தப்பு 46
“அண்ணா எல்லாம் தெரிஞ்சும் நீயே எப்படி நம்ம யுகேன் வாழ்க்கையையும் , பூவிழி வாழ்க்கையும் நாசம் பண்ணின.. இப்படி இவங்க உறவை களங்கப்படுத்திட்டியே.. இதை எல்லாரும் எப்படி எடுத்துக்குவாங்க. இது தெரிஞ்சா நம்ம யுகேன் என்ன ஆவான். அவனுக்கு பூவிழின்னா அவ்ளோ உசுரு.. இப்போ அவனுக்கும், பூவிழிக்கும் இடையே முறையே மாறி இருக்குன்னு தெரிஞ்சா அவன் தாங்குவானா? ஏன் ? ஏன் இப்படிப் பண்ணுணிங்க.. இவங்க ரெண்டு பேரும் பாவம் ” என்று ராஜேந்திரன் சட்டையைப் பற்றி உலுக்கி யுகேன் , பூவிழி இருவரின் நிலையை எண்ணி வருந்தினார்.
“எப்படி சொல்லுவேன் நான் எப்படி சொல்லுவேன் பர்வதம் . பூவிழி யாருன்னு தெரிஞ்சா நீ தாங்க மாட்ட ..” என்று வாய் திறந்தார் ராஜேந்திரன்.
“ஏன்? ஏன் தாங்க மாட்டேன். இதை விட பெரிய விஷயம் எதுவும் இருக்கா சொல்லுங்க ” என்று ராஜேந்திரன் சட்டையைப் பற்றி உலுக்கினார் பர்வதம்.
“பர்வதம் உன்னால நிஜமாவே அந்த உண்மையை தாங்கிக்க முடியாதும்மா.. நீ கஷ்டப்படறதை என்னால பார்க்க முடியாது ” என்று தன் சட்டையைப் பற்றிக்கொண்டிருந்த பர்வதத்தின் கையை பற்றிக்கொண்டு உணர்ச்சி போங்க பேசினார் ராஜேந்திரன்.
“இவ்ளோ நடந்திருக்கு இவ்ளோ வருஷமா நீங்க தான் எங்களுக்கு எல்லாமேனு இந்த வீட்லையே தான் நாங்க எல்லாரும் இருந்தோம். என் புருசனும் கூட வீட்டோட மாப்பிள்ளையா இருக்க இங்க சம்மதிச்சு வந்திருந்தார். இப்படி எல்லாரும் உங்களுக்காக இருக்கோம். ஆனா நீங்க ” என்று அவர் தேங்கிய கண்ணீரோடு அவரை வெறுப்பது போலப் பார்க்க..
அவர் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டு அதிர்ந்த ராஜேந்திரனின் கண்கள் கலங்கியே விட்டது, தான் எப்படி இந்த விஷயத்தை சமாளிப்பது என்று தெரியாமல் அவர் விழித்துக்கொண்டிருந்தார்.
உண்மையை சொன்னால் பர்வதம் உடைந்து விடுவார், அதை சொல்லவில்லை என்றால் இங்கு மிகப்பெரிய தவறான புரிதல் ஏற்பட்டுவிடும். அதனால் பாதிக்கப்படுவது தன் மகனும் தான் என்று நினைக்கையில் அவர் இதயம் இன்னும் கனத்தது.
“பர்வதம் அது வந்து காவேரிக்கும் எனக்கும் பிறந்தவன் தான் யுவன். யுகேனோட அம்மா இறந்து கொஞ்ச வருசத்துல தான் எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. ” என்று முதல் முறை உண்மையை கூறி அவர் ஒத்துக்கொண்டார்.
“சரிண்ணா அப்போ பூவிழி? அவளும் உங்க ரெண்டு பேருக்கும் பொறந்த பொண்ணு தானா?” என்றார் பர்வதம்
“இல்ல.. இல்ல பர்வதம் அவ எங்க பொண்ணு இல்ல.. “என்று அவர் வேகமாக மறுக்க..
