தப்பு 42
யுகேனின் காரை பின் தொடர்ந்து வந்த ராஜேந்திரன் , ஒரு சிஃனலில் அவர்கள் காரை நழுவ விட்டிருந்தார்.
“ச்சே.. எங்க போயிருப்பான் அவன் . எப்படி வீட்டை விட்டு வெளிய வந்திருப்பான் ” என்ற யோசனையோடு வீட்டிற்கு வந்திருந்தார் .
அப்போது தான் யுகேனிடம் பேசிவிட்டு அவர்களைப் பார்க்க கிளம்பி இருந்தான் யுவன். வாசலில் யோசனையாக வந்த ரஜேந்திரனைப் பார்த்துவிட்டு அவரை முறைத்தவன். “பண்றதை எல்லாம் பண்ணிட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு பிளான் போடுறார் போல ” என்று நினைத்தவன் “ஹக்கும் .. ” என்று குரலை செருமினான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “இவனா..”என்ற ரீதியில் யுவனைப் பார்க்க.
“என்ன நைனா பார்வை அது.. அடுத்து என்ன பண்ணலாம்னு பிளான் போடுதா உங்க கிரிமினல் மைண்ட் ” என்றான்.
“பிளானா? எதுக்கு?” என்றார் புரியாமல்.
“இல்ல.. என் அம்மாவையும் என்னையும் பிரிக்க ஒரு பிளான் போட்டிங்க, உங்க மனைவியா இந்த வீட்ல சந்தோசமா மரியாதையோடு வாழ வேண்டிய என் அம்மாவை இங்க வேலைக்காரியா இருக்க வெச்சீங்க.. கூடவே பூவிழியை கொண்டு வந்து வளர்க்கணும்னு டிமாண்ட் பண்ணுணிங்க. அது கூட ஓகே தான். ஆனா அந்த பூவிழி யாரு? யாரோட பொண்ணு அவ இது எதுவுமே இவ்ளோ நாள் வெளியே தெரியாம பாத்துக்கிறதெல்லாம் சாதாரண விஷயம் இல்ல. அப்பறோம் யுகேனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வெச்சு அவன் குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு இந்த வீட்டைவிட்டே போய்டணும்னு அவளையும் கஷ்டப்படுத்தி , நீங்க நினைச்சது போலவே அவளை இந்த வீட்டை விட்டு தொரத்தியும் அடிச்சாச்சு ” என்று மூச்சு வாங்க சொன்னவன் .
“இதெல்லாம் சொல்லவே எனக்கு மூச்சு வாங்குது. ஆனா எப்படி ஒரே ஆளா இவ்ளோ வேலையும் செய்துட்டு ரொம்ப கூலா இருக்க நைனா நீ.. ‘என்றான்.
அவனை ஏகத்துக்கும் முறைத்துவிட்டு உள்ளே செல்லப் போனார் ராஜேந்திரன்.
அவர் கையைப் பற்றி நிறுத்தியவன் “சீக்கிரம் ரெடியாகிக்கோங்க ” என்றான்.
அவர் எதுக்கு?” என்றார் புரியாமல்.
“இல்ல இவ்ளோ பாவம் பண்ணிருக்கீங்க அதுக்கு தண்டனை அனுபவிக்க வேணாமா? ” என்றான்.
“நான் எந்த பாவமும் செய்யல.. நான் செஞ்சதெல்லாம் எல்லாரோட நலத்துக்கும் தான். உங்க கண்ணனுக்கு நான் கெட்டவனா தெரிஞ்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. ” என்று தன்னைப் பிடித்திருந்தவன் கையை உதறிவிட்டார்.
“சரி அதெல்லாம் போகட்டும். சொல்லுங்க பூவிழி யாரோட பொண்ணு. அவளை எதுக்கு என் அம்மாகிட்டே கொடுத்து வளர்க்க சொன்னிங்க . அவளை நீங்க எங்க இருந்து கூட்டிட்டு வந்திங்கன்னு நான் சொல்லட்டுமா? “என்றான்
அவனை அதிர்ந்து பார்த்தவர் அதை யுவனிடம் காட்டிக்கொள்ளாமல் “நீ எதையாவது சொல்லிட்டு இருக்காத. எனக்கு எதுவும் தெரியாது ” என்றார்.
“அப்படியா! அப்போ கற்பகம் யாரு? அவங்க பொண்ணை எதுக்கு நீங்க தூக்கிட்டு வந்திங்க. அந்த கற்பகத்தோட பொண்ணு தான் பூவிழி சரியா? ” என்றான்.
