News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 23

by Layas Tamil Novel
578 views
A+A-
Reset

வெறியன் 23

“அந்த பொண்ணு நல்லா தான் இருக்கா? யாரு டா அது? எப்படி உனக்கு அந்த பொண்ணை தெரியும்” என்றான் சாணக்கியன்

” அது ஒரு பெரிய கதை டா…” என்று பெருமூச்சுவிட்டான் அக்னி.

“பரவால்ல சொல்லு எனக்கு டைம் நிறைய இருக்கு..” என்று அங்கே இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன் அக்னியை ஒரு இருக்கையை காட்டி அமர செய்தான்.

அப்போது அங்கே அவர்களின் தோழி மிருதுளாவும் வந்து சேர..

“வாடி.. வந்துதுடியா?  வந்து இவன் காதல் கதையை நீயும் கேளு..” என்று அவளையும் இழுத்து தன் அருகே அமர வைத்தான் சாணக்கியன்.

“லவ் ஸ்டோரியா!..” என்று ஆர்வமாக மிருதுளாவும் கேட்க..

“சரியா போயிருச்சு போ.. என்னோட லவ்வை நான் இன்னும் அவக்கிடையே சொல்லல ” என்றவன் தூரத்தில் நின்று இருந்த பவளமல்லியை மிருதுளாவிடம் காட்டி விட்டு அவள் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டே.. அமர்ந்தவன். தானும், பவளமல்லியும் முதல் முறை சந்தித்ததில் இருந்து இப்போதுவரை கூறி முடித்த்தான் அக்னி.

“அடப்பாவி.. உன்கிட்டே ரூடா பேசினான்னு ஒரு காரணத்தை வெச்சு அந்த பொண்ணை என்ன பாடு படுத்தி இருக்க நீ.. ” என்றான் சாணக்கியன்.

“டேய் அது அப்போ அவ மேல இருந்த கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன். இப்போ அந்த மாதிரி எல்லாம் நான் எதுவும் செய்றது இல்ல.. அவளை நல்லபடியா தான் பத்துக்கணும்னு நினைக்கிறேன்” என்றான்.

பவளமல்லி அங்கே இருந்த ஒரு டேபிளின் அருகே தனியாக நின்று கொண்டிருக்க, அவளது அழகைக் கவனித்த இரண்டு இளவட்ட பிசினஸ் புள்ளிகள் அவளருகே வந்தனர். அதில் ஒருவன் ஏற்கனவே அவள் வேலை பார்த்த பப்பிற்கு அடிக்கடி வருபவன். அவன் அவளை அடையாளம் கண்டுகொண்டான்.

“ஹேய்… பிரகாஷ்! இவளைப் பாரு… இவ அந்த ‘ப்ளூ பாராடைஸ்’ பப்ல சர்வ் பண்ணிட்டு இருந்த பொண்ணு தானே? அங்க மாடர்ன் டிரஸ்ல செமையா இருப்பா… இங்க என்ன அக்னிவரதன் கூட புடவை கட்டிட்டு ஃபார்மலா நிக்கிறா?” என்று கிசுகிசுத்தான்.

அடுத்தவன் கையில் ட்ரிங்க்ஸ் கிளாஸோடு பவளமல்லியின் முகத்திற்கு மிக அருகில் வந்து, “வாட் அ சர்ப்ரைஸ் பியூட்டிஃபுல்! பப்ல இருந்து நேரா அக்னியோட பெட்ரூம்க்கே புரமோஷன் கிடைச்சிருச்சா? அவனுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவியோ… நாங்க அதைவிட டபுளா தர்றோம். எங்க கூட வர்றியா?” என்று அநாகரிகமாகக் கேட்டு, அவளது மென்மையான கையைத் தொடத் தன் கையை நீட்டினான்.

அவர்களின் அந்தப் பேச்சும், அத்துமீறலும் பவளமல்லிக்கு கோபத்தை தூண்டியது. “வாயை மூடுங்கடா பொறுக்கிகளா! என் மேல கையை வச்சீங்க… அவ்வளவுதான்!” என்று பப்ல வேலை பார்த்த அதே பழைய கெத்தோடும்,தைரியத்தோடும் கத்தினாள்.

ஆனால் தூரத்திலிருந்தே இதை கவனித்த அக்னிக்கு, அந்த எத்தன் அவளது கையைத் தொட முயன்றதும் பொறுமை முற்றிலும் இழந்தது. கையிலிருந்த கிளாஸை மேஜை மீது ‘டமார்!’ என்று அடித்து உடைத்தவன், எழுந்து அவர்கள் அருகே சென்றான்.

அடுத்த நொடி, பவளமல்லியின் கையைத் தொட நீட்டிய அந்த நபரின் கையைப் பற்றி அக்னியின் இரும்புக்கரம் இறுகியது. ஒரே திருகாக அவனது கையை அக்னி முறுக்க, அந்த நபர் வலியால் அலறினான்.

