Home Uncategorizedஸ்ட்ரெஸ் பால்,எனர்ஜி ட்ரிங்க்ஸ் வேணும்னு… மூர்க்கம் 32

ஸ்ட்ரெஸ் பால்,எனர்ஜி ட்ரிங்க்ஸ் வேணும்னு… மூர்க்கம் 32

by Layas Tamil Novel
65 views

மூர்க்கன் 32

“ஏங்க.. எனக்கு வெளிய எங்கையாவது போகணும் போல இருக்கு கூட்டிட்டு போங்க “ என்று ராவண் முன் வந்து நின்றாள் இளங்கிளி.

 தீவிரமாக பைலில் மூழ்கி இருந்தவன் தலையை நிமிர்த்தி அவளை பார்க்காமலேயே “எங்கடி போகணும் சொல்லு. நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.

“எங்கென்னு எல்லாம் எனக்கு தெரியல ஆனா உங்க கூட எங்கேயாவது வெளியே போகணும் போல இருக்கு. எப்ப பாரு ஜிம், எக்செர்சய்ஸ், இங்கிலீஷ் கிளாஸ் அது இதுன்னு எனக்கு டார்ச்சரா இருக்கு  ஐ வாண்ட் சம் ரிலாக்ஸ்”என்றாள் ஆங்கிலத்தில்.

அவள் ஆங்கிலம் பேசும் அழ 

 கவனித்தவாறு “ரிலாக்ஸ் ஆகணும்னா வெளியே தான் போகணும்னு அவசியம் இல்லையே.  என் கூட ரிலாக்ஸ் பண்ணலாமே” என்றான் பைலை மூடி வைத்துவிட்டு 

“ நீங்கதான் பைலையே கட்டிப்பிடிச்சுட்டு இருக்கீங்க. எப்ப பாரு வேலைன்னு அதுலையே இருக்கீங்க. உங்க கூட எனக்கு நேரம் செலவழிக்கணும் அதனால தான் எங்கேயாவது போகலாமானு கேட்டேன்”  என்றாள்.

“சரிடி ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க இப்படி என் பக்கம் வந்து பேசலாம் இல்ல” என்றான்.

 அவன் சொன்னதும் ஸ்டடி ரூம் வாசலில் நின்றிருந்தவள் மெல்ல எட்டுக்கள் வைத்து அவன் மேஜைக்கு அருகே வந்து நின்றாள்.

“இவ்வளவு தூரம் வரத் தெரிஞ்ச என் பொண்டாட்டிக்கு என் பக்கத்துல வர தெரியாதா… வாடி இங்க” என்றான்.

 “ம்ஹும்… நான் வரல” என்றவள் “உங்க வேலையெல்லாம் மொத்தமா முடிச்சுட்டு வாங்க. எங்கேயாவது போய் யாருமே இல்லாம நீங்களும் நானும் மட்டும் நிம்மதியா.. சந்தோசமா.. இருந்துட்டு வருவோம்.  எனக்கு இதிலிருந்து கொஞ்சம் ரிலீஃப் வேணும்.. எனக்கு உங்க கூட மட்டும் நேரம் செலவழிக்கனும். நீங்க எந்த வேலையும் செய்யாம என்கூட இருக்கணும்” என்றாள் என்றால் 

“உன் கூட இருக்க நான் ரெடி தாண்டி. ஆனால் உன் கூட இருக்கிறப்போ எப்படி என்னால எதுவும் செய்யாம இருக்க முடியும். அது என்னால் முடியாது” என்று இருக்கையில் இருந்து எழுந்து அவளை நோக்கி நடந்து வந்தான்.

“அது மட்டும் செய்யலாம் மத்த எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று முணுமுணுத்தாள்.

 அது அவனுக்கு நன்றாகவே கேட்டது சிரித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் “வர வர நீ ரொம்ப மாறிட்ட. முன்ன மாதிரி எனக்கு பயந்தவள் நீ இல்ல, இப்போ தைரியம் வந்துருச்சு” என்றான்.

“ அப்போ நீங்க என்ன மிரட்டி வச்சிருந்தீங்க உங்கள பார்த்தாலே பயமா இருக்கும் உங்க கூட பழகுன பிறகு தானே நீங்க எவ்வளவு நல்லவர்னு தெரியுது. அதனால எனக்கு பயம் இல்லை” என்றவள். “ப்ளீஸ் வாங்க… கோவிலுக்காவது போயிட்டு வருவோம்”  என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு சினுங்கினாள்.

“இதுவும் நல்லா தாண்டி இருக்கு” என்று அவளை ரசித்தவன் “சரி போய் ரெடியாகு சிணுங்கி.. “கோவிலுக்கு தானே போயிட்டு வருவோம்.. இப்படி சிணுங்கியே என்கிட்டே நீ காரியம் சாதிச்சுக்கிற..” என்றான்.

“ம்ம்.. ம்ம்.. சும்மா சொல்லாதீங்க.. “ என்றவள் “நான் சைலுவுக்கு போன் பண்ணி இன்னிக்கி ஈவினிங் ஜிம்சேஷன் வேண்டாம்னு சொல்லிட்றேன். நம்ம வரதுக்கு லேட் ஆகும் இல்ல” என்றாள்.

“ ஹேய்! இப்படி அடிக்கடி ஜிம்ம ஸ்கிப் பண்ணாதடி. அப்புறம் எப்படி ரொட்டீனா வொர்க் அவுட் பண்றது. உடம்பு எப்படி பழக்குறது இப்பதானே ஒரு ஃபார்முக்கு வந்துட்டு இருக்க நீ..” என்றவன் பார்வை சென்ற இடத்தை கண்டு வெட்கத்தில் கூசிப்போனாள்.

“ அது ஒன்னும் எக்ஸைஸ் செய்யறதுனால மட்டும் இப்படி மாறல, எக்ஸ்சசைஸ் செய்யாம இருந்திருந்தாலும் ஃபார்முக்கு தான் வந்திருக்கும்” என்று வெட்கமும் கிண்டலும் கேலியுமாக அவனைப் பார்த்து பேசினாள்  

அவள் இடையில் கைகோர்த்து தன் பக்கம் இழுத்தவன் “வேற எப்படி தான் பார்முக்கு வந்துச்சாம் இது” என்றான் வேண்டுமென்றே அவளை சீண்டும் விதமாக.

“அது எப்படின்னு உங்களுக்கே நல்லா தெரியும். ஒன்னும் தெரியாத மாதிரி என்கிட்ட கேட்காதீங்க. எனக்கு நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள் வேகமாக அவனை விட்டு விலகி “கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்கு இல்ல. நான் போய் ரெடியாகுறேன்” என்று வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

“ போலாம்.. போலாம்…அது ஏன் இப்படி ஃபார்முக்கு வந்துச்சுன்னு சொல்லிட்டு போயேன்..” என்று அவளை பார்த்து சத்தமாக கேட்டான்.

 “ம்ம்ம்… டெய்லி ஹேண்ட் கிரிப்பர் எக்ஸர்சய்ஸ் ஜிம்லையா பண்றீங்க..” என்றவள் குறும்புப் புன்னகை சிந்தி… “ஸ்ட்ரெஸ் பால் மாதிரி தினம் வந்து வேலை பார்க்க வேண்டியது.. எனர்ஜி ட்ரிங்க்ஸ் வேணும்னு விடாம என்னை படுத்த வேண்டியது… இதெல்லாம் பண்ணினா இப்படி தா பார்ம் ஆகும்.. “ என்று தன் பார்வையை அவன் விழிகளில் இருந்து நகர்த்தி கீழே குனிந்து தன் மார்பளவை பார்த்தபடி சொன்னவள். வெட்கத்தில் சிவந்த முகத்தை அவனிடம் இருந்து மறைக்க எண்ணி வேகமாக அங்கிருந்து ஓடிவிட..

