News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னை விட்டு போக எப்படி மனசு வந்துச்சு,தப்பு 24

by Sinamika Writes
554 views
A+A-
Reset

தப்பு 24 என்னை விட்டு போக எப்படி மனசு வந்துச்சு 

“மேடம்!.. மேடம்.. எழுந்திருங்க ” என்று டிரைவரின் குரலை கேட்டு கண்விழித்தாள் பூவிழி.

சூரிய வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு கண்களைத் திறக்கவிடாமல் கூசச் செய்ய. கண்களைக் குறுக்கிக்கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்தவள் திரும்பி காருக்கு வெளியே நின்றவரைப் பார்த்தாள்.

“மேடம் இறங்குங்க ” என்று அவன் கதவை திறந்து விட..

இன்னமும் தூக்கம் கலையாத முகத்துடன் நெஞ்சோடு கட்டிக்கொண்டிருந்த பையை இருக்க பற்றியபடி கீழ் இறங்கினாள்.

அவள் இறங்கியதும் காருக்குள் இருந்து ஒரு கவரை  எடுத்து அவளிடம் ட்ரைவர் நீட்ட.. அதைப் புரியாமல் வாங்கிகொண்டவள் “என்ன அண்ணா இது?” என்றாள்.

“ஐயா உங்ககிட்டே இதை கொடுத்து செலவுக்கு வெச்சுக்க சொன்னார் ” என்றவன் சிறிது யோசித்துவிட்டு “உங்களை இந்த வீட்டை விட்டு எங்கையும் போகக் கூடாதுனு சொன்னார். மாச மாசம் செக்கப்புக்கு என்னை வந்து உங்களை ஆஸ்பத்திரி கூட்டிப்போக சொல்லிருக்கார். உங்களுக்கு குழந்தை பிறக்குற வரை நான் இங்க தான் இருக்கப்போறேன் ” என்றார் அவர்.

“ம்ம்ம் சரிங்க அண்ணா, நான் எங்கையும் போகல.. எனக்கு வெளிய என்ன வேலை இருக்கு ” என்றவள் திரும்பி அந்த பெரிய வீட்டைப் பார்த்தாள்.

சுற்றிலும் செடி ,கொடிகள், பூத்துக்குலுங்கு மரங்கள் என ஒரு சிறிய சோலையைப் போல அந்த இடம் காட்சி அளித்தது. அதற்குள்ளே நடக்கும் பாதை இருக்க.. அது வழியே உள்ளே சென்றால் அந்த பெரிய வீடு இருக்கும் , பழங்கால வீடு தான் என்றாலும். நவீன முறையில் அதன் பழமை அமராமல் புனரமைத்து இருந்தனர். வெளியே பார்த்தாள் பழைய வீடு போல தான் தெறியும். உள்ளே அனைத்தும் மாடர்ன் வாழ்க்கைக்கு கச்சிதமாகப் பொருந்தும் வகையில் வீடு இருக்கும்.

“பாப்பா பையைக் கொடுங்க. நான் எடுத்து வரேன் “என்று அவள் பின்னிருந்து குரல் கேட்க.

சட்டென திரும்பிப் பார்த்தவள் அவள் எதிரே ஐம்பத்தைத் தாண்டிய நரை முடியுடன் கூடிய அங்குசாமி நின்று இருந்தார்,

“நீ.. நீங்க ” என்றாள் பையை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டு.

“நான் இந்த வீட்டு வாட்ச்மென், பெரு அங்குசாமி” என்றார் வெள்ளை மீசை வளைய சிரித்துக்கொண்டே.

“ம்ம்.. இல்ல நானே எடுத்துக்கிறேன் ” என்று அவரிடம் அந்த பையைத் தராமல் வைத்துக்கொண்டாள்.

“பௌன்ராசு! நீ போய் காரை செட்டுல போட்டுட்டு வந்திரு. நான் பாப்பாவுக்கு வீட்டைக் காட்டிட்டு வரேன் “என்றார்.

“சரிண்ணா ” என்று பௌன்ராசு காரை எடுத்துக்கொண்டு செட்டை நோக்கி செல்ல..

“உள்ள வாங்க பாப்பா ” என்று அங்குசாமி உள்ளே சென்றார்.

அவர் பின்னாலேயே சென்ற பூவிழி அந்த அழகிய சோலையை அண்ணாந்து பார்த்துக்கொண்டே மெல்ல நடந்து சென்றாள்.

