EPI 243
துரை கனகா இருவரையும் யாரோ கட்டி வைத்து அடைத்து வைத்திருக்க அந்த போட்டோவை ஆதியின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி இருந்தார்கள்.
அதை பார்த்த துர்கா பதறி கொண்டு ஆதியிடம் எப்படியாவது அம்மா அப்பாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சினாள்.
“துர்கா பதறாத உன் பதட்டம் எனக்கு புரியுது. முதல்ல கதிருக்கு போன் பண்ணி அங்கே என்ன நடக்குதுன்னு விசாரிக்கலாம்” என்றவன் தன் மொபைலை எடுத்து கதிருக்கு அழைக்கப் போக… அப்போது ஆதியின் மொபைலுக்கு அபியின் எண்ணில் இருந்து கால் வர அதை பார்த்ததும் ஆதி துர்கா இருவருமே அதிர்ந்தனர்.
“இவள் எதுக்காக எனக்கு கால் செய்றா?” என யோசித்தபடி அபியின் காலை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டான் ஆதி.
“என்ன ஆதி நான் அனுப்பிச்ச போட்டோ உனக்கு வந்து சேர்ந்துச்சா?” என்றாள் அபி. அவள் சொன்னதை கேட்ட ஆதி துர்கா இருவருக்கும் மேலும் அதிர்ச்சியானது.
“ஏய் அபி இப்போ எதுக்கு என் அம்மாவையும் அப்பாவையும் கடத்தி வச்சிருக்க. அவங்க என்ன செஞ்சாங்க? நீ மட்டும் அவங்கள கடத்தி வைத்திருக்கிற விஷயம் மாமாவுக்கு தெரிஞ்சா உன்னையும் உன் அம்மாவையும் அந்த வீட்டை விட்டு இப்பவே துரத்திடுவார்” என துர்கா கோபமாக பேசினாள்.
“இப்பவே என்னை உன் மாமாவுக்கு, அதான் என் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லனும்னா சொல்லிக்கோ… எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்ல. ஆனா நீ போன் பேசி முடிக்கிறதுக்குள்ள உன்னோட அம்மா, அப்பாவோட உயிர் இந்த உலகத்தை விட்டு போயிருக்கும் எப்படி வசதி?” என்றாள் திமிராக.
அவள் பேசியதை கேட்டதும் துர்காவால் அதற்கு மேலும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக… ஆதி இடையில் புகுந்து “அபி இப்போ எதுக்கு தேவையில்லாம இந்த மாதிரி வேலை எல்லாம் செய்துட்டு இருக்க. உனக்கு என்ன வேணும் முதல்ல அதை சொல்லு” என்றான்.
“குட் ஆதி உண்மையிலேயே நீ ஒரு பிசினஸ் மேன்னு ப்ரூஃப் பண்ணிட்ட… எப்படி கரெக்டா பாயிண்ட்டுக்கு வந்துட்ட பாரு” என்று இப்போது சங்கவியின் குரல் அங்கு கேட்க இருவருக்கு மேலும் அதிர்ச்சியானது.
“நீயா? நீ ஏன் அங்க என்ன பண்ற?” என்றவன் பிறகு “நீ தான் அபிக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் சொல்லிக் கொடுத்தியா? இதெல்லாம் உன்னோட வேலை தானா?” என்றான் ஆதி கோபமாக.
“எஸ்.. எஸ்.. ஆப்கோர்ஸ் இதெல்லாம் என்னோட வேலை தான். உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன் அதான் முடியல. சரி பரவாயில்லைன்னு நினைக்கிறப்போ அந்த மாதவி குறுக்கே வந்தா. இத்தனை நாளா என் குடும்பம்னு நினைச்சுட்டு இருந்த என்னோட அம்மா அப்பாவை அவ என்கிட்ட இருந்து பிடிச்சிட்டு போயிட்டா. சரி பரவாயில்லை அவங்க ரெண்டு பேரும் போனாலும் அவங்க இதுவரைக்கும் சம்பாதித்த மொத்த சொத்துக்களையும் என் பேர்ல எழுதி வச்சுட்டாங்க. அது ஒரு வகையில சந்தோஷமா தான் இருக்கு. ஆனா நீங்க எல்லாரும் ஒரே குடும்பமாக சந்தோஷமா இருக்கிறத பாக்குறப்போ என்னால தாங்கிக்கவே முடியல. உங்கள எல்லாம் ஏதாவது செஞ்சு பிரிக்கணும்னு நினைக்கிறேன். அதனால தான் இப்போ அபிய வச்சு முதல்ல உங்ககிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன்” என்றாள்.
“இப்போ உனக்கு என்னதான் வேணும் இப்ப எதுக்கு தேவையில்லாம அத்தை மாமாவை கடத்தி வச்சிருக்க. அதுல நீ என்ன ஆதாயத்தை பார்த்த?” என்றான் ஆதி கோபமாக.
“அதுவா வேற ஒன்னும் இல்ல உன்னோட கம்பெனி சார்பாக கதிர் விக்கி இரண்டு பேருமே இன்னைக்கு ஒரு டென்டர்க்கு கோட் செஞ்சு இருந்தாங்க. அந்தக் கோட்டோட அமௌன்ட் விட ஜஸ்ட் ஒன் ருபி நான் கம்மியா போட்டு அந்த டெண்டர் அபி பெயருக்கு வாங்கி கொடுத்துட்டேன். அந்த விஷயம் கதிருக்கு தெரியாது ஏன்னா அந்த கோட்டோட அமௌன்ட் அவனுடைய லேப்டாப்ல இருந்து அவனுக்கு தெரியாமல் நான் தான் திருடினேன்” என்றாள்.
“சரி அதுக்கு என்ன இப்போ அதான் அந்த டெண்டர் உங்க பேருக்கு வந்துடுச்சு இப்ப என்னதான் வேணும் உனக்கு முதல்ல அதை சொல்லு” என்றான் ஆதி அவசரமாக.
“அபி பேருக்கு அந்த டெண்டர் முழுசா வரணும்னா நாங்க கோட் செய்து இருக்கிற அமௌன்ட் இன்னும் ரெண்டு நாள்ல முழுசா கட்டி ஆகணும். எங்க கிட்ட அவ்வளவு பணம் இல்ல. ஜஸ்ட் ஒரு 10 லேக்ஸ் தான் அட்வான்ஸ் பே பண்ணிருக்கோம். பேலன்ஸ் பணம் எங்களுக்கு வேணும்” என்றாள் அபி.
“இந்த பணத்தைக் கொடுக்கச் சொல்லி அபி போய் அவங்க அப்பா கிட்ட கேட்கலாம். ஆனா அந்த கிழவன் அந்த பணத்தை கொடுக்க சம்மதிக்காது. அதனாலதான் டைரக்டா துர்காவோட அம்மா, அப்பாவை தூக்கினோம். எங்களுக்கு இப்பவே அந்த டென்டருக்கு உண்டான பணம் கைக்கு வந்தாகணும். அப்போ தான் இவங்க ரெண்டு பேரையுமே நாங்க எதுவும் செய்யாமல் விடுவோம்” என்று பேசி முடித்தாள் சங்கவி.
தன் சொந்தங்களை கடத்தி வைத்துக் கொண்டு தன்னிடமே பணம் பறிக்க நினைக்கும் சங்கவி, அபி இருவரையும் நினைத்து ஆதிக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் இப்போது துறைக்கும் கனகாவிற்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தவன் “ஓகே நீங்க கேட்ட பணத்தை நான் தரேன் ஆனா ஒரு கண்டிஷன்” என்றான் ஆதி.
“என்ன?” என்றாள் சங்கவி.
“நான் இந்த பணத்தை உனக்கு அனுப்பிய பிறகு அந்த காண்ட்ராக்ட்ட உன்னோட பேருக்கு நீ மாத்திடுவ. அதுக்கப்புறம் நீயும் உன் அம்மாவும் என் வீட்டில் இருந்து உடனே கிளம்பி போயிடனும். இந்த டீல்க்கு ஓகேன்னா நான் பணத்தை அனுப்புறேன். இல்லனா என்னால அனுப்ப முடியாது” என்றான் ஆதி.
“அபியையும் அவங்க அம்மாவையும் அந்த வீட்டை விட்டு போக சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு ஆதி? உங்க அப்பா சொல்ல மாட்டார் ஏன்னா அவருக்கு அபி மேல தான் பாசம் அதிகம். துர்காவோட அம்மா அப்பா எங்க கிட்ட கஸ்டடியில் இருக்கிறதை மறந்துட்டு நீ பேசிட்டு இருக்க” என்றாள் சங்கவி.
