Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 196

உன் ரகசிய ரசிகை நான் 196

by Layas Tamil Novel
180 views

EPI 196

நீங்கள் கொடுத்த பத்தியில் கேட்கப்பட்ட மாற்றங்களைச் செய்து கீழே கொடுத்துள்ளேன்:

போதி மாதவி தனக்கு அழைப்பாள் என்று அவன் அறையில் தூங்காமல் அவள் போனுக்காக காத்திருக்க…

நள்ளிரவை தாண்டியும் அம்மாதவை அழைக்காமல் போகவே ஒருவேளை அவளுக்கு போனில் பேசுவதற்கு எதுவும் பிரச்சனையாக இருக்குமோ.

அதனால்தான் தனக்கு இவ்வளவு நேரம் ஆகியும் போன் செய்யாமல் இருக்கிறாளோ என்று யோசனையிலேயே மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்து படி யோசித்துக் கொண்டிருந்தான் போதி.

நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன் தன்னையும் அறியாமல் கண் அயர்ந்து விட்டான்.

அதிகாலை 3 மணி போல போதியின் போன் அலற பதறி அடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவன் எழுந்து போனை தேட மெத்தையில் ஒரு ஓரமாக இருக்கவும்.

வேகமாக சென்று தன் போனை எடுத்து அட்டென்ட் செய்து ஹலோ என்று சொல்ல…

அந்தப்புரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.

தன் காதில் போனை வைத்து இருந்த போதி மாதவி தான் தனக்கு அழைத்திருந்தாளா வேற யாரேனும் அழைத்திருக்கிறார்களா ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்ற யோசனையில் தன் காதில் இருந்து போனை எடுத்து திரையைப் பார்க்க அதில் மாதவிக்கு போதி கொடுத்து விட்டிருந்த எண்ணிலிருந்து தான் அவனுக்கு அழைப்பு வந்து இருந்தது.

அதை பார்த்தவுடன் கண்டிப்பாக மாதவி தான் அழைத்து இருக்க வேண்டும் என்று மீண்டும் போனை காதில் வைத்து ஹலோ ஹலோ மாதவி ஏதாவது பேசு மாதவி.

ஏன் போன் பண்ணிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க என்று பதட்டமாக போதி கேட்க…

அந்த பக்கம் இருந்து நீ எந்த பதிலும் வராமல் போகவே போதிக்கு பயம் தொற்றிக் கொண்டது.

ஏன் மாதவி எதுவும் பேசாமல் இருக்கிறாள் என்று யோசனையோடு மீண்டும் அவள் பெயரைச் சொல்லி போதி அழைக்க…

அப்போது பலமாக ஒரு சிரிப்புச் சத்தம் போனில் மாதவி இருந்த பக்கத்தில் இருந்து போதிக்க கேட்டது.

அந்த சிரிப்பு சத்தமே அவனுக்கு உணர்த்தியது சிரிப்பது சங்கவி தான் என்று.

அவள் சிரிப்பதை கேட்டதும் ஒரு நிமிடம் போதிக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம் ஏற்பட்டது. ஏன் என்றால் அவள் சிரிப்பில் அப்படி ஒரு குருரம் வெளிப்பட்டது.

இவள் இப்படி கொடூரமாக சிரிப்பதை பார்த்தால் மாதவியை எதுவும் செய்திருப்பாளோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.

மாதவியை பார்த்து வந்தவுடன் லேகா நேராக போதியின் வீட்டிற்கு வந்து அவனிடம் சங்கவிக்கு தெரியாமல் போனை மாதவியிடம் கொடுத்து விட்டதை சொல்லி சென்றாள்.

அப்படி இருக்கும்போது எப்படி தான் மாதவிக்கு கொடுத்த போன் சங்கவியின் கைக்கு வந்துது என்று குழப்பத்தில் போதி இருக்க..

என்ன மிஸ்டர் போதி இவ்வளவு நேரம் பேச சொல்லி அவ்வளவு கெஞ்சினீங்க இப்போ என்னோட குரலை கேட்டதும் நீங்க பேசாம அப்படியே அமைதியாகிட்டீங்க என்றால் சங்கவி.

