News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியன் 1

by Layas Tamil Novel
1.6K views
A+A-
Reset

வெறியன் 1

அந்த பெண்ணை மாலாவின் இடத்தில இருந்து கூட்டி சென்ற ஐராவதன் அவளை அழைத்து சென்றது என்னவோ அந்த பெரிய வீட்டிற்கு தான்.

அவ்வளவு நேரம் அவனுடன் அமைதியாக வந்த அந்த பெண் அந்த பெரிய வீட்டிற்கு செல்லும் சாலைக்கு அவன் போலீஸ் ஜீப் திரும்புவதை பார்த்தவள் பதறிவிட்டாள்.

சட்டென்று பின்னிருந்து எட்டி ஐராவதனின் புஜத்தை பற்றி இழுத்தவள் “சார், என்னை இங்க எதுக்கு கூடி வந்திங்க. அதுக்கு பேசாம நான் அந்த வீட்லையே இருத்திருப்பேனே.. ” என்று அழுதுகொண்டே கேட்டாள்.

அவள் அபப்டி சொல்லவும் சிவாவும் கையை நீட்டி ஜீப்பை நிறுத்த சொன்னவன் திருப்பி தன் மேல் இருந்த அவள் கையை பார்த்துவிட்டு அவளை பார்த்தான்.

சட்டென்று அவன் மேல் இருந்து கையை எடுத்தவள் அழுதுகொண்டே அவனை பார்க்க..

“அது உன் வீடு தானே , ஏன் அங்க போக இவ்ளோ யோசிக்குற” என்றான் திரும்பி .

“சார் இது என் வீடு இல்ல.. என் அம்மாவும் , நானும் இந்த வீட்ல தான் வேலை பார்த்துட்டு இருந்தோம். என் அம்மா இறந்து போனதும் அங்க இருக்க அந்த வீடு பசங்க என்கிட்டே தப்ப நடந்துக்க பார்த்தாங்க . அவங்ககிட்டே இருந்து தப்பிக்க நினைச்சு வெளியே வந்த அப்போ தான் அந்த குமார் கையில் நான் மாட்டிகிட்டேன்” என்று அழுகையினூடே சொன்னாள் அவள்.

அவள் சொன்னது கேட்டு அதிர்ந்தவன் அவள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தவன் “சிவா நீ வண்டியை அந்த வீட்டுக்கு விடு” என்றான்.,

அதை கேட்டு அதிர்ந்த அந்த பெண் “சார் ” என்று அழுதாள்.

ஐராவோ எதுவும் பேசவில்லை அவர்கள் வந்த செய்தி செகிரியுரிட்டி மூலம் உள்ளே இருப்பவருக்கு தெரியவர..

கதவு அவர் அனுமதித்த பின் திறக்கப்பட்டது.

அந்த பிரமாண்ட கேட் திறக்க.. ஜீப் உள்ளே நுழைந்தது.

“சார் தயவு செஞ்சு என்னை விட்ருங்க சார் .நான் எங்கையாவது போயிறேன் , மறுபடியும் என்னை இந்த் நரகத்துக்குள்ள கூப்டு போகாதீங்க  ” என்று அவன் பனியனை பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

அவள் பேசியது எதுவும் காதில் வாங்காமல் அமர்ந்து இருந்தான் ஐரா.

சிவாவுக்கும், அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து இருந்த பெண் கான்ஸ்டபிள்கள் இருவருக்கும் அவள் அழுவதை பார்த்து மனது தாங்கவில்லை. அவனிடம் அவளுக்காக பேச யாருக்கும் தைரியமும் இல்லை.

அந்த பிரமாண்ட வாயில் முன் வந்து அவன் ஜீப் நின்றது. பின்னால் திரும்பி வா என்றான்.

அவள் கலங்கிய கண்களுடன் “சார்! ” என்றாள்

“என்ன பாத்துட்டு இருக்கீங்க அவளை கூப்டு உள்ள வாங்க” என்று அவன் இறங்கி வேகமாக உள்ளே செல்ல..

அந்த பெண்ணோ என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

“வாம்மா வந்து இறங்கு இந்த கேஸ் வேற யார்கிட்டேயும் போய் இருந்தா கூட உன்னை காப்பாத்த வாய்ப்பு இருந்திருக்குமோ என்னவோ . இந்த ஆளு எந்த நேரத்துல என்ன நினைக்குறேன். என்ன பண்ணுவானே தெரியல.. இவன்கிட்டே கெஞ்சியும் ஒரு வேலையும் ஆகாது ” என்று ரேணுகா சொன்னார்.

“ஆமா டி ரேணுகா பாவம் இந்த புள்ள , அந்த மாலாகிட்டே இருந்து தப்பிச்சான்னு நான் நினைச்சேன். ஆனா என்னடான்னா இந்த ஆளு பாரு அங்க இருந்து காப்பாத்தி இங்க கூப்டு வந்திருக்கான் ” என்றாள் காஞ்சனா .

“சாவி அக்கா, பேசாம வாங்க சார் காதுல விழப்போகுது ” என்று சிவா அதட்ட..

“அடபோடா.. பொம்பளைங்க பாடு இங்க எந்த ஆம்பளைக்கு புரியப்போகுது” என்ற சாவித்ரி “நீ இறங்கு ம்மா..” என்று தன்னோடு அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

வேறு வழியே இல்லை தன் நிலை இனி அவ்வ்ளவு தான் என்று எண்ணியபடி அவர்களோடு உள்ளே சென்றாள்.

உள்ளே வந்தவளை பார்த்து அந்த வீட்டின் பெண்மணி சாவித்திரிஓடி அவளிடம் வந்தவர் “பனி!.. வாடி வந்துட்டியா ” என்று ஒரு பெண் வந்து அவளை கட்டிக்கொள்ள…

“பனியா!?  அப்படி ஒரு பேரு இருக்குதோ.. ” என்று நினைத்தபடி அவர்களை பார்த்தான் ஐரா.

அந்த பெண்ணை பார்த்ததும் பதறியவள் “அம்மா என்னை தயவு செஞ்சு விட்ருங்க நான் எங்கையாவது போய்டுறேன்” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

“என்ன டி இப்படி சொல்லிட்டே.. நம்ம வீடு டி இது. இங்க இருந்தா தான் நீ நல்லா இருப்ப,. ” என்றவர் “ஏங்க நீங்க ஆசைப்பட்ட மாதிரி அந்த தம்பி நம்ம பனிமதியை கூப்டு வந்துட்டாரு” என்றார்.

அந்த பெண் உள்ளே குரல் கொடுக்கவும். அப்போது உள்ளே இருந்து வந்தார் அந்த வீட்டின் தலைவர்

முத்துவடுகன். அவரைப் பார்த்ததுமே பனிமதி அரண்டு பின்வாங்கினாள்.

அதை ஐராவும் கவனித்தான்,

“என்ன பனி இது என் புள்ளைய இப்படி அம்போன்னு விட்டுட்டு நீ பாட்டுக்கு போயிட்ட , அவன் நீ இல்லாம எவ்ளோ கஷ்டப்ட்றான் தெரியுமா” என்றார் மிகவும் நல்லவர் போல..

“ஏன் சார் , உங்க பையனுக்கு என்ன ஆச்சு ?” என்றான் ஐரா.

“அது ஒண்ணுமில்ல தம்பி இவளை என் சின்ன மவனுக்கு கல்யாண பண்ணி வெக்க பேசி இருந்தோம் , ஆனா இவ சொல்லாம கொள்ளாம இந்த வீட்டை விட்டு ஓடிபோய்ட்டா, அதனால தான் உங்ககிட்ட இவளை அழைச்சு வர காசு கொடுத்தேன்” என்றார்.

அவர் சொன்னது கேட்டு திரும்பி பனிமதியை பார்த்த ஐரா.

“அவர் பையனோட உனக்கு கல்யாணம் செய்து வெக்க தானே கேக்குறாரு . இவங்களும் நல்லவங்க மாதிரி தானே இருக்காங்க, அப்பறோம் ஏன் இங்க வர பயப்பட்ட நீ” என்றான் ஐரா .

அதே கேள்வி தான் ஐராவுடன் வந்த மற்ற கான்ஸ்டபிள்களுக்கும் தோன்றியது.

“ஐயோ நீங்க நினைக்குற மாதிரி இவங்க குடும்பம் நல்ல குடும்பம் கிடையாது , இவர் பையனும் நல்லவன் கிடையாது. தயவு செஞ்சு என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க ” என்று ஐராவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள்.

“ஹேய்! ஆமா டி என் மவன் நல்லவன் இல்ல தான் , அதுக்கு என்ன இப்போ. ஏன் அவனை கல்யாணம் செய்துக்க முடியாது உன்னால. அவன்கிட்டே என்ன குறையை கண்டுபிடிச்ச நீ. “என்றார் காஞ்சனா அதட்டலாக.

அதுவரை அமைதியாக இருந்தவர் தன் சுயரூபம் காட்ட…

“அம்மா தயவு செய்து அந்த கொலைகாரனுக்கு என்னை கழுத்தை நீட்ட சொல்லாதீங்க . என்னால முடியாது” என்று கெஞ்சி அழுதாள் பனிமதி.

“சரி கழுத்தை நீட்ட வேணாம் , தாலி கட்ட வேணாம். ஆனா என்கூட வந்து நீ இரு போதும்.  எனக்கு வேற ஒரு பணக்கார குடும்பத்துல இருந்து சம்மந்தம் வந்திருக்கு, அவளை கட்டிக்கிறேன் . உன்னை வெச்சுக்கிறேன்” என்று உள்ளே இருந்து வந்தான் அந்த வீட்டின் இளைய வாரிசு பைரவன்.

அவனை கண்டு மேலும் பின் வாங்கிய பனி “இல்ல.. எனக்கு இங்க இருக்க வேணாம். நீங்க உங்க முதல் சம்சாரத்தை கழுத்தை நெறிச்சு கொன்ன மாதிரி என்னையும் கொன்னுருவிங்க” என்று பின்வாங்கினாள்.

“ஆமா உன்கூட ஆசையா சந்தோசமா இருக்கலாம்னு வந்தா அந்த கேடு கெட்டவ குறுக்க பூந்து நியாயம் பேசினா . எனக்கு கோவம் வந்துச்சு அதான் ஒரே போடா அவளை போட்டுட்டேன் . அந்த நேரம் பாத்து நீயும் தப்பிச்சுட்ட. ” என்றவன்.

“நீ வாடி நாம போகலாம் ” என்று பனிமதியின் கையை பிடித்தவன் “அப்பா இந்த போலீசுக்கு எவ்ளோ பணம் வேணுமோ அதை கொடுத்து அனுப்பிரு . நாம கேட்டதும் இவளை கொண்டு வந்து நம்மகிட்டே ஒப்படைச்சிட்டான் என்றான் பனியை இழுக்க..

அவளோ அவன் இழுப்பிற்கு செல்லாமல் அப்படிய நின்று இருந்தாள்.

“அவ்ளோ ஸ்ட்ரோங்கா நீ” என்று கேட்டுக்கொண்டே திரும்பிய பைரவன் அவளின் மற்றொரு கையை பற்றி தன் பக்கம் நிறுத்தி இருந்த ஐராவதனைப் பார்த்தான்.

“என்னய்யா அவ கையை பிடிச்சிட்டு இருக்க. விடு அவ கையை ” என்றான் அவன்.

“எப்பவும் விருப்பம் இல்லாத பொண்ணை தொடக்கூடாது சார்”என்றவன் “என்ன பனி , நான் சொல்றது சரிதானே” என்று அவள் பக்கம் திரும்பியவன் போட்டிருந்த கூலர்ஸ்சினூடே அவளை பார்த்த்து கண்ணடித்தான்.

அவனை அதிர்ந்து பார்த்த பனியோ பதில் சொல்ல தெரியாம விழிக்க..

“என்ன டா போலீஸ் , வந்த வேலை முடிஞ்சா போயிட்டே இருக்கனும். இங்க என்ன அவளுக்கு நீ வக்காலத்து வாங்கிட்டு இருக்க.. ” என்று அவன் பனியனை பற்றி இழுத்தான் பைரவன்.

தன்னை தொட்ட கையை அப்படியே ஒற்றைக்கையால் பிடித்து திருகியவன் “அதான் வேணாம்னு சொல்றா இல்ல அவ அப்பறோம் என்ன விடுங்க சார் ” என்றான் அவனை முறைத்துக்கொண்டே.

“டேய் போலீஸ் எவ்ளோ தைரியம் இருந்தா என் புள்ள மேல கையை வெப்ப ” என்று முத்துவடுகன் மீசையை முறுக்கிக்கொண்டு முன்னே வர…

“கையை இல்ல சார் உன் பையன் மேல என் காலையே வெப்பேன்” என்றவன் அவனை அப்படியே முதுகில் தன் பூட்ஸ் காலால் உதைத்து கீழே தள்ளியவன். “இந்த பொண்ணு அப்பவே சொன்னா இங்க வர வேணாம்னு  ,நான் தான் அவளை நம்பள.. இப்போதான் நேரலையே பாத்துட்டேனே” என்றவன் “நீ வா நாம போகலாம் ” என்று ஐரா முன்னே நடக்க. .

“டேய்.. ” என்று பைரவன் எழுந்து அவனை நோக்கி ஆவேசமாக நடந்து வர..

“ரொம்ப சவுண்ட் கொடுக்கிறான் இல்ல காஞ்சனா ” என்று காதை குடைந்தவன் திரும்பி அவனை பார்த்து “சொல்லிகிட்டே இருக்கேன் காதுக்குள்ள வந்து கத்துற.. ” என்று அவன் கழுத்தை பிடித்து தள்ளிக்கொண்டே அங்கே இருந்த சுவற்றில் அழுத்தி நிற்க வைத்தவன் “அந்த பொண்ணு தான் உன்ன பிடிக்கலையின்னு சொல்றா இல்ல… “என்று கத்தினான்.

“டேய் அவ நான் தொட நினைச்சவ டா. அவ்ளோ லேசுல அவளை நான் உன்கூட கூப்டு போக விடமாட்டேன் ” என்று பதிலுக்கு பைரவனும் கத்த..

“முடிஞ்சா தடுத்து பாரு டா ” என்றான் ஐராவதன்.

“டேய் என்னை பத்தி தெரியாம, நான் யாருன்னு புரியாம தேவை இல்லாம என் மேல கையை வெச்சிட்ட.. இதுக்கு நீ அனுபவிச்சே தீருவ.. ” என்று சீறினான் பைரவன்.

“அது வர அப்போ பாத்துக்கலாம் “என்ற ஐரா தன் கை முஷ்டியை மடக்கி அவன் அவன் முகத்தில் ஓங்கி குத்த அந்த ஒரு குத்துக்கே அவன் மூக்கில் ரத்தம் வழிய மயங்கி தரையில் சரிந்தான்.

“ஐயோ என் புள்ள.. ” என்று காஞ்சனா பதறிக்கொண்டு அங்கு வர..

ஐராவை முறைத்துக்கொண்டிருந்த முத்து வடுகனைப் பார்த்தவன் “இந்த பொண்ணு என்கூட , என் கஸ்டடியில் தான் இனிமேல் இருக்க போறா. உங்க பபையனை வேணும்னா வந்து என்னை மீறி கூப்டு போக சொல்லுங்க.. ” என்று விட்டு விருட்டென திருப்பியவன் பனிமதியை பார்த்து தன்னுடன் வர சொல்லி கண்ணை கட்டிவிட்டு அங்கிருந்து நடந்தான்.

“ஒரு பொருக்கி ஒரு போலீஸ் உடையில் இருக்க இன்னோரு பொறுக்கிகிட்டே நெஞ்சை நிமித்திட்டு பேசுறான் , நம்ம சாரை பத்தி அவனுக்கு இன்னும் முழுசா தெரியல.. ” என்று ரேணுகா காஞ்சனாவிடம் கூற..

சிவாவோ நீங்க வாயை வெச்சிட்டு சும்மா இருந்தா உங்களுக்கு நல்லது இல்லேன்னா அவன் தொங்குற மாதிரி உங்களஉங்களையும் அந்தரத்துல தொங்க விட்டிருவார் என்று சிரித்தான் .

“சிவா.. ” என்று ஐரா குரல் கொடுக்க..

மற்றவர்கள் முன்னே செல்ல… பனியை பின்னால் ஏற சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தான் ஐராவதன்

ஐரா கஸ்டடியில் பனி இருக்கப்போறாளா? இல்ல பனியோட கஸ்டடியில் ஐரா இருக்கபோறானா? தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க..

மறக்காம லைக், கமெண்ட் பண்ணுங்க பிரெண்ட்ஸ்

You may also like

1 comment

Dhanalakshmi August 30, 2026 - 11:27 am

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.