- Joined
- Oct 6, 2024
- Messages
- 307
"ஷிட் !! அந்த சித்து கல்யாணம் நின்ன பிறகு அவனோட வாழ்க்கையே புரட்டி போட்டிரும்னு நினைச்சு நான் போட்ட கணக்கு தப்பாகிருச்சே.. கல்யாணம் நின்னு போனதை தாங்கிக்க முடியாம அவன் வெளியவே தலை காட்ட மாட்டான். அவனால நிம்மதியவே இருக்க முடியாதுனு நான் நினைச்சேன். ஆனா இப்படி உன்னோட அவனுக்கு பிக்ஸ் பண்ணி இருந்த அதே மேடையில அதே முகுர்த்தத்துல வேற ஒரு பொண்ணை கல்யாணம் செய்திருக்கான். யாரு அந்த பொண்ணு அதுவும் இவ்ளோ அழகா இருக்கா . அதுக்குள்ள எப்படி இவனுக்கு இப்படி ஒரு பொண்ணு கிடைச்சது " என்று சித்து திருமணம் நடந்துவிட்டது என்ற கடுப்பில் பேசினானா.. அலல்து அவனுக்கு மிகவும் அழகான பெண் கிடைத்திருக்கிறது என்று பொறாமையில் புலம்புகிறானா என்று அவனுக்கு தான் தெரியும் .
"ராகுல் விடு.. இப்போ என்ன அவனுக்கு கல்யாணம் தானே நடந்திருக்கு. அவனை அவமான படுத்த நமக்கு வேற வழியும் அவனே ஏற்படுத்தி கொடுத்திருக்கான் . நீ பீல் பண்ணாத " என்று அவன் சட்டைக்குள் கை விட்டு அவனை தடவியபடி கூறினாள் ரித்திகா .
"என்ன ரித்து சொல்ற.. அவனை அவமானப்படுத்த கிடைச்ச ஒரு சான்சும் மிஸ் ஆகிடுச்சே.. நீ என்ன சொல்ற " என்றான் .
"இங்க பாரு ராகுல் அவன் கல்யாணம் செய்திருக்க பொண்ணு சித்து வீட்டில் வேலை செய்யுற பாப்பாவோட பொண்ணு . அவ பேரு கூட.. ஏதோ பூ பேரு வருமே " என்று யோசித்தவள் .
"ஆ ! ரோஜா!! ரோஜா அவ பேரு . அவன் வீடு வேலைக்காரியோட பொண்ணை தான் சித்து கல்யாணம் செய்திருக்கான். என்னை கல்யாணம் செய்துக்க முடியாம வேற வழியே இல்லாம அவன் வீடு வேலைக்காரி பொண்ணை கல்யாணம் பண்ணினதே அவனுக்கு அவமானம் தானே. சித்து அவன் அண்ணா மாதிரி எதார்த்தமானவன் கிடையாது . அவன் ஸ்டேட்டஸ் . மதிப்பு , மரியாதைன்னு பாக்குறவன் .அவனுக்கு கண்டிப்பா இந்த கல்யாணத்துல துளியும் இஷ்டம் இருக்காது. வேற வழி இல்லாம விதியேன்னு தான் அந்த ரோஜாவை கல்யாணம் செய்திருக்கான். நீ வேணா பாரு அதுவே அவனுக்கு பிரச்சனையா வரும். சீக்கிரமே அந்த பொண்ணை அவன் வீட்டை விட்டு துரத்தி விட போறான். அவகிட்டே டைவர்ஸும் வாங்கிடுவான் "என்றாள்
இத்தனை நாள் சித்துவுடன் பழகியதில் அவன் குணத்தை ஓரளவு கணித்தவளாக.
"அப்போ நீ சொன்னது எல்லாம் கண்டிப்பா நடக்கும்னு சொல்ற அப்படித்தானே " என்றான் ராகுல் .
"கண்டிப்பா நடக்கும் வெயிட் அண்ட் வாட்ச் " என்றவள் .
"விடு ராகுல் டைம் வரும் அப்போ இவனை பார்த்துக்கலாம். நீ வா நம்ம மேரேஜை செலிப்ரட் பண்ணலாம் " என்று அவனை இழுத்து கட்டிலில் தள்ளியவள் தன் சேலையை கழட்டி எரிந்து விட்டு அவன் மீது விழுந்தாள் .
....
"அழாத டி.. இப்போ எதுக்கு அழற .. உன் சின்னையாவை தான் உனக்கு நல்லாவே தெரியுமே அவன் அந்த ரித்திகா செய்ததை நினைச்சிட்டு இன்னமும் கோபமா இருக்கான். நீ அதை எல்லாம் நினைச்சிட்டு வருத்தப்பட்டுட்டு இருக்காத " என்று அழுது கொண்டு இருந்த ரோஜாவின் கண்ணீரை துடைத்துவிட்டுக்கொண்டே அவளை சமாதானம் செய்ய முயன்றாள் ஸ்ருதி .
"அக்கா.. அந்த ரித்திகா அப்படி பண்ணிட்டு போய்ட்டா நான் என்ன செய்வேன். அத்தனை பேர் முன்னாடி என்னை கல்யாணம் செய்துக்க சம்மதம்னு சொல்லி தானே மேடைக்கு கூட்டிட்டு போனாரு. போன வேகத்துல என் கழுத்துல தாலியை கட்டிட்டு அதே வேகத்துல என்னை மட்டும் மேடையில தனியா விட்டுட்டு விறு விறுன்னு இறங்கி எங்கையோ கிளம்பி போய்ட்டாரு. சின்னையா தாலி கட்டினதும் எனக்கு என்னன்னு கிளம்பி போய்ட்டாரு." என்று தேம்பிக்கொண்டே மேலும் பேச ஆரம்பித்தாள்.
"ஆனா... ஆனா அங்க இருந்த பத்திரிக்கை ஆளுங்க எல்லாம் வந்து என்னை எப்படி சுத்தி வளைச்சு கேள்வி கேட்டாங்க. அதை நீங்களும் பார்த்திங்க தானே.. நீங்களும் , பெரிய ஐயாவும் மட்டும் அங்க வரலையின்னா நான் என்னவாகிருப்பேன் " என்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டே கூறினாள் ரோஜா.
"எனக்கு புரியுது ரோஜா அதான் அவங்ககிட்டே எல்லாம் மாட்டிக்காம நான் உன்னை கூட்டிட்டு வந்துட்டேனே இன்னமும் அதையே நினைச்சு நீ அழுதுட்டு இருக்கணுமா ? முதல்ல கண்ணை துடைச்சிட்டு கிளம்பு நாம போகலாம் " என்றாள் ஸ்ருதி .
ரோஜா ஸ்ருதியையே பார்க்க...
"இங்க பாரு நீ இப்போ முன்ன மாதிரி கிடையாது . சித்துவோட பொண்டாட்டி அதை மனசுல வெச்சுக்க . இன்னமும் சின்ன பொண்ணு மாதிரி அழுதுட்டு இருக்குறது நல்லாவே இல்லை " என்றவள் . "உன் முகம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா " என்று ஸ்ருதி ரோஜாவை பார்த்து பழிப்பு காட்டினாள்.
அதை பார்த்ததும் ரோஜாவுக்கு சிரிப்பு வந்துவிட.. கண்களை துடைத்துக்கொண்டே " என் முகம் இவ்ளோ கேவலமா எல்லாம் இல்ல " என்றவள்.
"அக்கா!! " என்று தயங்கியபடி ஸ்ருதியை அழைத்தாள் .
"என்ன டி " என்றாள் ஸ்ருதி.
"அக்கா அப்போ இருந்து நான் என் அம்மாவை பார்க்கவே இல்லை .. அவங்ககிட்டே கூட சம்மதம் கேக்காம நான் சின்னையாவை கல்யாணம் செய்துகிட்டேன் " என்றாள் .
"அவங்க எதுவும் சொல்லல ரோஜா அமைதியா தான் இருக்காங்க . மத்தவங்களோட சேர்ந்து வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க " என்றாள் ஸ்ருதி .
"ஏன் க்கா!! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு . என்னை வந்து பார்க்காம அம்மா கிளம்பி போய்ட்டாங்க . என்மேல எதுவும் கோபமா அவங்களுக்கு " என்று வருத்தமாக கேட்டாள் ரோஜா .
"இருக்கலாம் ரோஜா அவங்களுக்கும் உன்னோட கல்யாணம் அதிர்ச்சியா தானே இருக்கும் . நீ வா நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் " என்று ரோஜாவை கிளப்பி தன்னோடு வீட்டிற்கு அழைத்து சென்றாள் ஸ்ருதி.
இங்கே மண்டபத்திலிருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல் ரித்திகாவும், சித்துவும் திருமணத்திற்கு பிறகு இணைந்து வாழ்வதற்காக வாங்கி வைத்திருந்த தன்னுடைய வில்லாவிற்கு சென்று இருந்தான்.
அந்த வில்லாவின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சித்து. தனக்கும் ரித்திகாவுக்கும் திருமணம் முடிந்த பிறகு அவளுக்கு இந்த வீட்டை அவனுடைய காதல் பரிசாக, திருமண பரிசாக சர்ப்ரைஸ் ஆக கொடுக்கலாம் என்று பார்த்து பார்த்து கட்டியிருந்த இந்த வீடு இப்போது அவனுக்கு எரிச்சலை தந்தது.
விறுவிறுவென்று உள்ளே வந்தவன் அங்கே வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களை கீழே தள்ளி உடைத்தான்.
அருகில் இருந்த பெரிய பூ ஜாடியை கையில் எடுத்தவன். அதை கொண்டு அந்த வீட்டில் கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கி என ஒன்று விடாமல் தன் கோபம் ஆத்திரம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அதன் மீது காட்டிக் கொண்டிருந்தான்.
அப்போதும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை அந்த ஹாலில் ஆள் உயரத்திற்கு மாட்டப்பட்டிருந்த சித்து ரித்திகா இருவரும் இணைந்து எடுத்த போட்டோ அவன் கண்ணில் பட்டது . அடுத்த நொடி கையில் இருந்து அந்த பெரிய பூ ஜாடியை தூக்கி அந்த போட்டோவை நோக்கி வீச... அது அந்த போட்டோவை இரண்டாக பிளந்து கொண்டு சுவற்றில் மோதி தரையில் விழ அவர்கள் போட்டோவும் இரண்டாக உடைந்து தரையில் விழுந்திருந்தது.
சித்துவிற்கு தன்னை இப்படி ஏமாற்றி அத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியவளை நினைக்க நினைக்க அவன் கோபம் மேலும் அதிகம் தான் ஆகியிருந்தது.
கோபத்தை எப்படி அடக்குவது என்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தவன் . விருட்டென எழுந்து வேகமாக பெட்ரூமிற்கு சென்றான்.
அணிந்திருந்த வேஷ்டி சட்டையை கழட்டி எறிந்து விட்டு நேராக ஷவரின் முன் நின்று சவரை திறந்து விட்டவன் தன் கோபம் தணிய அப்படியே தண்ணீரில் நனைய ஆரம்பித்து இருந்தான்.
எவ்வளவு நேரம் அப்படி நின்றிருப்பான் என்று தெரியவில்லை குளித்து முடித்து உடலை கூட துவட்டாமல் அப்படியே வெளியே வந்தவன். கபோர்டை திறந்து டவளை எடுத்து தன் இடுப்பில் சுற்றிக்கொண்டே நேராக போய் மெத்தையில் விழுந்தான்.
மெத்தையில் படுத்தும் சித்துவிற்கு தூக்கம் வரவில்லை காலையில் ரித்திகாவும், ராகுலும் பேசியது தான் அவன் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவன் நீண்ட நேரத்துக்கு பிறகு அவனையும் அறியாமல் உறங்கி இருந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியே உறங்கி இருந்தான் என்று தெரியவில்லை அவன் செல் போன் அடிக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்தவன் லேசாக கண்களை சுருக்கி விழித்தவன் போன் எங்கே என தேடினான்.
அதன் சத்தம் பாத்ரூமிற்குள் இருந்து வந்தது கட்டிலில் இருந்து எழுந்து பாத்ரூம் சென்றவன் கழட்டி போட்ட சட்டை பாக்கெட்டில் அவன் போன் ஒலிர்ந்து கொண்டிருக்க குனிந்து எடுத்தவன் யார் அழைத்தார்கள் என்று பார்க்க சுருதி தான் அவனுக்கு அழைத்திருந்தாள்.
அதை அட்டென்ட் செய்யலாமா வேண்டாமா என யோசித்தவன் ஒரு வழியாக காலை அட்டென்ட் செய்து காதில் வைத்து "என்ன விஷயம் சுருதி" என்றான் இறுகிய குரலில்.
"டேய் எங்கடா இருக்க ... எவ்வளவு நேரம் தான் இப்படி வீட்டுக்கு வராமலே இருப்ப இங்க உனக்காக எல்லாரும் காத்துட்டு இருக்காங்க. உன்ன நம்பி ஒருத்தி வந்துட்டா அது ஞாபகம் இருக்கா? இல்லையா" உனக்கு என்று சுருதி சித்துவை அதட்டினாள் .
அந்த வீட்டில் அவனிடம் அவ்வளவு அதிகாரமாக பேசுவது ஸ்ருதி மட்டும் தான்
"நான் புது வில்லால இருக்கேன்" என்றான்.
ரித்திகாவிற்காக கட்டிய இந்த மாளிகை ரித்திகாவை தவிர சித்துவின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். அவன் அந்த வீட்டிற்க்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறான் எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறான் என்று எல்லோருக்குமே தெரியும்.
ஆனால் அவனோடு சேர்ந்து வாழ இப்போது ரித்திகாவிற்கு கொடுத்து வைக்கவில்லை. அந்த அதிர்ஷ்டம் ரோஜாவிற்கு தான் கிடைத்திருக்கிறது.
"அங்கையா அங்க எதுக்கு போன" என்றவள் "சரி ஓகே நீ வீட்டுக்கு வர போறியா? இல்லையா?" என்றாள்.
"எதுக்கு! " என்றான் சித்து.
"டேய் மணி பாரு எட்டாச்சு. நீ இன்னும் வீட்டுக்கு வராம அங்க என்ன செய்துட்டு இருக்க.. மண்டபத்தில் இருந்து நேரா ரோஜாவை கூட்டிட்டு வீட்டுக்கு வந்ததோட சரி எந்த சாஸ்திர சம்பிரதாயமும் செய்யல. அவ காலையில் இருந்து அபப்டியே இருக்கா டா.. நீ வந்தா தானே முறையா எல்லாம் செய்ய முடியும்" என்றாள் .
"இப்போ இருக்கிற நிலைமைக்கு அதெல்லாம் தேவையா? அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடு" என்றான் சித்து.
"இங்க பாரு சித்து முன்ன மாதிரி நீ தனியாளா இருந்தா எங்கேயோ போய் என்னவோ பண்ணித்தொலைன்னு விட்டுருப்பேன். ஆனா நான் சொன்னதுக்காக என்னை நம்பி ஒருத்தி உன்னை கல்யாணம் பண்ணி இருக்கா. அவளோட வாழ்க்கைக்கு நான் தான் பொறுப்பு. அவள நீ நல்லபடியா பார்த்துக்க வேண்டியது உன்னோட கடமை. நீயும் தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட... அவ கழுத்துல உன்விருப்பதோட தானே நீ தாலி கட்டின. அப்போ அவ கூட சேர்ந்து வாழவேண்டியது உன்னோட பொறுப்பு தானே.." என்றாள் சுருதி.
"இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற நீ" என்றான் சித்து கடுப்பாக.
"நீ எதுவும் செய்ய வேண்டாம் முதல்ல கிளம்பி வீட்டுக்கு வா போதும் " என்றாள் சுருதி.
"ரோஜாவை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சது நீதானே. நான் அவ கூட சேர்ந்து குடும்பம் நடத்தணும்னு சொன்ன தானே. நான் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு வரதா தானே பிளான் பண்ணி இருந்தேன். அதான் கல்யாணமும் நடந்துடுச்சே இனி நான் இங்கதான் இருப்பேன். என் கூட குடும்பம் நடத்த ரோஜாவை இங்க வர சொல்லு.. " என்று விட்டு போனை வைத்தான்.
FACEBOOK GROUP
TELEGRAM
WHATSAPP CHANNEL