News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 21

by Layas Tamil Novel
502 views
A+A-
Reset

வெறியன் 21

மதிய நேரத்து வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்தப் தனியார் பள்ளியின் வாசலில், இரண்டு போலீஸ் ஜீப்புகள் டயர் கிரீச்சிட வந்து நின்றன. சைரன் சத்தம் கேட்கவில்லை, ஆனால் அந்த வண்டிகள் வந்து நின்ற வேகமே அங்கிருந்த செக்யூரிட்டியை மிரள வைத்தது.

முன் சீட்டில் இருந்து கம்பீரமாக இறங்கினான் ஏசிபி ஐராவதன். கையில் இருந்த லத்தியை சுழற்றி, தன் போலீஸ் தொப்பியை நேராக்கியவனின் கண்களில் ரௌத்திரம் தாண்டவமாடியது. காது நரம்புகள் புடைக்க, அவன் நடந்து வந்த வேகத்திற்கு சிமெண்ட் தரையே அதிருவது போல் இருந்தது.

“சிவா! ஸ்கூல் கேட்டைப் பூட்டு. நான் சொல்லாம இங்கிருந்து ஒரு ஈ, எறும்பு கூட வெளிய போகக் கூடாது!” என்று இடிமுழக்கக் குரலில் உத்தரவிட்டான்.

“எஸ் சார்!” என்றபடி கான்ஸ்டபிள் சிவா மெயின் கேட்டை இழுத்துப் பூட்டினான்.

பள்ளியின் வராந்தாவில் ஐராவதன் தன் பூட்ஸ் கால்களால் ‘டக் டக்’ என்று சத்தமிட்டபடி நடந்து வர, பின்னால்  காஞ்சனாவும் ரேணுகாவும் முத்துமாரி மற்றும் அவரது மகள்களை அழைத்துக் கொண்டு வந்தனர்.

வகுப்பறைகளில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் ஜன்னல் வழியாக பயத்தோடு வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

நேராக ஹெட்மாஸ்டர் அறையின் கதவை  திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஐராவதன்.

உள்ளே ஏதோ ஒரு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த 50 வயது காம மிருகம் குணசேகரன், கதவு உடைந்த சத்தத்தில் அதிர்ந்து போய் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

“யார் நீங்க? பர்மிஷன் இல்லாம எப்படி உள்ள வரலாம்? இது ஸ்கூல்…” என்று அவன் கத்த முயல்வதற்குள்,

ஐராவதத்தின் வலது கையில் இருந்த லத்தி, “டமார்!..”  என்ற சத்தத்தோடு குணசேகரனின் மேஜை மீது இருந்த நேம் போர்டை அடித்து நொறுக்கியது.

த்தம் கேட்டு அவன் அப்படியே வாயடைத்துப் போய் நின்றான்.

“ஸ்கூலா? ஸ்கூல் நடத்துறியாடா நீ? இல்லை ஸ்கூல்ங்கிற பேர்ல பொறுக்கித்தனம் பண்றியா?” ஐராவதத்தின் குரல் அந்த ஏசி அறையையும் தாண்டி வெளியே எதிரொலித்தது.

“என்ன தப்பா பேசுறீங்க ஆபீஸர்? மரியாதையா பேசுங்க. நான் யாருன்னு தெரியுமல்ல? மேனேஜ்மென்ட்ல எனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கு தெரியுமா?” என்று குணசேகரன் தன் அதிகாரத் திமிரைக் காட்ட முயன்றான்.

ஐராவதன் நக்கலாக சிரித்தவன். மெதுவாக அவனருகே சென்று, அவன் சட்டைக் காலரைப் பற்றி ஒரே இழுப்பாக தன் பக்கமாக இழுத்தான்.

“உன் செல்வாக்கை தூக்கி உன்…” வார்த்தையை பாதியில் நிறுத்தியவன், “முத்துமாரி அம்மா! உள்ள வாங்க,” என்றான்.

பயந்து நடுங்கியபடி முத்துமாரியும், அவர் பின்னால் பிரகதி, ப்ரக்ருதி இருவரும் உள்ளே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் குணசேகரனின் முகம் வெளுத்துப் போனது.

