News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உன் ரகசிய ரசிகை நான் 232

by Layas Tamil Novel
203 views
A+A-
Reset

EPI 232

பவன் மது திருமணத்திற்காக தங்கள் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் ஆடைகள் எடுக்க இருவரும் கடைக்கு சென்று இருக்க அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ரவி இருவரிடமும் வந்து பிரச்சனை செய்தான்.

அவனிடம் மேலும் சண்டையை வளர்க்க விரும்பாத பவனும் மதுவும் அங்கிருந்து செல்ல முடிவெடுத்தவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த செயலையை வாங்கிக் கொண்டு செல்ல போக…

அங்கே வேலை பார்க்கும் பணிப்பெண் மது தேர்ந்தெடுத்த சேலையை பேக் செய்து கொண்டு வந்து அவர்களிடம் கொடுக்க வரும் போது ரவி குறுக்கே புகுந்து அந்தப் பணிப்பெண் வைத்திருந்த சேலையை பிடுங்கி விட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத இருவரும் அதிர்ச்சியாக ரவியை பார்க்க…

என்னடி என்ன டைவர்ஸ் பண்ணி முழுசா ஆறு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இவன எப்படி வளச்சு போட்ட… என்கிட்ட இருக்கிறத விட இவன் கிட்ட சொத்து பணம் எல்லாம் அதிகமா இருக்குன்னு தானே நீ இவன உன் கைக்குள்ள வளைச்சு போட்டுட்ட என்று அவளை கேவலமாக பார்த்து படி பேச…

ரவி பேசியதை கேட்ட மதுவின் முகம் மாறிவிட்டது அவள் கண்கள் கலங்கியபடி ரவியை பார்த்து நின்று இருந்தால்.

ரவி கூறியதை கேட்டு மதுவின் முகம் மாறியிருப்பதை கவனித்த பவன் கோபம் கொண்டு வேகமாக வந்து ரவியின் சட்டையை பிடித்தவன்.

மதுவை பத்தி தப்பா பேச உனக்கு எந்த அருகதையும் கிடையாது நீ என்னமோ அவளை சந்தோஷமா உன் கூட வச்சு பாத்துகிட்ட மாதிரி இல்ல பேசுற…

என் மதுவையும் அவ தங்கச்சியையும் நீ எவ்வளவு கஷ்டப்படுத்தினேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டியா… நீ பண்றது எல்லாம் பண்ணிக்கிட்டு இப்போ எந்த முகத்தை வச்சுட்டு மதுவை குற்றம் சொல்வ..

முதல்ல இங்கிருந்து போ என்று சொல்லி ரவியின் கையில் இருந்த பட்டுப்புடவையை பவன் வாங்க போக..

தன் சட்டையை பிடித்திருந்த பவனின் கையை தட்டிவிட்ட ரவி தன் கையில் இருந்த புடவையை பவன் பிடுங்க போக…. அதை கவனித்தவன் தன் கையை வேகமாக பின்னால் இழுத்துக் கொண்டான்.

பவன் மீண்டும் ரவியின் கையில் இருந்த சேலையை பிடுங்க போக அதற்குள் தன் கையில் வைத்திருந்த பட்டுப்புடவை பெட்டியை திறந்து அதிலிருந்து பட்டுப்புடவையை எடுத்தவன் அவர்கள் கண்முன்னாலேயே அதை நார்நாராக கிழித்து எறிந்தான்..

மதுவும் பவனும் ஆசை ஆசையாக தங்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப் புடவையை ரவி இப்படி சின்னாபின்னம் ஆக்கியதை பார்த்துக் கொண்டு பவனால் சும்மா இருக்க முடியவில்லை.

அடுத்த நொடி ரவியின் மீது பாய்ந்து அவனை கீழே தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து ரவியை சரமாரியாக அடிக்க துவங்கினான்.

மதுவிற்கு ரவி தங்கள் திருமணத்திற்காக எடுத்த சேலையை கிழித்து விட்டானே என்று அதிர்ச்சி இன்னும் நீங்காமல் இருக்க அதற்குள்ளாக பவனும் ரவியும் அந்த மொத்த கடையை அவர்களை கவனிக்கும்படி இருவரும் தரையில் படுத்து புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டவள் வேகமாக வந்து ரவியின் மேல் அமர்ந்திருந்த பவனின் கையைப் பிடித்து அவனிடமிருந்து பிரித்து பின்னால் இழுத்தவள்.