“பூவுஉ..” என்று அப்போது அவள் காதில் பழக்கப்பட்ட குரல் கேட்கவும் திரும்பி குரல் வந்த திசை நோக்கிப் பார்த்தாள்.

அங்கே இவள் பெயரை அழைத்தபடி பூவிழியை நோக்கி ஓடி வந்தார் காவேரி அவள் அம்மா.

“அம்மாஆ!” என்று அவரைக் கண்டதும் கையிலிருந்த பையை அபப்டியே போட்டுவிட்டு வேகமாக அவரை ஓடி சென்று  கட்டிக்கொண்டாள்.

“ஏய்! பாத்து டி.. வயித்துல புள்ளையை வெச்சுட்டு இப்படியா ஓடி வருவ “என்று அவளைத் தாங்கிப் பிடித்து தோளோடு அணைத்து நின்றார் காவேரி.

“அம்மா! எப்படி இருக்க? இவ்ளோ நாள் எங்கம்மா இருந்தா? உன்னைப் பார்க்காம.. உன்கூட பேசாம நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனு தெரியுமா? உனக்கு என்ன ஆச்சோ .. ஏதாச்சோன்னு நினைச்சு பயந்து போய்ட்டேன் ” என்று அவர் தோளில் முகம் புதைத்து அழுதாள்.

“எனக்கு எதுவும் ஆகல டி , என்னைப் பாரேன் நான் நல்லா தானே  இருக்கேன்” என்று அவளைப் பிரித்துவிட்டு அவள் முகத்தைக் கைகளால் தாங்கிக்கொண்டவர். “நீ முன்ன விட பூசுன போல ஆகிட்டா புள்ள. எல்லாம் மாசமா இருக்கறதுனால வந்ததுன்னு நினைக்கிறேன்” என்றார்,

அவரை மென்மையாகப் பார்த்து சிரித்தவள் அவரை மேலிருந்து கீழாகப் பார்த்து “உனக்கு ஒன்னும் ஆகளையே ம்மா ” என்றாள்.

அப்போது அவள்  பையை எடுத்து வந்த அங்குசாமி “இந்தாங்க உங்களைப் பார்த்த சந்தோஷத்துல பையை கீழ போட்டிருச்சு பாப்பா ” என்று காவேரியின் கையில் கொடுத்தார்.

அதை வாங்கிகொண்டவர் “வா டி உள்ள போலாம் ” என்று அவளை அழைத்து செல்ல..

“எதுவும் வேணும்னா சொல்லுங்க. நான் வாங்கிட்டு வந்து தரேன் ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவளை அழைத்து உள்ளே சென்றவர் “உக்காரு புள்ள.. ” என்று சோபாவைக் காட்ட.

பூவிழி சோபாவில் அமராமல் மேடிட்ட வயிற்றை பிடித்துக்கொண்டே கீழே அமர்ந்தவள் “இங்கையே உக்காந்துகிறேன் ம்மா, ராஜேந்திரன் சார் நாம என்ன பண்றோம்னு பாத்துட்டு இருப்பார் ” என்றவள்  சுற்றிலும் கேமெரா எங்கு மாட்டி இருக்கிறது என்று பார்த்தாள்.

“என்ன டி சொல்ற!” என்று பயந்து கொண்டே அவள் அருகே காவேரி வந்து அமர..

“அங்க பாரு ” என்று அந்த ஹாலில் இரண்டு மூன்று இடங்களில் மாட்டி வைத்திருந்த கேமெராக்களை சுட்டிக் காட்டி சொன்னாள்.

“இத நான் பாக்கவே இல்லையே.. ” என்று காவேரி வாயில் கைவைத்துக்கொண்டவர்

“ஆமா உனக்கு எப்படி இதெல்லாம் தெறியும் ” என்றார்.

“அதுவா அவருக்கு டிரீட்மென்ட் எடுக்க நாங்க ரெண்டு பேரும் கேரளா போயிருந்தோம் . அங்க இருந்த வீட்ல இந்த மாதிரி தான் மாட்டி வெச்சிருந்தார். அது தெரியாம நான் ஒரு நாள் எட்டு மணி வரை தூங்கிட்டேன். அதை பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி காச்சு மூச்சுனு காத்திட்டார் ” என்று அவள் சொல்ல.

