sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
ரத்தனிடம் தன் அம்மா தான் கால் செய்தார் என்று பொய் சொல்லி அவன் சைட்டில் இருந்து கிளம்பிய சாத்விகா . சிறிது தூரம் தள்ளி வந்து மீண்டும் தனக்கு வந்த நம்பருக்கு கால் செய்தாள் .

"என்ன மேடம் கொடைக்கானல் குளிரில் உன் புருசனும் நீயும் ஒரே கும்மாளமா இருப்பிங்க போல.. சொன்ன வேலையை முடிக்காம நிஜமாவே பொண்டாட்டியா மாரி உன் புருசனுக்கு.. அதான் அந்த ரத்தனுக்கு விழுந்து விழுந்து சேவகம் செய்விங்க " என்று ரத்தனின் சித்தப்பா மகன் குணா நக்கலாக கேட்டான்.

போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது குரல் தன் பின்னால் இருந்து வருவதை உணர்ந்ததும். குணா அவளை தேடி கோடைகானலுக்கே வந்துவிட்டானா என்று யோசித்தபடி திரும்பி பார்க்க ..

அவள் பின்னால் காதில் இருந்த போனை எடுத்து கட் செய்துவிட்டு சாத்விகாவை பார்த்து கையை காட்டிக்கொண்டே அவளிடம் வந்தான்.

"என்ன மீதம் எப்படி இருக்கீங்க.. பாத்து ரொம்ப நாள் ஆச்சு " என்றான்.

"ரொம்ப நல்லா இருக்கேன் " என்றவள் "உன்கிட்டே நான் என்ன சொல்லிருக்கேன் என்னை நேர்ல மீட் பண்ணி பேசாத அப்பறோம் ஏதாவது ப்ரோப்லேம் வந்துடும்னு சொன்னேனே.. இப்போ எதுக்கு நீ இங்க வந்த " என்றாள் எரிச்சலாக.

"ஹே !! இது கொடைக்கானல் மா.. யார் வேணா இங்க வரலாம் ,போலாம் . என்னவோ நீ இந்த கொடைக்கானலுக்கு சொந்தக்காரி மாதிரி இங்க எதுக்கு வந்தேன்னு பேசுற.." என்றவன் .

"நான் ஒரு முக்கியமான விஷயமா என் அண்ணனை பார்க்க வந்தேன். அதான் அவனை நேர்ல போய் பாக்குறதுக்கு முன்ன உன்னை மீட் பண்ணி நம்ம டீலிங் எந்த லெவெள்ள இருக்குன்னு கேட்டுட்டு போலாம்னு உனக்கு கால் பண்ணினேன். உன்கிட்டே பேசிட்டே கார் ஓட்டிட்டு இருந்தேன் பார்த்தா நீ ரோட்ல நடந்து போயிடு இருக்க.. அதான் இங்கைஏ வந்துட்டேன்" என்றான் .

"சரி சரி நீ முதல்ல இங்க இருந்து கிளம்பிய யாராவது நம்ம ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்துட்டு போறாங்க " என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே கேட்டாள் .

"அதெல்லாம் எதுவும் நடக்காது இங்க நமக்கு தெரிஞ்சவங்க யாரு இருக்கா .. அப்படியே பார்த்தாலும் அதை நான் சமாளிச்சுக்குவேன் . நீ முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. என் அண்ணனுக்கு உன்னோட சேவகம் எல்லாம் பிடிச்சிருக்கா " என்றான்

" நான் அவனுக்கு செய்யுற சேவகம் உண்மையின்னு நம்பி நீ கேட்டு இருக்கேன்னா நான் எவ்ளோ தத்ரூப நடிச்சு அவனை ஏமாத்துறேன்னு தெரிஞ்சுக்கோ.என்னிக்கும் நான் என்னோட வேளையில் இருந்து விலக மாட்டேன் . இப்போ தான் அவன் என்னை முழுசா நம்ப ஆரம்பிச்சிருக்கான். அவனுக்கு இப்போ நான் இல்லாம எந்த வேலையும் ஓடாது அது வீட்டுலையும் சரி , அவன் வேலையிலையும் சரி . அவனை அந்த அளவுக்கு என் சொல் பேச்சை கேக்குற மாதிரி நான் மாத்தி வெச்சிருக்கேன். சொல்லப்போனா அவனை நான் எனக்கு அடிமை ஆக்கி வெச்சிருக்கேன் " என்றாள் .

"அப்படியா ! அப்போ உன்னோட அடிமைகிட்டே இப்பவே சொல்லி அவன் சம்பாரிச்ச சொத்தை எல்லாம் உன் பேர்ல எழுதி கொடுக்க சொல்ல வேண்டியது தானே.. இன்னமும் ஏன் நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்க நீ " என்றான்.

"நீ சொல்றது மாதிரி கேட்டதும் தூக்கி கொடுக்க அவன் என்ன உன்னை மாதிரி முட்டாளா! அவனா நான் கேட்காமலேயே எனக்கு எழுதி கொடுப்பான். நான் எழுதி கொடுக்க வைப்பேன் " என்றாள் உறுதியாக .

"ஏய்!! சாத்விகா வார்த்தையை அளந்து பேசு .. யாரை முட்டாளுன்னு சொல்ற.. " என்று கோபமாக கேட்டான்.

"உன்னை தான் சொன்னேன் . நான் உண்மையை தானே சொன்னேன். உன்னோட பெரியப்பா பையன் தானே என்னோட புருஷன் . என்னை விட அவனை பத்தி உனக்கு தானே நல்லா தெரியும். உன்னால அவன்கிட்டே இருந்து சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்க முடியாம தான என்கிட்டே வந்த.. அப்போ நீ முட்டாள் தானே " என்று திமிராக பேசிய சாத்விகா .

"இங்க பாரு இப்போ தான் இந்திரன் சாரோட ப்ராஜெக்ட் பாதி முடிஞ்சிருக்கு . எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மாசம் தான் நாங்க இங்க இருப்போம் அதுக்குள்ள அவன் வேலை எல்லாம் முடிச்சிடும் . அந்த ரெண்டு மாசத்துல நான் அவனை மந்திரம் போட்டு கட்டி வெச்சுப்பேன் நான் சொல்றதை எல்லாம் கேக்குற அளவுக்கு அவனை மாத்திருவேன் . நான் ஊருக்கு வந்ததும் உனக்கு தேவையான விஷயம் ஒன்னொன்னா நடக்கும் சரியா " என்றாள் .

"நீ சொல்றதை எல்லாம் நான் எப்படி நம்புறது . என் அண்ணன் லேசுல யாரையும் நம்ப மாட்டானே.. அப்படி இருக்க அப்போ அவன் எப்படி உன்னை நம்புவான்." என்று அவளை சந்தேகமாக பார்த்தான் .

"அப்போ நான் உன்கிட்டே சொன்னதை எல்லாம் நீ நம்பள அப்படி தானே .. " என்றாள் .

"ஆமா .. நான் நம்புற மாதிரி ஏதாவது செஞ்சு காட்டு " என்றான் குணா.

"சரி எப்படியும் நீ ரத்தனை சைடில் போய் மீட் பண்ணுவ தானே... நீ அவன்கிட்டே பேசிட்டு இருக்கும்போதே அவனை உடனே கிளம்பி என்னை பார்க்க வரவழைக்கட்டுமா .. " என்றாள் .

"என்ன செய்ய போற.. ஐயோ !! என்னங்க எனக்கு கால்ல அடிபட்டிருச்சு... காய் வெட்டும்போது கையை கிழிச்சுகிட்டேன். ரத்தம் வருது .. உடம்பு சரி இல்ல அது இதுன்னு சொல்லி அவனை வரவழைக்க போறியா " என்றான்.

"அதெல்லாம் சின்ன பிள்ளைங்க செய்யுற வேலை . அந்த மாதிரி எல்லாம் அவனை பயமுறுத்தி வரவழைக்க வேண்டிய அவசியமே இல்ல.. ஒரு போன் கால் ஜஸ்ட் ஒரே ஒரு போன் கால் போதும். அடுத்த நிமிஷம் அவன் என் முன்னாடி வந்து நாய் மாதிரி வந்து நிப்பான் பாக்கறியா நீ " என்று குணாவிடம் சவால் விட்டாள் சாத்விகா .

"ஓஹோ! அந்த அளவுக்கு நீ சொல்றதை எல்லாம் செய்யுற மாதிரி மாத்திட்டியா! அப்படி என்ன செய்த நீ.. " என்றான் புரியாமல்.

"அதெல்லாம் உனக்கு சொன்ன புரியாது. நீ சின்ன பையன் உனக்கு வயசு பத்தாது சரியா . இது கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம், மந்திரம் எப்படி வேணா எடுத்துக்கலாம் " என்றவள்.

"நீ சைட்டுக்கு போனதும் எனக்கு ஒரு 5 மினிட்ஸ் கழிச்சு மிஸ்ட் கால் கொடு அப்பறோம் பாரு " என்றவள் வரட்டுமா என ஸ்டைலாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

"மந்திரமா .. அபப்டி என்ன மந்திரம் போடப்போறா இவ .. அதையும் தான் பாக்கலாம் " என்று காரில் ஏறி ரத்தனை பார்க்க சென்றான்.

வீட்டுக்கு வந்ததும் நேராக அவள் அம்மாவின் அறைக்கு தான் சென்று பார்த்தாள் . அவர் மாத்திரை போட்டுகொண்டு நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தார்.

