EPISODE 24
“விஜய் மாமா ஏன் இப்படி என்கிட்ட சிடு சிடுன்னு பேசுறீங்க.. உங்கள பாத்து பேசிட்டு போகத்தானே வந்தேன். என்கிட்ட கொஞ்சம் நார்மலா பேசினா என்ன” என்று கண்களில் கண்ணீரோடு கேட்ட தாமரை.
“நானும் அம்முவும் விரும்பி ஹனிமூன் போகல… ” என்றவள் விஜய் அறை வாசலில் நின்றபடி கீழே உள்ளவர்களை காட்டி.
“அங்க பாருங்க கீழே நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறோம்னு சொன்னதும் நம்ம குடும்பமே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன் அவங்க ஆசையும் சந்தோஷத்தையும் கெடுக்கணும்னு தான் நானே ஹனிமூன் போக சம்மதம்னு சொன்னேன்”.
” நாங்க ரெண்டு பேரும் முதல்ல இருந்து எப்படி ஒரு பிரண்ட்ஸா பழகினோமோ அதே மனநிலையோடு தான் இப்பவும் இருக்கோம். என்ன குடும்பத்துல இருக்கவங்களுக்கு வேணா நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறதா இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இது ஜஸ்ட் ஒரு ட்ரிப் அவ்வளவுதான் விஜய் மாமா. இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்”.
“நாங்க ஹனிமூன் போறோம்னு அத்தை உங்க கிட்ட சொன்னதும் உங்க முகம் மாறினது நான் கவனிச்சேன். நீங்க கவலைப் படாதீங்க சீக்கிரமே எனக்கும் அம்முவுக்கும் டைவர்ஸ் கிடைச்சிடும். அதுக்கப்புறம் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட அம்முவே பேசி நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்னு சொல்லி இருக்கான்” என்றாள்.
இப்படி நினைத்தவுடன் இருவரும் செய்திகள் சாதாரணமாக சொல்லும் தாமரையே நினைத்து விஜய்க்கு மேலும் கோபம் தான் அதிகமாக வந்தது. அதே கோபத்தோடு அவளை ஏறிட்டவன் “ஏய் தேவையில்லாத பேச்செல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு இருக்க … முதல்ல இங்கிருந்து போறியா? இல்ல நான் போகட்டுமா?… சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு என்கிட்ட பேசுறேன்னு இனிமேல் வந்து நிக்காத… உன் கூட பேசவே எனக்கு பிடிக்கல நான் என்ன கொஞ்சம் தனியா விடு ” என்று அவன் அறையை அதிலும் படி விஜய் பேசினான்
.
“விஜய் மாமா இப்ப எதுக்கு கோவிச்சுக்கிறீங்க… நான் தான் உள்ளத சொல்லிட்டேனே இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க. நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமா ஒன்னா சேர்ந்து வாழலாம். தயவு செய்து என் மேல என்ன கோபம் இருந்தாலும் அத மறந்துடுங்க கொஞ்சம் என் நிலைமையும் புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ் ” என்று தாமரை விஜய் மனநிலையை புரியாமல் அவனிடம் மேலும் பேசி அவனை கடுப்பேற்ற.
“உன்கிட்ட ஒரு தடவை சொன்னா புரியாது. மறுபடியும் மறுபடியும் இதையே ஏன் பேசிக்கிட்டு இருக்க வழியை விடு…” என்று அவளைத் தாண்டி வேகமாக வெளியே வந்தவன் அதே வேகத்தோடு படிகளில் இறங்கினான்.
சாப்பிட்டு முடித்த வினோ டைனிங் டேபிளில் இருந்து வந்தவள். விஜய்யை பார்த்ததும் அவனிடம் பேசலாம் என்று ஆர்வமாக அவன் பின்னால் செல்ல.. அவள் வருவதை கண்டும் காணாமல் வேகமாக கிளம்பி இருந்தான் விஜய்.
