News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

எப்படி கிஸ் கொடுத்தேன் பாத்தியா.., மூர்க்கன் 33

by Sinamika Writes
1K views
A+A-
Reset

மூர்க்கன் 33

“ஏய்! உன்னை யாரு இங்க வர சொன்னது. உனக்கு தான் தனியா ரூம் கொடுத்திருக்கேனே . அப்பறோம் எதுக்கு இங்க வந்த” என்றாள் ரக்ஷனா கடுப்பாக.

“ம்ம்.. நான் கல்யாணம் பண்ணினவரை என்கூட தூங்க விடாம நீ உன் ரூம்ல வெச்சிருக்க.. உன்னை நம்பி அவரை தனியா விட முடியாது” என்றாள் இளங்கிளி.

“ஏய் நீ கல்யாணம் பண்ணினேன்னு யார் சொன்னது. எவ்ளோ வாட்டி டி சொல்றது . ராவண் ஒன்னும் உன்னோட புருஷன் இல்ல. அவர் என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிருக்கார். அவரோட குழந்தையை நான் சுமந்துட்டு இருக்கேன் ” என்று வாய் கூசாமல் பொய்யை சொன்னாள்.

அவள் சொன்னது கேட்டு இளங்கிளியின் இதயம் வலித்தது, அதை மறுத்துப் பேசி ரக்ஷனாவின் மூக்கை உடைக்க தன்னால் முடியும். ஆனால் அதை செய்ய விடாமல் ராவண் அவளைத் தடுத்திருக்கிறான், அது இன்னமும் வலித்தது அவளுக்கு,

“இங்க பாரு நீ பேசினத்துக்கு எல்லாம் என்னால சாட்சியோட நிரூபிக்க முடியும். ஆனா நான் அப்படிப் பண்ண மாட்டேன். ஏன்னா.. “என்றவள் அங்கு தனக்கும் இங்கு நடப்பவர்களுக்கு சம்மந்தம் இல்லை என்று நின்றிருப்பவனை கடைக்கண்ணால் பார்த்து முறைத்த இளங்கிளி.

“நீ சொல்றது எல்லாம் பொய்னு எனக்கு தெரியும். அதே பொய்யை எப்போ அவர் உணர்றாரோ அப்போ என்னைப் பத்தி என் புருஷன் புரிஞ்சுப்பார். நீ எவ்ளோ கத்தி கூப்பாடு போட்டு சொன்னாலும் சரி நீ சொல்றது எல்லாம் பொய்ன்னு கண்டிப்பா ஒரு நாள் எல்லாருக்கும் தெரிய வரும். அன்னிக்கு இன்னிக்கு டி உனக்கு ” என்று ரக்ஷனாவை எச்சரித்தவள் திரும்பி படுத்துக்கொள்ள..

திரும்பி  ராவணைப் பார்த்தவள் “பாத்திங்களா நீங்க இருக்கும்போதே என்னை எப்படி எல்லாம் பேசுறான்னு . அவ சொன்னதை எல்லாம் நீங்க நம்புறீங்களா ராவண் ?” என்று நீலிக் கண்ணீர் வடித்தாள்.

“என்ன நடிப்பு டி நடிக்குற.. உன் நடிப்பை யார் பார்த்தாலும் உண்மையின்னு நம்பிருவாங்க. ஏதோ என் புருஷன் உஷாரா இருக்கறதுனால உன்கிட்டே இருந்து இவ்ளோ நாளும் தப்பிச்சு இருக்கார். இல்லேன்னா யாரோ புள்ளைக்கு என் புருஷனை இனிஷியல் கொடுக்க வெச்சிருப்பா இவ ” என்று படுத்தப்படி யோசித்தாள் இளங்கிளி.

“என்ன ரக்ஷு என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டே.. எனக்கு நினைவு வந்ததுல இருந்து நீ சொல்றதை நான் அப்படியே தானே நம்பிட்டு இருக்கேன்,. நீ என்ன சொல்றியோ நான் கண்ணை மூடிட்டு நம்புவேன். எனக்கு உன் மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கு. இந்த பொண்ணு சொல்றதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத சரியா. அவ சொல்றதை நான் காதுலையே வாங்கிக்கல போதுமா” என்று பதிலுக்கு அவளிடம் நடித்தான் ராவண்.