பேசுங்க மிஸ்டர் போதி உங்க லவ்வர் மாதவி இப்போ என் பக்கத்துல தான் நின்னுட்டு இருக்கா.

அவளுக்கு நீங்க பேசுறது நல்லாவே கேட்கிறது. நான் போன ஸ்பீக்கரில் தான் போட்டு இருக்கேன் பேசுங்க மிஸ்டர் போதி என்றாள் சங்கவி.

போதி பேசுவதை மாதவி கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னதும் உடனே போதி மாதவி நீ எப்படி இருக்க உனக்கு ஒன்னும் ஆகலையே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்ன ஆச்சு ஏன் காலேஜுக்கு நீ வரல என்று பதட்டமாக பேசினான் போதி.

சங்கவியின் அருகில் நடுங்கியபடி போதியின் குரலைக் கேட்டு கண்களில் நீர் வழிய அவனுடன் பேச முடியாமல் நின்றிருந்தால் மாதவி.

மாதவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க மீண்டும் சத்தமாக சிரித்த போதி என்ன மிஸ்டர் போதி உங்க காதலிகிட்ட நீங்க பேசியும் அவ எந்த பதிலும் பேசாம இருக்காள் என்று பார்க்கிறீர்களா.

நான் சொல்லாமல் அவ வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வராது, நான் சொல்லாம அவ உங்ககிட்ட பேச மாட்டாள் என்றால் சங்கவி.

அவள் சொல்வதைக் கேட்டு போதைக்கு ஆத்திரமாக வந்தது இப்போது கோபப்பட்டு எந்த வார்த்தையும் விட்டுவிடக்கூடாது அப்படித்தான் எதுவும் பேசினால் அது மாதவிக்கு தான் ஆபத்தாக போய் முடியும் என்று நினைத்தவன். தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு.

மாதவி ஏதாவது பேசு மாதவி ஏன் எதுவும் பேச மாட்டேங்கற உன் குரலை கேட்காமல் எனக்கு என்னவோ போல இருக்கு. தயவுசெய்து ஏதாவது பேசு மாதவி என்று கெஞ்சினான் போதி.

அவன் கெஞ்சுவதை கேட்டு மாதவியால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. ஆனால் சங்கவியை மீறி போதியிடம் பேச பயந்தபடி உடல் நடுங்க எத்தனை உதட்டை கடித்து அழுதபடி உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு நின்றிருந்தால் மாதவி.

அவள் அழும்போது விம்மல் சத்தம் மட்டும் போதிக்கு கேட்டது. அதை வைத்து அவள் தன்னிடம் பேச முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.

மாதவி என்கிட்ட பேச முடியலையேன்னு அழறியா? நீ அழாதே மாதவி நீ இந்த மாதிரி சமயத்துல தான் தைரியமா இருக்கணும்.

உன்னை அந்த சங்கவி என்ன சொல்லி மிரட்டி இருந்தாலும் நீ அவளைப் பார்த்து பயப்படாத.

நான் உன்னை அவளிடம் இருந்து எப்படியும் என் கூட கூட்டிட்டு வந்துருவேன். நீ கவலைப்படாத என்று மாதவிக்கு தைரியம் சொன்னான் போதி.

அவன் சொன்னதை இதைக் கேட்டுக் கொண்டிருந்த மாதவி தன் கண்ணீரை அடக்க முடியாமல் வெடித்து வாய்விட்டு அழ…

அவளை அருகில் இருந்து சமாதானம் செய்ய முடியாமல் அவளுக்கு ஆறுதல் செய்ய முடியாமல் தான் இருக்கும் நிலையை எண்ணி போதி தன்னைத்தானே நொந்து கொண்டான்.

இவர்கள் இருவரின் உணர்ச்சி போராட்டங்களை பார்த்து ரசித்தபடி கையில் போனை வைத்துக் கொண்டு நின்றிருந்த சங்கவி.

