நக்ஷத்ராவைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக ஆஃபீசுக்கு வந்த சூர்யா, உள்ளே நுழையும்போது அவனது பி.ஏ. விஷ்ணு வேகமாக வந்தவன், “வெல்கம் சூர்யா!” என்றான். “நம்மளோட கிளைன்டுகிட்ட எல்லாம் அவங்களுக்கு ஆர்டர் கொடுக்க சொல்லி, நம்மளோட ஆர்டர் எல்லாம் கேன்சல் செய்ய சொல்லி மிரட்டின முகுந்தன் இப்போ நம்ம கஸ்டடியில்தான் இருக்கான். நம்ம எந்த கம்பெனியில ப்ராஜெக்ட் செய்தாலும், அந்தப் ப்ராஜெக்ட்டில் நம்ம கோட் பண்ண விலையை விட இன்னும் கம்மியா செய்து தரேன்னு சொல்லி நமக்கு வர ஆர்டர் எல்லாம் அவனோட கம்பெனிக்குத் திருப்பி விடுறான். சில கஸ்டமர்ஸ் அவன் சொன்ன பிரைஸுக்காக நம்ம கிட்ட இருந்து அவனோட கம்பெனிக்கு அவங்களோட ஆர்டரை கொடுத்துட்டாங்க. ரொம்ப வருஷமா நம்மகிட்ட டீலிங்ல இருக்க கஸ்டமர்ஸ் எல்லாரும் அவன்கிட்ட ஆர்டர் கொடுக்க மறுத்து இருக்காங்க. அப்படி கொடுக்க மறுத்தவங்களை இவன் மிரட்டி ஆர்டர் கொடுக்க வைக்கிறான்” என்று சூர்யாவின் முதல் எதிரியான முகுந்தனைப் பற்றி விஷ்ணு கூறிக்கொண்டே சூர்யாவின் பின்னால் சென்றான்.
“இப்போ நீ சொன்ன விஷயம் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் விஷ்ணு. வேற எதுவும் புதுத் தகவல் இருந்தா சொல்லு. இப்படி பழைய விஷயங்களை ஒரு மேட்டரா கொண்டு வந்துட்டு நிற்காதே” என்றான்.
“அடப்பாவி! அப்போ இவ்வளவு நேரம் நான் துண்டை தண்ணீ பத்த உன்கிட்ட பேசிட்டு வந்தது எல்லாம் எப்பவும் போல வீணா? ஏற்கனவே இந்த விஷயம் தெரியும்னு என்கிட்ட முதலிலேயே சொல்லி இருக்கலாமே. நானாவது அதை சொல்லாம இருந்திருப்பேன்” என்றான் விஷ்ணு.
“நீ அப்படியே இதுவும் புதுசா சொல்லுவேன்னுதான் நான் நீ என்ன சொல்றன்னு கேட்டுட்டு அமைதியா வந்தேன்” என்றான் சூர்யா.
“புதுசா ஒரு தகவல் சொல்லணும்னா, அந்த முகுந்தன் ஒரு ப்ளே பாய். அவனோட வீக் பாயிண்ட்டே பொண்ணுங்கதான்னு சொல்லலாம். இன்னும் ஒரு முக்கியமான விஷயம், அவன் நம்ம யாராவைப் பற்றிய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சுருக்கான்” என்று விஷ்ணு சொல்ல, தன் கேபினுக்குள் கதவைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்த சூர்யா, விஷ்ணு சொன்ன செய்தியைக் கேட்டு, “வாட்?” என்று அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, “ஆமா சூர்யா, இவன் நம்ம யாராவை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான். டெக்ஸாஸில் யாரா படிக்கிற காலேஜ்ல அவ என்ன பண்றா, யார் கூட பேசறா, பழகுறா, அவ எப்போ இந்தியா வர, எந்த பிளைட்ல வர, இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்னு விஷயம் வரைக்கும் இவனுக்கு நியூஸ் வந்து இருக்கு” என்றான் விஷ்ணு.