யுவன் சொன்ன விபரங்கள் அனைத்தையும் கேட்ட ராஜேந்திரனுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது, அவரால் யுவன் சொன்ன விஷயங்களை கேட்டு நிதானிக்க முடியவில்லை. முகம் முழுதும் வியர்த்து கொட்ட.. சட்டென தடுமாறி கீழே விழப்போனார்.
“மச்சான்! ” என்று அப்போது தான் ஆபிசில் இருந்து வந்த கார்த்திகேயன் ராஜேந்திரன் கீழே விழுவதைப் பார்த்துவிட்டு ஓடிவந்து அவரை விழாமல் பிடித்திருந்தார்.
தன்னைத் தாங்கிப் பிடித்த கார்த்திகேயனைப் பார்த்தார் ராஜேந்திரன் “என்ன மச்சான் ஆச்சு? முகமெல்லாம் இப்படி வேர்த்திருக்கு ” என்று அவரை கைத்தாங்களாகப் பிடித்து சோபாவில் அமர வைத்தார்.
அதற்குள் பர்வதமும், ஆராவும் வந்துவிட..
ராஜேந்திரன் சோர்ந்து அமர்ந்து இருந்த்தைப் பார்த்துவிட்டு பதறி அவர் அருகே வந்த பர்வதம் “ஐயோ! அண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு. ஏன் முகமெல்லாம் நேரத்திற்கு. உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று பதறினார் .
“எனக்கு ஏதும் ஆகல பர்வதம் ” என்றார்.
“அத்தை அவர் நல்லா தான் இருந்தார், நான் இவர்கிட்டே பேசிட்டு இருக்கப்போ நல்லா தான் இருந்தார் . நான் அவர்கிட்டே கற்பகம்னு யாரையும் தெரியுமா உங்களுக்குனு தான் கேட்டேன். அதுக்கு அப்பறோம் தான் இவர் ஒரு மாதிரியா ஆகிட்டார், நான் என்னாச்சுன்னு கேட்டுட்டு இருக்க இருக்க.. அப்டியே விழப் போய்ட்டார். அப்போ தான் மாமா வந்து இவரை விடாம பிடிச்சுக்கிட்டார் .” என்றார்.
மீண்டும் கற்பகம் என்ற பெயரை சொன்னதும் ராஜேந்திரன் முகம் வெளிறிப்போனது. அவர் முகத்தை உற்று நோக்கியபடி நின்றிருந்தான்.
“கற்பகமா? யாரு அது?”என்றார் பரவதம்.
“எனக்கும் அது யாருனு தெரியாலையினு தான் இவர்கிட்டே கேட்டேன் . இது நம்ம வீட்டுக்கு கொரியர் வந்துச்சு என் பேர்ல.. நானும் யாருடா நமக்கு இந்த அட்ட்ரஸ்க்கு கூரியர் அனுப்பறாங்கன்னு திறந்து பார்த்துட்டு இருந்தேன். அப்போ தான் இவர் இங்க வந்தார். நானும் இந்த கொரியர் பத்தி விபரம் சொல்லாம மொட்டையா கற்பகம்னு சொல்லிட்டேன் “என்றவன் “இந்த கொரியர் தான் இது”என்று தன் கையில் வைத்திருந்த கவரை நீட்டினான்.
அதை ராஜேந்திரன் பார்த்துக்கொண்டிருக்க..
“ஏங்க அது என்னதுன்னு கொஞ்சம் பாருங்க ” என்றார் பர்வதம் .
கார்த்திகேயன் யுவன் கையில் இருந்த காகிதத்தை வாங்கி பிரித்துப் பார்த்தார். அது பர்த் செர்டிபிகேட் . அதில் இருந்த பெயர்களை வரிசையாகப் பார்த்தார்.
குழந்தை என்ற இடத்தில பூவிழி என்று போட்டிருக்க..
அடுத்து பெற்றோர் பெயர் இடத்தில தாயின் பெயர் கற்பகம் என்று போட்டிருந்தது. அதை பார்த்துவிட்டு கீழே தன் பார்வையை அவர் கொண்டு செல்ல..