என்ன மிஸ்டர் போதி என்னவோ பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு இவளை என்கிட்ட இருந்து காப்பாத்துறேன்னு சொல்றீங்க…

இப்ப கூட நீ கிளம்பி நேரில் வா….வந்து இவளை உன் கூட அழைச்சிட்டு போறேன்னு என்கூட வான்னு சொல்லி மாதவியை கூப்பிடு.

அவ என்னை மீறி எப்படி உன் கூட வருவான்னு நானும் பார்க்கிறேன் என்றால் சங்கவி .

அவள் சொன்னதும் அதிர்ச்சியான போதி இப்பவே நான் உன் வீட்டுக்கு வந்து மாதவியை என் கூட அழைச்சிட்டு போறேன் நீ பாக்குறியா என்றான் போதி.

தாராளமா வாங்களேன் உங்களுக்காக என் வாசல் கதவு திறந்து இருக்கு கிளம்பி வாங்கலேன் என்றால் சங்கவி.

இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உன் வீட்டில் இருப்பேன் சங்கவி….என் மாதவியை என்கூட நான் கூட்டிட்டு தான் வரப் போறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன்

மறுநிமிடம் தன் போனை கட் செய்து விட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு மாதவியை தன்னுடன் அழைத்து வர விரைந்தான் போதி.

❤️

இங்கே துர்காவும் அவள் தங்கைகளும் இருந்த அறைக்குள் முகமூடி அணிந்து யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்தவனை அவன் தலையில் பலமாக உருட்டு கட்டையால் அடித்து ஒரே அடியில் அவனை துர்கா மயக்கம் அடைய செய்திருந்தால்.

ஒரே தரையில் மயங்கி குப்புற விழுந்து இருந்தவனை நால்வரும் மிகவும் சிரமப்பட்டு திருப்பி படுக்க வைத்து அவன் முகத்தில் இருந்த முகமூடியை விளக்கிப் பார்க்க…

தரையில் மயங்கி விழுந்து கிடந்தவனின் முகத்தை பார்த்த நால்வருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

கீழே மயங்கி விழுந்து கிடந்தவனை பார்த்ததும் ராதா அதிர்ச்சியானவள் பின் அலறியபடி பதறி அடித்துக் கொண்டு ஐயோ வாத்தி…. நீயா முகமூடி போட்டுட்டு எங்க ரூமுக்குள்ள வந்த உனக்கு இது தேவையா பத்தி ஏன் இப்படி வந்த என்று சொல்லி அவன் மார்பிள் அடித்து ராதா அழ…

கீழே ஆறடி உயரத்தில் ஆஜானு பாகுவாக மயங்கிய நிலையில் சந்தோஷ் தரையில் படுத்து இருந்தான்.

அவன் மார்பில் தன் இரு கைகளாலும் அடித்து சந்தோஷை மயக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சிக்க…

அவன் எங்கே அவன் எழுந்திரித்தால் தானே துர்காவின் அடி அந்த அளவுக்கு அவனை மயக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.

சந்தோஷ் மயங்கி கிடந்ததை பார்த்ததும் கீர்த்திகா வேகமாக குடிக்க வைத்திருந்த தண்ணீர் பாட்டிலே எடுத்து வந்து அதிலிருந்து தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்க சந்தோஷ் அப்போதும் கண் விழிக்க வில்லை.

முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவன் கண்விழிக்காமல் மயங்கி கிடப்பதை பார்த்ததும் ராதா உண்மையாகவே பதவி பயந்து ஐயோ வாத்தி…என்று மீண்டும் கதறி அழ ஆரம்பித்தாள்.

ஏற்கனவே சந்தோஷ் உள்ளே குறித்ததும் அவனைப் பார்த்து பெண்கள் எல்லாம் அலறி இருக்க போதாக்குறைக்கு இப்போது ராதாவின் அலறல் சத்தம் கேட்டதும். சுற்றி இருந்தவர்கள் இவர்கள் அறையில் இருந்து வந்த சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வந்து அவர்கள் அறை கதவை தட்டினர்.

திடீரென தங்கள் அறைக்கதவு தட்டப்பட்டதும் நால்வரும் பதட்டமாக கதவை திரும்பி பார்க்க…

இப்போ என்ன செய்வது என்று ஒருவர் முகத்தை ஒருவர் தெரியாமல் பார்த்துக் கொள்ள அப்போது துர்கா தன் கையில் இருந்த உருட்டு கட்டியை கீழே போட்டு சந்தோஷின் கையைப் பிடித்து இழுக்க…

அவளை புரியாமல் மற்றவர்கள் பார்க்க என்ன பாக்குறீங்க நம்ம இப்ப போய் கதவ திறந்து அவங்க எல்லாரும் இங்கே நம்ம ரூம்ல சந்தோஷ் இருக்கிறதை பார்த்தா நம்ம வந்த காரியமே கெட்டுடும்.

முதல்ல சந்தோஷை தூக்கிக் கொண்டு போய் ஓரமா எங்கும் படுக்க வைப்போம் வாங்க என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுக்க… சரி என்று தலையாட்டி ராதா ஒரு கையையும் ஷிவு கீர்த்திகா ஆளுக்கு ஒரு புறம் சந்தோசின் காலையும் பிடித்து அவனை இழுத்துச் செல்ல முயற்சிக்க…

அவனை ஒரு அடி கூட அவர்கள் நால்வராலும் அசைக்க முடியவில்லை.

என்னால் வரும் எவ்வளவோ முயன்றும் சந்தோஷை சிறிதும் நகர்த்த முடியாமல் போகவே அதில் கடுப்பான ஷிவு என்னடி உன் புருஷன் அரிசி மூட்டை இந்த கணம் கணக்கிறார் இவர் கூட எப்படித்தான் நீ குடும்பம் நடத்துறியோ சலித்துக் கொண்டாள் ஷிவு.

இப்போ எதுக்குடி என் புருஷனை அரிசி மூட்டைனு கிண்டல் பண்ற அவர் சக்கரை மூட்டை மாதிரி இனிப்பானவர் டி என்று ராதா குழைய..

ஆமா இப்போ இது ரொம்ப முக்கியம் என்ற ஷிவு ஒழுங்கா வேலையை பாரு டி என்றவள் சந்தோஷின் காலை பிடித்து தூக்க முயல…

ஷிவுவ்வினால் முடியவில்லை அவள் ஏற்கனவே கர்ப்பமாக இருத்ததனால் அவள் உடல் பல இழந்து சற்று வீக்காக இருந்தாள்.

அதனால் அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பிக்க…அதை பார்த்த துர்கா ஏய் இருங்க இவரை நம்மால் நகர்த்த முடியாது என்றவள் ஷிவு நீ ஒரு நிமிஷம் அந்த பக்கம் போய் உட்கரு என்று ஷிவுவை அருகில் இருந்த காரில் அமர வைத்த துர்கா மற்றவர்களிளிடம்.

நீங்க பெட்டை எ ல்லாம் எடுத்துவந்து சந்தோஷை சுற்றி போடுங்க என்றவள் அவர்கள் பெட்டில் போர்த்தி இருந்த துணியை போன்ற மற்றொரு போர்வையை எடுத்து வந்து சந்தோஷின் மீது போர்த்திவிட்டு அவனை சுற்றி மெத்தையை போட்டு அதில் சந்தோஷன் அருகில் ராதாவி படுக்க சொன்னாள்.

அக்கா என்ன இது உங்க முன்னாடி போய் நான் எப்படி அவர் பக்கத்துல படுக்குறது என்று வெட்கப்பட்டுக் கொண்டு ராதா நிற்க…

ஏய் ரொம்ப பண்ணாத டி பார்க்க சகிக்கலை என்று ராதாவை கழுவி ஊற்றிய ஷிவு ஒழுங்கா அக்கா சொல்றதை கேள்வி கேட்காமல் செய் என்றால் ஷிவு.

ராதா அதன் பிறகு எதுவும் பேசாமல் போய் அமைதியாக சந்தோஷின் அருகில் படுத்துக் கொள்ள…

அவர்கள் இருவரையும் தாண்டி வந்து துர்கா படுத்துக் கொண்டு கீர்ஹட்டிக்காவை தன் அருகில் படுக்க வைத்துவிட்டு ஒரு முறை தங்களை பார்த்துக்கோ கொள்ள..

