Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 18

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 18

by Layas Tamil Novel
129 views

அயோக்கியன் 18

முன்பு இருந்த ஹோட்டலை விட இப்பொது தங்கி இருக்கும் வில்லா மிகவும் பிரமாண்டமாகவும், அதே சமயம் பாதுகாப்பாகவும் இருந்தது.

அவரவருக்கு ஒதுக்கி இருந்த அறைக்குள் அனைவரும் தஞ்சம் புகுந்து இருக்க.. ராக்கி மட்டும்  அந்த வில்லாவை சுற்றி நோட்டமிட்டபடி நடக்க.. அங்கே வந்த அவனுடைய கார்ட்ஸ் “சார் ” என்று அவனிடம் போனை நீட்டினான்.

அதை வாங்கி காதில் வைக்க.. “ராக்கி! என்ன டா நான் புக் பண்ணின ஹோட்டலை விட்டு வேற பக்கம் தங்கி இருக்கீங்கன்னு எனக்கு நியூஸ் வந்துச்சு” என்றார் சிவராஜன்.

“ஹா! அது அப்பா, அங்க யாருக்கும் கம்போர்ட்டா இல்லன்னு சொன்னாங்க அதான் இடம் மாத்திட்டேன்” என்று பொய் சொன்னான்.

“சரிப்பா ” என்றவர். “நீங்க இந்தியா வந்த அப்பறோம் 1 வாரம் கழிச்சு இங்க பிரச்சாரத்தை ஆரம்பிக்கணும். அதுவுமில்லாம அப்பா ஒரு முடிவு எடுத்திருக்கேன்”என்றார்.

“என்னப்பா”என்றான் ராக்கி “அது நீ இங்க வந்த அப்பறோம் நான் சொல்றேன் ” என்றவர். “இனி நீ எனக்கு துணையா நான் போற பக்கம் எல்லாம் அடியாள் மாதிரி வரக்கூடாது. என் மகனா என்கூடவே இருக்கனும்” என்றார்.

“அப்பா அதெல்லாம் சரி தான். ஆனா நான் வராம இருந்தா உங்க பாதுகாப்பை யார் பாக்குறது” என்றான் .

“அதுக்கு நான் வேற ஆள் பாத்துட்டேன்ப்பா” என்றார்.

“பாத்துட்டீங்களா? யாருப்பா?” என்றான் சற்று அதிர்ந்து.

“அவன் ஒரு சுறா, நம்ம பரமசிவம்கிட்டே வேலை பாத்தவன்” என்றார் சிவராஜன்.

“அப்பா! அவனா? அவனை எதுக்கு உங்களுக்கு கீழ வேலை பாக்க சேர்த்திருக்கிங்க” என்றான் சற்று கோபமும் பதட்டமுமாக.

“எல்லாம் காரணமா தான் சொல்றேன்ப்பா ” என்றார்.

“அப்பா!” என்றவனை “நீங்க இங்க வந்ததும் பேசிக்கலாம் ப்பா..” என்றார் சிவராஜன்.

அதற்கு மேல் அவரிடம் பேச முடியாது என்று நினைத்தவன் ஆர் உடல் நலனையும், செல்வியை பற்றியும் விசாரித்துவிட்டு போனை வைத்தான்.

இங்கே போனை வைத்த சிவராஜன் தன் அருகில் கூழை கும்பிடு போட்டு நின்று இருந்த சுறாவை பார்த்தார், “என் மகன் வரட்டும் அப்பறோம் என்ன செய்யணும்னு அவன் வந்து சொல்லுவான். அது வர நீ நான் கட்சிக்கு போற அப்போ , செல்வி எங்கையும் வெளியே போனா அவகூட பாதுகாப்புக்கு நீ கூட போ ” என்று அங்கிருந்து சென்று விட்டார்.

“சரிங்க ஐயா!” என்று அவரை அனுப்பிவிட்டு வந்து அந்த வீட்டை நின்ற இடத்திலேயே நோட்டம்விட்டான்.

அப்போது மேலே மாடியில் இருந்து இறங்கி வந்தவரை பார்த்தான் வேலுவின் அம்மா பாக்கியம் தான் வந்தார், வந்தவர் ஹாலில் நின்று இருந்த சுறாவை பார்த்துவிட்டு “தம்பி யாருங்க நீங்க, ஐயாவை பார்க்கணுமா?” என்றார்.

“இங்க புதுசா வேளைக்கு ஐயா தான் என்னை சேர்த்தாருங்க, அவரு இப்போ தான் உள்ள போனாரு” என்றான்.

“ஓ! சரிங்க தம்பி ” என்றவர்.

“அண்ணி! அண்ணி! கோவிலுக்கு போலாம்னு சொன்னிங்க, எத்தனை மணிக்கு கிளம்பட்டும் ” என்று கேட்டுக்கொண்டே கிட்சன் பக்கம் சென்றார் பாக்கியம்.

“யாரு இந்த அம்மா எனக்கு தெரிஞ்சு இந்த வீட்ல அந்த கிழவனும் , அவன் பொண்டாட்டியும் மட்டும் தானே இருக்கறதா செய்து வந்துச்சு. இது யாரு புதுசா “என்று யோசித்துக்கொண்டிருக்க..

“அம்மா! அம்மா! ” என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்தாள் ஹரிணி.

குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய சுறா அங்கே சிரித்த முகமாக உள்ளே துள்ளிக்குதித்துக் கொண்டு வந்த ஹரிணியைப் பார்த்தான்.

“யாரு டா இந்த குட்டி செம்மையா இருக்கா” என்று நினைத்தபடி அவளை பார்க்க..

உள்ளே வந்த ஹரிணியோ “யாரு டா இவன் ” என்ற ரீதியில் பார்த்துக்கொண்டே அவனைக் கடந்து செல்ல..

“ஹலோ யாரு நீ.. உன் பாட்டுக்கு உள்ள போற.. இது CM வீடு இப்படி தான் உள்ள வருவியா” என்று அவளை வழி மரித்திருந்தான் சுறா.

அவனை திரும்பி முறைத்தவள் “நீ யாரு முதல்ல திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழைஞ்சு மாதிரி நடு வீட்ல நின்னுட்டு இருக்க ” என்று பதிலுக்கு அவளும் கேட்க.

“ஏய்! யாரை பார்த்து நாயின்னு சொன்ன…” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவளிடம் வந்தான் சுறா.

“ஏய் உன்ன பாத்து தான் சொன்னேன்” என்றவள் “செக்கியூரிட்டி.. செக்கியூரிட்டி… இந்த ஆள் யாரு? இவனை யாரு உள்ள விட்டது ” என்று சத்தம் போட..

அவள் சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து செல்வியும், பங்கஜமும் வர.. செக்கியூரிடியும் வந்து இருந்தான்.

“யாரு இந்த ஆளு நம்ம வீட்டுக்குள்ள விட்டிருக்கிங்க, நடு வீட்ல நின்னுட்டு சுத்தியும் அவன் நோட்டம் விட்டுட்டு இருக்கான் அதை எல்லாம் பாக்காம நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க” என்று அதிகாரமாக அவள்  கூற..

“ஏய்! ஹரிணி  என்ன டி இது எங்க வந்து அதிகாரம்  பண்ணிட்டு இருக்க ” என்று அவளை அதட்டினார் பங்கஜம்.

“அம்மா! ஏன் நான் அதிகாரம்  பண்ண கூடாதா?” என்றவள் “அத்தை நீங்க சொல்லுங்க நான் உள்ள வரேன் இவன் ஹால்ல நின்னுட்டு நம்ம வீட்டையே சுத்தி சுத்தி குறுக்குன்னு பார்த்துட்டு நின்னான். ஏற்கனவே மாமாவை போட்டுத்தள்ள ஆளுங்க எல்லாம் முயற்சி பண்ணி இருக்காங்க. இந்த நேரத்துல இவனை பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு, அதான் செக்கியூரிட்டியை கூப்பிட்டேன்” என்றாள்.