பவன் நான் சொல்றத நீ கேட்குமா மாட்டியா வா முதல்ல இங்கிருந்து போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுக்க…

இல்ல மது அவன் என்ன செஞ்சான் என்று நீ பார்த்தியா நீ ஆசை ஆசையா அந்த சேலையை எடுத்தியே ஆனா அதை அவன் எப்படி கிழிச்சு வச்சிருக்கான்னு பாரு என்று சொல்லி பவன் மீண்டும் ரவியை அடிக்கச் செல்ல…

பவன் அவன் அந்த புடவையை தானே கிழிச்சான் அது போனா என்ன நம்ம இன்னொரு புடவை எடுத்துக்கலாம் இப்படி அவனுக்கு ஈக்குவலா நீ இறங்கி சண்டை போடறது எனக்கு சுத்தமா பிடிக்கல அவன்தான் அறிவு இல்லாம இப்படி நடந்துக்கிறான்னா நீ என்பவன் அவன் அளவுக்கு இறங்கி போற அதெல்லாம் எதுவும் வேண்டாம் நீ வா நாம போகலாம் என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு மது அங்கிருந்து செல்ல முயற்சிக்க…

போடி போ நீ எங்க வேணா அவன கூட்டிட்டு போ உனக்கு மகனுக்கும் எப்படி கல்யாணம் நடக்குதுன்னு நானும் பாக்குறேன் அவன் எப்படி என்னை மீறி உன் கழுத்துல தாலி கட்டுறான்னு நான் பார்க்கிறேன்.. உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு அவன் உயிரோட இருந்தா தானே… என்று ரவி மதுவிடம் சவால் விட…

பவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லப்போன மது அவன் பேசியதை கேட்டவள் அப்படியே நின்றாள் திரும்பி ரவியை பார்த்தவள் பவனின் கையை விட்டுவிட்டு ரவியிடம் செல்ல போக…

மது அவனிடம் செல்வதை பார்த்த பவன் வேண்டாம் என்று அவள் கையைப் பிடித்து தடுக்க…

அவன் கையை சிரித்தபடி தன் கையில் இருந்து எடுத்து விட்டவள் ஒரு நிமிஷம் பவன் ஏதோ நான் வரேன் என்று சொல்லிவிட்டு ரவியிடம் சென்ற மது அவன் அருகில் சென்று நின்றவள் ரவியின் முகத்தை பார்க்க…

என்னடி நான் சொன்னதை கேட்டதும் பயந்துட்டியா? அவனை நான் எதுவும் செய்து விடுவேன் பயந்துட்டு என் காலில் விழுந்து கெஞ்ச வந்தியா என்று சொன்னவன் தன் காலை உயர்த்தி அவளிடம் காட்டி இந்த காலை பிடித்து கதறி அழு கெஞ்சி…

நீ அழுது என் காலை பிடிச்சு கெஞ்ஜுரத்தை நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு கூறியபடி அவள் முன் தன் காலை நீட்டி ரவி நிற்க…

தன் அழுது வடிந்து இருந்த கண்களை துடைத்துக் கொண்ட மது இனியும் நான் பழைய மதுன்னு நீ என்ன நெனச்சிட்டியா… உன்ன பாத்து பயந்து ஓடி ஒளிகிற மதுன்னு நினைச்சியா உன் கால்ல விழுந்து கெஞ்சி என்னை விட்டுவிட சொல்வேன்னு நீ நெனச்சியா என்று சொன்னவள் தன் புடவை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகியபடி ரவியை பார்க்க…

அவள் பேச்சும் பார்வையும் முன்பு போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் தைரியமாகவும் இருப்பதை உணர்ந்த ரவி அவள் முன் நீட்டி இருந்த காலை கீழே இறக்கப் போக…

தன் சேலையை இடுப்பில் சொருகிய மது அவன் காலை இறக்கவும் சட்டென அவன் காலை தன் இரண்டு கைகளால் பிடித்தவள். தன் பலம் அத்தனையும் ஒன்று திரட்டி அவன் காலை பிடித்து ஒரு வேகமாக சுழற்ற ….

ரவியின் காலை பிடித்து இழுத்து மது வேகமாக சுழற்றிய நேரத்தில் அவன் மதுவின் இந்த தாக்குதலை எதிர்பாராதவன் அப்படியே சுழன்று தரையில் பொத்தென விழுந்தான்.

பவன் மதுவின் இந்த மற்றொரு முகத்தை பார்த்து அதிர்ச்சியானான். அவளையே அதிர்ச்சியாக பார்த்தபடி பவன் நின்று இருக்க…

ரவியை சுழற்றி அடித்து கீழே மண்ணை கவ்வ வைத்தவள் திரும்பி வந்தவள் பவனின் அருகில் வந்தவன் போலாமா என்றாள் சிரித்தபடி.

பவனும் தான் கண்டது கனவா என்று நினைத்தப்படி தலையாட்டிக் கொண்டே மதுவின் பின்னால் சென்றான்.

அவர்கள் இருவரும் தாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த புடவைகளுக்கு பணம் செலுத்திவிட்டு கடையைவிட்டு கிளம்பிப் போக…

கீழே மண்ணைக் கவ்விய ரவி அவர்கள் இருவரையும் பார்த்தபடி எழுந்தவன். உங்க ரெண்டு பேரையும் நான் என்ன செய்கிறேன் பார் என்று இருந்து அவர்கள் இருவரின் பின்னாலும் செல்ல போக…

அப்போது அவனை வந்து பிடித்துக் கொண்ட அந்த கடையின் செக்யூரிட்டிகள் நீ முதல்ல எங்க கூடவந்து நீ கிழிச்சு போட்ட சேலைக்கு பணத்தை கட்டிட்டு அதுக்கப்புறம் அவங்க பின்னாடி போ… என்று அவனைப் பிடித்து இழுக்க..

நான் எதுக்கு அந்த சேலைக்கு பணம் தரணும் அந்த சேலையை அவங்க தானே எடுத்தாங்க அவங்க தானே பணம் கட்டி இருப்பாங்க என்று ரவி கேட்க…

அந்த சேலையை எடுத்தது என்னவோ அவங்க தான் ஆனா அவங்க பணம் கொடுக்கிறதுக்குள்ளே தான் நீ வாங்கி அந்த சேலையை சுக்கல் சுக்களா கிழிச்சு போட்டுட்டியே என்றார் அந்த செக்யூரிட்டியில் ஒருவர்.

என்ன அந்த சேலைக்கு அவங்க பணம் கொடுக்கலையா என்று அதிர்ச்சியாக ரவி கேட்க…

அந்த செக்யூரிட்டி இல்லை என்று தலையாட்ட… ரவி செய்வதறியாது அவர்கள் இருவரையும் பார்த்தவன் அவர்கள் இருவரும் அசரும் நேரம் பார்த்து அவர்கள் கையை உதறிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட பார்க்க.

அதற்குள் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்ட செக்யூரிட்டிகள் இருவரும். எங்கே ஓட பார்க்கிற ஒண்ணா அந்த சேலைக்கு பணத்தை எடுத்து வச்சுட்டு இங்கிருந்து போ அப்படி இல்லையா உன்ன அழிச்சிட்டு போக போலீஸ் ரெடியா இருக்காங்க என்று சொல்லி ரவியை பார்க்க…

என்னது போலீசா என்று ரவி நம்ப முடியாமல் அவர்களை பார்த்து கேட்டான்.

ஆமா எங்க கடைக்கு வந்த கஸ்டமர் டிஸ்டர்ப் பண்ணி அவங்க வாங்கி வச்சிருந்த சேலையை நீ கிழிச்சு எறிஞ்சிட்ட அதனால அவங்க ஏற்கனவே எங்க கடையில இருக்கவங்க கிட்ட சொல்லி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லிட்டாங்க போலீசும் இங்கே வந்தாச்சு நீ ஒழுங்கா பணத்தை கட்டிட்டு போலீஸ் கூட போற வழிய பாரு என்று அந்த செக்யூரிட்டி சொல்ல…

இப்போ தானே பணத்தைக் கட்டிரியா இல்ல போலீசுக்கு போறியானு கேட்டீங்க அப்போ நான் அந்த சேலைக்கு பணத்தை கொடுத்துட்டா போலீஸ் உடன் போக வேண்டியது இல்லை தானே என்று ரவி கேட்க…

நீ சேலைக்கு பணத்தை கட்டிட நாங்க விட்டுட்டு போவோம் ஆனால் நீ இப்போ கொஞ்ச நேரம் முன்ன ரெண்டு பேர் கிட்ட பிரச்சனை பண்ணுனியே அதுல அந்த பொண்ணு உன் மேல கம்ப்ளைன்ட் போட்டு கொடுத்து இருக்கு உன்னையும் அவங்க கல்யாணம் பண்ணிக்க போற பையனையும் நீ மிரட்டினதாகவும் அவங்கள இத்தனை பேர் முன்னாடியும் தாக்க நினைச்சதாகவும் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு போயிருக்காங்க என்று சொல்ல….

