layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
307
அதைக் கேட்டு மற்றவர்களை விட ரோஜா தான் அதிகம் அதிர்ச்சியானால் "அக்கா! என்ன விளையாடுறீங்களா.. நான் போய் சின்னையாவை கல்யாணம் பண்ணிக்கிறதா. இது நடக்கிற காரியம் இல்லை. முதல்ல என் கையை விடுங்க நான் போறேன்" என்று கையை உதிறி விட்டு ரோஜா திரும்பி உள்ளே செல்ல..

"ஏய் இருடி பேசிகிட்டு இருக்கியா இல்ல நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம் அதெல்லாம் நடக்கிற காரியம் தான் நீ பேசாம நில்லு" என்று மீண்டும் அவளை இழுத்து தன் அருகில் நிற்க வைத்த சுருதி அங்கே இருந்தவர்களை பார்த்து.

" என்ன யாருமே எதுவுமே பேச மாட்டேங்கறீங்க. நான் எடுத்திருக்க முடிவு ஓகே தானே? சித்துவுக்கு ரோஜாவை கல்யாணம் பண்ணி வச்சிடலாம் தானே" என்று அவர்களைப் பார்க்க ..

" எனக்கு ஓகே தான் ஸ்ருதி இதுல எந்த பிரச்சினையும் இல்லை. சித்துவுக்கும் ரோஜாவுக்கும் சம்மந்தம்னா போதும்" என்றான் லோகி.

லோகி எப்போதும் தன்னுடைய முடிவுக்கு மதிப்பளிப்பவன் என்று சிந்திக்க தெரியும் இந்த சூழ்நிலையிலும் அவன் சம்மதம் தெரிவித்ததில் மகிழ்ச்சியான சுருதி " நீங்க ரெண்டு பேரும் ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறீங்க" என்று லோகியின் பெற்றோரை பார்த்து கேட்டாள் .

"இதுல எங்க முடிவு என்னம்மா இருக்கு. நீயும் லோகியும் முடிவெடுத்தா அது சரியாத்தான் இருக்கும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சித்து இதுக்கு சம்மதிப்பானா என்னனு தான் எனக்கு தெரியல" என்று அமலா தயங்க..

"சித்துவை நான் சம்மதிக்க வைக்கிறேன் உங்கள் எல்லாருக்கும் ஓகே தானே" என்றாள் .

அனைவரும் சம்மதம் என்று ஒரு சேர தலையாட்ட ..

"எனக்கு இதில் சம்மதம் இல்ல" என்று சுருதியின் கையை உதறிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள் ரோஜா .

"ஏய் ரோஜா நில்லுடி உனக்கு ஒரு நல்ல பியூச்சர அமைச்சு தரப் போறேன் அதுக்கு சந்தோஷப்படாம இப்படி முடியாதுன்னு சொல்லிட்டு போனா என்னடி அர்த்தம்" என்று அவள் பின்னால் ஓடிய சுருதி அவள் கையை பிடித்து நிறுத்தி இருக்க ..

அதற்குள் சில மீடியாக்கள் அவர்கள் இருந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்திருக்க "சார் சித்து சாரோட கல்யாணம் நின்னுடுச்சா அவர் கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு வேற ஒருத்தரை கடைசி நிமிஷத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா? " என்று மைக்கை லோகியின் முன்பு நீட்டினார்கள் .

லோகியிடம் பத்திரிக்கையாளர்கள் நெருங்கவும் அவனிடம் நெருங்கவிடாமல் லிசாவும், பாடி கார்டுகளும் அவர்களை லோகியிடம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ள...

தன் பாடிகார்டுகளிடம் விலக சொன்னவன் பத்திரிக்கையாளர்களை பார்த்து "நீங்க சொன்னது சரி தான் ரித்திகா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க" என்றான் .

"சார் அப்போ சித்து சார் கல்யாணம் நின்னுடுச்சா . அவரு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு லாஸ் பண்ணிட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி இருக்காங்க . அவர் என்ன மனநிலையில இருக்காரு"என்று ஒருவர் கேட்க ...