“இப்போ சொல்லுடா… போன வாரம் பீஸ் கட்ட டைம் கேட்டு இந்த அம்மா வந்தப்போ, ‘பிள்ளைகளை என் ரூமுக்கு வரச் சொல்லு, நான் அட்ஜஸ்ட் பண்றேன்’னு சொன்னியே… அதுக்கு என்ன அர்த்தம்?” ஐராவதத்தின் பிடி அவன் காலரில் இறுகியது.

“சார்… அது… அது சும்மா விளையாட்டுக்கு…” என்று குணசேகரன் திணறினான்.

“விளையாட்டாடா?!” என்றவனுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறியது

அடுத்த நொடி ‘பளார்!!!’ என்று ஐராவதத்தின் இடது கை குணசேகரனின் கன்னத்தில் பாய்ந்தது. அடித்த வேகத்திற்கு அவன் சுழன்று போய் மேஜை மீது விழுந்தான். வாயோரம் ரத்தம் கசிந்தது.

“பிஞ்சுப் புள்ளைங்ககிட்ட விளையாடுறியாடா! உன் வயசு என்ன இந்த குளந்திங்க வயசு என்ன? உனக்கு பேதி வயசு டா அவங்களுக்கு. இதெல்லாம் தெரிஜுக்க வேண்டிய வயசா அவங்களுக்கு.. ” என்று கத்திய ஐராவதன், அவன் சட்டையைப் பிடித்து தூக்கி, தரதரவென்று அறைக்கு வெளியே இழுத்து வந்தான்.

பள்ளியின் மைதானத்தின் நடுவே அவனைத் தூக்கிப் போட்டான். அதற்குள் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும், லஞ்ச் பிரேக்கில் இருந்த மாணவ-மாணவிகளும் அங்கே கூடிவிட்டனர்.

“எல்லாரும் பாருங்க! இவன்தான் உங்க ஹெட்மாஸ்டர். சரஸ்வதி தேவி இருக்க வேண்டிய இடத்துல உட்கார்ந்துகிட்டு, படிக்க வர பெண் பிள்ளைகளோட வாழ்க்கையோட விளையாடப் பார்த்திருக்கான்!” என்று கர்ஜித்தான் ஐராவதன்.

குணசேகரன் எழுந்து ஓட முயல, ஐராவதன் தன் பூட்ஸ் காலால் அவன் நெஞ்சில் மிதித்துக் கீழே தள்ளினான்.

“காஞ்சனா அக்கா! ரேணுகா! இவனோட போனை முதல்ல பறிமுதல் பண்ணுங்க. இதுல இன்னும் எத்தனை பெண் பிள்ளைகளோட போட்டோ, வீடியோ இருக்குன்னு பாக்கணும். இவன் மேல  கேஸ் பைல் பண்ணுங்க.. சாகுற வரை இவன் கம்பி எண்ணமும் !” என்று கத்தினான்.

அடி தாங்க முடியாமல் குணசேகரன், “சார்… என்னை விட்ருங்க சார்… தப்பு பண்ணிட்டேன்…” என்று ஐராவதத்தின் காலைப் பிடிக்க வந்தான்.

காலை உதறிய ஐராவதன், “தப்புன்னு தெரிஞ்சு தானே இவங்ககிட்டே உன் லீலையை காட்டி இருக்க.. உன்னையெல்லாம் சும்மா விடக் கூடாதுடா. உன்னை மாதிரி ஆளுங்களுக்கு சட்டப்படி கிடைக்கிற தண்டனையை விட, இந்தச் சமூகம் தர்ற தண்டனைதான் பெருசா இருக்கணும்,” என்றவன், அங்கிருந்த மாணவிகளைப் பார்த்து,

” இனிமே இந்த ஸ்கூல்லையோ, வெளியிலயோ எந்தவொரு மிருகம் உங்களை தப்பான கண்ணோட்டத்தோட பார்த்தாலும், பயந்து போய் வீட்டுக்குள்ள முடங்கிடாதீங்க. உங்க அம்மா, அப்பாகிட்ட சொல்லுங்க. இல்லைன்னா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க. இந்த ஐராவதன் உங்களுக்காக நிப்பான்!” என்று மாஸாகக் கூறினான்.

மைதானத்தில் இருந்த மாணவிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

முத்துமாரி கண்களில் கண்ணீரோடு ஐராவதனைப் பார்த்தார். பிரகதியும் ப்ரக்ருதியும் தங்கள் பயம் நீங்கி, ஒரு நிஜ ஹீரோவை பார்ப்பது போல் ஐராவதனைப் பெருமிதமாகப் பார்த்தனர்.

“சிவா! வண்டியில ஏத்து இந்த நாயை! லாக்-அப்ல வச்சு இவனுக்கு இன்னும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் இருக்கு,” என்று ஐராவதன் சொல்ல, போலீஸார் குணசேகரனை இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினர்.

ஜீப் கிளம்பும் போது, ஐராவதத்தின் மனதில் ஒரு விஷயம் ஓடியது. ‘போலீஸ் வீடு’ என்று முத்துமாரி சொன்னாரே… அது யார் வீடு? இந்த ஏரியாவில் இருக்கும் பெரிய ஆபீஸர் என்றால்… அது ஒருவேளை தன் அப்பாவின் வீடாக இருக்குமோ?

தன் அப்பாவின் நினைப்பு வரவும், ஐராவதத்தின் கண்கள் கூர்மையாகின.

அன்று சனிக்கிழமை ஈவினிங் ஒரு பார்ட்டி இருந்ததால் அக்னி நேரமே வந்துவிட்டான் நேராக தன் அறைக்கு சென்று குளித்து பிரெஷ் ஆக செண்டிருந்தான்.

தோட்டத்தில் இருந்த மலர்களை ரசித்தபடி உலாத்திக் கொண்டிருந்தாள் பவளமல்லி. அவன் தனக்கு இரவு சாப்பிட எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் மதியம் செய்து வாய்த்த உணவையே தனக்கு இரவு எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

கையில் மொபைலுடன் நடந்தவள் தன் வீட்டில் பேசலாம் என்று தன் அம்மாவிற்கு கால் செய்தாள்.

சிறிது நேரத்தில் காலை அட்டென்ட் செய்த மஞ்சுளா “மல்லி!.. எப்படி டி இருக்க . நீ போன் பண்ணியே ரொம்ப நாள் ஆச்சு” என்றார்.

“ம்ம் ஆமாம் மா கொஞ்சம் வேலை அதிகமாகிருச்சு. அதான் எனக்கு உங்க கூட பேச முடியல. “என்றவள் “எல்லாரும் எப்படி இருக்கீங்க? அப்பாவுக்கு ஹாஸ்பிடல் செக்கப் கூட்டிட்டு போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க ” என்றாள் சற்று கவலையோடு.

“ம்ஹும்.. அவங்க என்ன சொல்வாங்க . நல்லா சத்தான சாப்பிடு கொடுங்க.. உடம்புல அவருக்கு எந்த சக்தியும் இல்லேன்னு திட்டுறாங்க. நானும் நம்மால என்ன முடியுமோ நம்ம வசதிக்கு ஏற்ப அவரை நல்லா தாண்டி கவனிச்சுக்கிறேன். ஆனா அந்த மனுசனுக்கு தான் உடம்பு சரி ஆகவே மாட்டேங்குது, தினமும் பத்தாம் , பிஸ்தாவுக்கு எங்க போறது ” என்று பெருமூச்சுவிட்டவர் “அது எல்லாம் விடு.. இந்த மாசம் உனக்கு சம்பளம் போட்டுட்டாங்களா டி. இன்னும் நீ பணம் அனுப்பவே இல்ல.. உன் அக்கா பனிகிட்டே இருந்து  எந்த போனையும் காணோம் . அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சுனு மட்டும் சொன்னா. அதுக்கு அப்பறோம் பேச்சையே காணோமே டி..”என்றார்.

