News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

எனக்கு இங்க என்னவோ பண்ணுது.. மூர்க்கன் 31

by Sinamika Writes
314 views
A+A-
Reset

MOORKAN 31

இரவாகி விட்டது. வீட்டிற்குள்ளேயே இருக்க மித்ராவுக்கு போர் அடிக்கவும் அவள் ஈஸ்வரிடம் வந்து வெளியே அழைத்து செல்ல சொல்லி நச்சுக்கொண்டே.. இருந்தாள் சிறுபிள்ளை போல..

“சரி சரி .. போலாம் ” என்றவன் தன் டி ஷர்டை எடுத்து போட்டவன். அபார்ட்மெண்டில் இருக்கும் பூங்காவிற்கு மித்ராவை அழைத்து சென்றான் அவளை.

அவன் மெல்ல நடக்க.. அங்கே சற்று இருட்டாக இருந்தது, மித்ராவுக்கு பயமாக இருக்கவும் வேகமாக வந்தவள் ஈஸ்வர் கைக்குள் தன் கையை கோர்த்துக்கொண்டாள்.

அதை கண்டு சிரித்தவன் “என்ன பயமா இருக்கா?” என்றான்.

“ம்ம்.. இங்க இருட்டா இருக்கு..” என்றாள்.

“நான் இருக்கேன் சரியா” என்றான்.

“ம்ம்..” என்றவள் அவனோடு சேர்ந்து தோட்டத்தில் மெல்ல நடந்தாள்.

தோட்டத்தில் இருந்த பூக்களை மித்ரா ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே இருந்த சில பூக்களை பறித்து அதை ஈஸ்வரிடம் காட்டியவள் “இது அழகா இருக்கில்ல ஈஸ்வர்” என்றாள்.

ஈஸ்வர் அவளைப் பார்த்தான். குனிந்து பூவைப் பாத்தான். அவள் முகம் அந்த மாலை வெளிச்சத்தில் சாந்தமாக.. அமைதியாக தெரிந்தது அந்த பூக்களைப் போல..

“உனக்கு இந்த பூ பிடிக்குமா?” என்று கேட்டான்.

“ம்ம். ஆனா இதுவிட…”

“இதுவிட?”

“உன்னை பிடிக்கும். உன்னோட இந்த.. ” என்று சொல்லிவிட்டு திடுக்கிட்டு அவனை பார்த்தாள். “அது… அது.. நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்று பேச வராமல் தடுமாறினாள்.

ஈஸ்வர் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான். பிறகு மெல்ல சிரித்தான்.

“தப்பே இல்ல. சொல்லு.. நீ முழுசா சொல்லவே இல்லையே..” என்றான்.

“ம்ஹும்.. இல்ல.. ” என்று வேகமாக அவன் கையை விட்டுட்டுவிட்டு முன்னே நடந்தாள்.

“மித்ரா!” என்று அவள் பின்னால் சென்றவன். “சொல்லு மித்ரா என்ன சொல்ல வந்தே?” என்றான்,

“ஒன்னுமில்ல” என்று திரும்பாமல் சொன்னவள். அவனை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு வேகமாக நடந்தாள்.

ஈஸ்வர் அவளைத் தாண்டி முன்னால் வந்து நின்றான். அவனை பார்த்ததும் சட்டென தலையை குனிந்து கொண்டாள்.

“மித்ரா என்னைப் பாரு” என்றான்.

“ம்ஹும்.. மாட்டேன்.” என்று தலையை ஆட்டினாள்.

“மித்ரா.” என்றான் மெல்ல..

“ம்ம்..” என்றாள் அவள் ஸ்கர்ட்டை இருக்க பற்றிக்கொண்டு..

அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்குமாறு தூக்கியவன். அவள் முகத்தை பார்த்தான். கன்னம் சிவந்திருந்தது.

ஈஸ்வர் அவள் முகத்தை பார்த்தான். மெல்ல அவள் கன்னத்தை தன் விரலால் வருடினான்,

“இந்த நிறம் ரொம்ப பிடிக்கு” என்றான்.