“அப்போ பூவிழி யாரோட பொண்ணு ப்பா சொல்லுங்க.. அவளோட அம்மா , அப்பா யாரு ? அவங்க எங்க இருக்காங்க ? “என்றபடி உள்ளே நுழைத்தான் யுகேந்திரன்,
அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தபடி யுகேனைப் பார்த்தார் ராஜேந்திரன்,
“அதை நான் சொல்றேன் யுகேன் ” என்று அவன் பின்னே வந்தார் கார்த்திகேயன்.
அவரை பார்த்ததும் பர்வதம் வேகமாக அவரிடம் ஓடி சென்று அவர் கையைப் பற்றிக்கொண்டவர். “உங்களுக்கு பூவிழியோட அப்பா, அம்மா யாருனு தெரியுமா? சொல்லுங்க இங்க நிறைய குழப்பம் நடந்திருச்சு, நம்ம மாப்பிள்ளை யாரோட பையன் தெரியுமா? ” என்றவர் தனக்கு முன் நின்ற காவேரியைக் காட்டி “இதோ நம்ம காவேரிக்கு, என் அண்ணனுக்கும் பிறந்தவர் தான் நம்ம மாப்பிள்ளை “என்றார்.
“எனக்கு எல்லாமே தெரியும் பர்வதம் , யுகேன் என்கிட்டே எல்லாமே சொல்லிட்டான் ” என்றவர் இங்கு இவ்வளவு நடந்தும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமைதியாக நின்று இருந்த பூவிழியைத் திரும்பிப் பார்த்தார்.
அவளோ அவர் பார்வையை உணர்ந்தவள் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேகமாக தலையை ஆட்ட..
“இல்ல பூவிழி நான் இப்போ உண்மையை கண்டிப்பா சொல்லியே ஆகணும். இவ்ளோ நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும் . இனியும் நீ யாரோ ஒருத்தி போல ஒதுங்கி இருக்கணும்னு அவசியம் இல்ல. “என்றவர் அவள் அருகே செல்ல..
“ஐயோ வேணாம் சார் தயவு செய்து எதுவும் சொல்லாதீங்க. அம்மா தாங்க மாட்டாங்க. அவங்க பாவம் . அதான் நான் காவேரி அம்மாவோட பொண்ணு இல்லேனு தெரிஞ்சிருச்சு இல்ல. அப்பறோம் என்ன? ” என்றவள் பர்வதத்தை பார்த்து “அம்மா, என்னோட அம்மா, அப்பா யாரா இருந்தா என்ன? அது இப்போ முக்கியம் இல்ல. நான் இவங்க பொண்ணு இல்லேனு புரிஞ்சுது தானே உங்களுக்கு.. “என்றாள்.
பர்வதமும் அவளிடம் தலையாட்டி புரிந்தது என்று பதில் சொல்ல..
“ஆஹ் பாருங்க.. அவங்களே ஒரு பிரச்சனையும் இல்லேனு சொல்லிட்டாங்க அப்பறோம் என்ன விடுங்க ” என்றவள் தன் கையில் இருந்த குழந்தையைக் கொண்டு வந்து ராஜேந்திரனிடம் நீட்டி “சார், நீங்க சொன்னது போல உங்க மகனோட வாரிசை நல்லபடியா பெத்து உங்க கையில கொடுக்கிறேன். இனி எனக்கும் உங்க மகனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் இந்த வீட்டை விட்டு, உங்க மகனை விட்டு நிரந்தரமா போய்டுறேன் . என்னை பத்தி யாரும் யோசிக்க வேணாம் “என்று அவர் கையில் குழந்தையை வலுக்கட்டாயமாக வைத்தவள் திரும்பி யுகேனைப் பார்த்தாள்.
அவனோ அவள் செயலில் உட்சபட்ச கோபத்தில் இருந்தான்.
தான் என்ன சொல்லி இங்கே கூட்டி வந்தேன். இவள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
அவளோ அவனை இறைஞ்சும் பார்வை பார்த்துவிட்டு “என்னை மன்னிச்சிடுங்க மாமா. உங்களோட தகுதிக்கு நான் சரியா வரமாட்டேன்னு தான் சார் இப்படிப் பண்ணிருக்கார் அவர் பண்ணினதுல எந்த தப்பும் இல்ல. எனக்கு உங்க கூட வாழ தகுதியே இல்ல மாமா ‘ என்று கையெடுத்துக் கும்பிட்டவள் கார்த்திகேயனையும் பார்த்து தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்.