அவர்கள் தரையில் போட்டிருந்த பெட்டும், தரையில் மயங்கி கிடந்த சந்தோஷம் ஒன்று போலவே வித்யாசம் தெரியாமல் இருப்பதை பார்த்ததும் திருப்தி பட்டுக்கொண்ட துர்கா சேரில் அர்ந்து இருந்த ஷிவுவிடம் இப்போ போய் கதவை திற என்றாள்.

ஷிவு ஒருமுறை அவர்களை பார்த்துவிட்டு சென்று கதவை திறக்க…

வெளியே நின்று இருந்த பியூன் என்னமா… எதுவும் சத்தம் வந்துச்சு உங்க அறையில் இருந்து. நீங்க கத்துற சத்தம் கெடுத்து என்றபடி ஷிவுவை தாண்டி அவர்கள் அறைக்குள் வந்தார்.

தரையில் கட்டிலில் இருந்த மெத்தையை எல்லாம் போட்டு அதன் மீது படுத்திருந்தவர்களை பார்த்து ஏன் மா மெத்தையை கீழே போட்டு படுத்து இருக்கீங்க கட்டில்ல போடாம என்று கேட்டார் பியூன்.

அது அது ஒன்னும் இல்ல சார் நாங்க எப்பவுமே ஒண்ணாவே படுத்து தூங்கி பழக்கப்பட்டோமா இங்க வேற கட்டில் தனித்தனியா இருந்துச்சா அதனால் தான் எல்லாரும் ஒண்ணா படுக்கலாம் என்று சொல்லி பெட்ட கீழே போட்டு கீர்த்திகா.

அது சரி மா ஆனா எதையோ பார்த்து பயந்த மாதிரி உள்ள இருந்து கத்துற சத்தம் எனக்கு வெளியே கேட்டுச்ச்சே இன்று அவர்களே சந்தேகமாக பார்த்தபடி கேட்டார்.

அது அது வந்து என்று கீர்த்திகா அதற்கு என்ன பதில் சொல்வது என்று சமாளிக்க தெரியாமல் விழிக்க…

அப்போது துர்கா இதே மாதிரித்து அது ஒன்னும் இல்ல கீழ இந்த ரூம்ல கரப்பான் பூச்சி போச்சா அதை பார்த்ததும் என்னோட தங்கச்சிக்கு பயம் வந்துருச்சு அதனாலதான் அவ அப்படி கத்திட்டா என்று ராதாவை தோளில் எடுத்து துர்கா சொல்ல…

ஒரு கடற்கரைப்பான் பூச்சி கா ரூமுக்குள்ள ஏதோ திருடன் வந்த மாதிரி அப்படி சத்தம் போடுவீங்க என்று பியூன் நாங்க எல்லாம் என்னவோ எதுவும் என்று சொல்லி தன் பின்னால் நின்று இருந்தவர்களை பார்த்து கூற…

சாரிங்க என் தங்கச்சி கொஞ்சம் பயந்த சுபாவம் அதனால அவ அப்படியே சத்தம் போட்டுட்டா நீங்க எல்லாம் தூங்கிட்டு இருப்பீங்க நாங்க வேற சத்தம் போட்டு உங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணிட்டோம் எங்கள மன்னிச்சுக்கோங்க என்று துர்கா அவரிடம் மன்னிப்பு கேட்க…

சரிமா என்று சொல்லி அவர் திரும்ப போக…

அப்போது சந்தோஷ் லேசாக மயக்கம் தெளிந்து தன் காலை அசைக்க அதை அவர் பார்த்து விட்டார்.

என்னம்மா இது பெட் தானா அசைடு என்று அதிர்ச்சியாக அவர் சந்தோஷ் கால் அசைந்த இடம் பார்த்துக் கொண்டே வர…

அதற்குள் அவருக்கு தெரியாமல் சந்தோஷ் போர்வைக்குள் காலை விட்ட ராதா தன் காலை உயர்த்தி காட்டி ஆடியவள் அது என்னோட கால் தான் பயத்துல என் காலு தன்னால ஆடுது என்று ராதா சொல்லி சமாளிக்க….

