- Joined
- Oct 6, 2024
- Messages
- 326
"ரோஜா! ரோஜா! " என்று அவள் முதுகில் தட்டி அழைத்தான் சித்து.
அவனை இறுக கட்டிக்கொண்டு கண்மூடி நின்று இருந்தவள் சித்துவின் அழைப்பில் கண்கள் திறந்தவள் சட்டென்று அவனை விட்டு விலகி நின்றாள்.
அவளை குறும்பாக பார்த்து சிரித்தவன் "என்ன கியூட்டி.. எதுக்காக என்ன கட்டி பிடிச்ச.. " என்றான்.
"அது... அது வந்து .. நீங்க நிஜமாவே அந்த பால்கனியில் இருந்து இங்க வந்திங்களா? உங்களுக்கு பயமா இல்லையா.. அதை நினைச்சு பார்க்கவே எனக்கு உடம்பெல்லாம் பதறுது " என்றாள் இன்னமும் நம்பமுடியாமல்.
"நம்பலையா நீ வேணும்னா நான் இன்னோரு முறை இந்த பால்கனியில் இருந்து அந்த பால்கனிக்கு ஜம்ப் பண்ணி காட்டட்டுமா " என்று அவளை தாண்டி பால்கனியில் ஏறப்போக...
"ஐயோ ! சின்னையா என்ன பண்றீங்க... கீழ இறங்குங்க " என்று அவன் இடுப்பில் இருந்த டவலை பிடித்து கீழே இழுத்தாள் .
"ஏய்! ரோஜா! என்ன பண்ற.. டவலை விடு " என்று இடையில் இருந்த டவல் கழண்டுவிடாமல் விடாமல் பிடித்துக்கொண்டு இறங்கினான்.
"என்ன சின்னையா இப்படி பண்றீங்க.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்றது " என்று ரோஜா பதற..
"ஏய் ! கியூட்டி .. இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. நான் இந்த மாதிரி மூவியில் நடிக்கும்போது நிறைய ஸ்டண்ட் பண்ணிருக்கேன். நீ இரு நான் எப்படி வந்தேன்னு உனக்கு காட்டுறேன் " என்று மீண்டும் பால்கனி பக்கம் சித்து திரும்ப..
"சொன்னா கேக்க மாட்டிங்களா "என்று அவன் கையை பிடித்து இழுத்தவள் அறைக்குள் தள்ளி பால்கனி கதவை அடைத்தவள் திரும்பி சித்துவை பார்த்து முறைத்தவள் "இன்னோரு முறை இப்படி சாகசம் பண்றேன்னு எதுவும் செஞ்சு வெக்காதிங்க.. "என்றவள் அவனை தாண்டி சென்றாள்.
"ஆமா உன்கிட்டே ஒன்னு கேட்கணும் "என்றான் .
"என்ன கேக்கணும் சின்னையா " என்று அவனை பார்த்தாள் .
"இப்போ ஒரு வீடியோ சேட் பண்ணினோமே அந்த குரூப்பை பத்தி உனக்கு தெறியுமா " என்றான்.
"எந்த குரூப்.. எனக்கு எதுவும் தெரியாதே.. " என்றாள் ரோஜா உடனே.
"அப்டியா அந்த குரூப்ல உன்னோட பிரென்ட் ஒரு பொண்ணு இருக்கா.. அவ தான் அந்த குரூப்போட அட்மின். அந்த பொண்ணு உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு நீயே அவகிட்ட சொன்னதா அந்த குரூப்ல போட்டிருந்தா.. யாரு அந்த பிரென்ட் நீ ஏன் அவகிட்டே நம்ம கல்யாணத்தை பத்தி சொன்ன... " என்றான்.
சித்து சொல்வதை கேட்டு திரு திருவென்று முழித்தவள் "ஆமா உங்களுக்கு எப்படி அந்த குரூப்க்கு என் பிரென்ட் தான் அட்மின்னு தெரியும் . அந்த குரூப்ல பேசுனது எல்லாம் நீங்க எப்படி சொல்றிங்க..." என்று அவனை சந்தேகம் கொண்டு பார்த்தாள்.
"அச்சோ .. அவசரப்பட்டு இவகிட்டே அந்த குரூப் பத்தி சொல்லிட்டேனே... இப்போ என்ன செய்றது " என்று யோசித்தவன் .
"ஆ .. அது .. .அதுவா ரித்திகா குரூப்ல பேசினதை பத்தி சொன்னா இல்ல.. அதை வெச்சு தான் நான் உன்கிட்டே கேட்டேன் " என்று சமாளித்தான்.
"ஓ!.. "என்று அவனை பார்த்தவள் "நல்ல வேலை அந்த குரூப்ல இவன் இல்ல... இருந்திருந்தா என்னோட பிரெண்டுனு சொல்லி நான் தான் அந்த குரூப்ல மெசேஜ் பண்ணினேன்னு தெரிஞ்சிருக்கும் " என்று யோசித்தபடி வெளியே சென்றவள் தன் மொபைலை எடுத்து ஓபன் செய்தவள் அந்த மில்லியன் கணக்கில் சித்துவின் ரசிகைகள் இருக்கும் குரூப்பில் "அதான் எல்லாருக்கும் நடந்தது என்னனு தெரிஞ்சுபோயிருச்சே.. அப்பறோம் என்ன எல்லாரும் போய் வேலையை பாருங்க . நான் குரூப் சேட்டை கிளோஸ் பண்றேன் " என்றவள் அடுத்த நிமிடம் அந்த குரூப்பின் அட்மினாக அந்த குரூப் சேட்டை கிளோஸ் செய்தவள் போனை சார்ஜ் போட்டுவிட்டு திரும்ப...