“தப்பே இல்ல ஹரிணி நீ அவர் மேல இருக்க அக்கறையில தான் கேட்டிருக்க. ஆனா நீ நினைக்குற மாதிரி சுறா ஒன்னும் மோசமானவன் இல்லம்மா . நம்ம வீட்டுக்கு வேளைக்கு வந்திருக்கான் அவன்” என்றார் செல்வி சிரித்துக்கொண்டே.

“சுறாவா!”என்று திரும்பி அவனை நக்கலாக பார்த்தவள். “இவனை ஏன் அத்தை வேலைக்கு சேர்த்திங்க ஆளை பாக்கவே ஒரு மார்க்கமா இருக்கான் ” என்று சுறாவை மேலிருந்து பார்த்தாள்.

அவளை சுறா முறைக்க.. “என்ன டா என்ன முறைக்குற” என்று ஹரிணி அவனிடம் முறுக்கிக்கொண்டு செல்ல..

“ஐயோ! இல்ல நான் எதுவும் பண்ணலையே ” என்று கூழை கும்பிடு போட்டான்,

“ஹரிணி ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்க நீ , நாம இருக்குறது சம்பந்தி அம்மா வீடு. அடக்கி வாசி டி..” என்று அவளை வாய் அடக்கினார் பங்கஜம்.

“விடு பங்கஜம் சின்ன பொண்ணு இப்படி சுதாரிப்பா இருக்குறது தான் நல்லது” என்றவர்.

“சுறா நீ வெளியே இருப்பா ஒரு அரை மணி நேரம் கழிச்சு நாங்க கோவிலுக்கு போகணும் நீ எங்க கூட வா” என்றார்.

“சரிங்க அம்மா ” என்றவன் ஹரிணியை முறைத்துவிட்டு வெளியேற..

“அத்தை எனக்கு அவனை கண்டாலே சரி இல்லேனு தோணுது நீங்க மாமாகிட்டே சொல்லி அவனை வேலையை விட்டு போக சொல்லிருங்க”என்றாள்.

“அதெல்லாம் ஐயா பாத்துப்பார் ஹரிணி , நீ காலேஜ் போனியே இன்னிக்கு எப்படி போனது” என்று கேட்டுக்கொண்டே அவளை உள்ளே அழைத்து செல்ல..

“யாரு இவ வந்ததும் வராததுமா இந்த துள்ளு துள்ளு துள்ளுறா. சமயம் கிடைக்கட்டும் இவ வாலை ஓட்ட நறுக்குறேன்” என்று நினைத்துக்கொண்டே வெளியேறி இருந்தான் சுறா.

இங்கே மாலதீவ்ஸில் ஹனிமூன் வந்த ஜோடிகள் சற்று மூட் அவுட்டில் தான் இருந்தனர். காலையில் நடந்த சம்பவம் அப்படி.

திகழினி அங்கே மூடப்பட்டு இருந்த நெருப்பில் குளிர் காய்ந்தபடி சுற்றி இருந்தவர்களை பார்த்தாள். “இப்போ என்ன நடந்திருச்சுன்னு எல்லாரும் இப்படி உம்முனு இருக்கீங்க. நமக்கு தான் எதுவும் ஆகளையே . அப்பறோம் என்ன ” என்றாள்.

“நமக்கு எதுவும் ஆகலைக்குறது சந்தோசம் தான் ஆனா ஒருத்தன் உயிரை எடுத்துட்டு எப்படி இவ்ளோ சாதாரணமா இவனால் இருக்க முடியுதுன்னு தான் எனக்கு தெரியல” என்று ராக்கியை முறைத்துக்கொண்டு கேட்டாள் ரதி.

மதுவை அருந்திக்கொண்டிருந்தவன் “ஏய் என் தங்கச்சி புருஷனை ஒருத்தன் கொல்ல வந்திருக்கான் . அவனை பார்த்துட்டு சுடாம வேடிக்கை பாக்க சொல்றியா டி.” என்று போதையில் பேசினான்.

அவனை முறைத்தவள் “வேடிக்கை பாக்க சொல்லல, அவனை ஏதாவது பண்ணி பிடிச்சிருக்கலாம் இல்ல.. அதை விட்டுட்டு அநியாயமா அவனை கொன்னிருக்க ” என்றாள் கடுப்பாக.

“என்ன டி அறிவில்லாதவ மாதிரி பேசுற. அவன் நம்மள கொல்ல வந்திருக்கான் அவனுக்கு இறக்கப்பட்டது இருக்க” என்று எழுந்து அவளிடம் குரலை உயர்த்திக்கொண்டு வந்தான் ராக்கி.

அவனை எழுந்து வந்து பிடித்துக்கொண்ட வேலுவும், ராக்வவும் “சும்மா இருங்க மச்சான் ” என்று அவனை அடக்கினர்.

“விடுங்க அவனை என்ன பண்ணிருவான் நானும் பாக்குறேன்” என்று நெஞ்சை நிமிர்ந்துகொண்டு ரதி அவனை முறைக்க..

“விடுங்க டா என்னை இன்னிக்கு இவளை நான் சும்மா விடுறதா இல்ல.. எல்லாரும் பாதுகாப்பா இருக்கோம்னு நினைக்காம என்கிட்டே வந்து சண்டை போட்டுட்டு இருக்கா… ” என்று வேலு , ராகவ்விடம் இருந்து கையை உதறிவிட்டு ரதியிடம் வந்தவன் “என்ன டி .. என்ன டி பண்ணுவ..  ” என்று அவனும் எகிற..

“ஐயோ! அண்ணி இப்போ எதுக்கு தேவை இல்லாம என் அண்ணன்கூட சண்டை போடுறீங்க, அவன் நம்மள காப்பாத்த தானே இதெல்லாம் செய்றான் ” என்று ஓவியா ராக்கிக்கு பரிந்து பேச..

“முதல்ல அடி தடி . வெட்டுக்குத்துன்னு திரிஞ்சான். இப்போ என்னடான்னா கொலை செய்யுற அளவுக்கு போய்ட்டான் . இவனை இப்பவே வலிக்கு கொண்டு வரலன்னா அப்பறோம் கஷ்டம் ஓவி.” என்றவள் “என்ன டா பண்ணுவ நீ தப்பு பண்ணினா நான் அபப்டி தான் சண்டை போடுவேன். உன்னை நிக்க வெச்சு கேள்வி கேப்பேன்” என்று அவனை இடித்துக்கொண்டு ரதி நிற்க..

“இவள.. ” என்று கையில் இருந்த மொத்த மதுவையும் குடித்து முடித்தவன் கிளாஸை கீழே வீசிவிட்டு அவளிடம் வந்தவன் ரதியையே இமைக்காமல் பார்த்தான்.

அவன் ரதியை எங்கே அடித்து விடுவானோ என்ற ரீதியில் மற்றவர்கள் பார்க்க.. ஆனால்  அவனோ “நீ என்ன வேணா பேசிக்கோ செல்லம் நீ என்னை திட்டுனா எனக்கு சந்தோசமா இருக்கு ” என்று குனிந்து அவள் முகத்தை பிடித்தவன் ரதியின் இதழில் முத்தமிட்டு இருக்க..

அவன் என்ன செய்வானோ என்று பார்த்திருந்தவர்கள் ரதியை ராக்கி முத்தமிடவும் சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொண்டனர்.

அதுவரை எகிறிக்கொண்டிருந்த ரதியோ அவன் முத்தத்தில் அடங்கி போய் இருந்தாள்.

“இனி இங்க இருந்தா உன் அண்ணன் ரொமான்ஸ் பண்றதை எல்லாம் லைவா பார்க்க வேண்டி இருக்கும் நீ வா நாம போகலாம் ” என்று ஓவியாவை இழுத்துக்கொண்டு ராகவ் செல்ல,,

“திகழோ ராக்கி கிச் அடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தவள் “ம்ஹும்.. என்னாமா கிச் அடிக்குறான் என் அண்ணன் ” என்றவள் திரும்பி அவள் அருகே சற்று தள்ளி இருந்த வேலுவை பார்த்தாள்.

அவனோ அவளை முறைத்துவிட்டு “இதைப் போய் இப்படி பாக்குற ச்சி வா..”என்று அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured