EPISODE 2
“அண்ணா! வாங்க என் புருஷன் வீட்டுக்கு போகலாம்” என்று கர்ணனின் கையைப் பற்றி அவனை அழைத்தாள் இளங்கிளி.
கர்ணனுக்கோ எப்படி இளங்கிளியை சமாளிப்பது என்று தெரியவில்லை. “எதையாவது சொல்லி இந்த பொண்ணை சமாளிச்சிருன்னு அந்த ரக்ஷனா சொல்லிட்டு போய்ட்டா.. இப்போ நான் இல்ல இவகிட்டே மாட்டிகிட்டு கஷ்டப்படுறேன். இவளுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்லிட்டா அமைதியா இருப்பான்னு பார்த்தா, இப்போ வந்து புருசனைப் பாக்கணும்னு சொல்றாளே.. இப்போ நான் என்ன சொல்லி இவளை தடுத்து நிறுத்துறது..” என்று உள்ளுக்குள் ரக்ஷனாவை திட்டியவன். அடுத்து என்ன சொல்லி இளங்கிளியை சமாளிக்கலாம் என்று தன் மூளையை கசக்கிக்கொண்டு இருந்தான்.
“அண்ணா! நான் கூப்டுட்டே இருக்கான் நீ ஏன் வர மாட்டேங்குற.. எனக்காக இல்லையினாலும் என் வயித்துல வளர்ற குழந்தைக்காகவாவது நான் அவரைப் பார்த்து நியாயம் கேக்கணும். என் குழந்தை அப்பா இல்லாத புள்ளையா வளரக் கூடாதுண்ணா” என்று இளங்கிளி கண்ணீரோடு பேசினாள்.
“கனி இப்படி எடுத்தேன் ,கவுத்தேன்னு எதையும் செய்ய முடியாதும்மா.. நீ அவனை போய் பாக்கலாம்னு சொல்றது நியாயம் தான், ஆனா.. ” என்று கர்ணன் இழுக்க..
“என்ன ஆனா சொல்லுண்ணா ” என்று அவன் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் இளங்கிளி.
“கனி உன் குழந்தைக்காக நீ நியாயம் கேக்கபோறது சரி தான், ஆனா உன் வயித்துல வளராது அவனோட குழந்தையே இல்லேன்னு சொல்லிட்டா என்னம்மா பண்றது. அவன் அதை செய்யக்கூடிய ஆளுதான்” என்றான்.
அதை கேட்டதும் இளங்கிளிக்கு இதயமே நின்று விடும் உணர்வு தான், தன் வயிற்றில் வளரும் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு பிறப்பதற்கு முன்பாகவே அவப்பெயரை தேடிக்கொள்வதா என்று தோன்றியது அவளுக்கு.
“அண்ணா! அப்போ அவன் குடும்பத்துகிட்டே நியாயம் கேப்போம். அவங்க இதுக்கு கண்டிப்பா பதில் சொல்லி தானே ஆகணும்” என்றாள்.
“கடவுளே! இந்த பொண்ணுகிட்ட இருந்து என்னைக் காப்பாத்தேன். நான் இப்போ என்ன பண்ணுவேன். ” என்று யோசித்தவன்,
“அவனை மாதிரி தானே அவன் குடும்பமும் இருக்கும். உன்னை வேணாம்னு வீட்டை விட்டுத் துரத்தின அப்போ அவன் மொத்த குடும்பமும் அதை வேடிக்கை மட்டும் தானேம்மா பாத்துச்சு.. அவங்ககிட்டே போய் நியாயம் கேக்குறது எந்த விதத்துல நியாயம்னு நீயே சொல்லு.. ” என்று அவளை மேலும் யோசிக்க விடாமல் பேசினான் கர்ணன்.
