- Joined
- Oct 6, 2024
- Messages
- 307
"சின்னையா என்ன பண்றீங்க.. முதல்ல எழுந்திருங்க... இபப்டி எல்லாம் பண்ணாதீங்க... " என்று தன் மேல் இருந்தவனை பலம் கொண்ட மட்டும் முயன்று கட்டிலில் தள்ளி விட்டவள் வேகமாக எழுந்தவள் .
"என்ன டி பிடிக்காத மாதிரி மடிக்குற... என்னை உன் இழுப்புக்கு வர வைக்கலாம்னு நினைக்குறியா அதுதான் இங்கே நடக்கணும் நினைக்குறியா " என்று அவளை பார்க்க.
"சின்னையா நீங்க ஏதோ சொல்லிட்டு இருக்கீங்க.. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சம்மதம் சொன்னதுக்கு காரணம் ஸ்ருதி அக்கா தான். நான் அப்போ கூட வேணாம்னு தான் சொன்னேன். ஆனா அந்த பேட்டி எடுக்கிறவர் ஆதாயத்திற்காக தான் உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டாரு. அப்போ தான் எனக்கு தோணுச்சு அந்த ரித்திகா மாதிரியான ஆள் மறுபடியும் உங்கள ஏமாத்திர கூடாது. வேற யாராவது உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பொய் சொல்லி உங்கள கஷ்டப்படுத்திடக்கூடாதுன்னு தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். மத்தபடி வேற எதுவும் எனக்கு வேண்டாம். வேற எதுவும் எனக்கு தேவையும் இல்லை" என்றாள் உறுதியாக.
"ஓஹோ மத்தவங்க என்ன ஏமாத்திட கூடாது மத்தவங்க என்கிட்ட இருக்க சொத்துக்காக என்ன ஏமாத்திடுவாங்க அதனால அவங்க எல்லார்கிட்டயும் இருந்தும் என்ன காப்பாத்த தான் மேடம் நீங்க என்ன கல்யாணம் பண்ணி இருக்கீங்க அப்படித்தானே" என்றான் நக்களாக.
"இல்ல.. இல்ல.. சின்னையா நான் அப்படி சொல்ல வரல. அப்போ எனக்கு என்ன தோணுச்சோ நான் எதுக்காக இந்த முடிவை எடுத்தேனோ அதைத்தான் உங்ககிட்ட சொல்றேன். நான் சொல்றத நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க" என்று ரோஜா மீண்டும் பேச வர..
"ஏய்!! நடிக்காதடி.. எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி தானே ஒரு ஆள் அழகா வசதியா வாட்டசாட்டமா இருந்தா போதுமே அவன்கிட்ட இருக்குற பணத்துக்காகவும் அவன்கிட்ட இருந்து கிடைக்கிற உடம்பு சுகத்துக்காகவும் உங்க தேவைக்காக தானே ஆண்களை பயன்படுத்திக்கிறீங்க. உங்க தேவை முடிஞ்சதும் அவன ஒரு டிஷ்யூ பேப்பர் மாதிரி கசக்கி தூக்கி வீசிட்டு அடுத்தவன பாத்துட்டு போயிட்டே இருக்கற ஆளுங்க தானே இந்த பொம்பளைங்க " என்று ஒட்டு மொத்த பெண்கள் இனத்தையே சித்து ரித்திகா செய்த ஒரு செயலால் தவறாக சித்தரித்து பேச…
சித்துவின் வாயிலிருந்து பெண்களைப் பற்றிய இப்படி ஒரு வார்த்தைகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறாத ரோஜா அதை தாங்கிக்கொள்ள முடியாமல் "போதும் நிறுத்துங்க சின்னையா!! என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது. என்ன மட்டும் இல்ல எல்லா பெண்களையும் நீங்க தப்பா பேசுறீங்க."
"அந்த ரித்திகா ஒருத்தி செய்துட்டு போன காரியத்துக்காக ஒட்டுமொத்த பெண்களையும் தப்பா பேசுறது எந்த விதத்தில் நியாயம். உங்களை சுத்தி அம்மா, தங்கச்சி, பிரெண்ட்ஸ்னு நிறைய பெண்கள் இருக்காங்க. இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லும்போது நம்மள சுத்தி இருக்கிறவங்களை பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பேசுங்க.. நீங்க யாரையோ அவமானப்படுத்துறதா நினைச்சு உங்களை சுத்தி இருக்க உங்க மேல அக்கறை பாசம் இருக்க பொண்ணுங்களை அவமான படுத்துறீங்க.." என்றவள்.
"என் சின்னையா இப்படி ஒரு கேவலமான எண்ணத்தோடு இருப்பாருன்னு சத்தியமா நினைக்கவே இல்ல. ஒருத்தி பண்ணின தப்புக்காக என்னையும் அவங்களோட சேர்த்து பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல சின்னையா.." என்று அழுதவள்.
