மூர்க்கன் 35
விடியற்காலை பொழுது உறக்கம் களைந்து கண்விழித்த ரக்ஷணா அப்படியே திரும்பி அருகே பார்க்க.. இளங்கிளி அங்கு இல்லை “அப்பாடா! கடன்காரி எழுந்து போய்ட்டா.. எங்க காலையில எழுந்ததும் இவ முகத்துல முழிக்கணும்னு நினைச்சேன் ” என்று நினைத்தபடி அப்படியே தலையை மட்டும் உயர்த்தி சோபாவில் உறங்கும் ராவனைப் பார்த்தாள்.
அங்கே அவள் கண்ட காட்சியால் அப்படியே உறைந்து போனாள். விழிகள் கீழே விழும் அளவுக்கு கண்கள் அகல விரிந்தது அவளுக்கு.
சோபாவில் வெற்று மார்பில் ராவண இடை வரை போர்த்திப் படுத்திருக்க.. இதுநாள் வரை அவனை ஓரிரு முறை தான் சட்டையில்லாமல் பார்த்திருக்கிறாள் ரக்ஷனா, அதுவும் சிலநிமிடங்கள் கூட நிலைத்திருந்திருக்காது. ஆனால் இன்று ராவணுக்கு முன்பே ரக்ஷணா எழுந்ததால் இந்த காட்சியைக் காண்கிறாள்.
ஆனால் இன்றும் அவன் திண்ணிய புஜங்களையும், உரமேறிய இறுகிய தேகத்தையும் அவளால் முழுதாகப் பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம் அவன் மார்பு முழுதும் படர்ந்து ராவணின் தோள்களில் கையைப் போட்டு உறங்கிக்கொண்டிருந்தாள் இளங்கிளி. அவளை இடையோடு சேர்த்து அணைத்துப் பிடித்தபடி ராவணனும் உறங்கிக்கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரையும், இந்த நிலையில் பார்த்ததும் தான் ரக்ஷ்ணாவின் கண்கள் குதித்து வெளியே வந்துவிட்டது. அதைக் கண்டா மறுநொடி விழுக்கென எழுந்து கட்டிலில் அமர்ந்தாள் ரக்ஷணா.
வேகமாக தன் மீதிருந்த போர்வையை விலக்கிவிட்டு கட்டிலில் இருந்து கீழே இறங்கியவள் “ராவண்! என்ன இது? ரெண்டு பேரும் இப்படிப் படுத்திருக்கிங்க!” என்று கத்திகொண்டே அவர்கள் அருகே சென்றாள்.
அவள் சத்தம் கேட்டு இருவருக்கும் தூக்கம் கலைந்தது. கண்களைத் திறந்த ராவண் தன் மேல் இளங்கிளி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.
அதே அதிர்ச்சியோடு ரக்ஷணாவைப் பார்க்க..
“என்ன பாக்கறீங்க ரெண்டு பேரும் முதல்ல எழுந்திருங்க” என்றாள்.
தன் மேல் இருந்த இளங்கிளியை பிடித்து கீழே இறக்கிவிடப் போன ராவண் கையை தட்டிவிட்ட இளங்கிளி அவன் மார்பில் முழங்கையை ஊன்றி உள்ளங்கையை அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து பள்ளி கொண்ட பெருமாள் போல அவன் மேலே படுத்திருந்தாள்.
“காலைலயே ஸ்டார்ட் பண்ணிட்டா என் சிணுங்கி.. ” என்று நினைத்தவன் ரக்ஷணாவைப் பார்க்க.
“ஏய் எழுந்திரு டி.. அவர் என்ன உனக்கு பெட்டா நல்லா ஒய்யாரமா படுத்திருக்க.. ” என்றாள் எரிச்சலாக.
“என் புருஷன் மேல நான் படுத்தா உனக்கு எங்கம்மா எரியுது.. நான் ஒய்யாரமா படுப்பேன்.. கட்டிப்பிடிப்பேன்” என்று திரும்பி அவன் மார்பை சுற்றி கையை போட்டு கட்டிக்கொண்டவள் திரும்பி ரக்ஷணாவைப் பார்த்து “முத்தம் கொடுப்பேன் என்னவேனா பண்ணுவேன். ” என்றவள் திண்ணிய மார்பில் தன் இதழ் ஒற்றி எடுத்தவள் நிமிர்ந்து ரக்ஷ்னாவைப் பார்த்து எப்படி என்று புருவம் உயர்த்தினாள்.
“ராவண் அவ உங்களுக்கு முத்தம் கொடுக்குறா.. நீ எதுவும் பண்ணாம அமைதியா பாத்துட்டு இருக்கீங்க ” என்று ராவணிடம் கத்தினாள்.
“அதான் சொல்றா இல்ல மாமா, ஏன் சும்மா இருக்கீங்க? நீங்களும் எனக்கு முத்தம் கொடுங்க” என்று மேலேறி வந்து அவன் முகத்திற்கு நேராக தன் இதழ்களைக் குவித்துக் காட்டினாள் .
“இவ மட்டும் என் பக்கத்துல இல்லேனா இந்த லிப்ஸை கடிச்சுத் தின்னுருவேன் டி.. இப்படி எதுவும் பண்ண முடியாம இருக்கேனே.. ” என்று உள்ளுக்குள் இளங்கிளியை முத்தம் கொடுக்க எழுந்த எண்ணத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டவன் இயலாமையாளோடு திரும்பி ரக்ஷணாவைப் பார்த்தவன்.
“நான் என்ன பண்ணறது ரக்ஷு.. இவ எப்போ இங்க வந்தா என் கூட எப்போ வந்து படுத்து தூங்குனான்னு கூட எனக்குத் தெரியல. ட்ரேவல் பண்ணி வந்த அலுப்புல நான் அசந்து தூங்கிட்டேன்” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான் ராவண்.
“ஆமா டா.. இவ வந்து உன் உன்னைக் கட்டிபிடிச்சிட்டு விடியுற வரை தூங்கிருக்கா.. அது கூடத் தெரியாம நீ தூங்கிருக்க. ஆனா நான் உன் பக்கத்துல படுத்திருந்த இத்தனை நாள்ல தெரியாமக் கூட என் கை உன்மேல பட விட்டிருப்பியா? உன் கை என் மேல படாமையே நான் கர்ப்பமாக முடியுமா? லூசு லூசு.. ” என்று அவனை மனதிற்குள் திட்டினாள் ரக்ஷணா.
“அடப்பாவி மாமா! நைட் நான் கட்டில்ல படுத்திருந்தேன். நீ தானே ரக்ஷணா தூங்கின பிறகு என்னை வந்து தூக்கிக்கிட்டே.. நான் வேணாம்னு சொன்னதுக்கு அவ எழுந்துக்க மாட்டா நீ வா.. உன்னை பக்கத்துல வெச்சுட்டு தள்ளிப் படுக்க என்னால முடியாதுனு சொல்லி தூக்கிட்டுப் போய் சோபாவுல உன்மேல படுக்க வெச்சுட்ட. இப்போ இவ வந்ததும் என்னவா நடிக்குறாரு.. ” என்று இளங்கிளியும் நினைக்க..
ராவனோ ரக்ஷணா அறியாத வண்ணம் மெல்ல தன் கையை கீழ் இறக்கி இளங்கிளியின் இடையை மென்மையாக வருட..
அதில் விழுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள் இளங்கிளி. ஆனால் ராவனோ எனக்கும் இதற்கும் எந்த சமமந்தமும் இல்லை என்ற ரீதியில் ரக்ஷனாவை பார்த்துக்கொண்டிருந்தான்.
“இதுக்கு மேல இவர் மேல படுத்திருந்த நல்லா இருக்காது ” என்று நினைத்த இளங்கிளி அவன் மார்பில் கை வைத்து ஊன்று மேலெழுந்தவள் தன் மீது போர்த்தி இருந்த போர்வையை எடுத்து ராவண் மார்பில் போர்த்தி விட்டவள்.
“இப்படி அறையும் குறையுமா படுக்குறதுன்னா நான் மட்டும் இருக்கும்போது படு மாமா.. இவளை வெச்சுட்டு இப்படி வெறும் உடம்பை காட்டிட்டு இருக்காதிங்க. இவ கண்ணு வெச்சிருவா?” என்றாள் இளங்கிளி.
இளங்கிளி எழுந்து நிற்கும் இடைவெளியில் ராவணை ரசிக்க நினைத்த ரக்ஷ்ணாவைன் குறுக்கு புத்தியை கண்டுகொண்டவள் போல ராவண் மீது அவள் போர்வையை போர்த்தி இருக்க.
அதில் ரக்ஷணாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “ச்சே.. ! உஷாரா தான் இருக்கா இவ.. அன்னிக்கு இவ குடிச்ச வய்ன்ல விஷத்தைக் கலந்திருக்கணும் ” என்று நினைத்தவள் ராவணை ஏக்கமாகப் பார்க்க.
அவனோ போர்வையை தன் மார்பை சுற்றி போர்த்தியபடி எழுந்து சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்தான்.
“ஏய்! முதல்ல ரூமை விட்டு வெளியே போடி.. எங்களுக்கு பிரைவசி வேணும் ” என்றாள்.
“நான் இருக்கும்போது அதுக்கு வாய்ப்பே இல்லம்மா.. நான் எங்கையும் போறதா இல்ல ” என்று ராவண் மடியில் சென்று அமர்ந்துவிட..
இதை ராவணும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து செய்வதறியாது ரக்ஷணாவைப் பார்த்தான்.
ரக்ஷனாவின் பிபி எக்கச்சக்கத்துக்கு எகிறியது. வேக மூச்சுகள் எடுத்தவள் இளங்கிளியின் கையைப் பற்றி அவளை எழுப்பிவிட்டவள் “ராவண் நீங்க போய் முதல்ல குளிங்க.. நாம ஆபீஸ் போகணும் ” என்றாள் .
“ஆபீஸ்!” என்று ராவண் ஆச்சர்யமாக அவளைப் பார்க்க.
“ம்ம்.. நீங்க தானே ஆபீஸ் வரணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்திங்க. அதான் எனக்கு எப்படியும் ஒரு ஒன் மன்த்ல டெலிவரி ஆகப்போகுது இல்ல. அதுக்குள்ள நீங்க வந்து நம்ம ஆபீஸ் பத்தி தெரிஞ்சுக்கிட்டா நான் இல்லாத அப்போ ஆபீஸ் ரன் பண்ண வசதியா இருக்குமே ” என்றாள்.
“பரவால்லையே என் பொண்டாட்டி வந்த நேரம் இவ்ளோ நாளா ஆபீஸ் பக்கம் என்னை விடாதவ இன்னிக்கு போலாம்னு சொல்றாளே..”என்று ஆச்சர்யப்பட்ட ராவண்.
“ஓகே ரக்ஷு.. இன்னிக்கே போகணுமா? ” என்றான்.
“ஆமா ராவண், ஏன்?” என்றாள்.
“இல்ல எனக்கு நைட் எல்லாம் சோபாவுல சரியா தூங்க முடியல. ட்ராவல் பண்ணி வந்ததுல வேற ரொம்ப டையர்டா இருக்கு. இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போலாமே.. ” என்றான்.
“அப்படியா! சரியா தூங்கலைன்னு சொல்ற , ஆனா இவ வந்து மேல படுத்தது எப்படி தெரியாம இருக்கும்” என்றாள் ரக்ஷணா.
“ஐயோ! சரியா பொயிண்ட்டை பிடிச்சுட்டாளே.. இப்போ இவர் என்ன சொல்லி இவளை சமாளிக்கபோறாரோ.. ” என்று இளங்கிளி ராவணைப் பார்த்து “கேக்குறாங்க இல்ல மாமா பதில சொல்லுங்க..” என்றாள் நக்கலாக.
“என் மேல படுத்துட்டு சும்மாவா டி நீ இருந்த. கைய ஒரு இடத்துல வெச்சிருந்தியா நீ .. பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்னையே இவகிட்டே கோர்த்து விட்ரியா?” என்று இளங்கிளியை மனதிற்குள் திட்டியவன்.
“ஆ… அது.. நான் ரொம்ப லேட்டா தான் தூங்கினேன். அப்போ தான் இவ வந்து என் மேல படுத்திருக்கணும். தூங்காம இருந்திருந்தா நீ இருக்க அப்போ இவளை என் மேல படுக்க விட்டிருப்பேனா? ” என்று இளங்கிளியை பிடிக்காதவன் போல பார்க்க.
அவனை முறைத்த இளங்கிளி “என்கிட்டே வாங்க அப்போ பேசிக்கிறேன் உங்களை ” என்று வாய்க்குள் முணுமுணுக்க..
அதை கவனித்த ராவண் இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டான்,
“அப்போ ஒன்னு பண்ணலாம் இன்னிக்கு ஆபீஸ் வரேன்னு நான் முன்னமே சொல்லிட்டேன். நான் மட்டும் போயிட்டு சீக்கிரம் வந்துறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க ” என்றாள்.