அப்படியா என்று அவர் இன்னும் சந்தேகம் விலகாமல் அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு சரி மா கதவை சாத்திட்டு நேரமே படுத்து தூங்குங்க ரொம்ப நேரம் முழிச்சிட்டு நீங்களும் தூங்காம எங்க தூக்கத்தையும் கெடுக்காதீங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் ஷிவு கதவைடைத்து வந்தவள் பெருமூச்சு விட்ட படி சேரில் அமர…

அப்போது மயக்கத்தில் இருந்து விழித்த சந்தோச படுத்து இருந்தவன் திடீரென்று எழுந்து அமர அவன் மீது போர்த்தி இருந்த போர்வை அவன் உடல் முழுவதும் மூடி இருக்க அவன் திடீரென்று எழுந்து அமர்ந்ததும் அதை பார்த்த ஷிவுவிற்கு ஒரு நிமிடம் நெஞ்சே அடைத்து விடும் போல ஆகிவிட்டது அவள் பயத்தில் அம்மா என்று அலற…

ஷிவு கத்துவதை பார்த்த கீர்த்திகா வேகமாக எழுந்து வந்து ஷிவு கத்துவும் அவள் வாயை அடைக்கவும் சரியாக இருந்தது.

இப்பதான் அந்த பியூன் வந்து சத்தம் போடாதீங்கன்னு சொல்லிட்டு போனார் இப்ப எதுக்குடி நீ கத்துற என்று சொல்ல…

தன் வாயிலிருந்து கீர்த்திகாவின் கையை எடுத்துவிட்டு நான் ஒன்னும் வேணும்னு கத்தல நீயே அங்க பாரு என்று சொல்லி…ஷிவு பயந்த வாரே கையை நீட்டிய பக்கத்தை கீர்த்திகா திரும்பி பார்த்தாள்.

அங்கே இன்னுமும் சந்தோஷ் போர்வையை உடல் முழுவதும் பொருத்திய நிலையில் அமர்ந்து இருக்க அதை பார்த்த கீர்த்திகாவிற்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

கீர்த்திகாவும் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரி சரி பயப்படாத எனக்கும் உன்ன மாதிரியே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்று கீர்த்திகா ராதாவை பார்த்து உன் புருஷன் மேல இருந்து அந்த போர்வையை எடுடி என்று சொல்லி ராதாவை திட்ட…

அவன் மேலிருந்தே போர்வையை வேகமாக இழுத்த ராதா சந்தோஷத்தை பார்க்க அவன் இன்னும் அரை மயக்கத்திலேயே தலை கிறுக்கு இருக்க தன்னைச் சுற்றி அறையை பார்த்தான்.

ராதா அவன் அருகில் வந்து அவன் கன்னத்தை தட்டி யோவ் வாத்தி உன்னை யார் இந்த நேரத்துக்கு இங்கே வரச் சொன்னது.

உன்னால எங்க காரியமே கேட்டுடிச்சு போ என்று சொல்லி எத்தனை தலையில் அடித்துக் கொண்டு ராதா அமர்ந்திருக்க..

இன்னும் அரை மயக்கத்தில் இருந்த சந்தோஷ் அவள் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தவன். ராதாவின் தலையில் இருந்து கையை எடுத்து உன்ன பாக்க தான் குட்டச்சி இந்த நேரத்துக்கு யாருக்கும் தெரியாமல் இங்கே வந்தேன்.

உன்னை பார்த்து ரெண்டு நாள் ஆச்சு குட்டச்சி… நீ இல்லாம உன்னை கட்டி பிடிக்காம என்னால தூங்கவே முடியல என்றவன் தன்னைச் சுற்றி துர்கா கீர்த்திகா ஷிவு இருப்பதே அறியாமல் ராதாவை கட்டிக்கொண்டு தரையில் அப்படியே சரிந்தவன்.