“பூவிழி! ..” என்று கார்த்திகேயன் அவளை பின் தொடர்ந்து செல்ல..
அவர் கையைப் பற்றி இழுத்து தன் முன்னே நிறுத்தி இருந்த பர்வதம். “ஒரு நிமிசம் இருங்க. எனக்கு தெரியாத விஷயம் ஒன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதுவும் பூவிழியோட விஷயம் ” என்று அவரை ஏறிட்டார் .
கார்த்திகேயனுக்கு பர்வதத்தின் பார்வை ஊசியாய் இதயத்தில் இறங்கி இருக்க.. அவரிடம் பதில் சொல்ல முடியாமல் தொண்டை தண்ணீர் வற்றிப்போனது போல ஒரு உணர்வு மேலோங்க அவரையும் அறியாமல் எச்சிலைக் கூட்டி விழுங்கினார்.
அதற்குள் காவேரி “அதெல்லாம் அப்பறோம் பாத்துக்கலாம். அவ வெளிய போறா யுகேன் அவளைப் போய் கூப்பிடுப்பா நீ கூப்பிட்டா தான் அவ வருவா. உன் பேச்சை தான் அவ கேப்பா ‘என்று யுகேனிடம் வந்தார்,
“இல்ல அவ போகட்டும். அதான் வந்த வேலை முடிஞ்சிருச்சுனு அவ போறா இல்ல. நான் அவ்ளோ சொல்லி தானே அவளை இங்க கூட்டி வந்தேன்.ஆனா அதை எதையும் நினைக்காம அவ இஷ்டத்துக்கு முடிவெடுத்தது போறா… ” என்று யுகேன் வீம்பு பிடிக்க..
அப்போது ராஜேந்திரன் கையில் இருந்த யுகேனின் குழந்தை வீறிட்டு அழத்துவங்கியது.
“இங்க பாரு குழந்தை பசிக்கு அழறான் அவளை கூப்பிடுப்பா ” என்று கெஞ்சினார் காவேரி.
“அம்மா உங்களுக்கு எதுக்கு அவ மேல இவ்ளோ அக்கறை. அவ என்ன நீங்க பெத்த பொண்ணா ? இல்லையே.. அவளுக்கு தான் யாரும் இல்ல. அவ எங்க போனா யாருக்கு என்ன வந்துச்சு.. விடுங்க போகட்டும். குழந்தை அழுதா என்ன இப்போ. நான் என் அம்மா இல்லாம வளர்ந்தேனே அது போல அவனும் வளரட்டும் ” என்றவன் கார்திகேயனையும், தன் தந்தையையும் ஓரப்பார்வை பார்த்தான்.
“டேய் யுகேன் என்ன டா இப்படி இருக்க? அவளுக்கு யாரும் இல்லேன்னா எப்படியோ போகட்டும்னு விற்றுவியா நீ அவ உன் பொண்டாட்டி டா , இது உன் குழந்தை ” என்று யுகேனை அதட்டினார் பர்வதம்.
“அத்தை அதுக்கு என்ன பண்ண முடியும் .அவ தான் என்னை வேணாம்னு போறா இல்ல போறவளை வெத்தலை பாக்கு வெச்சா கூப்பிட முடியும் . போகட்டும் விடுங்க.. ” என்றான்.
“டேய் பல்லை உடைப்பேன் உன்ன.. எப்படி டா நீ பெத்த பையன் பசிக்கு அழுகுறதை பார்த்துட்டு உன்னால சும்மா இருக்க முடியுது. அவளை போய்க் கூப்பிடப்போறியா? இல்லையா?” என்று அவனிடம் கோபம் காட்டினார் பர்வதம்.
“அத்தை அவளை நான் போய் இங்க கூட்டிட்டு வந்துருவேன். அப்பறோம் அவ இங்க வந்ததும் இங்க இருக்கவாக அவளுக்கு யாரும் இல்ல, அவ அம்மா , அப்பா யாருன்னு தெரியாது. அப்டி இப்படினு சொல்லி அவளை கஷ்டப்படுத்துவீங்க. இங்க இருந்து அவ கஷ்டப்படறதுக்கு பேசாம எங்கையாவது போய் சந்தோஷமா இருக்கட்டுமே விடுங்க ” என்று எங்கோ பார்த்தபடி நின்று இருந்தான்.
