தப்பு 18
“என்ன டி இவ இங்க இருந்து போன அப்போ வத்தலும் , தொத்தலுமா போனா.. ஆனா இப்போ இவை வந்திருக்குறதை பார்த்தா அப்படித் தெரியலையே . கேரளாவுக்கு நம்ம யுகேனுக்கு டிரீட்மென்ட் எடுத்துக்க தானே போனாங்க. ஆனா இவ வந்திருக்குறதைப் பார்த்தா இவளுக்கு தான் ட்ரட்மெண்ட் நடந்த மாதிரி இல்ல இருக்கு.. ” என்றார் பர்வதம் ஆயாவிடம்.
“ம்மா அதனால என்ன இப்போ. யுகேன் மாமாவுக்கு டிரீட்மென்ட் பாக்குற அப்போ பூவிழிக்கும் பாத்திருக்கலாம் .அவங்களுக்கும் இது நல்லது தானே.. நீ ஏன்மா இப்படி இருக்க..” என்று அவரை முறைத்தாள் ஆரா.
“சும்மா அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காத, இந்த நேரம் அவ இருக்க வேண்டிய இடத்துல நீ இருந்திருக்கணும் , என் அண்ணா தான் அவசரப்பட்டு அந்த வேலைக்காரியை நம்ம யுகேனுக்கு கட்டி வெச்சிட்டாரு” என்று தான் நினைத்திருந்ததை ஆராவிடம் சொல்லிவிட..
“ம்மா.. ” என்று அவரைத் திரும்பி முறைத்தவள் “எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் எதுவும் இல்ல.. நீ சும்மா எதையாவது உளறிட்டு இருக்காதே” என்றவள் வீட்டிற்குள் வந்த யுகேனிடம் சென்றவள் “மாமா டிரீட்மென்ட் எல்லாம் எப்படி இருந்துச்சு.. ரெண்டு பேரும் பார்க்க நிறைய வித்யாசம் தெரியுதே.” என்று அவனிடம் கேட்டாள்.
“எஸ் ஆரா, ரொம்பவே ரெப்ரெசிங்கா இருக்கு. ஒரு நியூ எஸ்பிரியின்ஸ் கிடைச்சுது எனக்கு “என்று பூவிழியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான். அது அவளுக்குப் புரியவில்லை.
“பரவால்லையே மாமா , அப்போ கேரளா போனது டிரீட்மென்ட்க்கு மட்டும் இல்ல.. கூடவே உங்க ஹனிமூனையும் கொண்டாடிட்டு வந்திருக்கிங்கன்னு சொல்லுங்க.. ” என்று கண்னடித்தாள்.
அவள் சொன்னதும் “ஹே! இதெல்லாமா கேப்பாங்க” என்று செல்லமாக அவள் காதைப் பிடித்துத் திருகியவன் முகத்தில் ஒரு புன்னகை வர..
அதுவரை அவன் திரும்பி வந்த சந்தோசத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு, இருவரும் கேரளாவில் டிரீட்மென்ட் மட்டும் பார்த்து வரவில்லை. கணவன் மனைவியாக இந்த பத்து நாட்களையும் கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்க்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அவர் பார்வை இப்பொது பூவிழியின் பக்கம் திரும்ப..
அவளோ கைகளைப் பிசைந்து கொண்டு ராஜேந்திரனை ஏறிட பயந்து போய் நின்றிருந்தாள்.
அவள் நிலை அறிந்திராத ஆராதனா தன் அருகே நின்ற பூவிழியைப் பார்த்து “உனக்கு உடம்பு எல்லாம் ஓகேவா” என்றாள்.
“ம்ம்.. நல்லா இருக்கேன்ங்க.. ” என்றாள் பூவிழி மெல்ல.
“சரி நீங்க ரெண்டு பேரும் ட்ராவல் பண்ணி வந்ததுல ரொம்ப டையர்டா இருப்பிங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று இருவரையும் உள்ளே போக சொன்னாள் .
பூவிழி தயங்கியபடி ராஜேந்திரனைப் பார்க்க..
அவள் கையைப் பற்றிய யுகேந்திரனோ.. “வா பூவிழி..” என்று அவளை தன் அறைக்கு செல்ல அழைத்தான் அவளோ தயங்கியபடி நின்றிருக்க..
“வா.. “என்று அவன் அதட்டலாக அழைக்கவும். வேறு வழி இன்று அவன் பின் லிப்டில் ஏறி மாடியில் இருந்த அவர்கள் அறைக்கு சென்றனர்.
