EPISODE 4
ராகவ் என்ன பண்ற எதுக்கு என்னை இப்ப நீ ரூம்குள்ள வச்சு பூட்டுற என்று உள்ளிருந்தபடி கதவை தட்டிக் கொண்டே கத்தினால் ரக்ஷனா
என்ன மன்னிச்சிடு ரக்ஷனா என் உடம்புக்கு ஏதும் பிரச்சனையி இருக்குன்னு எனக்குத் தோணுது . நான் உன்ன ஹர்ட் பண்ணிவிடுவேன்னு பயமா இருக்கு. இங்க இருந்தா உன்னை எதுவும் நான் செஞ்சிடுவேன். என்னால நீ கஷ்டப்படுறதைப் பார்க்க முடியாது என்று சொன்னபடி அவள் இருந்து அறையை வெளியே பூட்டினான் ராவண்.
ராகவ் என்ன உள்ள விட்டு பூட்டிட்டு நீ அங்க தனியா கஷ்டப்பட போறீங்களா? எதுவா இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அனுபவிக்கலாம். தயவுசெய்து கதவை திறந்து விடுங்க. உங்களை இப்படி ஒரு நிலைமையில தனியா விட நான் விரும்பல. என்று அவள் நோக்கம் வேராக ரக்ஷனா கதவை தீறக்கச் சொல்லி அவனிடம் கெஞ்ச..
அவள் எதற்காக வெளியே வரத் துடிக்கிறாள் என்று சரியாக கனித்திருந்த ராவண் ஒரு கேலிப் புன்னகையை சிந்தியவன். நான் எங்கேயும் போகல ரக்ஷனா நம்ம வீட்ல இருக்க இன்னொரு ரூம்ல தான் இருக்க போறேன். நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன் நீ என்னை நினைச்சு கவலைப் படாத , காலையில் வரைக்கும் நான் அந்த ரூம விட்டு வெளியே வரப் போறதில்லை நீ கவலை இல்லாமல் தூங்கு நான் காலையில வந்து ரூம் ஓபன் பண்ணி விடுறேன் என்று அவள் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து வேகமாக மற்றொரு அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டான் .
ராகவ்! ராகவ்! நான் சொல்றது கேளுங்க கதவத் திறங்க உங்களுக்கு ஒன்னும் இல்ல உங்களோட இந்த மாற்றத்தை என்னால சரி பண்ண முடியும் கதவை திறங்க என்று ஆன வரைக்கும் அவனை கதவை திறக்கச் சொல்ல போராடிப் பார்த்தாள் . ஆனால் வெளிப்பக்கம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவன் இனி கதவைத் திறக்கப் போவதில்லை என்று புரிந்ததும் ரக்ஷனாவின் கோபம் மேலும் அதிகமானது.
அதற்குக் காரணமும் இருக்கிறதே அவளும் அவனோடு சேர்ந்து அல்லவா அந்த மாத்திரையை போட்டு இருக்கிறாள். அதன் வீரியம் அவள் உடலில் வியாபித்திருக்க அதை கட்டுப்படுத்த முடியாமல் அவள் எண்ண ஓட்டங்கள் தரிகட்டு ஓடியது. அவளுக்கு இப்போது ராவணோடு ஒன்று கூட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓங்கி இருந்தது.
அவளால் அந்த உணர்வுகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை ஆண்களை விட பெண்களுக்கு அந்த உணர்வுகளின் தூண்டுதல் அதிகம் அல்லவா . சும்மாவே உணர்வுகள் ஆர்ப்பரிக்கும் பெண்களுக்கு இது போன்ற போதை வஸ்துக்களின் வீரியமும் சேர்ந்து கொள்ள அவர்கள் படம் எடுத்த நாகமாய் ஆட ஆரம்பித்துவிடுவார்களே . இந்த விஷயத்தில் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது.
