EPISODE 26
இரவு மணி 10 ஐக் கடந்திருக்க.. விஜய்யின் கார் அவன் ஆபீஸ் வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றது . அதை பார்த்ததும் சேது தன் புல்லட்டில் விஜய்யின் காரை FOLLOW செய்து சென்றான் .
“வினோ.. ! எந்த ஹாஸ்பிடளுக்கு வரணும் எனக்கு லொகேஷன் ஷேர் பன்னிரு நான் வந்துடறேன் ” என்று காரில் கனெக்ட் செய்திருந்த போனில் பதட்டமாக பேசியவன் போனை கட் செய்தான்.
பின் ஏதோ யோசனை வந்தவனாக தன் மொபைலில் அர்ஷுக்கு அளித்தவன் அவன் போனை அட்டென்ட் செய்யவும் ” டேய் அர்ஷ் எங்க இருக்க ” என்றான் விஜய் .
“மச்சான் இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு கிளம்பறேன் ” என்றான் அர்ஷ் .
“நீ இன்னிக்கு ஒரு நாள் கெஸ்ட் ஹவுசில் இனியாவுக்கு துணையா தங்கிக்கோ அவளுக்கு கால்ல அடிபட்டிருக்கு தனியா வேற இருக்கா… நான் அவசரமா ஹாஸ்பிடல் போறேன் ” என்று அவசரமாக பேசினான் விஜய் .
“டேய் என்ன ஆச்சு இந்த நேரத்துல ஹாஸ்பிடல் போறேன்னு சொல்ற.. யாருக்கும் எதுவும் முடியலையா ?” என்றான் அர்ஷ்.
“ஆமா டா … தேவ் மாமாவுக்கு உடம்பு முடியாலையின்னு ஹோச்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க . வினோ எனக்கு கால் பண்ணி இப்போதான் சொன்னா… நான் அங்க தான் போயிட்டு இருக்கேன் .
எப்போ வருவேன்னு தெரியல .. நான் வர வரைக்கும் நீ இனியாவுக்கு துணையா இரு “என்றான் .
“சரி மச்சான் நீ பாரு . நான் உன்னோட அவுட்ஹவுஸுக்கு கிளம்பறேன் ” என்று போனை கட் செய்துவிட்டு நேராக இனியா இருக்கும் பங்களாவுக்கு சென்றான் அர்ஷ்.
விஜய்க்காக ஹாலிலேயே காத்திருந்த இனியா வாசலில் கார் சத்தம் கேட்காமல் புல்லட் சத்தம் கேட்கவும் யாராக இருக்கும் என்ற யோசனையில் அவள் ஊன்றி நடப்பதற்காக கொடுத்த ஸ்டிக்க்கை பயன்படுத்தி மெல்ல எழுந்து வாசலுக்கு நடந்து சென்றாள்.
அதற்குள்ளாக அர்ஷ் உள்ளே வந்தவன் இனிய நடந்து வருவதை பார்த்து “ஏய் இனியா என்ன இது … உன்னை யார் நடக்க சொன்னா இப்போ… டாக்டர் தான் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னாரே… ” என்றவன் “மல்லிகா அக்கா… மல்லிகா அக்கா… ” என்று கிச்சனை நோக்கி சத்தமிட…
கையில் பால் டம்பளருடன் வேகமாக வந்த மல்லிகா “தம்பி ! வந்துட்டிங்களா ! விஜய் சார் வரல.. ” என்றார் வாசலை பார்த்துக்கொண்டே …
“அவன் வரல… ஆமா உங்ககிட்டே விஜய் என்ன சொல்லி இருக்கான் . இனியாவை பத்திரமா பாத்துக்க சொன்னானா இல்லையா ? நீங்க இப்படி இனியாவை தனியா நடக்க விட்டுட்டு இருக்கீங்க… நல்ல வேலை இவ வாக்கிங் ஸ்டிக் வெச்சு நடந்து வரதை நான் பார்த்தேன். விஜய் மட்டும் இதை பார்த்து இருந்தா இந்த நேரம் என்ன ஆகிருக்கும்னு தெரியும் தானே உங்களுக்கு ” என்று அவரை கடிந்துகொண்டபடி பேசினான் .
“தம்பி இனியா பாப்பா… இப்படி எழுந்து வருவங்கண்ணு எனக்கு தெரியாது ப்பா… பாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன். தூக்கம் வர மாதிரி இருக்குன்னு பாப்பா சொல்லிச்சு சரி சூடா பாலை குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்னு பாலை எடுத்துட்டு வர கிட்சேன் போனேன் . அதுக்குள்ள இப்படி ஒரு வேலையை பண்ணி என் வேலைக்கு பாப்பா உலை வெக்கும்னு நான் நினைக்கல தம்பி ” என்றார் .