“என்ன நிறம்?”என்றாள் அவனை பார்த்து கண்கள் உயர்த்தி.

“இப்போ உன் கன்னத்துல இருக்கிற நிறம்” என்று சிரித்தான்.

மித்ரா கை வைத்து கன்னத்தை மறைத்தாள்.

“பாக்காதே ஈஸ்வர்” என்றாள்.

“ஏன்?”

“வெக்கமா இருக்கு.” என்றாள் .

“பரவால்ல… அந்த நிறம் உனக்கு அழகா இருக்கு” என்றான்.

அவளோ மெல்ல அவனை பார்த்து சிரித்தவள் “உன்னோட இந்த சிரிப்பு அழகா இருக்கு.. எனக்கு பிடி.. பிடிச்சிருக்கு” என்றாள் வெட்கபட்டுக்கொண்டே.

அவள் சொன்னதும் சத்தமாக சிரித்தவன் “நீ இவ்ளோ பேசுறதே எனக்கு சந்தோசமா இருக்கு மித்ரா” என்றவன்  அவள் கன்னங்களை பற்றிக்கொண்டு அவள் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றான்.

சட்டென அவன் கையை விலக்கிவிட்டு பின்னால் நகர்ந்தாள்.

“ஹேய்! மித்ரா!” என்று அவளை நோக்கி சென்றான்.

“நீ இப்படிகிட்ட வராதே ஈஸ்வர் எனக்கு இங்க ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.

“ஒரு மாதிரியா? எப்படி இருக்கு?” என்றான் எல்லாம் தெரிந்தும் தெரியாதவன் போல..

“எனக்கு இங்க என்னவோ பண்ணுது ஈஸ்வர்”  என்று அவள் இடது மார்பை தடவிக் காட்டியவள். “இங்கையும்” என்று அவள் வயிற்றை தொட்டுக் காட்டினாள்.

அவள் நிலையை அவனால் உணர முடிந்தது, ஆனால் அவளுக்கு தான் இது அவன் மீது வளரும் காதல் உணர்வு என்று புரியவில்லை.

அவளை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாதவன் “சரி வா உள்ள போகலாம் ” என்றான்.

“ம்ம்.. ஆமா குளிருது எனக்கு..” என்றாள் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு..

அவள் குளிரில் நடுங்குவதை பார்த்தவன் மித்ராவை தன் கை வளைவிற்குள் இழுத்து கதகதப்பாக அணைத்த படி அவர்கள் பிளாட்டிற்கு சென்றான்.

“சரி நீ போய் குளிச்சிட்டு தூங்கு , எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ” என்றான் ஈஸ்வர்.

“நீ குளிக்கலையா?” என்றாள் மித்ரா.

“குளிக்கணும் தான். ஆனா அது இப்போ சரியா? தப்பான்னு எனக்கு தெரியல..” என்றான் அவளை ஆசையாக, ஏக்கமாக பார்த்தபடி.

“குளிச்சா தப்பா ” என்றாள் புரியாமல் அவள்.

“தனி தனியா குளிச்சா தப்பு  இல்ல.. ஆனா ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து குளிச்சாலும் தப்பு இல்ல தான். ஆனா…” என்று மீண்டும் இழுத்தவன் அவளை பார்க்க..

“ரெண்டு பேருமா! ” என்று அதிர்ந்து அவனை பார்த்தாள்.

“ம்ம்.. ரெண்டு பேரும் தான். நீயும், நானும் புருஷன் பொண்டாட்டி தானே.. நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தான் ” என்றான்.

“எல்லாரும் அபப்டி தான் இருப்பாங்களா?” என்றாள்.

“ம்ம்.. ஆமா” என்றான்.

“அப்போ நம்ம பிளாட்ல இருக்க புவினாவும், அவங்க ஹஸ்பண்டும் அப்படித் தான் இருப்பாங்களா?” என்றாள்.

