Home Uncategorizedஎன்னை மொத்தமா சாய்ச்சுட்ட நீ.. மூர்க்கன் 27

என்னை மொத்தமா சாய்ச்சுட்ட நீ.. மூர்க்கன் 27

by Layas Tamil Novel
34 views

மூர்க்கன் 27

“சந்திரிகா மித்ரா எப்படி இந்த ட்ரக்ஸ் எடுத்துகிட்டாங்கன்னு உனக்கு தெரியுமா? எத்னால இந்த பழக்கம் அவங்களுக்கு வந்ததுன்னு தெரியுமா?” என்றார் டாக்டர் கமீலா.

“மித்ரா அந்த பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க அவங்களை அதுல இருந்து மீட்டு கொண்டு வரணும்னு சொல்லி தான் மித்ராவை பாத்துகிற பொறுப்புள்ள என்னை சேர்த்துக்கிட்டாங்க டாக்டர் மத்தபடி அவங்களுக்கு இந்த பழக்கம் எப்படி வந்துச்சு , ஏன் அவங்க இந்த நிலைமைக்கு ஆளானாங்கன்னு அவங்க ஹஸ்பண்ட்கிட்டே கேட்டா தான் தெரியும்” என்றார் சந்திரிகா.

“உங்க கூட ஒருத்தர் வந்தாரே அவரா மித்ராவோட கணவர்” என்றார்.

“எஸ் டாக்டர் ” என்றவள் “நான் அவரை வர சொல்றேன்” என்று வெளியேறினாள்.

சற்று நேரத்தில் உள்ளே வந்த ஈஸ்வர் பதட்டமாக கமீலாவிடம் வந்தான். “டாக்டர் மித்ராவுக்கு என்ன ஆச்சு ? அவ ஏன் யாரோ போல நடந்துகிறா..” என்றான்.

“பதட்டப்படாம உக்காருங்க மிஸ்டர் ஈஸ்வர் அதை பத்தி பேச தான் உங்களை கூப்பிட்டேன்” என்றவர் “மித்ராவின் இந்த பழக்கம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

ஈஸ்வரும் தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவரிடம் தெரிவித்தான்.

அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்ட கமீலா. “ஈஸ்வர் நான் சொல்றதை கவனமா கேளுங்க.. மித்ராவுக்கு நீங்க கொடுத்ததா சொன்ன அந்த மருந்து எல்லாம் ஒண்ணுமே இல்ல.. அது சும்மா அவங்களை ஒரு மயக்க நிலையிலேயே வெச்சிருக்கும் . அதுக்கு முன்ன அவங்க எடுத்துகிட்ட மருந்தால தான் இப்போ பிரச்சனையே..” என்று நிறுத்தினார்.

“என்ன டாக்டர் சொல்றிங்க.. அவ கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து மீண்டு வந்தாளே.. மித்ரா நல்லா தானே இருந்தா” என்றான் குழப்பமாக.

“அவங்க நல்லா இருக்குற மாதிரி தான் தெரியும். சொல்லப்போனா அவங்களுக்கே அப்படி தான் தோணும். ஆனா அவங்களுக்குள்ள இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமா நடந்துகிட்டு தான் இருக்கு. எப்போ மித்ரா வழக்கமா எடுத்துக்கிட்டு இருந்த மருந்தை நிப்பாட்டினாங்களோ அப்போவே இந்த பிரச்சனை அவங்களுக்குள்ள ஆரம்பம் ஆகிருச்சு..” என்றார்.

“டாக்டர் என்ன சொல்றிங்க.. எனக்கு எதுவுமே புரியல..” என்றான் ஈஸ்வர் உச்சபச்ச குழப்பத்துடன்.

“அவங்களுக்கு இப்போ பழசெல்லாம் மொத்தமா மறந்து போயிருச்சு. அவங்க எடுத்துக்கிட்டா மருந்தோட விளைவு இது” என்றார்.

ஈஸ்வர் அதிர்ந்து போனான்.

“டாக்டர் போதை மருந்து எடுத்துக்கிட்டா பழசெல்லாம் மறக்குற நிலைக்கு வருமா? எனக்கு எதுவும் புரியல..” என்றான்.

“மிஸ்டர் ஈஸ்வர், மித்ரா எடுத்துக்கிட்ட மருந்து மார்க்கெட்ல இப்போ புதுசா உலவிக்கிட்டு இருக்க ‘நியோ-ஜென்’ (Neo-Zen). இது சாதாரணப் போதை மருந்து கிடையாது, இது ஒரு ‘சைக்கோ-ஆக்டிவ் நியூரோ பிளாக்கர்’. இதைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது மூளையோட பழைய நினைவுகளைச் சேமிக்கிற பகுதியைப் மெல்ல மெல்லச் செயலிழக்கச் செஞ்சிடும். இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு. சில்வர் டஸ்ட்” என்றார்.