“இவன் எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கான்?” என்று சூர்யா புருவம் சுருக்கி விஷ்ணுவைப் பார்க்க, “உன்னை பிசினஸ்ல பீட் பண்ணி ஜெயிக்க முடியலைன்னு சொல்லிட்டு, உன்னோட தங்கச்சியை கரெக்ட் பண்ணி, அவ மூலமா உன்னோட பிசினஸைக் கைப்பற்றலாம்னு நினைக்கிறான்” என்றான் விஷ்ணு.
சூர்யா திரும்பி விஷ்ணுவை முறைக்க, “நான் என்னடா பண்ணுனேன்? என்னை ஏன் முறைக்கிற? உனக்குத் தம்பியாப் பொறந்தது தான் நான் செஞ்ச குற்றமா?” என்று மனதில் நினைத்துக் கொண்டான் விஷ்ணு. என்னடா, சூர்யாவுக்குத் தம்பியாப் பொறந்தது ஒரு குற்றமான்னு சொல்றானே. அப்போ இந்த விஷ்ணு யாருன்னு தானே பார்க்குறீங்க? வேற யாரும் இல்லைங்க, நம்ம லக்கு ஸ்ரீயுடைய மகன் தான் விஷ்ணு. சூர்யாவிடம் பி.ஏ.வா வொர்க் பண்ணிட்டு இருக்கான். சூர்யா பிசினஸ் எடுத்து நடத்துறதுல இம்ப்ரஸ் ஆகி, லக்கு விஷ்ணு காலேஜ் முடிச்சதும் நேரா சூர்யாவிடம் கூட்டி வந்து, அவனுக்கு பி.ஏ.வா விஷ்ணுவை வச்சுக்க சொல்லி சொல்லிட்டுப் போயிட்டாரு. அன்றிலிருந்து நம்ம விஷ்ணு ரொம்பப் பாவம். சூர்யா எவ்வளவு ஷார்ப்பா பிசினஸ் கவனிச்சுக்கிறானோ, அவனுக்கு ஈகுவலா அவனுக்கு வேணுங்கிற அனைத்து விஷயங்களையும் விஷ்ணு ஒருத்தனே செஞ்சு கொடுத்துட்டு இருக்கான்.
சூர்யா விஷ்ணுவை முறைத்துக்கொண்டு இருக்க, அவனைப் பார்த்து, “நியாயமா நீ இப்படி முறைக்கிறத அந்த முகுந்தன்கிட்ட தான் காட்டணும். உனக்கு நான் நல்லது தான் பண்ணி இருக்கேன்” என்றான் விஷ்ணு.
“இப்போ அவன் எங்கே?” என்று சூர்யா கோபமாகக் கேட்க, அந்த அறைக்குள்ளே இருந்த மற்றொரு அறையைக் காட்டி “அங்கே” என்று சொன்னான். தன் சேரிலிருந்து கோபமாக எழுந்த சூர்யா, நேராக அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன், அந்த அறையில் இருந்த மூலையில் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முகுந்தனைப் பார்த்ததும் அதே கோபத்தோடு வேகமாகப் போய் அவன் மார்பில் தன் பூட்ஸ் காலால் ஓங்கி உதைக்க, சூர்யா உதைத்த வேகத்தில் சேரோடு சேர்ந்து தரையில் விழுந்தான் முகுந்தன்.
