News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

காப்பாத்து டி.., மூர்க்கன் 63

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

மூர்க்கன் 63

“என்ன டி எங்கண்ணனை வீட்டுக்கு கூட்டிட்டு வரோம்னு ரொம்ப ஹாப்பியா இருக்க போல..” என்று மித்ராவின் இடையில் கிள்ளினாள் கயல்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஏய் சும்மா இரு டி.. அவன் இவ்ளோ வருஷம் கழிச்சு கண்ணு முழிச்சு சரியாகிருக்கான் சந்தோசம் இருக்காதா பின்ன.. “என்கிறாள் மித்ரா சிரித்துக்கொண்டே.

“ம்ம்ம்.. இனி தினம் தினம் மஜா தான்.. ஒரே ரொமான்ஸா தான் இருக்கும் உங்க ரெண்டு பேருக்கும் . கதவை தட்டாம யாரும் உள்ள வரவே முடியாது ” என்று அவளை கிண்டல் செய்ய..

“எங்க ரூம் பக்கம் உங்களுக்கு என்ன டி வேலை.. நாங்க இவ்ளோ வருஷம் விட்டுப்போன கதையெல்லாம் பேசுவோம். நீங்க சும்மா சும்மா வந்து டிஸ்டர்ப் அதுவும் பண்ணிராதீங்க ” என்று உடைகளை எடுத்து அடுக்கிக்கொண்டே பேசினாள் மித்ரா.

“ம்ம்.. ஹும்.. அது சரி அது சரி.. இத்தனை வருஷ கதையை பேசப்போறிங்க..  இதை நான் நம்பனும்..” என்று கண்ணடித்தாள் கயல்.

“அதான் தெரியுதில்ல.. அப்பறோம் என்னடி ” என்று அவள் கன்னம் கிள்ளி கட்டிக்கொண்டாள் மித்ரா.

“எப்படியோ உன் முகத்துலையும், பேச்சுளையும் இந்த சந்தோசம் , கிண்டல் இதெல்லாம் வரவைக்க. எங்க கண்ணு முழிச்சதும் தான் நடந்திருக்கு . சரி சரி.. இனியும் டைம் வேஸ்ட் பண்ணாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பையனை பெத்துக் கொடுங்க.. என்னோட அடுத்த ரிலீஸ்க்கு ஜோடி சேர்க்க.. ” என்றாள் கயல்.

“என்ன டி அதுக்குள்ளவா . அவன் இன்னும் எழுந்து நடக்கல.. பேசல… இதெல்லாம் நடக்கட்டும் டி அப்பறோம் குழந்தைக்கு பிளான் போட்டுக்கலாம் ” என்றாள் மித்ரா வெட்கபட்டுக்கொண்டே.

“எங்கண்ணா மெல்ல எழுந்து நடக்கட்டும். எந்திரிக்குறது எந்திரிச்சா போதாது . நீ நல்லா தானே டி இருக்க.. நீயே கொஞ்ச நாளைக்கு ட்ரை பண்ணு ” என்றாள் இரட்டை அர்த்தத்தில்.

“ஏய் லூசு.. என்ன டி இப்படி எல்லாம் பேசுற.. ” என்று மித்ராவை வெட்கப்பட அவள் முகம் சிவந்து போனது.

“வேற எப்படி பேசுறது. ஈஸ்வர் அண்ணா கண்ணு முழிச்சதே ஒரு பெரிய முன்னேற்றம் தான் . மத்ததெல்லாம் தானாவே நடக்கும் . அவர் முழுசா குணமாகி வர நாள் அதிகம் எடுத்தா அதுவரை அப்டியே  இருப்பியா நீ… ” என்றவள் “நீ முதல்ல உன் வேலையை ஸ்டார்ட் பண்ணு டி.. அதுக்குள்ள ஈஸ்வர் அண்ணாவும் குணமாகிட்டா நாங்க சொன்னது போல நீ ப்ரெக்னென்ட் ஆகுற வரைக்கும் ரெண்டு பேரும் வீட்டுப்பக்கம் வரக்கூடாது. ஹனிமூன் ஹனிமூனா சுத்திட்டு இருங்க அது வரைக்கும் ” என்றாள்.

“ஐயோ போடி.. ” என்று கயலின் முதுகில் மித்ரா அடிக்க..

“பார்ரா என்னவோ இப்போதான் கல்யாணம் ஆனவ மாதிரி இப்படி வெட்கப்படுற.. நீ லேட் பண்றது எனக்கும் லேட் ஆகும் டி.. நீ என்னிக்கு கர்ப்பமா இருக்கேனு சொல்றியோ அன்னிக்கே நானும் , என் புருசனும் எங்க ப்ரோசெஸ்ஸை ஸ்டார்ட் பண்ணிருவோம். அப்போதான் உனக்கு பையன் பொறக்குறதுக்கும், எனக்கு பொண்ணு பொறக்குறதுக்கும் சரியா இருக்கும் . வளர்ந்து பெரியவங்க ஆனதும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம் ” என்றாள் கயல்.