இதை தானே எதிர்பார்த்தேன் என்று நினைத்தவன் சரி என்று சிரித்துக்கொண்டான்.
அப்போது அவர்கள் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. “ராவண் நீங்க போய் குளிங்க.. ” என்றவள் “ஏய் நீ வெளியே போ.. நான் ஆபீஸ் கிளம்பனும்..” என்று இளங்கிளியை போக சொல்லிவிட்டு வந்து கதவைத் திறந்தாள் ரக்ஷணா.
அங்கே அவர்கள் அறை முன் அம்பிகா நின்றிருந்தாள்.
“என்ன அம்பிகா?” என்றாள் சேலையை இழுத்து பெருகிக்கொண்டே ரக்ஷணா.
“அம்மா காலைல என்ன சமைக்கட்டும்னு கேக்க தான் .. ” என்றாள் சற்று தயக்கமாக.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க.. அப்போது இளங்கிளியின் பின்னால் நின்றிருந்த ராவண் கை அவள் பின்னழகை ஆசையாக வருட..
அவளோ அதை எதிர்ப்பார்திராதவள் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டே நின்றிருந்தாள்.
“அதுக்கு ஏன் டி தயங்குற..” என்றாள் ரக்ஷணா.
“இல்லம்மா நீங்க ஒரு வாரம் வெளிய தங்கிட்டு வந்திருப்பிங்க. மாசமா வேற இருக்கீங்க. எதுவும் ருசியா சாப்பிடணும்னு தோணுமே.. அதான் பவித்ரா உங்ககிட்டே கேட்டு வர சொன்னா.. ” என்றாள் .
“ஆமா அம்பிகா. ஹோட்டல் சாப்பிடு சாப்பிட்டு வாயெல்லாம் என்னவோ போல இருந்துச்சு. அப்பறோம் ஒரு வீட்ல ரெண்டு நாள் தங்கி இருந்தோம் அந்த வீட்ல இருந்த வேலைக்காரி நல்லா தான் சமைச்சா. அவ ஒரு டிஷ் பண்ணிருந்தாளே பன்னீர் போட்டு.. ” என்று யோசித்த ரக்ஷணா
பின்னால் திரும்ப..
அதுவரை அவள் பின்னழகில் தாளம் போட்டுக்கொண்டிருந்த ராவனோ சட்டென கையை விலக்கிவிட்டு அமைதியாக ரக்ஷ்னாவைப் பார்த்தான்.
“நீங்க குளிக்கப் போகலையா?” என்றாள்.
“போகணும். .அதுக்குள்ள அம்பிகா வந்தாலே எனக்கு சூப் வெக்க சொல்லலாம்னு இருந்தேன் ” என்றான்.
“ஓ!.. ” என்றவள் “அம்பிகா அவருக்கு என்ன சூப் வேணும்னு கேட்டுட்டு வெச்சு கொடுத்திரு ” என்றவள் “ஏய் நீதானே அந்த வீட்ல சமையல் காரியா இருந்த. அங்க பன்னீர் வெச்சு ஒரு டிஷ் செஞ்சு கொடுத்தியே… அது பேர் என்ன? ” என்றாள்.
அவளை முறைத்த இளங்கிளி “பன்னீர் புட்டு.. ” என்றாள்.
“ம்ம்.. அதான் அதை செய்திரு அம்பிகா ” என்றாள் அவளிடம் திரும்பி,
“பன்னீர்ல புட்டா… ” என்று யோசித்த அம்பிகா “சரிங்க அம்மா ” என்றவள் “வேற எதுவும் செய்யணுமா மா ” என்று அவளிடம் லிஸ்ட் கேட்டுக்கொண்டிருக்க..
“அவங்களைத் தான் என்ன சாப்பிட வேணும்னு கேப்பிங்களா? வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு என்ன வேணும்னு கேட்க மாட்டிங்களா?” என்று அங்கு வந்தாள் கயல்,
“ஐயோ! கடவுளே! இவளும் வந்துட்டாளா? இவளுங்க ரெண்டு பேரையும் சமளிக்குறதே எனக்கு வேலைஆகிருச்சு “என்று சலித்துக்கொண்டவள் “நீ ஒன்னும் விருந்தாளி இல்ல. நானா உங்க ரெண்டு பேரையும் என் வீட்டுக்கு வாங்கனு வெத்தலை, பாக்கு வெச்சு அழைச்சேன் . நீங்களா தானே வந்திங்க .. இங்க என்ன செய்றமோ அதை சாப்பிட்டு சும்மா இரு ” என்றாள் கடுப்பாக.