சூர்யா முகுந்தனின் மார்பில் உதைத்த வேகத்தைப் பார்த்து அதிர்ந்தான் விஷ்ணு. “டேய் அண்ணா! பார்த்து… நீ உதைக்கிற உதையைப் பார்த்தா அவன் இங்கேயே ரத்தம் கக்கி செத்துடுவான் போல இருக்கு” என்று சொல்லிக்கொண்டு, தரையில் விழுந்து கிடந்த முகுந்தனைச் சேரோடு தூக்கி சூர்யாவின் முன்பு நிறுத்தினான். முகுந்தன் வலியால் முகத்தைச் சுருக்கிக்கொண்டு சூர்யாவைப் பார்க்க, தன் இரண்டு பாக்கெட்டிலும் கைவிட்டபடி நின்றிருந்த சூர்யா முகுந்தனைப் பார்த்து, “உனக்கு பிசினஸ்ல நேரடியா என்கிட்ட மோது. இப்படி பின்னால இருந்து வேலை பார்க்கிறது எல்லாம் இத்தோட நிறுத்திக்கோ. அதேபோல, என் தங்கச்சி பின்னாடி இதுவும் சுத்துறதை நான் பார்த்தேன், அன்னைக்கு தான் உன்னோட கடைசி நாளா இருக்கும். அதை ஞாபகம் வச்சுக்கோ” என்றவன் திரும்பி நடக்க, “உன் தங்கையை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளை எனக்குக் கல்யாணம் பண்ணி கொடு” என்று சொன்னான் முகுந்தன்.
அவன் அருகில் நின்ற விஷ்ணு முகுந்தன் பேசியதைக் கேட்டு அதிர்ந்தவன், சூர்யாவைப் பார்க்க, சூர்யா கண்கள் இரண்டும் சிவக்க ஆத்திரத்தோடு முகுந்தன் சொன்னதைக் கேட்டு நின்றிருந்தான். “அடப்பாவி! எமன் வாய்க்குள்ள போய் இவனே வாண்டடா விழுந்துட்டானே. அவன் தங்கச்சியை சும்மா பார்த்ததுக்கே தாண்டா அவன்கிட்ட வயித்துல அவ்வளவு பெரிய உதையை வாங்கினேன். அந்த வலி கூட இன்னும் போய் இருக்காது. அதுக்குள்ள அடுத்த அடிக்குத் தயாராகிறானே. ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருப்பான் போல இந்த முகுந்தன்” என்று மனதில் நினைத்துக் கொண்ட விஷ்ணு, திடீரென்று அதிர்ச்சியில் நினைவுக்கு வந்தவன் போலப் பார்க்க, சூர்யா முகுந்தன் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்தவன், உடனே உதைத்துத் தரையில் தள்ளி, அவன் கழுத்தில் தன் பூட்ஸ் காலால் அழுத்தி, கழுத்தை நெரித்தவரே, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி என்கிட்டயே கேட்ப?” என்று அவன் கழுத்தை மேலும் அழுத்தினான் சூர்யா.
முகுந்தன் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் முகுந்தன் மூச்சுவிடத் திணறிக்கொண்டு தரையில் கிடக்க, அதைப் பார்த்துப் பதறிய விஷ்ணு, “டேய் அண்ணா! என்ன பண்ணிட்டு இருக்க? நீ அவன் கழுத்துல காலை வச்சு அழுத்துற அழுத்தல அவன் செத்துர போறான். இவனை நான் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்னு எல்லாருக்கும் தெரியும். நீ பாட்டுக்கு இவனை கொன்னுட்டுப் போயிட்டா, கடைசியில் இவனை கூட்டிட்டு வந்த பாவத்துக்கு என்னை பிடிச்சு தான் ஜெயில்ல போடுவாங்க” என்று சொல்லி, சூர்யாவின் காலைப் பிடித்துக் கொண்டு, முகுந்தன் கழுத்திலிருந்து காலை எடுக்க கெஞ்சிக் கொண்டு இருக்க, விஷ்ணு சொல்வதை எதுவும் காதில் வாங்காமல், முகுந்தன் கழுத்தில் இருந்த தன் காலை மேலும் அழுத்தினான்.
சூர்யா அழுத்தியதில் முகுந்தனின் கண்கள் இரண்டும் சிவந்து சிவந்து வெளியே வருவது போல இருக்க, அதைப் பார்த்துப் பதறிய விஷ்ணு, இரும்புத் தூண் போல இருந்த சூர்யாவின் காலை முகுந்தன் கழுத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டுப் பிரித்துவிட்டான். சூர்யா கோபமாக நின்று இருக்க, முகுந்தனைச் சேரோடு தூக்கி அமர வைத்தவன், அவனைக் கட்டி வைத்திருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு, “டேய், முதல்ல நீ இங்கிருந்து போடா. என்னவோ வில்லன்கிட்ட இருந்து ஹீரோவைக் காப்பாத்துற மாதிரி, இவன் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சி நான் உன்னைக் காப்பாற்றி இருக்கேன். சீக்கிரமா இங்கிருந்து ஓடிடு. இல்லைன்னா உன்னை இவன் பூட்ஸ் காலிலேயே மிதிச்சுக் கொன்னுடுவான். சீக்கிரம் போ” என்று அவன் கட்டுகளை அவிழ்த்து விட்டு, முகுந்தனை அந்த அறையை விட்டுப் போகச் சொல்லி விஷ்ணு துரத்த, சேரிலிருந்து திரும்பிக் கொண்டே எழுந்த முகுந்தன், சூர்யாவைப் பார்த்து, “என்ன, நீ இப்போ அடிச்சதுக்கு எல்லாம் பின்னாடி வருத்தப்படப் போற” என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி நகர,
“நான் என்ன சொன்னேன்? இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? கட்டு கழட்டிவிட்டதும் பேசாம தப்பிச்சோமோ, பொழைச்சோமான்னு வெளியே போகாமல், அவனே இவனைக் கொல்ற ஆத்திரத்துல இருக்கான்னு இவன் சும்மா போகாம இவனைச் சொறிஞ்சு விட்டுட்டுப் போறானே” என்று விஷ்ணு சூர்யாவைப் பார்க்க, முகுந்தன் பேசியதைக் கேட்டதும் சூர்யா அவனை அடிக்கச் செல்ல, வேகமாக வந்த விஷ்ணு சூர்யாவைக் கட்டிக்கொண்டு அவனைத் தடுத்துப் பிடித்தவன், முகுந்தனைப் பார்த்து, “டேய்! அவன் முன்னாடி நின்னு ஏன்டா அவனை டென்ஷன் பண்ணி தொலைகிற? முதல்ல இங்கிருந்து போய் தொலை” என்று கத்த, முகுந்தன் விஷ்ணுவைப் பார்த்துச் சிரித்தவாரே, “தேங்க்ஸ் டி…” என்று சொல்லிக்கொண்டு, தன் வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே வெளியே சென்றான்.
“இவன் எனக்கு எதுக்குத் தேங்க்ஸ் சொல்கிறான்?” என்று யோசித்துப்படியே விஷ்ணு திரும்பிப் பார்க்க, அவன் கைக்குள் நின்றிருந்த சூர்யா தோளால் விஷ்ணுவின் முகத்தில் எத்த, அவன் லேசாக ஏற்றியதற்கே விஷ்ணு போய்த் தரையில் விழுந்தான். தன் தாடையைப் பிடித்து தேய்த்துக் கொண்டே, “டேய் அப்பா! நான் உன்னை சின்ன வயசுல வெச்சி செஞ்சதற்கெல்லாம், நீ இவன்கிட்ட என்ன பி.ஏ.வா சேர்த்துவிட்டு என்னப் பழி வாங்கிட்ட இல்ல. இரு, தகப்பா… நீ சாப்பிடும் போது சாப்பாட்டுல பேதி மாத்திரையை கலந்து விடுறேன்” என்று அவன் அப்பா லக்கை திட்டிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றான் விஷ்ணு.
