- Joined
- Oct 6, 2024
- Messages
- 159
"என்ன டா பண்ணி வெச்சிருக்க நீ .. உன்னை நம்பி ஆபீஸ் பொறுப்பை விட்டுட்டு போனா .. நீ ஆபிஸை கவனிக்காம ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு ஊரை சுத்திட்டு இருக்கேன்னு எனக்கு நியூஸ் வருது " என்று தன் சீட்டில் சாய்ந்து கம்பீரமாக அமர்ந்த படி ரத்தன் கபிலனை அதட்டிக் கொண்டு இருக்க...
கபிலனை வசமாக ரத்தனிடம் மாட்டிவிட்ட சந்தோசத்தில் குணா சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி ரசித்துக்கொண்டு இருந்தான்.
"அண்ணா ... அது.. வந்து... "
"என்ன டா .. வந்து போய்யின்னு ... சொல்லிட்டு இருக்க.. எனக்கு வந்த நியூஸ் உண்மையா... உன்கூட சுத்துற அந்த பொண்ணு யாரு?"
"அண்ணா உனக்கு என்னை பத்தி நியூஸ் சொன்ன அந்த கிறுக்கன் என் கூட ஊரை சுத்துற பொண்ணு யாருன்னு சொல்லலையா ... " என்று திரும்பி குணாவை பார்த்தான்.
"டேய் யாரை பார்த்து கிறுக்கன்னு சொல்ற... " என்று கோபத்தில் சோபாவில் இருந்து எழுந்தான் குணா.
"நான் உன்னை சொல்லலையே குணா. என்னை என் அண்ணாகிட்டே வேலை மெனக்கெட்டு கொடைக்கானல் போய் வத்தி வெச்சிட்டு வந்த அந்த கிறுக்கனை தான் சொன்னேன் " என்றான் கபிலன்.
"சரியா நான் கொடைக்கானல் போயிட்டு வந்த வரைக்கும் சரியா சொல்றானே... இவனுக்கு எப்படி தெரியும் " என்று கபிலன் யோசிக்க...
"அண்ணா நீ கொடைகானல்ல இருந்து கிளம்பியதும் எனக்கு உத்தமம் போன் போட்டு சொல்லிட்டான். உன்கிட்டே என்னோட விஷயத்தை சொன்னவன் யாருன்னு எனக்கு தெரியுமே. நானே உன்கிட்டே அந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நல்லவேளை அந்த கிறுக்கன் உன்கிட்டே உண்மையை சொல்லி எனக்கு பாதி வேலையை சுலபமாக்கிட்டான் "
"டேய் அப்போ அண்ணாவை நான் தான் கொடைக்கானல் போய் பார்த்துட்டு வந்த விஷயம் தெரிஞ்சு தான் நீ வேணும்னே என்னை கிறுக்கன்னு சொன்னியா.. " என்று மீண்டும் குணா கோபமாக கபிலனை நோக்கி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனிடம் செல்ல..
"ஆமா டா.. இப்போ என்ன உனக்கு.. அதான் என் அண்ணாகிட்டே போட்டு கொடுத்துட்டியா அப்பறோம் என்ன... " என்றவன் தன் கையில் இருந்த காப்பை முறுக்கிவிட்டவன்.
"ஒழுங்கா இங்க இருந்து கிளம்பி போயிடு.. இல்ல.. எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு உன்னை நான் என்ன செய்வேனே தெரியாது " என்று குணாவை அடிக்க வந்தான் கபிலன்.
"டேய்... டேய்... " என்று பயந்து பின்வாங்கியவன் "அண்ணா பாரு உன் முன்னாடியே என்னை அடிக்க வரான் " என்று சிறுபிள்ளை போல ரத்தனிடம் கம்பளைண்ட் செய்தான்.
"கபிலா.. கொஞ்சம் பேசாம இரு நீ.. பண்றதை எல்லாம் பண்ணிட்டு ஒரு வேலையும் செய்யாம ஊரை சுத்திட்டு இப்போ குணாவை எதுக்கு அடிக்க போற... அமைதியா இரு.. " என்று கபிலனை அதட்டிவிட்டு
"குணா நீ வீட்டுக்கு போ.. போய் பாட்டிகிட்டே நான் வந்திருக்கேன் . இன்னிக்கு நைட் நான் நம்ம வீட்ல தான் தங்க போறேன்னு சொல்லு. அப்டியே எனக்கு நைட் டிபன் செய்துவைக்க சொல்லு " என்றான் ரத்தன் .
"நீ சொன்னதுக்காக நான் அமைதியா போறேன் அண்ணா... " என்று டேபிளில் இருந்த தன் மொபைலை எடுத்துக்கொண்டு குணா செல்ல போக...
"இல்லேன்னா .. என்ன கிழிச்சிருவியா... எதுவா இருந்தாலும் என் கிட்டே நேரடியா கேட்காம . சின்ன பையன் மாதிரி மிஸ்.. மிஸ்.. என்னோட சாக்லேட்டை திருடிட்டான் ... என் பென்சிலை திருடிட்டான்னு கொடைக்கானல் போய் கம்பளைண்ட் பண்ணிட்டு வந்துட்டு பேஸ்ரியா டா.. " என்று கபிலன் மீண்டும் எகிறிக்கொண்டு குணாவும் செல்ல...
குணா வேகமாக கபிலனை விட்டு விலகி ரத்தனிடம் சென்றவன் "இங்க பாரு நான் ஒன்னும் இல்லாததையும் பொல்லாததையும் அண்னன் கிட்டே சொல்லலையே .. நீ பண்ணிட்டு இருக்க அட்டூழியத்தை தானே அண்ணாகிட்டே சொன்னேன்." என்று விடாமல் குணாவும் பேச...
"ரெண்டு பேரும் இப்போ பேசாம இருக்க போறிங்களா? இல்லையா ? " என்று கர்ஜித்த ரத்தன் .
"குணா நீ கிளம்பு முதல்ல . கபிலங்கிட்டே நான் பேசிக்கிறேன் " என்று அவனை அனுப்பி i வைத்தவன் .
"டேய் யாரு டா அந்த பொண்ணு.. நான் உன்கிட்டே என்ன சொல்லிருக்கேன் . உனக்கு லைப்ல என்ன விஷயம் நடந்தாலும் நீ நேரா என்கிட்டே தானே முதள்ள வந்து சொல்லணும்னு சொல்லி இருக்கேன். என்கிட்டே வந்து அந்த குணா கம்பளைண்ட் பண்ற அளவுக்கு விஷயத்தை பெருசாக்கி இருக்க... நல்ல வேலை அவன் என்கிட்டே வந்து சொன்னான். இதுவே நம்ம வீட்ல சொல்லி இருந்தா என்ன ஆகும் நினைச்சு பாரு. அம்மா என்ன செய்வாங்கன்ணு உனக்கு தெரியும் தானே. " என்று கபிலனை அன்போடு அதட்டினான்.
"அண்ணா நானே உன்கிட்டே என் லவ் சக்ஸஸ் ஆனதும் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். இவ்ளோ நாளா நாயா பேயா அலைஞ்சு...திரிஞ்சு என் லவ்வை ரெண்டு நாள் முன்ன தான் ஓகே பண்ணினேன். அந்த சந்தோசத்துல நானும், அவளும் நேத்து தான் முதல் முறையா பீச்சுக்கு போனேன். அதுக்குள்ள இவன் கண்ணுல எப்படி மாட்டிகிட்டேனேன்னு தான் எனக்கு தெரியல.. "என்றான் கபிலன்.
"சரி அதை எல்லாம் விடு டா... நீ லவ் பண்ற பொண்ணு யாரு டா.. நான் கேட்டா தான் எனக்கு இண்ட்ரோடியுஸ் பண்ணி வைப்பியா.. என் கண்ணுல எல்லாம் உன் லவ்வரை காட்ட மாட்டியா? " என்றான் ரத்தன்.
"என்ன அண்ணா இப்படி கேக்குற... ஒரூ ஒரு மணி நேரம் நீ வெயிட் பண்றியா.. அவளை நம்ம ஆபிசுக்கே வர சொல்றேன் " என்றவன் தன் மொபைலை எடுத்து "ஓய் ஆரஞ்சு மிட்டாய் எங்க டி இருக்க... "
"நான் வீட்ல தான் இருக்கேன் "
"சரி நீ உடனே கிளம்பி ஆபிசுக்கு வரியா "
"..."
"என்ன டி .. அமைதியாகிட்டே.. என் அண்ணா உன்னை பார்க்கணும்னு சொல்லறாரு. அவர் இங்கே உன்னை பார்க்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு . சீக்கிரம் கிளம்பி வா "
"ம்ம் சரி... வரேன் "
"ஓகே பை டி ஆரஞ்சு மிட்டாய் பாத்து பத்திரமா வா.. "
"ம்ம்ம் சரி " என்றாள் அவன் காதலி வெட்கத்தோடு .
"ம்ம்ம்.. என்னையே மிஞிறுவான் போல.. அவன் லவ் பண்ற பொண்ணை இப்பவே இப்படி கொஞ்சுறான். " என்று பெருமூச்சு விட்ட ரத்தனுக்கு இப்பொது தான் சாத்விகாவிடம் விஷயத்தை சொல்லாமல் சென்னை வந்தது நினைவில் வர... அவளிடம் பேச போனை எடுத்து டைல் செய்தான்.
"மறுமுனையில் போன் அட்டென்ட் ஆனதும் எழுந்து அங்கிருந்து நகர்ந்து தனியே வந்தவன் "டேய் பம்பரக்குட்டி என்ன டா பண்ணிட்டு இருக்க... " என்று ரத்தன் பேசியதும் தான் தாமதம்.
ஏற்கனவே அவள் குணாவிடம் போட்ட பெட்டில் தோத்துவிட்ட கடுப்பும்.. அதன் பிறகு ரத்தனின் ஆப்ஸில் இருந்து வெளியே வந்த மறுநொடி ரத்தணும் , தானும் கொடைக்கானலில் இப்பொது இல்லை. இருவரும் சென்னையில் இருக்கிறோம் என்று விபரம் சொல்லி சாத்விகாவை வெறுப்பேற்றி இருக்க...
ரத்தன் மீது இப்பொது சாத்விகா செம்ம கோபத்தில் இருந்தாள் . ரத்தனின் குரல் கேட்ட அடுத்த நொடி சாத்விகா பேசியதில் அவன் காதில் இருந்து ரத்தம் வழியத்துவங்கி இருந்தது.