“எதுக்கு ரக்ஷனா இவ்ளோ கடுப்பாகிற.. நீ கூப்பிடாட்டி என்ன ? இங்க எங்க மாமா இருக்கார் தானே.. அப்போ எங்களுக்கு இங்க வர உரிமை இருக்கு தானே.. “என்றாள்.
“ஏய் ரொம்ப பேசாத டி , வந்துட்டா காலைலயே என்னை டென்ஷன் பண்ண’ என்று பதிலுக்கு ரக்ஷனா பேச,.
இருவரும் மாரி மாறி ஒருவரை ஒருவர் திட்டி கலாய்த்துக் கொண்டிருக்க..
இந்த சிங்கள் கேப்பில் ராவண் சட்டென இளங்கிளியை தன்னை நோக்கித் திரும்பியவன் அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி அழுந்த முத்தம் வைத்து விட்டு விளங்கியவன் ” அவ ஆபீஸ் போன அப்பறோம் ரூமுக்கு வந்திரு.. எனக்கு உன்னை இப்பவே எடுத்துக்கணும் போல இருக்கு டி பொண்டாட்டி.. ” என்று அவளை விட்டான்.
அவன் முத்தம் கொடுத்ததில் அதிர்ந்து இளங்கிளி திரும்பி ரக்ஷ்னாவைப் பார்க்க..
அவளோ மும்முரமாக கயலுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். அதனால் ராவண் இளங்கிளிக்கு முத்தம் கொடுத்ததை அவள் பார்க்கவில்லை.
ஆனால் அம்பிகா அதை பார்த்துவிட்டாள்.
கயலும் ரக்ஷனாவுடன் சண்டை போட்டதில் முத்தக் காட்சியை கவனிக்கவில்லை.
“ஹயோ!” என்று இந்த முத்தக் காட்சியைப் பார்த்து அம்பிகா வாயில் கையை வைத்துக்கொள்ள..
“ஏய் அம்பிகா என்ன டி ஆச்சு?” என்றாள் ரக்ஷணா,
அவளோ ராவணைப் பார்க்க..
அவனோ இதழை குவித்து வாயில் ஒற்றை விரலை வைத்து “ஷ்..! ” என்று சைகை செய்தவன் தலையை இடவலமாக ஆட்டி சொல்லாத.. அப்படி சொன்னா என்று தன் கட்டை விரலை கழுத்துக்குக் குறுக்கே கிழிப்பது போலக் காட்டி கொன்றுவிடுவேன் என்று எச்சரிக்கை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்றுவிட..
அவளோ இன்னமும் அதே நிலையில் இருந்தாள் ,.
“ஏய் என்ன டி ஆச்சு ” என்றாள் ரக்ஷனா.
“ம்.. ஒன்னுமில்ல மா , நான் போய் சமைக்கிறேன் ” என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.
கயலும் “அக்கா! பாத்து எவ்ளோ நேரம் ஆச்சு.. நைட் நல்லா தூங்குனீங்களா?” என்றாள்.
“ம்ம்ம் என் மாமா நெஞ்சுல படுத்து தூங்கினேன் டி.. ” என்றபடி அவளை கட்டிக்கொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்தவள் “சரி வா.. நாம போய் இந்த வீட்டை சுத்திப் பார்க்கலாம் ” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றுவிட..
“முதல்ல அந்த ராவண் கிட்டே இருக்க சொத்தை எல்லாம் எழுதி வாங்கணும். அதுக்கு அப்பறோம் இவளுங்க ரெண்டு பேரையும் இந்த வீட்டை விட்டு அடிச்சு துரத்தணும் “என்று நினைத்தவள் கதவை ஓங்கி சாற்றிக்கொண்டாள்.
இளங்கிளியும்., கயலும் அவள் செயலைக் கண்டு சிரித்துக்கொண்டே அவர்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
ரக்ஷனாவை இவ்ளோ கடுப்பேத்திட்டு புருசனும், பொண்டாட்டியும் கொஞ்ச நேரத்துல ரொமான்ஸ் பண்ணப்போறாங்க.. அடுத்த எபிசோட்ல
