FLING 14
தீரனின் முரட்டுத்தனமான முத்தத்திலிருந்து அகலிகா பெரும் சிரமத்துடன் தன்னை விலக்கிக் கொண்டாள். அவள் உதடுகள் இரண்டும் வலித்தன. கோபம், பயம், அவமானம், மற்றும் ஒரு பெரிய குற்ற உணர்ச்சி என எல்லாம் கலந்து அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.
“உங்களுக்கும் ரியாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது! நீங்க என்ன பண்றீங்கன்னு தெரியுதா? இது சுத்தமாச் சரியில்லை தீரன்! என்னைத் தனியா விடுங்க! ப்ளீஸ்… நான் கெஞ்சிக் கேட்கிறேன்,” என்று அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அவளது குரலில் இருந்த குற்ற உணர்வு, தான் முகேஷுக்கு துரோகம் செய்கிறோமே என்று இருந்தது.
தீரனின் முகம் சிறிதும் இரக்கம் காட்டவில்லை. அவனது பிடிவாதமான கண்கள் அவளை உறுதியாகப் பார்த்தன. அவன் கைகள் இன்னும் அவளது தோள்களைப் பிடித்து வைத்திருந்தன.
“ரியாவுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப் போறது உண்மைதான். ஆனா, எனக்கு ரியா மேல எந்த ஈடுபாடும் இல்லை. அது ஒரு தொழில் ரீதியான, குடும்ப நிர்பந்தமான ஏற்பாடு. ஆனா எனக்கு நீ வேணும், அகலிகா,” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னான்.
அகலிகா அதிர்ச்சியிலும், குற்ற உணர்ச்சியிலும் உறைந்து போனாள். “என்னது? விளையாடாதீங்க தீரன். நான் வேணும்னா என்ன அர்த்தம்? என்னால இது முடியாது. நிச்சயமா இது நான் முகேஷ்க்கு செய்யுற துரோகம்” என்றாள்.
“நீ என்ன காரணம் வேணா சொல்லு அகலிகா. எனக்கு அதை பத்தி கவலை இல்லை. எனக்கு நீ வேணும். உன் கல்யாணம் எப்போவோ அதுக்கு முந்தின நாள் வரை நீ என்னோட தான் இருக்கனும். தட்ஸ் இட் ” என்றான்.
அவனை அதிர்ச்சியாக பார்த்த அகலிகா. ” ஒரு பெண்ணோட கல்யாணம் நிச்சயம் ஆகப் போற நேரத்துல, இன்னொரு பெண்ணை இப்படித் தேடி வந்து…? ச்சே… நீங்க இப்படி இருப்பிங்கன்னு நான் நினைக்கல தீரன்.. உங்களால எப்படி…” என்று பேசி முடிக்கும் முன்னரே,
“எனக்கு என் நிச்சயதார்த்தம் ஒரு பிரச்சினையே இல்லைன்னு சொன்னேன். என் மனசு உன்கிட்ட இருக்கிற வரைக்கும், அந்த உறவுக்கு அர்த்தம் இல்லை. எனக்கு நீதான் வேணும். அதுல எந்த மாற்றமும் இல்லை,” என்று தீரன் அவளது பேச்சைக் குறுக்கிட்டான்.
அவள் தலையை ஆட்டினாள். “முடியாது! நான் முகேஷை ஏமாத்த மாட்டேன். நாங்க குடும்பம், கல்யாணங்குற ஒரு உறவுக்குள்ள போகப் போறோம். என்னைத் தொந்தரவு செய்யாதீங்க,” என்று அவள் தீரனை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டுப் பின்வாங்கினாள். அவளது மனதின் வலி, குற்ற உணர்வின் பாரம் அவளது முகத்தில் அப்பட்டாமகத் தெரிந்தது.
“சோ வாட் அகலிகா? நீ எனக்கு வேணும்.”
அவன் திடீரென ஒரு படி எடுத்து அவள் அருகில் வந்தான். அவனது குரல் இப்போது சற்றுக் கரகரப்பாக ஒலித்தது.
“இப்பவும் உனக்கு என் மேல ஒரு ஈர்ப்பு இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீதானே என்னை வரச் சொன்ன? ஒரு ராத்திரி நாம ஒண்ணா இருந்தோமே… அது உனக்குப் பிடிக்காம இருந்தா, நான் உன்கிட்டே நெருங்குன அப்போ என்னை ஏன் நீ தடுக்கல? ஒரு முறை கூட நீ விரும்பாமல் என்னோட இருந்தது போல நீ நடந்துக்கவே இல்லையே… ” என்று அவர்களின் முதல் இரவு குறித்த விஷயங்களை பேசினான்.
அவனுடைய இந்த வெளிப்படையான பேச்சு அகலிகாவின் குற்ற உணர்வை இன்னும் அதிகப்படுத்தியது. அவனது உணர்வுகளின் ஆழத்தைப் பற்றி அவள் சிந்திக்கவே இல்லை. அவளுக்கு அது ஒரு வெறும் ‘Fling’ மட்டுமே என்று இருந்தது. ஆனாலும், தான் திருமண உறவுக்குத் தயாராக இருப்பதால், அவள் அந்த உணர்வுகளை முற்றிலும் மறுக்க முயன்றாள்.
