அயோக்கியன் 23
மறுநாள் காலை சிவராசனின் கட்சி ஆபிஸே கலை கட்டி இருந்தது.
தோரணங்கள் ,அலங்காரங்கள் என்று அந்த இடமே ஒரு திருவிழா போல பரபரப்பாக இருந்தது.
“என்ன ராமசாமி ரொம்ப சந்தோசமா இருக்க போல. ” என்றார் ஒரு கட்சி மெம்பெர்.
“ஆமா டா முத்து , நம்ம ஐயாவுக்கு அடுத்து யாரு இந்த கட்சியை வழி நடத்தப்போறாங்கன்னு நினைச்சு நான் ரொம்ப கவலைப் பட்டேன். ஆனா இன்னிக்கு அவர் புள்ளையே இந்த கட்சியோட பொறுப்பை ஏத்துகிறதை கேட்டதும் இருந்து எனக்கு பயங்கர சந்தோசம் ” என்றார்.
“இங்க பாரு ராமசாமி , சொல்றனேன்னு தப்பா நினைக்காத.. அந்த ராக்கி ஐயாவோட பையனா இருக்கலாம். ஆனா ஆரம்பத்துல இருந்தே அவன் ஒரு ரௌடி. அப்படிப் பட்டவன்கிட்டே இந்த கட்சி பொறுப்பை, அதுவும் தலைவர் பொறுப்பை அய்யா இப்படி அல்வா தூக்கி கொடுக்குற மாதிரி இல்ல அந்த ரௌடிப்பயல் கிட்டே கொடுத்திருக்கார். அவனுக்கு இந்த அடிதடி , வெட்டு குத்து தவிர வேற என்ன முழுசா தெரியும் சொல்லு” என்று ஆத்திரம் தாங்காமல் பொங்கினான்.
“நீ ஏன்ப்பா அப்படி எல்லாம் நினைக்குற.. நம்ம ஐயாவுக்கு அவர் பையன் மேல முழு நம்பிக்கை இருக்கு. ராக்கி நிச்சயமா நமக்கு நல்லது தான் செய்வான்” என்றார்.
“ஏதோ நீ சொன்ன மாதிரி நடந்தா சரிதான். கட்சிக்கும் நமக்கும் நல்லது நடந்தா சந்தோசம் தான்” என்றவன். “ நம்ம கட்சியோட தலைவனா அந்த ராக்கியையும் செயலாளரா அவர் மருமகன் வேலுவயும் ஐயா நியமிச்சுருக்காரு. அந்த ராக்கிக்கு பதிலா வேலுவையே நம்ம கட்சி தலைவரா போட்டு இருக்கலாம். அந்த வேலு தம்பி கொஞ்சம் பொறுமையா, பொறுப்பா இருக்கும். அந்த ராக்கி கையில கட்சி வந்து என்ன பாடுபடப் போகுதோ” என்றார்.
“வேலு தம்பியும் தங்கமான பையன் தான். ஆனா ராக்கி பொறுப்பேத்த பிறகு கட்சியை வழி நடத்துறதைப் பார்த்துட்டு அப்பறோம் நீ சொல்லு..” என்று ராக்கியின் மீதிருந்த நம்பிக்கையில் ராமசாமி அந்த உறுப்பினரிடம் அடித்துக் கூறினார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் வெடிச்சத்தமும் மேலதாள சத்தமும் கேட்க. “ராமசாமி நம்ம ராக்கி… இல்ல இல்ல கட்சித் தலைவர் வந்துட்டாரு போய் பார்ப்போம்” என்று அழைக்க..
இருவரும் அவசரமாக மடித்து கட்டிய வேஷ்டியை கீழே இறக்கி விட்டபடி வாசலை நோக்கி வெளியே ஓடினர்.
கட்சி வாசலில் நின்று வெளியே பார்க்க..
திறந்த வெளி ஜீப்பில் ராக்கி நின்றிருக்க அவன் அருகில் வேலூவும் நின்றிருந்தான். இருவருக்கும் சமமாக மாலை மரியாதைகள் கொடுக்கப்பட்டு உரிய மரியாதையோடும் அவர்களை வரவேற்றனர்.
ஜீப்பை விட்டு கீழ் இறங்கிய ராக்கியும் வேலுவும் கம்பீரம் நடை போட்டு மாலையும் கழுத்துமாக நடந்து வந்தனர்.