“இங்க பாரு கனி உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லாம நல்லபடியா பொறக்கணும்னா நீ நியாயம் கேக்குறேன். அதை பண்றேன், இதைப் பண்ணுறேன்னு போய் நிக்கக்கூடாது. எப்படி இவ்வளவு நாள் நாம இருந்தோமோ அபப்டியே இனியும் இருந்துபோம். உன்னை எப்படி இந்த அண்ணன் பாதுகாப்பா பாத்துக்கிறனோ.. அதே போல உன் வயித்துல வளர்ற உன் புள்ளையையும் இந்த அண்ணன் பத்திரமா பாத்துப்பேன்மா.. ” என்று சத்தியம் செய்தான் .
கர்ணன் சொல்வதும் சரி தானே.. தான் கர்ப்பமாக இருப்பது தன் கணவனுக்கோ.. அவன் வீட்டாருக்கோ தெரிய வந்தாள் மிகப்பெரிய பிரச்சனை வந்து தன்னையும். தன் பிள்ளையையும் பாதிக்கும் என்று நினைத்தவள் சரின்னா எனக்கும்,என் குழந்தைக்கும் உன் உறவு மட்டும் போதும். வேற யாரும் வேணாம்” என்றாள்.
“ஹப்பா! ஒருவழியா சமாளிச்சுட்டோம் ” என்று பெருமூச்சு விட்டவன். “பாவம் இந்த பொண்ணு அந்த ரக்ஷனா அவ காரியத்துக்காக புருஷனையும், பொண்டாட்டியையும் பிரிச்சு வெச்சு கொடுமை பண்ணிக்கிட்டு இருக்கா.. கனியாச்சும் என்கூட இருக்கா.. நான் இருக்க வரை கனிக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துப்பேன். ஆனா அங்க அவகிட்ட மாட்டிக்கிட்ட கனியோட புருஷன் என்ன நிலைமையில இருக்கானோ… அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்” என்று பெருமூச்சுவிட்டான்.
“அண்ணா! நான் ஒண்ணு சொல்லவா அதை மட்டும் எனக்காக செய்வியா?” என்றாள் தயக்கத்தோடு.
“என்ன கனி இப்படி கேட்டுட்ட… சொல்லும்மா என்ன விஷயம்” என்றான் கர்ணன்.
“இனிமேல் நாம இங்க இருக்க வேணாம் . வேற ஊருக்கு போயிறலாமா? கழுத்துல தாலி இல்லாம வயித்துல குழந்தையோட இருந்தா சுத்தி இருக்கவங்க எல்லாரும் என்னையும், என் குழந்தையையும் தப்பா தான் பேசுவாங்க.” என்றாள்.
அவள் சொல்வதும் சரி தானே.. கழுத்தில் தலை இல்லாமல் வயிற்றில் பிள்ளையை சுமந்து வந்தாள் ஊரார் பேச்சுக்களை காதில் கேட்க முடியாது என்று அவனுக்கும் தோன்றியது.
சரிம்மா நான் யோசிச்சு சொல்றேன் இதுக்கு ஏதாவது வழி பண்ணலாம் என்றவன் “நீ முதல்ல சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு . நான் நம்ம எந்த ஊருக்கு போகலாம். அங்க எதுவும் வேலை செய்ய ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்குறேன். எல்லாம் சரியா அமைஞ்சா சீக்கிரமே இங்க இருந்து கிளம்பிடலாம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட..
அவன் சென்றதும் லேசாக மேடிட்ட தன் வயிற்றை தடவிய இளங்கிளி.. “உன் அப்பா ரொம்ப மோசமானவன். அவனை மாதிரி நீ வளரவே கூடாது சரியா.. இந்த அம்மா உனக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறனோ அதை மட்டும் தான் நீ கேட்கணும் சரியா.. ” என்று வயிற்றில் இழுக்கும் பிள்ளைக்கு படம் எடுக்க ஆரம்பித்து இருந்தாள்.
இங்கே வெளியே வந்த கர்ணனோ உடனே அழைத்து என்னவோ ரக்ஷனாவுக்கு தான் அவளிடம் கேட்டுவிட்டு வேறு ஊருக்கு இளங்கிளியோடு மாறிவிடலாம் என்று நினைத்து அவளிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்து தான் அழைத்திருந்தான்.