வீட்டிலிருந்து கிளம்பிய குரு நேராகத் தன் ஆஃபீசுக்கு வந்தவன், தனது கேபினுக்குச் சென்று பி.ஏ. உதயாவை அழைத்தவன், ஆஃபீஸ் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்பு, தன் மகன் ரிஷி ஃபாரினுக்கு டூர் சென்று விட்டு இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவான். அதனால் அவனைப் பிக்கப் செய்ய ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பி வைக்கச் சொன்னான் குரு.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே குருவின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் தேவ். தேவவைப் பார்த்த குரு, “என்ன தேவ் இவ்வளவு அவசரமா உள்ளே வர? எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்டான்.
“அப்பா! உன் மகன் பண்ணியிருக்க வேலையை நீ பார்த்தியா? அவன் என்னை எப்பப் பார்த்தாலும் டென்ஷன் பண்ணிக்கிட்டே இருக்கான். ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வேணா பாரு, அவனை நான் கொல்லத்தான் போறேன்” என்றான் கடுப்புடன்.
“என்னடா சொல்ற தேவ்? அப்படி என்ன ரிஷி செஞ்சுட்டான்?” என்றான் எதுவும் புரியாமல் குரு.
“அதை நீங்களே பாருங்க” என்று சொன்னவன், தன் கையில் இருந்த ஐபேடை ஆன் செய்து அதைக் காட்ட, அதில் தேவ் காட்டிய புகைப்படங்களைப் பார்த்ததும் குருவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“என்னடா சொல்ற? இதெல்லாம் நிஜமா?” என்றான் குரு, அவன் கையில் இருந்த போட்டோவை காட்டி.
“அப்பா, நான் சும்மா உங்ககிட்ட கொண்டு வந்து இந்த மாதிரி விஷயங்களைக் காட்டுவேனா? நான் எல்லாம் தீர விசாரிச்ச பிறகு தான் உங்களுக்கு இந்தப் போட்டோவைக் காட்டினேன்” என்றான் தேவ்.
“சரி, அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் வந்துருவான். அவனை நேரா போய் பேசிக்கலாம். வா” என்று சொன்ன குரு தேவவை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு விரைந்தான்.
வாங்க ஃப்ரெண்ட்ஸ், இவங்க ஏர்போர்ட் போறதுக்குள்ள நம்ம ரிஷியைப் பத்தி சின்னதா அவனோட விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டு வருவோம். தேவ்வை விட ஒரு வயது சிறியவன் ரிஷி. தேவ் படித்து முடித்துவிட்டுப் பொறுப்பாக குருவின் பிசினஸைப் பார்த்துக்கொள்ள, தனக்கும் பிசினஸுக்கும் செட் ஆகாது, நான் உலகம் சுற்ற வேண்டும். அதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொல்லிக்கொண்டு, குருவும் தேவ்வும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தைச் சுற்றிப் பார்க்கிறேன்னு ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பதே ரிஷியின் வேலையாக இருந்தது.
எந்த ஊருக்கு செல்கிறானோ, அந்த ஊரில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை தங்கியிருந்து அந்த ஊரைச் சுற்றிப் பார்த்து, அங்கே நேரம் செலவழிப்பான். அவன் செலவழிப்பது நேரம் மட்டும் இல்லை, தன் அப்பாவும், அண்ணனும் சம்பாதிக்கும் பணத்தையும் தான். அங்கு இருக்கும் வரை எப்படியாவது அங்கு இருக்கும் அழகான பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அதில் யார் இவனுடைய கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துப்போகிறார்களோ அவர்களை இந்த ஊரை விட்டு வரும் வரைக்கும் தன்னுடைய கேர்ள் ஃப்ரெண்டாக வைத்துக் கொள்வான். கிட்டத்தட்ட ப்ளே பாய் தான் நம்ம ரிஷி. அவன் இருக்கிற திணகாத்திரமான உடம்புக்கும் அழகுக்கும் இவனா போய் வழிஞ்சு பேசலைனாலும், தானாவே பொண்ணுங்க இவனைப் பார்த்துட்டு வழிய வந்து பேசுறவங்கதான் நிறைய பேர் இருக்காங்க.
எந்த நாட்டிற்குப் போகிறானோ, அந்த நாட்டில் ஆறு மாத காலம் இப்படித்தான் ஏதாவது ஒரு பெண்ணைப் பிடித்துக்கொண்டு அவளைக் கேர்ள் ஃப்ரெண்டாக நினைத்து அவளுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிப் பொழுதைக் கழிப்பான். என்னதான் கேர்ள் ஃப்ரெண்ட் என்று சொல்லிக்கொண்டு பெண்களுடன் ஊரைச் சுற்றினாலும், அவர்களோடு ஒரு எல்லைக்கு மேல் பழக மாட்டான். தனியாக இருப்பதற்கு எப்போதும் ரிஷிக்கு பிடிக்காது. அதனால் தன்னைச் சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு சுற்றித் திரிவான். ஆனால் அது எல்லாம் தன் வீட்டிற்குத் தெரியாமல் இத்தனை நாள் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் பழகிய ஆட்களாலேயே அவன் விஷயங்கள் எல்லாம் குருவிற்கும் தேவ்விற்கும் தெரிய வந்துவிட்டது.
ரிஷியை உண்டு இல்லை என்று செய்வதற்காக இருவரும் கிளம்பி ஏர்போர்ட் சென்றனர். பிளைட் இறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இருவரும் கிளம்பி ஏர்போர்டுக்கு வந்துவிட்டனர். இருவரும் டென்ஷனாக ரிஷிக்காகக் காத்திருக்க, குரு டென்ஷனைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவ்விடம் புலம்பினான். “இவனுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கறதே உங்க அம்மாதான்டா. இவனை எல்லாம் சின்ன வயசுல இருந்தே கண்டிச்சு வளர்த்து இருந்தா இப்படிப் பொறுக்கி தனம் பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருந்திருப்பானா? அதுவும் நம்ம எல்லார் கிட்டயும் இருந்து எப்படி இவ்வளவு வருஷமா மறைச்சு வச்சுட்டு சுத்திக்கிட்டு இருந்தானோ…” என்று புலம்பினான்.
“அப்பா விடுங்க, நீங்க ஏன் வீணா டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க? அவன் வரட்டும். அவனை இந்தியாவை விட்டு இனிமேல் எங்கயும் போக விடாம முதல்ல அவன் பாஸ்போர்டைப் பிடுங்கி வைப்போம். அவன் கையில் பணம் இருந்த தானே ஊர் ஊரா, நாடு நாடா போய் சுத்திக்கிட்டு ஊர் சுற்றும் வாலிபன் மாதிரி இருக்கக் கூடும்னு தான், அவன் பேங்க் அக்கவுண்ட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அவனோட கிரீன் கார்டு முதற்கொண்டு எல்லாத்தையும் நான் பிளாக் பண்ணிட்டேன் பா. இனி எது வேணும்னாலும் அவன் நம்மகிட்டயே கேட்டுதான் வாங்கணும். நமக்குத் தெரியாம அவன் எங்கயும் போக முடியாது” என்றான் தேவ்.
“ஆமாடா தேவ்… இந்த வயசுல இவன் என்ன இத்தனை அத்தூலியம் பண்ணுறான்? எத்தனைப் பொண்ணுங்க அவனைச் சுற்றி இருக்காங்க?” என்று குரு பொறுமை இழந்து இருக்க, “உங்க வயசுல நீங்க செய்யாததையா என் மகன் செஞ்சுட்டான்?” என்று சொல்லிக்கொண்டே பிரியா அவர்கள் இருவரையும் நோக்கி வந்து கொண்டு இருந்தாள். இவ்வளவு நேரம் தேவ்வும், குருவும் பேசியதை எல்லாம் சற்று தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரியா, ரிஷி செய்த தப்புங்களை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் குரு என்னவோ தான் ரிஷி வயதில் இருந்த போது மிகவும் நல்லவனாக இருந்தது போலத் தன் மகன் தேவ்விடம் பேசிக்கொண்டு இருந்ததை பொறுக்க முடியாமல் தான் பேசினாள்.
பிரியாவைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் தேவ்விடம் வாயாடிட்டு இருந்த குரு அப்படியே மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பைப் போல அமைதியாகி விட்டான். அவனை முறைத்த படி வந்த பிரியா, “என்ன சொன்னீங்க? என் மகன் பொறுக்கித்தனம் பண்ணிட்டு இருக்கான்னு சொல்றீங்களா? அப்போ சார் அதே வயசுல என்ன ரொம்ப நல்ல பிள்ளையா இருந்தீங்களா என்ன?” என்றாள்.
குரு பிரியா பேசியதற்கு எதுவும் பேசாமல் திருதிருவெனத் தலையைக் குனிந்துகொண்டு விழிக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த தேவ் குருவைப் பார்க்க, “ஐயோ… இவன் வேற என்னை குரு குருன்னு பார்க்குறானே… இவ்வளவு நேரம் என் மகன் முன்னாடி நான் போட்ட பில்டப் எல்லாம் வீணாகிடுச்சே” என்று முகம் வாடி இருக்க, “அங்கே என்ன முகம் வாடிட்டு இருக்கீங்க?” என்றாள் பிரியா அதிகாரமாக. “அதெல்லாம் ஒண்ணும் இல்லை பிரியா. சும்மா… சும்மா” என்றான் குரு.
குருவை பிரியா பார்வையாலேயே அடக்கிவிட, எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தன் அப்பா. இவரைக் கண்டால் அனைவரும் எழுந்து நின்று மரியாதையோடு எல்லாரும் நடத்த, ஆனால் தன் அம்மாவின் முன்னாள் மட்டும் சர்வமும் அடங்கிப் போய் இருக்கும் தன் அப்பாவை ஆச்சர்யமாகப் பார்த்தான் தேவ். “அத்தை” விட வீட்டில் அமைதியாக இருக்கும் அனைவரிடமும் அன்போடு நடந்து கொள்ளும் தன் அம்மா, தன் பிள்ளையை யார் என்ன சொன்னாலும் கட்டின புருஷன் என்று கூட பார்க்காமல் பொங்கி எழுந்து விடுகிறார் என்று பிரியாவையும் ஆச்சர்யமாகப் பார்த்தான் தேவ்.
தன்னுடன் வீட்டுக்கு வர மறுத்த நக்ஷத்ராவை நினைத்து இன்னும் கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான் சூர்யா. நேராக அவன் ஆஃபீஸ் ரூமில் இருந்த அவனுடைய பெர்சனல் அறையில் இருந்த பாத்ரூமிற்குச் சென்று தன் உடைகளைக் கழட்டி வீசியவன், ஷவருக்கு அடியில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தான். கண்கள் மூடினாலே அந்தப் பச்சை விழியாளின் நினைவுகள் வந்து சூர்யாவைத் தொல்லை செய்ய, குளித்துக்கொண்டிருந்தவன் திடீரென்று ஏதோ நினைவு வந்தவன் போல, ஷவரை விட்டு அப்படியே வெளியே வந்தவன், பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு அந்த அறையில் இருந்த தன் மொபைலை எடுத்து நேரத்தைப் பார்த்தான். மாலை ஏழைக் தாண்டி இருந்த மணியைப் பார்த்ததும் லேசாக முறுவலித்த சூர்யா, பாத்ரூமிற்குச் செல்லத் திரும்ப, அங்கே விஷ்ணு சூர்யாவை உடலில் ஒற்றைத் துணி இல்லாமல் பார்த்துவிட்டு அப்படியே உறைந்து போய் நின்றான்.