அவள் தோளில் கை வைத்து தன் பக்கம் இழுத்த ஈஸ்வர் மித்ராவின் கண்களை பார்த்து அவங்க மட்டும் இல்ல.. உலகத்துல இருக்க எல்லா புருஷன், பொண்டாட்டியும் ஒருவாட்டியாச்சு ஒண்ணா சேர்ந்து குளிக்காம இருந்திருக்கவே மாட்டாங்க.” என்றான்.

“அப்போ.. நீயும் நானும் ஒண்ணா குளிச்சிருக்கோமா ” என்று கேட்டுவிட்டு சட்டென்று தலையை தாழ்த்திக் கொண்டாள் அவனைப் பார்க்காமல்.

அவள் வெட்கம் அறிந்த ஈஸ்வர் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்கவிட்டவன் “உனக்கு பழசெல்லாம் மறக்குறதுக்கு முன்னையே நீயும், நானும் அவசரமா கல்யாணம் செய்துகிட்டோம். நீ ஹாஸ்பிடல்ல இருந்து வந்த அப்பறோம் என்கிட்ட பயமில்லேன்னு சொன்னியே அப்போதான் நான் உனக்கு பஸ்ட் டைம் கிஸ் கொடுத்தேன். அதை தவிர நமக்குள்ள எதுவும் நடக்கல..’ என்றான்.

முதல் முத்தம் நினைவு அவளுக்கும் வந்து அவள் முகம் சிவந்தாலும் அவனை ஏறிட்டவள். “ஏன் அதுக்கு அப்பறோம் நடக்கல .. ” என்றாள் கேள்வியாக.

“உனக்கு எதுவும் நியாபகம் இல்லாத அப்போ உன்கிட்டே நான் நெருங்கி வரத்து சரியா இருக்காது மித்ரா, உன் பழைய நினைவு திரும்பணும். உண்மையாவே உனக்கு என்னை பிடிக்கணும், நீயும் , நானும் இப்போ இருக்க போல உன்னோட பழைய நினைவுகள் திரும்பின பிறகும் இருக்கனும். அதுக்கு அப்பறோம் தான் எல்லாமே.. ” என்றான்.

அவன் வார்த்தைகளில் இருந்த தெளிவும் , உறுதியும் மித்ராவுக்கு புரிந்தது போல தோன்றியது. அவன் கையை பற்றி தன் கன்னத்தில் ஒற்றிக்கொண்டு அப்படியே நின்றாள்.

ஈஸ்வரும் அவளை தடுக்கவில்லை. சிறிது நேரம் அப்படியே நின்றவன் “சரி நீ போய் பிரெஷாகிட்டு வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்” என்றான்.

“ம்ம் சரி.. ” என்று உள்ளே குளிக்க சென்றுவிட்டாள் மித்ரா.

அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் மற்றொரு அறையில் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வந்து வேளையில் மூழ்கினான்.

மித்ராவும் குளித்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தவள். கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்தாள் லேசாக அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. அதற்கு காரணம் ஈஸ்வர் .அவனை நினைத்து அவன் பேசியதை நினைத்து சிரித்தாள்.

ஒரு சாடின் நைட் கௌன் அணிந்தவள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

ஈஸ்வரும் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்தவன் மித்ராவை பார்த்தான். அந்த நைட் கௌனில் தேவதை என் ஜொலித்தாள் அவள். அவனால் அவளிடம் இருந்து தன் பார்வையை விளக்கிக்கொள்ளவே முடியவில்லை.

கை இல்லாத முட்டி வரை மட்டுமே இருந்த அந்த கௌன் அவன் கவனத்தை மேலும் ஈர்த்து இருந்தது. எச்சிளைக் கூட்டி விழுங்கியவன் எழுந்து அவள் அருகே வந்தான்.

மித்ராவுக்கு ஸ்ஸ்வர் அவள்  அருகில் நெருங்கி வர.. இதயம் தட்,.. தட்.. என்று அடித்தது.

இதயமும், இமைகளும் படபடக்க அவனைப் பார்த்தாள்.

தலை ஈரமா இருக்கு துவட்டளையா?”என்று அவளை உள்ளே அழைத்து சென்றவன் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அவளை அமர வைத்து ஹேர் ட்ரையர் போட்டுவிட்டு கூந்தலை காய வைத்தான்.

“சரி தூங்கலாமா?” என்றான் இன்னமும் ஏக்கம் குறையாமல்

ஆனால் அதை மித்ராவால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

“ம்ம் சரி  என்றவள் எழுந்து வந்து படுத்துக்கொள்ள.. அவளுக்கு போர்த்திவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து தானும் அவள் அருகில் படுத்துக்க கொண்டான்.

சிறிது நேரம் அமைதி இருவருக்கும் இடையில். படுக்கையில் இருவரும் படுத்திருந்தார்கள். மித்ரா கூரையை பார்த்தபடி இருந்தாள்.

“ஈஸ்வர்.”

“ம்.”

“தூக்கம் வரல.”

“ஏன்?”

“தெரியல. ஏதோ தோணுது.”

“என்ன தோணுது?” என்று அவன் பக்கவாட்டில் திரும்பி அவளை பார்த்தான்.

மித்ரா தயங்கினாள். “நீ .. நீ என்னை விட்டுட்டு போயிடுவியா?” என்றாள்.

ஈஸ்வர் ஒரு கணம் அவளை பார்த்தான். “ஏன் அப்படி கேக்கிற?”

“தெரியல. பயமா இருக்கு.”

அவன் மெல்ல எழுந்து அவள் அருகில் சாய்ந்து படுத்தவன். அவள் கையை தன் கையில் எடுத்து வைத்தவன்.

” நான் உன்னை விட்டுட்டு எங்கையும் போக மாட்டேன். இது என் சத்தியம். போதுமா?” என்றான்.

மித்ரா அவன் கையை இறுக்கமாக பிடித்தவள்.

“நிஜமா?”

“கண்ணை மூடிக்கிட்டு நம்பு.” என்றான்.

அவளிடம் மவுனம்.

“ஈஸ்வர்.”

“ம்.”

“எனக்கு… உன்னை பிடிக்கும்..”

அவன் மூச்சு ஒரு நிமிடம் நின்றது. மெல்ல “எனக்கும்” என்றான்.

“அது என்ன மாதிரி பீல்?” என்று குழந்தையாக கேட்டாள்.

ஈஸ்வர் அவளை பார்த்தான். அந்த கண்களில் கேள்வி மட்டும் இருந்தது. அப்பாவியான கேள்வி.

“நீ தோட்டத்துல பூவை பார்த்தே இல்ல. அது பூவை எப்படி இருக்குன்னு ஆர்வமா பார்த்தே. அந்த மாதிரி feel” என்றான்.

மித்ரா யோசித்தாள். “நான் பூவா?” என்றாள்.

“நீ தான் பூ. நான் பார்க்கிறவன் மட்டும் தான்.”

மித்ரா கண்களை மூடிக்கொண்டாள். அவன் கையை விடவில்லை.

“ஈஸ்வர்.”

“தூங்கு.”

“ஒரே ஒரு கேள்வி.”

“கேளு.”

“நாளைக்கும் இப்படியே இருப்பியா?” என்றாள்.

அவன் அவள் நெற்றியில் மெல்ல முத்தம் வைத்தவன்.

“நாளைக்கும். நாளைக்கும் அப்புறமும். எல்லா நாளும்” என்றான்.

மித்ரா உதடுகள் மெல்ல வளைந்தன.

கண்கள் மூடின.

மூச்சு ஆழமாகியது.

அவள் நெற்றியில் இருந்து கீழ் இறங்கியவன் அவள் மூக்கு நுனியை தன் மீசையால் உரசி கீழே வந்தவன் அவள் விழிகளை பார்த்தவாறு அவள் இதழோடு தன் இதழை மென்மையாக பொருத்தினால்.

மித்ரா எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. மெல்ல கண்களை மூடி அந்த முத்தத்தை உணர்த் துவங்கினாள். அவள் முத்தம் ஆழமானது.

அவள் உடல் அந்த முத்தத்தின் விளைவால் எழும் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் நடுங்கியது.

அவள் இதழில் இருந்து தன் இதழை மெல்ல பிரித்தவன் “தூங்கு.. ” என்று மித்ராவை தன் கை வளைவிற்குள் வைத்துக்கொள்ள.

மித்ரா உடலை குறுக்கி அவன் கைக்குள் மிதமாக தன்னை சுருட்டியபடி படுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும்விட்டாள் .

ஈஸ்வர் அவளைக் குனிந்து பார்த்தான். “தூங்கிட்டா….” என்றவன்

அவள் கையை விடவில்லை. விட மனசே இல்லை.

இந்த கையை பிடிக்க எத்தனை காலம் காத்திருந்தேன்.

கண்கள் கலங்கின. ஆனால் உதடுகள் சிரித்தன.

காதல் என்பது இதுதான் போலும். வலியிலும் விடாமல் இருப்பது. என்று அவனுக்கு தோன்றியது.

சிறிது நேரத்தில் அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு தன் போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் ராவணுக்கு அழைத்தான்.

தன் ஆபிசில் இருந்த ராவண் ஈஸ்வர் அழைப்பை எடுத்து காதில் வைத்தவன் “சொல்லு ஈஸ்வர், என்ன இப்போ கால் பண்ணிருக்க.. அங்க நைட் இல்ல.. இன்னும் தூங்கலையா நீ.. ” என்றான்.

“தூக்கம் வரல மச்சான். அந்த மோகனையும், அவன் அக்காவையும் எதுவும் பண்ணாம என்னால நிம்மதியா தூங்க முடியாது ” என்றான் கோபமாக,

“அதை நான் பாத்துக்கிறேன். நீ மித்ராவை மட்டும் கவனமா பாத்துக்க அது போதும்” என்றான்.

“ம்ம்.. சரி மச்சான்  “என்றவன் “நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும் மச்சான்” என்றான்.

“ம்ம் சொல்லு..”என்றான் ராவண்.

“மித்ராவும் , நானும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்” என்றான்.

மறுமுனையில் அமைதி நிலவியது.  ராவண் எதுவுமே கேட்கவில்லை, பேசவும் இல்லை.

“ஹலோ ! மச்சான்! இருக்கியா?” என்று ஈஸ்வர் கேட்டான்.

“வாழ்த்துக்கள். சொல்லாம பண்ணிட்ட அது தான் கொஞ்சம் வருத்தம்” என்றான்.

“இங்க ஒரு சிக்கல் அதனால தான் யார்கிட்டேயும் சொல்லாம கல்யாணம் பண்ண வேண்டி ஆகிருச்சு” என்றவன். “நம்ம வழக்கப்படி இன்னும் தாலி எதுவும் கட்டள.. ” என்றவன் அதை அப்பறோம் பாக்கலாம் நான் உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ” என்றான்.

“ம்ம்ம்.. சொல்லு ” என்றான் ராவண்.

“அது வந்து மித்ரா… ” என்றான்.

“சொல்லு மித்ராவுக்கு என்ன?”என்றான் ராவண் சற்று டென்ஷனாக.

“மச்சான் மித்ராவுக்கு இப்போ எதுவுமே நியாபகம் இல்ல.. அவளுக்கு பழசு எதுவுமே நினைவு இல்ல.. .” என்று தொடங்கி அது எதனால் வந்தது அவள் நிலை என்ன என்று ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட ராவண் “சரி நீ அவளை பத்திரமா பாத்துக்க.. நான் உனக்கு சீக்கிரமே கால் பண்றேன்” என்று போனை வைத்த ராவண் தீவிர யோசனையில் மூழ்கினான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.