“அப்போ எனக்கு இவ இங்க தூங்கக்கூடாது , இவ என் பக்கத்துல நீங்க படுத்திருக்க இடத்துல இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. இரிடேட்டிங்கா இருக்கு.. நீங்களும் , நானும் மட்டும் தூங்குற இந்த பெட்ல இவ குறுக்க வரது எனக்குப் பிடிக்கல.. ” என்று சிணுங்கினாள்.

“இப்போ என்ன இவ இந்த பெட்ல தூங்கக்கூடாது அவ்ளோ தானே.. ” என்றான்.

அதை கேட்டு ரக்ஷனா ஆமாம் என்று தலையை ஆட்ட..

இளங்கிளியோ “என்ன பண்ணப்போறாரு ” என்று அவள் யோசித்திருக்கும் முன் வேகமாக வந்தவன் இளங்கிளியை அப்படியே அலேக்காக தன் கையில் அள்ளிக்கொள்ள.

கண்களை மூடி படுத்திருந்தவள் அதிர்ந்து அவனை விழி விரித்துப் பார்த்தாள்.

அவனோ இதழ்களுக்குள் புன்னகைத்துக்கொண்டவன் இளங்கிளியின் இடையில் தன் கையை அழுந்த பதித்தவன். அவளைக் குறும்புப் பார்வை பார்க்க…

அதில் மேலும் அதிர்ந்த இளங்கிளி சட்டென அவன் கழுத்தை கட்டிக்கொண்டு.. “எங்க மாமா என்னைத் தூக்கிப் போறீங்க.. ” என்றாள்.

“ஏய் மாமாவாடி அவர் உனக்கு ” என்றாள் ராவண் கையில் இருந்தவளை பொறாமையுடன் பார்த்து.

“ஆமா என்னோட மாமா ” என்றவள் அவன் கன்னத்தைப் பற்றி தன் பக்கம் திருப்பியவள் “இப்போ பாரு ” என்று அடுத்த நொடி அவன் கன்னத்திலும், பின் இதழிலும் முத்தம் பதித்திருக்க அதைக் கண்டு ரக்ஷணாவிற்கு ஆத்திரம் வந்தது தான் மிச்சம்.

“ஏய்! விடு டி.. அவரை விடு..” என்று வேகமாக எழுந்து கட்டிலை சுற்றி வந்தவள்  அவர்கள் இருவர் இதழையும் விடுவிக்க போராடி தோற்றுத்தான் போனாள்.

இளங்கிளி மட்டும் முத்தம் கொடுத்திருந்தால் பரவாயில்லை. ராவணும் இங்கே பதில் முத்தம் வழங்கிக்கொண்டிருக்க,. இருக்கும் பதற்றத்தில் இந்த ரக்ஷனா லூசு அதை கவனிக்கல.. பரவால்ல அவங்க என்ஜோய் பண்ணட்டும் .

அவர்களாகவே சிறிது நேரத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க..

“எப்படி கிஸ் கொடுத்தேன் பாத்தியா.. “என்று புருவத்தை ஏற்றி இறக்கினாள் இளங்கிளி

“ராவண் முதல்ல அவளை கீழ இருக்குங்க.. ” என்று மேடிட்ட வயிற்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் ரக்ஷனா,

“இல்ல ரக்ஷு.. நான் அவளை கட்டில்ல இருந்து இறக்கத் தான் தூக்கினேன். ஆனா இவ எனக்கு முத்தம் கொடுப்பான்னு நான் நினைக்கவே இல்ல.. ” என்றபடி இளங்கிளியை கீழே இறக்கி விட..

அவளோ இன்னமும் ராவணின் கழுத்தைக் கட்டிக்கொண்டு உரசியபடி நின்று இருக்க..

“ஏய் இங்க வாடி.. ” என்று அவள் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவள் “இப்போ என்ன உனக்கு இங்க தூங்கணும் அவ்ளோ தானே.. ” என்றாள்.

“ஆமா ” என்றாள் இளங்கிளி அருகே இருந்த ராவணின் கன்னத்தை பற்றிக் கிள்ளி முத்தம் வைத்துக்கொண்டே.,

“ஐயோ! இவளை.. ” என்று கடுப்பில் கத்தியே விட்டாள் ரக்ஷனா,

“ரக்ஷு டென்ஷன் ஆகாத ” என்றவன் “இந்த பொண்ணு என்கிட்டே என்ன ட்ரை பண்ணினாலும் நான் அதுக்கு எல்லாம் மடிய மாட்டேன் ” என்றவன் . “இங்க பாரு சும்மா என் ரக்ஷுவை ..” என்று ராவண் பேச.,.

