- Joined
- Oct 6, 2024
- Messages
- 307
மறுநாள் காலையில் நீண்ட நேரம் கழித்து தான் எழுந்தான் சித்து அதுவும் அவன் போன் விடாமல் அடித்துகொன்டே இருந்ததால் தான் தூக்கம் களைந்து எழுந்திருந்தான்.
கண்களை கூட திறக்க முடியாமல் தூக்கக் கலக்கத்திலேயே அமர்ந்து இருந்தான். சித்துவின் மொபைல் முழுவதும் அடித்து ஓய்ந்திருக்க... நின்ற மறுநிமிடமே மீண்டும் போன் ஒலிக்க ... கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டு கட்டிலில் தன் மொபைலை தேடினான்.
கையில் அகப்பட்ட போனை எடுத்து யார் என்று கூட பார்க்காமல் காலை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.
"சித்து!! எவ்ளோ நேரமா டா உனக்கு போன் பண்றது . மணியை பாரு எவ்ளோ ஆச்சுன்னு இன்னும் என்ன செய்துட்டு இருக்க.. இன்னிக்கு நீ லண்டன் கிளம்பனும் உனக்கு நியாபகம் இருக்கா? இல்லையா? உனக்கு. " என்று அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டு அந்த மகான் விஷ்ணு சித்துவின் நண்பன் , அவனுடைய பெர்சனல் அசிஸ்டென்ட், டச் அப்.. என அணைத்து வேலைகளையும் செய்பவன். இப்பொது மேனேஜர் பொறுப்பில் இருந்து அழைத்தான்.
"டேய்... என்ன டா நீ .. உனக்கு எப்பவும் என் தூக்கத்தை கெடுக்கிறது தான் வேலையா.." என்று சலித்துக்கொண்டே எழுந்தவன் பாத்ரூம் நோக்கி நடந்தான்.
"ஏன் டா சொல்ல மாட்ட ... ஏற்கனவே புக் பண்ணி இருந்த லண்டன் பிலைட்க்கு நேரம் ஆகுதுன்னு எழுப்பி விட்டேன் பாரு என்னை சொல்லணும். எனக்கு என்னனு நான் இருந்திருக்கணும். அப்போ தான் தெரியும் . ஏன் டா இந்த மூவி ப்ராஜெக்ட் கிடைக்கும்னு எவ்ளோ நாள் நீ கஷ்டப்பட்டு இருப்ப.. அந்த ராபர்டை சந்திக்க இந்த மீட்டிங்காக எவ்ளோ நாள் காத்திருந்த.. இப்போ என்னடான்னா உன் தூக்கத்தை கெடுத்துட்டேன்னு என்னை திட்டிட்டு இருக்க.. " என்றான்.
விஷ்ணு சொன்னதும் தான் தான் இன்று லண்டன் கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே வந்தது சித்துவிற்கு.
"OH ! GOD !.." என்று திரும்பி பெட்ரூமில் இருந்த வாட்சை பார்த்தான். மணி 11ஐ காட்டியது. விஷ்ணு பிலைட்டுக்கு இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு " என்றான்.
"12.30 பிலைட் டா.. " என்றான் விஷ்ணு.
"ஓகே ...ஓகே... அப்போ நான் கிளம்பி வரேன் . நீ ஏர்போர்ட் வந்திடு நான் ரெடியாகி நேரா ஏர்போர்ட் வந்துடறேன். இப்போ போனை வெச்சிடவா..." என்றான்.
"டேய்..டேய்... ஒரு நிமிஷம் போனை வெச்சிடாத டா.. நீ மட்டும் தான் ஏர்போர்ட் வரியா "என்றான் அர்ஷ் .
"ஏன் டா லண்டன் போக நான் தானே வரணும். என் கூட நீயும் தானே வர.. "என்றான் சித்து .
"நானும் தான் வரேன் டா... நான் கேட்டது நீ மட்டும் தான் லண்டன் வரியா இல்ல உன் கூட ரோஜாவையும் அழைச்சிட்டு வரியா டா.." என்றான் விஷ்ணு .
"ரோஜா!! " என்று புருவம் சுருக்கியவனுக்கு தனக்கும், ரித்திகாவுக்கும் திருமணம் நடந்திருந்தாள் இந்த நேரம் அவர்கள் இருவரும் தான் லண்டனுக்கு ஹனிமூன் செல்வதற்கும், சித்துவின் மீட்டிங்கையும் அட்டென்ட் செய்யலாம் என்று தான் பிளான் செய்து ஏற்கனவே பிலைட் புக் செய்திருந்தான். இப்பொது தான் ரித்திகா இடத்தில் ரோஜா இருக்கிறாளே.. அதனால் தான் விஷ்ணு ரோஜாவை தன்னோடு அழைத்து வரப் போகிறேனா என்று கேட்கறியான் என்று புரிந்தது.
"டேய் யாரும் என் கூட வரல.. நான் மட்டும் தான் கிளம்பி வரேன் நீ போனை வை..." என்றவன். "அபப்டியே ரோஜாவை என் கூட லண்டன் கூட்டிட்டு வராதா இருந்தா அவளுக்கு பிலைட் டிக்கெட் எடுக்கணும் , அதுக்கு முன்ன அவளுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் இருக்கானு பார்க்கணும். லாஸ்ட் மினிட்ல எங்கன்னு போய் அவளுக்கு டிக்கெட் எடுப்ப... கொஞ்சம் உன் மூளையை யூஸ் பண்ணு சரியா "என்றான்.
"டேய் சித்து நீ ரோஜாவை உன்கூட கூட்டிட்டு வரேன்னு மட்டும் சொல்லு மத்ததை எல்லாம் நான் பார்த்துகிறேன் " என்று இவ்வ்ளவு நேரம் ஸ்பீக்கரில் போட்டு போன் பேசிக்கொண்டு இருந்த விஷ்ணுவின் போனில் இப்போது ஸ்ருதி பேசினாள் .
அவள் குரலைக் கேட்டதும் ஷாக் ஆன சித்து "ஏய்! ஸ்ருதி! நீ ... "என்று சித்து குழப்பமாக பேச..
"நானே தான் நான் தான் விஷ்ணு கிட்டே ரோஜாவை உன்னோட லண்டன் கூட்டிட்டு பொறியான்னு கேட்க சொன்னேன் " என்றாள் ஸ்ருதி.
"ஸ்ருதி நான் விஷ்ணுகிட்டே சொன்னதை எல்லாம் நீயும் கேட்டுட்டு தானே இருந்த.. ரோஜாவை எப்படி என்னோட அழைச்சிட்டு போவேன் " என்றான் .
"அதை பத்தி எல்லாம் நீ ஏன் கவலை படுற "அதை நான் பார்த்துக்கிறேன் . நீ ரோஜாவை உன்னோட கூட்டிட்டு போக முடியாததுக்கு என்னென்ன காரணம் சொன்னியே அதை எல்லாம் நான் பாத்துக்கிறேன் " என்று ஸ்ருதி போனை துண்டித்தாள்.
"ஸ்ருதி!.. ஸ்ருதி.. " என்று சித்து பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் போனை துண்டித்து இருந்தாள் .
"இவளோட ரொம்ப தொல்லையா போய்டுச்சு எனக்கு. நான் எப்படி என்னோட அவளை கூட்டிட்டு போக முடியும். அவளே சரியான தத்தி .. பட்டிக்காடு.. அங்க லண்டன்ல வந்து என்ன பண்ண போறா அவ.. என்னை கல்யாணம் செய்துகிட்டா உடனே என்கூட ஊர் சுத்த கிளம்பிருவாளா ... " என்று நினைத்தவன் .
"முதல்ல குளிச்சிட்டு கீழ போய் ரோஜாகிட்டே ஸ்ருதி லண்டன் வரதை பத்தி பேசினா முடியாதுன்னு சொல்ல சொல்லணும் " என்று நினைத்தவன் அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்தவன் குளித்துவிட்டு உடை மாற்றி கீழே வர...
நேற்று உடைத்து நொறுக்கி.. அழகான ஹாலை அலங்கோலம் செய்திருந்தவனுக்கு இன்றும் அதே போல சுத்தம் செய்யப்படாமல் அப்படியே இருக்க.. அதை பார்த்ததும் நேற்று அவன் செய்த செய்யல் அனைத்தும் நினைவுக்கு வர,... கூடவே ரித்திகாவும், ரோஜாவும் வந்தார்கள்.
"இப்படியேவா ஹாலை சுத்தம் செய்யாம இருப்பாங்க. அவளால செய்ய முடியாலையின்னா வேளைக்கு வந்திருக்குறவங்ககிட்டே சொல்லி காலை சுத்தம் செய்ய சொல்ல வேண்டியது தானே.. இதை கூட செய்யாம என்ன சேரா இவ .. " என்று யோசித்தபடி கீழே இறங்கி வர..
சித்து வரும் சத்தம் கேட்டு கிச்சனில் புதிதாக வந்திருக்கும் வேலையாள் வெளியே ஓடி வந்தான் .
அவனை பார்த்ததும் "நீங்க.. " என்றான் தெரியாமல்.
"தம்பி உங்க அம்மா தான் இங்க வேளைக்கு என்னை அனுப்பி வெச்சாங்க. உங்களுக்கும், ரோஜா மேடேமுக்கும் என்ன வேணுமோ கேட்டு செய்ய சொன்னாங்க "என்றார்.
"ஓ.. ஓகே உங்க பேரு " என்றான்.
"வடிவேல் தம்பி " என்றார் பவ்வியமாக.
"சரி, ரோஜா எங்க? ஏன் ஹால் கிளீன் பண்ணாம அப்படியே இருக்கு.." என்றான்.
" தம்பி மேடம் இன்னிக்கு காலேஜ் இருக்குன்னு காலையில 8.30 மணிக்கே கிளம்பிட்டாங்க. " என்றவர் .
"நான் காலையில் நேரமே வந்துட்டேன் . ரோஜா மேடெம் தான் எனக்கு கதவே திறந்து விட்டாங்க அப்போவே நான் ஹாலை பாத்துட்டு கிளீன் பண்ண கேட்டேன். ஆனா மேடம் தான் இதை சகிளீன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என்றார் வடிவேலு.
WHATSAPP CHANNEL
FACEBOOK GROUP LINK
TELEGRAM