“நீ ஒரு முடிவோட தான் இருக்க டி.. ‘ என்று மித்ரா சொல்ல.

அப்போது மித்ராவின் சுடிதாரை பற்றி இழுத்தாள் அல்லி “என்ன டி குட்டி.. ” என்று அவளை மித்ரா எடுத்துக்கொள்ள..

“சித்தி “என்று கயலை அழைத்தாள் அல்லி.

“என்ன டி ” என்று கயல் அவள் முகத்தருகே வர..

அவள் முகத்தை இரு கைகளிலும் பற்றியவள் “மித்ரா அத்தை பையனை நான் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அப்போவே சொன்னேன்ல.. ” என்றாள்.

“ஆமா சொன்ன.. அதுக்கு என்ன இப்போ . நீ சொன்னா அப்படியே நடந்திரனுமா..” என்று அவளை கயல் மல்லுக்கு இழுக்க..

“ஆமா நடக்கணும்.. எனக்கும், மித்ரா அத்தை பையனுக்கும் தான் கல்யாணம் ” என்றாள் அல்லி மிகவும் சீரியஸாக.

“இல்ல எனக்கு பொறக்கப்போற பொண்ணுக்கும், உன் மித்ரா அத்தைக்கு பொறக்கப்போற பையனுக்கும் தான் கல்யாணம் . என்ன டி பண்ணுவ ” என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி அல்லியை கடுப்பேற்றினாள் அல்லி.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஹே கயல், இவ தான் சின்னப்பொண்ணு ஏண்டி இவகிட்டே வம்பு வளர்க்குற.. ‘என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்க..

“சின்ன பொண்ணு பேசுற பேச்சா டி இது.. இப்போவே என்கிட்டே சண்டைக்கு நிக்குறா பாரேன் ” என்று மித்ராவிடம் பேசிக்கொண்டிருந்த கயலின் முகத்தைப் பற்றி தன்னை நோக்கி திருப்பிய அல்லி.

“நான் தான் அத்தை பையனை கட்டிக்குவேன் ” என்றவள் கயல் கன்னத்தில் இருந்த கையை பிரித்தவள் எடுத்த வேகத்தில் மீண்டும் இரு கைகளையும் வேகமாகக் கொண்டு வந்து கயலின் இரு கன்னத்திலும் கைகளைத் தத்துவது போல வேகமாக அடிக்க..

“ஐயோ! அம்மா!.. “என்று கயல் காதை பிடித்துக்கொண்டு அபப்டியே கட்டிலில் அமர்த்துவிட்டாள்.

இவ்வளவு நேரம் இவர்கள் மூவரும் பேசுவதை குறுகுவென பார்த்துக்கொண்டிருந்த ராஜ்ஜும் , ஈஸ்வரும் அல்லியின் இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை.

ராஜ் சத்தமாக வாய்விட்டே சிரிக்க..

ஈஸ்வரோ சத்தமாக சிரிக்க முடியவில்லை என்றாலும் அல்லியின் செயலில் அவன் முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான். 

“ஏய் உனக்கு ரொம்ப குரும்பகிருச்சு டி.. என்னையே அடிக்கிறியா நீ.. ” என்று இரண்டு காதுகளையும் சேர்த்து தேய்த்துக் கொண்டே அல்லியை அடிக்க வந்தாள் கயல்,

அதை பார்த்ததும் பயந்து போன அல்லி “ஐயோ! அத்தை ” என்று மித்ராவின் கழுத்தைக் கட்டிக்கொள்ள..

“நாம இவ கிட்டே இருந்து எஸ்கேப் ஆகிடலாமா அல்லி..’ என்று அல்லியைக் கட்டிக்கொண்டு சொன்ன மித்ரா கயலின் கையில் மாட்டிக்கொள்ளாமல் லாவகமாக அங்கே இருந்து ஓடி செல்ல..

“என்ன டி அவ உன் பையனை கல்யாணம் பண்ணிக்குறேன்னு என்னை அடிக்குறா . அவளை என்னனு கேக்காம என்கிட்டே இருந்து அவளை காப்பாத்துறியா . அவளையும், உன்னையும் இன்னிக்கு ஒரு வழி பண்ணாம நான் விட மாட்டேன் பாத்துக்க.. ” என்று கயலும் விடாமல் அவர்களை துரத்த ஆரம்பிக்க..

