மூர்க்கன் 64
ஹாலில் எல்லோரும் அமர்ந்து இருக்க..
ஈஸ்வரியும், அவர்கள் வீட்டு புது வரவையும் ஒன்றாக கொண்டாடிக்கொண்டிருந்தது மொத்த குடும்பமும்.
“டேய் ஈஸ்வர் , எங்க எல்லாருக்கும் இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. இந்த அஞ்சு வருஷத்துல எவ்ளோ நல்ல விஷயம் எல்லாம் நடந்திருக்கலாம். ஆனா எங்க யாருக்கும் அது எல்லாம் சந்தோஷமாவே தெரியல.. இப்படி மொத்த குடும்பமும் ஒண்ணா எல்லாரும் நல்லபடியா இருக்கோம் இல்ல இது தான் இது மட்டும் தான் பெரிய சந்தோசமே ” என்று ஈஸ்வர் கையைப் பற்றிக்கொண்டு சொன்னார் வேதவள்ளி.
அவன் அருகே அமர்ந்து இருக்க பார்வதி ஈஸ்வரின் தலையை தொட்டு அவன் கேசத்தை வருடிக்கொடுத்தவர் “இனி எல்லாமே நல்லது தான் நடக்கணும்” என்றார்.
“டேய் வரதா ” என்று வரதராஜனை அழைத்தார்.
“என்னம்மா ” என்ற அவர்.
“நம்ம குடும்பத்து மேல பெரிய த்ரிஷ்டி விழுந்திருச்சு டா.. நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போகணும். அங்க போய் பொங்கல் வெச்சு சாமிக்கு பூஜை , அபிஷேகம் எல்லாம் செய்யணும் ” என்றார்.
“ஆமாங்க அத்தை சொல்றதும் சரி தான். நம்ம வீட்ல நடந்த பிரச்சனையில் இவ்ளோ வருசமா குலதெய்வம் கோவிலுக்குப் போகாமையே இருந்துட்டோம். இந்த முறை போயிட்டு வந்துடலாம் ” என்றார் பரிமளாவும்.
“எல்லாம் சரி தான். கிளிக்கு இப்போதான் டெலிவரி ஆகியிருக்கு. அதுக்குள்ள எப்படி போறது” என்றார் அவர்.
“எப்படியும் குழந்தை பிறந்துள இருந்து 30நாள் நாம கோவிலுக்குப் போக முடியாது. முப்பதாவது நாளுல அவனுக்கு புண்ணியாதானம் செய்வோம் இல்ல வீட்லையே.. அதை முடிச்சிட்டு இவனுக்கு பேர் வைக்க குலதெய்வம் கோவிலுக்கே போயிடு வரலாம் ” என்றார் வேதவள்ளி .
அவர் சொல்வதும் சரியாக இருக்க.. அனைவரும் ஒரு மாதம் கழித்து குலதெய்வம் கோவில் செல்வதாக உறுதியானது.
“எல்லாரும் ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருக்கீங்க போல.. “என்றபடி இளங்கிளியின் அப்பா மணிகண்டன் வர.. அவர் பின்னால் விசாலாட்சி, மணிகண்டனின் தங்கை சரோஜினி, அவர் மகள் நிலா என நால்வரும் ஒன்றாக ராவண் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“அடடே ஆமாப்பா, குடும்பம் மொத்தமா நடு ஹால்ல உக்காந்து பேசாம , பின்ன பாட்டா படிப்பாங்க..” என்றாள் கயல்.
“ஏன் ஹால்ல உக்காந்து பாடக்கூடாதுனு எதுவும் இருக்கா? என்ன? எங்க மாமா இப்போ என்ன கேட்டுட்டாருனு வந்ததும் வரத்துமா அவரை கலாய்க்குறிங்க அக்கா நீங்க.. ” என்றபடி வாங்கி வந்த பழங்களை கயல் கையில் கொடுத்தாள் நிலா.
“”ஏண்டி.. என் அப்பாவை நான் கலாய்ப்பேன் உனக்கு என்ன டி வந்துச்சு ” என்று அவள் கொடுத்த பையை அவளிடமே கொடுத்து. “நானா இங்க புள்ள பெத்து பச்சை உடம்பா இருக்கேன். போய் உங்க மாமன் பொண்ணு அங்க இருக்காங்க அவங்ககிட்டே கொடு.. ” என்று விடாமல் பேசினாள்.
“ஏன்.. எங்க கையில இவ்ளோ பெரிய பையைக் கொடுத்து அதை தூக்கி அவங்களுக்கு கை வலிக்குமே.. இப்போதான் குழந்தை பிறந்திருக்கு. அவங்க வீக்கா இருப்பாங்கன்னு தெரியாது உங்களுக்கு. ” என்று கயல் கையில மீண்டும் அந்த கவரை திணித்தவள் “நீங்க சும்மா தானே நிக்குறீங்க.. இதை வாங்கிக் கொண்டு போய் உள்ள வெச்சா என்ன வலிக்குது ” என்றாள் நிலா.