அவன் அழைத்த நேரம் கையில் பாலுடன் ராவணைக் காண மிகவும் செக்ஸியான மெல்லிய சேலை ஒன்றை கட்டிக்கொண்டு அவன் இருக்கும் அறைக்கு சென்று கொண்டிருந்தாள். அந்த நேரம் அவள் போன் அடிக்கவும். அதை எடுத்துப் பார்த்தவள் “இந்த இடிஒட் எதுக்காக இப்போ போன் பண்றான் ” என்று திட்டிக்கொண்டே கையில் இருந்த பால் டம்பளரை வைத்தவள் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“என்ன கர்ணா இந்த நேரத்துக்கு கால் பண்ணி இருக்க . என்ன விஷயம் சீக்கிரம் சொல்லிட்டு போனை வை எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. ” என்று கேட்டபடி அருகே இருந்த ஒரு கவரை பிரித்து அதில் இருந்து இரண்டு வெவ்வேறு மாத்திரைகளை எடுத்தாள்.
“மேடம் அது வந்து உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதுக்காக தான் இந்த நேரத்துல கால் பண்ணினேன்” என்றான் .
“அது தான் தெரியுதே சொல்லு.. என்ன விஷயம் ” என்றபடி ஒரு மாத்திரையைப் பிரித்து தன் வாயில் போட்டவள் டம்பளரில் இருந்த கொஞ்ச ஜூஸை குடித்துவிட்டு.. மற்றொரு மாத்திரையை கையில் வைத்து உருட்டிக்கொண்டே கேட்டாள்.
“அது வந்து அந்த பொண்ணுக்கு இந்த ஊர்ல இருக்க வேணுமாம் , எங்கையாவது தூரமா போய்டலாமான்னு சொல்றா. அவ கர்ப்பமா இருக்க விஷயம் அக்கம் பக்கத்துல தெரிஞ்சா எல்லாரும் தப்பா பேசுவாங்கன்னு ரொம்ப பீல் பண்ரா. அது தான் உங்ககிட்டே கேட்டுட்டு வேற ஊர் போலாம்னு,,” என்று அவள் அனுமதி வேண்டி கேட்டான் கர்ணன்.
“வேற ஊர் தானே தாராளமா கூட்டிட்டுப் போ.. அவ நாங்க இருக்க இதே ஊர்ல இருக்குறது எனக்கும் சரியா படல.. எங்கையாச்சும் இவங்க ரெண்டு பேரும் பாத்துட்டா பழசு எதுவும் ஒருத்தருக்கு நியாபகம் வந்துட்டா அவ்ளோ தான். நீ அவளை கூப்பிட்டு கண்காணாத இடத்துக்கு போய்ட்டு.. ” என்றாள்.
“சரிங்க மேடம் அப்போ நான் போனை வெச்சுடறேன் ” என்றான் கர்ணன்.
“ஹேய் இரு.. இந்த மாதிரி கண்டா நேரத்துக்கு இனிமேல் எனக்கு நீ போன் பண்ணாத சரியா. அவளுக்கு எப்போ குழந்தை பிறக்குதோ அப்போ எனக்கு போன் பண்ணு அதுவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாத சரியா. எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு. நீ கூப்டு பேசுறது எனக்கு இரிட்டேட் ஆகுது சரியா. அப்பறோம் உன் அக்கௌண்டுக்கு பணம் சேர்த்து அனுப்பறேன். நீ போற இடத்துல செலவு செய்ய உனக்குத் தேவைப்படும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
அவனும் போனை கட் செய்தவன் “அப்பாடா கொஞ்ச நாளைக்கு இதுக்கிட்டே இருந்து விடுதலை கிடைச்சிருச்சு “என்று நினைத்தவன் எந்த ஊருக்கு போகலாம் என்று யோசனையோடு கிளம்பி இருந்தான். இரவு வேலை செய்யும் இடத்திற்கு.
இங்கே போனை வைத்த ரக்ஷணா நேராக அங்கே இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தவள் அங்கே இருந்த கண்ணாடி முன்பு வந்து நின்றாள். ஏற்கனேவே படு கவர்ச்சியாக கட்டி இருந்த சேலையை இன்னும் நன்றாக தன் அங்கங்கள் பளிச்சிடத் தெரியும் அளவுக்கு அட்ஜர்ஸ்ட் செய்தவள்.
“போட்ட மாத்திரை இப்பவே உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுதே.. இந்த ராவண் மட்டும் இன்னிக்கு இந்த மாத்திரையை போட்டா அவ்ளோ தான்.”என்று யோசித்தபடி தன் கையில் இருந்த வீரியம் மிக்க போதை மாத்திரையைப் பார்த்தவள். “இது அவனுக்காகவே ஸ்பெஷலா நானே உருவாக்குன மாத்திரை. இதை இன்னையில் இருந்து விடாம தினமும் அவனுக்குக் கொடுக்கப்போறேன். அதை சாப்பிட்டதும் அவன் தினம் தினம் என்னைத் தான் தேடி வருவான்” என்று நினைத்தவள் அதனோடு மேலும் இரு மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அவன் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.
முன்பை விட மினுக்கிக்கொண்டு வெளியே வந்தவளை அவள் வீட்டில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டு “என்னடி இது. இப்படி சேலையை கட்டிட்டு போறா.. ” என்று ஒரு வேலையாள் மற்றொரு வேலையாளிடம் பேசிக்கொள்ள..
“நமக்கு எதுக்கு டி இந்த வம்பு எல்லாம். வாங்குற காசுக்கு வேலையை பாத்துட்டு போயிட்டே இருக்கனும். அவ சேலையை காட்டுனா என்ன கட்டாட்டி நமக்கு என்ன டி வந்துச்சு, அவளாச்சு.. அவ புருஷன் பாடாச்சு . நீ வா நமக்கு இனி இங்க என்ன வேலை இருக்கு.. நாம காலையில வரலாம்”என்று பின் பக்கம் இருக்கும் செர்வெண்ட் அறைக்கு சென்றுவிட்டனர்.
அறைக்குள் தண்டால் எடுத்துக்கொண்டிருந்த ராவணை மிகப்பார்வை பார்த்தபடி அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவள் “ராகவ்! இன்னும் முடியலையா?” என்றாள்.
அவள் குரலில் இருந்த மாறுதலைக் கண்டறிந்த ராவனோ தண்டால் எடுத்தபடி நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவன் முன் ஒய்யார நடை போட்டு நெருக்கமாக வந்து நின்றவள் “போதும் வாங்க,.” என்று அவனை அழைக்க. .
அவள் அழைத்ததும் எழுந்தவன் அருகே இருந்த டவலை எடுத்து தன் உடலில் வழிந்த வியர்வையை துடைக்கப் போனான்.
“இருங்க.. ” என்று அவனைத் தடுத்த ரக்ஷ்னா . கையில் இருந்த பாலையும், மாத்திரையையும் அருகே இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவன் கையில் இருந்த டவலை வாங்கி சோபாவில் போட்டவள் தன் சேலைத் தலைப்பை எடுத்து அவன் முகத்திலும், உடலிலும் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்தாள்.
அவள் செய்கையில் சிரித்த ராவண் “என்ன இன்னிக்கு அக்கறை கொஞ்சம் அதிகமா இருக்கு.. ” என்றான்.
“ம்ம்.. காரணம் இல்லாமையா ” என்றவள் “நீங்க தானே சீக்கிரம் நம்ம ஆபீஸ்க்கு வரணும்னு சொன்னிங்க.. அதான் ஹனிமூன் போற வரைக்கும் ஏன் உங்களை வெய்ட் பண்ண வெக்கணும். இங்கையே ஹனிமூன் கொண்டாடின பிறகு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஆபீஸ் போலாம்னு முடிவு பண்ணிட்டேன். ” என்றாள்.
“சோ.. இன்னிக்கு நைட் நமக்கு ஹனிமூன்னு சொல்ற.. அதானே.. ” என்று அவள் இடையைப் பற்றி தன்னோடு சேர்த்து அணைத்தான்.