ராக்கி டேனிம் ஜீன்ஸ் பிளாக் பேண்டும், வெள்ளை நிற கதர் சட்டை அணிந்திருந்தான். கண்களில் பிராண்டட் கூலர்ஸ் போட்டிந்தான். கழுத்தில் மாலையுடன் நடக்க..
அவனுக்கு பின்னே நீல நிற ஜீன்ஸ் அணிந்து, ராக்கியைப் போலவே கதர் சட்டையும், கூலர்ஸும் போட்டுக்கொண்டு வேலுவும் வந்தான்.
இருவரையும் வாசலிலேயே நிற்க வைத்து கட்சி மகளிர் அணி மெம்பெர்கல் ஒன்றிணைந்து இருவரைக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றனர்.
உள்ளே வந்த ராக்கியை இதுவரை சிவராஜன் இருந்த அறைக்கு அழைத்து சென்றார்கள்
அவனோ அந்த அறைக்கு செல்ல மறுத்துவிட..
அனைவரும் புரியாமல் அவனைப் பார்த்தனர். “அந்த அறை என் அப்பா மாதிரி CM ஆஹ் யார் வரங்களோ அவங்களுக்கானது. நான் வெறும் இந்த கட்சியை நிர்வகிக்குற பொறுப்புல தான் இருக்கேன். நீங்களும், மக்களும் யாரை CM போஸ்டிங்கல உக்கார வெட்கப்போறிங்களோ அவங்களுக்கு சேர வேண்டிய இடம் அது” என்று பிடிவாதமாக அந்த அறையை தனதாக்கிக்கொள்ள மறுத்துவிட்டான் ராக்கி.
அவனுக்கு என்று வேறு அறை சடுதியில் ஏற்பாடாகிவிட..
வேலுவோ ராக்கி அவன் பொறுப்பை ஏற்ற பின் தான் தனக்கான இடத்திற்கு சென்றான். அதுவும் அவனை ராக்கியே அழைத்து சென்று அங்கு அமர வைத்தான்.
அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி அவரிடம் ராக்கியை பற்றி நம்பிக்கையில்லாமல் பேசிய கட்சி ஆளிடம் திரும்பி “நான் சொன்னனே என்ன ஆச்சு இப்போ . பாரு ராக்கி எப்படின்னு.. ” என்று பெருமையாக கூறினார்.
“நீ சொல்றதும் சரிதான் பெருசு..” என்று அவர் சொன்னதை ஆமோதித்தார்.
கட்சிப் பொறுப்புகளை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்து இருந்தான், நீண்ட நேரம் கழித்து அங்கு சிவராஜன் சென்றார்.
தன் மகனையும், மருமகனையும் தான் நினைத்தது போல கட்சி பொறுப்புகளில் அவர்களை அமர வைத்ததில் அவருக்கு பெருமையே..
தன் கேபினுக்கு வந்தவர் கட்சி உறுப்பினர்களையும், முக்கியமானவர்களையும் அழைத்துப் பேசியவர் “எனக்கு எப்படி எல்லாரும் ஆதரவு கொடுத்து நம்ம கட்சியை இவ்ளோ தூரம் கொண்டு வரதுக்கு உதவுனீங்களோ அதே போல ராக்கிக்கும், வேலுவுக்கும் நீங்க பக்க பலமா இருக்கனும்” என்றார் .
“என்னங்க ஐயா இத நீங்க சொல்லனுமா? நாங்க இருக்கோம் ஐயா” என்றார் கட்சி ஆள் ஒருவர்.
“ரொம்ப சந்தோசம் ப்பா” என்று சிரித்தார் சிவராஜன்.
சிறிது நேரத்தில் அவர் கிளம்பிவிட..
ராக்கியும் , வேலுவும் மாலை வரை ஆபிசில் இருந்தவர்கள் பின் வீட்டிற்கு கிளம்பி இருந்தனர்.
ராக்கி வெளியே வரும்போதே அவன் மொபைல் அடித்தது. எடுத்து பார்த்தான் ஓவியா தான் அழைத்து இருந்தாள்.
அட்டென்ட் செய்து காதில் வந்தவன் “சொல்லு ஓவி” என்றான்.
“அண்ணா! எங்க இருக்க?”என்றான்.
“இப்போதான் கட்சி ஆபிசில் இருந்து வீட்டுக்கு கிளம்பறேன் ஓவி, ஏன்? எதுவும் வேணுமா உனக்கு” என்றான்.
“எனக்கு எதுவும் வேணா அண்ணா. நானும் , ராகவ்வும் அப்பாகிட்டே சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பினோம். அப்போ அண்ணியும் எங்க கூட வீட்டுக்கு வரேன்னு இங்க கிளம்பி வந்துட்டாங்க” என்றாள்.
“அங்கையா? ” என்றவன் “இவளை என்ன தான் பண்றது. இப்படி கோபமும் பிடிவாதமுமா இருந்தா நான் என்ன தான் பண்ணுவேன் ” என்று நினைத்தவன். “அவ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கா ஓவி” என்றான்.
“அண்ணி முகமே சரி இல்ல . வந்ததும் யார்கூடவும் பேசல நேரா ரூமுக்கு போய் கதவை சாத்திட்டாங்க”என்றாள்.
சற்று யோசித்தவன் “சரி நீங்க யாரும் அவகிட்டே எதுவும் கேட்டுக்க வேணாம். அவ ஏன் அப்படி இருக்கான்னு எனக்கு தெரியும். நான் அப்பாவை பாத்துட்டு அப்பறோம் அங்க வரேன் ” என்று போனை வைத்தான்.
“ம்ஹும்ம்.. என்ன மச்சான் ரதி வீட்ல இல்ல போல.. ” என்று சிரித்தான் அவர்கள் பேசியது கவனித்த வேலு கேட்டான்.
ஜீப்பில் ஏறிக்கொண்டே “ம்ம்.. ஆமா வேலு, அவளுக்கு ஹனிமூன்ல இருந்தே என்மேல கோபம். நான் ஒருத்தனை சுட்டுக் கொன்னேனே அவன் உயிருக்கு நியாயம் கிடைக்குமா.. எனக்கு இந்த பதவி கொடுத்திருக்கவே கூடாதாம். அவ சொல்றா” என்ற சலிப்பாக.
“அது சரி , நீ எப்படி என்ன மச்சான் செய்துட்ட.. நீ மட்டும் அவன சுடல .. இந்த நேரம் ராகவ்வுக்கு என்ன ஆகிருக்கும்னு நினைக்கவே பயமா இருக்கு ” என்று தலையை உலுக்கிக்கொண்டான் வேலு.
“அவளுக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது வேலு” என்று பெருமூச்சுவிட்டவன் “காதலிக்கும்போது எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு, ஆனா என்னிக்கு கல்யாணம்னு ஒன்னு ஆச்சோ அப்போவே எல்லாம் மாறிடுச்சு ” என்றான்.
“சரி விடு மச்சான். உனக்காச்சும் சண்டை போட ஆள் இருக்கு. என்னை நினைச்சுக்க. ஒரே வீட்ல, ஒரே ரூம்ல தான் இருக்கோம்னு பேரு . உன் தங்கச்சி என்னை என்னனு கூட மதிக்க மாட்டேங்குறா . அவளுக்கு இன்னமும் நான் பிஏ தான் ” என்றான் வேலு.
அவன் சொன்னதும் ஜீப் ஒட்டிக்கொண்டிருந்தவன் சட்டென்று வேலுவை திரும்பிப் பார்க்க…
“என்ன பாக்குற உன் தங்கச்சி அப்படி தான் இருக்கா ” என்றான்.
“விடு வேலு. போகப் போக எல்லாம் சரியாகிடும். எதுனாலும் பாத்துக்கலாம்” என்று சொன்னவன். “முதல்ல திகழ் கிட்டே பேசணும்” என்று நினைத்தபடி வீட்டிற்கு காரை செலுத்தினான்.
இங்கே.. பரமசிவம் வயிறு எரிந்து கொண்டு இருந்தார்.
“என்ன டா அந்த சிவராஜன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கான். அவன் கட்சிக்கு தலைவர்னு அந்த ராக்கியை கொண்டு வந்து வெச்சிருக்கான், இவன் கட்சியில எத்தனை பேரு இருக்கானுங்க, அவனுங்களை எல்லாம் விட்டுட்டு இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ” என்று தன் கட்சி ஆட்களுடன் மீட்டிங் போட்டு புலம்பிக்கொண்டிருந்தர்.