“இல்லை! நீங்க என்ன சொன்னாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்!” என்று மீண்டும் தீர்க்கமாக மறுத்தாள்.
“நீ என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. உனக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லாத் தெரியும்,” என்று அவளை மறுபடியும் இழுத்து அணைத்த தீரன். அவளை வாரி அணைத்துக் கட்டிலுக்கு இழுத்துச் செல்லவில்லை. மாறாக, அவன் அவளை மென்மையாகத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“விடுங்க என்னை! நான் வேண்டான்னு சொல்றேன்ல! உங்களுக்கு புரியலையா?” என்று அவள் திமிறினாள். ஆனால் அவளது திமிறல் பலவீனமாக இருந்தது. அவனது உடல் நெருக்கம் அவளைத் திணறடித்தது.
“வேண்டாம்னு சொல்ற உன் உதடுகள் பொய் சொல்லுது. ஆனா, உன் உடல் சொல்லலைன்னு எனக்குத் தெரியும்,” என்று அவளைத் தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கினான். “உனக்கும் என்கூட இருந்த அந்த ராத்திரி ரொம்பப் பிடிச்சிருந்துச்சுன்னு என் மனசு உணர்ந்தது அகலிகா . அதை நீ மறைக்கப் பார்க்கிற! நாம வெறும் ‘Fling’ இல்லடி, . நாம எங்கேயோ ஒரு இடத்துல சிக்கி இருக்கோம். அது உனக்கும் புரியும். ஆனா நீ அதை ஒத்துக்க மருக்குற..”
தீரன் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும்
“இல்லை! இல்லை!” என்று அவள் தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருந்தவள் அதற்கு மேலும் முடியாமல் அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளது மனது குற்ற உணர்ச்சியின் உச்சத்தில் கதறியது.
தீரன் தன் முகத்தை அகலிகாவின் முகத்தருகில் கொண்டு வந்தான். “சரி, நான் உனக்குப் புரிய வைக்கிறேன்,” என்றவன், அவளது காதில் அவர்களின் முதல் சந்திப்பின் போது நடந்ததை, இருவரும் ஒன்றாக எவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தோம் என்பதை, அவர்கள் எப்படி நெருக்கமானார்கள் என்பதை வார்த்தைக்கு வார்த்தை, உணர்ச்சியின் ஒவ்வொரு அசைவையும் விவரித்தான்.
அவனது அந்த விரிவான, அப்பட்டமான விளக்கம், அகலிகாவின் உடலை நடுங்க வைத்தது. அவனது குரல் அவளது நினைவுகளைத் தூண்டியது. அந்தக் கணங்கள் அத்தனையும் அவளது மனதில் வெள்ளம்போல் ஓடின. அவள் முகேஷை நினைத்து அந்த அனுபவத்தை மறுத்தாலும், அவளது உடல் வேறு ஒரு உண்மையை உணர்ந்தது. தீரனின் பிடியில் இருந்து மீள முடியாமல் திணறினாள்.
அவள் எதிர்ப்பதில் தளர்ச்சியடைவதைக் கண்டவன், மேலும் விவரிக்காமல், மெதுவாக அவளது உடலைத் தன் கைகளுக்குள் தாங்கிக் கொண்டான். தீரன் அகலிகாவின் தலையை நிமிர்த்தி, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான்.
“இப்போ சொல்லு அகலிகா. இது எல்லாம் பொய்யா? ஏன் நீ மருக்குற? நான் உனக்கு வேணாமா? உனக்கு என்மேல் எந்த ஈர்ப்பும் இல்லைன்னா சொல்லு , நான் இங்க இருந்து இப்போவே போயிடறேன். இனிமே உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்”
அகலிகா அவனைப் பார்த்தாள். அவளது கண்கள் கலங்கின. அவளது குற்ற உணர்ச்சி அவளைப் பேச விடவில்லை. அவனது பிடியில் இருந்து விலகவும் முடியவில்லை; ஆனால் முகேஷை நினைத்து அவன் பக்கம் சாயவும் முடியவில்லை. அவள் மெதுவாகத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“அகலிகா, உன் விருப்பம் என்னன்னு தெளிவாச் சொல்லு,” என்று அவள் கன்னங்களைத் தன் விரல்களால் பிடித்து, அவன் மீண்டும் தன் பக்கம் திருப்பினான்.
அவளது மனம் “வேண்டாம்” என்று கத்தியது. அழுத்துகொண்டே தலையை இடவலமாக ஆட்டினாள்.
அவள் மனமோ, தீரனின் நெருக்கம், அவன் விவரித்த நினைவுகள், அவளது உடலின் ஆழ்ந்த ஆசையைத் தூண்டியது . அவள் பெருமூச்சு விட்டாள். அவளால் சம்மதம் சொல்ல முடியவில்லை; ஆனால் அவனை எதிர்க்கும் சக்தியும் அவளிடம் இல்லை.
அவள் அமைதியாக, தலையைக் குனிந்தாள். உதட்டைக் கடித்துக்கொண்டு, அவனது பிடியை விட்டு விலகாமல் அப்படியே நின்றாள். அவளது இந்த மௌனம், சம்மதம் அல்ல; அது அவளது மனதின் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வி. குற்ற உணர்ச்சியால் வாய் பேச முடியாமல், l நின்றாள்.
தான் இவ்வளவு சொல்லியும் இன்னமும் தன் மீது அவளுக்கு இருக்கும் ஆசையை ஒப்புக்கொள்ள அகலிகா மறுக்கவும். இவ்வளவு நேரம் அவளிடம் பொறுமையாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்த தீரனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
“நான் இவ்வளவு சொல்லியும் இப்பவும் முடியாதுன்னு நீ மறுக்குற அப்படித்தானே? சரி முதல்ல நீங்க இருந்து கிளம்பு, மத்தத நான் பார்த்துக்கிறேன். நீ எப்படி அந்த முகேஷ் கூட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நானும் பாக்கறேன்” என்றான்.
வலி நிறைந்த பார்வையோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் “தி.. தீரன்…ப்ளீஸ்” என்றாள்
” அகலிகா இன்னும் எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க நான் தான் உன்ன போக சொல்லிட்டேனே கிளம்பு” என்றான்.
அகலிகா அமைதியாக நின்றாள். அவனை எதிர்க்க வழுவில்லை அவள் மனதில்.அவனை நெருங்கவும் முடியவில்லை அவளால். இருதலைக் கொல்லியாக தவித்தாள் அகலிகா.
தீரன் அவளது இந்த மௌனத்தைப் புரிந்து கொண்டான். அவள் குற்ற உணர்ச்சியில் இருக்கிறாள், ஆனால் தன்னை விட்டு விலக விரும்பவில்லை என்பதை உணர்ந்தான். அதுவே அவனுக்குப் போதும். அவன் அவளது சம்மதத்தை வார்த்தைகளால் வற்புறுத்தவில்லை.
“அஹி… நீ எதுவும் சொல்ல வேண்டாம். எதை பத்தியும் யோசிக்க வேண்டாம். எனக்கு நீ வேணும் அவ்ளோதான்,” என்றவன் அவளை அணைத்துக் கொண்டவன், அவளது தலையை மென்மையாக தன் கைகளில் ஏந்தினான். அவளது குற்ற உணர்ச்சியை அறிந்தும், அவள் விலகாததை அவன் தனக்கான சலுகையாக எடுத்துக் கொண்டான்.
தீரன் மெல்ல அவள் கண்களில் வழிந்த கண்ணீரை தன் விரல்களால் துடைத்தவன் அவள கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவளது இடையை தழுவி தன்னோடு சேர்த்து அணைத்தவன், ” நீ என்னைத் தேடி வந்தப்போ, உனக்குள்ள இருந்த ஆசையை நான் உணர்ந்தேன். உன்னோட ஒவ்வொரு அசைவையும், என்னோட உடம்பு ஏத்துக்கிட்டது, அதை நான் உன்கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிச்சேன் டி. நீ ஏன் அதை ஒதுக்க மாட்டேங்குற..” என்று கொஞ்சினான்.
அவள் கண்களை இறுக மூடிக்கொண்டு, “முகேஷ்…” என்று மெல்லியதாக முணுமுணுத்தாள். அந்தக் குற்ற உணர்வு அவளைத் துளைத்தது.
“இப்போ அவனைப் பத்தி யோசிக்காத,” என்று தீரன் அவளது முகத்தை நிமிர்த்தினான். “நீ இங்க இருக்கே. என்கூட இருக்கே. அதுதான் உண்மை.”
அகலிகாவுக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை. அவனது ஆசையையும், அவனது நெருக்கத்தையும் எதிர்க்கும் வலிமை அவளிடம் இல்லை. அவள் கண்களில் நீர் வழிந்தபடியே, அவனது பிடிக்குள் தன்னை ஒப்படைத்தாள்.
தீரன் அகலிகாவை மெதுவாகத் தன் கைகளுக்குள் தாங்கிக் கொண்டு, கட்டில் மீது கிடத்தினான். அகலிகாவின் கண்களில் இப்போது குற்ற உணர்ச்சி மட்டுமே நிரம்பியிருந்தது. அவள் அவனது செயல்பாடுகளைத் தடுக்க முயன்றாள்,
அவள் வேறு வழி இன்றி அவனிடம் தன்னை ஒப்படைத்தால். முகேஷிற்கு தன்னை பற்றி உண்மை தெரிய வந்தாள். அவனோடு சேர்ந்து தன் குடும்பமும் இதில் தலை குனிய நேரும் என்று நினைத்தவள் தீரனிடம் எதிர்ப்பை காட்டாமல் கட்டிலில் அவனிடம் சரணடைந்தால்.