யூ இடியட் என்ன இப்படி தவிக்க விட்டுட்டியே டா உடம்புல என்ன மாதிரியான மாற்றம் வருதுன்னு கூடவா உனக்கு தெரியாம போயிடுச்சு , கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம் என் கூட இருந்திருந்தா நீயும் நானும் எவ்வளவு சந்தோசமா இருந்திருப்போம். உன்கிட்டே எப்படி டா அந்த கடன்காரி குப்பை கொட்டினா.. என்று கோபத்தில் கதவை ஓங்கி அடித்தாள்.
ராவனை எவ்வளவு திட்டியும் அவளால் தன் கோபத்தையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை குறுக்கும் நெடுக்கும் நடந்தாள் என்ன செய்வது என்று யோசித்தாள் சட்டென அவள் முகம் பிரகாசமானது. வேகமாக அருகில் இருந்த ஒரு கபோர்டை திறந்தாள் அதனுள் மாற்றுச் சாவி இருக்க அதை கொண்டு உள்ளிருந்து பெட்ரூம் கதவை திறந்து வெளியே வந்தவள் நேராக ராவன் இருந்த அறைக்கு சென்றாள்.
கதவைத் தட்டி அவனை திறக்கச் சொல்லலாமா என்று யோசித்து கதவைத் தட்ட கையை ஓங்கியவள். ம்ஹும்… வேணாம் அவன மறுபடியும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் இந்த மாத்திரை வீரியத்தை தாங்க முடியாம தான் அவன் என்னை உள்ள வச்சு பூட்டிட்டு தனியா வந்து இருக்கான். இப்போ அவனை டிஸ்டர்ப் பண்ணினாமறுபடியும் என்ன இந்த ரூம்ல வெச்சி லாக் பண்ணிட்டு, வேற எங்கேயும் போய் விடுவேன். அப்படி போயிட்டா அது நமக்கு தான் பிரச்சனையாகும் இவன் இங்கேயே இருக்கட்டும் என்று நினைத்தவள் மெல்ல அவன் அறைக் கதைவை வெளியில் தாழிட்டாள்.
என்னை நீ என்ன அடச்சு வைக்கிறது நான் உன்ன அடச்சு வெச்சிருக்கேன் டா காலையில வரைக்கும் இந்த ரூம்லயே கிடந்து கஷ்டப்படு. என்னால முடியாது என்றவள். வேகமாக வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
வாட்ச் மேன் கேட்டத் திற என்று அதிகாரத் தோரணையில் கத்த இந்த நேரத்தில் அவள் குரல் கேட்கவும் அவசர அவசரமாக எழுந்து போய் மெயின் கேட்டை திறந்து விட்டார் வாட்ச்மேன்.
வேகமாக காரிடாரில் நின்ற காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவள் வாட்ச்மேன் இடம் தான் வரும் வரை இராவன இருக்கும் அறையை யாரும் திறக்கக் கூடாது. தான் வெளியே சென்ற விஷயம் அவனுக்கு சொல்லவும் கூடாது என்று கட்டளையாக சொல்லிவிட்டு கிளம்பி இருந்தாள்.
இங்கே அறைக்குள் இருந்த ராவண் வெளியே அவன் இருந்த அறையை சாற்றியதில் இருந்து ரக்ஷனா கிளம்பும் வரை அனைத்தையும் உள்ளுக்குள்ளிருந்து அனுமாணித்தபடி இருந்தான். அவள் சென்ற அடுத்த நொடி தான் அணிந்து இருந்த பேண்டின் உள்ளே இருந்து போனை எடுத்து அதை சுவிட்ச் ஆப் செய்து அதிலிருந்து சிம்மை கழட்டி வைத்தான்.
அந்த அறையின் கண்ணாடிக்கு பின்னே ஏற்கனவே அவன் மறைத்து வைத்திருந்த சிம் கார்டை எடுத்து அதில் போட்டு ஆக்டிவேட் செய்தான்.
