layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
307
"காலேஜ் போயாச்சா!! அவ்ளோ சின்சியரா படிக்குறாளா அவ... " என்று நினைத்தவன் "கிளீன் பண்ணகூடாதுனு சொல்லிட்டாளா! ஏன் ?" என்றான்.

"தெரியலைங்க தம்பி . காலேஜ் போகும்போது மேடம் இந்த கவரை உங்ககிட்டே குடுக்க சொன்னாங்க . நீங்க இதுல இருக்குற லெட்டரை படிச்சிட்டு அதுக்கு பிறகு என்ன சொல்றிங்களோ அது படி செய்ய சொன்னாங்க " என்று தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து சித்துவின் முன் நீட்டினான்.

அந்த கவரை வாங்கி பிரித்தவன் அதில் இருந்த லெட்டரை எடுத்து படிக்க ஆரம்பித்தான் .

"காலையில் எழுந்து கீழ நீங்க வரும்போது ஹாலை பார்த்து டென்ஷன் ஆகிருப்பிங்க.. எனக்கு நல்லாவே தெரியும். காலை கூட சுத்தம் பண்ணாம என்ன பங்கிட்டு இருந்தேன்னு நினைச்சிருப்பிங்க,, இல்ல யாரையாவது விட்டு கிளீன் பண்ண a சொல்லி இருக்கலாமேன்னு யோசிச்சிருப்பிங்க. எனக்கு இந்த ஹாலை கிளீன் பண்ண பெருசா நேரம் எடுக்காது . நான் எவ்ளோ நல்லா வீட்டு வேலை எல்லாம் செய்வேன்னு உங்களுக்கே நல்லா தெரியும். இருந்தும் நான் நீங்க அலங்கோலம் ஆக்கி வெச்சிருந்த ஹாலை ரம்மியமா மாத்தாம அபப்டியே விட்டிருக்கேன்னா அதுக்கு காரணம் இருக்கு சின்னையா " என்று அவள் எழுதி இருக்க..

"நான் நினைச்சதை அப்படியே எழுதி இருக்கா " என்று சித்துவிற்கு தோன்ற... அடுத்து அவள் எழுதியதை படித்ததும் ரோஜாவை இப்போதே அழைத்து ஹால் மொத்தத்தையும் அவளை வைத்து கிளீன் செய்ய வைக்க வேண்டும் என்று தோன்றியது .

"இங்க பாருங்க சின்னையா நீங்க ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம் . உங்ககிட்டே நிறைய காசு பணம் இருக்கலாம். ஆனா பொண்ணுங்களை கேவலமா பேசுற உங்களுக்கு வேலை செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல.. நான் உங்க மனைவியாவே இருந்தாலும் செய்ய மாட்டேன். ரெண்டாவது ஒரு பொருளோடு மதிப்பு அதை கஷ்டப்பட்டு உருவாக்குறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கு கோபம் வரும் , ஆத்திரம் வரும்னா அதுக்காக இவ்ளோ காசு கொடுத்து வாங்கின பொருளை போட்டு உடைக்குறதுல என்ன நிம்மதி கிடைச்சிற போகுது உங்களுக்கு. அது நீங்க வாங்கி வெச்ச பொருள் தான் . அதுக்காக போட்டு உடைப்பீங்களா !!" என்று அவள் எழுதி இருக்க..

"ஆமா டி ! அது என்னோட பொருள் நான் அதை உடைப்பேன் என்ன வேணா செய்வேன். உனக்கு என்ன வந்திச்சு..." என்று சித்துவிற்கு ரோஜாவின் மீது அதிக கோபம் வர மேலும் அந்த கடுத்தத்தை படித்தான்.