இங்கே இருவரையும் பார்த்து உள்ளுக்குள் கடுப்புடன் இருந்தார் ராஜேந்திரன்.
“மச்சான், நான் ஆபீஸ் கிளம்பறேன். நம்ம யுகேன் வந்துட்டான் எபப்டியும் ஒரு ரெண்டு மூணு நாளில் அவனும் ஆபிஸ் வருவான்னு நினைக்கிறேன்” என்றார் கார்த்திகேயன்.
“ம்ம்.. சரி கார்த்தி நீ கிளம்பு நான் அப்பறோம் வரேன் ” என்று தன் அறைக்குள் புகுந்துகொண்டார் ராஜேந்திரன்.
பர்வதமோ.. பூவிழியை பார்த்ததில் இருந்து அவள் மேல் பொறாமையில் இருந்தார், “இந்த வீட்ல வேளை பார்த்தவளுக்கு வந்த வாழ்வைப் பாரு.. நீ இருக்க வேண்டிய இடம் டி அது. அந்த வேலைக்காரி ஆண்டு அனுபவிக்குறா.. அதை நினைச்சா எனக்கு நெஞ்சு வலிக்குது, என் அண்ணா சொத்தெல்லாம் கைவிட்டுப் போயிருச்சு..” என்று புலம்பியவாறு அறைக்குள் சென்றுவிட்டார்.
“இந்த அம்மாவுக்கு என்ன புத்தி கெட்டுப் போயிருச்சா.. லூசு மாதிரி பேசிட்டு இருக்கு. ” என்று நினைத்தவள் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு உணவுக்கு அனைவரும் டைனிங் டேபிளில் மீண்டும் ஒன்றாக குழுமி இருக்க..
“என்ன யுகேனை இன்னும் காணோம் ” என்றார் பர்வதம்.
அங்கே உணவு பரிமாறிக்கொண்டிருந்த கஸ்தூரி “ம்கூம்.. இந்த கிழவிக்கு மூக்கு வேர்த்திருமே.. ” என்று நினைத்தபடி வேலையை செய்துகொண்டிருந்தாள்.
“அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் விடு பர்வதம் ” என்று கார்த்திகேயன் சொன்னார்.
“அதான் கேரளா போய் வேண்டிய அளவுக்கு ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுத்துட்டாங்களே அப்பறோம் என்ன..” என்றவர் “அண்ணா, நீயாச்சும் அவங்களை சாப்பிட வர சொல்லு. நீ சொன்னா தான் அந்த பூவிழி கேப்பா.. வந்ததும் அவனோட உள்ள போனவ தான் இன்னும் கீழ வரல.. “என்று பொறுக்க முடியாமல் புலம்பினார்.
அவர் வெளியே சொல்லிவிட்டார் , ராஜேந்திரன் மனதிற்குள் இதை மட்டும் தான் நினைத்து பூவிழியின் மீது மேலும் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.
“அண்ணா!.. அண்ணா…. ” என்று ராஜேந்திரனின் தோளினைப் பற்றி பர்வதம் உலுக்க..
“அஹ்!.. இரு பர்வதம் கால் பண்றேன் ” என்று இன்டெர்காமில் யுகேந்திரனின் அறைக்கு அழைத்தார்.
இங்கு நடக்கும் களேபரம் எதுவும் அறியாமல் பூவிழியை தன் மடியில் அமர்த்தி அவள் முதுகில் முத்தம் பதித்துக்கொண்டிருந்தான் யுகேந்திரன்.
“மாமா விடுங்க , சாப்பிடற நேரம் ஆச்சு. எல்லாரும் வந்திருப்பாங்க. கீழ போலாம் வாங்க.” என்று அவன் கை வளைவிற்குள் கோழி குஞ்சு போல மாட்டிக்கொண்டு தவித்தபடி சொன்னாள் பூவிழி.
“நானும் அதை தானே டி சொல்றேன். அவங்க சாப்பிடறதுன்னா சாப்பிடட்டுமே.. நாம கொஞ்ச நேரம் கழிச்சு போவோம். இல்லை கஸ்தூரிகிட்டே சொல்லி இங்கையே சாப்பாடு கொண்டு வர சொல்லலாம் ” என்று இதோடு வந்ததில் இருந்து மூன்றாவது தடவையாக சேலையை மாற்றிக் கட்டி இருந்த பூவிழியின் சேலையை கழட்ட முற்பட்டுக் கொண்டிருந்தான்.
“ஐயோ மாமா சொன்னகேளுங்க.. மாமா நம்ம ரெண்டு பேரும் இன்னும் கீழ வரலையின்னு ஏதாவது கோவிச்சுக்கப்போறாரு.. ” என்று தன் சேலைக்குள் அவன் கைகள் செய்து கொண்டிருந்த லீலைகளை தடுக்க முடியாமல் பெரும்பாடு பட்டபடி பேசினாள்.
“என் அப்பாவுக்கு என்ன டி இப்போ.. எதுக்கு கோவிச்சுக்கப்போறார். நம்ம என்ன சின்ன பிள்ளைகளா.. பசிச்சா சாப்பிடுக்க மாட்டோமா..” என்று அவன் கைகள் வேகமாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க.. சரியாக கரடி இன்டெர்காமில் அழைத்திருந்தது,
வேற யாரு ராஜேந்திரன் தான். ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி கட்டிலுக்கு அருகே இருந்த போனை எடுத்து காதில் வைத்தவன் “ஹலோ ” என்றான்.
“யுகேன், என்னப்பா பண்ணிட்டு இருக்க.. எல்லாரும் உனக்காக சாப்பிடாம வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். ரெண்டு பேருக்கும் பசிக்குமே.. வாங்க சாப்பிடலாம் ” என்று அக்கறையாக அழைத்தார்.
அவரின் அக்கறை என்னவென்று அவன் அறியாததா இருந்தும் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்தவன் “வரேன்ப்பா..” என்று போனை வைத்துவிட்டு தன் மடியில் அமர்ந்து இருந்தவளைப் பார்க்க..
அவன் கையை விளக்கிவிட்டு மெல்ல வயிற்றைப் பிடித்தபடி கீழே இறங்கியவள் “இதுக்கு தான் அப்போவே போலாம்னு சொன்னேன். பாருங்க மாமாவே கால் பண்ணி சொல்ற அளவுக்கு வெச்சிருக்கீங்க..”என்று செல்லமாக கோபம் கொண்டாள்.
“என்ன டி நீ.. இப்படி என் அப்பாவைக் கண்டு பயப்படுற..” என்றவன் அவள் இதழை எட்டி தன் பெருவிரலால் வருடிக்கொண்டே கேட்டான்.
“ஏன் பயப்படறேன்னு உங்களுக்கு தெரிஞ்சும் இந்த கேள்வியை என்கிட்டே கேக்குறீங்க பாருங்க நீங்க..” என்று அவனை செல்லமாக முறைத்தவள் “கையை வெச்சுட்டு சும்மா இருங்க மாமா சும்மா சும்மா சேலையை கட்டிகிட்டே இருக்கேன் நான் ” என்று சலித்துக் கொண்டாள்.
“இதுக்கு தான் ரூம்ல இருக்க அப்போ எதுவும் போடாதேன்னு சொல்றேன். பாரு இப்போ உனக்கு தான் சிரமம்” என்று அவளை இழுத்து மீண்டும் தன் கை வளைவிற்குள் இழுத்து நிறுத்தினான்.
“ம்.. சும்மா இருங்க மாமா.. வாங்க போலாம் ” என்று அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
அவள் அப்படி செய்ததில் கோபம் வந்துவிட்டது அவனுக்கு, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வீல் சேரை இயக்கி அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
அவளுக்கோ அவனின் இந்த பாரா முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் பின்னாலயே வேகமாக நடந்தவள் யுகேன் லிப்ட் பட்டனை அழுத்த கையை மேலே உயர்த்த.. அவனுக்கு முன்பு சென்று லிப்ட் பொத்தானை அழுத்தினாள்.
அவளை திருப்பி முறைத்துவிட்டு தலையை திருப்பிக்கொண்டான் யுகேன்.
லிப்ட் வரவும் முதலில் யுகேன் ஏறிக்கொள்ள… அவன் பின்னே ஏறிய பூவிழி மீண்டும் லிப்ட் கதவை அவனுக்கு முன் மூட பொத்தானை அழுத்த…
“ஏய் என்ன..” என்றான்.
“ம்ஹும்.. ஒன்னுமில்ல ” என்று தலையை வேகமாக ஆட்டியவள் “ம்ஹும்.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசாம இருக்காரு.. கையை வெச்சிட்டு சும்மா இருங்கன்னு சொன்னது ஒரு குத்தமா… ” என்று முணுமுணுத்தாள் .
அது அவன் காதில் தெளிவாகவே விழுந்தது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் இதழ்களுக்குள் அவள் புலம்பல்களை ரசித்து சிரித்தான்.
லிப்ட் கீழே வரவும் இருவரும் வெளியே வர..
“வாப்பா.. எவ்ளோ நேரம் ஆச்சு பசிக்கலையா?” என்று பர்வதம் அவனை அழைத்தவர் “ஏன் டி உன் புருஷன் வேலா வேளைக்கு சாப்பிடணும்னு உனக்குத் தெரியாதா .. அவன் தான் ரெஸ்ட் எடுக்கறான்னா நீ என்ன பண்ணிட்டு இருந்த கீழ வந்து அவனுக்கு வேணும்ங்குறதை பார்த்து செய்ய வேண்டாமா ? பெரிய மகாராணின்னு நினைப்போ.. உங்களையும் தனியா வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா?”என்று அதட்டினார் பூவிழியை.
“ஹையோ! அப்படி எல்லாம் இல்ல.. ‘ என்று பூவிழி அவசரமாக மறுக்க..
“வேற எப்படி?” என்றார் நக்கலாக
“ஏய் பர்வதம் என்ன பேச்சு இது.. ” என்று கார்த்திகேயன் அதட்ட..
“ஏங்க என்னை எதுக்கு அதட்டுரிங்க… யுகேனுக்கு வேலைக்கு சாப்பாடு மருந்து எல்லாம் கொடுக்குமா இல்லையா? அதை தானே சொன்னேன் அவளுக்கு, இவ தானே அவனை பாத்துக்கறா ” என்றார்.
“அதுக்குன்னு இப்படியா வாயும் வயிறுமா இருக்க புள்ளையை அதட்டுவ.. பாரு அவ எப்படி மிரண்டு போய் இருக்கான்னு.. ” என்று பூவிழி பக்கம் கார்த்திகேயன் பேசினார்.
“யாரு இவளா!..” என்று நினைத்தவர் பூவிலியை முறைக்க..
“அத்தை நான் ஒன்னும் சின்ன பையன் கிடையாது. அவளை எதுக்கு திட்டுறீங்க.. ” என்று முதல் முறை பூவிழிக்காக பேசினான் யுகேந்திரன்.
இதுநாள் வரை பூவிழியை யார் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை ஏன் என்று கேட்டிடாதவன் இன்று பேசுவது ராஜேந்திரனுக்கும் , பர்வதத்திற்கும் அதிர்ச்சி என்றால் அவர்களை விட அதிர்ச்சியில் நின்றிருந்தது என்னவோ பூவிழி தான்.
“இல்ல யுகேன் , உனக்கே உடம்பு சரி இல்ல.. அதான் நேரத்துக்கு சாப்பிட கொடுக்கணும்னு.. ” என்று பர்வதம் அடுத்து பேச தயங்க.
“என்னால நடக்க முடியாது. நான் ஊனம் இவன் எந்த வேலைக்கும் லாயக்கு இல்லேன்னு தானே சொல்ல வரீங்க.. ” என்றான்.
“ஐயோ! யுகேன் என்னப்பா இது.. உன்னைப் போய் நான் அப்படி எல்லாம் சொல்வேனா ” என்றவர் அதற்கு மேல் பேசினாள் தன் தலை தான் உருளும் என்று அமைதியாகி விட்டார்.
“சரி இப்போ எதுக்கு தேவை இல்லாத பேச்சு , சாப்பிடுங்க எல்லாரும் முதல்ல.. ” என்ற ராஜேந்திரன் “பூவிழி எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறு எல்லாருக்கும்” என்று அதட்டலாகக் கூறினார்.
“பூவிழி நீயும் வந்து உக்காரு.. ” என்றவன் “கஸ்தூரி ” என்றான்.
அதுவரை ஓரமாக நின்ற கஸ்தூரி “ஐயா!” என்று வந்தார்.
“நீங்களே எல்லாருக்கும் பரிமாருங்க.. ” என்றவன் “பூவிழி எதுக்கு நின்னுட்டு இருக்க வந்து உக்காரு..” என்றான் அதட்டலாக.
“இல்லைங்க எல்லாருக்கும் பரிமாறிட்டு நா கஸ்தூரிகூட சாபிட்றேன்” என்று அவளையே முறைத்துக்கொண்டிருந்த ராஜேந்திரனை கண்டு பயந்தபடி கூறினாள்.
“உனக்கு கஸ்தூரி புருஷனா இல்ல நான் புருஷனா ” என்று மீண்டும் அதட்டியவன் அவளைப் பார்க்க..
அவளோ எந்த பதிலும் சொல்லாமல் ராஜேந்திரன் இருந்த திசையையே பார்த்தான்.
“இப்போ நீ உக்காரப் போறியா? இல்லையா ?” என்று யுகேந்திரன் அதட்ட..
அவளோ ராஜேந்திரனுக்கும், யுகேந்திரனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிப்பாக கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்,
“பூவிழி.. ” என்று அவன் அதட்ட..
“ஹா!.. மாமா அது.. ” என்று கைகளை அழுத்தமாகப் பிசைந்தபடி அவனருகே செல்ல..
“பூவிழி அதான் சொல்றான் இல்லம்மா உக்காரு , நீயும் இந்த வீட்ல ஒரு ஆளு தானே உக்காரு.. ” என்று அவளை முறைத்துக்கொண்டு ராஜேந்திரன் கூற..
இன்னமும் பூவிழி உட்காராமல் பயந்து கொண்டே நிற்க..
“உக்காரு.. ” என்று ராஜேந்திரன் கைகளாலேயே அவளை மிரட்ட.. அதன் பின் தான் யுகேந்திரன் அருகே தயங்கியபடி அமர்ந்தாள்,
தான் இவளுக்காக அனைவரிடமும் பேசினாள் , இவள் தன் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல் தன் அப்பா சொன்ன மறுநொடி சாப்பிட அமர்ந்தவள் மேல் அளவு கடந்த கோபம் வந்தது அவனுக்கு. இப்பொது சாப்பிடும் விருப்பமே போய் விட்டது அவனுக்கு. சாப்பிடாமல் தான் கோவித்துக்கொண்டு சென்றாள் . பூவிழி சாப்பிடாமல் எழுந்துவிடுவாள். அவள் வயிற்றில் இருக்கும் பிள்ளையும் பட்டினி இருக்க வேண்டி வரும் என்று அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.
பூவிழிக்கோ சாப்பாடு உள்ளே இறங்குவேனா என்று இருந்தது, அவளுக்கு ராஜேந்திரன், பர்வதம் இருவரின் முன்பு சரிசமமாக அமர்ந்து சாப்பிடவே பயமாக இருந்தது.
அதே எண்ணம் தான் ராஜேந்திரனுக்கும் , பர்வதத்திற்கும் தங்களுக்கு சரிசமமாக பூவிழி அமர்ந்து சாப்பிடுவது கௌரவக் குறைச்சலாக இருந்தது அவர்களுக்கு.
அனைவரும் ஆளுக்கு ஒரு எண்ணத்தோடு அமர்ந்து சாப்பிட்டிருக்க..
யுகேந்திரன் சாப்பிட்டு முடித்த அடுத்த நொடி கையை தட்டிலேயே கழுவி விட்டு பூவிழியைக் கூடப் பார்க்காமல் மேலே சென்றுவிட்டான்.
அவன் கோபம் அறியாத பெண்ணவளோ யுகேந்திரன் சென்று மறுநொடி சாப்பாட்டுத் தட்டை தூக்கிக்கொண்டு கிச்சனுக்குள் ஓடிவிட்டாள். மேலே சென்ற யுகேந்திரன் பார்வைக்கு இது தப்பாமல் இருக்குமா என்ன..
இவர்கள் இருவரும் சென்றபிறகு கார்த்திகேயனும், ஆராவும் சாப்பிட்டு சென்றிருக்க..
தட்டில் இருந்த உணவை சாப்பிடாமல் பிசைந்தபடி அமர்ந்து இருந்தது என்னவோ பர்வதமும், ராஜேந்திரனும் தான்.
அனைவரும் சென்றுவிட்டதை உறுதி செய்த பர்வதம். அண்ணா இது சரி இல்ல.. இப்படியே போனா இந்த வீட்டோட மொத்த அதிகாரத்தையும் உங்க புள்ள தூக்கி அந்த வேலைக்காரி கையில கொடுத்திருவான். அப்பறோம் நீங்களும், நானும் ஒவொரு காசுக்கும் அவகிட்டே கையேந்தி இருக்க வேண்டி வரும் என்றார்.
அவளை எங்க வெக்கணுமோ ஆரம்பத்துலையே தட்டி அங்க வெக்கணும் அவ்ளோ தான் சொல்லிட்டேன் என்று எழுந்து உள்ளே சென்றுவிட..
பூவிழியை அடுத்து என்ன செய்யலாம் என்று ராஜேந்திரனின் மனம் கணக்குப் போட ஆரம்பித்து இருந்தது