“என்னங்கய்யா பண்ணறது, அவர் கட்சியில இருக்க ஒருத்தன் கூட அந்த சிவராஜனோட வார்த்தைக்கு மறுபேச்சு பேசல.. அவர் சொன்னதும் எல்லாம் ஒரு மனதா சம்மதம்னு எழுதி இல்ல கொடுத்து இருக்கானுங்க.. ” என்றார்.
“அப்படி அவன் என்ன தான்யா செஞ்சிருக்கான் கட்சி ஆளுங்களுக்கு . அவன் பேச்சை மீறி எதுவும் செய்யாம இருக்கானுங்க.. ” என்றார் பரமசிவம் கடுப்பாக.
“அதான் எங்களுக்கும் தெரியல” என்றார் ஒருவர்.
“ஐயா நீங்க தப்பா நினைக்கலையின்னா நான் வேணா உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லட்டும்ங்களா” என்றார் ஒரு கட்சி மெம்பெர்.
“சொல்லுய்யா” என்றார் பரமசிவம்.
“அவரு கட்சியில இருக்க சில ஆளுங்களை நாம பேரம் பேசி நம்ம பக்கம் இழுக்க பாக்கலாமா. ஏன்னா இன்னும் 6,7 மாசத்துல எலெக்சன் வரப்போகுது , அவங்க கட்சியில ஸ்ட்ரோங்கா இருக்க நாலு பேரை இந்த பக்கம் இழுத்தா நமக்கு வர தேர்தல்லே ஜெயிக்க உறுதுணையா இருக்குமே” என்றார்.
“இவ்ளோ தானா.. இது வழக்கமா செய்யுற விசயம் தானே , இதுக்கு ஏன் இவ்ளோ தயங்குற.. ” என்ற பரமசிவம் .
“யோவ் உதயா! இங்க வா” என்றார்.
அவர் பின்னே நின்று இருந்த உதயமூர்த்தி வேகமாக அவர் முன் வந்து நிற்க..
“ஏற்கனவே அந்த சுறாவை பாத்து பேசிட்டு வான்னு சொன்னா , அவன்கிட்டே நேர்ல பேச துப்பில்லாம போன் போட்டு பேசி ஒரு மண்ணும் ஆகல.. இந்த வெளியாச்சும் நீ ஒழுங்கா முடிச்சிருவியா” என்றார்.
“சொல்லுங்க ஐயா கண்டிப்பா செய்றேன்” என்றான் உதயமூர்த்தி உறுதியாக,
“அவன் சொன்னதை கேட்டே இல்ல.. அந்த சிவராஜன் கட்சியில அவனுக்கு ரொம்ப நம்பிக்கையான ஆளுங்க சிலரை நம்ம கட்சி பக்கம் இழுத்துட்டு வாய்யா .. இவனுங்களுக்கு எவ்ளோ வேணுமோ கேளு கொடுத்திரலாம்” என்றார்.
“ஐயா! அவர் கட்சி ஆளுங்களையா.. அவனுங்க எல்லாம் ரொம்ப விசுவாசிங்க ஆச்சே” என்று உதயமூர்த்தி தலையை சொறிய..
“யோவ் பணத்துக்கு மயங்காதவன் இங்க யாருய்யா இருக்கா.. அப்படியே பணம் பேசாலையினா இந்த உலகத்துல அவனுங்களை விலைக்கு வாங்க ஆயிரம் வழி இருக்கு . நீ அந்த கட்சியில இருந்து நம்ம கட்சிக்கு எத்தனை பேரை இழுத்துட்டு வரியோ அத்தனை ஆளுங்களுக்கும் சேர்த்து உனக்கு கணிசமா ஒரு தொகை கொடுக்கிறேன் வாங்கிக்க ” என்றார்.
அவர் சொன்னதும் உதயமூர்த்தியின் முகம் ப்ரகாசமாகிவிட.. “அப்போ வேலையை சீக்கிரம் ஆரம்பி .ரெண்டாவது சுத்து பிரசாரத்துக்கு போறதுக்கு முன்ன நம்ம கட்சிக்கு அவனுங்க கட்சி ஆள் வந்திருக்கும்” என்றார் கறாராக.
“செஞ்சிடலாம் ஐயா. இன்னிக்கே வேலையை ஆரம்பிக்கிறேன்” என்று தன் மொபைலை எடுத்துக்கொண்டு அவர் வெளியேறி இருந்தார்.