“அடப்பாவி! இப்படி எல்லாமா பண்ணுவாங்க.. புள்ளைக்கு பின்னாடியே என்னேரமும் வேவு பாக்குறான் போல. என் புள்ளை வாழ்க்கைய ஒரு வழி ஆக்கினதும் இல்லாம , இப்படி எல்லாமா பண்ணுவான் . என் புள்ள நல்லா இருக்கணும்னு தானே நான் அவன் பண்ணினதை எல்லா பொறுத்துகிட்டு இவ்ளோ நாளும் இருந்தேன் . ஆனா உன்னையும் அவன் நிம்மதியா இருக்க விடலையா?”என்றார் காவேரி.

“ஷ்! அம்மா மெல்லப் பேசுங்க . நாம் பேசுறத சார் கேட்டுரப் போறாரு ..”என்று அவரை எச்சரிக்கை செய்த பூவிழி நிமிர்ந்து அந்த கேமெராவைப் பார்த்தாள்.

“என்ன டி சொல்ற.. நம்ம ரெண்டு பேர் பேசுறதையும் கேட்டிருப்பாரா அவரு.” என்று பயந்தவர் கேமெராக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே “ஐயா! என்னை பண்ணிச்சிருங்க .ஏதோ ஒரு கோபத்துல பேசிட்டேன். என் புள்ள கஷ்டப்படுதுனு ஆதங்கத்துல பேசிட்டேன் ” என்று கேமெராவை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்.

“பேசின பிறகு மன்னிப்பு வேணுமா?” என்ற கம்பீரக் குரல் அந்த ஹாலில் எதிரொலிக்க..

அதில் ஒலித்த ராஜேந்திரனின் குரலைக் கேட்டு இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“பூவு… நீ சொன்ன மாதிரி நான் பேசினது எல்லாம் கேட்டிருச்சு டி..”என்று அவர் பயந்தார்,

“நான் தான் சொன்னேல்ல மா “என்றவள் “சார் என் அம்மா தெரியாம பேசிட்டாங்க. அவங்களை மன்னிச்சிருங்க ” என்று அவருக்காக மன்னிப்புக் கேட்டாள் பூவிழி.

“ம்ம்.. ” என்று குரலைக் கனைத்தவர் “நீ இங்க வந்து இறங்கினதும் ராசு உன்கிட்டே விபரம் சொன்னானா?” என்றார் அதிகாரமாக,

“ம்ம்.. நீங்க சொன்னது எல்லாமே சொல்லிட்டார்  “என்றாள் பூவிழி பாவியமாக,

“என்ன சொன்னான் ” என்றார்.

“குழந்தை பிறக்குற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே எங்கையும் உங்களுக்கு தெரியாம போகக் கூடாதுனு சொல்லி , எதுவும் தேவைன்னா வாங்கிக்க சொல்லி நீங்க கொடுத்ததா கொஞ்சம் காசு  கொடுத்தார்.” என்றாள்.

“சரி நான் சொன்னது போல இருக்கணும் சரியா?” என்றான்,

“ம்ம்.. ” என்று தலையை ஆட்டினாள்.

“காவேரி ” என்று அடுத்து அவரை அழைத்தார் ராஜேந்திரன் “ஐயா!” என்று கையைக் கட்டிக்கொண்டு பவ்வியமாக நின்று கேமெராவைப் பார்த்தார்,

“உன் பொண்ணுக்கு டெலிவரி ஆகுற வரைக்கும் பக்கத்துல இருந்து பாதுக்கத் தான் உன்னை இங்க கொண்டு வந்து விட்டிருக்கேன். அவளுக்கு வேல வேலைக்கு சாப்பாடு, மருந்து எல்லாமே கொடுக்கணும். அவ என்ன சாப்பிடணும், எப்போ சாப்பிடணும்னு எல்லாமே செய்து கொடுக்க ஆளுங்க வருவாங்க. அவங்க என்ன சொல்றங்களோ அது படி செய்திரு சரியா?” என்றார்.

“ஐயா! எதுக்குங்க சமைக்க ஆளுங்களை போட்டுட்டு நானே பூவுக்கு வேணும்ங்குறதை செய்து தரேன்  “என்றார்.

“இங்க நீ முதலாளியா? இல்ல நானா?” என்று கோபமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

“ஐயோ! நீங்க தான்..” என்று அவர் ஒரு அடி பின்னால் செல்ல..

“உன் பொண்ணு வயித்துல வளராது என் வீட்டு வாரிசு , அவளுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீ சொன்னதை மட்டும் செய் ” என்று காவேரியை அதட்ட.