“சங்கவி இது எனக்கும் அபிக்கும் இடையில நடக்கிற டீலிங். இதுல நீ தேவையில்லாம குறுக்க வராத. இப்போ அபியோட பெயரில் தானே அந்த காண்ட்ராக்ட் ஐ வாங்க போறீங்க. அப்போ அபி தானே அதுக்கு முதலாளி. அவகிட்ட தான் நான் பேச விரும்புகிறேன்” என்று ஆதி ஒரே முடிவாக கூறி விட…
சங்கவியின் கையில் இருந்து போனை வாங்கிய அபி “சொல்லு ஆதி நான் இப்போ என்ன பண்ணனும்?” என்றாள்.
“நீயும் உன் அம்மாவும் எங்கள் வீட்டு குள்ள எதுக்காக வந்திருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த எதிர்பார்ப்பு எதுவாயிருந்தாலும் நான் உனக்கு செஞ்சு தரேன்” என்றான்.
“சரி இப்போ நான் என்ன செய்யணும்?” என்றாள் அபி.
“சிம்பிள்.. மாமா, அத்தையை ரிலீஸ் பண்ணு, உனக்கு டெண்டருக்கு தேவையான பணத்தை இப்பவே உன்னோட அக்கௌன்ட்க்கு டிரான்ஸ்பர் பண்றேன். உன் அக்கௌன்ட்யில் பணம் வந்த அடுத்த நிமிஷம் நீயும் உன் அம்மாவும் இந்த வீட்டை விட்டு வெளியே போய்டணும். உனக்கு லைப் டைம் செட்டில்மென்ட் நான் இந்தியா வந்ததும் செய்து தரேன்” என்றான் ஆதி.
“நாங்க வீட்டை விட்டு வெளியே போனதும் நீ எங்களுக்கு செய்றேன்னு சொன்னதை செய்யாம போய்ட்டா?” என்றாள் அபி. அவள் பேசி முடிக்கும் முன் அவளுடைய போனில் மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்தது. டெண்டருக்கு தேவையான தொகையை ஆதி டிரான்ஸ்பர் செய்து இருந்தான்.
“இப்போ என் மேல உனக்கு நம்பிக்கை வந்திருக்கும்னு நினைக்குறேன். அத்தை, மாமாவை ரிலீஸ் பண்ணாமலே நான் உனக்கு பணம் அனுப்பி இருக்கேன்” என்றான் ஆதி.
“ஒரு நிமிஷம்” என்ற அபி தன் அருகில் நின்று இருந்த சங்கவியை பார்த்து “நம்ம ஆளுங்களுக்கு கால் செய்து அவங்களை ரிலீஸ் பண்ண சொல்லு” என்றாள்.
“அபி என்ன விளையாடுறியா? இவன் பேச்சை நம்பாதே” என்று சங்கவி அபியிடம் அவள் மனதை மாற்ற முயற்சித்தாள். ஆனால் அபி அவளை முறைத்துவிட்டு, போன் செய்து “அவங்கள ரிலீஸ் பண்ணிடுங்க எந்த காரணத்தை கொண்டும் நான் தான் அவங்களை கடத்தினேங்குற விஷயம் தெரியக்கூடாது” என்றாள்.
பின் ஆதியிடம் “ஆதி நீ சொன்னது போலவே செய்துட்டேன் போதுமா?” என்றாள் அபி.
“சரி நானும் துர்காவும் கிளம்பி நாளைக்கு காலையில் இந்தியா வந்துருவோம். நாங்க அங்க வரும்போது நீயும், உன் அம்மாவும் இருந்த தடமே தெரியக் கூடாது. என் வீட்டை விட்டு கிளம்பு” என்றான்.
“ஓகே ஆதி நாங்க அங்கே இருந்து கிளம்பிடறோம்” என்று காலை கட் செய்தாள். சங்கவி எச்சரித்தும் அபி தன் முடிவில் உறுதியாக இருந்தாள். பின் தன் அம்மா மரகதத்திற்கு கால் செய்து “அம்மா உடனே நீ அந்த வீட்டில் இருந்து நம்ம திங்ஸை எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு கிளம்பு” என்றாள் அபி.
மரகதமும் மகள் சொன்னது போல வெங்கடாசலத்தின் வீட்டில் இருந்து யாரும் இல்லாத நேரம் பார்த்து தன் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

1 comment
Ayoo poranu sollum pothe poidanum intha sangavi ethuvum manasa mathida kudathu😐