“என்ன விஜய் மாமா நான் வந்தது கூட பாக்காம இவ்வளவு அவசரமா போறாங்க” என்று யோசித்தபடியே அவள் வர…
தன் மீது இவ்வளவு கோபம் காட்டும் விஜய்யை நினைத்து மனது நொந்த படி படிகளில் சோகமாக இறங்கி வந்தாள் தாமரை .
அவள் சோகமான முகத்தை மற்றவர்கள் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் வம்சி கவனித்து விட்டான். தேவ்வுடன் பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து தாமரையிடம் வந்தவன். ” என் முகத்தை தூக்கிட்டு வர வழக்கம் போல அவன் உன்னை திட்டினானா? ” என்று கேட்டான்.
“ஆமாம் என்று தாமரை தலையாட்ட…
“விடு அவன் ஏதோ டென்ஷன்ல இருப்பான்.
அவன் என்கிட்ட பேசினதையும் நீ பார்த்த தானே அவன் ஏதோ ஒர்க் டென்ஷன்ல இருப்பான் போல. அவன் பேசுனது எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத வா நமக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு கிளம்பலாம்” என்று அழைத்தான் .
விஜய் தன்னிடம் பேசியதை எண்ணி மன வருத்தத்தோடு உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்றவர்களிடம் சகஜமாக பேசிய தாமரை அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஹனிமூனிற்க்கு கிளம்ப…
” மாம்ஸ்!!!அக்கா!! ஆல் த பெஸ்ட்!! உங்க ஹனிமூன் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்று வினோ அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வழி அனுப்பினாள்.
இருவரும் சிரித்தபடி வினோதிற்கும் மற்றவர்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு ஏர்போர்ட் கிளம்பினர்.
“அதிதி ரெண்டு பேரையும் தனியா ஏர்போர்ட் அனுப்பவே எனக்கு சுத்தம் பிடிக்கல கூட வந்து வழி அனுப்பவும் சொன்னாலும் ரெண்டு பேரும் விடாப்படியா நாங்க என்ன சின்ன குழந்தைகளா எங்களுக்கு பிளைட் புடிச்சு போக தெரியாதா என்று என்னையும் திருப்பி கேள்வி கேட்கிறாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி” என்று யாரா கூறினாள்.
” ஐயோ அம்மா உங்களுக்கு வயசு தான் ஆகிடுச்சு ஒழிய கொஞ்சம் கூட அறிவே இல்ல அவங்க ரெண்டு பேரும் தனியா ஃப்ரீயா போகணும்னு நினைக்கிறாங்க.. நீங்க ஏன் அவங்க கூட போக இவ்வளவு ஆர்வம் காட்டுறீங்க.. விடுங்கம்மா ப்ரீயா போகட்டும்” என்றாள்.
” உன் பொண்ணு கேக்குற அறிவு கூட உனக்கு யாரா ” என்று சிரித்த அதித்தி. தேவ்வும், யாராவும் அப்போதே கிளம்புவதை பார்த்தவள் “எதுக்கு வந்ததும் மூணு பேரும் கிளம்புறேன்னு சொல்றிங்க. எந்த அவசரமும் இல்லை பொறுமையா இருந்து மதியம் சாப்பிட்டு போகலாம்” என்றாள்.
“அப்படி இல்ல அவருக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. நானும் வீட்டிலேயே எல்லாமே போட்டது போட்டு போய் வந்துட்டேன். இன்னொரு நாள் வரேன் அதித்தி” என்றாள் யாரா.
“எப்பவும் என் அண்ணனுக்கு அந்த ஆபீஸ் வேலை தான். தாமரைதான் என் பையனுக்கு கற்றுக் கொடுத்துட்டீங்க. வினோவையும் ஒரு நல்ல இடமாக கல்யாணம் செய்ய கொடுத்துட்டா என் அண்ணனை அந்த பிசினஸ் எல்லாம் ஓரங்கட்டிட்டு கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லலாமில்ல” என்றாள் அதிதி.
