EPISODE-197
சந்தோஷ் தான் தங்கள் அறைக்குள் முகமூடி அணிந்து வந்து இருக்கிறான் என்று தெரிந்ததும் அனைவருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.
ஆமா அண்ணி என்னால எதுவோ பிளான் கேட்டு போச்சுன்னு சொன்னிங்களே என்ன பிளான் அண்ணி என்றான் சந்தோஷ்.
அதுவா சந்தோஷ் என்று தாங்கள் செய்ய இருந்த காரியத்தை சந்தோஷிடம் துர்கா சொன்னாள்.
இப்போ என்ன பண்ணறது அண்ணியென்றான் சந்தோஷ். இப்போதைக்கு நாம ஆபீஸ் ரூம் பக்கமே போக முடியாது சந்தோஷ்.
எல்லாரும் நாங்க போட்ட சத்தத்துல எழுந்துட்டாங்களே.. இப்போதைக்கு எங்கயும் போக முடியாது என்றாள் துர்கா.
அக்கா இன்னைக்கு விட்டா நமக்கு வாய்ப்பு திரும்ப கிடைக்காது அதனால நாம இப்பவே போகலாம் என்று கீர்த்திகா சொன்னாள்.
நீ சொல்றதும் சரிதான் நாம இப்போ வெளியே போனா மாட்டிப்போமே என்று துர்கா யோசிக்க..
உடனே ராதா அக்கா அதுக்கு நான் ஒரு வழி பண்றேன் நீங்க என்ன பண்றீங்க நீங்களும் கீர்த்திகாவும் ஆபீஸ் ரூமுக்கு போய்டுங்க நானும் ஷிவுவும் இங்கே இருந்து சமாளிக்கிறோம் என்று துர்காவின் காதில் ஏதோ சொல்ல…
ஏய் ராதா வேண்டாம் டி.. எதுவும் பிரச்சனை ஆகிட போகுது என்றாள் துர்கா.
அக்கா தெல்லாம் எதுவும் வராது அப்படியே வந்தாலும் அதை நான் சமாளிச்சுக்கிறேன் என்றாள்.
ராதாவிற்கு மறுப்பு சொல்ல முடியாமல் துர்காவும் அவள் சொன்னதற்கு சமாதானம் சொன்னாள்.
ராதாவும் துர்காவும் ஏதோ பேசிக்கொள்ள.. அவர்களை புரியாமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
துர்காவிடம் பேசிவிட்டு தன் அருகில் வந்த ராதாவிடம் என்ன டி ஆச்சு அண்ணி ஏதோ சரிவராது..தப்பா போயிடும்னு சொல்லிடு இருந்தாங்க என்ன ஆச்சு என்றான் சந்தோஷ்.
அது ஒன்னும் இல்லை என்றவள் அவன் கையில் இருந்த முகமூடியை வாங்கி சந்தோஷிடம் கொடுத்து இந்த இதை போட்டுக்கோ என்றாள் .
இதையா இது எதுக்கு டி இப்போ என்னை போட சொல்றே என்றான் சந்தோஷ்.
யோவ் வாத்தி… முதல்ல இந்த முகமூடியை போட்டு உன் மூஞ்சிய மூடு மத்ததெல்லாம் நான் அப்பறோம் சொல்றேன் என்று அவன் கையை பிடித்து அவனை கீழே இழுத்து.
அவன் கையில் இருந்த முகமூடியை வாங்கி அவனுக்கு மாட்டிவிட்டால். இதுக்கு தான் இவ்வளவு உயரமா வளர கூடாது. பாரு அவசரத்துக்கு எதுவும் செய்ய முடியலை என்றவள் அவன் அடையாளம் தெரியாத படி முக மூடியை மாட்டி விட்டவள் திரும்பி துர்காவை பார்த்து ரெடி என்று சொல்லி தன் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்ட…
ஏய் ராதா நல்ல யோசிச்சிக்கோ என்றாள் துர்கா..
அக்கா நீ துவும் கவலை படாதே இவன் எவ்லோ அடிச்சாலும் தாங்குவான் என்றவள் திரும்பி அக்கா இங்கே வா என்று ஷிவுவை அழைத்தாள்.