" ரித்திகா தான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாங்க அதுக்காக சித்துவோட கல்யாணம் நின்னுடுச்சுன்னு யார் சொன்னது சித்துவுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்க போகுது. அதோ அங்க நிக்கிறாங்களே அவங்க தான் சித்துவ கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க அவங்க பேரு ரோஜா" என்று ரோஜாவை பத்திரிகையாளர் முன்னிலையில் அறிமுகப்படுத்தினான் லோகி

லோகி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லியும் சித்துவிற்கும் தனக்கும் இன்னும் சிறிது நேரத்தில் திருமணம் நடக்கப்போகிறது என்று சொல்கிறானே என்று அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் ,

அவள் அருகில் நின்றிருந்து சுருதி "இப்ப என்ன செய்யப் போற ரோஜா . உன் சின்னையாவுக்கும் உனக்கும் கல்யாணம்னு உலகத்துக்கே தெரிஞ்சிருச்சு இப்ப நீயும் வேண்டாம்னு சொன்னா சித்து கூட நிலைமையை யோசிச்சு பாரு. அவன் வாழ்க்கையையே வெறுத்திடுவான்.ஏற்கனவே ரித்திகா அதனால வேண்டான்னு சொன்ன கடுப்புல என்ன பைத்தியம் பிடிச்சவங்க மாதிரி இருக்கான் இப்போ மெயில் எத்தனை பேர் முன்னாடி பண்ண வேண்டாம்னு சொல்லி ஒதுக்கிட்டு போனா அவனுடைய நிலைமை என்ன ஆகும்னு யோசி . நீ மட்டும் அவனை வேண்டாம் என்று சொல்லிட்டா நீ சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்த சித்துவை இனிமேல் பார்க்க முடியாது " என்று நிலைமையில் ரோஜாவிற்கு எடுத்துக் கூறினால் சுருதி .

இங்கே டிவியில் ஓடிக் கொண்டிருந்த நியூஸில் லோகி பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுப்பதை ரூமுக்குள் இருந்த படி கேட்டுக் கொண்டிருந்த சித்து .

தனக்கு திருமணமே வேண்டாம் ரோஜாவை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என சொல்ல நினைத்து சித்தரா தடுக்க தடுக்க கேட்காமல் அவன் அறையை விட்டு வெளியே வந்தவன் பத்திரிகையாளர் அங்கு நின்றிருப்பதை கண்டு அவர்களை நோக்கி வேகமாக வர ..

" மேடம் லோகி சார் சொல்றது உண்மையா? சித்து சாருக்கு வேற பொண்ணோட கல்யாணம் நடக்க இருந்தது. ஆனா அந்த பொண்ணு அவர வேண்டாம்னு சொன்னதும். இதுதான் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புன்னு நெனச்சு அவரை நீங்கள் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டீங்களா?" என்று ஒரு நிருபர் அவளை காயப்படுத்தும் விதமாக கேட்க ...

"என்ன பேசுறீங்க " என்று பத்திரிகையாளர்களை நோக்கி சுருதி பேச வர .

"அக்கா எனக்கு சின்னையாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்" என்றால் சுருதியை தன் பக்கம் திருப்பி .

பத்திரிகையாளர்களிடம் பேச வந்த சித்து ரோஜா பேசியதை கேட்டு பத்திரிக்கையாளர்கள் சொன்னது போல அவளுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள ரோஜா சம்மதித்து விட்டாளே ... எல்லா பெண்களும் ரித்திகாவை போல தான் இருப்பார்கள் போல தன்னை பகடை காயாக வைத்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என நினைத்தவன் இத்தனை நடத்தும் தன்னை திருமணம் செய்து கொள்ள நினைத்த ரோஜாவையே பார்த்துக்கொண்டு நின்று இருக்க ..

"சார் உங்க அண்ணன் சொன்னது போல உங்களுக்கும் இதோ இங்க நிக்கிறாங்களே இவர்களுக்கும் கல்யாணம் நடக்க போகுதா?" என்று தூரத்திலிருந்து ஒரு நிருபர் மைக்கை சித்துவை நோக்கி நீட்ட ..

அப்பொழுதுதான் சித்து தங்கள் பின்னால் இருப்பதை உணர்ந்த அவன் குடும்பமும் , ரோஜாவும் திரும்பி அவனை பார்க்க..

சித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ரோஜாவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவளிடம் நடந்து வந்தவன். வா!! என்று ரோஜாவின் கையை பிடித்து இழுத்துச் சென்றவன் . நேராக மணமேடைக்குச் சென்று அங்கே இருந்த தாலியை எடுத்து ரோஜாவின் கழுத்தில் கட்டி இருந்தான் .
 

mehala

New member
Joined
Mar 18, 2025
Messages
8
Super super super super super super
 
Top