EPISODE 25
இனியாவை மறைத்து வைத்திருக்கும் விஜய்யிடம் இருந்து எப்படியாவது அவளை தூக்கி விட வேண்டும் என்று யோசனையிலேயே மூழ்கி இருந்தான் ராகேஷ்.
“இன்னா சார் என்னை வர சொல்லி இருந்தியமே… ஓ ஆளு வந்து சொல்லினு போறான். இன்னா விசியம்…” என்று அங்கு வந்தான் பக்கா சென்னை தமிழ் பேசிக்கொண்டு சேது.
” வா சேது உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு உன்னால ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு.. அதை மட்டும் நீ முடிச்சு கொடுத்துட்டேன்னா உனக்கு கனவுலயும் நினைச்சு பாக்காத அளவுக்கு நான் ஒரு செட்டில்மெண்ட் பண்ணிட்றேன் ” என்றான் ராகேஷ்.
” அப்படி இன்னா வேலை சார் வச்சிருக.. சொல்லு இன்னா வேளியா இருந்தாலும் இப்டிங்குறதுக்குள்ள செஞ்சு முச்சிரலாம் ” என்றான் சேது.
“என்னோட எதிரி ஒருத்தன் கிட்டே என்னோட ஆளு மாட்டிக்கிட்டா சேது. அவளும் நானும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். நாங்க காதலிக்குறது தெரிஞ்சும் அவன் என் லவ்வரை தூக்கிட்டு வந்துட்டான். அவன் எங்க இருக்கான். அவன்கூட என் ஆள் இருக்காளான்னு நீ தெரிஞ்சுட்டு வந்து சொல்லணும். முடிஞ்சா அவளை என்கிட்டே கூட்டிட்டு வந்துட்டாலே போதும் ” என்று இனியாவை பற்றி போய் கூறினான் ராகேஷ்.
” இன்னா சொல்றே… சார்! உ ஆள உனக்கு திரியாம இங்க கூட்டியந்துட்டானா.. யாரு சாரு அவன். உ கோட்டக்குல்லியே பூந்து உ ஆளையே இஸ்துக்கினு வந்தது ” என்று வாயை பிளந்தான் சேது.
அவன பத்தின டீடெயில் எல்லாம் அந்த கயிறு இருக்கு சேது நீ பண்ண வேண்டியது எல்லாம் அவன ஃபாலோ பண்ணி எங்க போறான்னு யாரும் மீட் பண்றான் அப்படின்னு எல்லா விபரத்தையும் எனக்கு சரியா கலெக்ட் பண்ணி வந்து சொல்லணும் அதுதான் உன்னோட வேலை என்றான் ராகேஷ்.
” ஏகிட்ட சொல்ட்டில தலிவா… நீ ரிலாசா குந்தினு இரு.. நாளிக்குள்ள அந்த ஆள பத்தி புள் டீட்டிலும் உ டேபில்லா இருக்கு ஓகேவா… ” என்றான்.
” ஓகே சேது. இது தான் இதுக்காகத்தான் நான் உன்கிட்ட இந்த வேலையை ஒப்படைத்தேன் எனக்கு அவனை பத்தின மொத்த டீடெயிலும் வேணும்.
அப்படியே அவன் தூக்கிட்டு வந்த என்னோட ஆள பத்தின தகவல் எதுவும் தெரிஞ்சாலும் அதையும் சொல்லு ” என்றான்.
” நீ கவிலிய உடு சாரே… அந்த ஆள தேடி புடிச்சி.. அவன் நெஞ்சில இருக்க மஞ்சா சோத்த… உருவினு வந்து உ முன்னாடி போடல… ஏ பேரு சேது இல்ல… ” என்றவன்.
“ஆமா தலிவா உ ஆள பத்தி எதுமே சொல்ல.. போட்டோ கீது வெச்சுகினியா இன்னா… இப்டி எதிமே இல்லாம நா எங்கேன்னு உ ஆல தேடி பிச்சி தூக்கினு வரது..” என்றான்.
” அது அது வந்து சேது அவளோட போட்டோ என்கிட்ட எதுவுமே இல்ல..இருந்திருந்தா நானே அவ ஃபோட்டோவை உனக்கு கொடுத்திருப்பேனே. எப்படியும் அந்த விஜய் யாருக்கும் தெரியாமல் எங்காவது ஒரு இடத்துல அவளை மறைச்சு தான் வெச்சிருப்பான். அப்படி அவன் யாருக்கும் தெரியாம யாரையாவது தனியா போய் மீட் பண்றானோ அவ தான் என்னோட ஆள். அவளை பார்த்ததும் கப்புன்னு என்கிட்ட தூக்கிட்டு வந்து கொடுத்துடு “என்றான்.
“ஐ!! இன்னா சாரே… நீ சொல்றத பாத்தா என்கிட்டே இருந்து என்னிதியோ மரிகிற மாதிரி கீது.. ஓய்ங்கா உன்மிய மரிக்காம சொல்லிரு.. எது உட்டாலங்கடி வேலி செஞ்சினு வையி… அப்ரோ உனிக்கு தா பேஜாராகிடும் பாத்துக்கோ..” என்று சந்தேகமாக அவனை பார்த்தான்.
“அட என்ன சேது உன்னை நம்ம்பி எவ்ளோ பெரிய பொறுப்பை கொடுத்திருக்கேன். உன்கிட்டே போய் நான் போய் சொல்வேனா. போ… போய் சீக்கிரம் என் லவ்வரை கண்டுபிடி ” என்றான்.
“சாரே உ லவருனு சொல்டே இருக… ஆனா அந்த பொண்ண பத்தி என்ன விஷ்யமும் சொல்ல மாற்ற… பேர கேட்டாலும் சொல்ல மாற்ற அப்ரோ எப்டி ராசா நா உ ஆள கண்டி பிடிறது..” என்றான் இன்னும் ராகேஷ் மீது நம்பிக்கை வராமல்.
” இப்போ என்ன சேது அவ பேர் தெரியணும் அதானே. அவ பேரு இனியா பாக்குறதுக்கு ஒரு 19 வயசு பொண்ணு மாதிரி தெரிய மாட்டா… ” என்றான்.
” சார்ர்ர்… அப்போ பாக்க உ குட்டி கிழிவி மாறி இருக்குமா… அதா அப்டி சொல்றியா.. ” என்றான்.
” ஏய் சேது.. அவ பாக்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருப்பா. நீ சொல்ற மாதிரி கிழவி எல்லாம் கிடையது” என்றான்.
“அப்பி… வுடு சாரே… என்ட சொல்ட ல… அந்த பொண்ண… அதா சாரே இன்னா… இன்னா பேர் சொன்ன… ” என்று ராகேஷை பார்க்க..
“இனியா ” என்றான்
“ஆ…!! இனியாவோ… தனியாவோ… அந்த பொண்ண எந்த. மூலில ஒளிச்சி வெச்சிருந்தாளு… இந்த சேது தேடி பிச்சி உ முன்னாடி இஷ்துகினு வந்து வுட்ருவா நீ கவிலி இல்லாம இரு ஓகேவா… ” என்றான்.
” ok சேது எந்த ப்ரோப்லேமும் வராம விஷயத்தை சரியா முடிச்சிருக்க ஓகேவா ” என்றான்.
” இன்னா சார்ர்… ஏ மேல உனகு அவ்ளோ தா நம்ம்பிக்க கீதா.. உன்னிக்கி எந்த பிரசிநியும் வராம வேலய பக்காவா முடிச்சி குத்துருவான் இந்த சேதே.. ” என்றவன்.
“அப்ரோ சார்ர்… ” என்று தலையை சொரிந்து கொண்டு நிற்க…
” இரு சேது ” என்ற ராகேஷ். தன் பியேவை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து அனுப்ப சொன்னான்.
அவன் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சேது கிளம்ப..
” என்ன சார் இவனை பார்க்க லோக்கலா தெரியுறான். ஆனா நீங்க அவன்கிட்டே போய் அந்த பொண்ணை உங்க லவ்வருன்னு பொய் சொல்ரறீங்க ” என்றான் ராகேஷின் பியே.
“இவனே ஒரு லோக்கல் ரவுடி.. அவன் பண்ற எல்லா காரியமும் நமக்கு நல்லாவே தெரியும். பொண்ணுங்களுக்கு ஒன்னுனா வந்து முதல் ஆளா அவங்க பிரச்னையை சரி பண்ற என்ன வந்து நிப்பான் அவன் கிட்ட இனியாவை நான் விலை கொடுத்து வாங்கிட்டு வந்தேன்னு நீ சொன்னேன்னு வைங்க இவனே எந்த விஜய் கிட்ட பத்திரமா அவள பாத்துக்க சொல்லிட்டு எனக்கு எதுவும் தெரியாது என்று நம்ம கிட்டயே போய் சொல்லுவான். அதனாலதான் அவன் கிட்ட இனியாவில் நானும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றவங்க பொய் சொன்னேன்” என்றான்.
” பார்க்க ரொம்ப லோக்கல் ரவுடி மாதிரி இருக்கான் ஆனா பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப நல்லவன்னு சொல்றீங்க இவனை பார்த்தா அப்படி எனக்கு தெரியலையே” என்றான் பியே.
“உனக்கு சந்தேகமா இருந்தா அவன் கிட்ட ஒரு கத்த பணத்தை கொண்டு போய் கொடுத்து ரோட்ல போற ஏதாவது ஒரு பொண்ணு கைய காட்டி இந்த பொண்ணு தூக்கிட்டு வர சொல்லு அப்போ தெரியும் அவன் யாரு எப்படின்னு” என்றான் ராகேஷ்.
” ஐயோ எனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் அவன் பொண்ணுங்களுக்கு நியாயமாக இருந்துட்டு போகட்டும் அதனால எனக்கு என்ன ஆகப்போகுது எப்படியும் நீங்க சொன்ன விஷயத்தை முடிச்சிட்டான்னா போதும் வேற எதுவும் வேண்டாம்” என்று பின் வாங்கினான் ராகேஷின் பி ஏ .
அவனைப் பார்த்து சத்தமாக சிரித்த ராகேஷ் ” அவன பத்தி இவ்வளவு பயங்கரமே இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது” என்றவன். “இப்போ புரியுதா நான் ஏன் அவன் கிட்ட இனியாவது பத்தி பொய் சொன்னேன்னு “என்றான்.
” இவன்கிட்ட இப்படி பொய் பேசினா தான் நம்ம நினைச்ச காரியத்தை சாதிக்க முடியும்னு நான் நல்லாவே புரிஞ்சுகிட்டேன்”என்றான்.
…
இங்கே விஜய் பற்றிய விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக ராகேஷ் கொடுத்த கவலை பிரித்து அதில் இருந்த போட்டோவையும் விபரங்களையும் பார்த்தான் சேது.
அதிலிருந்து விஜயின் போட்டோவை பார்த்தவன் “இந்த ஆள எங்கியோ பாத்தா மாரி இருக்கே… ” இன்று யோசித்தவன் தன்னோடு வந்த சகாக்களிடம் விஜயின் போட்டோவை காட்டி அவனை எங்கேயும் பார்த்திருக்கிறார்களா என்று கேட்டான்.
விஜயின் போட்டோவை பார்த்த அவன் சகாக்கள் அவனைப் பற்றிய எந்த தகவலும் தங்களுக்கு தெரியாது என்று கூறி விடவே அந்த கவரில் இருந்த விஜயின் அட்ரசையும் மற்ற விபரங்களையும் தெரிந்து கொண்டவன் நேராக அவன் இருக்கும் ஆபீசுக்கு தெரிந்தவன் அங்கே இதுவே இந்த பேக்கரியில் விஜய் எப்போது வருகிறான் போகிறான் என்று தெரிந்து கொள்வதற்காக அவன் பின் தொடர காத்திருந்தான்.
காலையில் தாமரை வம்சி கீம்புவதற்கு முன்பாகவே கிளம்பி ஆபீசுக்கு வந்திருந்த விஜய் இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் ஆபிசை விட்டு வெளியே வரவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு பாக்கெட் மேலாக சிகரெட்டை ஊதி தள்ளி இருந்த சேது.
“இன்னா மச்சி இவ… இப்பிடி ரெஸ்ட் இல்லாம வேலை. பாக்குறான் போல… காலீல இருந்து ஒரு வாட்டி கூட அவ ன் ஆபீல விட்டே வெளிய வரலியே… அப்படி இன்னா என்னடா வேலை பாக்குறாங்க அவனுக… கொஞ்சோ கூட ரெஸ்டு இல்லாம ” என்று சலித்துக்கொண்டவன்.
” டேய் அண்ணாக்கு ஒரு டீ சொல்றா… ” என்றான்.
” நீ இன்னா பாஸே இங்க குந்தின்னு காலில இருந்து டீயும் பன்னுமா சாப்ட்டு கீற… நமக்கு இது இல்லாம் செட்டே ஆவதே… நீ இரு நா ஏ வண்டில சரக்கு வெச்சிக்கிற அதிய போய் எத்துனு வரேன் ” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
“அட பாவி இத்த ஏ நீ முன்னாடியே சொல்ல… சொள்ளீர்ந்தா இந்நேரோ நா குஷினு மட்டை ஆகிற மாட்டே… போடா… போ… போய் அத்த முதல்ல எத்தினு வாடா… ” என்று அவனை வேகமாக அனுப்பி வைத்தான்.
“இதோ… இப்போ இப்போ… வந்திரும் மச்சா நீ பிரீயா வுடு… பாவோ அவனுக்கு இன்னா தெரியு… நா போயி சீகிரமா கொண்டி வரே… ” என்று மற்றொருவன் அங்கு செல்ல…
அந்த நேரம் பார்த்து சரியாக விஜயின் கார் அவன் அலுவலகத்தில் இருந்து வேகமாக வெளியே வந்தது. அதை பார்த்ததும்.
“டேய்… சரக்கு வேணா ஒன்னியு வேணா… சீகிரம் வாங்க டா… பார்ட்டி ஆபீஸ உட்டு கிளப்பிருச்சு… ” என்று அவசரமாக கையில் இருந்த சிகறட்டை தூக்கி வீசிவிட்டு விஜய் பின்னால் தன் புல்லட்டில் அவனை பின் தொடர்ந்தா சென்றான் சேது.