எதுவும் புரியாம ஷிவு என்ன டி என்று ராதாவிடம் வர… ஒரு நிமிஷம் என் புருஷன் கையை கொஞ்சம் பிடி என்றாள்.
ஏய்… எதுக்கு டி…. என்றாள் ஷிவு அட சொல்றத செய் அக்கா என்றவள் சந்தோஷின் கையை எடுத்து ஷிவுவை பிடிக்க சொல்லிவிட்டு துர்காவையும் கீர்த்திகாவையும் வெளியே அழைத்து வர…
தன்னை இங்கே நிற்க வைத்து விட்டு எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்று புரியாமல் சந்தோஷ் தனக்கு தான் ஆப்பு வைக்க தன் அருமை மனைவி ரெடி ஆகிக்கொண்டு இருக்கிறாள் என்று தெரியால் நின்று இருந்தான்.
சற்று நேரத்தில் நடக்க போகும் விபரீதம் தெரியாமல்,
துர்கா கீர்த்திகைவுடன் வெளியே வந்த ராதா அக்கா நீங்க போங்க நான் பார்த்துக்கறேன் என்றவள்.
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று ஆபீஸ் ரூம் இருக்கும் பகுதிக்கு செல்லும் வரை அமைதியாக இருந்தாகாவல் அவர்கள் அங்கு சென்றதை உறுதி படுத்திக் கொண்டு.
அறைக்குள்ளே திரும்பி ஷிவுவை பார்த்து அக்கா என்ன ஆனாலும் என் புருஷன் கையை மட்டும் விட்டுராதா என்றவள் திரும்பி சந்தோஷை பார்த்து யோவ் வாத்தி சாரி யா… என்றவள் அவன் என்ன என்று கேட்பதற்குள் திரும்பி.
ஐயோ… திருடன் திருடன் யாரவது ஒட்டி வாங்களே… என்று அடிவயிற்றில் இருந்து ராதா கத்த…
அவள் திருடன் என்று கத்துவத்தை பார்த்த சந்தோஷ் ஷிவுவிடம் ஐயோ.. ஏங்க யாரோ திருடன் வந்துட்டாங்க போல…வாங்க யாருன்னு போய் பார்க்கலாம் என்று சந்தோஷ் வெளியே செல்ல போக…
ஐயோ… சந்தோஷ் உங்களை நினைச்ச எனக்கு பாவமா இருக்கு.. இப்படி வாண்ட்டடா வந்து என் தங்கச்சி கிட்டே மாட்டிக்கிட்டீங்களே என்று அவளுனை பார்த்து பரிதாபமாக கூற…
ஆமா ஷிவு அவசர பட்டு இவ கழுத்துல தாலியை கட்டிட்டேன் என்று விஷயம் புரியாமல் சந்தோஷ் கூற..
ஓ… நீங்க அப்படி நினைச்சுட்டீங்களா என்றாள் ஷிவு.
ஆமா ஏன் என்றவன் அப்போ நீங்க சொன்னது என்னோட கல்யாணத்தை இல்லியா என்று முழித்தவன் திரும்பி ராதாவை பார்க்க..
யாராவது வாங்களேன் எங்க ரூமுக்குள்ள திருடன் வந்துட்டேன் என்று ராதா மீண்டும் கத்த…
பாவம் இந்த அரிசி மூட்டை சந்தோஷற்கு இப்போதுதான் புரிந்தது. ராதா தன்னைத்தான் திருடன் என்று சொல்கிறாள் என்று இப்போதுதான் சந்தோஷற்கு புரிந்தது.
புரிந்த அடுத்த நொடி ஷிவுவின் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்துக் கொள்ள… சந்தோஷ் முயல ..
சாரி சந்தோஷ் என்ற ஷிவு அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொள்ள..
யூ.. டூ… ப்ரூட்டஸ்… என்று ஷிவுவை சந்தோஷ் பாவமாக பார்க்க..
அவன் முகத்தை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்ட ஷிவு அவன் கையை விடாமல் பிடித்துக்கொண்டு நிற்க..
