மூர்க்கன் 32
“எவ்ளோ நேரம் உன் தம்பியும் , தம்பி பொண்டாட்டியும் வாசலையே நிக்க வெச்சு பேசுவாங்க. உள்ள கூப்பிடறதா அபிப்ராயம் இருக்கா? இல்ல .. வந்த வழியே திரும்பிப் போய்டலாமா?” என்று பேரன் பேத்தி எடுத்த இதனை வயதிலும் பரிமளாவின் தம்பி குடும்பத்திடம் மாப்பிள்ளை முருக்கைக் காட்டிக்கொண்டு நின்று இருந்தார் வரதராஜன்,
அதற்குத் தகுந்தாற்போல வந்தவர்களை வரவேற்க மறந்து மொத்த குடும்பமுமாக வாசலில் வந்து நின்றவர்களை அழைக்கக் கூட மறந்த நிலையில் நின்று இருந்தார் கனகா.
அவர் பின்னே வாசலில் வேனின் சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த ரத்தினவேலுவோ.. பரிமளாவைப் பார்த்ததும் பேச்சே எழவில்லை. விட்டுப்போன உறவை மீண்டும் பார்த்ததுல வந்த பேரானந்தம் அது.. சொல்ல முடியாத உணர்ச்சிப்பெருக்கில் நின்றிருந்த ரத்தினவேலு வரதராஜனின் குரல் கேட்டுத் தான் நிதானத்துக்கு வந்தார்.
“அட என்ன மாமா நீங்க இவ்ளோ நாளுக்கு அப்பறோம் உங்களை எல்லாம் பாக்குறேன். அதுவும் நீங்களா என் வீடு தேடி இதனை வருசம் கழிச்சு வந்திருக்கீங்க , அந்த அதிர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம இருக்குமா? என் அக்காவையும் அவ குடும்பத்தையும் பார்த்த சந்தோஷத்துல எங்களுக்கு எதுவும் தோணல ” என்று அவரிடம் ஓடி சென்ற ரத்தினவேல் வரதராஜனின் கையைப் பற்றிக்கொண்டு “உள்ள வாங்க மாமா.” என்று எந்த பகையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அவரை உள்ளே அழைத்தார்.
அவரின் இந்த சுயநலமற்ற அணுகுமுறையைக் கண்டு ஆச்சர்யம் கொண்ட வரதராஜன் ஆச்சர்யமாகப் பார்க்க.
“உன் புருசனுக்கு சாக்கைப் பார்த்தியா? இவ்ளோ நாள் கழிச்சு உன் வீடு தேடி வந்திருக்கோமே உன் தம்பி எப்படி பேசுவனோ.. என்ன பண்ணுவானோன்னு உள்ளுக்குள்ள ஒரு யோசனை இருந்திருக்கும். இங்க இவ்ளோ வருஷம் வராம இருந்ததுக்கு காரணமே இதுவா தான் இருக்கும், இன்னிக்கு வந்ததும் உன் தம்பி மனசுல எதுவும் இல்லாம இப்படி வந்து பேசவும் அவன் மூஞ்சியைப் பார்த்தியா?” என்று வேதவள்ளி பரிமளாவிடம் கூற..
“ஆமா அத்தை அவர் முகத்தைப் பாருங்க எப்படி இருக்குன்னு ” என்று சிரித்த பரிமளா. “கனகா எப்படி டி இருக்க? உன்னைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..” என்று கனகாவிடம் சென்று கை பற்றிக்கொண்டு பாசத்தோடு கேட்டார் பரிமளா.
“அண்ணி! எப்படி இருக்கீங்க? எங்களை எல்லாம் மறந்துட்டு இவ்ளோ வருசமா இருந்துட்டீங்க இல்ல.. நீங்க எல்லாரும் குடும்பமா ஒண்ணா வந்திருக்கீங்க. அதுவும் இவ்ளோ வருஷம் கழிச்சு. ஆனா எங்களுக்கு.. ” என்று குரல் தழுதழுக்க கேட்டவர் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
“என்ன டி இது சின்னப்புள்ளை மாதிரி அழுதுட்டு இருக்க. என்னால என்ன பண்ண முடியும் , இது எல்லாத்துக்கும் காரணம் உங்க அண்ணா தான். அதோ அங்க இருக்கார் பாரு நீயே போய் அவர்கிட்டே நியாயத்தைக் கேளு. இவ்ளோ வருசமும் நேர்ல பாக்காம உங்ககிட்ட வெறும் போன்ல மட்டும் பேசிகிட்டு இருந்ததுக்கு இவர் தானே காரணம் .எனக்கும் சேர்த்து நீயே அவர்கிட்டே நியாயம் கேளு டி.. “என்று வரதராஜனை உள்ளே இழுத்துவிட்டார் பரிமளா.
