News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி PART-2 அறிந்திராத உண்மை 1

by Layas Tamil Novel
1.6K views
A+A-
Reset

எபிசொட் 1

“என்ன டா சொல்ற இடியட்! அந்தக் கடன்காரி ப்ரக்னெண்டா இருக்காளா! எப்படி டா? ” என்றாள்.

“தெரியல மேடம். நம்ம கனியை கூட்டிட்டு வரும்போதே அவ கர்ப்பமா இருந்திருக்கா போல..அவளுக்கு பழசு எல்லாம் மறைந்ததுனால அவளுக்கும் இது பத்தி எதுவும் தெரியல. ” என்றவன் தூரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தியப்டி சத்தமில்லாம அலுத்து கொண்டிருந்த இளங்கிளியைப் பார்த்தான்.

“மேடம் நாம வேற அவளுக்கு கல்யாணம் ஆகாதவ போல சொல்லி வெச்சிருக்கோம். இப்போ அவ கர்ப்பம்னு தெரிஞ்சதுல இருந்து அழுதுகிட்டே இருக்கா. தனக்கு எப்படி இப்படி ஒரு நிலை வந்துச்சு , தன்னோட கர்ப்பத்துக்கு யார் காரணம்னு தெரியாம குழப்பத்துல அழுதுட்டே இருக்கா”என்றாலன் அழும் இளங்கிளியைப் பாவமாக பார்த்தபடி.

“இப்போ என்ன டா அவளுக்கு வந்துச்சு எதையாவது காரணத்தை சொல்லி அவனை ஒருத்தன் காதலிச்சு வயித்துல புள்ளையைக் கொடுத்துட்டு ஓடிப்போயிட்டான் இல்ல செத்துப் போய்ட்டான். அதனால அவளுக்கு அந்த குழந்தை வேணாம்னு சொல்லி அதை அபார்ட் பண்ண சொல்லு” என்றாள் எரிச்சலாக.

“மேடம்…” என்று கர்ணன் தயங்க.

“என்ன டா.. ” என்றாள் மேலும் கடுப்பாக.

“அது.. அது அபார்ட் பண்ண முடியாது “

“ஏன்?”

“அது.. அது.. கனிக்கு இப்போ அது ஆறாவது மாசம்” என்றான்,

“என்ன! ஆறு மாசம் ஆச்சா ” என்று அதிர்ந்தவள் “யூ! இடியட் அப்போ வயிறு குண்டா இருக்குமே அதை பார்த்தும் உனக்கு எந்த டௌப்டும் வரலையா?” என்றாள்.

“இல்ல மேடம் , இந்த பொண்ணு ஒல்லியா இருக்கு, அதனால வயிறு ஒன்னும் அவ்ளோ பெருசா இல்ல. லேசா தொப்பை போட்டது போல தான் இருக்கு ” என்றான்.

ரக்ஷனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை . அவள் அமைதியாகவே இருக்க..

“மேடம்.. ” என்றான் தயக்கமாக.

“இப்போதைக்கு அவளை ஏதாவது சொல்லி சமாளிச்சு வை. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு.. ம்ம்.. திருட்டுக்கல்யாணம். இல்ல அவளை ஒருத்தன் காதலிக்கிற மாதிரி ஏமாத்தி வயித்துல புள்ளையை கொடுத்துட்டு போய்ட்டான். அந்த மாதிரி எதையாவது சொல்லி சமாளி. எனக்கு அந்த கடன்காரியும், அவ வயித்துல வளர்ற குழந்தையும் ஒரு பெரிய விஷயமே இல்ல.. கொஞ்ச நாள் இந்த ராவணை நான் சமாளிச்சு எப்படியாவது அவனை எனக்கு சொந்தமாக்கிப்பேன் . அதுக்குப் பிறகு இவளையும் , அவ குழந்தையையும் எங்கையாவது கண்காணாத இடத்துல கொண்டு போய் விட்டுட்டு வந்திரு. என் காரியம் முடியுற வரை இவளை வெளியே விட்டுறாத. அப்பறோம் என் பிளான் எல்லாம் வீணாகிடும்” என்று சொல்லிவிட்டு போனைத்  துண்டித்து இருந்தாள்.

சற்று நேரம் போனையே வெறித்துப் பார்த்த கர்ணன். இந்த மேடம் சொல்லிட்டு போனை கட் பண்ணிருச்சு. நான் எப்படி கனியை சமாளிக்கப் போறேன்னு தான் தெரியல ” என்று யோசித்தபடி பனிமதியிடம் சென்றான்.

அவன் வருவதை பார்த்ததும் பனிமதி எழ..

“உக்காரு கனி ” என்று அவள் கையைப் பற்றி அமர வைத்தவன் “இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்க நீ..” என்றான்.

“என்ன அண்ணா இப்படி பேசுற.. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. ஆனா நான் கர்ப்பமா இருக்கேன். இது வேற யாருக்கும் தெரிஞ்சா என்னாகுறது,. என்னைப் பத்தி நம்ம குடும்பத்தை பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க” என்று சொல்லும்போதே மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க.. அவள் அழுவதைத் தாங்க முடியவில்லை கர்ணனால் . என்னதான் ரக்ஷனாவின் கையால் என்றாலும் இளங்கிளியுடன் கடந்த 4 மாதங்களாக ஒன்றாக இருக்கிறானே.. எப்போதும் அவனை அண்ணா! அண்ணா! என்று ஆயிரம் முறை அழைத்து அவன் மீது பாசம் பொலிந்து அக்கறையாக ஒரு தாய்க்கு நிகராக அவள் அவனை பார்த்துக்கொள்கிறாள். அந்த பாசமோ என்னவோ அவனையும் அறியாமல் இளங்கிளியின் கண்ணீர் கர்ணனை அசைத்து இருந்தது.

“உனக்கு கல்யாணம் ஆகலையின்னு யாரு சொன்னா” என்றான் அவள் அழுகையை சமாளிக்கும் பொருட்டு.

“அண்ணா!” என்று அவனை அதிர்ந்து பார்த்தாள் இளங்கிளி.

“ஆமாம்மா உனக்கு கல்யாணம் ஆகிருச்சு” என்றான் கர்ணன்.

“அண்ணா! என்ன சொல்ற நீ!.. எனக்கு எப்.. எப்போ கல்யாணம் ஆச்சு. அப்போ என் பு.. புருஷன் எங்க?” என்றாள் .

“அவரு.. அவரு.. ” என்று கர்ணன் தயங்க.

“சொல்லுன்னா அவர் எங்க இருக்கார். எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னா என் கழுத்துல ஏன் தாலி இல்ல. எனக்கு எதுவுமே ஏன் நினைப்புல இல்ல ” என்று அவன் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.

அவள் அழுததில் சுற்றி இருப்பவர்கள் திரும்பி இவர்களையே பார்க்க.. “நீ முதல்ல கிளம்பு நாம வீட்டுக்குப் போய் இதை பத்தி பேசிக்கலாம் . இங்க எல்லாரும் உன்னையே பாக்குறாங்க” என்று அவள் அழுகையை மாற்றி சுற்றிலும் உள்ளவர்களை கவனிக்கவைத்தான்.

சட்டென சுற்றிலும் திரும்பிப் பார்த்தவள் கண்களை அவசரமாகத் துடைத்துவிட்டு “ம்ம்.. வீட்டுக்குப் போலாம்” என்று எழுந்தாள்.

இப்பொது தான் கர்ணனுக்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு இளங்கிளியிடம் கோர்வையாக பொய் சொல்ல நேரம் தேவைப்பட்டது, அவள் நம்புபடியாக ஒரு பொய்யை அவளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்  என்று நினைத்தபடி அவளோடு ஆட்டோவில் ஏறினான்.

இங்கே இளங்கிளியை திட்டிக்கொண்டே.. திரும்பிய ரக்ஷணா வாசலில்  நின்று இவளையே அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்த ராவணை பார்த்தாள். அவனை கண்டு அதிர்ந்தவள் “இவன் எப்போ வந்தான் . நான் பேசினதை எல்லாம் கேட்டிருப்பானா இவன்” என்று கலக்கத்தோடு அவனைப் பார்த்து வழிவது போல சிரித்தாள்.

“யார் கூட ரக்ஷு பேசிட்டு இருந்த” என்றான்.

“அது.. அது .. நம்ம ஆளுங்ககிட்டே தான் பேசிட்டு இருந்தேன் ராகவ். என்னை டென்ஷன் பண்ணிப் பாக்குறதையே அவனுங்க வேலையா வெச்சிருக்கானுங்க, ஒரு வேலையும் ஒழுங்கா பண்றது இல்ல” என்றாள்.

“நான் எவ்ளோ முறை சொன்னேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் வேலையைப் பார்க்கலாம்னு நீதான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டேங்குற.. என்னோட ஹெல்த்தை காரணம் காட்டியே என்னை வீட்ல இருக்க வெச்சிடற நீ.. ” என்று அவள் அருகே வந்து ரக்ஷனாவின் தோளில் கையைப் போட்டான் ராவண் .

அவன் கையைப் பற்றிய ரக்க்ஷனா “ராகவ் உனக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே..” என்றாள்.

“எவ்ளோ நாள்” என்றான்.

“ம்ம்.. ஒரு மாசம்” என்றாள் ரக்ஷனா.

“ஏன் ஒரு மாசம்” என்று அவளை தன் பக்கம் முன்னிறுத்தி அவள் தோளில் கை போட்டப்படி கேட்டான்.

“டாக்டர் என்ன சொல்லிருக்கார். உங்க மைண்ட் ரொம்ப குழப்பதுல இருக்கு. பழசை எல்லாம் நியாபகம் வராம நீங்க கஷ்டப்பட்டது எல்லாம் பாத்துட்டு அவர் உங்களை ரிலாக்ஸ் தானே பண்ண சொல்லிருக்கார். அடுத்த செக் அப் இன்னும் 1 மாசத்துல அடுத்த செக் அப் முடிஞ்சிரும். அப்பறோம் நீங்களும் நானும் பழைய படி ஒன்னா சந்தோசமா இருக்கலாம். அதுக்கு நான் ஒரு ஹனிமூன் ட்ரிப் பிளான் பண்ணிருக்கேன். அங்க வெச்சு நம்ம ரெண்டாவது ஹனிமூன் செலிப்ரட் பண்ணிட்டு அதுக்கு அப்பறோம் என்கூட பிசினஸ் பாக்க வரலாம் நீங்க.. “ என்று கொஞ்சலும், குழைதலுமாக சொன்னாள்.

“அப்போ உன்னோட நான் டியூட்டி பாத்துட்டு அப்பறோம் தான் உன் பிசினஸ் பாக்கணும்னு சொல்ற நீ சரியா” என்றான் ராவணும் ரக்ஷானாவின் வஞ்சகத்தில் தான் மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து அவள் தான் தன் மனைவி என்ற நினைப்பில் அவனும் அவளுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்தான்.

“ராகவ்! உனக்கு எப்பவுமே இப்படி தான் பேசத் தெரியுமா? “ என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெட்கப்பட்டாள் ரக்ஷனா.

“ஏன் ரக்ஷூ உன்கிட்டே தான பேசினேன். வேற யார்கிட்ட பேசப்போறேன்” என்றான். அவன் ஆசைக் கிளியிடம் பேசிய பேச்சுக்களை எல்லாம் மறந்துவிட்டு .

இங்கே வீட்டுக்கு வந்ததில் இருந்து அழுத்தமயமாகவே இருந்தாள் இளங்கிளி.

அவளை எப்படி சமாதானம் செய்து தேற்றுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தான் கர்ணன்.

“கனி நான் சொல்றதை கொஞ்சம் கேளும்மா.. நான் வேணும்னு இதை பண்ணல.. உன் புருஷன் உன்னை வேணாம்னு சொல்லிட்டு வேற ஒருத்திகூட போய்ட்டான். சரி அத்தோட போச்சேன்னு நான் உன்னை அவன்கிட்டே சண்டைபோட்டு அவன் வீட்ல இருந்து இங்க கூட்டிட்டு வர நேரத்துல தான் ஆக்சிடென்ட் ஆச்சு. அதுக்கு அப்பறோம் உனக்கு பழசு மறந்து போன விஷயம் தெரிஞ்சதும் நான் சந்தோசம் தான் பட்டேன்.”

” உன் புருசனைப் பத்தி உனக்கு எந்த நினைப்பும் இல்லாம நீ சந்தோசமா இருக்கணும்னு நினைச்சு உன்கிட்டே இருந்து மறைச்சுட்டேன். ஆனா நீ கர்ப்பமா இருக்க விஷயம் அப்போவே தெரிஞ்சிருந்தா நானே உன் புருஷனை சட்டையைப் பிடிச்சு இழுத்து வந்து உன் கூட சேர்த்து வெச்சிருப்பேன்ம்மா.. ஆனா அதுக்கு வழியே இல்லாம இத்தனை நாள் கழிச்சு நீ கர்ப்பமா இருக்க விஷயம் தெரிஞ்சிருக்கு. எனக்கு இப்போ என்ன செய்றதுன்னே தெரியல. உன் வாழ்க்கையை நினைச்சா எனக்கு என்ன பண்றதுன்னே புரியலம்மா” என்றான் மொத்தத்தையும் பொய்யாக .

அவனே அறிந்திராத உண்மை என்னவென்றால் இளங்கிளியின் கர்ப்பம் மட்டுமே.

அவன் சொல்வதை எல்லாம் நிதானமாக அழுதபடி கேட்டுக்கொண்டிருந்தவள் . கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள். “அண்ணா! வா.. நாம போய் என் புருஷனை பார்த்து அவர்கிட்டே என் புள்ளைக்கு ஒரு நியாயம் கேட்டுட்டு வரலாம்”என்றாள்.

அவள் செயலைக் கண்டு அதிர்ந்தே போனான் கர்ணன். இல்லாத ஒரு கதையை கட்டிவிட்டாகிற்று ஆனால் இப்பொது அதையே நிஜம் என்று நம்பி அவனை அழைப்பவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்,

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.