விஷ்ணு அதிர்ச்சி ஆனதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சூர்யா பாத்ரூம் சென்று முழுவதுமாகக் குளித்துவிட்டு வந்தவன், மீண்டும் எப்படி பாத்ரூமினுள் சென்றானோ அப்படியே வெளியே வந்தவன் விஷ்ணுவைத் தாண்டிச் சென்று, அவனுக்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த உடைகளில் கேசுவலாக ஒரு உடையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான். சூர்யா அந்த அறையை விட்டுச் செல்லும் வரை விஷ்ணு நின்ற இடத்தில் அப்படியேதான் இருந்தான். வெளியே வந்த சூர்யா, அங்கிருந்த ஒரு ஃபைலை எடுத்து விஷ்ணுவின் மீது வீசியவன், “டேய், போதும். போய் வேலையைப் பாரு. இல்லைன்னா, நைட் ஆஃபீஸ்லேயே வைத்து உன்னைப் பூட்டிவிடுவேன்” என்று சொல்ல, “அடேய் அண்ணா! என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? இப்படி உடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம அம்மணக்கட்டையா வந்து என் முன்னாடி நிக்கிறியே, உனக்கு வெட்கமே இல்லையா?” என்றான் விஷ்ணு. விஷ்ணு இங்கு சூர்யாவிடம் புலம்பிக்கொண்டு இருக்க, ஆனால் அதைக் கேட்க வேண்டியவனோ எப்பொழுதோ கிளம்பி விட்டிருந்தான்.
வாசலைப் பார்த்த விஷ்ணு, “அப்பாடா, போய்ட்டானா? இவன் இருந்த கொஞ்ச நேரம் கூட நம்மால ரிலாக்ஸ் ஆக இருக்கவே முடியலையே” என்றவன், “ஸ்ஸ்ஸ்… அப்பா… என்ன உடம்பு! என்ன உடம்பு! நாமும் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேலை, இரண்டு மணி நேரத்துக்கு மேல ஜிம்மே கதின்னு இருக்கோம். ஆனால் இவனை மாதிரி எய்ட் பேக் வேணாம், அட்லீஸ்ட் ஒரு ரெண்டு பேக் ஆச்சும் வந்து இருக்கலாம்” என்று குனிந்து தான் லேசாக மேடிட்டு இருந்த தொப்பையைப் பெருமூச்சுவிட்டவன், அங்கிருந்து வெளியே சென்றான்.
அதே நேரம் தன் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெயிண்டிங் கிளாசிற்குச் சென்றுவிட்டுத் திரும்ப, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த நக்ஷத்ராவை ஒரு ஜோடி கண்கள் அவளையே உரித்து விடுவது போலப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தன. நக்ஷத்ராவுடன் வந்த பெண்கள் எல்லாம் அவர்கள் வீடு வந்ததும் சென்றுவிட, நக்ஷத்ராவின் வீடு சற்றுத் தொலைவில் இருக்கவும், அவள் மட்டும் கடைசியாக, தனியாக வந்து கொண்டு இருந்தாள். இருட்டில் மறைவாக நின்று இருந்த அந்த உருவம் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க, அந்த இருட்டில் தெருநாய்களுக்கும், இருட்டையும் கண்டு பயந்துகொண்டே நக்ஷத்ரா தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டு இருந்தாள். அவளைச் சந்திப்பதற்காக மரத்தின் பின்னால் ஒளித்திருந்த சூர்யா, நக்ஷத்ராவின் பின்னால் இருந்து அவள் வாயில் துணியைப் போத்தி, அந்த இடத்தில் இருந்து அவளை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து தன் காருக்குள் போட்டு, அந்த இடத்தை விட்டு கார் ஸ்டார்ட் செய்தான்.

2 comments
hiI like your writing so much share we be in contact more approximately your article on AOL I need a specialist in this area to resolve my problem Maybe that is you Looking ahead to see you
Hi sis any issues from my side?