அதற்குள் ஆசிரமத்தில் இருந்தவர்கள் எல்லாம் ராதாவின் சத்தம் கெட்டு அவள் அறைக்கு வந்துவிட..
என்னமா ஆச்சு திருடன்னு சத்தம் போட்டே எங்கே அவன் என்று கையில் உருட்டுக் கட்டையோடு வந்த பியுனை பார்த்து அதோ உள்ளே நிக்குறான் பாருங்க என்று சந்தோஷை காட்ட..
அடிப்பாவி பாதகத்தி உன்னை பார்க்க ஆசை ஆசையா வந்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமென்று அவளை பார்த்து கொண்டு இருக்க..
டேய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த பொம்பளை பிள்ளைங்க இருக்க ரூமுக்குள்ள திருட வருவே என்று சொல்லிக்கொண்டே வேகமாக வந்த பியூன் ஓங்கி சந்தோஷின் தலையில் கையில் வைத்து இருத கட்டையால் அடிக்க..
அவர் அடித்த அடுத்து நொடித்தரையில் மயங்கி சரிந்தான் சந்தோஷ்.
அவன் விழுந்ததும் ஐயோ வாத்தி என்னையா இந்த சொட்ட மண்டையன் அடிச்சதுக்கே மயங்கிட்டே.. என்று பதறியவள் வேகமாக உள்ளே வர..
அதற்குள் மத்தவங்களும் அவர்களை அறைக்கு வந்துவிட்டனர்.
இங்கே இந்த காலேபரம் நடந்து கொண்டு இருக்க.. துர்காவும் கீர்த்திகாவும் ஆபீஸ் ரூம் கதவை பியூன் அறையில் இருந்து எடுத்த சாவியைக் கொண்டு யாருக்கும் தெரிய்யாமல் சத்தம் இல்லாமல் உள்ளே நுழைந்து சிங்காரம் டேபிளில் வைத்து இருந்த பீரோ சாவியை எடுத்து.
காலையில் அவர் இவர்களுக்குகாட்டிய பைலை எடுத்து அதில் தங்களிடம் சொல்லாமல் விடுப்போய் இருந்த நபரின் விபரத்தை தேடி எடுத்து அதில் இருந்த மாதவியை பற்றிய விபரங்களை தேடி எடுத்தவர்கள்.
திரும்ப எடுத்த இடத்திலேயேந்த பைலை வைத்துவிட்டு சாவியையும் அதே போல ட்ராயாரில் வைத்துவிட்டு வெளியே வந்து ஆபீஸ் ரூமை பழையபடி பூட்டிவிட்டு அங்கிருந்து நேராக பியூன் அறைக்கு வந்து சாவியை அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு அவசர அவசரமாக தங்கள் அறைக்கு வந்தனர்.
இங்கே தங்கள் அறை முன் கூட்டமாக இருப்பதை பார்த்துவிட்டு கீர்த்திகா பிரியாமல் அக்கா என்ன ஆச்சு அக்கா என்றாள்.
ஒன்னும் இல்லை சீக்ரயம் என்னோட வா என்றவள் வெளியே நின்று இருத்தவர்களை விளக்கி விட்டு உள்ளே வர.. சந்தோஷ் தரையில் விழுந்து இருக்க..
அவன் முகமூடியை கழட்டிவிட்டு… ஐயோ… வாத்தி என்னையா நீ இப்படியா பண்ணுவ… என்னை பார்க்கணும்னு ஆசை இருந்தா நேரா வாசல் பக்கம் வந்து இருக்கலாமே..
இப்படி யாருக்கும் தெரியாம என்னை பார்க்கணும்னு வந்துட்டு இந்த சொட்ட மண்டையன் கையாலய அடிபட்டு நீ சாகனும் என்று ராதா அழுது கொண்டு இருக்க..
இதை எல்லாம் இவ்வளவு நேரம் மயங்கி இருப்பது போல நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் கொண்டு இருந்தாஹ் சந்தோஷ் கேட்டு..
அழு டி… நல்லா அழு…. கட்டின புருஷன்னு கூட பார்க்காம என்னை திருடன்னு இந்த தடுபாகூர் மண்டையன் கையாள எல்லாம் அடிவாங்க வெச்சுட்டே இல்ல..