“அக்கா, வந்ததும் மாமா மேல இவ்ளோ வருஷம் இருந்த கோபத்தை உங்க தம்பி பொண்டாட்டியை வெச்சு தீர்த்துக்க பாக்குறீங்களா?” என்று கமலா சிரிக்க.
“சும்மா இரு டி.. உனக்கு என்ன உன் புருஷன் உன்னை எதுவும் சொல்லாம பிசினஸ் , பிஸிநெஸ்ஸ்னு ஊரெல்லாம் சுத்திட்டு வருசத்துக்கு ஒரு தரம் வரார். நீ என்ன பண்ணினாலும் எதுவும் சொல்றதில்ல, ஆனா என் புருஷன் அப்படியா? என் அம்மா வீடுன்னு சொன்னாலே மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு மூணு நாளைக்கு பேசமாட்டார். இத்தனை வருசத்துல என்னை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்கார். இன்னிக்கு இருக்கு அவருக்கு” என்று பரிமளா வரதராஜனை விடுவதாக இல்லை என்ற ரீதியில் பேச..
“அது சரி .. ” என்று பரிமளாவை ஒரு மார்க்கமாகப் பார்த்த கமலா “அத்தை இன்னிக்கு உங்க மகன் வசமா மாட்டிக்கிட்டார் ” என்றார் கமலா.
“விடு டி.. இதெல்லாம் என்னிக்காச்சும் ஒரு நாள் தான் அமையும். நீயும் சேர்ந்து என் மகன் மாட்டிகிட்டு முழிக்குறதைப் பார்த்து என்ஜாய் பண்ணு ” என்றார் வேதவள்ளி சிரித்துக்கொண்டே.
“சரி சரி.. அப்போ இங்க ஒரு சம்பவம் காத்துட்டு இருக்கு. எனக்கு என்ன வந்துச்சு ” என்று ஒதுங்கிக் கொண்டார் கமலா.
“ஏன் அண்ணா, இப்படிப் பண்ணுணிங்க.. அவர் தான் தப்பு பண்ணினார். அதுக்கு இப்போவே வந்து அவர் செஞ்சது தப்பு தான்னு மன்னிப்புக் கேட்டார் இல்ல . இந்த வீட்டுக்கு நீங்க தானே மூத்தவர். அவரை ரெண்டு அடி அடிச்சுக்கூட கண்டிச்சிருந்தா கூட நான் எதுவும் நினைச்சிருக்க மாட்டேன். ஆனா இவ்ளோ வருஷமா ஒதுக்கி வெச்சுட்டீங்களே..” என்று புடவை முந்தானையில் முகத்தை மூடிக்கொண்டு தங்கள் மனதில் இத்தனை நாள் கேட்க முடியாமல் வைத்திருந்த கேள்வியை கனகா கேட்டிருக்க. .
அவரிடம் பதில் சொல்லத் தெரியாமல் திணறினார் வரதராஜன். “இல்லம்மா அது.. அப்போ…” என்று பேச வராமல் தடுமாறியவர் தன்னை காப்பாற்ற வேண்டி பரிமளாவைப் பார்க்க..
அவரோ சரியாக வரதராஜன் தன்னைப் பார்க்கும் நேரம் வேறுபக்கம் திரும்பிக்கொண்டு மித்ராவிடம் ஏதோ பேசுவது போல நடிக்க..
“அக்கா, அங்க பாருங்க . மாமா உங்களை தான் பாக்குறார் “என்று கமலா பரிமளாவிடம் கூற.