“உனக்கென்ன ரெண்டும் ஆம்பள சிங்கம் பெத்து வச்சிருக்க என் அண்ணாவோட பிசினஸ் அவங்க ரெண்டு பேரும் கவனிச்சுக்கிராங்க. ஆனா நான் ரெண்டு பொம்பள பிள்ளை பெற்று வச்சிருக்கேன். பொண்ணுங்களாலும் பரவாயில்லை ரெண்டு பேரும் அப்பப்போ பிசினஸ்ல போய் உங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னா இவளுங்க இங்க நான் சொல்றத கேக்குறாங்க. எனக்கே இந்த வயசுலயும் அவர் ஆபீஸ் போறத பாத்தா கஷ்டமா இருக்கு” என்றாள் யாரா.
” என்ன டா மாப்பிள்ளை…என் தங்கச்சிக்கு உன் மேல அக்கறை இன்னைக்கு அதிகமா தெரியுது” என்றான் வீரா.
” ஆமாடா இன்னைக்கு மட்டும் இல்ல கொஞ்ச நாளாவே அவ அப்படித்தான் இருப்பேன் என்ன ஆபீஸ்க்கு போக வேண்டாம் வீட்டிலேயே இருங்க ரெஸ்ட் எடுங்க. நமக்கு வேணுங்கற அளவுக்கு பணம் காசு சம்பாதிச்சாச்சு இன்னும் எதுக்கு ஆபீஸ்லயே கிடக்குறீங்கன்னு என்கிட்ட சண்டைக்கு வரா. நான் என்ன பண்ணுவேன் நான் இவ்வளவு வருஷமா கட்டிக்காத்துட்டு வந்த பிசினஸ் திடீர்னு விட்டுட்டு வர எனக்கு மனசு இல்ல என்ன பண்றது நீ எனக்கு ஒரு வழியும் தெரியல” என்றான் தேவ் சீரியஸாக
“இப்ப என்ன உன்னோட பிசினஸ பாத்துக்க ஒரு ஆள் வேணும் அதானே வம்சி இருக்கானு நான் அவனையே வந்து பிசினஸ் பண்ண சொல்ற உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே இதுல” என்றான் வீரா.
” என்ன வேணும் வீரா இப்படி கேட்டுட்ட எனக்கு ரொம்ப சந்தோஷம்தான் ஆனால் மாப்பிள்ளை இருக்கு சம்மதிக்கணுமே பொண்ணு கட்டி கிட்ட இடத்துல அவங்களோட பிசினஸ் எடுத்து நடத்தறது. அவருக்கு அதே மரியாதை குறைச்சல இருந்துடக்கூடாது” என்றான்.
எல்லாம் அந்த காலம் நீ என்ன இன்னும் பழைய பஞ்சாங்கம் மாடல் பேசிக்கிட்டு இருக்க நம்ம வினோவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அவன் உன்னோட பிசினஸ் பாக்கட்டும். அதுக்குப்பிறகு வினோவை கல்யாணம் செய்து கொண்டவர் கிட்ட உன்னோட பிசினஸ் ஃபுல்லா ஹாண்ட்ஓவர் பண்ணிடுவோம். திரும்பவும் இங்கே வந்து என்னோட பிசினசை பாக்கட்டும் ” என்ற அவனுக்கு ஐடியா கொடுத்தான் வீரா .
வீரா சொன்னதும் நல்ல யோசனையாக தோன்ற.. சரி விடு எனக்கு இதுல முழு சம்மதம். மாப்பிள ஹனிமூன் எல்லாம் முடிச்சுட்டு வரட்டும் நீயே அவர்கிட்ட பேசிகிட்டு சொல்லு எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது ரொம்ப வருஷமா ஓடி உழைச்சு இருந்துகிட்டே இருக்கு” என்றான்.
அதற்கு வீராவும் சம்மதம் தெரிவிக்க தேவ், யாரா இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப போக… அவர்களோடு வினோவும் செல்ல போனாள்.
“வினோ என்ன இது நீயும் உன் அம்மா அப்பா கூட கிளம்புறேன்னு நிக்கிற அவங்க ரெண்டு பேரும் வேணா கிளம்பட்டும் நீ கொஞ்ச நாள் நம்ம வீட்ல இருந்துட்டு போ… எப்படியும் தாமரை வர ஒரு வாரம் ஆயிடும் விஜய்யும் ஆபீஸே கதின்னு கிடக்கிறான். நான் மட்டும் தனியா இந்த வீட்ல இருக்கேன் நீ இருந்தால் பேச்சு துணைக்கு ஆகுமே” என்றார் அதித்தி.
“எனக்கு டபுள் ஓகே அத்தை… என்ன… நீ வேற விஜய் மாமா வீட்டுக்கே வர மாட்டாங்க சொல்ற அவர் இருந்தா நான் அவரை சைட் அடிச்சுக்கிட்டே இருப்பேன் இங்கே தனியா உன்னையும் மாமாவையும் பார்த்து நான் என்ன பண்ணப் போறேன்” என்றால் குரும்பாக
” இப்ப என்ன உனக்கு விஜய் தினமும் நம்ம வீட்டுக்கு வரணும் அவ்வளவுதானே அதை நான் பார்த்துக்கிறேன் நீ உன் மாமனை சைட் அடிச்சுக்கோ முடிஞ்சா அவன சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியேயும் பாரு எனக்கு இன்னொரு வேலை மிச்சமாகும்” என்றால் அதிதி.
“அதிதி… என்ன இது சின்ன பிள்ளை கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க. அவ மனசுல வீணா ஆசையை வளர்த்துறாத அது சரியா இருக்காது. முதல்ல விஜய் கிட்ட இத பத்தி பேசு அதுக்கப்புறம் மத்த விஷயத்த பத்தி பேசலாம். நீ இப்ப மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டா நீ சொன்னதை வச்சி இவன் மனசுல போட்டோ கட்டிட்டு வா உனக்கு அப்புறம் நமக்கு தான் சிரமமா போயிடும் ” என்றாள் யாரா.
” நான் என்ன பொய் பேசறேன்னு நீ நினைச்சிட்டியா ? என் மனசுலையும் அந்த ஆசை இருக்கு. என் ரெண்டு பசங்களுக்கும் உன் வீட்டிலிருந்து ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சேன். ஒன்னு நான் நினைக்காமயே நடந்துருச்சு இன்னொன்னு நானே நடத்தி காட்டணும்னு நினைக்கிறேன்” என்றாள் அதித்தி.
“நீ எதை பத்தியும் கவலைப்படாம் கிளம்பி போ… என்னோட அடுத்த மருமகளும் உன் வீட்டில் இருந்து தான் வரப்போறா..” என்று தேவ், யாராவை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் அதிதி.
“இங்கே விஜய்க்கும், தனக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும்” என்ற எண்ணத்தில் விஜய் பற்றிய நினைவுகளை தன் மனதில் சுமக்க ஆரம்பித்தாள் வினோ
இங்கே கெஸ்ட் ஹவுஸில் இனியாவும் அதே நிலையில் தான் இருந்தாள். எப்படியாவது நேற்று அவளுக்கும் விஜய்க்கும் நடந்த விஷயத்தை அவனிடம் l கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி விஜய் இடம் கேட்க வேண்டும் என்று நினைத்தவள் அதை எப்படி விஜய்யிடம் கேட்பது என்று யோசனைகளை மூழ்கி இருந்தால்.
ஒரு பக்கம் தனக்கு விவாகரத்து கிடைக்கப் பிறகு விஜய்யை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தாமரை இருக்க…
மற்றொரு பக்கம் அதிதி கொடுத்த நம்பிக்கை வார்த்தையை நம்பி விஜய் வணக்கம் மனதில் கற்பனை கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் வினோ
மற்றொரு பக்கம் தன்னுடைய கர்ப்பையே விஜய்யிடம் பரி கொடுத்து விட்ட இனியா அவனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்லி தன்னை ஏற்றுக்கொள்ள அவனிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று யோசனையில் இருந்தாள்.
இந்த மூன்று பெண்களின் நிலையும் என்னவாகும் விஜய் இவர்களின் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் பொறுத்திருந்து பார்க்கலாம்