நான் ஊதுனாலே இவன் பத்து அடி தாலி போய் விழுவான் அவன் கையாள என்னை அடி வாங்க வெச்சுட்டே இல்ல அழு அழு.. நல்லா அழு என்று அவள் அழுவதை ரசித்துக் கொண்டு இருக்க..
அப்போது உள்ளே வந்த துர்காவும் கீர்த்திகாவும் ராதாவிடம் வந்து ஏய் ராதா என்ன டி ஆச்சு சந்தோஷ் எப்படி இங்கே வந்தாரு. அவர் மயங்கி இருக்கார் அவருக்கு என்ன ஆச்சு என்று துர்கா கேட்க..
அக்கா நாம போகும்போது இவரு நல்லா தானே இருந்தாரு. இவருக்கு என்ன சஆச்சு என்று விஷயம் தெரியாமல் கீர்த்திகா உளறி வைக்க..
அவள் சொன்னதை கேட்டு தான் அடுத்து மயங்கி விழுந்து இருந்த சந்தோஷை அடித்ததை நினைத்து பெருமிதபட்டுக்கொண்டு இருந்த பியூன் என்னமா சொல்றே..
நீங்க எங்க போனீங்க.. யாரு நீங்க போற அப்போப்போ நல்லா இருந்தாரு என்று புரியாமல் கேட்க..
அது வந்து என்று கீர்த்திகா பேச வர..
அவள் கையை பிடித்து பேசவேண்டாம் என்பது போல தடுட்டு நிறுத்திய துர்கா அது ஒன்னும் இல்லை சார் நாங்க போற அப்போ ராதா நல்லா தானே இருந்தா அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு கேட்டா..
இவள்ள்… ன்னு சொன்னது உங்க காதுல தப்பா இவன்னு விழுந்திருக்கு என்று சொல்லிலக்ஷ்மி சமாளிக்க..
அது சரி மா.. இந்த அர்த்த ராத்திரியில நீங்க ரெண்டு பேரும் எங்கே போய்ட்டு வந்திங்க என்றார் பியூன் சரியாக..
ஐயோ.. சொட்டை மண்டையன் எவ்வளவு சமாளிச்சாலும் சரியா பாயிண்டை பிடிச்சுட்டானே என்று ராதா உள்ளுக்குள் புலம்ப…
அது.. அது வந்து.. என்று துர்கா பதில் சொல்ல திணற..
நான்.. நான் தான் இவங்களை வெளியே அனுப்பினேன் என்றாள் ஷிவு.
நீயா ஏன் மா இந்த நேரத்துல எதுக்குமா அவங்களை வெளியே அனுப்பின் என்று கேட்டார் பியூன்.
அது அது வந்து சார் என்னோட சால்வையை நான் மறந்து காரிலேயே வெச்சுட்டேனா அது.. அதை எடுக்க தான் அனுப்பி வெச்சேன் என்று ஷ்வி எதையோ சொல்லி சமாளிக்க..
அவர் துர்காவையும் கீர்த்திகாவையும் பார்த்து அவர்கள் கையில் எதுவும் இல்லாததை பார்த்து அவங்க கையில ஒன்னுமே இல்லையே என்று பியூன் அவர்கள் இருவரையும் சந்தேகத்துடன் பார்க்க..
இதோ இங்கே இருக்கு என்று சொல்லி ராதா தனக்கு கீழே கிடந்த சால்வையை காட்ட…
ஏன் மா அவங்க கையில சால்வை இல்லைனு கேட்ட நீ கீழ கிடந்த சால்வையை எடுத்து கொடுக்கிற.. என்றார்.
சார் உள்ளே சத்தம் கேட்டு வந்த அவசரத்துல கையில் இருந்த சால்வையை கீழே போட்டுட்டேன் என்றாள் கீர்த்திகா.
சரி சரி மா.. என்றவர் இவரை என்ன பண்ண என்றார் கீழே கிடந்த சந்தோஷை பார்த்து கேட்டார்.