சில நிமிடத்தில் போன் ஆன் ஆனதும் அதில் இருந்து ஈஸ்வருக்கு போன் செய்தான் அப்போதுதான் ஆபீசை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் போன் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க வெறும் எண் மட்டுமே வந்திருந்தது. அதை பார்த்ததுமே ராவண்தான் அழைத்திருக்கிறான் என்று அவசரமாக போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன். சொல்லு மச்சான் என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க அந்த ரக்ஷனா மறுபடியும் எதுவும் பிரச்சனை பண்ணினாளா என்றான் ஈஸ்வர்.
இல்லடா அதுக்கு நான் விடல என்றவன் நடந்த அனைத்தையும் சொல்லி அவ அடுத்த மூவ் ஆரம்பிச்சுட்டா நீ என்னதான் பண்ணிட்டு இருக்க. இளங்கிளியே தேடலையா? இல்லையா? அவ எங்க இருக்கா உயிரோட இருக்காளா? இல்லையா? ஏதாவது விஷயம் உனக்கு தெரியுமா என்றான் ராவண்.
இல்ல மச்சான் நானும் ராஜுவும் இந்த விஷயத்துக்காக தான் அழஞ்சுட்டே இருக்கோம் . கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாசம் ஆச்சு சிஸ்டர் எங்க இருக்காங்க, யாரும் அவங்களை கடத்தி வச்சிருக்காங்களா? இல்ல அவங்களுக்கு ஏதும் ஆயிடுச்சா? இந்த மாதிரி எந்த தகவலுமே இல்ல. இன்னும் கொஞ்ச நாள் எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணு நாங்க சீக்கிரமாவே சிஸ்டர கண்டுபிடிச்சுடறோம் என்றான்.
இதேதான் சொல்லிட்டு இருக்கீங்க ரக்ஷனா என்னை அடைய ரெடியா இருக்கா எந்த நேரத்தில என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியல. புதுசு புதுசா அவளே ட்ரக்க உருவாக்கி அதை எம் மேல வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்கிறாள். நானும் எவ்வளவு நாள் எனக்கு பழசு எல்லாம் மறந்த மாதிரி சமாளிக்க முடியும். வேற எதுவும் மாத்திரைனா பரவாயில்லை இன்னைக்கு அவ கொடுத்த டேப்லெட் என்னோட பீலிங்ஸ் எல்லாம் தூண்டிவிட்டுருச்சு. அதை கண்ட்ரோல் பண்ண நான் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கேன் தெரியுமா என்று எரிச்சலாக சொன்னான்.
ஐயோ மச்சான் அப்படி அவசரப்பட்டு அவ மேல பாஞ்சுறாதீங்க என்று ஈஸ்வர நக்கலாகக் கூற .
உயிரே போனாலும் என் சுண்டு விரல் கூட தப்பான எண்ணத்தில் அவ மேல படாது , அதையும் மீறி அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அடுத்த நிமிஷம் யோசிக்காம என் உயிரையே விட்டுவிடுவேன் என்றான் ராவண் தீர்க்கமாக.
இப்ப என்ன பண்ணப் போறீங்க அவ வேற உங்களை ரூமில் வெச்சு பூட்டிட்டான்னு சொன்னீங்க .
அத நான் பாத்துக்குறேன் நீ எனக்கு சீக்கிரமா இளங்கிளியை தேடி கண்டுபிடிச்சு சொல்ற வழியப் பாரு என்று போனை வைத்தவன் வேகமாக பாத்ரூம் நோக்கி சென்றான். தன் வாய்க்குள் விரலை விட்டு விழுங்கிய மாத்திரைகளை வாந்தி எடுத்து வெளியே எடுக்க முயன்றான்.
அவன் விழுங்கிய மாத்திரைகள் பாதி கரைந்த நிலையில் வெளியே வந்து விழுந்தது
இன்னமும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போராடியவன் அணிந்திருந்த ஆடைகளை கிழித்தெறிந்து விட்டு ஷவரை திறந்து அதன் முன் வந்து தன் கைகள் இரண்டையும் சுவற்றில் அழுத்தி நின்றான்.
சில்லென்ற நீர் அவன் உச்சியில் இருந்து வழிந்து உடல் முழுவதும் நனைத்து அவன் உடல் சூட்டை தணிக்க முயன்றது.அப்போதும் அவன் உணர்வுகள் மட்டுப்படுவதாய் தெரியவில்லை.
தன் உடலின் அத்தனை நரம்புகளும் புடைக்க, மூச்சு வாங்க நின்றிருந்தான். அவனுக்குள் விவரிக்க முடியாத ஒரு தீவிரமான உணர்ச்சிப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அதைத் தாங்க முடியாத ராவண் , தன் கோபத்தையும், உணர்ச்சியையும் அடக்க முயன்று, சுவரை தன் முழு பலத்தால் குத்தினான்.
அதில் அவன் குத்திய இடம் லேசாக விரிசல் விட்டிருக்க.. அவன் கை முஷ்டியில் காயம் ஏற்பட்டு வலி உண்டானது. ஆனால் அதைவிட இப்போது அவனுக்குள் எழும் உணர்ச்சிப் போராட்டம் அவனை நிலைகுலைய செய்தது.
அவனால் அந்த வலியை மீறி உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. உடல் நடுங்கியது. வியர்வை அவன் உடலில் அந்த ஷவர் நீரை தாண்டி உண்டாவதை அவனால் உணர முடிந்தது.
“ஆஆ…!” என்று முகத்தை மேலே உயர்த்தி கத்தியவன் “முடியல… டி… என்னால முடியல.. எனக்கு நீ வேணும்.. இப்போவே வேணும்..” என்று இளங்கிளியை கத்தினான்.
இந்த வெறி அடங்க மாட்டேங்குது.. என்னோட வடிகால் நீதானே எங்க டி இருக்க நீ என்று பித்தற்றினான்.
அவளை எண்ணிக்கொண்டே அப்படியே திரும்பி சுவரில் சாய்ந்து நின்று இருந்தான். கண்கள் மூடி அவன் நின்று இருக்க..
“என்னங்க.. என்ன பண்றீங்க. ஏன் இவ்ளோ கோபமா இருக்கீங்க.. என்கிட்டே வாங்க
” என்று இளங்கிளி அவனை அணைக்க தன் கைகள் இரண்டையும் விரித்து அவனை அழைப்பது போன்ற காட்சி அவன் மனக்கணமும் தோன்றியது. அவள் அமைதியான முகம் அவனை அரவணைக்க காத்திருந்த கைகள் என நினைத்துப் பார்த்தவன் அவளோடு தான் சந்தோசமாக இருந்த நாட்களை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான். தனிமையில் இருவரும் ஒருவரை ஒருவர் நாடியது. அவளோடு இரண்டறக் கூடியது என்று ஒன்று விடாமல் இளங்கிளியின் நினைவுகளை நோக்கி ராவணின் எண்ணம் சென்றது.
ஹலோ டியர்ஸ்
நியூ ஸ்டோரி ஒன்னும் ஆரம்பிச்சு இருக்கேன். அது முழுக்க முழுக்க ரொமான்ஸ் மட்டுமே கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கப் போகுது. 18+ ரொமான்டிக் ஸ்டோரி தப்புத் தாண்டா காதல் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.இந்த கதை இங்க மட்டும் தான் கிடைக்கும். ரொமான்ஸ் பிடிக்காதவங்க இந்த ஸ்டோரியை ஸ்கிப் பண்ணிருங்க
தினம் பிரீ எபிசொட் மூர்க்கன் வரப்போகுது, நான் தொடர்ந்து பிரீ ஸ்டோரி கொடுக்கணும்னா நீங்க எனக்கு லைக், கமெண்ட் பண்ணனும்.