வா…நம்ம ரெண்டு பேரும் தூங்கலாம் எனக்கு ரொம்ப தூக்கம் வருது என்று சொல்லி ராதாவை இருக்க கட்டி அணைத்துக் கொள்ள…

சந்தோஷ் தங்கள் முன்பு ராதாவை கட்டிக்கொண்டு படுப்பதை பார்த்த மூவரும் அவர்களை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள…

சந்தோஷின் கைக்குள் இருந்த ராதா யோவ் வாத்தி இப்படி என் அக்கா முன்னாடி என் மானத்தை வாங்கதையா.முதல்ல என்ன விடு என்று சொல்லி அவன் கைப்பிடிக்குள் இருந்து தன்னை கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டு அவனை விட்டு எழுந்து சற்று தள்ளி நின்று சந்தோஷை பார்த்து யோவ் முதலில் எழுந்திரு என்று அவனை திட்ட…

என்ன செல்லக்குட்டி ஏன் நீ இப்படி கோச்சிக்கிற உன்னை பார்க்கிறதுக்காக நான் எவ்வளவு ரெஸ்ட் ரிஸ்க் எடுத்து சுவரில் குறித்து குறித்து உள்ள வந்திருக்கேன் உனக்கு தெரியுமா நீ என்னடான்னா என்கிட்ட இப்படி கோபமா பேசுறியே என்று அவளை பிடித்து தன் அருகில் இழுக்க போக…

தன் அருகில் சந்தோஷின் கை வந்ததும் சட்டு என்று மேலும் இரண்டு ஆடி விழகி நின்ற ராதா யோவ் வாத்தி நல்லா

உன் கண்ண கசக்கிட்டு உன்னை சுத்தி யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று பாருயா… ஏன்யா இப்படி என் உயிரை வாங்குற என்று தலையில் அடித்துக் கொண்டால் ராதா.

அவள் சொன்னது போலவே தன் கண்களை நன்றாக கசக்கி விட்டு தன்னைச் சுற்றிலும் பார்க்க அங்கே நின்றிருந்த துர்கா கீர்த்திகா ஷிவு மூவரையும் பார்த்தவன்.

ஐயோ… இவங்க முன்னாடியே நான் கீர்த்திகாவை இழுத்து என் கூட படுக்க வைத்து விட்டேன் என்று உங்க பதறியவன் தரையில் இருந்து வேகமாக எழுந்திருக்க…

வேகமாக எழுந்த சந்தோஷ் ராதாவின் அருகில் சென்று நின்று கொள்ள..

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த துர்கா என்ன சந்தோஷ் நீங்க இப்படி பண்ணிட்டீங்க நான் வேற உங்களை திருடனும் நெனச்சு கட்டையால் உங்க தலையில ஓங்கி அடிச்சிட்டேன் நீங்க வேற கொஞ்ச நாங்க முகத்துல தண்ணி எல்லாம் தெளிச்சு உங்களை எழுப்பு முயற்சித்தோம் நீங்க கண்ணு தெரியலையா எங்களுக்கு என்னவோ ஏதோ ஒன்னு கொஞ்சம் பயம் ஆயிடுச்சு இப்படியா எங்களை வந்து இந்த அர்த்த ராத்திரியில் பயமுறுத்துவீங்க என்றால் துர்கா.

ஒன்னும் இல்ல அண்ணி எனக்கு என் பொண்டாட்டிய பாக்காம அவ கூட பேசாம இருக்க முடியல அதனால்தான் நான் அவகிட்ட கூட சொல்லிக்காம திடீர்னு கிளம்பி இங்கே தனியா வர வேண்டியது தான் போச்சு என்றான்.

சரி சரி உங்க பொண்டாட்டி மேல உங்களுக்கு ரொம்ப பாசம் அதிகம்னு எங்களுக்கு நல்லாவே தெரியுது என்று சொல்லி துர்கா சிரிக்க மற்றவர்களும் அவளோடு சேர்ந்து சிரித்தனர்.

You may also like

1 comment

S joshna December 12, 2025 - 2:09 pm

Ayoo akka intha sangavi ya patha enaku tension aguthu 😒😐😑ethukaga ipdi panranu therila🤔

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured