EPI 233
துர்காவின் மாடலிங் ஆட் விஷயமாக ஸ்ரீ டென்மார்க் சென்றுவிட, ராதா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால் இரவு வெகு நேரம் ஆகியும் சந்தோஷ் வீட்டிற்கு வரவில்லை என்று புலம்பிக்கொண்டே சமையல் செய்து கொண்டு இருந்தாள்.
அவள் புலம்பும் சத்தம் வாசல் வரை கேட்கவும், சத்தம் இல்லாமல் கதவைச் சாத்திவிட்டுச் சமையலறைக்கு வந்தான் சந்தோஷ்.
சமையலறையில் மேலே வைத்திருந்த பாத்திரத்தை எடுக்க முடியாமல் கையைத் தூக்கி முயற்சித்துக் கொண்டே புலம்பிக்கொண்டு இருந்தாள் ராதா.
ராதாவை கவனித்தான் சந்தோஷ். நீல நிற ஷிபான் சேலை அணிந்து அதை இடுப்பு வரை தூக்கிச் சொருகியிருந்தாள். அவள் கணுக்கால் முழுவதும் அப்பட்டமாக வெளியே தெரிய, சேலை சொருகியிருந்ததால் விலகியிருந்த அவளது வழுவழுப்பான இடுப்பு அவன் கண்களுக்குக் காட்சியளித்தது.
பளிங்கு இடை சும்மாவே அவன் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்தெடுக்க, இப்போது அதில் வேறு வியர்வை துளிகள் சிந்தி அவள் பளிங்கு இடை மேலும் பளபளப்பாக அவன் கண்களுக்குக் காட்சியளித்தது.
அதைக் கண்டதும் சந்தோஷ் தன் கைகளை பரபரவென சூடு பறக்கத் தேய்த்துக் கொண்டு மெதுமெதுவாக ராதாவின் பின்னால் வந்தான்.
“இந்த நேரம் அந்த ஸ்ரீ இருந்திருந்தா கூட கிச்சன்ல ஏதாவது ஹெல்ப் பண்ணிட்டு இருந்திருப்பான். இப்ப பாரு நான் மட்டும் ஒத்தையால கிடந்து அல்லாடுறேன். கிச்சனை இவ்வளவு பெருசா யாரு இங்க கட்டி வைக்கச் சொன்னது? பாரு எல்லாமே எவ்வளவு உயரத்துல இருக்கு!”
“என் உயரத்துக்குத் தகுந்த மாதிரி கிச்சன் இருந்தா தானே நல்லா இருக்கும். நானும் எவ்வளவு முறை தான் சொல்றது?” என்று புலம்பிக்கொண்டு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவள் திரும்பினாள்.
சந்தோஷ் அவள் அருகே நெருங்கி வரவும் சரியாக இருந்தது. திடீரென சந்தோஷ் அவள் பின்னால் வந்து நின்றதும் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ராதா நிற்க, அவள் தன்னை கண்டு பயந்ததை பார்த்துச் சிரித்தான் சந்தோஷ்.
“இவ்வளவு பயம் இருக்கிறவ எதுக்குடி வாசல் கதவைத் திறந்து வச்சிட்டு தனியா உள்ள வேலை பார்த்துட்டு இருக்க? கதவை லாக் பண்ணிட்டு வேலை பார்க்க வேண்டியதுதானே?” என்றான் சந்தோஷ்.
அவனை முறைத்த ராதா, “இந்த வீடு முழுக்கத் தங்கமும் வைரமும் கொட்டிக் கிடக்குது பாரு… திருடன் யாராவது வந்து இங்கே இருந்து கொள்ளையடிச்சிட்டுப் போறதுக்கு!” என்றாள்.
“தங்கம் வைரத்தை விட ஒரு பெரிய பொக்கிஷம் இந்த வீட்ல இருக்கு. இந்த பொக்கிஷத்தை வேற யாரும் எடுத்துட்டுப் போயிட்டா நான் என்ன செய்வேன்?” என்றான் சந்தோஷ், அவள் இடையில் தன் கையைப் படரவிட்டபடியே.
சந்தோஷின் கை ராதாவின் இடையில் விளையாடிக் கொண்டிருக்க, கூச்சத்தில் நெளிந்தபடியே கையில் இருந்த பாத்திரத்தைக் கீழே போட…
கீழே விழாமல் சட்டுன்னு எட்டிப் பிடித்த சந்தோஷ், பாத்திரத்தை மேஜை மீது வைத்துவிட்டுத் தன் இரு கையையும் அவள் இடையில் கொடுத்துத் தூக்கிச் சமையல் மேஜை மீது அவளை அமர வைத்தான்.
“இனிமேல் நீ தனியா வீட்டில் இருக்கப்போ இப்படி வீட்டைத் திறந்து போட்டுட்டு உள்ளே தனியா வேலை பார்க்காத சரியா? யாரும் உள்ளே வந்துடப் போறாங்க,” என்றான் சந்தோஷ்.
“நான்தான் சொல்றேனே இங்கே என்ன இருக்கு திருடிட்டுப் போறதுக்கு? அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. யார் அங்கே வரப்போற?” என்று ராதா கூறினாள்.
“வீட்ல இருக்குற எல்லா பொருளையும் வேறு எதையும் வேணா யார் வேணா வந்து திருடிட்டுப் போகட்டும். ஆனா என் பொக்கிஷத்தை யாரும் எதுவும் செஞ்சுறக்கூடாது. அதுக்காகத்தான் சொல்றேன், மறக்காம யாரும் இல்லைனா கதவு சாத்திட்டு உள்ள வேலை பாரு சரியா?” என்று அவள் கன்னம் கிள்ளிக் கூறினான் சந்தோஷ்.
அவனுடைய பொக்கிஷம் என்று ராதாவைத் தான் சந்தோஷ் சொன்னான். ராதாவுக்கும் அவன் தன்னைத்தான் பொக்கிஷம் என்று சொல்கிறான் எனப் புரிந்தது.
ஒன்றும் தெரியாதவள் போல, “அப்படி என்னடா இந்த வீட்ல பொக்கிஷம் இருக்கு? பொக்கிஷத்தை தூக்கிட்டுப் போகப் போறாங்கன்னு சொல்லிட்டே இருக்க?” என்றாள்.
“இது நான் இங்கே உக்காந்து இருக்கேனே… என்னோட 48 கிலோ தங்கம்! இதை யாரும் தூக்கிட்டுப் போயிட்டா நான் என்ன செய்வேன்?” என்றான் சந்தோஷ்.
“அட போ வாத்தி… என்னை யாரெல்லாம் வந்து கடத்திட்டுப் போவா? அந்த அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் வொர்த் இல்ல!” என்று சொன்னபடி சமையல் மேடையில் இருந்து துள்ளிக் குதித்துக் கீழே இறங்கியவள், அடுப்பில் இருந்த உணவைக் கிளறி விட்டுக் கொண்டே கூறினாள்.
தன்னை விட்டு அவள் விலகிச் செல்வதைத் தாங்க முடியாத சந்தோஷ், வேகமாக அவள் அருகில் வந்து பின்னால் இருந்து அவள் இடையோடு கை கொடுத்துத் தன் மீது இறுக்கிக் கட்டிக் கொண்டான். அடுப்பை அணைத்துவிட்டு, “அப்புறம் சமைச்சுக்கலாம் வாடி குட்டச்சி…” என்று சொல்லி அவளை அப்படியே கையில் ஏந்தியவன் திரும்பி நடக்கப் போக…
“யோவ் வாத்தி உனக்கு பசிக்கலையா? இப்படி சமையல் செய்றப்போ பாதியிலே என்ன தூக்கிட்டுப் போனா என்ன அர்த்தம்?” என்றாள் ராதா.
“எனக்கு பசிக்குது தான்…” என்று சொல்லி அவள் இதழைப் பார்க்க… அவன் பார்வை சென்ற இடத்தைப் புரிந்து கொண்ட ராதா, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உனக்கு! பசிக்காம இருந்திருக்கு” என்றவள், “எனக்கு நிஜமாகவே ரொம்ப பசிக்குதுய்யா. முதல்ல போய் சாப்பிடலாம், மற்றதை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாமே,” என்றாள்.
“அச்சச்சோ… என் குட்டி ராட்சசிக்கு பசிக்குதா? இவ்வளவு நேரம் என் குட்டி ராட்சசி எதுவுமே சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று சொல்லி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் அமர வைத்தான்.
தன் சட்டையை வேகமாக கழற்ற…
“யோவ் வாத்தி! எனக்கு பசிக்குதுன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க? விலகுய்யா… நான் போய் சமைச்சுச் சாப்பிட்டு வரேன். உனக்கு என்ன, உன் வேலையெல்லாம் முடிஞ்சதும் கைகால நீட்டி பப்பரப்பான்னு நல்லா படுத்துத் தூங்கிடுவ. ஆனா எனக்கு அப்படியா? நீ என்னை போட்டுப் படுத்துற பாட்டுக்கு நான் நல்லா சாப்பிட்டா தான்யா என் உடம்பு தாங்கும்!” என்று சொல்லியபடி கட்டிலில் இருந்து கீழே இறங்கிச் சமையல் அறைக்குச் செல்லப் போக…
அவளை இழுத்துக் கட்டிலில் மீண்டும் அமர வைத்த சந்தோஷ், “ஏன் இப்போ எதுக்குடி தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க? நான் இப்போ உன்னை என்ன செய்யப் போறேன்? என்னவோ உன்னை ரேப் பண்ணப் போற மாதிரி இல்ல நீ பேசுற?” என்று கேட்டான்.
“போடா… நீ சட்டையைக் கழற்ற வேகத்தைப் பார்த்தா என்ன ரேப் பண்ணாலும் பண்ணிடுவ போல இருக்கு! அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நான் போய் முதல்ல சாப்பிட்டு வரேன்,” என்றாள் ராதா.
“ஏய் நிப்பாட்டடி! உனக்கு எப்ப பார்த்தாலும் அதே நினைப்பு தானா? உன்னை நான் பெட் ரூமுக்குத் தூக்கிட்டு வந்தா உடனே அதுக்காகத்தான் கூட்டிட்டு வந்தேன்னு நினைச்சுக்குவியா? நான் இப்போ சட்டையைக் கழட்டினது ஒன்னும் உன்னை எதுவும் பண்றதுக்கு இல்ல,” என்றான் சந்தோஷ்.
“டேய் வாத்தி! என்கிட்டயே பொய் சொல்ற பாத்தியா? நீ எதுக்காக என்ன இங்க தூக்கிட்டு வந்தேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? இப்போ என்னவோ நான் அதைச் சொல்லி உன்னைத் திட்டவும் எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி சீன் போடுற!” என்றாள் ராதா, அவன் இடுப்பில் கிள்ளி வைத்து.
சந்தோஷ் அவள் உண்மையை கண்டுபிடித்துவிட்டாள் என்று தலையைச் சொரிந்து கொண்டே சிரித்தான். “உன்னைத் தூக்கிட்டு வந்தது என்னவோ அதுக்காகத்தான். ஆனா, நீ பசிக்குதுன்னு சொன்ன பிறகு அதையெல்லாம் சட்டை செய்யாமல் என்னோட வேலை முடிஞ்சா போதும்னு என்னால எப்படி இருக்க முடியும்?”
“அதனால தான் சொல்றேன், நீ அமைதியா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் போய் உனக்குச் சமைத்து எடுத்துட்டு வரேன்,” என்றான் சந்தோஷ்.
“நிஜமாவா வாத்தி? நீயே எனக்குச் சமைச்சு எடுத்துட்டு வரப் போறியா? அப்போ எனக்கு இன்னைக்கு ரெஸ்ட்டா?” என்று கேட்டாள் ராதா.
“இன்னைக்கு மட்டும் இல்ல, இன்னும் ரெண்டு நாளைக்கு உனக்கு ரெஸ்ட் தான். நீ எந்த வேலையும் செய்யாம சும்மா ஜாலியா இரு. நான் எல்லா வேலையும் உனக்குச் செஞ்சு தரேன். நீ இருக்கிற இடத்துக்கு டீ, ஸ்நாக்ஸ், சாப்பாடு எது வேணுமோ நான் கொண்டு வந்து தரேன்,” என்றான் சந்தோஷ்.
“ரெண்டு நாள் நீ என் கூட இருந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டு இருந்தா காலேஜுக்கு யார் போய் வேலை பார்க்கிறது? நானும் காலேஜ் போக வேண்டாமா?” என்றாள் ராதா.
“நீ எங்கேயும் போக வேண்டாம். உனக்கும் எனக்கும் சேர்த்து ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்,” என்றான் சந்தோஷ்.
“என்னய்யா சொல்ற! யாரைக் கேட்டு காலேஜுக்கு லீவு சொன்ன? ஏற்கனவே ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் நிறைய இருக்கு. இது வேற பைனல் இயர். நான் வேற இப்படி லீவு போட்டா அந்தப் ப்ராஜெக்ட் வொர்க்கை எப்படி முடிக்கிறது?” என்று ராதா புலம்ப…
“ப்ராஜெக்ட் வொர்க் தானே? அதெல்லாம் மெதுவா செஞ்சுக்கலாம். இப்போ ரெண்டு நாள் லீவ் சொன்னது சொன்னது தான். நீயும் நானும் மட்டும் ஜாலியா இருப்போம். அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம்,” என்றான் சந்தோஷ்.
“உனக்கு என்ன… நீ சொல்லிட்டுப் போயிடுவ. ரெண்டு நாள் கழிச்சு என்னோட மாமன்கிட்ட (HOD) யாரு திட்டு வாங்குறது? ஃபர்ஸ்ட் இயர்ல தான் நீ எனக்கு ஹெச்.ஓ.டி-யா இருந்த. இப்போ அந்த சிடுமூஞ்சிகிட்ட யாரு திட்டு வாங்குறது?” என்றாள் ராதா.
“இங்க பாரு… ரெண்டு நாள் லீவ் இருக்கு. நாளைக்கு முழுக்க உன்னோட ப்ராஜெக்ட்டை நீயும் நானும் சேர்ந்து செய்கிறோம். அது முடிச்சதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாம். ஓகேவா? அதுவரைக்கும் எதுவும் நமக்குள்ள வேண்டாம்… டீல்?” என்றான் சந்தோஷ்.
அவனை அதிசயம் போல பார்த்த ராதா, “அப்போ எனக்கு ப்ராஜெக்ட் செய்யறதுக்கு நீ ஹெல்ப் பண்ணப் போற… அப்படித்தானே வாத்தி?” என்றாள் சந்தோஷமாக.
“ஆமாம்” என்று சந்தோஷ் தலையாட்டியவன், “சரி, நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் போய் நீ விட்ட சமையலை முடிச்சு உனக்கு எடுத்துட்டு வரேன் சாப்பிட,” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குச் சென்றான்.
ராதா, சந்தோஷ் கிச்சனுக்குச் சென்றதும் தலையணையை எடுத்துத் தன் அருகில் வைத்து அதன் மீது சாய்ந்து அமர்ந்தபடி டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள்.