“டாக்டர் அப்போ மித்ராவோட பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வர வழியே இல்லையா?” என்றான்.

டாக்டர் குரலைத் தாழ்த்தி விளக்கினார், “ஈஸ்வர், இந்த டிரக்கோட வேலை என்ன தெரியுமா? இது மூளையோட செல்களை ஒருவிதமான மாயைல வச்சிருக்கும். இந்த டிரக்கை அவங்க உடம்புல ஏத்திக்கிட்டே இருந்தா மட்டும்தான் அவங்களால இயல்பா இருக்க முடியும். ஆனா, இதைக் கொடுக்கக் கொடுக்க அவங்க பழைய நினைவுகள் எல்லாம் ஒரு இருட்டு அறைக்குள்ள போயிட்டே இருக்கும். அதாவது, அவங்க யாருங்கற உண்மையை அவங்களே மறக்கடிக்கச் செய்யுற ஒரு மெதுவான விஷம் இது.”

ஈஸ்வர் தலையில் கை வைத்துக் கொண்டான். “அப்போ இதை நிறுத்தினா என்ன ஆகும் டாக்டர்?”

“அதுதான் பெரிய ஆபத்து. இதைச் சட்டென நிறுத்தினா, அவங்க உடம்பு ‘வித்ராயல் சிம்டம்ஸ்’ (Withdrawal symptoms)னால துடிக்கும். நரம்புகள் எல்லாம் முறுக்கிக்கிட்டு வலி எடுக்கும். அவங்க பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்துவாங்க. ஆனா, அப்படி அந்த வலி தாங்க முடியாத அளவுக்குப் போகும்போதுதான், அந்த இருட்டு அறைக்குள்ள இருக்கிற பழைய நினைவுகள் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பிக்கும். சுருக்கமா சொல்லணும்னா… அவளுக்குப் பழைய நினைவுகள் வரணும்னா, அவ நரக வேதனையை அனுபவிக்கணும். அந்த வேதனையில அவ உயிர் பிழைக்கிறது ரொம்பக் கஷ்டம் ஈஸ்வர்,” என்றார் டாக்டர் கவலையுடன்.

“இப்போ என்ன டாக்டர் பண்றது அந்த ட்ரக்கை எடுத்துக்கிட்டா பழைய நினைவுகள் வரும், ஆனா அவளுக்கு உயிருக்கே ஆபத்துனு சொல்றிங்க.. அதை கொடுக்காம விட்டா அவ கடந்த கால நினைவுகள் மொத்தமா அழிஞ்சிரும்னு சொல்றிங்க இதுக்கு எந்த வழியும் இல்லையா? என் மித்ராவை நான் எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வரது . அவ குணமாகி வரணும். அவளோட வாழ்க்கையை சந்தோஷமா வாழணும்னு நான் ஆசை ஆசைப்பட்டேன். ஆனா நீங்க சொல்றதை எல்லாம் கேக்குற அப்போ எனக்கு அந்த நம்பிக்கையே இல்ல டாக்டர் ” என்றான் ஈஸ்வர் கவலையாக.

“உங்க கவலை நியாயமானத்து தான். ஆனா மித்ரா எடுத்துக்கிட்டு மருந்துக்கு மாத்து மருந்து அதாவது அவங்க எடுத்துக்கிட்டா மருந்தோட வீரியத்தை முறியடிக்குற அளவுக்கு வேற ஒரு மருந்து இருந்தா.. அதை இவங்களுக்கு கொடுத்தா எல்லாம் சரியாகும்னு நம்புறேன்” என்றார்.

“டாக்டர் அப்படி பட்ட மருந்து இருக்கா. எங்க இருக்குன்னு சொல்லுங்க இந்த உலகத்தோடு எந்த மூலையில் இருந்தாலும் அதை நான் என் மித்ரவனுக்காக வாங்கி வரேன்.” என்றான் ஈஸ்வர் ஒரு நம்பிக்கை கிடைத்த சந்தோஷத்தில்.

“ஈஸ்வர் இது தொழில் முறையில் எங்களை மாதிரி டாக்டர்ஸ் உருவாகின மருந்தா இருந்தா இதுக்கு நிச்சயம் சொல்லுசன் என்னனு நானே சொல்லுவேன். ஆனா மித்ரா சாப்ட்டிருக்கிறது ஒரு போதை மருந்து அதுக்கான சொல்லுஷன் அதை தயாரிக்குறவங்ககிட்டே இருக்கலாம்.. இல்ல அந்த மாதிரி மருந்தை விக்கிறவங்க இது போல மருந்தையும் விக்கலாம் ” என்றார்.

“இதை தயாரிச்சது அந்த ரக்ஷனா தானே.. அவ கொடுத்த அந்த மருந்தால் தானே என் மித்ரா இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கா. மருந்தை உருவாகின அந்த ரக்ஷணாகிட்டே தான் நிச்சயம் இந்த நோயை குணப்படுத்துற மருந்தும் இருக்கும் ” என்று யோசித்தவன் அவர்கள் அருகே படுத்திருந்த மித்ராவை திரும்பி பார்த்தான்.

அவ்ளோ இங்கே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சரிங்க டாக்டர் நான் இதுக்கான சொல்லுசன் என்னனு கண்டுபிடிக்குறேன்” என்றவன் “இப்போ மித்ராவுக்கு எந்த விஷயமும் நியாபகம் இருக்காது இல்லையா ” என்றான் கவலையாக.

“ஆமா அவங்களோட மெமரி மொத்தமா அழிஞ்சிருச்சு. அவங்களால பழசை எதுவுமே நினைவுல கொண்டு வர முடியாது. அப்படி ஏதாவது ஒரு வழியில் அது நடந்தா நிச்சயம் மித்ரா இஸ் எ லக்கி கேர்ள்” என்று அவளை பார்த்து சிரித்தார்.

“ம்ம்.. ” என்றவன் சோர்வாக எழுந்து மித்ராவிடம் வந்தான்.

“மித்ரா எழுந்திரு நாம வீட்டுக்கு போகலாம் ” என்றான்,

அவன் அருகே வந்ததும் பயந்து பின்வாங்கியவள் “நீ யாரு? என்னை எதுக்கு உன் வீட்டுக்கு கூப்பிட்ற.. நான் எங்கையும் வரல.. ” என்று அவனோடு செல்ல மறுத்தாள்.

நினைவில்லாத போதும் கூட தன்னை நம்பாமல் , தன் மேல் வெறுப்பு காட்டும் மித்ராவை நினைக்கையில் அவன் இதய மேலும் பாரம் ஆனது.

“மித்ரா என்னை நம்பு நான் ஈஸ்வர். உன்னோட அத்தை பையன் . உனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்க. அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்க . நம்ம சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க ” என்று அவளுக்கு எடுத்து சொன்னான்.

“நீ பொய் சொல்ற.. எனக்கு உன்னை யாருன்னே தெரியாது.. ” என்று அவனோட போக மறுத்தாள்.

அதை பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் “ஈஸ்வர் ஒரு நிமிஷம் இருங்க.. இவங்களுக்கு எதை ணியகப்படுத்துறதும் எந்த பயனும் தராது. அவங்களுக்கு உங்க மேல நம்பிக்கை தானா வரணும். அதுக்கு நீங்க கொஞ்சம் டைம் கொடுங்க.. ” என்றவர் “மித்ராவுக்கு இப்போ நம்பிக்கையா இருக்குற ஒரே ஆள் சந்திரிகா தான் அதனால நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.. போகப் போக.. நீங்க மித்ரா மேல கட்டுரை அக்கறை , அன்பு இதெல்லாம் அவங்க மனசை கொஞ்சம் கொஞ்சமா மாத்தும்” என்றார்.

“அவர் சொல்வதும் சரி தான் என்று அவனுக்கு தோன்றியது.

சந்திரிகா வந்து மித்ராவை தன்னோடு அழைக்க.. மித்ரா அமைதியாக எந்த மறுப்பும் காட்டாமல் அவளோடு கிளம்பினாள்.

இளங்கிளியை திருமணம் செய்து வந்த இத்தனை நாட்களில் அவளை மொத்தமாக மாற்றி இருந்தான். அதற்கு காரணம் அவள் உடற்பயிற்சி செய்வதில் காட்டிய ஆர்வம் தான். அவளால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ராவணுக்கு வர வைத்தது.

காலையில் ஜிம்மில் ஒர்க் அவுட், பிறகு ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி.. இதற்க்கு ஆட்களை வைத்து பயிற்சி கொடுக்கிறான் அவளுக்கு. கணக்கு வழக்கு.. தற்போதைய காலத்திற்கு ஏற்ப.. டச் போன், கம்ப்யூட்டர் உபயோகம் என அவளுக்கு தினமும் அவனே படம் எடுக்கிறான் அது மாலை வேலை தான் அதிகம் நடக்கும். அந்த நேரத்தில் எல்லாம் அவள் மாணவியாகவும், அவன் ஆசானாகவும் தீவிரமாக நடந்து கொள்வார்கள்.

அவள் உடை மாற்றமும் இதில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டது. அதை அவளுக்கு கற்று கொடுப்பதும் அவள் ராவண் தான்.

இன்றும் வழக்கம் போல காலை ஒர்க் அவுட், ஆங்கில படம் எல்லாம் முடித்துவிட்டு குளித்து வந்தவள் பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்து கொண்டு இருந்தாள்.

ராவண் ரெடியாகி கீழே வந்தவன் இளங்கிளியை ரசித்துக்கொண்டே அவளை நெருங்கினான். அவனிடம் ஆரத்தி காட்டி நெற்றியில் பொட்டிட்டவள் “டிபன் ரெடியாயிருச்சு சாப்பிடறீங்களா?” என்றாள்.

“ம்ம்.. ” என்று அவள் இடையை வளைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“என்னங்க இது சாமி ரூம் ” என்றாள்.

“என் சாமி நீ தான் டி .. நீ எங்க இருந்தாலும் உன்னை ஆராதிக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான்.

அவள் வெட்கத்தோடு அவனை பார்த்தவள் “இப்படியே பேசியே என்னை உங்க பக்கம் சாய்ச்சு வெச்சிருக்கீங்க.. ” என்றாள் .

“நீ தான் டி என்னை மொத்தமா சாய்ச்சுட்ட ..” என்றவன் அவள் கையில் இருந்த தட்டை வாங்கி வைத்துவிட்டு “நீயும் சாப்பிடு இன்னிக்கு ஒரு இடத்துக்கு நாம போகணும் ” என்றான்.

“எங்கே” என்று கேள்வியாக அவனை பார்த்தாள்.

“நேர்ல பாத்து தெரிஞ்சுக்கோ.. ” என்றவன் அவளோடு டைனிங் டேபிளுக்கு வர.. அங்க அவர்களுக்கு முன்பே ராஜும்,கயலும் சிறிது பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இங்க என்ன டா பண்ற” என்றான் ராவண் வேண்டுமென்றே..

“அண்ணா அது.. உங்களை பாக்க தான் வந்தேன். நீங்க ரெடியாகிட்டு இருக்கீங்க. அதுக்குள்ள சாப்பிடுங்கன்னு அண்ணி தான் இருக்க சொன்னாங்க.. ” என்று பொய்யை சொன்னான்.

ராவண் திரும்பி அவன் பக்கத்தில் நின்று இருந்த இளங்கிளியை பார்க்க..

“ஐயோ! நான் எதுமே சொல்ல.. ” என்று அவனை வாரி விட்டாள் .

“இந்த அக்காவை நம்பி இந்த லூசு பொய் வேற பேசுது . அவங்க புருசனுக்கு கிளி அக்கா எழுதி கொடுக்காத ஒரு அடிமை இது தெரியல இந்த பக்கிக்கு ” என்று அவன் அருகே இருந்த கயல் நினைத்துக்கொண்டாள்.

“ஐயோ! அண்ணி இப்படி காலை வாரிவிட்டுட்டீங்களே.. ” என்றவன் “அண்ணா அது கயலுக்கு வீட்லையே சும்மா இருக்க கஷ்டமா இருக்கு, வேலைக்கு திரும்ப போகணும்னு சொன்னா அதான் உங்ககிட்டே பேசிட்டு என்ன வேலைக்கு அனுப்பலாம்னு கேக்க வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் ” என்றான்.

“ஏன் ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்குற ஐடியா எதுவும் இல்லையா?” என்றான் கிளியை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டே..

அவளை படியில் அமர்த்திக் கொண்டு சாப்பிடுவதும், அவளுக்கு அவன் ஊட்டி விடுவதும் வாடிக்கை ஆகிவிட. . இது மற்றவைகளுக்கும் பழகி விட்டது. அதனால் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை.

“இருக்கு தான். நீங்க நம்ம வீட்ல பேசி சம்மதம் வாங்கி கொடுத்துட்டா பண்ணிடலாம் ” என்று தலையை சொரிந்தான்.

“சரி பேசுறேன். நம்ம பேக்டரி லேப்லயே கயலை வேலை செய்ய சொல்லு. நம்ம மருந்து தயாரிக்குற பிஸிநெஸ்ல அவளையும் சேர்த்துடலாம் ” என்றான்.

“ஐயோ! சார் என்னை பிசினஸ் பார்ட்னர் ஆக்கப் போறிங்களா? என்னால நமபவே முடியல.. ” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

“ஏய் லூசு.. என்னை கல்யாணம் செய்துகிட்டாளே இதெல்லாம் ஆட்டோமெட்டிக்கா நடக்கும் டி.. அண்ணா பர்மகியூட்டிகள் பிஸிநெஸ்க்கு மருந்துகள் தயாரிக்குற டீம்ல உன்னை சேர்த்துக்க சொல்றார்” என்றான்,

“ஓஹ் ! சரி சரி .. ” என்றாள் அசடு வழிய..

“நீ நேரா கயலை கூப்டு நம்ம பெக்டரிக்கு போய் என்ன செய்யணும் சொல்லிடு.. எங்களுக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு ” என்று சாப்பிட்டு முடித்து எழுந்தவன் கிளியை அழைத்துக்கொண்டு வெளியேறி இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured