மூர்க்கன் 28
“என்ன டி நானும் காலையில் இருந்து பாக்குறேன் நீயா சிரிக்குற.. நீயா தலையில அடிச்சிக்குற.. அடிக்கடி வெளியே போற.. உள்ள வர.. என்ன டி நடக்குது எனக்கு ஒன்னும் புரியலையே” என்று காய்களை கழுவிக்கொண்டு இளங்கிளியிடம் காமாட்சி கேட்டார்.
அவர் சொல்லவும் தான் காலையில் எழுந்ததில் இருந்து இப்போதுவரை தான் ராவணைப் பற்றி நினைத்து வெட்கத்தில் சிரித்துக்கொண்டது எல்லாம் காமாட்சி பார்த்துக்கொண்டிருந்தார் என்று உணர்ந்தாள்.
“அது.. அதுவா , நான் காலையில டிவியில் ஒரு படம் பார்த்தேன்க்கா அதான் அதை நினைச்சுட்டு இருந்தேன்” என்று சமாளிக்கப் பார்த்தாள்.
“நீ பார்த்தது அந்த மாதிரி ஜிஜுலிப்பா படம் தானே.. ” என்று அங்கு வந்தான் ராவண்.
அவன் குரல் கேட்டதும் வாசலைப் பார்த்த இளங்கிளிக்கு வெட்கம் வந்துவிட.. அவனைப் பார்த்து வெட்கப்புன்னகை பூத்தாள். ராவணும் இளங்கிளியை ஆசையும், காதலுமாக நின்றிருந்தான்.
அவனை ஏகத்துக்கும் முறைத்த காமாட்சி. “பொம்பளைங்க இருக்க இடத்துல என்ன தம்பி இப்படி எல்லாம் பேசுறிங்க ” என்று சிடுசிடுத்தார்.
“ஏன் பொம்பளைங்களுக்கு இதெல்லாம் தெரியாதா? என்ன?” என்று வம்பு பேசினான் காமாட்சியிடம்.
அவனை அதிர்ந்து பார்த்த காமாட்சி “என்ன ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க” என்றார்.
“வேற எப்படிப் பேசுறது.. ” என்று சமையலறைக்குள் நுழைந்தான்.
“எது பேசினாலும் இப்படி விதண்டாவாதம் பேசினா என்ன அர்த்தம். இப்போ எதுக்கு இங்க வந்திங்க. அதை சொல்லுங்க முதல்ல ” என்றவர் “வந்ததுல இருந்து பேச்சு மட்டும் தான் அங்க. கண்ணு பூரா அந்த புள்ளை மேல தான்” என்று முணுமுணுத்தார்.
“நீங்க கேட்டதுக்கு பதில் வந்திருச்சு இல்ல.. நான் எங்க பார்த்தா உங்களுக்கு என்ன ‘ என்றான்.
“எனக்கு என்னவா? வந்ததுல இருந்து கனி பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க நீங்க . அன்னிக்கே நான் சொன்னேன் இல்ல. இவளை தொந்தரவு செய்யாதிங்கன்னு. ஏன் கேக்கவே மாட்டேங்குறீங்க.. வந்து இருக்க நாலு நாளுல நீங்க பாட்டுக்கு எதையாவது பண்ணிட்டு போய்ட்டா இந்த புள்ளையோட நிலைமையைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா நீங்க” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் மீண்டும் மீண்டும் இளங்கிளியின் மீது அன்பும், அக்கறையும் காட்டுவதைக் கண்டா ராவண் நெகிழ்ந்து போனான், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் அவனுக்குத் தோன்றியது, நிச்சயமாக இளங்கிளி கஷ்டப்படும் வேளையில் காமாட்சி அவளுக்கு பக்கபலமாக இருந்திருப்பார் என்று ராவண் அழுத்தமாக நம்பினான்.
“எப்படி காமாட்சி நீங்க இப்படி இருக்கீங்க.. ‘ என்று அவரை நெருங்கினான்.
அவருக்கோ ராவண் கிட்டே வரவும் தூக்கி வாரிப் போட்டது. “தம்பி.. என்ன .. என்ன கிட்ட வரீங்க” என்று பின்வாங்கினார் .
“நீங்க உங்க கனி மேல காட்டுற அக்கறையைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருக்கு . அதான் இவ்ளோ அக்கறை காட்டுற உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும் போல இருக்கு ” என்று கைகளை பரபரவென தேய்த்துவிட்டபடி குனிந்து அவரைப் பார்த்தான்.
“நீங்க எதுவும் செய்ய வேணாம். தயவு செய்து இங்க இருந்து போங்க. அந்த புள்ள பின்னாடி இனி வராதீங்க” என்று பின்னால் சென்றார்.
“நீங்க சொன்னா நான் கேட்கணுமா ” என்று மேலும் ராவண் அவரை நெருங்க..
“ஐயோ இந்த புள்ளைக்கு புரிஞ்சு பேசப் போய் இப்போ இவன் என்கிட்டே இல்ல வாரான். நான் என்ன பண்ணுவேன் “என்று கைகளை மார்புக்கு கொண்டு சென்று குறுக்கிக்கொண்டே பின்னால் நகர்ந்தவர் சுவற்றில் இடித்துக் கொண்டு நிற்க..
அவரை குறும்புப் புன்னகை செய்யப் பார்த்தவன் “பேசாம கனியை நான் வெச்சுக்கவா ?” என்று அவர் காதோரம் குனிந்து கேட்டான்.
அதில் அதிர்ந்த காமாட்சி “நீங்க தப்பா பேசுறீங்க , உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே.” என்றார் இன்னமும் அதிர்ச்சி மாறாமல்.
“அதனால தானே வெச்சுக்கறேன்னு சொல்றேன் ” என்றவன் திரும்பி இளங்கிளியைப் பார்க்க.
ராவண் வேண்டுமென்றே காமாட்சியைக் கிண்டல் செய்கிறான் என்று அவ்ளுக்குப் புரிந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவள் வேலை செய்வது போல பாவனை செய்ய.. ராவணும் சிரித்துக்கொண்டே திரும்பியவன்
“நீங்க தான் கனி பாவம்னு சொல்றிங்க.. ஆனா பாருங்க உங்க கனி நான் பேசுறதை எல்லாம் கேட்டும் எதுவும் பேசாம அமைதியா இருக்காளே..” என்று அவளைப் போட்டுக்கொடுத்துவிட்டான்.
சட்டென திரும்பி இருவரையும் பார்த்த இளங்கிளி ராவணை முறைக்க..
“அப்படி எல்லாம் எதுவுமில்லை, அங்க பாருங்க கனி உங்களை முறைச்சிட்டு தான் இருக்கா. நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் அவ கிடையாது, கனிமொழி நல்ல பொண்ணு” என்றார் காமாட்சி.
“அப்படியா! அப்போ உங்க கனி இருக்காங்களே அவங்க நல்ல பொண்ணா? இல்ல கெட்ட பொண்ணான்னு இப்போ செக் பண்ணிடலாமா ?” என்று திரும்பி இளங்கிளியைப் பார்த்தான்.
அவளோ ராவண் பேசியத்தைக் கேட்டு அதிர்ந்தவள் அவனிடம் எதுவும் விபரீதமாக செய்துவிட வேண்டாம் என்று கண்களை அகல விரித்து புருவத்தை ஏற்றி இறக்கி அவனை எச்சரிக்கை செய்தாள்.
அவள் எச்சரிக்கையைப் பார்த்த பின்னும் அமைதியாக இருக்க அவன் சாதாரணமானவன் அல்லவே…
காமாட்சி ராவண் என்ன செய்யப் போகிறானோ என்று பதறியவர் “அப்படி எல்லாம் எதுவும் பண்ண வேணாம்., எங்க கனியைப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெறியும். நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க ” என்று வாசல் பக்கம் கையைக் காட்டி அவனை அங்கிருந்து போகச் சொன்னான்.,
“அதெப்படி நான் சொன்னதை ப்ரூப் பண்ணாம போவேனா ” என்றவன் அடுத்த நொடி இளங்கிளியின் பக்கம் திரும்பியவன் வேக வேகமாக நடக்க…
அவளோ வேண்டாம் என்று சொல்லியும் ராவண் அவளை நோக்கி வரவும் காய்கள் நறுக்கிக்கொண்டு இருந்த கத்தியை அவனை நோக்கி நீட்டியவள் “பேசாம போங்க.. இல்ல.. நடக்குறதே வேற… ” என்று அவனை மிரட்டினாள்.
“ஓஹ்! என்னையே குத்திருவியா நீ… எங்க குத்து பாப்போம் ” என்று அவளை நெருங்கி இருக்க..
கையில் வைத்திருந்த கத்தியை இறுக்கப் பிடித்து இருந்தவள் “சொன்னாக் கேளுங்க.. காமாட்சி அக்கா என்ன நினைப்பாங்க.. ” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.
“ம்ஹும்… “என்று அவளை நெருங்கியவன் இளங்கிளியின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.
அவன் கையைப் பற்றிய அடுத்த நொடி அவள் கையில் இருந்த கத்தி கீழே நழுவி விழுந்திருக்க…
ராவனோ இழுத்த வேகத்தில் அவள் கழுத்தைப் பற்றி அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி இருந்தான்.
காமாட்சிக்கோ தூக்கி வாரிப் போட்டது. “ஐயோ! ” என்று அவர் அலறியே விட்டார்.
வாயில் கை வைத்தபடி ராவண் செய்த காரியத்தை நம்பமுடியாமல் பார்த்தார் . இளங்கிளியோ ராவணின் இந்த சேட்டையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் மாட்டிக்கொண்ட தன் கைகளை விடுவிக்க போராட..
அவனோ அதை கண்டுகொள்ளாமல் முத்தம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.
இந்த் காட்சியைக் கண்ட காமாட்சியோ இலங்கிலியின் விருப்பம் இன்றி தான் ராவண் அவளுக்கு முத்தம் கொடுக்கிறான் என்று தவராகப் புரிந்து கொண்டவர்
“இவனை சும்மா விட்டது என் தப்பா போயிருச்சு.. இரு டா உன்னை.. ” என்று சுற்றிலும் தேடியவர் கீழே இருந்த அருவாமனையை எடுத்தவர் ராவணை அதைக் கொண்டு தாக்குவதற்காக அவனை நோக்கி வேகமாக கையை ஓங்கிக்கொண்டு செல்ல..
அப்போது அவர் கண்ட காட்சி ஆதற்கு மேல் அவரை அங்கே நிற்க விடாமல் அந்த சமையலறையை விட்டு போகச் செய்திருந்தது , அதற்கு காரணமே இளங்கிளி தான். அவனிடம் இருந்து தன் கையைப் பிரிக்கப் போராடியவள் கையை அவனிடம் இருந்து விடுவித்த அடுத்த நொடி ராவணை இறுக்கி அணைத்து இருந்தாள்.
அவன் முத்தம் அவ்வளவு தீவிரமாக ஆளுமையாக இருந்தது. அவளால் அதற்கு மேலும் தன் உணர்வுகளைக் காட்டுபடுத்த முடியவில்லை., அவளை இந்த நிலைக்கு தள்ளியதே ராவணன் தானே.. அவனுக்கு தெரியாதா இளங்கிளியை எப்படி தன் கைக்குள் கொண்டு வருவது என்று..
இளங்கிளி ராவணைக் கட்டிக்கொண்டு அவனுக்கு பதில் முத்தம் வழங்குவதை பார்த்து முகத்தை சுளித்த காமாட்சி ஓங்கிய கையை கீழே இறக்கிவிட்டு கையில் இருந்த அரிவாள்மனையை கீழே போட்டுவிட்டு வெளியேறி இருந்தார்.,
‘
இருவரின் முத்தமும் மிகத் தீவிரமாக இருந்தது., சுற்றம் மறந்து தங்கள் முத்தத் தேடலை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்க.,.
இங்கே சமையல் அறையில் இருந்து வெளியே வந்த காமாட்சி ஒருவித கலக்கத்தோடு நின்றிருந்தார்,
அவருக்கு என்ன செய்வது , என்ன நடக்கிறது என்று அதுவும் புரியவில்லை. கைகளை பிசைந்து கொண்டு உள்ளே நடக்கும் விஷயத்தை யாரிடம் போய் சொல்வது.. அப்படி சொன்னாள் எல்லோரும் இளங்கிளியைத் தானே தப்பாக நினைப்பார்கள் என்று யோசித்தவர் “இப்போ அவ என்ன பண்ணிட்டு இருக்கா, இன்னொருத்தி புருஷன்னு தெரிஞ்சும் அவனை கட்டிபிடிச்சிட்டு.. முத்தம் வேற.. ” என்று நினைத்தவர் “ச்சே .. இது என்ன கனி இப்படி பண்ணிட்டா. நான் இவளுக்காக எவ்ளோ பேசினேன் , அதெல்லாம் பொய்யின்னு நிரூபிச்சிட்டாளே..” என்று புலம்பியபடி நின்று இருக்க.
அப்போது அங்கே வந்த ரக்ஷணா “யேய் காமாட்சி.. என் புருசனைப் பார்த்தியா?” என்றாள் அதிகாரமாக.,
அவரா உள்ள தான் இருக்கார் போய்ப் பாரு என்று கடுப்பில் சொன்னவர் “என்ன பொண்ணு நீ.. உன் புருசனைக் கைக்குள்ள போட்டுக்கத் தெரியாது? இப்போ பாரு உன்னோட வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ.. ” என்று மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டு சொன்னவர் “கடவுளே இங்க நடக்குறத்தை எல்லாம் என்னைப் போய் பாக்க வெச்சுட்டியே” என்று புலம்பியபடி அங்கிருந்து சென்றுவிட..
“ஏய் நில்லு.. நான் உன்கிட்டே என்ன புருஷன் எங்கேன்னு கேட்டேன் . நீ எதுவுமே சொல்லாம கிளம்பிப் போனா என்ன அர்த்தம் “என்றாள் எரிச்சலாக.
“ம்ம்.. உன் புருஷனை நான் என்ன என் மடியில்லையா கட்டிட்டு இருக்கேன். அவன் சமையல் காட்டுல என்ன பண்ணிட்டு இருக்கானு நீயே போய்ப் பாரு.. ” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட..
சமையல் ரூமலையா ? அங்க தானே அந்த வேலைக்காரி இருக்கா?” என்றவள் அவசர அவசரமாக கிச்சனை நோக்கி ஓட..
அவள் வருவது தெரியாமல் மிகத் தீவிரமாக இன்னமும் முத்தம் பரிமாறிக்கொண்டது இரு ஜோடியும்.
ரக்ஷ்ணாவிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு படத் போகிறாளோ.. அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்./
இன்னிக்கு குட்டி ஸ்டோரி தான் போட்டிருக்கேன். நாளைக்கு அடுத்த எபி போஸ்ட் பண்றேன்