அவரை நாங்க பாத்துகிரும் நீங்க போங்க என்று அவரை வெளியே தள்ளி கதவடைத்த ராதா வேகமாக உள்ளே வந்து சந்தோஷின் காலை உதைத்து யோவ் வாத்தி.. மயங்கின மாதிரி நடிச்சது போதும் எழுந்திருய்யா… என்றாள்.
ராதான் அழைத்ததும் சந்தோஷ் முழித்துக் கொள்ள..
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த மற்ற மூவருக்கும் தலையே சுற்றுவது போல இருந்தது.
ஏய் அப்போ நான் நிஜமாவே மயங்களையினு முன்னமே உனக்கு தெரியுமா என்றான்.
ஆமா வாத்தி தெரியும் நீயாவது அந்த சொட்ட மண்டையன் அடிச்சு மயங்குறதாவது என்றாள் ராதா.
அப்பறோம் ஏன் டி.. நான் செத்து போனது மாதிரி அப்படி அழுதே என்றான் சந்தோஷ்.
ஓ… அதுவா.. நான் நிஜமா உனக்கு எதுவும் ஆகிடிச்சுனு நினைச்சு அழுதேனு நினைச்சுட்டியா என்றவள் அது ஒன்னும் இல்லை அந்த சொட்ட மண்டையணை நம்ப வைக்க தான் அப்டி ஆக்ட் கொடுத்தேன்.
அப்போ தான் அந்த சொட்ட மண்டையன் எதையும் யோசிக்காம என்னவோ அவன் அடிச்சு நீ மயங்கிட்டதா நினைச்சு இவ்வளவு நேரம் இங்கேயே இருந்தான் என்றாள் ராதா.
அடிப்பாவி நீயெல்லாம்… என்று ஏதோ சொல்ல.. வர…
என்ன… என்ன… நானெல்லாம்… என்ன சொல்ல வர… சொல்லு.. யா.. என்று அவன் உயரத்திற்கு எகிறி குதித்து அவனிடம் சண்டைக்கு நீன்றால் ராதா.
ஏய்.. சும்மா இருங்க ரெண்டு பேரும் சும்மா சின்ன பிள்ளைங்க மாதிரி ரெண்டு சண்டை போட்டுட்டு என்று அவர்களை அதட்டி அடக்கி வைத்த ஷிவு துர்காவிடம் வந்து அக்கா போன விஷயம் என்ன ஆச்சு என்று கேட்டாள்.
அனைவரும் துர்காவையும், கீர்த்திகாவையும் ஆர்வமாக பார்க்க..
இருவரும் தங்கள் கட்டை விரலைதூக்கி தம்ப்ஸ் அப் காட்ட..
அனைவரும் வந்தவேளை முடிந்தாத என்று நிம்மதி அடைந்தானர்.
ஆமா துர்கா, கீர்த்திகா, ஷிவுவை பார்க்க வந்த ஆதி, ரூபேஷ், கதிர், விக்கி, நிலானி இவங்க எல்லாம் என்ன ஆனாங்கனு தானே யோசிக்குறீங்க…
அவங்க எல்லாரும் யாருக்கும் தெரியாம ஆசிரமத்தோட சுவர் ஏறி குதிச்சு உள்ளே வந்தவங்க ராதா ஐயோ.. திருடன்னு கத்துன அடுத்த நொடி வந்த சுவரை திரும்ப ஏறி குதிச்சு வந்த நேரம் சரியில்லைனு எல்லாரும் திரும்ப அவங்க இருந்த ரூமுக்கு போய்ட்டாங்க காலையில போய் எல்லாரையும் பார்த்துக்கலாம்னு போய்ட்டாங்க ஆனா நம்ம ஆதி மட்டும் பொண்டாட்டியை பார்த்துட்டு தான் வருவேன்னு அவங்களை எல்லாம் அனுப்பிட்டு ஆசிரமதுக்கு வெளியே அடுத்து எப்போ குதிக்கலாம்னு காத்துட்டு இருக்காரு

1 comment
Inaki sema twist 🤭vera level athulaum intha santhosh ninachatha pavama iruku 😒ana onnu seekirama mathaviya pothi kuda sethu vachirunga intha sangavi romba overa panra🧐🤨 next episode podunga please sis 🥺🫂💋