“ம்ம் சரிங்க ஐயா ” என்று அவர் அமைதியாகி விட..

“பூவிழி!” என்று அதிகாரமாக அவளை அழைத்தார்.

“சார்!” என்று அவள் நிமிர்ந்து பார்க்க..

“கீழே கடைசில உன்னோட ரூம் இருக்கு பாரு அங்க நீ தங்கிக்க , அதுக்கு ரெண்டு ரூம் தள்ளி இருக்க அறையில் உன் அம்மா இருந்துக்கட்டும் ” என்றார்.

பூவிழிக்கு அவள் அம்மாவோடு இருக்கத் தான் ஆசை , ஆனால் ராஜேந்திரன் பேச்சை அவளால் மீற முடியாதே.. “சரி” என்று தலையை ஆட்டினாள்.

“சரி இப்போ நீ உன்னோட ரூமுக்குப் போ.. ” என்று அவளுக்குக் கட்டளையிட்டார்.

அவளும் தன் தாயைப் பார்த்துவிட்டு கையில் இருந்த பையை இருக்கப் பற்றியபடி ராஜேந்திரன் சொன்ன அறைக்கு மெல்ல நடந்து சென்றாள்.

காவேரியோ தன் மகளின் நிலை நினைத்து மனதிற்குள் ராஜேந்திரனை கண்ட மேனிக்குத் திட்டிக்கொண்டிருக்க..

“என்னை திட்டினது எல்லாம் போதும் வாசல்ல நான் சொன்ன ஆளுங்க வந்திருப்பாங்க. அவங்களை கூட்டிக்கொண்டு போய் பின்னால் இருக்க ரூம்ல தங்க சொல்லுங்க, அப்படியே கிட்ச்சனையும் காட்டிரு ” என்றார்.

“ஹா! ஆத்தி ! மனசுல நான் திரட்டுனது இவருக்கு எப்படி கேட்டிருக்கும். சரியா சொல்லிட்டாரே.. ” என்று நினைத்துக்கொண்டே “சரிங்க… ” என்று வாசல் பக்கம் சென்றார்.

இங்கே  அறைக்குள் வந்த பூவிழி தனக்காக கொடுத்த அறையை சுற்றிலும் பார்த்தாள். அழகாக குழந்தைகள் படம் நிறைய மாட்டப்பட்டிருக்க.. அதை அருகே சென்று பார்த்தாள் . அந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பார்த்தவளுக்கு அது யுகேந்திரனின் படம் என்று அவன் டீனேஜ் போட்டோ ஒன்றை வைத்துக் கண்டு கொண்டவள் அதை தன் விரல் கொண்டு மெல்ல வருடினாள்.

“மாமா , என்னை மன்னிச்சிருங்க. உங்ககிட்டே சொல்லாம வந்துட்டேன். இனி உங்களை எப்போ பாப்பேன்னு நினைச்சேன். ஆனா இந்த போட்டோவை பார்த்ததும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.. ” என்று கண்களில் வழிந்த துடைத்தபடி அவன் படங்களை தொட்டு தொட்டு பார்த்தாள்.

“இப்படித் தான் என் மகன் தனியா இருக்க அப்போ அவநக்கிட்டே பேசி அவனை வளைச்சு போட்டுக்கிட்டயா?” என்று அந்த அறைக்குள் ராஜேந்திரனின் குரல் ஒழிக்க..

சட்டென திரும்பியவள் “இல்ல.. இல்லங்க சார் ” என்று அவசரமாக மறுத்தாள்.

“அப்பறோம் எப்படி அவனை வளைச்சு அவனை கைக்குள்ள போட்டுக்கிட்டே.. நீ இங்கே இல்லேனு தெரிஞ்சதும் அவன் எவ்ளோ போகிட்டான் தெரியுமா? அவன்கிட்டே சொல்லாம கொள்ளாம இந்த வீட்டை விட்டு போய்ட்டேன்னு உன் மேல செம்ம கோவத்துல இருக்கான் ” என்றார் அவர்.

அதை கேட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டாள் . “என் மாமா என்னை வெறுத்துட்டாரா? ” என்று நினைத்தவள் “அவர் கோபம் நியாயம் தானே.. அவர்கிட்டே சொல்லாம வந்தது என் தப்பு தானே. ” என்று நினைத்தாள். “சொல்லிருந்தா உன் மாமா விட்டிருப்பாரா?”என்று அவள் மனம் கேள்வி கேட்டது அதற்கு கூட பதில் சொல்ல முடியாமல் இருந்தாள் பூவிழி.

“இங்க பாரு தினமும் நைட் ஒன்பது மணிக்கு நீ இந்த ரூம்ல ஆஜர் ஆகிடனும். இங்க கேமெரா எதுவும் இல்ல. நீ நிம்மதியா தூங்கலாம். ஆனா நீ பேசறதை நான் கேட்டுட்டு தான் இருப்பேன். சரியா  “என்றார்.

“ம்ம்.. சரிங்க சார் ” என்றாள்.

“நான் தினம் நைட் வந்து நீ என்ன சாப்பிட்ட.. அந்த நாள் முழுக்க என்ன பண்ணினேன்னு கேட்பேன் . எல்லாமே என்கிட்டே ஒன்னுவிடாம சொல்லணும் புரிஞ்சுதா?” என்றார்.

“ம்ம்.. புரிஞ்சுதுங்க சார் ” என்றாள்.

“அங்க இருக்க கப்போர்ட்ல உனக்கு போட்டுக்க டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன். நீ அதை மட்டும் தான் போட்டுக்கணும் ” என்றவர் “உன் கையில இருக்க ஆளுக்குப் பையில என்ன வெச்சிருக்க.. ” என்றார்.

“அது.. அது ஒண்ணுமில்லங்க சார் ” என்று பையை மார்போடு அணைத்துப் பிடித்தாள்,

“இப்போ அதுல என்ன இருக்குன்னு சொல்லபோறியா? இல்லையா?: என்று குரல் வந்து விழுந்த அடுத்த நொடி.

“இதுல .. இதுல அவரோட டிரஸ் ,அப்பறோம் அவர் போட்டோ இருக்கு ” என்றாள் அவசரமாக,

“இதெல்லாம் எடுத்து வந்து என்ன ஆகப்போகுது. என்னை விட்டுட்டு போகணும்னு முடிவு பண்ணிட்டே இல்ல.. ” என்று குரல் வரவும்.

பூவிழி குழப்பமாக பார்த்தாள்.

“டேய் இவ்ளோ நேரம் உன் அப்பா மாதிரி பேசி மைட்டேன் பண்ணினே இல்ல. இப்போ எதுக்கு இப்படி எமோஷனலா பேசி நீயே அவகிட்டே காட்டி கொடுத்திருவ போல இருக்கே..  ” என்று தனக்குத் தானே திட்டிக்கொண்டு யுகேந்திரன் குரலை மாற்றி “என் பையனை விட்டுட்டுப் போகணும்னு முடிவு பண்ணிட்டு இதை எடுத்து வந்தா மட்டும் நீ அவன் மேல பாசமா இருக்கேன்னு அர்த்தமாகிடுமா?” என்று சொன்னவன் “சரி நான் உன்கூட நைட் பேசுறேன் ” என்று மைக்கை ஆப் செய்தவன்.

“இந்த அப்பா மாதிரி பேசுறதுக்குள்ள அப்பாடான்னு ஆகிடுச்சு ” என்று நினைத்தபடி பூவிழியையும், அவள் அம்மாவையும் ஏன் தன் அப்பா இவ்வ்ளவு கஷ்டப்படுத்துகிறார் என்று தெரிந்த்த்து கொண்டே ஆக வேண்டும்  என்று நினைத்தபடி கீழே வீல் சேரில் சென்றான்.

“என்ன டா சொல்றிங்க. பூவிழி வெளிய வரவே இல்லையா?” என்று ராஜேந்திரன் தன் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“ஆமா சார் நான் அஞ்சு மணி வரை நின்னு பார்த்தேன். நீங்க சொன்ன பொண்ணு பின் வாசல் பக்கம் வரவே இல்ல.. ” என்றான்.

“சரி வை நான் பாத்துக்கிறேன்  “என்று போனை வைத்தவர் யோசனையுடன் திரும்ப..

“டேட்! பூவிழி எங்க?” என்று இறுகிய குரலில் கேட்டபடி அவரை நோக்கி கம்பீர நடை நடந்து வந்தான் யுகேந்திரன்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு பக்கம் திணறியவர் மறுபக்கம் அவன் நடந்து வந்த கம்பீரத்தை பார்த்து வாயடைத்து நின்றார்.

அவர் முன் ஆள் உயரத்திற்கு வந்து நின்றவன் “சொல்லுங்க பூவிழி எங்க ?”என்றான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.