EPIOSDE 3
விடியலில் கதிரவன் கீற்றுக்கள் அந்த அறைக்குள் நுழையக்கூட முடியாத படிக்கு அரை முழுவதும் குமிருட்டாக இருந்தது , பெட் லாம்ப் வெளிச்சம் கூட மிக மெல்லியதாகவே இருக்க…
எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று கூட தெரியாமல் அலுப்பில் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தாள் பூவிழி.
அவளுக்கு முன் தூக்கம் கலைந்திருந்தது என்னவோ யுகேந்திரனுக்குத் தான்.
மெல்ல அவள் தூக்கம் கலையாமல் கட்டிலில் இருந்து எழுந்தவன் கீழ் இறங்கி நேராக குளிக்கச் சென்றான். பின் வெளியே வந்து விளக்கை ஒளிரவிட்டவன் உடை மாற்றி தன் வீல் சேரை எடுத்து வந்து கட்டிலின் முன் போட்டு அமர்ந்து கொண்டான்.
அந்த தடிமனான போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள் பூவிழி. அப்போது கூட அவள் கை போர்வையைத் தாண்டி வெளியே இருந்தாலும், பாதுகாப்பிற்காக தன் வயிற்றை சுற்றித் தான் இருந்தது. அது தாய்மையின் உள்ளுணர்வு அல்லவா..
மெல்ல கண்களை தூக்கத்தில் சுழற்றினாள் , அவள் குட்டி முகம் தூக்கத்தில் புருவத்தை சுருக்கி… கைகளை நெளித்து உடலை லேசாக வளைத்து நெட்டி முறிக்க ஆயத்தமானாள். அப்போது அவளுடன் சேர்ந்து அவள் வயிறும் அவள் வளைவதற்கு வசதியாக வளைந்து கொடுக்க. அதை பார்த்ததும் யுகேந்திரன் பதறிவிட்டான்.
“பூவிழி! பார்த்து.. ” என்று அவன் சொல்ல வருவதற்கு முன் நெளியப் போன பூவிழி சட்டென கண்களைத் திறந்து குனிந்து தன் உடலைப் பார்த்தாள், பிறகு நெளிக்காமல் மெல்ல பழைய நிலைக்கு உடலைக் கொண்டு வந்தவள். அது சரியாக இருக்கிறது என்று உறுதி செய்த பின்பு தான் முழுவதும் கண்களைத் திறந்தாள்.
“உனக்கு அறிவு இருக்கா டி.. தூக்கத்துல இப்படியா நெளிவ… ” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவள். “ஏய் அமுக்கஞ்சாமி மகனே..! நான் தான் நெளியுறேன்னு தெரியுது இல்ல.. நீயாச்சும் அம்மாவுக்கு சொல்லக்கூடாது.. அப்படியே உன் அப்பா போலவே கமுக்கமாவே இரு.. கொஞ்சம் அசைஞ்சா தான் என்ன உனக்கு..” என்று குட்டிக் குழந்தையை யுகேந்திரனின் குணத்தை வைத்துத் திட்ட..
அதுவரை அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னை அமுக்கஞ்சாமி என்றும், தன் குழந்தையை அவன் குணம் போல இருக்கிறது என்று சொல்லவும் “ஏய்! என்ன சொன்ன .. என்ன சொன்ன நீ… ” என்று அவன் கணீர் குரல் அவள் தூக்கத்தை மொத்தமாகக் களைத்து இருந்தது.
“ஹையோ! ஆத்தி!…. இவர் எங்க என் ரூமுக்கு வந்தாரு..” என்று பதறிக்கொண்டு பூவிழி எழ..
அவள் அவசரப்பட்டு எழுந்ததில் மார்புவரை போர்த்தி இருந்த போர்வை விலகி கீழ் இறங்கியது கூடத் தெரியாமல் பயத்தில் விழி விரித்து அவள் முன் கம்பீரமாக அமர்ந்து இருந்த யுகேந்திரனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அவள் அமர்ந்து இருந்த கோலம் கண்டு உள்ளுக்குள் சிரித்துவிட்டான். அவன் கட்டிய தங்கத் தாலி அவள் மார்பை உரசிக்கொண்டு இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவித்தது, அவள் மென் அழகில் சொக்கிப்போய் இருந்த அவனைப் போலவே அதுவும் தவித்தது.
அவனை அதிர்ந்து பார்த்தவள் யுகேந்திரன் பார்வை சென்ற இடத்தை குனிந்து பார்த்தவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஹையோ!” என்று கத்தியவள் சட்டென்று போர்வையை எடுத்து தன் மென் அழகை மறைத்துக்கொண்டாள்.
அவள் செயலில் தன் மோகம் தடை பட்டதும் கோபம் வந்தது அவனுக்கு. “இப்போ எதுக்கு இப்படி இழுத்துப் போர்த்திக்குற.. அதான் நைட் முழுசான நான் எல்லாத்தையும் பாத்துட்டேனே.. ” என்றான் இறுக்கமாக.
அவளோடு ஒன்று கூடியதைக் கூட ஒரு அழுத்தத்தை கூட்டி அவளை மிரட்டும் தோரணையில் தான் சொன்னான்.
“மு.. முழுசா பாத்துட்டீங்களா! ” என்று அவள் விழிகள் மேலும் அதிர்ந்து விரிய..
“ம்ம்… “என்றவன் “ஏன் எதுவும் உனக்கு நியாபகம் இல்லையா?” என்றான்.
” ம்ம்… ” என்று விழித்தவள் நேற்றைய இரவு நடந்த நிகழ்வுகளை யோசித்தவளுக்கு முற்றிலும் நியாபகம் வந்து அதிர்ந்து போனவள் அவள் வாயில் கை வைத்து மூடிக்கொண்டு அவனைப் பார்க்க..
“என்ன அப்படிப் பாக்குற.. நியாபகம் வந்திருச்சா… ” என்றான்,
” ஹும்…” என்று இருந்த நிலையிலேயே தலையை ஆமாம் என்று மேலும் கீழும் ஆட்டினாள்.
அவள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தவளை கண்கொட்டாமல் ரசித்தவன்.
“ஷாக் ஆனது போதும்… இப்போ என் குழந்தையை என்னவோ சொல்லி திட்டுணியே.. என்ன அது…” என்று அவள் சொன்ன வார்த்தையை நினைவு படுத்த முயன்றான்.
“அமுக்.. அமுக்குன்னு எதையோ சொன்னியே.. அது என்ன?” என்றான் நினைவு வராமல்.
“அது.. அமுக் இல்ல.. மாமா அமுக்கா.. அமுக்கஞ்சாமி” என்றாள் மெல்லிய குரலில்.
“ஹா! அது தான்.. அது என்ன? ” என்றான்.
பூவிழியோ அவனை தயக்கத்தோடு பார்க்க..
“சொல்லு டி.. அப்படின்னா என்ன?” என்றான்.
“அது.. அது வந்து அமுக்கஞ்சாமின்னா மனசுக்குள்ளையே எல்லாத்தையும் வெச்சிக்கிட்டு.. வெளிய நல்லவன் மாதிரி… ” என்று தயங்கி தயங்கி சொன்னவள் போர்வையை பிடித்துத் திருகிக்கொண்டே அவனை ஓரப்பார்வை பார்த்தாள்.
“ஓஹோ!.. என்னை இத்தனை நாளா இந்த பேர் வெச்சு தான் நீ கூப்ட்டிருக்க.. என்னை சொன்னது மட்டுமில்லாம என் பையனையும் சொல்லிருக்க நீ.. அப்படித்தானே.. ” என்று அவளை முறைத்தான்.
“ஹாஹா! அப்படி இல்ல மாமா.. நான் வந்து.. நீங்க என்னை திட்டுற அப்போ தான் அப்படி சொல்வேன். மத்தபடி நீங்க எனக்கு மாமா தான்.. ” என்று அவசரமாக மறுத்தாள்.
அவள் பதற்றமும்… அதே சமயம் வெள்ளந்தியான பேச்சும் இப்பொது தான் அவன் கவனத்தை ஈர்த்து இருந்தது. இத்தனை நாள் இந்த அளவு துல்லியமாக அவளை அவன் பார்த்ததில்லை. அப்படி சொல்ல முடியாது ரசித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவள் ஒவ்வொரு செயலும் நேற்றைய நினைவிற்குப் பிறகு அவன் கவனத்தை மொத்தமாகத் தன் பக்கம் திசை திருப்பி இருந்தாள் என்று தான் சொல்லவேண்டும்.
“அப்போ நான் திட்டும்போது இத்தனை நாளா நீ தான் அமுக் .. அமுக்கஞ்சாமி மாதிரி இருந்திருக்க.. உள்ளுக்குள்ள என்னை கண்டபடிக்கு திட்டிட்டு வெளிய நல்லவ மாதிரி என்கிட்டயே நீ நடிச்சிருக்க.. அப்படித் தானே…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு.
“ஹா! இல்ல மாமா அப்படி எல்லாம் நான் பண்ண மாட்டேன். உங்களை நான் திட்ட மாட்டேன்” என்றாள் அவன் கிண்டல் செய்வது கூடத் தெரியாமல்.
“பொய்… பொய் சொல்ற டி நீ.. உன் வாய் தான் என்கிட்டே உண்மையா இருக்க போல பேசுது. ஆனா உன்னோட மனசுக்குள்ள இப்போ கூட என்னை திட்டிட்டு தான் இருக்க.. ” என்றான் விடாமல் அவளை வம்பிழுத்து.
“சத்தியமா இல்லங்க மாமா.. நான் உங்கள திட்டல இப்போ..” என்று அவள் மீண்டும் மறுக்க..
“இப்போ திட்டலையின்னா இதுக்கு முன்ன திட்டிருக்க அப்படித்தானே.. ” என்றான்
அவள் மெளனமாக அமர்ந்து இருக்க..
“சொல்லு அமுக்காஞ்சி என்னை திட்டிருக்கியா? இல்லையா?” என்றான் குரலை சற்று உயர்த்தி.
அதில் அவள் உடல் ஜெர்க்காகி குலுங்க… அவனைப் பார்த்தவள் “ஹா!.. ஆமா மாமா.. வேணும்னு திட்டல.. நான் சமைச்சு கொடுக்கிறதை வேணும்னே சாப்பிடாம இருப்பிங்க இல்ல.. அப்போ கோபம் வரும் அந்த நேரத்துல திட்டிருக்கேன்.” என்றாள்.
“ஓஹோ!.. அப்பறோம் வேற எப்போ எல்லாம் என்னை திட்டுன.. சொல்லு ஒன்னுவிடாம சொல்லு இப்போ.. இப்போவே.. “என்று வீல் சேரில் இருந்தபடி மெத்தையில் கைகளை ஊன்றி அவளை விடுவதாக இல்லை என்ற ரீதியில் பார்த்தான்.
“அது.. அது வந்து.. எல்லாத்துக்கும் சின்ன பிள்ளை மாதிரி பிடிவாதமா இருக்க அப்போ.. அப்பறோம் என்னை சும்மா சும்மா கூப்டு வெச்சு காரணம் இல்லாம திட்டுவீங்களே.. அப்போ… அப்பறோம்… அப்பறோம்… ” என்று அவள் அதற்கு மேல் சொல்லத் தெரியாமல் திட்ட..
“நான் எப்போ எல்லாம் உன்னை திட்டினேனோ… அப்போ எல்லாம் நீயும் பதிலுக்கு என்னை பயங்கரமா திட்டிருக்க.. அபப்டித்தானே… ” என்றான்.
இல்லை.. ஆமா… என்று தலையை நாலாப்பக்கமும் அவள் ஆட்ட…
அவள் பதற்றம் கண்டு ரசித்தவன் “இனிமேல் என்னை திட்டுறதுன்னா மனசுக்குள்ள நீ திட்டக்கூடாது சரியா . நான் எப்படி உன்னை நேரா திட்டுறேனோ.. அதே போல நீயும் என்னை நேருக்கு நேரா என் கண்ணைப் பார்த்து திட்டனும் சரியா. ” என்றான்.
“ஹா! இல்லங்க மாமா.. எனக்கு உங்களை நேர்ல திட்ட வராது.. நான் மாட்டேன்” என்று அவசரமாக மறுத்தாள்.
“நேர்ல திட்டமாட்ட… ஆனா மனசுக்குள்ள திட்டிருவ.. அப்படித்தானே.. ” என்றான்.
“ம்ம்.. ஆமா.. ” என்று தலையை ஆட்டியவள் “ம்ஹும்.. ம்ஹும்… .இல்ல..” என்று உடனே இல்லை என்று ஆட்டினாள்.
அவள் செய்கை கண்டு அவனால் தன் சிரிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கட்டிலில் கையை ஊன்றியபடியே தலையை கீழே குனிந்து அவள் பார்த்திராத நேரத்தில் சிரித்துக்கொண்டவன் நிமிரும்போது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.
அவளோ படபடக்கும் விழிகளோடு இன்னமும் போர்வையை மார்போடு பற்றிய படி அமர்ந்து இருந்தாள்.
“நான் சொல்றது போல தான் இனி நீ இருக்கனும் , திட்டணும்னா நான் எங்க இருந்தாலும், எப்போன்னாலும் என்னை திட்டணும்னு தோணினா நீ என்னை நேருக்கு நேரா திட்டிரனும் ” என்றவன் அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “எவ்ளோ நேரம் இப்படியே உக்கார்ந்திருக்கப் போற.. மணி எவ்ளோ ஆச்சுன்னு பாத்தியா?” என்றான்.
அப்போதுதான் திரும்பி வாட்ச்சைப் பார்த்தாள் மணி 11 என்று காட்டியது. “ஹா! பதினொன்னா இவ்ளோ நேரமா தூங்கிட்டனா நான் ” என்று போர்வையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கப்போனாள்.
“ஏய்! ஏய்! இரு.. இரு.. என்ன டி.. இவ்ளோ வேகமா இறங்குற… ” என்றவன் அவள் இடையைப் பற்றி மெல்ல தூக்கி கீழ் இறக்கினான்.
வீல் சேரில் இருந்த இடத்தில் இருந்தே தன்னை இறக்கிவிட்டவனை அதிர்ந்து பார்த்தவள் “இவரு எப்படி வீல் சேரில் உக்காந்துட்டே என்னை தூக்கினாரு ” என்று யோசித்தவள் நினைவில் அப்போதுதான் நேற்று பாத்ரூமில் இருந்த தன்னை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு நடந்து வந்த யுகேந்திரன் நினைவு வந்தது.. சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள் “நேத்து நீங்க.. என்னை.. ” என்று அவனிடம் பேச வர,..
“என்ன நேத்து..” என்றான் புரியாமல்.
“இல்ல நேத்து நான் உங்களை குளிக்க பாத்ரூம் கூட்டிப் போனேன். அப்பறோம் நீங்க என்னை தூக்கிட்டு பெட் ரூம்க்கு நடந்து தானே வந்திங்க.. ” என்றாள்.
“மக்கு அமுக்காஞ்சி அதை தெரிஞ்சுக்க இவ்ளோ நேரம் ஆகியிருக்கு இவளுக்கு…” என்று நினைத்தவன் “இல்லையே.. .நான் எங்க உன்னை தூக்கிட்டு வந்தேன் , நீ தானே என்னை வீல் சேரில் வெச்சு இங்க கூட்டி வந்த.. என்னை மெத்தையில் உக்கார வெச்ச.. எனக்கு முத்தம் கொடுத்த.. கட்டிப் பிடிச்ச… அப்ரம் என்னை என்னனென்னவோ பண்ணுனியே.. ” என்றான் இதழ்களுக்குள் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு..
“ஹா! நானா! ” என்ற ரீதியில் அவனைப் பார்த்தவளை கை பிடித்து இழுத்து தன் அருகே நிறுத்தியவன் “எப்படி பண்ணினேன்னு நான் வேணா உனக்கு டெமோ காட்டட்டுமா ” என்று கண்ணடித்தான்.
சட்டென அவனை விட்டு விலகியவள் “இல்ல… இல்ல மாமா . நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். நான் தான் ஏதோ தப்பா நினைச்சுட்டேன் போல.. ” என்று அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டாள்.
அவள் சென்றதும் வாய் விட்டு சிரித்தவன் “இவளை ஈஸியா ஏமாத்திடலாம் போல.. சில்லி கேர்ள்.. ” என்று வாய்விட்டே சொன்னான்.
இந்த கதைக்கு நீங்க கொடுக்கும் ஆதரவை பொறுத்து தான் தினம் 1 எபிசொட் போஸ்ட் பண்ணலாமா? இல்ல.. சனி, ஞாயிறு மட்டும் போஸ்ட் பண்ணலாமான்னு முடிவு பண்னுவேன்.
உங்க ஆதரவை கமெண்ட்ல சொல்லணும்