“ஏய் கமலா கொஞ்ச நேரம் சும்மா இரு டி . அந்த மனுஷன் கொஞ்ச நேரம் அவங்ககிட்டே மாட்டிகிட்டு அல்லாடட்டும் ” என்று அவரை அதட்டி அடக்கி வைத்தார்,
வரதராஜனோ பரிமளாவைப் பார்த்து பார்த்து நொந்து போனவர் “சரி விடும்மா கனகா, பழசெல்லாம் பேசி ஏன் அழற. அதான் நம்ம எல்லாரையும் ஒன்னு சேர்க்கணும்னு தான் நானே யோசிச்சு முடிவு பண்ணி என் பிரெண்ட் மகனுக்கு உன் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க கேட்கருத்துக்காக நானே நேர்ல வந்துட்டேன் . இது போதாதா ம்மா..” என்று சமாளிக்க..
அவர் சொன்ன பொய்யை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் அவரைத் திரும்பிப் பார்க்க..
அவரோ இவர்களைக் கண்டும் காணாதவர் போல முகத்தைத் திருப்பிக்கொண்டு “ரத்னவேலு இன்னும் என் மேல இருக்க கோபம் போகலையா உனக்கு. வந்தவனை இன்னமும் வாசலையே நிறுத்தி வெச்சு நீயும், உன் பொண்டாட்டியும் குற்றவாளி மாதிரி கேள்வி கேட்டு நிக்க வெச்சிருக்கீங்களே..” என்றார்.
“ஐயோ! மச்சான் அப்படி எல்லாம் எதுவுமில்லை.. நீங்க உள்ள வாங்க ” என்று அவரை அழைத்த ரத்தினவேலு “அக்கா வா உள்ள ” என்று அவரையும் அழைத்தார்.
“டேய் ரத்தினம் உன் அத்தையும் இங்க தான் டா இருக்கேன். உன் அக்காவையும், மச்சானையும் பார்த்த சந்தோஷத்துல நாங்க எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையா?” என்று வேதவள்ளி கூற.
“ஐயோ! அத்தை என்ன இப்படி சொல்லிட்டீங்க.. ” என்று அவர் கையைப் பற்றியவர் “உள்ள வாங்க அத்தை ” என்று அவரை அழைத்தவர் மற்றவர்களையும் அழைத்தவர் சந்தோசமாக அனைவருடனும் உள்ளே சென்றார்.
இங்கே நீண்ட பயணத்திற்குப் பின் ரக்ஷனாவின் இல்லத்திற்கு வந்தடைந்தனர்.
கார் வந்து ரக்ஷனாவின் வீட்டின் முன்பு வந்து நிற்கவும் உறங்கிக்கொண்டிருந்தவள் தூக்கம் களைந்து எழுந்து அருகே பார்த்தாள் . அவள் தோள் மேல் தலையை சாய்த்து உறங்கிக்கொண்டிருந்தாள் இளங்கிளி.
அவளை முறைத்துவிட்டு தலையை நிமிர்த்தி ராவணைப் பார்த்தாள் . அவனோ அப்போது தான் உறக்கம் களைந்து கண் விழித்திருந்தவன் திரும்பி இவர்களைப் பார்த்தான்.
சட்டென தன் தோளை உலுக்கி.. “ஏய் நான் என்ன உனக்கு பில்லோவா அப்படியே ஒய்யாரமா சாஞ்சு தூங்குற . எழுந்திரு டி.. ” என்று இளங்கிளியை உசுப்பினாள்
“ம்ம்.. வீடு வந்திருச்சா?” என்று உடலை நெளித்துக்கொண்டே எழுந்த இளங்கிளி ராவணின் பக்கம் சாய்ந்தபடி “இப்போ என்ன தூக்கத்துல லைட்டா உன் மேல சாய்ஞ்சுட்டேன் , அதுக்குப் போய் புலம்புற.. “என்று சலித்துக்கொண்டவள் அப்படியே ராவண் பக்கம் திரும்பி “என்னங்க இவளைப் பாருங்க என்னை திட்டுறா” என்று சிணுங்கினாள்.
ராவனோ எதுவும் பேச முடியாத நிலையில் அவளை பார்க்க..
“அக்கா அவகிடக்குறா.. விடுங்க “என்று முன்னிருந்த இருக்கையில் இருந்து குரல் கொடுத்தாள் கயல்.
“ஏய் அவ இவன்னு சொன்ன.. “என்று அவளிடம் ரக்ஷணா எகிறிக்கொண்டு வர..
“ஹைய்! உன் வயித்துல குழந்தை இருக்கு. அதைப் பத்தி கொஞ்சமாச்சும் கவலைப் படுறியா நீ. .இந்த மாதிரி நேரத்துல எப்படி இருக்கனும் தெறியுமா? ” என்று அவளை கடிந்த கயல். காரை விட்டு கீழே இறங்க. .