ரவிக்கு மதுவையும் பவனையும் நினைத்து ஆத்திரமாக வந்தது அதற்குள்ளாக தன்னை போலீசில் மாட்டிவிட்டு இங்கு இருந்து அவர்கள் சென்று விட்டது எண்ணி கடுப்பானவன் வேறு வழியே இல்லாமல் தான் கிழித்து எழுந்து எறிந்த சேலைக்கு பணம் 50 ஆயிரத்தையும் கட்டிவிட்டு போலீசுடன் ஸ்டேஷனுக்கு நடையை கட்டினான்.

❤️

சமையல் அறையில் புலம்பிய படியே ராதா சமைத்துக் கொண்டு இருந்தால்.

மற்ற நாளில் தான் டியூஷன் எடுக்க போறேன் அது இதுன்னு சொல்லி வீட்டுக்கு தினமும் லேட்டா வருவான்.

ஸ்ரீ தான் ஊருக்கு போயிட்டானே நான் தனியா வீட்ல இருப்பேன்னு கொஞ்சமாவது இவனுக்கு அக்கறை இருக்கா அத்தையும் மாமாவும் வெங்கடாசலம் மாமா விசாலாட்சி அத்தையோட கல்யாண விஷயத்துக்காக இங்கே வந்து வேலை பார்க்கணும்னு ஊருல இருக்குற வேலை எல்லாம் சீக்கிரமா முடிச்சுட்டு வரேன்னு ஊருக்கு போய்ட்டாங்க நான் மட்டும்தான் தனியா வீட்ல இருப்பேன்னு இவனுக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கா.

கல்யாணத்துக்கு முன்னாடி தான் என் பின்னாடியே சுத்திக்கிட்டு நான் வேண்டாம் வேண்டான்னு சொன்னப்பல்லாம் என்ன லவ் பண்ணிட்டு திரிஞ்சா என்னிக்கி நான் இவனை கல்யாணம் பண்ணினேனோ அன்னையிலிருந்து இவன் பின்னாடி நான் தான் சுத்திக்கிட்டு இருக்கேன் என்ன கண்டுக்கவே மாட்டேங்குறான் என்று சொல்லி ராதா புலம்பியபடி உப்புமா கிண்டி கொண்டு இருந்தால்.

அவள் தனியாக வீட்டில் இருக்க பயந்து ஒன்றும் இப்படி புலம்பவில்லை அவளுக்கு அவளுடன் பேச வீட்டில் யாரும் இல்லை என்பதே இப்போது பிரச்சினை.

அதனால் எதையாவது பேச வேண்டும் என்று சந்தோஷை இப்போது திட்டிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் புலம்பியதெல்லாம் வாசல் கதவை தாண்டி வீட்டிற்குள் வரும் பொழுது சந்தோசத்திற்கு கேட்டது.

ஆஹா….நம்ம வர லேட் ஆனதும் பார்ட்டி புலம்ப ஆரம்பிச்சிடுச்சுடா…என்று நினைத்தவன். வீட்டுக் கதவை தாழிட்டு விட்டு சத்தம் இல்லாமல் மெதுவாக சமையலறை நோக்கி வர..

ராதா அழகாக ஷிபான் புடவை உடுத்தி தன் சேலையை இடுப்பிற்கு மேலே தூக்கி சொருகியபடி கெண்டைக்கால் பாதி தெரியவும் இடுப்பு பாதி தெரியவும் நின்று வியர்வை சொட்ட சொட்ட வேலை செய்து கொண்டு இருந்தாள்.

அவள் வியர்வை முகம் கழுத்து இடுப்பு என வழிந்து கொண்டு இருக்க அந்த இரவு வெளிச்சத்தில் அவை அவள் பட்டு போன்ற மேனியில் பிரகாசமாக அவன் கண்ணில் பட்டது.

மெல்ல சத்தம் இல்லாமல் ராதாவின் பின்னால் வந்த சந்தோஷ்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.