"சின்ன வயசுல இருந்து என்ன பார்த்துட்டு தானே இருக்கீங்க. நான் அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி உங்களுக்கு தோணுதா? உங்க வாயிலிருந்து என்ன பத்தின தப்பான வார்த்தைகள் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களை என் மனசுல நான் எந்த இடத்துல வெச்சிருக்கேன் தெரியுமா? நீங்க படத்துல மட்டும் ஹீரோ இல்ல.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோன்னு நினைச்சேன். ஆனா இப்படி கேவலமா பேசுற நீங்க என்னோட ஹீரோ கிடையாது . நீங்க... நீங்க... " என்று கண்களில் கண்ணீர் வர அவனிடம் பேசியவள்
.
"நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க நீங்க சொன்ன எண்ணத்தோடு உங்ககிட்ட இருக்குற சொத்துக்காகவோ உங்ககிட்ட இருந்து கிடைக்கிற உடல் சுகத்துக்காகவோ நான் உங்களை கல்யாணம் செய்துக்கள ஸ்ருதி அக்கா சொன்ன ஒரு வார்த்தைக்காகவும் வேறு யாரும் உங்களை மறுபடியும் காயப்படுத்திடக் கூடாதுங்குற ஒரே காரணத்திற்காகவும் மட்டும்தான் நான் உங்களை கல்யாணம் செய்துகிட்டேன் . மத்தபடி எனக்கு வேற எதுவும் தேவையில்லை" என்றவள்.
"நீங்களும் நானும் இந்த ஊர் உலகத்துக்கு மட்டும்தான் கணவன் மனைவி மத்தபடி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த எண்ணத்தோடு நான் உங்ககிட்ட வரவே மாட்டேன் " என்று தன் மனதில் பட்டதை சிறிதும் தயங்காமல் சித்துவின் முகத்திற்கு நேராக சொல்லிவிட்டு திரும்பி அவனைத் தாண்டி விறு விறுவென அவன் அறையை விட்டு சென்று விட்டாள்.
அவள் சென்ற பிறகு வாசல் கதவையே பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் நின்றிருந்தான் சித்து .
ரோஜா அழுகையோடு அவனிடம் பேசி விட்டு சென்ற வார்த்தைகள் அவன் மனதிற்குள் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அப்படியே வந்து மெத்தையில் படுத்தவன் மனதில் "ரித்திகா பண்ணின காரியத்தால தேவையில்லாம என்னோட கோபத்தை நான் ரோஜா மேல காட்டிட்டேனே. அப்படி நான் பேசியிருக்கக் கூடாது அவளை மட்டும் இல்ல மொத்த பெண்களையும் நான் தப்பா பேசிட்டேன். அவ ஒருத்தி செஞ்ச தப்புக்காக மத்தவங்களையும் நான் குற்றம் சொல்லிட்டேன். இவ்வளவு கேவலமா நான் யோசிச்சிட்டேனா என் மனசு அவ்வளவு குப்பை ஆயிடுச்சா" என்று தன்னைத்தானே நொந்தபடி கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.
தான் பேசியதற்கு ரோஜாவிடம் இப்போதே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தவன் எழுந்து அவளை பார்க்க படிகளில் இறங்கியவன் ஹாலில் இன்னமும் விளக்கு எரிவதை பார்த்தவன் ரோஜாவை ஹாலில் காணாமல் கீழே வந்தவன் வாசல் கதவை பார்த்தான் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருக்க…
ஆனால் ஹாலில் எங்கும் ரோஜாவை காணவில்லை எங்கே சென்று இருப்பாள் என்று யோசனையோடு வந்தவன் அங்கே போடப்பட்டிருந்த சோபாவை தாண்டி செல்ல போனவன் அங்கே யாரோ இருப்பது போல இருக்க... திரும்பி சோபாவை பார்க்க
ஹாலில் சென்ட்ரல் ஏசி ஓடிக்கொண்டிருக்க.. அந்த இடமே மிகவும் சில்லென்று இருந்தது. அந்த குளிர் தாங்காமல் சேலையை போர்த்திக் கொண்டு உடலைக் குறிக்கி சோபாவில் உறங்கிக் கொண்டிருந்தாள் ரோஜா.
அவனிடம் சூடான பாப்கானை போல புரிந்துவிட்டு வந்து இப்படி சாந்தமாக உறங்குபவளை முதல் முறையாக பார்ப்பது போல அவளை கண் இமைக்காமல் பார்த்தான். இன்று ரோஜா அவன் பார்வைக்கு வித்யாசமாக தெரிந்தாள். அவள் முகம் அவன் அடிமனதை அதிர வைத்தது
அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் குளிரில் தூக்கத்தில் புரண்டவளை பார்த்தவன் வேகமாக அருகில் இருந்த பெட்ரூமிற்கு சென்று போர்வையை எடுத்துவந்து அவள் தூக்கம் கலையாதவாறு போர்த்தியவன் . அவள் அமைதியான முகத்தை அவனையும் அறியாமல் தன் மனதில் நிரப்பிக்கொண்டு மேலே ரூமிற்கு சென்று படுத்துகொண்டான்.
ரோஜாவின் முகம் மட்டுமே அவன் நினைவில் இப்பொது தூக்கம் வரலாம் அவனை அலைக்கழித்தது.
அவனையும் அறியாமல் நீண்ட நேரம் களைத்து உறங்கி இருந்தான்.
WHATSAPP CHANNEL
FACEBOOK LINK
TELEGRAM LINK
YOUTUBE LINK