News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி

by Layas Tamil Novel
584 views
A+A-
Reset

EPISODE 6

ராவண் சொன்னதில் இருந்து இளங்கிளியைத் தேடும் வேலையை இன்னமும் தீவிரப் படுத்தி இருந்தான் ஈஸ்வர். அவனும், ராஜ்ஜும் சேர்ந்து இந்த தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி இருந்தனர்.

“என்ன டா இது. அந்த ரக்ஷனா இப்படி நம்ம ரெண்டு போரையும் சுத்தல்ல விடுறா. எப்போ தான் அண்ணியை கண்டுபிடிக்கிறது. இப்போதான் எல்லாம் சரியாகுறது ” என்று அலுத்துக்கொண்டான்.

“அவ மட்டும் என் கைல கிடைச்சா நான் அவளை சும்மா விடமாட்டேன் டா.. அவ ஒருத்தியால நம்ம வீட்ல யாரும் நிம்மதியா இல்ல. மச்சான் உயிரோட இருக்க விஷயத்தைக் கூட சொல்ல முடியல. அவங்க எல்லாரும் கஷ்டப்படுறதை பார்க்க என்னால முடியல டா.. ” என்றான் ஈஸ்வர்.

“கொஞ்ச நாளைக்கு தான் டா இந்த கஷ்டம் எல்லாம். அண்ணியை சீக்கிரம் தேடிக் கண்டு பிடிச்சுட்டா அண்ணாவும் அந்த ரக்ஷணாகிட்டே இருந்து வெளியே வந்திருவார். அண்ணி கிடைக்கும்னு ஒரே காரணத்துக்காக தான அண்ணா அந்த ராக்ஷனா பண்றதை எல்லாம் பல்லைக் கடிச்சிட்டு பொறுத்தது இருக்கார். அண்ணி மட்டும் கிடைக்கட்டும். அப்பறோம் அவளோட வாழ்க்கையை நரகவேதனை ஆகிடுவார் அண்ணண் ” என்றான் ராஜ்.

“ம்ம்.. உங்கண்ணன் அந்த ரக்ஷனாகிட்டே மாட்டிகிட்டு திண்டாடுறார். நான் உங்க தங்கச்சிகிட்டே மாட்டிகிட்டு கஷ்டபடுறேன்” என்று காரை வீட்டின் முன் நிறுத்தியபடி சொன்னான் ஈஸ்வர்.

“இன்னுமா உங்களுக்குள்ள ஒரு முடிவு வரல. ” என்று சிரித்தான்.

“ஏண்டா சொல்ல மாட்ட.. அவ இருக்காளே.. என்னை கிட்டத்துல கூட நெருங்க விட மாட்டேங்குறா டா.. அவளை பக்கத்துல வெச்சிட்டு என்னால சும்மாவும் இருக்க முடியல மச்சான் ” என்று ராஜ்ஜின் தோளில் கையைப் போட்டான்.

“டேய் மாப்பிள்ளை.. நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா.. ” என்றான் ராஜ்.

நின்று அவனைத் திரும்பிப் பார்த்தவன் “என் தங்கச்சி அப்படி தான் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு மட்டும் சொன்னேன்னு வை.. ” என்று  ராஜ்ஜின் கழுத்தை நெறித்தான்.

“டேய்.. டேய்.. எனக்கு புள்ளக்குட்டி , பொண்டாட்டி எல்லாம் இருக்கு டா… ” என்றான் ராஜ்.

அவங்களுக்காக உன்னை விடறேன். சரி சொல்லு,, என்றான் அவன் தோளில் கை போட்டு.

எப்பவும் அவகிட்டே நீ ஒதுங்கியே இருக்க. அதை அவளும் அட்வாண்டேஜா எடுத்துட்டு உன்னை பிடிக்காத மாதிரியே இருக்கா.. நீ தடாலடியா ஒரு பேர்ஃபாமென்ஸப் போட்டேனு வை.. என்றான் ராஜ்.

“ம்ம்.. என் பெர்பாமென்ஸ் காட்டினா… ; என்று ஈஸ்வர் ஆர்வமாகக் கேட்க.