அதைக் கேட்டு சத்தமாக சிரித்தவன் “நல்லா பேச கத்துக்கிட்ட டி நீ.. “ என்றவன் அவள் சொன்னதைக் கேட்டு எழுந்த உணர்வுகளை அடக்க முடியாமல் திண்டாடினான். தலை முடியை அழுந்தக் கோதி தன்னை சமன் செய்து கொள்ள முயன்றான்.

 இது நேரத்தில் இருவரும் கிளம்பி கோவிலுக்கு சென்று விட… வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கயல் வீட்டில் யாரும் இல்லாதது கண்டு வித்யாவிடம் கேட்டாள்.

“சாரும், மேடமும் கோவிலுக்கு போயிட்டு வரேன்னு கிளம்புனாங்க அக்கா. உங்களுக்கு சாப்பிட எதுவும் வேணுமா? கொண்டு வரட்டுமா?” என்றாள்.

“எதுவும் ஜூஸ் இருந்தா போட்டு வைக்கிறியா. ரொம்ப டீ ஹைட்ரேட் ஆன மாதிரி பீலா இருக்கு. நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றாள் கயல்.

“சரி அக்கா நீங்க குளிச்சிட்டு வாங்க அதுக்குள்ள நான் ஜூஸும் சாப்பிட எதுவும் ஸ்னாக்ஸும் எடுத்து வைக்கிறேன்” என்று கிச்சனுக்கு சென்றாள் வித்யா.

கயலும் தன்னறைக்கு பிரஷப்பாக சென்றுவிட.. 

வித்யாவும் கயல் கேட்டபடி ஸ்னாக்ஸ்சும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்து அவளுக்காக காத்திருந்தால்.

சிறிது நேரத்தில் குளித்துவிட்டு மெல்லிய லேசான சேலை அணிந்து வெளியே வந்த கயல் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவர்களை பார்த்தவள் “ யார் இவங்க?” என்ற ரீதியில் அப்படியே நின்றாள்.

ராவண் வீட்டிற்கு வந்த அவன் அம்மா, சித்தி, பாட்டி மூவருமே கயிலை பார்த்ததுமே அவளைப் போலத்தான் கேள்வியாக நின்றனர்.

‘ யாரு இது பொண்ணு புதுசா இருக்கு?” என்று கமலா புருவம் சுருங்க கயலை பார்த்தார்.

 “ஏன் பரிமளா இந்த பொண்ணு புதுசா இருக்காளே… ஐரா புதுசா எதுவும் இவளை வேலைக்கு  சேர்த்து இருக்கானா?” என்றபடி உள்ளே வந்தார் வேதா.

“தெரியலையே  அத்தை” என்றபடி அவரோடு உள்ளே சென்றார் பரிமளா.

மூவரும் கயல் அருகில் வந்து அவளை பார்வையாலேயே மேலும் கீழு அளந்தனர். 

 “யார் இவங்க மூணு பேரும்?”  என்று யோசித்தவள் “மூணு பேருமே பார்க்க ரொம்ப மரியாதையா தெரியுறாங்க. ஒருவேளை சாருக்கு  சொந்தக்காரங்களா இருக்கலாம்” என்று நினைத்தவள் வாங்க என்றாள் பொதுவாக மூவரிடமும்.

 “நாங்க வரது இருக்கட்டும் முதல்ல நீ யாருன்னு சொல்லு” என்றார் கமலா.

“அது நான் கயல்” என்று தயக்கமாக பேசியவள் “என்ன இந்த அம்மா இப்படி பேசுது₹ என்ற ரீதியில் கமலாவை பார்த்தாள்.

“பேரைப் பாரு கையலு… முயலு..வயலுனு..” என்று நக்கல் செய்த கமலா “ ஆமா நீ யாரு?  உனக்கு இங்க என்ன வேலை? இல்ல இதுக்கு முன்னாடி இங்கே நான் பார்த்ததே இல்லையே”  என்றார்.

 தன் பேரை கிண்டல் செய்த கமலாவை முறைத்தவள் “நான் யாருன்னு உங்ககிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் கிடையாது. நீங்க தான் இங்க வந்து இருக்கீங்க முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க” என்றாள் பொறுமை இழந்து.

“ ஏய் யாரடி நீ?.. என்கிட்டயே எதிர்த்து பேசுறியா..”  என்று கமலா சீர.

“ ஏய் கமலா சும்மா இரு” அவரை அதட்டினார் பரிமளா.

“ அக்கா நீங்க சும்மா இருங்க நம்ம வீட்ல இவ இருக்கா. நான் கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாமல் எவ்வளவு திமிரா பேசுற பாருங்க” என்றார்.

“ நம்ம வீடா!” என்று யோசித்த கயல் “ஒருவேளை ராவண் சாரோட அம்மாவா இருக்குமோ.. “ என்று யோசித்தாள்.

 அதற்குள் வித்தியா அங்கே ஓடி வந்தவள் “அம்மா வாங்க..”  என்று மூவரையும் அழைத்தாள்.

“ வரோம் வரோம்…  எங்க மருமகள காணும். வீட்ல வேற யாரும் இல்லையா?” என்றவர் ஒரு கயலை  பார்த்து முறைத்தவர் “இவ யாரு? வந்தவங்ககிட்ட ஒழுங்கா பேசாம திமிரா பேசுறா” என்றார் கமலா.

“ யாரு திமிரா பேசினது.  நீங்கதான் என் பேரை கயலு.. முயலுன்னு கிண்டல் பண்ணீங்க  நீங்க நல்லா பேசினா நானும் நல்லா பேசுவேன். நீங்க கிண்டல் பண்ணா நானும் பதிலுக்கு கிண்டல் பண்ணுவேன்” என்றாள் கயலும் விடாமல்.

கயல் பேசியதை கேட்டு கமலா அதிர்ந்து போனார். “ யார் இவ? இப்படி பேசுறா!” என்று தான் அவருக்கு தோன்றியது.

 அவர் பக்கத்தில் நின்றிருந்த பரிமளாவும், வேதாவும் கமலா அதிர்ந்து நிற்ப்பதைக் கண்டு சிரித்தவர்கள். “ஏய் பேசாம இருடி முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படி தான் வாய் அளப்பியா?”  என்ற வேதா திரும்பி கயலை பார்த்தார் 

“இங்க வாம்மா” என்று கயலை தன் பக்கம் அழைத்தார். அவர் மென்மையாக அழைத்ததும் அருகே சென்றவள். “சொல்லுங்க பாட்டி” என்றாள் பவ்வியமாக.

“என் பேர புள்ள எங்கம்மா? என்  பேத்தியும் காணோமே” என்றார்.

  “ராவண் சார கேக்குறீங்களா?”  என்றாள். “ ஆமாம்  மா எங்க அவங்க” என்றார்.

“சாரும், அக்காவும் வெளியே கோயிலுக்கு போய் இருக்காங்க” என்றாள்.

“நீ யாருமா?” என்றார் வேதா.

“ நான்.. வந்து..”என்று தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது என்று புரியாமல் தடுமாறினாள் கயல்.

“அவ நான் கட்டிக்கப் போற பொண்ணு பாட்டி” என்று வாசலில் இருந்து ராஜ்ஜின் குரல் கேட்டது.

அவன் குரல் கேட்டதும் அனைவரும் திரும்பி வாசலை பார்க்க..

கயலோ அதிர்ந்து அவனைப் பார்த்தால் “இப்படி எல்லார் முன்னாடியும் என்ன நான் கல்யாணம் செய்துக்கிறேன்னு  சொல்லிட்டாரே.. என்ன பிரச்சனை வரப்போகுதோ” என்று பயந்தாள் கயல்.

 “என்னடா சொல்ற! நீ லவ் பண்றியா? இவள கல்யாணம் பண்ணிக்க போறியா? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல. அம்மாகிட்ட இருந்து இது மறைச்சுட்ட..  இல்ல” என்ற கமலா முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள..

“ ஐயோ! இவங்கதான் இவரோட அம்மாவா! அவ்ளோதான் நான்” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டு கமலாவை பார்த்தாள் கயல்.

அவரும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured