News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னோட ஸ்னாக்ஸ் தான் இங்க இருக்கே.. மூர்க்கன் 37

by Sinamika Writes
790 views
A+A-
Reset

மூர்க்கன் 37

“ஏய் என்னை விட்டுட்டு உன்னால எப்படி டி அங்க போக முடிஞ்சுது, நீ இல்லாம எனக்கு இங்க தூங்க முடியல டி.. உன்னோட நினைப்பாவே இருக்கு..” என்றான் ராஜ் ஏக்கமாக.

“என்ன டா இப்படி சொல்லிட்ட.. இங்க அக்காவை எப்படி தனியா விடமுடியும், அதுவும் அந்த ரக்ஷனா இருக்கா இல்ல. அவ இருக்க இடத்துல எப்படி அக்காவை தானியா விட முடியும் ” என்றவள் குரலில் இளங்கிளியின் குரலில் அக்கறை கலந்திருந்தது.

“புரியுது டி ஆனா… என்று ராஜ் தயங்க.

“கொஞ்ச நாள் தானே டா செல்லம் பொறுத்துக்கோ , சீக்கிரம் வந்துடறோம்” என்றாள் கயல்.

“சரி டி.. ” என்றவன் “உன்னைப் பிரிஞ்சு முதல் தடவை இருக்கேன் அதான் என்னால தாங்க முடியல. எனக்கே இப்படி இருக்கு. அண்ணாவையும், அண்ணியையும் நினைச்சுப் பாரேன் . நிஜமாவே அவங்க ரெண்டு பேரும் ரொம்பப் பாவம். அண்ணி மாசமா இருக்க அப்போ அவங்களை தனியா விட்டுட்டு இருந்த அப்போ அவருக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்  “என்றான்.

“ம்ம் ஆமாங்க. அக்காவுக்கும் அதே நிலைமை தான். யாருன்னே நினைவு இல்லாம வயித்துல குழந்தையை சுமந்துட்டு அந்த குழந்தைக்கு அப்பா யாருண்ணும் தெரியாம. ஊர் ஆளுங்க ஏச்சும், பேச்சும் வாங்கிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க ” என்றாள்.

“ம்ம்.. ஆமா டி. இப்போ ஒருத்தரை ஒருத்தர் பார்த்தும், பக்கத்துல பக்கத்துல இருந்தும் அவங்களால புருஷன் பொண்டாட்டினு சொல்ல முடியாம இருக்குறது எல்லாம் எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அவங்களுக்கு எல்லாம் நியாபகம் வந்தும் அந்த ரக்ஷனாவுக்காக எல்லாம் பொறுத்துகிட்டு தனியா வாழுறது எவ்ளோ கஷ்டம்” என்றான்,

“ம்கூம்.. நீங்க தான் நினைச்சிட்டு இருக்கீங்க. அவங்க தனியா இருந்து கஷ்டப்படுராங்கனு, அது தான் இல்ல.. ” என்றாள்.

“என்ன  டி சொல்ற..  “என்று ராஜ் ஆர்வமாக, “நீ இரு நான் வீடியோ கால் பண்ணி சொல்றேன் அப்படியே உன்னை பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு ” என்று கட்டிலில் படுத்திருந்தவள் அப்படியே நோர்மல் காலை வீடியோ காலுக்கு கன்வெர்ட் செய்தாள்.

“டேய் என்ன டா இது.. எங்க இருக்க நீ இப்போ ” என்றாள் அவன் பின்னால் தெரிந்த இயற்கை காட்சிகளைப் பார்த்தபடி.

“இங்க மாமாவோட வயலுக்கு வந்தேன். வீட்ல இருக்க போர் அடிச்சுது. அதான் அப்படியே காத்தோட்டமா சுத்தலாம்னு வந்துட்டேன்” என்று தோட்டத்தில் இருந்த மர நிழலில் போடப்பட்டிருந்த கட்டிலில் வந்து படுத்தவன் கால் மேல் கால் போட்டபடி அவளைப் பார்த்தான்.

“யசு.. எங்க? அவளையும் கூட்டி வந்திருக்கலாமே.. இதெல்லாம் அவ பார்த்து இல்ல தானே.. ” என்றாள் அவனைப் போலவே மல்லாக்க கட்டிலில் படுத்துக்கொண்டு  பேசினாள்.

“யாரு அவளா? ஆதியும் , அல்லியும் வந்த அப்பறோம் என்னைக் கண்டுகிறதே இல்ல.. கிட்ட போனா பேருக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு அவங்க கூட விளையாடப் போய்டுறா டி.. ” என்றான்.

“அச்சோ … என் செல்லதுக்கு அங்க கம்பெனி கொடுக்க யாருமில்லையா?” என்றாள் எழுந்து அமர்ந்தபடி.

“ம்ம்.. நீ இருந்திருந்தா இந்த நேரத்துக்கு நீயும் , நானும் இந்த ஊரை சுத்தி பாத்துட்டு அபப்டியே இயற்கையோட இயற்கையா கை கோர்த்துட்டு வந்திர்களாம். ஒண்ணா பம்ப் செட்டில் குளிச்சிருக்கலாம். இந்த இயற்க்கை சூழலல்ல ஒரு ரொமான்ஸை போட்டிருக்கலாம் டி..” என்றான் ஏக்கமாக.

“பரவால்ல விடு டா. நான் அங்க வந்த அப்பறோம் நீயும், நானும் மட்டும் ஒரு நாள் உன் மாமாவீட்ல போய் தங்கிட்டு நீ மிஸ் பன்றேன்னு சொன்ன எல்லா விஷயத்தையும் இருந்து என்ஜாய் பண்ணிட்டு வருவோம் ” என்றாள்.

“ஆமால்ல .. அப்போ நீ சொன்னது போல ஒரு நாள் இங்க வரலாம் ” என்றவன் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு அவளிடம் கதை பேசாத துவங்கி இருந்தான் .

இருவரும் தீவிரமாக கதை பேச..

“டேய் கொஞ்சம் அப்டியே லைன்ல இரு. நான் சுச்சா போய்ட்டு வரேன்” என்று கயல் போனை கட்டிலில் வைத்துவிட்டு சென்றுவிட..

அப்போது தான் மாலை ஸ்னாக்க்ஸ் செய்து எடுத்து வந்த இளங்கிளி அதை கயலுக்கு கொடுக்க சென்றாள்.

அறைக்குள் அவளைக் காணாதவள் “எங்க போயிருப்பா… ” என்று “கயல்.. எங்க டி இருக்க?” என்று குரல் கொடுக்க..

“அக்கா நான் பாத்ரூம்ல இருக்கேன் . இதோ வந்துடறேன் ” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

“உனக்காக ஸ்னாக்ஸ் எடுத்து வெச்சிருக்கேன் நீ சாப்பிடு. நான் அவருக்கு கொடுத்துட்டு வரேன்  “என்றவள் ஸ்நேக்ஸாய் வைத்துவிட்டுத் திரும்ப அவள் பின்னே உரசும் நெருக்கத்தில் நின்றிருந்தான் ராவண். அவனை கண்டதும் அதிர்ந்தவள் அவன் மீது மோதி தடுமாறி பின்னால் விழப்போக . அவள் இடையில் கையைக் கொடுத்து தன்னோடு இழுத்து அணைத்தவன் “எங்க டி போன.. ரொம்ப நேரம் ஆளையே காணோமே.. “என்றான்.

“உங்களுக்கு தான் ஸ்னாக்ஸ் செய்துட்டு  இருந்தேன் ” என்று கையில் இருந்த தட்டைக் காட்டினாள்.

“அதை நீ சாப்பிடு , என்னோட ஸ்னாக்ஸ் தான் இங்க இருக்கே.. ” என்று அவளை சுவற்றில் தள்ளி அழுத்தியவன் இளங்கிளியின் உடலின் மீது தன் மொத்த எடையையும் வைத்து அழுத்தியவன் கீழே அவள் இதழை சுவைக்கக் குனிய..

“ஏங்க.. கய.. ” என்று அவள் கயல் உள்ளே இருக்கிறாள் என்று சொல்ல வருவதற்குள் அவள் இதழை மென்று தின்னத் துவங்கி இருந்தான்.

முதலில் அவன் முத்தத்தில் முரண்டு பிடித்தவள் பின் அந்த முத்தத்தில் கரைந்து உருக ஆரம்பித்தாள். கையில் இருந்த தட்டு நழுவி கீழே விழ.. அதை பொருட்படுத்தும் மனநிலையில் இருவரும் இல்லை.

“என்ன அக்கா கீழ எதுவும் போட்டுட்டீங்களா?” என்று சொல்லிக்கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் அங்கே முத்தக் காட்சியைப் பார்த்து வாயில் கையை வைத்துக்கொண்டாள்.

அவர்களை அதிர்ந்து பார்த்தவளுக்கு அப்போது தான் வீடியோ காலில் பாதியில் விட்டு சென்ற ராஜ் நினைவிற்கு வர..

சத்தமில்லாமல் மெல்ல நடந்து வந்து போனைப் பார்க்க..

ராஜ்ஜோ தன் அண்ணன் செய்யும் ரொமான்ஸை பார்த்துவிட்டு ஒரு கையால் முகத்தை மூடி விரல்களுக்கு இடையில் இவர்களின் முத்தக்காட்சியை திருட்டுத் தனமாக ரசிக்க..

அதை கண்டு கொண்ட கயலோ.. போனை எடுத்து தன் முகத்தைக் காட்டினாள்.

அவளைக் கண்டதும் ஈ.. என்று பல்லைக் காட்டி சிரித்தவன் ” ரோம்…” என்று பேச.

“ஷ்! ” பேசாதே.. என்று வாயில் விரல் வைத்து அவனை பேசவிடாமல் செய்தவள் மெல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்து அறைக்கதவை வெளியே இருந்து மெல்ல சாற்றிவிட்டு நேராக மொட்டை மாடிக்கு சென்றாள்.

“என்னங்க இப்படியா உங்க அண்ணாவும், அண்ணியும் முத்தம் கொடுக்கிறதை திருட்டுத் தனமா பார்த்துட்டு இருப்பிங்க.. ” என்றாள்.

“ஏய்.. நான் என்னவோ அவங்க முத்தம் கொடுக்கிறதை ஒளிஞ்சு நின்னு பாக்குறது போல பேசுற நீ.. அவங்களா வந்து நான் வீடியோ காலில் இருக்குறது கூட கவனிக்காம திடீர்னு ரொமான்ஸ் பண்ணினா நான் என்ன டி செய்வேன். அதுவுமில்லாம நான் தான் முகத்தை மூடிட்டேனே.. ‘ என்றான்.

“ஆமா முகத்தை மூடிட்டு விரல் இடுக்குல நீங்க பார்த்ததை நானும் தானே கவனிச்சேன் . பிராடு.. .பிராடுங்க நீங்க ” என்று அவனை செல்லமாகக் கொஞ்சினாள்.

“ம்ஹும்..  என் அண்ணா இவ்ளோ வருஷம் மிஸ் பண்ணினதை எல்லாம் சேர்த்து வெச்சு அண்ணிக்கு முத்தம் கொடுத்தே சரி பண்ணிருவார் போல.. ” என்றான் .

“யாரு.. உங்க அண்ணாவா?” என்றவள் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு “இன்னிக்கு காலையில் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?”என்றாள்.

“என்ன டி ஆச்சு?” என்று ஆர்வமாக எழுந்து அமர்ந்தான் ராஜ்.

“ம்ம்.. ரொம்ப ஆர்வம் தான் உங்களுக்கு ” என்றவள் காலையில் இளங்கிளியை தூக்கி சென்றதும் இருவரும் நீண்ட நேரம் ரக்ஷணா அறையில் அவள் இல்லாத நேரம் ரொமான்ஸ் செய்துவிட்டு வந்ததையும், அதுவும் நீண்ட நேரம் குளித்துவிட்டு இளங்கிளி ஈரம் சொட்ட தங்கள் அறைக்குள் வந்ததையும் கயல் ஒன்றுவிடாமல் சொல்ல..

அதைக் கேட்ட ராஜ் வாயைப் பிளந்து இருந்தான்.

“என்ன டி சொல்ற.. அந்த ரக்ஷணா எதுவும் வந்துடலையே.. “என்றான்.

“ம்ஹும்.. இல்ல ஆபீஸ்ல ஏதோ வேலை இருக்குன்னு காலைல போனவ மதியம் சாப்பிடக் கூட வரல.. இன்னுமே அவளைக் காணோம். அதான் உங்க அண்ணன் அவள் இல்லாத நேரத்துல இங்க ரொமான்ஸ்ல பூந்து விளையாடிட்டு இருக்கார்” என்றாள்.

“ம்ஹும்.. பேசாம நானும் உங்க கூட கிளம்பி அங்க வந்திருக்கலாம் போல.. அவங்க ஒரு பக்கம் ரொமான்ஸ் பண்ணும்போது நாமளும் ரொமான்ஸ் பண்ணிருக்கலாம் ” என்று ஏக்கமாக சொன்னான்.

“ம்ம்.. ஆசையைப் பாரு.. ” என்று வெட்கப்பட்ட கயல் “என்னங்க.. ” என்று  குழைந்தாள்.

“என்ன டி.. ” என்று பதிலுக்கு அவனும் குழைய..

“எனக்கு உங்க கூட இருக்கனும் போல இருக்கு.. ” என்றவள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொள்ள..

“எனக்கும் தான் டி.. ” என்று  கட்டிலில் நெளிந்தான்.

“சீக்கிரம் இங்க இருக்குற பிரச்சனை எல்லாம் சரி பண்ணிட்டு அங்க வந்திரனும் டா.. ” என்றாள். 

“ம்ம்ம் சரி டி..”என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .

இந்த ரெண்டு ஜோடியும் ஆளுக்கு ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க..

இன்னோரு ஜோடி என்ன பண்ணிட்டு இருக்குன்னு பாக்கலாமா?

நாளை காலை 7 MANIKKU அடுத்த எபி வரும் டேர்ஸ் ரொமான்ஸுடன்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.