“அம்மா, நீ சொன்னது போல அவ உன் அண்ணன் மகனையே கல்யாணம் செய்துகிட்டா . அது போலீஸ் வீடும்மா அவளுக்கு யாரும் இல்லேன்னு சொல்லி தான்  கல்யாணம் பண்ணிருக்கா . நினைச்சா நேரத்துக்கு அவளால பேச முடியாது, பொறு அவளே கூப்பிட்டதும்” என்றாள்.

“சரி டி, நான் அவளை தொந்தரவு பண்ணல. அவ சந்தோசமா இருந்தா சரி தான் ” என்றார்.

“அம்மா தேனு எப்படி இருக்கா? ஒழுங்கா காலேஜ் போறாளா ?” என்றார்.

“ம்ம்ம் அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருக்கா டி.. ” என்றவர் “சரி நீ போன காரியம் என்ன ஆச்சு?” என்றார்.

“அம்மா , என்ன அவசரம் இப்போ” என்று சலித்துக்  கொண்டாள்.

“ஏய் என்ன டி நீ.. என் அண்ணன் பசங்க ரெண்டு பேரும் .என் பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கணும். உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு அப்பறோம் தான் நான் என் அண்ணன்கூடவும், என் குடும்பத்துக்கூடவும் சேரணும்னு இருக்கேன் டி.. நீ என்னடான்னா கொஞ்சமும் அக்கறை இல்லாம பேசுற.. உன் அக்கா பனியை பாரு. சொன்னது போல என் அண்ணன் மகன் ஐராவையே கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீயும் எப்படியாவது சின்னவனை கல்யாணம் பண்ணிக்கோ டி. அவனுங்க ரெண்டு பேரும் தங்கமானவனுங்க. சின்ன வயசுல என்கிட்டேயே தான் இருப்பானுங்க ரெண்டு பேரும்” என்றார்.

“அம்மா நீ சொன்ன மாதிரி எல்லாம் என்னால எடுத்தேன் கவுத்தேன்னு வேலை செய்ய முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு..” என்றாள்.

“சரி டி நான் எதுவும் சொல்லல.. எல்லாமே நீயே பாத்துக்க. ஆனா எனக்கு சந்தோசமான செய்தி மட்டும் சொல்லு போதும் ” என்றார் 

“ம்ம்.. சரி ” என்றவள் “எனக்கு பணம் வந்ததும் உனக்கு அனுப்பிட்டு சொல்றேன்”என்று போனை வைத்தவள் பெருமூச்சு விட்டபடி பின்னால் திரும்ப..

அவள் முகத்தை உரசும் நெருக்கத்தில் அவள் அருகே நின்று இருந்தான் அக்னிவரதன்.

அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததுமே அவளுக்கு மூச்சே நின்று   விடும் உணர்வு தான் ஏற்பட்டது.

“ச..சார்..! நீங்க.. ” என்றாள் சற்று பதட்டத்தோடு. இவன் எப்போது வந்தான் தான் இவ்வளவு நேரம் பேசியதை எல்லாம் கேட்டிருப்பானோ.. தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் அவனுக்கு தெரிந்து விட்டதோ..” என்று பயந்தோடு அவனை ஏறிட்டாள்.

“யாரு?” என்றான்.

அவளும் “யாரு?..” என்றாள் புருவம் சுருக்கி.

“போன்ல உன் அம்மாவா ?” என்றான்,

“ம்ம்.. ஆமா” என்று உள்ளுக்குள் எழுந்த பயத்தை மறைத்துக் கொண்டு.

“என்ன சொன்னாங்க…” என்றாள்.

“ம்ம்.. ஒன்னுமில்ல எப்பவும் போல தான்.. ” என்று தோள்களை குலுக்கினாள்.

“சரி உள்ள வா.. ” என்றவன் யோசனையோடு உள்ளே செல்ல,,

அவன் முகத்தை பார்த்தவளுக்கு அக்னி ஏதோ யோசனையில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டவள் . அவன் எதுவும் கேட்டாள் சமாளித்துக் கொள்ளாமல் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் பின்னால் சென்றாள்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.