அவள் பின்னால் மிக நெருக்கமாக சித்து நின்று இருந்தான் . அவனை அங்கு சற்றும் எதிர்ப்பார்க்காதவள் "சி..சின்னைய்யா எ .. என்ன இங்க நிக்குறீங்க... " என்றாள்.
"சும்மா தான் வந்தேன். நீ இந்த நேரத்துல போனை வெச்சுட்டு என்ன பண்ணிட்டு இருக்க.. "என்றான்.
"நீங்க .. நீங்க தானே நான் சொன்னதா ஏதோ குரூப்ல என் பிரென்ட் பேசினதா சொன்னிங்களே அதான் அது எந்த குரூப்புன்னு பாக்கலாம்னு நான் என் போன்ல பார்த்தேன் " என்று சமாளித்தாள்.
"சரி சரி அதெல்லாம் அப்பறோம் பார்த்துக்கலாம். நீ முதல்ல போய் நேரமே தூங்கு " என்றான்.
"ஏன் நேரமே தூங்கி நான் என்ன செய்றது. பிலைட்ல வரும்போதே நான் நல்லா தூங்கிட்டேன். எனக்கு இப்போ தூக்கம் வரல.. உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க போய் தூங்குங்க.. நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு தூங்குறேன் " என்றாள் .
"இந்த நேரத்துல டிவி பாக்கறியா! "என்று ரோஜாவை வினோதமாக பார்த்தவன் .
"தூக்கம் வரலயா .. நீ தூக்கம் வரும்போது தூங்கு . ஆனா நாளைக்கு காலையில் ஷார்ப்பா 9 மணிக்கு ரெடி ஆகிடு." என்றான்.
"எதுக்கு " என்றாள் .
"என்னோட அடுத்த மூவி ப்ராஜெக்ட் கான்ட்ராக்ட்ல சைன் பண்ணிட்டேன். அந்த படத்தோட பிரோடுசேர் உன்னையும் , என்னையும் அவர் வீட்டுக்கு இன்வைட் பண்ணிருக்காரு . நாளைக்கு லஞ்ச் அவர் வீட்ல தான். அங்க அந்த மூவியில் ஒர்க் பண்ற எல்லாரும் லன்ச்சுக்கு அவர் வீட்டுக்கு வராங்க... அங்க போகும்போது கொஞ்சம் மாரனா டிரஸ் பண்ணிட்டு போக வேண்டாமா.. அதான் காலையில் சீக்கிரம் கிளம்பி போய் உனக்கு வேணும்ங்குற திங்ஸ் , டிரஸ் எல்லாம் வாங்கணும் . அதுக்காக தான் சீக்கிரம் தூங்க சொன்னேன் " என்றான்.
"சின்னையா நாளைக்கு நீங்க என்ன ஷாப்பிங் கூட்டிட்டு போக போறிங்களா! அதுவும் இந்த லண்டன்லயா !" என்று சந்தோசமாக அவனிடம் கேட்டாள் .
"ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாள் இந்த பெண்களுக்கு எப்படி தான் இருக்குமோ.. "என்று நினைத்தவன் ,
அவள் சந்தோசத்தை ரசித்தவன் "ஆமா அதனால தான் சொல்றேன் சீக்கிரம் போய் தூங்கு " என்றான்.
"ம்ம் .. சரி சின்னையா... நீங்களும் போய் தூங்குங்க.. எனக்கு எப்படியும் தூக்கம் வராது நான் கொஞ்ச நேரம் கழிச்சு தூங்குறேன்" என்றவள் சோபாவில் போய் அமர்ந்து கொண்ண்டு டிவியை ஆன் செய்தாள்.
அவளை அதிசயமாக பார்த்தவன் சென்று பெட் ரூம் சென்று படுத்துகொண்டான்.
"சின்னையா !சின்னையா! எழுந்திருங்க... " என்று ரோஜாவின் குரல் அவன் அருகில் கேட்டது.
தூக்கத்தில் மெல்ல கண்களை திறந்து பார்த்தவன் ரோஜா அவன் அருகில் உட்கார்ந்து இருந்தவள் "ஷாப்பிங் போகனும்ல நாம இங்க இருந்து எத்தனை மணிக்கு கிளம்பனும். 9 மணிக்கு போகணும்னு சொன்னிங்க.. இங்க இருந்து 9 மணிக்கு புறப்படணுமா... இல்ல கடையில் 9 மணிக்கு இருக்கணுமா " என்றாள் .
அவளை வித்யாசமாக பார்த்தவன் கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டு எழுந்து அமர்ந்தவன் "மணி என்ன ஆச்சு ரோஜா " என்றான்.
"இப்போ தான் 3 மணி ஆகுது சின்னையா " என்று தன் கையில் இருந்த மொபைலை ஆன் செய்து மணி பார்த்து கூறினாள் .
"ரோஜா.. 3 மணி தானே ஆகுது . ஷாப்பிங் போக இன்னும் நேரம் இருக்கு... " என்று புரண்டு படுத்துகொண்டான்.
அவன் திரும்பி தூங்க ஆரம்பிக்க.. ரோஜாவுக்கு தான் தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் எழுந்து வெளியே சென்றாள் .
தூக்கத்தில் இருந்த சித்து ஏதோ சத்தம் கேட்டு கண்களை விழித்தவன் . பெட் ரூம் அறை விளக்கு போடப்பட்டு இருக்க.. சுற்றிலும் நோட்டம் விட்டவன் வாட்சில் மணியை பார்த்தான் 4.28 என்று அருகில் இருந்த டிஜிட்டல் கிளாக் காட்டியது .
குழப்பமாக அறையை நோட்டமிட்டவன் அங்கே ரோஜா செய்து கொண்டு இருந்த செய்யலை கண்டு அதிர்ந்தான்

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 13
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.