“டேய் நான் உனக்கு மச்சான் .. மாமா இல்ல.. இவ்ளோ தான் உனக்கு சொல்ல முடியும் , இதை வெச்சு என் தங்கச்சியை மடக்க முடிஞ்சா மடக்கி உன் வலிக்கு கொண்டு வந்துக்கோ. இல்லேன்னா இப்படி அவகிட்டே கெஞ்சிகிட்டே இரு.. ” என்றவன் கயலையும் , தன் குட்டிப்பையனையும் பார்க்க சென்றுவிட..

ஈஸ்வர் யோசனையோடு தன் ரூமிற்குள் நுழைந்தான் . அங்கே மித்ரா குளித்து முடித்து பிரெஷான செரிப்பழம் போல… மார்புவரை மெல்லிய டவலை மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று ஈரக் கூந்தலுக்கு ட்ரையர் போட்டுக்கொண்டிருந்தாள்.

அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தபடி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்

“என்ன டி பண்ணிட்டு” என்று ஈஸ்வர் தன் பெட் ரூமிற்குள் நுழைந்தான் .

மித்ரா ஈஸ்வரைப் பார்த்ததும் “ஓ! காட் வந்துட்டானா.. என் உயிரை எடுக்க.. ” என்று நினைத்தவள் ” நீ வரதுக்குள்ள குளிச்சு ரெடியாகிடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள வந்துட்ட என் உயிரை எடுக்க.. ” என்றவள். “ஒரு டென் மினிட்ஸ் .. எனக்கு பார்ட்டிக்கு டைம் ஆச்சு. என் பிரெண்ட்ஸ் எல்லாம் வெய்ட் பண்ணுவாங்க.. நான் ரெடி ஆகிடறேன். ” என்றாள் அவளைப் பார்க்காமலேயே..

“ம்ம்ம்.. ” என்று தன் பிராண்டட் வாட்சில் மணியைப் பார்த்தான் . “ம்ம்.. பார்ட்டி..” என்று அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்துக்கொண்டான் ஈஸ்வர்.

“ராஸ்கல் என் பக்கத்துல வராதேன்னு எவ்ளோ முறை சொல்றது உனக்கு.. விடு டா.. என்னை” என்று அவள் இடையைப் பற்றி இருந்த அவன் கையை வேகமாக விலகினான்.

“ம்ப்ச்.. மித்து.. ஏன் டி இப்படிப் பண்ற.. நீ என் பொண்டாட்டி டி.. உன்னை கட்டிப் பிடிக்கக் கூட எனக்கு உரிமை இல்லையா” என்று அவளை மோகமாகப் பார்த்தவன் மீண்டும் அவளை நெருங்கி இடையோடு சேர்த்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முத்தம் பதித்தான்.

“உரிமையா! ” என்று யோசித்தவள். “நான் ட்ரக் அடிக்ட் ஆன  டைம்ல என்னோட வீக்னெஸை உனக்கு சாதகமா எடுத்துக்கிட்டு ரெஜிஸ்டர்  மேரேஜ் பண்ணிட்டு இப்போ வந்து உரிமை கொண்டாடுறியா டா ராஸ்கல் .” என்று  தன் இடையில் இருந்த அவன் கையைப் பிரித்துவிட்டு திரும்பி அவனை முறைத்தாள்.

“நான் மட்டும் அன்னைக்கு உன்னை கல்யாணம் செய்திருக்கலையின்னா நீ இந்நேரம் மலாய் ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்கணும். உன்னை காப்பாத்த நான் என் வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்கேன். நீ கொஞ்சம் கூட அதை பத்தி எல்லாம் யோசிக்காம என்னை உன் பக்கத்துல விடவே மாட்டேங்குற.. என்ன டி நியாயம் இது..” என்று  அவள் கட்டி இருந்த டவலில் கையை வைத்தான் ஈஸ்வர் .

சட்டென அவன் கைகைளைத் தட்டி விட்டவள் “ராஸ்கல் இன்னொரு தடவை என்னை தொட்ட அவ்ளோ தான் பாத்துக்க..” என்று சீறினாள் மித்ரா..

“உனக்கு பழைய நினைவு வராமையே இருந்திருக்கலாம் . அப்போ எல்லாம் ஈஸ்வர்.. ஈஸ்வரனு என் பின்னாடியே சுத்திட்டு இருப்ப.. உன்னை சாப்பிட வெச்சு.. குளிப்பாட்டி.. டிரஸ் எல்லாம் போட்டுவிட்டு… நான் தான் உன்னை கண்ணும், கருத்துமா பாத்துக்கிட்டேன்” என்று ஏக்கமாக சொன்னவன் “எப்போ உனக்கு பழசெல்லாம் நியாபகம் வந்துச்சோ… அப்போ இருந்து என்கிட்டையே நீ வர மாட்டேங்குற.. ஏதோ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சேன்னு என்கூட இருக்க.. நீ.. ” என்றான் ஏக்கமாக.

“ஓ! மை காட்! ஈஸ்வர் இதையே நீ எத்தனை முறை சொல்லிருக்க.. எனக்கு இதை கேட்டு கேட்டு அழுத்துப் போச்சு.. நீ கொஞ்சம் என்னை விட்ரியா.. என் பிரெண்ட்ஸ் எல்லாம் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க நான் போகணும்…”என்று அவள் இடையை இறுக்கமாக மாற்றிக்கொண்டு அவளை விடாம அணைத்துக் கொண்டிருந்தவன் கையை விளக்கப் போராடிக்கொண்டே பேசினாள்.

“நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலையா டி.. என் மேல உனக்கு லவ்வே இல்லையா ” என்றான் அவள் தோள்பட்டையில் முகத்தை பதித்து காண்ணாடியில் தெரிந்த அவள் அரை குறை பிம்பத்தை ரசித்துக்கொண்டே..

கண்ணாடியினூடே தெரிந்த அவன் பிம்பத்தைக் கண்டு அவன் மோக விழிகளைக் கண்டு மித்ராவிற்குள் உள்ளுக்குள் ஒருவித உணர்வு உண்டானது. அதை கட்டுப்படுத்திக்கொண்டவள் “எனக்கு உன்னைப் பிடிக்காது டா . கொஞ்சம் என்னை விட்ரியா?” என்று அவனிடம் இருந்து விலக முற்ப்பட்டாள் .

“பிடிக்காதா!” என்றவன் அவள் இடையைப் பற்றி தன்னை நோக்கித் திரும்பியவன். “உனக்கு என்னைப் பிடிக்கும்னு நான் ப்ரூப் பண்ணிட்டா நான் சொல்றதை நீ கேப்பியா?” என்றான்.

“ப்ரூப் பண்ணப் போறியா? ” என்று நக்கலாக சிரித்தவள் “சரி சொல்லு.. எப்படி ப்ரூப் பண்ணப் போற.. ” என்று அவனை திமிராகப் பார்த்துக் கேட்டாள்.

“இந்த திமிர் தான் டி எனக்கு உன்கிட்டே பிடிச்சதே..” என்றவன் “ஒன் மினிட்” என்று  அவளை விட்டுப் புரிந்தவன் பெட் ரூம் கதவை தாளிட்டுவிட்டு வந்தான்.

“டேய் எதுக்கு டா பெட் ரூமை லாக் பண்ணின.. ” என்று மித்ரா முறைக்க..

தன் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டே அவளை நெருங்கி நின்றவன் “சரி நான் உனக்கு ஒரு டாஸ்க் வெக்குறேன் . அதை நீ முடிச்சுட்டா.. நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உன்னால அந்த டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ண முடியாலையின்னா அப்பறோம் நீ எனக்கு அடிமை நான் என்ன சொன்னாலும் செய்யணும்.. கேக்கணும் சரியா” என்றான்.

அவன் படிக்கட்டு தேகத்தைக் கண்டு எச்சில் விழுங்கியவள் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே.. “டாஸ்கா !.. அதெல்லாம் எதுவும் வேணாம். நீ ஏதாவது வில்லங்கமா தான் டாஸ்க் கொடுப்ப.. உன்னை நம்ப நான் தயாரா இல்ல..” என்றவள் . “நீ.. முதல்ல தள்ளி நில்லு.. நான் ரெடியாகணும்.. ” என்று அவனை தள்ளிவிட்டு தாண்டி சொல்லப்போனாள் .

“நீ ஜெயிச்சுட்டா நான் உன்னை விட்டுறேன் டி..  “என்று அவள் கையைப் பற்றி தன் முன்னே நிற்க வைத்தான்.

அவனை எரிச்சலாகப் பார்த்தவள் “இவன் சொல்றதை செய்யுற வரைக்கும் விடமாட்டான். அப்பறோம் டைம்க்கு பார்ட்டிக்கு போக முடியாது” என்று நினைத்தவள் “சரி சீக்கிரம் சொல்லு.. இன்னிக்கு நான் உன்  வளையில விழ மாட்டேன். என்ன டாஸ்கா இருந்தாலும் ஜெயிச்சிருவேன்” என்று நம்பிக்கையாகக் கூறினாள்.

மித்ரா ஒத்துக்கொண்டதும் தன் உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டவன் “டாஸ்க் அஞ்சு நிமிஷம் தான் . அந்த அஞ்சு நிமிஷமும் நீ வாயைத் திறந்து பேசக்கூடாது.. கண்ணைத் திறக்கக் கூடாது.. சின்ன சத்தம் கூட போடக்கூடாது சரியா.. ” என்றான்.

“ப்பூ…. இவ்ளோ தானா.. டாஸ்க்குன்னு சொன்னதும் நான் கூட ஏதாவது பெருசா கொடுப்பன்னு இல்ல நினைச்சேன்” என்றாள் பின்வரும் விபரீதம் அவளுக்கு எதிரானது என்று அறியாமல்.

“நீ தோத்துட்டா.. நிச்சயமா நீ எதிர்பார்த்த பெரிய விஷயத்தை உனக்குக்  கொடுப்பேன் டி… ” என்று இரட்டை அர்த்தத்தில் ஈஸ்வர் பேச…

“ச்சி!.. ராஸ்கல்.. இப்படி எல்லாம் பேசுறியே.. உனக்கு வெட்கமா இல்ல.. ” என்று முகத்தை சுழித்துக்கொண்டாள். ஆனால் அவன் பேசியது கேட்டு அவள் இதழோரம் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தான் பேசினாள்.

“சரி சரி… அப்பறோம் மொத்தமா வெச்சு என்னை திட்டிக்கோ…. இப்போ முதல்ல டாஸ்க்கை முடி.. ” என்றான்,

“ம்ம்ம்.. நான் ரெடி.. இப்போல இருந்து பேசக்கூடாதா?” என்று கேட்டாள்.

“ஹோய்! இரு டி.. இப்படியேவா.. ஒரு நிமிஷம் இங்க வா.. ” என்றவன் அவள் கை பற்றி கட்டிலுக்கு அழைத்து சென்றான்.

“இங்க எதுக்கு. நான் பேசக்கூடாது.. பார்க்கக் கூடாது அவ்ளோ தானே.. அப்டியே நின்னுட்டு.. .” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவளை கட்டிலில் தள்ளில் படுக்க வைத்தவன் அவள் கைகள் இரண்டையும் சேர்த்து கட்டில் விளிம்பில் தன் ஷர்ட் கொண்டு இருக்கமாகக் கட்டி இருந்தான்.

“என்ன பண்ற!..  இப்போ எதுக்கு என்னை கட்டி வெக்குற.. விடு டா என்னை ” என்று மித்ரா திமிர..

“இனி தான் கேம் ஸ்டார்ட் பண்ணப் போறேன். நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கு தானே.. .”என்றவாறு பெட் ரூம் விளக்கை அனைத்தவன் , மெல்லிய பெட் லாம்பை ஒளிரவிட்டு அவள் அருகே நெருங்கி அமர்ந்தான் ஈஸ்வர் .

ஹலோ டியர்ஸ்

நியூ ஸ்டோரி ஒன்னும் ஆரம்பிச்சு இருக்கேன். அது முழுக்க முழுக்க ரொமான்ஸ் மட்டுமே கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கப் போகுது. 18+ ரொமான்டிக் ஸ்டோரி தப்புத் தாண்டா காதல் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.இந்த கதை இங்க மட்டும் தான் கிடைக்கும். ரொமான்ஸ் பிடிக்காதவங்க இந்த ஸ்டோரியை ஸ்கிப் பண்ணிருங்க

தினம் பிரீ எபிசொட் மூர்க்கன் வரப்போகுது, நான் தொடர்ந்து பிரீ ஸ்டோரி கொடுக்கணும்னா நீங்க எனக்கு லைக், கமெண்ட் பண்ணனும்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.