் இல்லையா? ” என்று அவன் கையைப் பற்றிக்கொண்டு கெஞ்சுவது போல நடித்தவள் அவனைப் பார்த்து கண்ணடித்து புருவத்தை உயர்த்தி “எப்படி?” என்றாள்.

“சூப்பர் டி என் சிணுங்கி.. ” என்றவன் “ஹே! எனக்கு தான் எதுவும் நியாபகம் வரலையினு சொல்றேன் இல்ல நான். நீ சும்மா வந்து என்னை என்னங்க .. நோனாங்கன்னு சொல்லிட்டு வந்து மேல கையை வெக்குற.. யாரும் இல்லாத அப்போ வந்து முத்தம் கொடுக்குற.. ” என்றவன் “எனக்கு எதுவும் நியாபகம் இல்ல.. உன்னை யாருன்னே எனக்குத் தெரியாது. அப்போ தான் என்கூட யாரும் இல்ல.. நீ எனக்கு முத்தம் கொடுத்த.. எங்க இத்தனை  பேரு இருக்காங்களே.. தைரியம் இருந்தா மறுபடி முத்தம் கொடு பாக்கலாம் ” என்று அவளை சீண்ட..

“டேய் உங்கண்ணன் நம்ம எல்லாரையும் வெச்சுட்டே ரொமான்ஸ் பண்ண பாக்குறான் டா.. இங்க இருந்தா என்ன வேணா நடக்கும் நான் போறேன் ” என்று  ராஜிடம் சொன்ன ஈஸ்வர் மித்ராவையும் தன்னுடன் இழுத்துக்கொண்டு செல்ல..

“என்ன டா சொல்ற..” என்றான் புரியாமல் ருத்ரசேனா.

இங்கே  தன்னை வேண்டுமென்றே சீண்டியவனை செல்லமாக முறைத்த இளங்கிளி திரும்பி தன் மொத்த அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து  “என்னை மன்னிச்சிருங்க…” என்று புருவம் சுருக்கி சொன்னாள்.

“அதுக்கு டி மருமகளே மன்னிப்பு.. ” என்று தன் பங்கிற்கு கமலா தன் இருப்பை அங்கே உணர்த்த..

அவரைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவள் அடுத்த நொடி திரும்பி ராவணனின் கழுத்தில் கையைப் போட்டு அவன் உயரத்திற்கு தன் கால் பெருவிரலால் எம்பி நின்றவள் அவன் இதழில் முத்தம் பதித்து இருக்க..

இதை சற்றும் எதிர்பார்த்திராத மொத்த குடும்பமும் திகைத்து ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை வெட்கத்தோடு திருப்பிக்கொள்ள..

அதுவரை இளங்கிளி நடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரனுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.. அதற்கு மேலும் அங்கே இறுக்கப் பிடிக்காமல் அவன் வெளியேறி இருக்க..

ராவண் இதழை அழுந்த முத்தம் வைத்துவிட்டு விலகியவள் “நீங்க சொன்ன மாதிரி எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்து நான் தான் உங்க பொண்டாட்டின்னு ப்ரூப் பண்ணிட்டேன். எங்க இதே மாதிரி அவளை செய்ய சொல்லுங்க பாக்கலாம். வாய்க்கு வாய் என் புருஷன்னு உங்களை சொன்னாளே.. ” என்று ராவணை வம்பில் மாட்டிவிட..

அடிப்பாவி இப்படி அவகிட்டே கோர்த்துவிட்டுட்டியே.. அவளே எப்போன்னு அலையுறா ” என்று நினைத்தவன் திரும்பி ரக்ஷணாவைப் பார்க்க..

“ஏய் என்ன டி ரொம்ப தான் பண்ற.. முத்தம் தானே.. இரு வரேன் ” என்று ராவணை நோக்கி அவள் செல்ல,,

அப்போது அதிர்ந்து விழித்த ராவனோ தன் தோளில் கை வைத்திருந்த இளங்கிளியின் கையைத் தட்டி விட்டவன் “இங்க பாரு அவ முத்தம் கொடுத்து தான் ப்ரூப் பண்ணனும்னு அவசியம் இல்ல.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்க.. என் பொண்டாட்டி ரக்ஷனா தான் ” என்று சமாளித்தான் .

“இல்ல ராவண் அது என்ன எனக்கு இல்லாத உரிமையா அவளுக்கு இருக்கு.. நான் உங்களுக்கு முத்தம் கொடுத்தே ஆகனும் ” என்று அவனை நெருங்கி வந்தவளை தள்ளிவிட்டு மீண்டும் ராவணை இழுத்து அவன் இதழில் தன் இதழை பதித்து இருந்தாள் இளங்கிளி.

இதற்கு மேல் பொறுக்க முடியாத ரக்ஷனா கோபத்தில் காலைத் தரையில் உதைத்தவள் திரும்பி விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட..

மற்றவர்கள் ராவணையும், அவனை விடாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்த இளங்கிளியையும் பார்த்து சிரித்துக்கொண்டே சமையல்கட்டைவிட்டு வெளியேறி இருக்க..

அவர்களை இன்னமும் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டிருந்த காமாட்சியோ.. “அம்மாடி என்ன இவ  இந்த போடு போடுறா.. ” என்று அதிர்ந்தவாறு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தார்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.