நேராக கிச்சனுக்கு வந்தவள் அங்கே அவளுக்கு வீடு வேளைகளில் உதவுவதற்காக சேர்த்து இருந்த சந்திராவிடம் வந்தாள் .

"என்ன அக்கா இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டீங்க.. "என்றாள் கழுவிய பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டே.

"அங்க வேலை முடிஞ்சுது சார் சும்மாவே உக்காந்துட்டு இருக்குறதுக்கு வீட்டுக்கு வந்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன் " என்றாள் சாத்விகா.

"சரி அப்போ நீங்க போய் தூங்குங்க நான் வேலையை முடிச்சுட்டு கிளம்புறேன் "என்றாள் .

"நீ இப்போ போய்ட்டு சாங்காலமா வா.. நீ வேலை செய்யுற அப்போ பாத்திரம் உருட்டினா சரியா தூங்க முடியாது. அம்மாவும் எழுந்திருவாங்க " என்று அவளை வீட்டிற்கு போக சொல்ல..

"அக்கா நான் சத்தம் இல்லாம வேலை பாக்குறேனே " என்றாள் .

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீயும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா " என்று அவளை வம்படியாக வெளியே அனுப்பி கதவை தாழிடவும் குணாவிடம் இருந்து மிச்சேது கால் வரவும் சரியாக இருந்தது.

குணா அழைத்ததும் தாழிட்ட கதவை ரத்தனுக்காக திறந்துவிட்டவள் நேராக பெட் ரூமுக்கு வந்து ரத்தனுக்கு போன் செய்தாள் .

முதல் அழைப்பிலேயே போனை எடுப்பான் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது .

குணாவுடன் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்த ரத்தன் சாத்விகா அழைத்ததும் சைலென்டில் போட்டுவிட்டு "சொல்லு குணா என்ன பிரச்சனையினு இவ்ளோ தூரம் வந்திருக்க அதுவும் என்கிட்டே கூட சொல்லாம" என்று சீரியசாக கேட்டான்.

"அது வந்து அண்ணா நம்ம ஆபீஸ்ல... " என்று குணா பேச வர.. இப்பொது மீண்டும் சாத்விகா ரத்தனுக்கு கால் செய்து இருந்தாள் .

இந்த முறை போன் வந்ததும் காலை அட்டென்ட் செய்து "சாத்விகா குணா ஏதோ முக்கியமான விஷயமா பேசணும்னு வந்திருக்கான். அவன்கிட்டே பேசிட்டு உனக்கு திரும்ப கால் பண்றேன் " என்று சொல்லிவிட்டு சாத்விகா எதற்காக போன் செய்தாள் என்று கூட கேட்காமல் போனை கிட் செய்திருந்தான்.

அதில் அவளுக்கு பயங்கர கோபம் வந்தது. குணாவிடம் ரத்தனை தான் மயக்கி வைத்திருப்பதாக சொல்லிவிட்டு வந்தவள் இப்பொது ரத்தனின் செயலால் மூக்கறுபட்டது போல உணர்ந்தாள்.

"ச்சே .. அந்த குணா ரத்தன் என்கிட்டே பேசாம அவாய்ட் பண்ணணும்னு ஏதாவது செய்திருப்பான். ஒண்ணுமில்லாத விஷயத்தை சொல்லி ரத்தனை டைவர்ட் பண்ணிருப்பான் " என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.

"இன்னிக்கு நைட் அவன் வரட்டும் என் கால்ல விழுந்தாலும் அவனை பட்டினி போடப்போறேன் இன்னிக்கு " என்று ரத்தன் மீது கோபமானாள் .

இங்கே குணா சொன்ன செய்தியை கேட்டதும் ஷாக் ஆன ரத்தன் "சரி அப்போ வா கிளம்பலாம் " என்றான் ரத்தன்.

"அண்ணா என்ன விளையாடுறியா இப்பவே வா கிளம்பனும் " என்றான்.

"இங்க பாரு விஷயம் பெருசாகுறதுக்குள்ள அதை சரி செய்யணும் நீ வா.. " என்று மொபைலை எடுத்துக்கொண்டு குணா வந்த காரில் ஏறினான்.

"அண்ணா அப்போ அண்ணிகிட்டே சொல்லலையா நம்ம சென்னை போறதை " என்றான் குணா.

"போற வழியில் நான் பேசிக்கிறேன் "என்று காரை ஸ்டார்ட் செய்து சென்னைக்கு கிளம்பி இருந்தான் ரத்தன்.

ரத்தன் சென்னைக்கு கிளம்பியது தெரியாமல் இங்கே அவன் இரவு வருவான் என்று அவனிடம் சண்டையிட காத்திருந்தாள் சாத்விகா
 
Top