“என்னது.. ” என்று இளங்கிளி அவனை முறைக்க..

“இல்ல ரக்ஷ்ணாவை சும்மா தொந்தரவு பண்ணி அவளை டென்ஷன் பன்னிரு இறுக்கமா போய் தூங்கு.. என்றான்.

“ம்ம்.. சரி அப்போ நீங்களும் வாங்க..  ” என்று அவன் கையைப் பற்றி இழுக்க..

ராவணும் அவள் பின்னால் செல்லப்போனவன் ” ஐயோ! என்னால முடியலை இவளோட.. இப்படி என்னை லவ் டோர்சேர் பண்றாளே ” என்று நினைத்தவன் தன் கையை உதறிவிட்டு “நீ மட்டும் போய் படு.. ” என்று மெத்தையைக் காட்ட..

அவளும் சரி என்று தலையாட்டிவிட்டு “நீங்க சொன்னதுனால நான் போய் தூங்குறேன். இன்னிக்கு இது போதும். நாளைக்கு பாத்துக்கிறேன் இவளை ” என்று சொன்னவள் “குட் நைட் ரக்ஷனா.. ” என்று அவளிடம் கூற..

“ம்ம்.. போய் தூங்கித் தொலை.. “என்றாள் கடுப்பில்.

“மாமா நான் போய் தூங்குறேன். நீங்களும் தூங்குங்க.. ” என்று அவன் இடுப்பை பிடித்து நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓட..

ராவனோ அவள் கிள்ளியதில் இப்பொது வலிக்கவே கத்தவா? வேண்டாமா? என்ற ரீதியில் ரக்ஷணாவைப் பார்த்தான்.

அவளுக்கோ பிரஷர் தலைக்கு ஏறியது கட்டிலில் இருந்த போர்வையை தூக்கி ராவணிடம் வீசியவள் “நீங்க அங்க சோபாவில் போய் தூங்குங்க ” என்றவள் கட்டிலில் இளங்கிளி படுத்திருந்த மற்றைய பக்கத்தில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள்.

படுத்தும் தூக்கம் வரவில்லை ரக்ஷ்ணாவிற்கு. இளங்கிளி பேசியதில் உள்ளுக்குள் ஒருவித நடுக்கம் பரவியது ரக்ஷனாவிற்கு. ராவணின் நினைவுகள் முழுதும் திரும்ப வருவதற்குள் அவனுடைய சொத்துக்களை மொத்தமாக தன் பெயருக்கு மாற்றிவிட்டு அவனை மொத்தமாக தனக்கு அடிமையாக்க வேண்டும். அதற்கு இந்த குழந்தை வெளியே வர வேண்டும். இத்தனை நாள் அவன் தன்னை நெருங்காத போதே.. பொய் சொல்லி தன் கர்ப்பத்திற்கு அவன் தான் காரணம் என்று நம்ப வைத்திருக்கிறாள், அதே போல உண்மையாகவே அவனை தன் வசப்படுத்தி தனக்கும், தன் உடலுக்கும் அவன் அடிமையாகி தன் காலின் கீழேயே இருக்க வேண்டும். அதை செய்ய அவனோடு நான் ஒன்றாக இணைய வேண்டும். அதற்கு அவள் வயிற்றில் வளரும் குழந்தை தடையாக இருக்க.. எப்போது குழந்தை பிறந்து அவனோடு ஒன்றாக இருக்கும் நாள் வரும் என்று அவள் காத்திருக்கிறாள்.

ராவனோ எல்லாம் அறிந்தும் , எதுவும் தெரிவித்தவன் போல இன்றுவரை நடித்துக்கொண்டிருக்கிறான். அவனும் இந்த கர்ப்பத்தை காரணம் காட்டி தான் அவளிடம் இருந்து இதுநாள் வரை விலகி இருக்கிறான்

சீக்கிரமே அவள் செய்யும் போதை பொருள் உற்பத்தி தொழிலின் மூலம் யார்? அவளுக்கு எங்கோ இருந்து வேலை கொடுத்து ரக்ஷனாவின் சூழ்நிலையைப் பயன் படுத்து இந்த உலகிற்கு இழுத்து வந்தது யார்? அவன் எங்கே இருக்கிறான் என அனைத்தையும் தெரிந்து கொண்டு அவனை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அவர்களால் சீரழியும் இந்த தலைமுறைகளை அதில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று காத்திருக்கிறான்.