அவர் சொன்னதை கேட்டு இனியாவை திரும்பி அர்ஷ் முறைக்க…
“அண்ணா சும்மா ஒரே இடத்துல உக்கந்து இருக்க கடுப்பா இருந்துச்சுனு எழுந்து மெதுவா நடந்தேன் அது ஒரு குத்தமா . நீங்க என்னவோ விஜய் சார் வந்தா என்ன ஆகும்னு தெரியுமான்னு கேக்குறீங்க… இந்த அக்கா என்னடான்னா சார் வந்தா அவங்க வேலையே போயிடும்னு சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் கொடுக்குற பில்ட் அப் எல்லாம் பார்த்தா விஜய் சார் ரொம்ப டெரரான ஆளா இருப்பார் போலையே..” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“அவனை பத்தி நாங்க பில்ட் அப் எல்லாம் கொடுக்கல… விஜய் ஆளே அப்படி தான் . அவனுக்கு சொன்ன வேலை நடக்கணும். யாராவது அதை தாண்டி எதுவும் செய்துட்டா அவ்ளோ தான் உடனே அவங்களை வேலையை விட்டு தூக்கிடுவான் ” என்றவன் அருகில் கையில் இருந்த பால் டம்பளரை நடுக்கத்தோடு பிடித்துக்கொண்டு இருந்த மல்லிகாவை பார்த்தவன் .
“நல்ல வேலை நான் முதல்ல வந்தேன். விஜய்ய் வெளிய நின்னு போன் பேசிட்டு இருக்கான். அவன் மட்டும் முதல்ல வந்து இருந்தா உன்னை எதுவம் சொல்ல மாட்டான் . இந்த நேரம் மல்லிகா அக்கா உங்க சீட் தான் காலி ஆகியிருக்கும் ” என்றான்.
“என்னது விஜய் தம்பி வெளிய போன் பேசிட்டு இருக்கா ! இதை ஏன் தம்பி வந்ததும் சொல்லல நீங்க…” என்று பதறிய மல்லிகா.
“தம்பி இந்த பாலை பிடிங்க” என்று சூடாக இருந்த பால் டம்பளரை அர்ஷ் கையில் திணித்துவிட்டு
“பாப்பா… அந்த குச்சியை இப்படி குடு ” என்று அவள் கையில் இருந்த ஸ்டிக்கை வாங்கி அதையும் அர்ஷ் கையில் திணித்தவர்.
இனியாவை சிறுபிள்ளையை தூக்குவது போல தூக்கிப்போய் சோபாவில் அமரவைத்தார்.
அதை எல்லாம் பார்த்து சிரித்த அர்ஷ் “ஆ!! அக்கா சுடுது … சுடுது … ” என்று கையில் இருந்த பால் டம்பளரை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு வந்தவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான் .
இனியாவும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்ன ஆச்சு இவனுக்கு என்ற ரீதியில் அர்ஷை புரியாமல் பார்க்க…
“நான் சும்மா விளையாட்டுக்கு விஜய் வெளியே போன் பேசிட்டு இருக்கான்னு பொய் சொன்னேன் அதை அப்படியே நம்பிட்டு இனியாவை ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கிட்டு வந்து சோபாவுல உக்கார வெச்சுட்டீங்க… நீங்க நல்ல பலசாலி தான் அக்கா… ” என்று சிரித்தான்.
அவன் சொன்னது கேட்டு மல்லிகாவுக்கு கோபம் வர அவனை முறைத்தவர் “என்ன தம்பி நீங்க இப்படியா பயமுறுத்துவீங்க… நான் பயந்து போய்ட்டேன் தெரியுமா …” என்றார் .
“அக்கா விஜய் சார் வந்திருந்தா இந்த நேரம் கார் சத்தம் கேட்டிருக்குமே… எனக்கு அர்ஷ் அண்ணாவோட புல்லட் சத்தம் தான் கேட்டுச்சு.” என்றாள்.
“நான் எங்க இனியா பாப்பா அதை கவனிச்சேன் ” என்றவர் .” இந்த இனியா இந்த பால் ஆறிப்போறதுக்குள்ள இதை குடிச்சிடு..” என்று அவளிடம் பாலை நீட்டினார்.
அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு இனியா வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“தம்பி நீங்க எதுவும் சாப்டிங்களா? நான் தோசை ஊத்தி தரட்டுமா ? ” என்றார் அர்ஷ்ஷிடம்.
“அக்கா எனக்கும் ஒரு டம்பளர் பால் மட்டும் போதும் ” என்றான் .
அர்ஷுக்கு பால் எடுத்து வர மல்லிகா கிட்சன் செல்ல…
இனியா இன்னமும் பாலை குடிக்காமல் கையில் வைத்து இருப்பதை பார்த்தவன் “என்ன இனியா வாசலையே பார்த்துட்டு இருக்க… விஜய் வரலைன்னு பாக்கறியா ? என்றான் .
“ஆமாம் ” என்று இனியா தலையை ஆட்ட…
“அவன் மாமாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு போன் வந்துச்சு அதான் அவங்களை பார்க்க போயிருக்கான். அவன் எப்போ வருவான்னு தெரியாது நீ இங்க தனியா இருப்பேன்னு என்னை இங்கே அனுப்பி வெச்சான் ” என்றான் அர்ஷ் .
“ஓ… ” என்று சுரத்தே இல்லாமல் பேசியவள்.
“அண்ணா என் கூட தான் மல்லிகா அக்கா இருக்காங்களே… நீங்க வேணும்னா வீட்டுக்கு கிளம்புக்ங்க நானும் அந்த அக்காவும் பத்திரமா இருந்துபோம் ” என்றாள்.
“பரவால்ல டா…. ” என்றவன் டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தவன் அதை பார்க்க ஆரம்பித்தான்.
இனியாவுக்கோ… டிவி பார்க்கும் ஆர்வமே போய்விட்டது. அவனோட ஒன்றாக இருந்த அந்த இரவு வந்து அவளை பாடாய் படுத்தியது . இப்படி பட்ட நினைவுகள் வருவது சரியா? தவறா? என்று கூட அவளுக்கு தெரியவில்லை. தன் நிலையை எடுத்து சொல்ல தனக்கு என்று யாரும் இல்லை. இருந்த ஒரு பாட்டியும் ஊரில் இருக்கிறார். அவரை எப்போது எப்படி போய் பார்க்க முடியும் என்று அந்த நினைப்பு மறுபக்கம் ஓடிக்கொண்டு இருந்தது.
இங்கே ஹாஸ்பிடல் விரைந்த விஜய் எமெர்ஜென்சி பிரிவின் முன் தன் மொத்த குடும்பமும் இருப்பதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பதட்டம் அதிகம் ஆனது . யாரா அழுதுகொண்டு இருக்க… அவரை அதிதியும், வினோவும் சமாதானம் செய்து கொண்டு இருந்தார்கள் .
மற்றொரு பக்கம் வீரா மட்டும் தனியாக குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான் . அவனிடம் வேகமாக வந்த விஜய் “அப்பா மாமாவுக்கு இப்போ எப்படி இருக்கு .. என்ன ஆச்சு ? ” என்றான்.
“நம்ம வீட்ல இருந்து நேரா ஆபீஸ் போயிருக்கான் விஜய். அங்க திடீர்னு நெஞ்சை பிடிச்சிட்டு சாஞ்சுட்டான். அவசரமா இங்க கொண்டு வந்து அவன் பிஏ அட்மிட் பண்ணிட்டு எங்களுக்கு தகவல் சொல்லிட்டான் . டாக்டர் உள்ளே தேவ்வை செக் பண்ணிட்டு இருக்காங்க . எல்லாரும் அவங்களுக்காக தான் வெயிட்டிங்” என்றான் வீரா .
யாரா அழுவதை பார்த்து அவரிடம் வந்தவன் “அத்தை இப்போ எதுக்கு இப்டி அழற… மாமாவுக்கு எதுவும் ஆகாது நீ கவலை படாதே ” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான் .
தேவ்விற்கு டிரீட்மென்ட் முடித்துவிட்டு டாக்டர் வெளியே வர… அவரை பார்த்ததும் “விஜய் .. ” என்று வீரா அழைத்தான் .
விஜய்யம் மற்றவர்களும் வந்து டாக்டர் முன்பு ஒருவித எதிர்பார்ப்போடு அவரை பார்க்க..
“மிஸ்டர் தேவ் இப்போ க்ரிட்டிக்கல் கண்டிஷன்ல இருந்து வெளிவந்துட்டாரு. அவருக்கு இது மைல்டு அட்டாக் தான் . ஆனா இதுக்கு முன்ன ஒரு முறை அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு . அப்போவே அவர் டிரீட்மென்ட் எடுத்திருந்தா இந்த மாதிரி மறுபடி வராம தடுக்க பார்த்திருக்கலாம் ” என்றார்.
அவர் சொல்வதை கேட்டு அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது “என்ன டாக்டர் சொல்றிங்க.. இதுக்கு முன்ன தேவ்வுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கா ! அப்படி எதுவும் இல்லை டாக்டர் ” என்று யாரா அதிற்சியாக கூற…
“நீங்க பேசறதை பார்த்தா அவர் உங்ககிட்டே தனக்கு ஹார்ட் அட்டாக் வந்த விஷயத்தை மறைச்சிருக்காருன்னு நினைக்குறேன் ” என்றவர் .
“அவர் இப்போ நல்லா இருக்கார். இன்னும் ஒரு ரெண்டு நாள் இங்கையே இருக்கட்டும். அவரை தரோவா செக் பண்ணிட்டு அப்பறோம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் ” என்றவர் “அவரை டிஸ்டர்ப் பண்ணாம ஒவ்வொருத்தரா போய்ப்பாருங்க ” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார் .