அந்த அறையே இவர்கள் களேபரத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. “டேய் பாத்தியா இவளுங்க சேட்டையையை இன்னும் நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கே போகல.. அதுக்குள்ள உனக்கு பொறக்கப்போற குழந்தைக்கு இவளுங்க மூணு பேரும் அடிச்சுக்கறாங்க. பொறக்குறது பையனா பொண்ணான்னு கூடத்தெரியல அதுக்குள்ள இந்த அக்கப்போர் நடக்குது ” என்றான் ராஜ்.

  ராஜ் சொல்வது சரி தான் என்ற ரீதியில் ஈஸ்வர் தலையை ஆட்ட..

“அது சரி தலை எல்லாம் நல்லா தான் ஆடுற நீ.. மத்ததெல்லாம் எப்படி.. “என்றான் ராஜ் ஒரு மார்க்கமாக.

அவனை ஏகத்துக்கும் முறைத்த ஈஸ்வர் தலையை தூக்கி ராஜ்ஜை அடிக்க வருவது போல பாவனை செய்ய..

” அது சரி முதல்ல எழுந்து நில்லு டா.. அப்பறோம் என்னை அடிக்கலாம் ” என்று அவனை மீண்டும் வம்பிளுக்கு.

“டேய் இதுக்காகவே சீக்கிரம் நான் எழுந்து வரேன்னா இல்லையான்னு பாரு “என்று நினைத்துக்கொண்டான் ஈஸ்வர்.

“என்ன டா இதுக்காகவே சீக்கிரம் எழுந்து வரணும்னு தோணுதா.. ‘ என்று அவன் மனதை சரியாகப் படித்தவன் போல ராஜ் சொல்ல..

“ம்ஹும்.. ஒருத்தனுக்கு…. ” என்றவன் “கயலு.. ‘ என்று அவளை அழைத்தான்.

மித்ராவையும், அல்லியையும் அடிக்க துரத்திக்கொண்டிருந்த கயல் “என்னங்க.. ” என்று மூச்சு வாங்க கேட்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இங்க ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியலையாம்.. இதுல இவன் எழுந்து வந்து என்னை  அடிக்கபோறானாம் ” என்று கைதட்டி சிரிக்க..

அதை கேட்டு ஈஸ்வரோ என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை மூடிக்கொள்ள..

“டேய் நீயும், உன் பொண்டாட்டியும் ரொம்ப ஓவரா தான் போறீங்க. நானும் பார்த்துட்டு இருக்கேன் ரெண்டு பேரும் சேர்ந்து அவனை ஆளாளாளுக்கு வம்பிழுத்துட்டா இருக்கீங்க.. உங்கள என்ன பண்றேன் பாரு.. ” என்றவள் வேகமாக அல்லியைக் கொண்டு வந்து ஈஸ்வரிடம் கொடுத்தவள் “ஈஸ்வர் இவளை அந்த கயல்கிட்டே விட்டுறாத பத்திரமா புடிச்சுக்க..  என்று அல்லியை அவன் கைக்குள் அமரவைத்து ஈஸ்வரின் கையை எடுத்து அல்லியை சுற்றி வைத்தவள்.

“உங்கள… “என்று வேகமாக ராஜ்ஜை நோக்கி மித்ரா ஓட..

“கயலு.. என்னை இவ கிட்டே இருந்து காப்பாத்து டி..  “என்று ராஜ் கயல் பின்னால் ஓடினான்.

“இது உனக்கும் அவளுக்கும் இடையில இருக்க பிரச்சனை. நீ அவளை சமாளிச்சுக்க.. என் காதை பதம் பார்த்தவளுக்கும், எனக்கும் ஒரு டீலிங் இருக்கு அதை முடிச்சிட்டு வந்து உன்னை காப்பாத்துறேன் அதுவரை நீ அவளை சமாளி ” என்று வேகமாக ஈஸ்வர் அருகே சென்றாள்.

கயல் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த அல்லி “மாமா என்னை காப்பாத்துங்க..” என்று ஈஸ்வர் அருகே படுத்தவள் அவன் கழுத்தை இருக்க கட்டிக்கொள்ள..

“உன் மாமா கொஞ்ச நாள் கழிச்சு வந்து உன்னைக் காப்பாத்துவார். ஆனா இப்போ நீ என்கிட்டே வசமா மாட்டிக்கிட்ட டி என் அல்லிராணி.. ” என்று கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்துக்கொண்டே அல்லியை நோக்கி வந்த கயல் ஈஸ்வரிடம் வந்து அவளைப் பறித்தெடுக்க..

“மாமாஆ!.. அத்தை… காப்பாத்துங்க.. ” என்று அல்லியின் அலறலில் ராஜ்ஜை துரத்திக்கொண்டிருந்த மித்ரா திரும்பி அல்லியைப் பார்க்க.. அப்படியே நின்றுவிட்டாள்.

ராஜும் “என்ன இவ நின்னுட்டா ” என்ற ரீதியில் திரும்பி அல்லியை பார்த்தவன் “டேய் மச்சான்.. ” என்று முகம் முழுவதும் சந்தோஷமும், அதிர்ச்சியுமாக ஈஸ்வரைப் பார்க்க..

அவனோ கயலிடம் அல்லியை கொடுக்காமல் ஒரு கையால் அல்லியை வளைத்துப்  பிடித்தபடி எழுந்த அமர்ந்து இருந்தான்.

இந்த காட்சியைக் கண்டா மூவருமே ஸ்தம்பித்துப் பொய் நிற்க.. ஈஸ்வரோ அல்லியை தன்னோடு அணைத்துப் பிடித்தபடி அவளை கயலிடம் கொடுக்காமல் அமர்ந்து இருந்தவன் தான் எழுந்து அமர்ந்ததை கூட உணராமல் அல்லியை காப்பதிலேயே குறியாக இருக்க..

மித்ராவும், ராஜும் இதை கவனித்தவர்கள் ஓடிவந்து ஈஸ்வரை கட்டிக்கொள்ள..

கயலோ சிரித்தபடி ஈஸ்வரைப் பார்த்து “ஈஸ்வர் அண்ணா நீங்களாவே எழுந்து உக்கார்ந்து இருக்கீங்க.. பாருங்க”என்று சொல்லி சிரித்தாள்.

ஈஸ்வரும் அப்போது தான் அதை உணர்ந்தவன் சந்தோசமாக அல்லியோடு தன்னை சேர்த்தணைத்து இருந்த இருவரையும் கட்டி அணைத்துக்கொண்டாள் நெகிழ்ச்சியாக.

“ஈஸ்வர்.. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா டா.. ” என்று மித்ரா அழ..

“மச்சான் ரொம்ப சந்தோசம் டா.. ” என்று ராஜூம் நெகிழ்ந்து பேசினான்.

இளங்கிளியை டிஸ்சார்ஜ் செய்து அவள் உடைமைகளை டிரைவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு குழந்தைகளோடு ராவண், இளங்கிளி இவர்கள் அறைக்கு வந்தவர்கள்  ஈஸ்வர் எழுந்து அமர்ந்ததையும் அவனை கட்டிக்கொண்டு இருந்தவர்களையும் பார்த்து பூரித்துப் போனார்கள்.

இவ்வளவு சீக்கிரத்தில் ஈஸ்வர் எழுந்து அமர்ந்தது அதிசயம் தானே.. 

“சரி சரி போதும் விடுங்க அவனை.. “என்றபடி ராவண் உள்ளே வர..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவனை பார்த்த மென்மையாக சிரித்தான் ஈஸ்வர்.

அவன் தோளில் அடித்து தன் தோளோடு அணைத்து விடுவித்த ராவண் “போலாமா?” என்றான்.

சரி என்று ஈஸ்வரும் தலையை ஆட்ட..

அவனை ராவணும் , ராஜும் சேர்த்து தூக்கி வீல் சேரில் அமர வைத்தார்கள் .

கயல் ஆதி , அல்லி, யசுவை கூட்டிக்கொண்டு முன்னே நடக்க..

“ராவண் இளங்கிளியை தன் தோளில் சாய்த்து ஒருகையால் பிடித்திருக்க.. அவன் குழந்தையை மற்றொரு கையில் பிடித்தபடி முன்னே நடந்தான்.

மித்ராவோ அவர்கள் பொருட்களை டிரைவரிடம் கொடுத்தநுபியவள் ஈஸ்வரின் மாத்திரை, அவனுக்கு சேர்ந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு நடந்தாள்.

வீல் சேரில் ஈஸ்வரை தள்ளியபடி சென்ற ராஜ் “ஒருவழியா எழுந்துட்ட மச்சான். இனி அடுத்து குழந்தை பெத்துகிற வேலையும் சீக்கிரம் ஸ்டார்ட் ஆகிரும் போலையே ” என்று கிண்டல் செய்ய..

பின்னால் இருந்தவனை நிமிர்ந்து பார்த்த ஈஸ்வர் தன் உதட்டை அசைத்து ராஜ்ஜை ஏதோ கேட்ட வார்த்தை சொல்லி திட்ட..

அவனை கூர்ந்து கவனித்தவன் “சரி டா .. டென்ஷன் ஆகாத உடம்புக்கும் ,உன் தம்பிக்கும் நல்லது இல்ல மச்சான். ” என்று அப்போதும் கலைக்க. .

தன் முஷ்டியை இறுக்கி தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த ஈஸ்வர் “இருடா உனக்கு இருக்கு.. ‘என்ற ரீதியில் அவனைப் பார்த்தான். ராஜ்ஜோ கண்டுகொள்ளாமல் வீல் சேரை உருட்டிக்கொண்டு விசிலடித்தபடி சென்றான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.