இங்கே ரத்தினவேலுவின் வீட்டில் அனைவரும் ஒருவழியாக சமாதானம் ஆனவர்கள் சாப்பிட்டு முடித்து அவரவர்க்கு என்று ஒதுக்கிய அறையில் தஞ்சம் புகுந்து இருந்தனர்.

ஆதியை,அல்லியை , யஷ்வந்திகாவை என மூவரையும் ஒன்றாகவே உறங்க வைக்க வேண்டி பரிமளா, கமலா, வேதவள்ளி மூவரும் ஒன்றாக உறங்க முடிவெடுத்தனர். அவர்களோடு சேர்ந்து கனகாவும் வந்து படுத்துக்கொண்டனர்.

மற்றவர்கள் அவரவர் அறையில் உறங்க செல்ல.. வரதராஜனும், ரத்தினவேலுவும் மொட்டை மாடிக்கு சென்று உறங்கிவிட..

இங்கே அறைக்குள் குளித்துவிட்டு டவலை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்திருந்தாள் மித்ரா.

அவள் வருவதை கூட கண்டுகொள்ளாமல் ஈஸ்வர் ரீலிஸ் பார்த்துக் கொண்டிருக்க..

“ரேஸ்கல் அந்த போன்ல அப்படி என்ன தான் பாக்குறானோ தெரியல.. எப்போ பாரு போன் பாத்துட்டே இருக்க வேண்டியது. இங்க ஒருத்தி இப்படி அறையும் , குறையுமா வந்து நிக்குறது கூட தெரியாம போன் பாக்க வேண்டியது ” என்று   முனகியபடி மித்ரா தன் பேக்கைத் திறந்து இரவு உடையை எடுத்துக்கொண்டு உடை மாற்ற உள்ளே செல்ல..

“ஏன் டி மித்து குட்டி இங்கையே டிரஸ் மாத்த வேண்டியது தானே.. ஏன் உள்ள போற..  என் முன்னாடி டிரஸ் சேஞ் பண்ண வெட்கமா உனக்கு ” என்றான் ஈஸ்வர் பார்வையை போனில் பதித்துக்கொண்டே.

அவனை திரும்பி முறைத்தவள் ” எனக்கு என்ன டா வெட்கம் , நீ தான் என்னைப் பார்க்காம அந்த போனையே நோண்டிட்டு இருக்க.. அதனால தான் நான் உள்ள போறேன் ” என்றாள்.

“இப்போதைக்கு போனை தான் நோண்டிட்டு இருக்கேன். நீ குளிச்சதும் வந்து உன்னை ..  “என்றவன் பார்வை இப்பொது மித்ராவின் மீது பதிய..

அவன் பார்வைக்காக ஏங்கியவளோ அதன் ஆழம் தாங்காமல் உள்ளுக்குள் ஏற்படும் நிலநடுக்கத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போனாள்.

“என்ன டி அப்படியே நிக்குற.. நீ டிரஸ் மாத்தள?” என்று கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து தலைக்கு கையைக் கொடுத்தான்.

“மாத்த தான் போறேன் “என்றவள் அவளும் அவன் முன்னாலேயே கட்டி இருந்த டவலை அவிழ்த்து அவன் மீதே வீசிவிட்டு இரவு உடையை போட ஆரம்பித்தாள் .

அவள் வீசிய டவலை கையில் பிடித்து அதை முகர்ந்து அவள் வாசனையை நுகர்ந்தவன் எழுந்து அவளிடம் சென்று “சரி போலாமா?” என்றான்.

“எங்க டா மச்சான் ” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.

“எப்பவும் ரூமுக்குள்ள.. பெட்லையே ரொமான்ஸ் பண்ணி போர் அடிக்குது , ஒரு செஞ் வேணாமா? ” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு சத்தமில்லாமல் ரத்தினவேலுவின் வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.

அட்வென்சர் ரொமான்ஸ் செய்வதற்காக கிளம்பி இருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.