“சும்மாவா இருக்கேன்.. ” என்று மூக்கு விடைக்க நிலாவை முறைத்தவள் “எல்லாம் என் நேரம் டி.. நீயெல்லாம் என்னைக் கலாய்க்குற பார்த்தியா” என்று கயல் நிலா பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவள் கொடுத்த கவரை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வந்தாள்.
“அடேயப்பா , என் மருமகளையே பதில் பேச முடியாத படிக்கு செஞ்சுட்டியே டி.. ” என்று நிலாவை நெட்டி முறித்தார் கமலா.
“அத்தை இன்னிக்கு ராத்திரிக்கு உங்களுக்கு மாத்திரை எல்லாம் நான் தான் எடுத்துக் கொடுப்பேன். என்னிக்கும் உங்களுக்கு நான் தான் ஆவேன் தெரிஞ்சுக்கோங்க. அதை விட்டுட்டு இவளை பாராட்டுறேன் , பாத்திரம் எழுதுறேன்னு பேசுனீங்க.. குடுக்குற மாத்திரையில் எதையாவது கலந்து கொடுத்துருவேன் பாத்துக்கோங்க ” என்றாள் கயல்.
“ஆஹ்! ” என்று அவள் பேசியதில் அதிர்ந்த கமலா “நீ செஞ்சாலும் செய்வ டி மருமகளே.. ‘ என்றார் அவர்.
நிலாவும், கயலும் மாரி மாரி காலை வாரிக்கொள்வதை பார்த்து சிரித்த ஈஸ்வர் அருகே இருந்த மித்ராவிடம் புருவம் உயர்த்தி யாரு? என்றான்.
“அவ தான் நிலா, கிளியோட அத்தை பொண்ணு. அவ அம்மா சரோஜினி , அங்க விசாலம் அத்தை கூட நிக்குறைகள்ல அவங்க தான் ” என்றாள் .
ஈஸ்வரும் புரிந்தவனாக தலையை ஆட்டினான்.
“தம்பி நீங்க கண்ணு முழிச்சதுல ரொம்ப சந்தோசம் ” என்று கோவில் போய்விட்டு கொண்டு வந்த பிரசாதத்தை ஈஸ்வருக்கு வைத்துவிட்டார் விசாலாட்சி.
ஈஸ்வர் அவரைப் பார்த்து மென்மையாக சிரித்தான்.
அவன் எதுவும் பேசாமல் இருக்க.. விசாலாட்சி யோசித்தார்.
“அஹ்! அத்தை அவருக்கு இவ்ளோ நாள் கோமாவுல இருந்ததால எடுத்ததும் நடக்க.. பேச எல்லாம் கொஞ்சம் சிரமமா இருக்கும் , கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே பண்ணிருவார் ” என்றாள் அவள் குழப்பம் அறிந்த மித்ரா.
“ஓ! சரிம்மா.. ” என்றவர் நேராக பரிமளத்திடம் வந்தவர் “பரிமளா அண்ணி, அது வந்து உங்ககிட்டே ஒரு விஷயம் கேக்க தான் வந்தேன் ” என்று தயங்கிக்கொண்டு நின்றார்.
” சொல்லு விசாலம் என்ன விஷயம் ” என்றார் .
“இல்ல முதல் பிரசவத்துக்கு எப்பவும் அம்மா வீட்டுக்கு தான் பொண்ணை கூட்டிப் போவாங்க. அந்த குடுப்பனை தான் எங்களுக்கு இல்லாம போயிருச்சு. இப்போவாச்சும் கிளியை எங்க வீட்டுக்குக் கூட்டிப் போய் ஒரு ஆறு மாசம் கூட வெச்சுக்கலாம்னு,. ” என்று அவர் தயங்கிக்கொண்டே கேட்க..
“ஆறு மாசமா !?” என்று இரு குரல் ஒன்று போலவே கேட்டது.
இளங்கிளி தன்னை விட்டுப் பிரிந்து ஆறு மாசம் இருக்க வேண்டுமே என்று ராவண் தான் அதிர்ச்சியானான் என்றாள் . அவனைப் போலவே அதிர்ச்சியான ஒரு ஜீவன் வேறு யாரும் இல்லை அது கயல் தான்.
“ஏன் டி , ஐரா தான் அவன் பொண்டாட்டி எங்க அவனை விட்டுக் கிளம்பிருவாளோனு ஷாக் ஆகுறான் , உனக்கு என்ன டி வந்துச்சு ” என்று அவள் தலையில் இடித்தார் கமலா.
“அத்தை தலையில அடிக்காதிங்க.. நான் வளர மாட்டேன் ” என்று தலையை தேய்த்துவிட்டுக் கொண்ட கயல் . “அக்காவைப் பிரிஞ்சு இருக்குறது எனக்கும் கஷ்டமா இருக்காதா?.. நான் இந்த வீட்ல சந்தோசமா ஒரு குடும்பமா இருக்குறதுக்கு காரணமே அவங்க தான் . அவங்க இல்லாம எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் ” என்று சற்று குரல் நெகிழ்ந்து போக சொன்னாள்.
கிளியின் மீது அவள் வைத்திருக்கும் பாசம் அளவிட முடியாதது என்று ஒவ்வொரு முறையும் உணர்த்திக் கொண்டிருக்கிறாள் கயல்.
“உங்க பாசத்தை அப்பறோம் காட்டுங்க , எங்கக்காவை ஒரு ஆறு மாசம் எங்க அத்தை வீட்டுக்கு அனுப்புங்க. ” என்றாள் நிலா.
“அத்தை அவளை நான் எங்கையும் அனுப்பறதா இல்ல.. ‘ என்றான் ராவண் அவசரமாக.
“இல்ல மாப்பிளை அது வந்து.. ” என்று மணிகண்டன் ராவணின் பிடிவாதமான பேச்சைக் கண்டு அவனிடம் பேச சற்றுத் தயங்க,
“கிளியை உங்க கூட வெச்சுப் பாத்துக்கணும் அவ்ளோ தானே.. அதுக்கு ஏன் அவ அங்க வரணும். பேசாம ஒரு ஆறு மாசத்துக்கு நீங்க இங்க வந்து தங்கிடுங்களேன் ” என்றான் அடுத்து,
“அது எப்படிங்க மாப்பிள்ளை அது நல்லா இருக்காதே.. ‘ என்றார் அவர் .
“அப்போ கிளியை நீங்களும் கூட்டிட்டுப்போறேன்னு சொல்றது நல்லா இல்ல ” என்றான்.
“டேய் அவங்களுக்கும் ஆசை இருக்கும் இல்ல. அவங்க பொண்ணை இந்த மாதிரி நேரத்துல பக்கத்துல வெச்சு அவளை பார்த்துக்கணும்னு. போய்ட்டு வரட்டும் டா ” என்றார் வேதவள்ளி.
“பாட்டி நீ சும்மா இரு. நான் இவளை எங்கையும் அனுபிரதா இல்ல ” என்றவன் “நீ வா நாம மேல போலாம். இங்க இருந்தா உன்னை இவர்களே அனுப்பி வெச்சிருவாங்க ” என்று இளங்கிளியின் கையைப் பற்றி அழைத்தான் ராவண்.
“ஏங்க எல்லாரும் இருக்காங்க கையை விடுங்க.. ” என்று அவனிடம் இருந்து கையைப் பிரித்துவிட்டபடி சொன்னாள் கிளி.
அவளை முறைத்தவன் “இப்போ நீ வரியா? இல்லையா?” என்றவன் குரலில் ஒரு இறுக்கம் இருந்தது.
ராவண் தங்கள் மகள் மீது வைத்திருக்கும் பாசம் கண்டு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவளை தங்களுடன் அனுப்பமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான் என்று வருத்தமாகவும் இருந்தது.
“விசாலம் அவன் சொல்றதும் சரியா தானே இருக்கு. பேசாம நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்ல வந்து தங்கிக்கலாமே ” என்றார்.
“இல்லக்கா அது வந்து .. “என்று விசாலாட்சி தயங்க.
“அண்ணி, எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல . நீங்க இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்க ” என்றார் சரோஜினி.
“ஏன் ம்மா , என்ன ஆச்சு?” என்றார் வேதவள்ளி .
“என்னையும், நிலவையும் இனிமேல் இவங்ககூடவே வந்து நிரந்தரமா தங்க சொல்லி நேத்து தான் என் அண்ணா வீட்டுக்கு கூட்டி வந்தாங்க. நாங்க இருக்கோம்னு தான் அண்ணி யோசிக்கறாங்கனு நினைக்கிறேன். அதனால தான் சொல்றேன் . நாங்க வேணா எங்க பழைய வீட்டுக்கே போறோம். அண்ணியும், அண்ணாவும் இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும். அதுக்கு அப்பறோம் கூட நாங்க அவங்க கூட வந்து இருக்கோம் ” என்றார் சரோஜினி.
அதுவரை அமைதியாக இருந்த இளங்கிளி “அத்தை ஒரு பிரச்னையும் இல்ல. நானும் என் பசங்க மூணுபேரும் நம்ம வீட்டுக்கே வரோம் . எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. ” என்றாள்.
அவள் சொன்னது கேட்டு மணிகண்டன், விசாலாட்சி, சரோஜினி, நிலா என நால்வரும் சந்தோசமாகினர்.
ராவண் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இளங்கிளியைப் பார்க்க..
கயலோ அழுவது போல ஆகிவிட்டாள்.
இருவரும் இளங்கிளியின் முடிவைக் கேட்டு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்றாலும் இருவருக்கும் வருத்தம் மட்டுமே இருந்தது.
“சரி என் மருமகளே சொல்லிட்டாளே.. அப்போ உங்க வீட்லையே வந்து கொஞ்ச நாள் இருக்கட்டும். நாங்க அடிக்கடி வந்து எல்லாரையும் பாத்துகிறோம் ” என்றார் வரதராஜன்.
“ஹையா!.. நாங்க பாட்டி , தாத்தா வீட்டுக்குப் போறோம்.. ‘என்று ஆதி சந்தோசத்தில் துள்ளிக் குதிக்க..
அல்லியோ “நான் அத்தை கூடவே இருக்கேன் . நானும் வந்துட்டா அத்தை தனியா இருப்பாங்க ” என்றாள் மித்ராவின் காலைக் கட்டிக்கொண்டு.
“அச்சோ அல்லிம்மா , இங்க தான் எல்லாரும் இருக்காங்களே.. நீ பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வா.. ” என்று அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் மித்ரா,
“அல்லி நான் வேணா அத்தையை பாத்துக்கிறேன் டி.. ‘என்று அவள் கையை பற்றிக்கொண்டு யஷ்வந்திகா பேச..
“ம்ஹும் நான் எங்கையும் போகல.. அத்தை கூட தான் நான் இருப்பேன் ” என்று அவள் அடம் பண்ண..
“அல்லி, அத்தை சொன்னா கேக்கணும் நீ.. ” என்று அவளை தன் பக்கம் திருப்பினாள் மித்ரா.
“ம்ம்.. ” என்று அல்லி கூற..
“நீ அம்மா கூட போய் பாட்டி வீட்ல இரு. நானே தினம் உன்னை பாட்டி வீட்டுக்கு வந்து கூப்டு ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போறேன். டெய்லி ஈவினிங் பாட்டி வீட்ல விட்டுட்டு வரேன் ஓகேவா?” என்றாள்.
சிறிது நேரம் யோசித்த அல்லி “சரி அத்தை அப்போ தினமும் நீங்க தான் வந்து எங்களை ஸ்கூல் கூட்டிப் போகணும் ‘ என்றாள்.
“சரி டி.. ” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“ஏய் யசு , நீ அத்தையை பத்திரமா பாத்துக்கோ டி.. ” என்று தன் பணியை யசுவிற்கு தாரை வார்த்தாள் அல்லி.
“ம்ம் சரி டி.. நான் பாத்துக்கிறேன் ” என்றாள் யஷ்வந்திகாவும் .
“அது சரி.. டேய் மச்சான் நீயும், உன் பொண்டாட்டியும் இந்த ஜென்மத்துல ஒன்னு சேர்ந்து கொழந்தை பெத்துக்கிட்டது போல தான் ” என்று ராஜ் கிண்டலடிக்க.
“அல்லி நீ உன் பாட்டி வீட்டுக்குப் போன பிறகு , உன் மித்ரா அத்தையை தாஜா புடிச்சு அவ பையனை என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேனா இல்லையானு பாரு ” என்றாள் கயல்.
“ஆஹ்!.. முடியாது. அப்போன்னா நான் இங்க இருந்து போக மாட்டேன் “என்று அல்லி அடம் பிடிக்க.
“ஏய் சும்மா எப்போ பாரு அவகிட்டையே நீ வம்புக்கு நிக்குற.. ” என்று கயலை திரிய மித்ரா.
“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. நீ பாட்டி வீட்டுக்கு சமத்தா போயிடு வா..” என்றாள் அல்லியை சமாதானம் செய்து.
“அப்போ எனக்கு ப்ரோமிஸ் பண்ணுங்க ” என்று கையை நீட்டினாள் அல்லி,
“ப்ரோமிஸ் என் பையனை உனக்குத் தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன் சரியா ” என்று அவள் கையில் அடித்து சத்தியம் செய்தாள் மித்ரா.
அதன் இளங்கிளி அவள் அம்மா வீட்டிற்குக் கிளம்ப தன் உடைகளையும்., ஆதி , அல்லி உடைகளையும் எடுத்து வைப்பதாக சொல்லி தன் அறைக்கு சென்று விட,,
அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த ராவனோ சற்று நேரத்தில் இளங்கிளியைக் காண அவர்கள் அறைக்குள் வந்து கதவை அடைத்திருந்தான்.
