layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
307
சுருதி சித்துவிடும் பேசியதெல்லாம் ஸ்பீக்கர் போனில் கேட்டுக் கொண்டிருந்த ரோஜா செய்வது தெரியாது ஸ்ருதியை பார்க்க.

"இப்போ என்ன பண்ணலாம்" என்றாள் அமலாவிடமும், ரோஜாவின் அம்மா பாப்பாவிடமும்.

"என்னடி நெனச்சிட்டு இருக்க.. அவ மனசுல கல்யாணம் ஆயிடுச்சுன்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா அவனை நம்பி ஒருத்தி வந்து இருக்காளே அதைப்பத்தி யோசிக்காம அங்க அனுப்பி வைக்க சொல்றான் . என்னதான் பண்றது இவன" என்று அமலா கோபமாக ஸ்ருதியிடம் கேட்க.

"அம்மா!! சரியோ தப்போ நம்ம சின்ன தம்பிக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு. அவர் சொன்னது போலவே ரோஜாவ அங்கையே அனுப்பி வச்சிடுங்க. இது அவங்களோட வாழ்க்கை சரியோ தப்போ அவங்க ரெண்டு பேரும் எதுவா இருந்தாலும் பேசி முடிவெடுக்கட்டும் அதுதான் அவர்களுக்கு நல்லது" என்றார் ரோஜாவின் அம்மா பாப்பா ..

அவர் சொன்னதும் சரிதான் என்று நினைத்த அமலா "நீ சொல்றதும் சரிதான் பாப்பா. நீ இந்த அளவுக்கு பக்குவமா பேசுறதே எனக்கு சந்தோசமா தான் இருக்கு. எப்படியும் பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம் ஆனது உனக்கு வருத்தமா தான் இருக்கும். அவ வாழ்க்கை என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு நினைச்சு நீ பயப்பட வேண்டாம். ரோஜாவுடைய வாழ்க்கைக்கு நான் பொறுப்பு. அவளை என் பையன் கூட சந்தோஷமா வாழ வைப்பேன். அந்த வாக்குறுதியை நான் உனக்கு கொடுக்கிறேன்" என்று பாப்பாவின் கையைப் பிடித்து சத்தியம் செய்த அமலா "சுருதி ரோஜாவ கொண்டு போய் அவ வீட்ல விட்டுட்டு வா" என்றார்.

ஸ்ருதியும் ரோஜாவை சித்து புதிதாக கட்டிய வீட்டிற்கு அழைத்து வந்தவள் வாசலிலேயே காரில் நிறுத்திவிட்டு "ரோஜா இது உன்னோட வாழ்க்கை அவன் கோபக்காரன் அது உனக்கும் நல்லாவே தெரியும். நீ கொஞ்சம் பொறுத்துப்போ எல்லாம் சரியாகும்னு நம்புறேன். நான் இப்போ உள்ளே வரது சரியா இருக்காது . நான் ஏன் சொல்றேன்னு உனக்கு புரியும்னு நினைக்குறேன்"என்றவள்.

ரோஜாவை வாசலிலேயே விட்டுவிட்டு காரை கிளப்பி இருக்க… மிகவும் தயக்கத்தோடு அவள் வாழப்போகும் அந்த மாளிகைக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் ரோஜா

அவள் வீட்டிற்குள் வரும்போது அந்த ஹால் முழுவதும் இருட்டாக இருக்க.. பயந்துகொண்டு அந்த இருட்டில் தட்டு தடுமாறி மெல்ல நடந்து வந்தவள் காலில் ஏதோ பட்டு கால் தடுக்கி பொத்தேன தரையில் விழுந்திருந்தாள்.

அதில் அம்மா!! என்று அவள் விழுந்த வேகத்தில் சத்தமிட.. அந்த இரவில் அமைதியான அந்த வீட்டில் ஸ்ருதியின் குரல் ஹால் முழுவதும் எதிரொலிக்க அந்த சத்தம் பெட்ரூமில் இருந்த சித்தார்த் வரை கேட்டது. சத்தம் கேட்டு வேகமாக வந்தவன் அப்போதுதான் காலில் லைட் கூட போடாமல் இருட்டாக இருப்பதை கவனித்து தன் மொபைலில் டார்ச்சை ஆன் செய்தவன் வேகமாக கீழே இறங்கி வந்து ஹாலில் இருந்த லைட் ஸ்விட்சை போட்டான்.

ஸ்விட்ச் போட்டுவிட்டு பார்க்க ரோஜா தரையில் குப்புற விழுந்து கிடந்தாள் .

கீழே விழுந்து கிடந்தவளை தூக்கிவிடும் எண்ணம்கூட தோன்றாதவனாய் திரும்பி விறு விறுவென படி ஏறி தன் அறைக்கு சென்றுவிட…

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு தரையில் இருந்து எழுந்த ரோஜா "சின்னையா ரொம்ப கோபமா இருப்பார் போல" என்று நினைத்தபடி அப்போதுதான் அந்த காலை பார்த்தால் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் அடித்து நொறுங்கி அந்த ஹாலே அலங்கோலமாக கிடக்க..

"என்ன பொருள் எல்லாம் இப்படி உடைஞ்சிருக்கு. இதெல்லாம் சின்னையா வேலையா தான் இருக்கும். சும்மாவே ஏதாவது கோபம் வந்தா கையில் கிடைக்கிறது எடுத்து உடைச்சு தள்ளுவார். இப்போ இவ்வளவு பெரிய விஷயம் வேற நடந்திருக்கு அப்போ இதெல்லாம் நடக்கிறது தான்" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவள் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவாறு மெல்ல படி ஏறி அவன் அறைக்கு சென்றாள்.

சிகரெட்டை வாயில் வைத்து ஊதிக்கொண்டிருந்தவன் அறையில் கோபம் கொஞ்சமும் குறையாதவனாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

அவனிடம் என்ன கேட்பது என்ன பேசுவது என்று தெரியாமல் அறை வாசலிலேயே தயங்கிய படி ரோஜா நின்று இருக்க..

"ஏன் அங்கேயே நிக்கிற உள்ள வா.. அதான் வாய்ப்பு கிடைச்சதும் என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அத்தனை பேரும் முன்னாடி ஒத்துக்கிட்டயே இன்னும் என்ன தயக்கம் உள்ளே வா" என்று அவளை அழைக்க…

" சின்னையா!! அது.. வந்து.." என்று ரோஜா பேச முயல…

"என்கிட்ட இருக்க பேர், புகழ், பணம், அந்தஸ்து, வசதி, வாய்ப்பு இது எல்லாமே தானாவே உனக்கு கிடைக்கப் போகுதுன்னு பிளான் பண்ணி சுருதி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டதும் சரின்னு சொன்னவ தானே நீ..." என்று வார்த்தைகளை ஈட்டியாய் இறங்கியவன் .

"வா அப்போ இந்த சொத்தோட சேர்ந்து என்னையும் அனுபவிக்கணும்னு தானே என்ன கல்யாணம் பண்ணி இருப்ப" இன்று வாசலில் நின்றிருந்தவளை கைபிடித்து அறைக்குள் இழுத்தவன் மெத்தையில் தள்ளிவிட்டு அவள் மேல் படுத்தவன்

"இது தானே உனக்கு வேணும். சொல்லு என்ன பிளான் பண்ணி என்னை நீ கல்யாணம் செய்த்துகிட்டே... இப்ப உனக்கு என் கூட குடும்பம் நடத்தனும் அவ்வளவு தானே. நான் வீட்டுக்கு வராம எதுவும் பண்ண மாட்டேன்னு பிடிவாதமா இருந்தேன்னு சுருதி சொன்னா.." என்றவன் "சொல்லு என்னை கடிக்கணுமா கடிக்க... " என்று அவள் கையை பிடித்து தன்னை வளைத்து பிடிக்க வைத்தவன் .

"என் கூட படுக்கணுமா? " என்றவன் அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே...

"இதுதானே உனக்கு வேணும் . நான் என்ன செய்யணும்னு சொல்லு.. அதை எல்லாம் நான் செய்றேன் உனக்கு.. இந்த ஊர் உலகத்துக்கு முன்ன நீ என் பொண்டாட்டின்னு பெருமையா காட்டிக்கணுமா? எப்படியோ என் வீட்ல வேலை செஞ்சிட்டு இருந்த பாப்பாவோட பொண்ணு என்னை கல்யாணம் செய்துட்டு ஒரே நாள்ல பணக்காரி ஆகிட்ட .. வாய்ப்பு கிடைச்சதும் சரின்னு நீயாவே வந்து என்னை கல்யாணம் செய்துக்கறேன்னு வந்து வெக்கமே இல்லாம சொல்ற... இந்த சின்ன வயசுல எப்படி இநத அளவுக்கு பிளான் பண்ணின . " என்று அவள் கழுத்தில் இருந்து சிந்துவின் முகம் கீழே இறங்க...
 
Top