"நீங்க கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு சம்பாரிச்ச காசு அது. என்ன தான் நீங்க பெரிய ஸ்டாராவே இருந்தாலும் ஒரு பொருளோடு மதிப்பு தெரிஞ்சு பழகிக்கோங்க.. இன்னிக்கு இருக்குற பேர் புகழ் பணம் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் இல்லாமையே போகலாம் . ஆனா நம்ம குணம் , பொறுமை தான் நம்மளை நல்ல முறையில் எப்பவும் வழி நடத்தும் . உங்ககிட்டேயும் நல்ல குணம் நிறைய இருக்கு.. யாரோ ஒருத்தி உங்களை ஏமாத்திட்டு போனதுக்காக மொத்த பொண்ணுங்களையம் நீங்க தப்பா பேசி இருக்க கூடாது. அந்த வகையில் நான் இன்னமும் உங்க மேல கோபமா தான் இருக்கேன். எனக்கு தோணினதை சொல்லிட்டேன்"

"நான் பேசினது தப்புனு உணர்ந்த அடுத்த நிமிஷமே உன்கிட்டே மன்னிப்பு கேட்க வந்தேனே ஆனா நீதான் நான் வந்தது கூட தெரியாத அளவுக்கு நல்லா தூங்கிட்டு இருந்த . அதுக்கு நான் என்ன செய்ய முடியும் " என்று நேற்று இரவு ரோஜா உறங்கும்போது பார்த்த அவள் முகம் சித்துவிற்கு நினைவில் வர.. அவனையும் அறியாமல் அவன் உதட்டின் ஓரம் புன்னகை மலர்ந்தது .

அதை கவனித்த வடிவேலு " நான் கூட மேடம் கிளீன் பண்ணவேணாம்னு சொன்னதுக்கு தம்பி எதுவும் கோபப்படுவார்னுன் நினைச்சேன். ஆனா மேடம் எதுவோ சாரை சமாதானம் செய்யுற மாதிரி தான் எழுதி இருக்காங்க போல.. அதனால தான் சார் சிரிக்குறார் " என்று அவர் நினைத்து நிமம்தி அடைந்தார்.

அவரை பார்த்ததும் தன் முகத்தில் கோபத்தை தத்தெடுத்துக்கொண்டவன் மிச்சம் இருந்த கடிதத்தையும் வாசித்தான்,

" அதுக்கு அப்புறமும் நான் ஹாலை சுத்தம் செய்யலைன்னு என் மேல நீங்க கோபப்பட்டா நான் அதை பெருசா எடுத்துக்க போறது இல்ல.. அதென்ன ஆம்பளைங்க உடைக்குறதை பொண்ணுங்க நாங்க தான் கிளீன் பண்ணனுமா? இது உங்க வீடு தானே.. நீங்க சம்பாரிச்சு கட்டின வீடு தானே . அப்போ நீங்களே கிளீன் பண்ணுங்களேன்!!" என்று எழுதி முடித்திருந்தாள்.

"ஓஹோ!! இந்த சின்னப்பாப்பாவுக்கு இந்த அளவுக்கு பேச தெரியுமா.. இருக்கட்டும் எப்படியும் ஸ்ருதி அவளை என் கூட லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி இருக்கா தானே.. அங்க லண்டன்ல வந்து என்னோட எல்லா வேலையும் உன்னை செய்ய வைக்கல நான் சித்து இல்ல டி.. " என்று ரோஜாவை நினைத்து மனதில் சபதம் போட்டவன் .

"வடுவேலு அண்ணா.. நான் லண்டன் கிளம்பறேன் . எப்படியும் வர 1 வீக் ஆகும். இதை கிளீன் பண்ணிடுங்க. வீட்டை பார்த்துக்கோங்க.."என்றவன் தன் லக்கேஜை எடுத்துக்கொண்டு செல்ல...

வடிவேலு சித்துவிடம் இருந்த லக்கேஜை வாங்கி அவன் காரில் கொண்டு போய் வைத்துவிட்டு அவனுக்கு கார் கதவை திறந்து விட.. அவரை பார்த்து லேசாக சிரித்துவிட்டு காரில் ஏறியவன் அங்கே வந்திருந்த மற்ற வேலையாட்களும் அவர்கள் தனக்கு கொடுக்கும் மரியாதையையும் பார்த்தவன்.

"என்னை.. என்னை போய் கிளீன் பண்ண சொல்லிட்டாளே... இவளை... "என்று கோபத்தில் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தியவன் நேராக ஏர்போர்ட் கிளம்பி இருந்தான் .

TELEGRAM

FACEGOOK

WHATSAPP CHANNEL
 

vidhya

New member
Joined
Oct 28, 2024
Messages
1
Seekaram next part upload pannunga pa romba wait panna vaikuringa
 
Top