ராவணும் பின்னிருக்கையில் இருந்து இளங்கிளியிடம் இறங்க சொல்லி சைகை காட்டிவிட்டு கீழிறங்க.. அவனோடு சேர்த்து அவளும் இறங்கினாள்.
இவர்கள் மூவரும் வந்திருங்கியதை பார்த்த அவர்கள் வீட்டு வேலைகாரப் பெண்மணி வேகமாக கிச்சனுக்குள் ஓடியவன் “ஏய் பவித்ரா இங்க வாடி.. ‘என்று அந்த பெண்ணின் கையை பற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தவள் “என்ன டி இவ புருஷன்கூட ஊரை சுத்திப் பார்த்துட்டு கூட ரெண்டு பொம்பளைகளைக் கூப்டு வந்திருக்கா? யாரு டி இவளுங்க ரெண்டு பேரும் ” என்றாள் அம்பிகா என்ற பெண்.
“உன்கூட தானே நானும் வேலை பாத்துட்டு இருக்கேன். இவளே ஒரு அடங்காபிடாரி. அவ கூட வந்திருக்க பொண்ணுங்களும் அவளை மாதிரி தானே இருக்கும். என்கிட்டே வந்து இவளுக கோத்திரம் கேட்டா நான் எங்க டி போறது..” என்ற பவித்ரா.
“இங்க பாரு, அவ நேத்து ராத்திரியே போன் போட்டு காலைல சாப்பிட இதை செய்.. அதை செய்யுன்னு ஆர்டர் போட்டிருக்கா , வந்ததும் கேட்டான்னு வை நீயும், நானும் தான் திட்டு வாங்கணும் . பேசாம வந்து வேலையை பாரு அம்பிகா ” என்று பவித்ரா உள்ளே சென்றுவிட..
“நீ சொல்றதும் சரி தான் பவி.. இவகிட்டே மனுஷன் திட்டுவாங்கனுவானா?” என்று அவள் பின்னே சென்றுவிட்டாள்.
டிரைவர் வந்து அனைவரின் லக்கேஜுகளையும் வைத்துவிட்டு சென்றுவிட..
வீட்டிற்குள் நுழைந்த இளங்கிளி, கயல் இருவரும் அந்த வீட்டை ஆராய்ச்சியாகப் பார்த்தனர். “ம்ம்.. நல்லா தான் வீட்டை வெச்சிருக்கா இவ..” என்று சுற்றிலும் பார்த்த படி சொன்ன கயல் திரும்பி ரக்ஷணாவைப் பார்த்தாள்.
அவளோ ராவணுடன் கையைக் கோர்த்துப் பிடித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவள் “ராவண் ரொம்ப பசிக்குது “என்று தன் மேடிட்ட வயிற்றை தொட்டுக் காட்டி சொன்னாள்.
“நீ பிரெஷப் ஆகிட்டு வா ரக்ஷு.. நான் பவித்ரா சமைச்சிட்டாளான்னு கேக்குறேன் ” என்று மென்மையாகப் பேசியவன் ஓரக்கண்ணால் இளங்கிளியைப் பார்க்க..
அவளோ இந்த காட்சியைக் கண்டு எரிச்சலுற்றாலும், அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக நின்று இருந்தாள்.
“இவ அமைதியா இருக்கறதைப் பார்த்தா ஏதோ சரி இல்லேனு தான் தோணுது எனக்கு” என்று நினைத்தான்.
“உங்களுக்கும் டையர்டா இருக்குமே ராவண் நீங்களும் வந்து பிரெஷ் ஆகிக்கோங்க ” என்றாள்.
“ம்ம்.. வரேன். முதல்ல நீ போய் ரெடியாகு” என்றான்.
“சரி ” என்று அவனிடம் பல்லைக் காட்டிக்கொண்டே அறைக்குள் செல்லப் போனாள் ரக்ஷனா.
“ஹலோ ஒரு நிமிஷம் “என்று அவளை சொடக்கிட்டு அழைத்தாள் இளங்கிளி,
அவளை திரும்பி ரக்ஷனா பார்க்க..
அவளை பார்த்துக்கொண்டே ஒய்யார நடை போட்டு ராவணிடம் நெருங்கி வந்து நின்றவள் . அவன் கையைப் பற்றி தன் கைக்குள் கோர்த்துக்கொண்டு ” நீ அந்த ரூம்ல போய் பிரெஷ் ஆகிட்டு வா.. எங்களுக்கும், கயலுக்கும் தனித்த தனி ரூம் வேணும் . எந்த ரூம் எடுத்துக்குறது ” என்றாள்.
“அடி சக்கை அக்கா வந்ததும் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க ” என்று கயல் வாயை பொத்திக்கொண்டு சிரிக்க..
அதை ரக்ஷணாவும் கண்டு கொண்டவள் அவளை முறைத்துவிட்டு இளங்கிளியிடம் அதே பார்வையை வீசியவள் “நீயும், கயலும் அதோ அங்க இருக்கே அந்த ரூம்ல தங்கிக்கோங்க” என்றாள்.
“ஹலோ.. நான் எனக்கும், என் புருஷனுக்கும் தனி ரூம் கேட்டேன். அப்பறோம் கயலுக்கும் தனி ரூம் வேணும் ” என்றாள்,
“இங்க பாரு உன் இம்சை தாங்காம தான் நான் எனகக கூட உன்னை கூட்டி வரவே சம்மதிச்சேன். வந்த இடத்துல வாயை மூடிட்டு நான் கொடுக்குற ரூம்ல அவ கூட போய் தங்கு. ராவண் என்னோட புருஷன் அதுக்கான ஆதாரமும் என்கிட்டே இருக்கு. உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது” என்றவள்.
“ராவண் அவ தான் லூசு மாதிரி பேசிட்டு இருக்கான்னா நீங்களும் அவளோட நின்னுட்டு இருக்கீங்க.. வாங்க இப்படி ” என்று அவளை தன் பக்கம் கையைப் பிடித்து இழுத்தாள்.
ராவனோ வேறு வழி இல்லாமல் ரக்ஷனாவின் இழுப்பிற்கு அவளிடம் சென்றான்.
இளங்கிளி ரக்ஷனாவின் செயல் ஆத்திரத்தை மூட்டினாலும் பொறுத்துக்கொண்டவள் “கயல் வாடி “என்று தன் பையை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கொடுத்த அறைக்குள் சென்றுவிட..
கயலும் இளங்கிளியின் பின்னால் சென்றாள்.
இதை எல்லாம் கிச்சனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பவித்ராவும், அம்பிகாவும் வாயில் கையை வைத்துக்கொண்டனர்.
“ஏன் டி என்ன இது அவ புருஷனை புதுசா வந்தவ இழுத்து வெச்சுட்டு அவன் கூட தனியா ரூம் வேணும்னு கேக்குறா.. இவளும் அவளை துரத்தாம அவ புருஷனை பிடிச்சு பக்கத்துல வெச்சிருக்கிட்டா . என்ன டி நடக்குது இங்க.. ” என்றால் அம்பிகா.
“எனக்கும் அது தான் டி தெரியல.. ” என்றவள் “இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் நமக்கு எதுக்கு வம்பு நீ வா ” என்று அவளை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றுவிட்டாள்.
அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு காலை உணவை சாப்பிட்டு முடித்ததும் அவரவர் அறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டனர்.
மூன்று வேலையும் அதே போல தான் நடந்தது,
இரவு அனைவரும் தூங்க சென்றுவிட . ரக்ஷ்னாவின் அறையை வந்து வேகமாக யாரோ தட்ட. .
அப்போது தான் படுக்க சென்ற ரக்ஷனா ராவனைப் பார்க்க..
“நீ இரு நான் பாக்குறேன் ” என்று எழுந்து சென்று கதவை திறக்க..
அங்கே அவர்கள் அறை முன்பு தலையணை பார்வையுடன் நின்றிருந்த இளங்கிளி. ராவண் கதவைத் திறந்ததும் அவனை தாண்டி உள்ளே சென்றவள் ரக்ஷனாவின் அருகே சென்று தலையணையைப் போட்டவள் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட..
“ரைட்டு.. இன்னிக்கு நைட் நான் தூங்குன மாதிரி தான் ” என்ற ரீதியில் இருவரையும் பார்த்தான்
அடுத்து என்ன ஆகப் போகுது நாளைக்கு பார்க்கலாம்