“டேய் அப்படி யாரு டா அவளை சொல்லிருவாங்க, அப்டி யாரும் அவளை எதுவும் சொன்னா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். சரியா ” என்றவர் “யாரு தான் அவளை பேசுறாங்கனு நானும் பாக்குறேன் ” என்றார் வீரப்பாக.
“அது நீங்க தான் “என்றான்.
“நானா ! நான் எதுக்கு டா அவளை திட்டப்போறேன். சொல்லிக் காட்டப்போறேன். நான் முன்ன மாதிரி இல்லேனு உனக்கு நல்லாவே தெரியும் தானே.. “என்றார்.
“ஆமா நீங்க முன்ன மாதிரி இல்ல தான். ஆனா ஒரு வேலை பூவிழி பத்தி உங்களுக்கு பின்னாடி தெரிய வந்து அவ மேல உங்க மொத்த வெறுப்பையும் காட்டிடீங்கன்னா அதை அவ தாங்குவாளா? அதான் அவ போகட்டும்னு சொல்றேன் ” என்றான் கையைக் கட்டிக்கொண்டு அவரைப் பார்த்து.
“டேய் அவ யாரா இருந்தா என்னடா இப்போ . அவ நம்ம வீட்டுப் பொண்ணு டா. அவ இந்த வீட்டு மகாலக்ஷ்மி டா. அவ இல்லாம உன்னால ஒரு நிமிஷம் இருக்க முடியுமா சொல்லு ” என்றார் கோபமாக.
“ம்ஹும்.. அவ இல்லாம என்னால இருக்க முடியாது தான் “என்று தலையை ஆட்டினான்.
“ம்ம்.. அப்போ உனக்கு எது பிடிக்குமோ எனக்கும் அது பிடிக்கும். உனக்கே பூவிழியைப் பிடிக்கலையின்னாலும் எனக்கு கவலை இல்ல. அவ இப்போ நம்ம வீட்டுப் பொண்ணு. அவளை நான் எதுக்கு டா மனசு நோக்குற மாதிரி பேசப்போறேன் . இப்படி சொல்றது உனக்கே சரியா படுத்தா சொல்லு ” என்றார் புரியாமல்.
“ஆமா நீ கண்டிப்பா சொல்லுவ அத்தை” என்றான்.
“டேய் நான் தான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னு சொன்னேன்ல அப்பறோம் எதுக்கு மறுபடி மறுபடி நீ என்னையே தப்பு சொல்ற.. ” என்று அவர் கோபம் மேலும் அதிகமாக.
“ஏன்னா அவ கார்த்திகேயன் மாமாவுக்கும், கற்பகம்ங்கிறவங்களுக்கும் பிறந்த பொண்ணு. இப்போ சொல்லு கார்த்திகேயன் மாமாவுக்குப் பொறந்த பொண்ணை நீ ஏத்துப்பியா அத்தை “என்று விஷயத்தை உடைத்து சொல்லிவிட்டான்.
முதலில் இந்த விஷயத்தைக் கேட்டு பர்வதத்தின் மூளை வேலை நிறுத்தம் செய்தது போன்ற ஒரு உணர்வு அவருக்கு தோன்றியது, அவர் மூளை மீண்டும் அவன் சொன்னதை ஏர்க்கையில் இதயமே சுக்கு நூறாக வெடிப்பது போன்ற உணர்வு மேலோங்க.. திரும்பி கார்த்திகேயனைப் பார்க்க.
அவரோ பர்வதத்தின் முன் குற்றவாளியைப் போல தலை கவிழ்ந்து நின்று இருந்தார்.
பர்வதம் அதிர்ச்சியில் உறைந்தது போல ஆராவும் விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்தவள் யுவனைப் பார்க்க..
அவன் அவள் தோளை ஆதரவாகப் பற்றி தன்னோடு சாய்த்து நிறுத்தி இருந்தான்.
அடுத்து இவர்கள் இருவரின் முடிவு என்னவாக இருக்கும்..