அதற்குள் அவர் கையில் இருந்த அந்த பிறப்பு சான்றிதழை பிரித்தெடுத்த யுவன் “இது பூவிழியோட பிறப்பு சான்றிதழ் அத்தை. அதுல அவளோட அம்மா பேரு கற்பகம்னு போட்டிருந்துச்சு. உங்களுக்கு அது யாருன்னு தெரியுமா?” என்றான் யுவன்.
“கற்பகமா? மாப்பிள்ளை பூவிழியோட அம்மா அந்த காவேரி இல்ல.. அப்பறோம் எப்படி கற்பகம்னு வரும் ” என்று கேட்டவர். “எனக்கு அப்டி யாரையும் தெரியாதே.. “என்று யோசித்தார்.
அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல் வேகமாக எழுந்த ராஜேந்திரன் யுவனின் கையில் இருந்த பூவிழியின் பிறப்பு சான்றிதழை வாங்கப் போக..
“ம்ம்.. இதை எதுக்கு என்கிட்டே இருந்து வாங்குறீங்க . நானே வெச்சுக்கிறேன் . எனக்கு தானே இது வந்துச்சு “என்று அதை மடித்து எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
அவனை முறைத்த ராஜேந்திரன் வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை சாத்தி இருக்க .
“இவருக்கு என்ன ஆச்சு. எப்போ பாரு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிறார்”
என்று புலம்பினார் பர்வதம்.
“சரி எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன் ” என்றான்.
“அம்மா நான் அவரை அனுப்பிட்டு வரேன் ” என்று ஆராவும் யுவனுடன் காருக்கு வந்தாள்.
“ஓகே டார்லிங், நான் போயிட்டு வரட்டுமா?” என்று அவள் கன்னத்தை தடவினான்.
“ம்ம்..” என்ற ஆரா. “இந்த செர்டிபிகேட் கொரியர்லையா வந்துச்சு ” என்றாள் சிரித்துக்கொண்டே.
“நோ.. நோ.. நானே கஷ்டப்பட்டு என் அப்பா ரூம்குள்ள இருக்க லாக்கர்ல தேடிக் கண்டுபிடிச்சேன் ” என்றான்.
“கேடி!..” என்று அவன் கன்னத்தில் செல்லமாக அடித்தவள்.
“மாமா இல்லாத இந்த கொஞ்ச நேரத்துக்குள்ள இதை எடுத்துட்டீங்க அவர் ரூம்ல இருந்து ” என்று சிரித்தாள்.
“சும்மா சொல்லக்கூடாது . என் அப்பா இவ்ளோ வருஷம் ஆகியும் இதை அப்படியே பத்திரமா வெச்சிருக்கார்னா பாத்துக்கோயேன். நா சும்மா எதுவும் கிடைக்குமான்னு தான் அவர் ரூமை செக் பண்ண போனேன். அப்போ தான் இது கிடைச்சுது ” என்றான்.
“எங்க கொடுங்க அதை நான் பார்க்குறேன் ” என்று அவன் பாக்கெட்டில் இருந்து எடுக்கப் போனாள் .
“ம்… ம்ஹும்.. அதான் என்னனு தெரிஞ்சிருச்சே.. நான் இப்போ எங்க போறேன் தெரியுமா? ” என்றான்.
“எங்க யுவன்?” என்றாள் ஆராவும் ஆவலாக.
“யுகேனோட பையனைப் பார்க்க.. “என்றான்.
“ஹா!.. யுகேன் மாமாவுக்கு டெலிவரி ஆகிருச்சா! பையன் பிறந்திருக்கானா அவருக்கு ” என்று அவள் ஆர்வமாகக் கேட்க..
“அச்சோ.. என் செல்ல குட்டிம்மா.. உன் ஆர்வத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ டி.. ” என்று அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன் “உன் யுகேன் மாமாவுக்கு ஒன்னும் டெலிவரி ஆகல , பூவிழிக்கு தான் டெலிவெரி ஆகியிருக்கு ” என்று சிரித்தான்.
“அத விடுங்க. அது சந்தோஷத்துல மாத்தி சொல்லிட்டேன். என்கிட்டே சொல்லவே இல்ல. பாப்பாவை பார்க்கப் போறேன்னு . இருங்க நானும் வரேன் “என்று அவனைத் தள்ளிவிட்டு காரில் ஏறிக்கொண்டாள்.
“ஏய்! ஆரா.. ” என்று யுவன் அவளை தடுத்து நிறுத்துவதற்குள் காரில் ஏறி அமர்ந்தவளை பார்த்து சிரித்தவன் , “இவ சொன்னாலும் இனி கேக்கபோறது இல்ல.. ‘ என்று முடிவு செய்தவனாக ஆராவை அழைத்துக்கொண்டே பூவிழியையும் , அவள் குழந்தையையும் பார்க்க ஹாஸ்பிடல் கிளம்பி இருந்தாள்.
இங்கே அறைக்குள் வந்த ராஜேந்திரனோ வேகமாக வந்து தன் லாக்கரை திறந்து அதன் உள்ளே இருந்த பைல்களை எடுத்துப் பார்த்தார். அதில் இருந்த டாக்குமென்டுகளை புரட்டிப் பார்த்தவருக்கு புரிந்து போனது யுவன் செய்த வேலை என்னவென்று.
கையில் இருந்த பைலை கோபத்தில் விசிறி அடித்தவர் “யுவன்ன்ன்… ” என்று அந்த அறையே அதிரும்படி கத்தினார்.
“டேய் ஏண்டா.. ஏன் இப்படிப் பண்ணின.. அந்த பூவிழி யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சா . அப்பறோம் இந்த குடும்பத்தோட நிம்மதி எல்லாம் போய்டும்டா.. அதனால தானே அவ யாருனு இத்தனை நாள் யாருகிட்டேயும் சொல்லாம மறைச்சிருந்தேன். எதுக்கு டா எதுக்கு இப்படி பண்ணின..” என்று தலையை பிடித்துக்கொண்டு புலம்பினார்.
“போச்சு.. இனி எல்லாமே போச்சு.. இந்த வீட்டோட நிம்மதி போச்சு.. ஏற்கனவே யுகேன் என்னை சந்தேகமா தான் பாக்குறான். இனி அவனுக்கு என் மேல மதிப்பு இருக்குமா? என்னை அவன் மதிப்பானா?” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டனர் அடுத்து என்ன செய்வது. இந்த பிரச்சனை வெளியே வந்தாள் என்னவாகும் என்று நினைத்தவர் ஒரு முடிவோடு அந்த வீட்டைவிட்டு வெளியே கிளம்பி இருந்தார்.
இங்கே பூவிழியை நோர்மல் வார்டிற்கு கொண்டு வந்திருக்க..
அவள் இன்னமும் அலுப்பில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் குழந்தையை கையில் ஏந்தி இருந்த காவேரி “யுகேன் அவளைக் கொஞ்சம் எழுப்புப்பா.. குழந்தைக்கு பசிக்கும். அவனா கேட்டு அழுறதுக்குள்ள அவன் படியை ஆத்திரனும் . ” என்றவர் கட்டிலில் அசந்து உறங்கும் பூவிழியைப் பார்த்துவிட்டு .
“இவளே இன்னும் குழந்தை மாதிரி தான் எல்லாத்துக்கும் நடந்துகிறா . இதுல இவர்களுக்கு ஒரு குழந்தைய்யா?” என்று சொல்லி சிரித்தார்,
“ஆமா ம்மா.. ஒரு மாங்காய்க்காக உங்களையும் என்னையும் எவ்ளோ ஏமாத்து வேலை இவ பண்ணிருக்கா.. குழந்தையே தான் இவ.. இவளையும், இனி இவனையும் நான் எப்படி தான் சமாளிக்கபோறேன்னு ” என்று புலம்பியவன் அங்கே இருந்த பெட்டில் படுக்கப் போக..
“உள்ள வரலாமா?” என்று குரல் அவர்கள் இருந்த அறை வாசலில் இருந்து கேட்கவும் இருவரும் திரும்பி வாசலைப் பார்த்தனர் . அங்கே நின்று இருந்த ஆராவைப் பார்த்த காவேரி சற்று அதிர்ந்தாலும் , அவள் அருகே நின்று இருந்த யுவனைப் பார்த்ததும் அவருக்கு ஏதோ ஒரு உணர்வு இதயத்தில் ஏற்படுத்தி அவரை அழுத்தியது.
அவர்கள் இருவரையும் பார்த்த யுகேன் காவேரியிடம் வந்தவன் “அம்மா, உங்க பையன் தான் வந்திருக்கான் யுவன் ” என்று அவர் தோளைப் பற்றினான் யுகேன்.
அதில் அதிர்ந்தவர் திரும்பி யுகேனைப் பார்க்க..
அவன் ஆம் என்று மீண்டும் தலையை ஆட்டினான்.