“சார்… சார்… வலிக்குது… கை உடையுது விட்ருங்க…” என்று அவன் துடிக்க,

“என் அனுமதியில்லாம இவள நெருங்குற தைரியம் உனக்கு யாருடா கொடுத்தது?! இவ யாருன்னு தெரிஞ்சுக்கிட்டா பேசுறீங்க?” என்று அக்னியின் குரல் அந்தப் இடத்தையே அதிர வைத்தது. அவனது கண்களில் ரௌத்திரம் கொப்பளித்தது.

“சார்… இவ அந்த பப்ல வேலை பார்த்த சாதாரண…” என்று அவன் பேச முயல,

“வார்த்தையை விட்டா … கொன்னுடுவேன்! இவ அந்த பப்ல வேலை பார்த்தவளா இருக்கலாம். ஆனா இன்னைக்கு இவ இந்த அக்னிவரதனோட ஆள்! இனிமே இவளைத் தீண்ட நினைச்சா உங்க உயிர் இருக்காது! ஓடிடுங்க இங்கிருந்து!” என்று அக்னி அவனைக் கீழே தள்ளி கையை உதற, அந்த இருவரும் பயந்து நடுங்கி அங்கிருந்து ஓடி மறைந்தனர்.

பவளமல்லி அக்னியின் கோபம் கண்டு மிரண்டு போய் நின்றாள். சுற்றிலும் இருந்தவர்கள் இவர்களையே பார்க்க, அக்னி எதற்கும் கவலைப்படாமல் சட்டென்று அவளது இடுப்பில் தன் பலமான கரங்களை வளைத்து, அவளைத் தன் உடலோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

இதை பவளமல்லி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை அதிர்ந்து பார்த்தவள் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்தியவன், “நீ பப்ல வேலை பார்த்திருந்தா என்ன, எங்க இருந்தா என்ன … நீ இப்போ என்னோடவள்! நான் இருக்கும்போது நீ யாருக்கும் பயப்படவோ, இறங்கிப் போகவோ தேவையில்லை,” என்று அவளது நெற்றியில் லேசாக முட்டி, தன் ஆழமான பார்வையை அவளுக்குள் பாய்ச்சினான்.

அவன் பேசியது எல்லாம் உண்மை தானா? தன்னை அவனுடையவள் என்று சொல்வது உண்மைதானா? என்ற ரீதியில் அவள் அவனையே பார்க்க..

“நீ இனி தனியா இங்க இருக்க வேணாம். என்கூட வா…” என்று அவள் கையைப் பற்றி தன்னோடு அழைத்து சென்றான்.

நேராக சாணக்கியன், மிருதுளா இருவரும் இருக்கும் இடத்திற்கு அவளை கூடி வந்தவன் அவர்களை இவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“இவன் பொண்ணுங்க கூட எப்பவும் ஒரு டிஸ்டன்ஸ் மைட்டேன் பண்ணி தான் பழகுவான். பார்ட்டி , பப்புன்னு பொண்ணுங்க கூடத் தான் சுத்துவான் . ஆனா இப்படி யாரையும் உரிமையா எங்கையும் அழைச்சிட்டு வந்ததில்ல.. உனக்கு ஒண்ணுன்னா இப்படி அவன் கோபப்பட்டு பேசினது போல வேற யார் கிட்டேயும் உரிமை எடுத்துக்கிட்டு இத்தனை வருசத்துல நாங்க பாத்ததும்” என்றான் சாணக்கியன்.

“ஆமா மல்லி, உன்கிட்டே அவன் இவ்ளோ உரிமை எடுத்துகிறதை பார்க்க எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு..” என்று மிருதுளாவும் அவனுக்கு நம்பிக்கை பத்திரம் வாசித்தாள்.

அவர்கள் பேசியதை வைத்தே அக்னி தன்னிடம் எவ்வளவு உரிமையும், அக்கறையும் காட்டுகிறான் என்று அவளுக்கு புரிந்து போனது. முதல் முறை அவனை காதலாக பார்த்தாள் பெண்ணவள். அவனோ தலையை அழுந்தகோதிக்கொண்டே.. “கைஸ் ரொம்ப புகழாதிங்க.. ஐ பீல் ஸை..” என்றான் .

“அடேய்.. இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா?” என்று சாணக்கியன் கிண்டல் செய்ய அனைவரும் அவனோடு சேர்ந்து சிரித்தனர்.

அதன் பிறகு, பார்ட்டியில் அவன் அவளை ஒரு நொடி கூடத் தன் கையை விட்டுப் பிரிய அனுமதிக்கவில்லை. அவளது மென்மையான விரல்களைத் தன் கைகளோடு கோர்த்துக் கொண்டே, அங்கிருந்த பெரிய பெரிய விஐபிக்களிடம், “மீட் மை பவளமல்லி… மை ஃபியூச்சர் வொய்ஃப்!” என்று அவளை கௌரவமாக அறிமுகப்படுத்தினான்.

அக்னியின் இந்த அளவுகடந்த காதலும், அவளைத் தன் உயிராய் தாங்கும் பாங்கும் பவளமல்லிக்கு வியப்பைத் தந்தது. தன் அம்மாவின் திட்டப்படி அவனது பணத்திற்காக அவனிடம் நாடகம் ஆட நினைத்த அவளுக்குள், இப்போது அக்னியின் மீதான நிஜமான காதல் அரும்பத் தொடங்கியது. அவனது நெஞ்சுக் கூட்டில் அடைக்கலமானவள் போல அவன் பின்னாடியே நடந்தாள்.

தான் அவனுக்கு துரோகம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு ஒரு பக்கம் அவளை ஆடிப் படைக்க.. இன்னொரு பக்கம் அவன் தன மீது காட்டும் அக்கறையும், பரிவும், காதலும் அவளை அவன் பால் இந்த சிறிது நேரத்திலேயே முற்றிலும் ஈர்த்து இருந்தது.

அதன் பிறகு அக்னிவரதன், பவளமல்லி, சாணக்யன் , மிருதுளா என நால்வரும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டும் மது அருந்திக்கொண்டும் சாப்பிடத் துவங்கினர்.

அக்னி, சாணக்யன் , மிருதுளா மூவரும் மது அருந்தினர், ஆனால் மல்லி சாப்பிட மட்டும் தான் செய்தாள்.

“நீ குடிக்கலையா?” என்றாள் மிருதுளா.

“எனக்கு பிடிக்காது” என்றவள் அக்னியை ஓரக்கண்ணால் பார்த்த படி சொன்னாள்.

அதன் அர்த்தம் புரிந்தவன் அவள் காதருகே குனிந்து “குறைச்சுகிறேன்” என்றான்.

அவளோ மென்மையாக புன்னகைக்க..

“ஏய் மிரு.. இன்னிக்கு காதலிச்சவன் எல்லாம் என் கண்ணு முன்னாடி அவன் ஆளோட ரொமான்ஸ் பண்றான் டி.. ஆனா காலேஜ் படிக்குற காலம் தொட்டு எனக்கு ஒரு பொண்ணு கூட லவ் ப்ரொபோஸ் பண்ணினது இல்ல டி,.”என்று போதையில் உலர ஆரம்பித்தான்.

“உனக்கு ஏன் டா பொறாமை அவனே இப்போதான் லைப்ல ஒரு சரியான முடிவை எடுத்திருக்கான்” என்றாள் மிருதுளா.

“உனக்கு என்ன டா வேணும் இப்போ ஒரு பொண்ணு காதலிக்கும் அப்படி தானே.. ” என்றவன் திரும்பி பவளமல்லியை பார்த்து “இவன் என் திக்ஸ்ட் பிரெண்ட் . ரொம்ப நல்ல பையன்” என்றான்.

“சரி ” என்ற மல்லி அக்னியின் போதை கலந்த விழிகளையும், குளறி பேசும் அவன் அழகை அவளையும் மீறி ரசித்தபடி கேட்டாள்.

“உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா தானே.. ” என்றான்.

“ஆமா.. ” என்று அவனை பவளமல்லி புரியாமல் பார்க்க..

“என்ன டா சொல்ற! மல்லிக்கு சிஸ்டர் இருக்கா.. ” என்றான் சாணக்யன்.

“ம்ம்.. ஆமா டா.. ” என்றவன் “அவ என்ன பண்ணிட்டு இருக்கா?” என்றான்.

“அவ படிக்குறா?” என்றாள் அவள்.

“எங்க படிக்குறா என் ஆளு… ” என்ற சாணக்கியன் அவளை நோக்கி நகர்ந்து ஆர்வமாக கேட்டான்.

“எங்க ஊருக்கு பக்கத்துல இருக்க காலேஜ்ல செகண்ட் இயர் bsc கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குறா” என்று பினாவங்கியபடி அவனிடம் சொன்னாள் .

“என் ஆளு பேரு என்ன?” என்றான் வழிந்தபடி,

பவளமல்லி திரும்பி அக்னியை பார்க்க..

அவனும் சிரித்துக்கொண்டே சாணாக்கியினை தன பக்கம் இழுத்தவன் “பேரை சொல்லிடு இல்லேன்னா விடமாட்டான்” என்றான்.

“தெ.. தேனல்லி” என்றாள்.

“ஆகா… பவளமல்லி.. தேனல்லி ..” என்று சிலாகித்து அவள் பெயரை சொல்லிப்பார்த்தான்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.